யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/1/16

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம்குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பெயரளவுக்கு வந்து விட்டு, ஒரு வாரம் வரை போராட்டபணிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடாமல் மவுனமாக இருப்பதால், ஆசிரியர்சங்க போராட்டத்துக்கு, அதிகாரிகளும் துணை போவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோரிக்கைகள் என்ன?

* மத்திய அரசுஆசிரியர்களை போல், தமிழக ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தர ஊதியம் வழங்க வேண்டும்
* 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவேண்டும்
* பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும்
* ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்
* தமிழை முதல் பாடமாக்கி அரசாணை வெளியிட வேண்டும்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவின் படி சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாக்டோ ஆசிரியர்கள் 3 நாட்கள் போராட்டம்

ஜாக்டோ அமைப்பின் மதுரை மாவட்ட செயற்குழுக் கூட்டம், அமைப்பாளர்கள் சந்திரன், ஆரோக்கியம் தலைமையில் நடந்தது.மாவட்டத்திலுள்ள 19 ஆசிரிய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மத்திய அரசுக்குஇணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குதல், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு நலத்திட்ட அலுவலர் நியமிக்கப்படுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன., 30, 31, பிப்., 1ல் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மூன்று நாட்கள் நடக்கும் போராட்டத்தில் தினமும் 5000 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்:பிப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

484 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: 


சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு ரூ.2,500-5,000 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை ஒன்றியத்தில் 26 காலிப் பணியிடங்களும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 23 பணியிடங்களும் காலியாக உள்ளன. 

இதேபோல, துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 21, போளூர் ஒன்றியத்தில் 26, கலசப்பாக்கத்தில் 21,சேத்பட்டில் 24, செங்கத்தில் 28, புதுப்பாளையத்தில் 27, தண்டராம்பட்டில் 22, ஜவ்வாதுமலையில் 19, செய்யாறில் 33, அனக்காவூரில் 26, வெம்பாக்கத்தில் 35, வந்தவாசியில் 26, தெள்ளாரில் 36, பெரணமல்லூரில் 33, ஆரணியில் 31, மேற்கு ஆரணியில் 15, திருவண்ணாமலை நகராட்சியில் 7, ஆரணி நகராட்சியில் 2, திருவத்திபுரம் நகராட்சியில் 3 என மொத்தம் 484 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 14 இடங்களும்,ஆதிதிராவிடர்களுக்கு 73 இடங்களும், பழங்குடியினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 97 இடங்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 17 இடங்களும், முஸ்லிம் தவிர மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 129 இடங்களும், பொதுப்பிரிவினருக்கு 149 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 2016 ஜனவரி 1-ஆம் தேதிப்படி 21 வயதுபூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வியடைந்தவர்களாக இருக்கலாம். இவர்களது வயது வரம்பு 2016 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று ஆகியவற்றுடன் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். 

மாதிரி விண்ணப்பப் படிவங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்: இதேபோல, சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.950-2,000 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 26 காலிப் பணியிங்களும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 24 காலிப் பணியிடங்களும் உள்ளன. இதேபோல, துரிஞ்சாபுரத்தில் 27, போளூரில் 8, கலசப்பாக்கத்தில் 19,சேத்பட்டில் 23, செங்கத்தில் 40, புதுப்பாளையத்தில் 20, தண்டராம்பட்டில் 35, ஜவ்வாதுமலையில் 16, செய்யாறில் 23, அனக்காவூரில் 20, வெம்பாக்கத்தில் 41, வந்தவாசியில் 21, தெள்ளாரில் 32, பெரணமல்லூரில் 32, ஆரணியில் 28, மேற்கு ஆரணியில் 24, திருவண்ணாமலை நகராட்சியில் 3, ஆரணி நகராட்சியில் 1 பணியிடம் என மொத்தம் 463 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், அருந்ததியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 13 இடங்கள், ஆதிதிராவிடர்களுக்கு 70 இடங்கள், பழங்குடியினருக்கு 5, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 93, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 16, முஸ்லீம் தவிர இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 123, பொதுப்பிரிவினருக்கு 143 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்தப் பணியிடத்துக்கு பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வி அடைந்தவர்களாக இருக்கலாம். பழங்குடியினர் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.பணமில்லா நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான முன்பதிவு முறை ஏற்கெனவே ஆன்லைன் வழியாக அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், விநியோகிப்பட்ட பிறகே பணம் செலுத்த முடியும் என்ற நிலையே இருந்தது.இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டத்தை நேற்று (24.01.16) தொடக்கி வைத்துள்ளார்.நாடு முழுவதும் தற்போது 16.5 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தப் புதிய நடைமுறையின் மூலம் நுகர்வோர்கள் பயனடைவார்கள், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

பி.எப்., தொகை கணக்கு வைக்காதது கிரிமினல் குற்றம்: அதிகாரி எச்சரிக்கை'

''பி.எப்., தொகையை, முறையாக கணக்கு வைக்காமல் இருப்பது, கிரிமினல் குற்றம்,'' என, பி.எப்., கோவை மண்டல உதவி கமிஷனர் ரவிதேஜாகுமார் ரெட்டி எச்சரித்து உள்ளார். ஊட்டியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு, 'யு.ஏ.என்.,' எனப்படும், நிரந்தர வைப்பு எண் சேவை பயனுள்ளதாக இருக்கும்.

அரசு போக்குவரத்து கழகஊழியர்களின் பி.எப்., நிதியை, முறையாக கணக்கு வைப்பதில்லை என்ற சர்ச்சை இருந்து வருகிறது. போக்குவரத்து கழகம், மின் வாரியம் உட்பட, சில பொதுத் துறை நிறுவனங்கள், தாங்களே பி.எப்., பிடித்தம் செய்துக் கொள்வதாக, எங்களிடம் இருந்து விலக்கு பெற்றுள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான், பி.எப்., நிறுவனத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. நிபந்தனைகளை பின்பற்றாமல் இருப்பதும், பி.எப்., தொகையை முறையாக கணக்கு வைக்காமல் இருப்பதும் கிரிமினல் குற்றம்.இவ்வாறு ரவிதேஜாகுமார் ரெட்டி கூறினார்.

மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!

நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும்  ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில்2016 மே இறுதிக்குள் அனைவருக்கும ஆதார் எண் கொடுக்கும் பணி முடிக்க வேண்டும் என்று மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1.20 கோடி பேர் இன்னும் ஆதார் எண்ணுக்கு பதிவு செய்யவில்லை என்றும், இதில் 60 சதவீதம் மாணவர்கள் உள்ளதாக தெரியவந்தது.

மாநிலம் முழுவதும் ஆரம்பம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை அலையவிடாமல் தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் திட்டம் செயல்படுத்த கர்நாடக மாநிலபொதுகல்விதுறை இயக்குனரக ஆணையர் கே.எஸ்.சத்யமூர்த்தி முடிவு செய்தார். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆதார் புகைப்படம் எடுக்கும்திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் மாநிலம்முழுவதும் படிக்கும் மாணவ, மாணவிகளைஆதார் எண் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது

வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த இடங்களிலேயே 27.01.2016 முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.


TNPSC GROUP IIA TENTATIVE ANSWERS KEY DT:24.01.2016

TENTATIVE ANSWER KEYS

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)
(Dates of Examination:24.01.2016 FN)

         1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 3rd February 2016 will receive no attention.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்..001/PR33/2016,  தேதி: 13.01.201

பணி: இளநிலை உதவியாளர்காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற ரீதியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Word Processing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 75சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தங்களது படிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750. எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை Registrar, Anna University என்ற பெயரில் Chennai-ல் மாற்றத்தக்க வையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http:/www.annauniv.edu என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Registrar,Anna University,CHENNAI- 600025.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdfஎன்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.

போலீஸ் தொந்தரவு இனி இருக்காது: சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவலாம் - மத்திய அரசு புதிய உத்தரவு

சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு இனி போலீஸ் தொந்தரவு இருக்காது. அதற்கான பல புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை,அருகில் உள்ளவர்கள் காப்பாற்றவே நினைக்கின்றனர். ஆனால் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இவர்களே குற்றவாளிகள் என்பது போல் பார்ப்பதும், போலீஸார் விசாரணை என்ற பெயரில் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. 

இதற்கு பயந்தே சாலை விபத்துகளின்போது பலர் ஒதுங்கி விடுகின்றனர்.இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், ‘முறையாக செயல்படும் விதிமுறை களை’ (ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் புரசீஜர்) வெளியிட்டுள்ளது. அதன் விதிமுறைகள் வருமாறு:

* சாலை விபத்தில் சிக்கியவர்கள் பற்றி போலீஸுக்கு தகவல் அளிப்பவர்களோ அல்லது அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களையோ மரியாதை யாக நடத்த வேண்டும்.
* விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களிடம் அவர் களுடைய முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை கேட்கக் கூடாது. சாட்சி சொல்ல அவர்களாக விரும்பி விவரங்களை கொடுத்தால் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.
* உதவி செய்பவர்கள் சாட்சி சொல்கிறேன் என்று ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு வசதியான நேரத்தில்தான் விசாரணை அதிகாரி சந்திக்க வேண்டும். அதுவும் அவருடைய வீடு அல்லது அலுவலகத்தில் விசாரணை நடத்தலாம். உதவி செய்தவரை விசாரிக்கச் செல்லும் போது, போலீஸார் சீருடையில் செல்லக்கூடாது, சாதாரண உடையில்தான் செல்ல வேண்டும்.* ஒருவேளை சாலை விபத்தை நேரில் பார்த்து பாதிக்கப் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தவரே போலீஸ் நிலையம் வந்து விரிவான தகவல்கள் தர ஒப்புக் கொண்டால், நியாயமாகவும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளும் அவரிடம் ஒருமுறை மட்டும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். 

பல முறை வரவழைத்து அலைக்கழிக்க கூடாது.* உதவி செய்தவர் பேசும் மொழி, விசாரணை அதிகாரிக்கு தெரியாவிட்டால், மொழிபெயர்ப் பாளரை அதிகாரியே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக சாலை விபத்து களில் சிக்கியவர்களை காப்பாற்ற முன்வருவோரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.4 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 50 சதவீதம் பேரை சரியான நேரத்தில் (கோல்டன் ஹவர்) மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களின் உயிரை காப்பாற்ற வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

போட்டித் தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவ பிரெய்லி புத்தகங்கள்

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இணை இயக்குநர் தகவல்போட்டித்தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில் பிரெய்லி புத்தகங்களை வாங்கிக்கொடுக்க அரசு தயாராக இருப்பதாக வேலைவாய்ப்பு மற் றும் பயிற்சித்துறை இணை இயக்கு நர்டி.விஜயகுமார் தெரிவித்தார்.தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோ ருக்கான 3 நாள் கல்வி- வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு திடல் வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை தாங்கி னார். கருத்தரங்கை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் (தொழில் ஆராய்வு) டி.விஜயகுமார் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு மத் திய, மாநில அரசு வேலை வாய்ப் பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. 

சமீப காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான காலியிடங் களைநிரப்புவதற்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள்வந்தவண்ணம் உள்ளன. இதற் கான தேர்வுகளுக்கு பார்வையற்ற வர்களை தயார்படுத்தும் வகை யில் சென்னை கிண்டியில் விரை வில் சிறப்பு பயிற்சி அளிக்க உள் ளோம்.டிஎன்பிஎஸ்சி, ஸ்டாப் செலக் ஷன் கமிஷன், பேங்கிங், ரயில்வே என பல்வேறு தேர்வு அமைப்புகள் நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளுக்குப் பார் வையற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வெழு தும் மாணவர்களுக்கு உதவுவதற் கென ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வாசகர் வட்டம் (ஸ்டடி சர்க்கிள்) இயங்கு கிறது. இங்கு போட்டித்தேர்வுக் கான அனைத்துப் பாடப்புத்தகங் களும் உள்ளன. 

மேலும், போட் டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி யும் நடத்தப்படுகிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு தேவைப்பட்டால் பிரெய்லி புத்தகங்களையும் வாங்கிக்கொடுக்க தயாராக இருக் கிறோம். புத்தகங்கள் வாங்குவதற் கென அரசு கூடுதலாக ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளது.அரசு அளிக்கின்ற வாய்ப்பு வசதிகளை பார்வையற்றவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை ஆன்லைனில் பதியலாம் என்றாலும் பார்வையற்றவர்கள் கல்வித்தகுதி மற்றும் மருத்துவ சான்றிதழுடன் நேரில் சென்றுதான் பதிவுசெய்ய வேண்டும். பார்வை யற்றோருக்கான சலுகைகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டால் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற் றுத்திறனாளிகள் வேலைவாய்ப் பற்றோர் உதவித்தொகையை பெறத் தகுதியுடையவர். ஆவர். இதன்படி, எஸ்எஸ்எல்சி முடித்தவர் களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டப் படிப்பு மற்றும்முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.

 இந்த உதவித் தொகையை 10 ஆண்டுகள் பெற லாம். இவ்வாறு விஜயகுமார் கூறினார்.வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வது, போட்டித் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் தொடர்பாக மாணவ-மாணவிகளின் பல் வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். முன்னதாக, பார்வையற்றோர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.வி.பக்கிரி சாமி வரவேற்றார். துணைத்தலை வரும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியையுமான ராஜேஸ் வரி அறிமுகவுரை நிகழ்த்தினார். நிறைவாக, பொதுச்செயலாளர் வி.எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

ஆதார் முகாம் நிறைவு சான்றிதழ்...

TNPSC:VAO APPLICATION STATUS - 2016

28/1/16

தொலைபேசி நம்பரை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்---தகவல் துளிகள்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்---தகவல் துளிகள்

நமது மொபைல் போனில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான தொலைப்பேசி எண்கள்--- தகவல் துளிகள்,

நலமுடன் வாழ---தகவல் துளிகள்

நன்றி மறப்பது நன்றன்று---தகவல் துளிகள்

நீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா?---தகவல் துளிகள்

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி?---தகவல் துளிகள்

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்---தகவல் துளிகள்

பாட்டி வைத்தியம்---தகவல் துளிகள்

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள்---தகவல் துளிகள்

பெண்களின் ஏழு பருவங்கள்----தகவல் துளிகள்

பெயர் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?---தகவல் துளிகள்

பேஸ்புக்கில் நண்பர்களை நீக்குவது எப்படி?----தகவல் துளிகள்

பொது அறிவு---தகவல் துளிகள்

மனதிற்கான மருந்துகள் அனுபவத்திலிருந்து மனவளக் கட்டுரை---தகவல் துளிகள்

மனித உடம்பின் 99 இரகசியங்கள்---தகவல் துளிகள்

மாடியில் போடும் தோட்டம் பற்றிய உங்களது அனைத்து சந்தேகங்களுக்கான பதில்களும் இனி ஒரே இடத்தில்---தகவல் துளிகள்

மூலிகை வளம் குப்பை மேனி---தகவல் துளிகள்

மொபைல் போன்---தகவல் துளிகள்,

வாழ்க்கை சொல்லும் பாடம்---தகவல் துளிகள்

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று---தகவல் துளிகள்

SBI - useful information---தகவல் துளிகள்,

பேஸ்புக் - வாட்ஸ் ஆப்' ஜோடி வாடிக்கையாளருக்கு வசதிகள்

தகவல் அனுப்ப உதவும், 'ஆப்'களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி சமூக வலைதளமான, 'பேஸ்புக்' உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம், 'வீடியோ' அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளை, 'வாட்ஸ் ஆப்' ஏற்படுத்தித் தந்துள்ளது. மொபைல் போனில் தகவல் அனுப்ப உதவும், 'வாட்ஸ் ஆப்'புக்கு போட்டியாக, 'லைன், வைபர், மெஸேஜ்மீ, வாக்ஸர், ஹேடெல், டெக்ஸ்ட்நவ், டாக்கடோன், கீக்' என, ஏராளமான, 'ஆப்'கள், மக்களிடையே பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில், வாட்ஸ் ஆப் முன்னணியில் உள்ளது.


சமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும், பேஸ்புக், 'வாட்ஸ் ஆப்'பை, பெருந்தொகைக்கு விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப்பில் பல்வேறு மாற்றங்களை, பேஸ்புக் புகுத்தி வருகிறது. தற்போது, பிற, 'ஆப்'களால் எழும் போட்டியை சமாளிக்கும் நோக்கில், 'வாட்ஸ் ஆப்'பில் புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
'வீடியோ' அழைப்பு, பேஸ்புக்குடன், தகவல் மற்றும் ஆவணங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல வசதிகள், வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி பயனாளிகள் மேற்கொள்ளும் அழைப்புகள் மற்றும், 'சாட்டிங்' பதிவுகளை, 'வாட்ஸ் ஆப்'போ, வேறு மூன்றாம் நபரோ, பயன்படுத்த முடியாதபடி, தடுக்கும், 'எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் இண்டிகேட்டர்' வசதியும், புதிய அம்சமாக இணைக்கப்படுகிறது.

வாங்க பகிரலாம்!
புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனக்கு தெரிந்தவர்களுடன், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள, 'வாட்ஸ் ஆப்' பயன்படுகிறது. இந்தியாவில், பெரும்பாலானோர் பயன்படுத்தும், 'ஆப்'பாக வாட்ஸ் ஆப் திகழ்கிறது. இதன் மூலம், படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோக்கள் பகிரப்பட்டு, சில நிமிடங்களில் மக்களிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயங்களாக உருமாறுவது, சமீபத்திய, 'டிரெண்ட்' ஆக உள்ளது. வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் அனைத்தையும், பேஸ்புக்கிலும் பகிரும் வசதி சேர்க்கப்படுவதால், பிற, 'ஆப்'களை, ஓரங்கட்ட முடியும் என, பேஸ்புக் நிறுவனம் கருதுகிறது

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம் குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பெயரளவுக்கு வந்து விட்டு, ஒரு வாரம் வரை போராட்டபணிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடாமல் மவுனமாக இருப்பதால், ஆசிரியர் சங்க போராட்டத்துக்கு, அதிகாரிகளும் துணை போவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோரிக்கைகள் என்ன?
* மத்திய அரசுஆசிரியர்களை போல், தமிழக ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தர ஊதியம் வழங்க வேண்டும்
* 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்* பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும்
* ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்
* தமிழை முதல் பாடமாக்கி அரசாணை வெளியிட வேண்டும்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவின் படி சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் உதவி ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஜாக்டோ போராட்டத்தின் 15 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் 3 நாட்கள் மறியல் போராட்டத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தினையும் திரட்டி மறியல் களத்தில் இறக்கிட வேண்டும்.27.01.2016 முதல் 29.01.2016 முடிய நடைபெறவுள்ள ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம் ஆசிரியர்கள் மத்தியில் உணர்வு தீயினை உருவாக்க வேண்டும்.
ஜனவரி 30,31 சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் மறியல் போராட்டமென்பது நமக்கு நாமே எந்த அலுவலகத்தை மறிக்கப் போகிறோம் என்ற நகைச்சுவை உணர்வே மேலிடுகிறது. எப்படியோ ஜாக்டோ மாநில அமைப்பு முடிவு செய்துவிட்டது.திரும்பிப் பார்ப்பது போராட்ட வடிவத்தில் இலக்கணமாக இருக்காது.
தேர்தல் சமயத்தில் எந்த அரசும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை பகைத்துக்கொள்ள விரும்பாது. ஜாக்டோ போராட்டம் , ஜாக்டோ ஜியோ போராட்டம் , டெஸ்மா போராட்டம் ஆகிய போராட்டங்களை நடத்திய போர்க்குண வரலாறு உடையது. இந்த மறியல் போராட்டத்தை பழைய போராட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அமைப்பிற்கு இந்த 3 நாள்கள் போராட்டத்தை போராட்டமாகவே கருத முடியாது.இந்த போராட்டத்தில் தேசியப் பணியே இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு கோரிக்கைகளுக்காக களம் காணுவதுதான் போர்க்குண உணர்வாகும். இருக்கிற ஆசிரியர்கள் எண்ணிக்கையில் முதல் இரண்டு நாள் சனி ஞாயிறில் பெருந்திரளாக கலந்துகொள்ளுங்கள்.காலையில் கைது மாலையில் விடுதலை சடங்காகவே முடியும். 
பிப்ரவரி 01 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம்தான் உண்மையான மறியல் போராட்டமாகும்.முதல் 2 நாள்கள் போராட்டத்தில் கைதாகி விடுதலையானவர்களும் , போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் காத்திருப்போரும் பிப்ரவரி 01 மறியல் போராட்டத்தில் பள்ளியில் எவரும் இல்லை அனைவரும் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள் என்ற நிலையை தமிழக அரசுக்கு உணர்த்துவோம். அரசு ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டத்தின் எண்ணிக்கை ஜேக்டோ அமைப்பின் எண்ணிக்கையைவிட குறைவாக இருந்தாலும் அவர்களின் பீரிட்ட எழுச்சியின் உணர்வுதான் தமிழக முதலமைச்சருக்கு அடுத்த அதிகாரத்தில் உள்ள தலைமைச் செயலாளரையே அழைத்துப்பேச செய்தது என்ற யதார்த்த நிலையை உணர வேண்டும்.
எனவே ஜாக்டோ மறியல் போராட்டத்தில் முழு சக்தியினையும் அரசுக்கு உணர்த்தினால்தான் 7-வது ஊதியக் குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை நெஞ்சத்தில் பதிவு செய்து போர்க்குண வரலாறு படைத்த ஜாக்டோ பெரும்படையே கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்கிற முழு நம்பிகையுடன் விளைவினை ஜாக்டோ அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு மறியல் களத்தில் வீறுநடை போட வாருங்கள் என அன்புடன் அழைகிறேன்.பாரதி கண்ட வீரம் செறிந்த பெண் ஆசிரிய சகோதரிகளே 3நாள் மறியல் போராட்டத்திலும் ’இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்று தலைமை வகுத்து முன்னணியில் செல்லுங்கள்.
ஜேக்டோ அமைப்பு என்றும் உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒரு இரும்பு கவசமாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இமைகளாக இருந்து கண்ணின் கருவிழியாம் உங்களை பாதுகாப்போம். கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரட்டும் தொடரட்டும். வெற்றி நமதே

சேலம் மாவட்டத்தில் 7.2.2016 அன்று பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மாபெரும் உண்ணா நிலை போராட்டம்.

கணினிக் கல்வியை ஆரம்ப கல்வி முதல் கட்டாயப் பாடமாக அரசு பள்ளியில்
கொண்டுவர-கோரி.
ஞாயிறு காலை
9.36 லிருந்து மாலை 5மணி வரை.
சேலம் மாவட்டம்.
கலெக்டர் அலுவலகம் அருகில் .
உண்ணாநிலை போராட்டம்.

அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.
அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக் கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் அல்லவா?
அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது; அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப் பள்ளிகள் புறக்கணிப்படுகிறது
தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார் கள் என்றால், அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில் முக்கியத்துவம் தருகின்றன் ஆனால்
அரசு பள்ளியில் கணினி கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன
இதனை வலியுருத்தி
7.2.2016 சேலம் மாவட்டத்தில்
உண்ணா நிலை போராட்டம் நடைபெறுகிறது...
தமிழ்க அரசு பள்ளியில் கணினிக் கல்வியை கொண்டுவர கோரியும் .நம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை வெற்றி பெறவும் அனைவரும் வருக சேலம் மாநகர் நோக்கி.....
வெ.குமரேசன்
மாநில செயலாளர்
9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர்

பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க “புன்னகையை தேடி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.
01.01.2015 முதல் 31.01.2015 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலனோடு தொடர்புடையதுறைகள் மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் தொடங்கப்பட்டு காணாமல் போன குழந்தைகள் தேடப்பட்டனர் அவ்வகையில் இந்தியா முழுவதும் சுமார் 3,000 குழந்தைகள் பேருந்து நிலையம், கோயில்கள், சுற்றுலா தலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில்; கண்டுபிடிக்கப்பட்டனர்.அதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு;ள்ளது.இந்த “புன்னகையை தேடி” (Operation Smile)திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் 01.07.2015 முதல் 31.07.2015 வரை காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை தேடும் பணியாக “புன்னகையை தேடி” (Operation Muskkan) திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் போது சென்னையில் 122 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, “புன்னகையை தேடி” (Oerations Smile II) திட்டமானது 01.01.2016 அன்று முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக தமிழகத்தில் காவல் துறை மற்றும் அரசு சாரா அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, கோயில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆதரவின்றி திரியும் குழந்தைகள் இருப்பின் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.ஆதரவற்ற மற்றும் காணாமல் போன குழந்தைகளின் வாழ்வு ஒளிமயமானதாக அமைய பொதுமக்கள் தங்கள் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் கொடுக்கலாம் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல்தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.

புதிய அரசாணை அரசு வெளியிட வேண்டுகோள்!!! அரசின் திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் சிக்கித்தவிக்கும் 15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி?

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனைகளில் ஒன்றாக 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணைப்படி அரசுப்பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளான 6 முதல் 8 வரையிலான வகுப்புமாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்விமற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான கணினி, இசை, தையல், தோட்டக்கலை,கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.


(School Education - Sarva Shiksha Abhiyan - Filling up of 16549
Part-time instructors to Government schools for Standard VI to VIII-
Procedure of selection – Orders issued. School Education(C2)
Department G.O.(MS) No.177 Dated:11.11.2011 ORDER:- The Principal
Secretary/ State Project Director, Sarva Shiksha Abhiyan has stated
that in the Project Approval Board held for approving the
supplementary Annual Work Plan & Budget 2010-11 in the context of
Right of Children to Free and Compulsory Education (RTE) provisions,
16549 Part-time instructors have been sanctioned for Tamil Nadu. Of
these posts,5253 Part-time instructor posts for Art Education, 5392
posts for Health and Physical Education and 5904 posts for Work
Education have been sanctioned for Standard VI to VIII in Government
schools where admission of children is more than one hundred.) தொடர்
கோரிக்கைகளை தொடர்ந்து பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை
வழங்கி புதிய அரசாணை 186ன்படி பணிபுரியும் 15169 பகுதிநேர
ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014
முதல் ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. (School Education(SSA) Department
G.O.(MS) No.186 Dated:18.11.2014 Amendment (2) The Salary of Part Time
Instructors is increased from Rs. 5000/- to Rs. 7000/- from April 2014
onwards) அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளபடி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு
மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, ECS முறையில் மாதத்தின் முதல்
தேதியில் ஊதியம் போன்றவற்றையே இதுவரை கேட்டும் கிடைக்காததால் எங்களின்
வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் திட்டத்தின் அடிப்படையிலான
வேலையால் கேள்விக்குறியாகிவருகிறது!!!!!. (The services of the selected
Part-Time Instructors may be utilized for maximum 4 schools (nearby)
where there is short of selected candidates available. In this case,
the Part-time Instructors may be paid for all the 4 schools and in all
the 4 schools they should be asked to serve for 3 half days.), (Head
Masters of the Schools concerned are to draw the Salary and to pay the
salary on the first working days of every month)
15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 15000க்கும் மேற்பட்ட பகுதிநேர
ஆசிரியர்களை புதிய அரசாணை வெளியிட்டு பணிநிரந்தர உத்தரவு வழங்கிட
வேண்டும்.
2) தமிழகம் முழுவதும் பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர
ஆசிரியர்களின் குடும்பங்களை அரசு தத்து எடுக்க வேண்டும்.
3) பணிநிரவலில் இப்போதும் 100க்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை உள்ள
பள்ளிகளில் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிநிரவல்படி
தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வாய்ப்புகள்
வழங்க வேண்டும்.
வேலை வாய்ப்பு திண்டாத்தில் நாடு தத்தளிப்பதால் கிடைத்த வேலையை உறுதி
செய்து கொள்ள மன்றாடும் எங்களுக்கு ஆதரவாக அனைவரும் மாண்புமிகு தமிழக
முதல்வர் அம்மா அவர்களுக்கு பரிந்துரைத்திட, உரிமையுடனும் வேண்டுகிறேன்.
அனைவருக்காகவும் கடலூர் செந்தில் (எ) சி.செந்தில்குமார், (9487257203),
கடலூர் மாவட்டம்.

சென்னையில் இன்று தேர்தல் பயிற்சி வகுப்பு

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான, தேர்தல் ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, சென்னையில் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுடனான ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, தலா, எட்டு மாவட்டங்கள் வீதம், நான்கு கட்டமாக நடத்தப்படுகிறது.

சென்னை, அண்ணா மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையத்தில், இன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர், தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.

பி.எப்., தொகை கணக்கு வைக்காதது கிரிமினல் குற்றம்: அதிகாரி எச்சரிக்கை

''பி.எப்., தொகையை, முறையாக கணக்கு வைக்காமல் இருப்பது, கிரிமினல் குற்றம்,'' என, பி.எப்., கோவை மண்டல உதவி கமிஷனர் ரவிதேஜாகுமார் ரெட்டி எச்சரித்து உள்ளார். ஊட்டியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு, 'யு.ஏ.என்.,' எனப்படும், நிரந்தர வைப்பு எண் சேவை பயனுள்ளதாக இருக்கும். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பி.எப்., நிதியை, முறையாக கணக்கு வைப்பதில்லை என்ற சர்ச்சை இருந்து வருகிறது.
போக்குவரத்து கழகம், மின் வாரியம் உட்பட, சில பொதுத் துறை நிறுவனங்கள், தாங்களே பி.எப்., பிடித்தம் செய்துக் கொள்வதாக, எங்களிடம் இருந்து விலக்கு பெற்றுள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான், பி.எப்., நிறுவனத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. நிபந்தனைகளை பின்பற்றாமல் இருப்பதும், பி.எப்., தொகையை முறையாக கணக்கு வைக்காமல் இருப்பதும் கிரிமினல் குற்றம்.இவ்வாறு ரவிதேஜாகுமார் ரெட்டி கூறினார்.

27/1/16

'ராகிங்' தடுப்பு கமிட்டி கல்லூரிகளுக்கு உத்தரவு

'ராகிங் மற்றும் பாலியல் கொடுமை உட்பட, கல்லுாரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க, ஐந்து வகையான கமிட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்' என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிபந்தனை விதித்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் கட்டுப்பாட்டில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கு அங்கீகாரம் பெற, பிப்., 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டு உள்ளது.

அத்துடன், சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில், மிக முக்கியமாக ஐந்து வகையான கமிட்டிகளை நியமிக்க உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், அரசோ, பல்கலையோ அனுமதிக்காத கட்டணத்தை, மறைமுகமாக வசூலிக்கக் கூடாது; வசூலித்தால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஐந்து வகை கமிட்டி என்னென்ன?

* மாணவர்களுக்கான மனநல வழிகாட்டி கமிட்டி
* 'ராகிங்' தடுப்பு மற்றும் புகார் விசாரணை கமிட்டி
* குறைதீர் கமிட்டி
* மாணவியர் மற்றும் பெண் ஊழியர்களுக்கான பாலியல் கொடுமை தடுப்பு விசாரணை கமிட்டி
* தலித் மாணவர்களுக்கான தீண்டாமை தடுப்பு கமிட்டி.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் பாடத்திற்கு 'விலக்கு'

'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பள்ளிகளில், தமிழ் மொழியை கட்டாயமாக்கி, 2006ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, 2006ல், 1ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, அடுத்த அடுத்த ஆண்டுகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டது.
கடந்த, 2006ல், 1ம் வகுப்பு படித்த மாணவர்கள், வரும் மார்ச் -ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இவர்கள், முதல் மொழி பாடத் தேர்வாக, தமிழ்த் தேர்வை எழுத வேண்டியுள்ளது. இதனால், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழியை தாய்மொழியாகக் கொண்ட, 7,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள், மொழி பாடத் தேர்வாக, தமிழுக்கு பதிலாக, தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பித்தனர்; அது, நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச், 'தமிழ் மொழியில், மொழிப் பாடத் தேர்வு எழுத விலக்கு கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு, விலக்கு அளிக்க வேண்டும்' என, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, மார்ச், 7க்கு தள்ளிவைக்கப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விரைவில் அட்டவணை வெளியீடு

2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2-ஏ தொகுதியில் வரக் கூடிய 1,947 காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8.60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படையினர் கண்காணித்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். இதன்பிறகு, "2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்' என்று அவர் கூறினார். 

பிப்ரவரி 1 முதல் அதிரடி நடவடிக்கைரயிலில் மூத்த குடிமகன் சலுகைக்காக தவறான வயது குறிப்பிட்டால் அபராதம்: ரயில்வே அறிவிப்பு

ரயிலில் மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணிப்பவர்கள் தவறான வயதை குறிப்பிட்டு பயணித்தால், பயணச்சீட்டு இன்றி பயணிப்பதாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய கெடுபிடி பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலாகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயிலில் பயணம் செய்ய தேசிய விருது பெற்ற விளையாட்டு வீரர்கள், நோயாளிகள், தேர்வு எழுதச் செல்லும் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. அதேபோல் மூத்த குடிமகன்களுக்கு முன்பதிவு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன் என்ற சலுகையை பெற பெண்களுக்கு 58ம் , ஆண்களுக்கு 60ம் குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயணக்கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் சலுகை அளிக்கப்படுகிறது.

நோயாளிகள் என்றால் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே கட்டணச்சலுகை. ஆனால் மூத்த குடிமகன்கள் எந்த காரணத்திற்காக பயணம் மேற்கொண்டாலும் இந்த கட்டண சலுகை உண்டு. அப்படி பயணம் செய்யபவர்கள் பயணச்சீட்டு வாங்கும் போதோ, முன்பதிவு செய்யும் போதோ வயது சான்று ஆவணங்கள் எதையும் காட்டத்தேவையில்லை. ஆனால் பயணத்தில்போது வயதை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய உண்மை சான்றை காட்ட வேண்டியது அவசியமாகும். வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை என 10 வகையான ஆவணங்களை வயது சான்றாக பயணத்தின் போது, கேட்கும் போது காட்ட வேண்டும்.

வயதுக்கான சான்று காட்டாவிட்டால், அவர்களுக்கு பயணச்சீட்டு பரிசோதகர் அபராதம் விதிப்பார். அதாவது மூத்த குடிமகன்கள் சலுகையாக பெற்ற கட்டணத்துடன், அபராதத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இனி மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணம் செய்பவர்கள் வயதுச் சலுகைக்கான சான்ைற காட்டாவிட்டால், அதவாவது தவறான வயதை காட்டி சலுகை பெற்று பயணிப்பவர்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களாக கருதப்படுபவர். அதுமட்டுமின்றி முன்பதிவு செய்து இருக்கை அல்லது படுக்கை உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் தவறான வயதைக்காட்டி சலுகை பெற்றவர்களாக கருதப்படுவர். இப்படி தவறான வயதைக் குறிப்பிட்டு சலுகை பயணம் மேற்கொள்பவர்கள் பிப்ரவரி 1ம் தேதி பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களாக கருத்தப்பட்டு அதற்கான அபராதம் விதிக்கப்படும். இதற்கான உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"தாய்மொழி வழிக் கல்வியே புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும்"

தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே புதுமையான சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்க முடியும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் கூறினார். தமிழ் இலக்கியப் பாசறை மற்றும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச் சங்கம் சார்பில் "கலாமைப் பாடிய கவிக் குயில்கள்' நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஆர்.எஸ். புரம் அன்னபூர்ணா கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார். தமிழ் இலக்கியப் பாசறைத் தலைவர் மா.இளங்கீரன், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்க மாவட்டத் தலைவர் சாவித்திரி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறைப் பொதுச் செயலாளர் கிருஷ்ணா வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், "கலாமைப் பாடிய கவிக்குயில்கள்' என்ற நூலை வெளியிட, அதை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்னராஜ் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட 32 பேருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பொன்ராஜ் பேசியதாவது:

 தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே நல்ல சிந்தனைகளையும், புதுமைகளையும் வெளிக்கொண்டுவர முடியும். அதற்கு நமது தமிழறிஞர்கள் அனைவரும் சேர்ந்து அனைத்துப் பாடங்களையும் தமிழில் கொண்டு வரும் பணியில் இறங்க வேண்டும். இந்தியா உற்பத்தியில் 58-ஆவது இடத்தில் உள்ளது. கண்டுபிடிப்புகளில் 148-ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம், இந்தியாவில் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் அங்கீகாரம் கொடுப்பதால் அனைவரும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

எத்தனையோ இந்திய திறமைசாலிகள் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல இடத்தில் உள்ளனர். தாய்மொழியில் கல்வி கற்றிருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாக மாறியிருக்கும். இந்தியா அறிவியலில் வல்லரசாக வேண்டும் என அப்துல்கலாம் கனவு கண்டார். அதற்கு இந்தியாவின் அறிவுத்தளம் வளர வேண்டும். அதற்கு அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்றார்.

 இந்நிகழ்ச்சியில், கோவை முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவியல் விஞ்ஞானி ச.மோகன், அப்துல்கலாமின் கல்லூரித் தோழர் சம்பத்குமார், பாசறைப் புரவலர் ஆனந்த் பழனிசாமி, முன்னாள் சட்டக்கல்லூரி முதல்வர் சூரியநாராயணன், மூத்த தமிழறிஞர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாசறை துணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.

பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?

பள்ளிகளில் உடற்பயிற்சி அளிப்பது, தேசத்துக்காக தியாகம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்தத் தகவலை தெரிவித்தார்.

மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு

இலங்கையில் மாணவர்களுக்கான அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வியில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் 6 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பாடங்களின் எண்ணிக்கை குறித்த அழுத்தங்கள் பற்றி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வி முறைமையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கல்வி அமைச்சை சேர்ந்தவர்களிடம் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் கூறினார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் நல்ல பள்ளிக்கூடங்களில் அனுமதி பெறும் நோக்கில் 5 ஆம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களும், பெற்றோரும் அதிக கவனம் செலுத்துவதாக தம்மிடம் கூறிய ஜனாதிபதி, அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பரீட்சைக்கான அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுப்பதுடன், வெறுமனே பரீட்சையை மாத்திரம் மாணவரின் தகமையை அறியும் சாதனமாக கொள்ளாமல், அவர்களது ஏனைய திறமைகளையும் கணிக்கும் வகையில் கல்விமுறையில் மாற்றம் செய்யுமாறும் அதிகாரிகளை கேட்டதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் சுமார் 13 பாடங்களை தற்போது படிக்க வேண்டிய நிலை இருப்பதாக கவலை தெரிவித்த ஜனாதிபதி, அதற்கு பதிலாக தேவையான பாடங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனையவற்றின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார். அதேவேளை கணினி மற்றும் தொழில்நுட்பக் கல்வி போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அவர்களை கேட்டிருக்கிறார். இந்த சீர்திருத்தங்கள் குறித்த ஒரு அறிக்கையை தனக்கு ஒரு மாதகாலத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தேசிய கல்வி நிறுவன ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

13 மாதங்களாக சம்பளம் இல்லை துப்புரவு பணியாளர்கள் பரிதவிப்பு

தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த, 13 மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய அடிப்படையில், நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாதம், 25 ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்.

இதில், பெரும்பாலும் வயதான பெண்களே அதிகம். தினக்கூலியை விட, குறைந்த மாத சம்பளத்துக்கு வேலை பார்த்த இவர்களுக்கு, கடந்த ஆண்டு வரை, மாதம், 715 ரூபாயும், பொங்கல் போனஸாக, 1,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த, 13 மாதங்களாக துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சம்பளம் வழங்கவில்லை. மேலும், 2014 முதல், 2016 வரை மூன்று ஆண்டுகளாக, பொங்கல் போனஸ், 1,000 ரூபாயும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதம் துவங்கியதும், சம்பளம் வந்துவிட்டதா? என்று துப்புரவு பணியாளர்கள் கேட்கும்போது, அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். ஒரு சிலர், தங்களது சொந்த பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.

கடந்த, 13 மாதங்களாக அரசிடம் இருந்து நிதி வரவில்லை. இந்த கணக்கில் கையிருப்பும் இல்லை. எனவே, துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படாமல், கடந்த, 13 மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பள பணத்தையும், பொங்கல் போனசையும் சேர்த்து, பொது நிதியில் இருந்து வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து நிதி வந்ததும், அதை மீண்டும் பொது நிதியில் சேர்த்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரம் உயரவில்லை: யு.ஜி.சி., வேதனை!

அண்ணா பல்கலை யின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் மற்றும் சர்வதேச விவகார மையம் சார்பில், சர்வதேச கல்வியாளர்கள் கருத்தரங்கு, துணைவேந்தர் ராஜாராம் தலைமையில் நேற்று நடந்தது.
கருத்தரங்கில், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது:
அண்ணா பல்கலைக்கழகம், சீர்மிகு திறன் வாய்ந்த பல்கலை அந்தஸ்தை பெற்று தரம் உயர்ந்துள்ளது. வருங்காலங்களில் சீர்மிகு 
பல்கலைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டில், தரத்தில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் சீர்மிகு
பல்கலைகளுக்கு, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும். இந்த நிதியில், சமூகத்துக்கு தேவையான ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். 'டிஜிட்டல் இந்தியா' திட்டம், திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் 'மேக் இன் இந்தியா' என்கிற இந்திய உற்பத்தி திட்டம் ஆகியவை இலக்கை அடைய, அனைத்து பல்கலைகளும் முயற்சிக்க வேண்டும்.
ஆராய்ச்சிகளின் தரம் உயர வேண்டும்; அதன் மூலம் பட்டங்களின் மதிப்பை உயர்த்த வேண்டும்.
அதற்கு, கல்வியில் தரம் உயர்த்த என்னென்ன நிதியுதவி தேவையோ அனைத்தையும் யு.ஜி.சி., தருகிறது. இவ்வளவு நிதி உதவி செய்தும், யு.ஜி.சி., எதிர்பார்த்த தரத்தை பல்கலைகள் அளிக்கவில்லை. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., நிறுவனங்களுக்கு நிகராக, தரமான கல்வியைத் தர மற்ற கல்வி நிறுவனங்களும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

நெருக்கடி தேர்தல் நேரத்தில் காலவரையற்ற போராட்டம்!!!

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, பிப்., 10 முதல் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தப் போவதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும்; காலி பணிஇடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்க 
வேண்டும் என்பது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை, அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
அதிருப்தி : இதற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஒட்டுமொத்த விடுப்பு என, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது, சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய தமிழக அரசு, பல கோரிக்கைகளை ஏற்றது.


ஆனால், இதுவரை அவற்றை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை வெளிப்படுத்த, 22ம் தேதி, ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்தினர்; அன்று பல ஆயிரம் பேர், சென்னையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வரைச் சந்திக்க, கோட்டை நோக்கி செல்ல முயன்றனர். ஆனால், தலைமைச் செயலரைசந்தித்து மனு கொடுத்தனர். அவர் எந்த உறுதியும் தராததால், பிப்., 10 முதல், அரசு ஊழியர்கள் காலவரையற்ற, ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

பொறுத்திருங்கள்
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: ஐந்து ஆண்டாக அனுமதி கேட்டும், முதல்வரை சந்திக்க முடியவில்லை. 22ம் தேதி, நீண்ட போராட்டத்திற்கு பின், தலைமைச் செயலரைச் சந்தித்தோம். அவரோ, 'முதல்வரிடம் தெரிவிக்கிறேன்; காலம் வரும் வரை பொறுத்திருங்கள்' என்றார். 'ஐந்து ஆண்டுகள் பொறுமையாக இருந்து விட்டோம்; இனியும் இருக்க முடியாது; பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்' என, தெரிவித்தோம். இதுவரை, அரசு தரப்பில்இருந்து சாதகமான பதிலோ, பேச்சுக்கு அழைப்போ வரவில்லை. திட்டமிட்டபடி, ஸ்டிரைக் நடக்கும்.


Advertisement
அதற்கான முன்னேற்பாடுகளில்
ஈடுபட்டுள்ளோம். அரசு ஊழியர்கள், ஆறு லட்சம் பேர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.

முடிவு வருமா?
* 'புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தாலும், இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அரசு ஊழியர்களிடம் பிடித்த நிதி, என்ன ஆனது என்று தெரியவில்லை
* அங்கன்வாடி, சத்துணவு ஊழியர், நர்ஸ் உட்பட, தொகுப்பூதியத்தில் உள்ள, மூன்று லட்சம் பேரை முறைப்படுத்த, கமிட்டி அமைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு?
* புதிய சம்பள விகிதம், 1.1.2016 முதல் தரப்படும் என, அறிவித்த அரசு, அதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. அரசு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே, நிதி சார்ந்த இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.

பேஸ்புக்' விமர்சனம் ஆசிரியர் 'சஸ்பெண்ட்'!

தர்மபுரி மாவட்டம், முள்ளுவாடி அரசு துவக்கப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி, 34. இவர், முதல்வர் ஜெயலலிதா, தர்மபுரி கலெக்டர்
விவேகானந்தன், சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் குறித்து பேஸ்புக் மற்றும் 
வாட்ஸ் ஆப்பில் அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தகவல்களை பரப்பி உள்ளார்.
இதையடுத்து மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து டி.இ.இ.ஓ., ராஜசேகரன் உத்தரவிட்டார்.

பத்தாம் வகுப்பில் கட்டாய தமிழ் தேர்வு: விலக்கு அளித்துஉயர் நீதிமன்றம் உத்தரவு:

பத்தாம் வகுப்பில் கட்டாயமாகத் தமிழ் தேர்வு எழுத விலக்கு கோரியவர்களுக்கு விலக்கு அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால உத்தரவிட்டது.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று 2006-இல் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வின்போது தமிழ் தேர்வு எழுதுவதற்கு விலக்குஅளிக்க வேண்டும் என்றும் இதற்காக ஒரு குழுவை அமைத்து விரைந்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, விலக்கு கோரிய மாணவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

DEO Training Postponed:

டி.இ.ஓ.,க்கள் பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு 
தமிழகத்தில் பதவி உயர்வு மூலம் பணியேற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) நிர்வாக பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை நேற்று ஒத்திவைத்தது.இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஜன.,27 முதல் 29 வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி பிப்., 1 முதல் 3 வரையும் சென்னையில் நடப்பதாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.ஆனால் 'நிர்வாககாரணங்களுக்காக இப்பயிற்சி வகுப்புகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,' என கல்வித்துறை அறிவித்துள்ளது.

GAS CYLINDER AMOUNT PAY ONLINE:

சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!
Image result for GAS CYLINDER AMOUNT PAY ONLINE:சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பணமில்லா நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான முன்பதிவு முறை ஏற்கெனவே ஆன்லைன் வழியாக அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், விநியோகிப்பட்ட பிறகே பணம் செலுத்த முடியும் என்ற நிலையே இருந்தது.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டத்தை நேற்று (24.01.16) தொடக்கி வைத்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது 16.5 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தப் புதிய நடைமுறையின் மூலம் நுகர்வோர்கள் பயனடைவார்கள், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் தொலைந்த கல்வி சான்றிதழ் நகல் எடுத்துக்கொள்ளலாம்!

ஜன 27 முதல் கல்வி நகல் சான்றிதழ்
சென்னை: மழை வெள்ளத்தில் கல்விச்சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு வரும் 27 முதல் கல்வி நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, கல்வி நகல் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 27 ம்தேதி முதல் நகல்களை பெற்றுக்கொள்ளலாம். ஒப்புகைசீட்டு பெற்ற முகாம்களிலேயே இந்த நகல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்

பிப்ரவரி 2ல் இடைக்கால பட்ஜெட்?

தமிழக சட்டசபை, 20ம் தேதி கூடியது. அன்று காலை, 10:30 மணிக்கு, கவர்னர் உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது. விவாதத்திற்கு, 23ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது.அ.தி.மு.க., அரசின் பதவி காலம் முடிய உள்ளதால், இவ்வாண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த மாத இறுதியில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, தேதி அறிவிக்க உள்ளதால், முதல் வாரத்திலேயே, பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தி முடிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. பிப்., 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவும், அடுத்த நான்கு நாட்கள் விவாதம் நடைபெறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

26/1/16

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை: தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்லத்தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்துவிட்டால் அடுத்து வரும் இரு தேர்வுகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி தகவல் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் குடும்பத்திற்கு பணப்பலன் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டனர், இவர்களின் குடும்பத்திற்கு பணப்பலன் வழங்கவில்லை. தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர் தியாகராஜன் காளையார்கோவிலில் கூறியதாவது:

மத்திய அரசு நாடு முழுவதும் ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு,'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' செயல்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலில் 2004ல் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை செயல்படுத்தினார். பங்களிப்பு திட்டத்தை கைவிடக்கோரி வலியுறுத்தி வருகிறோம். 2006--11ல் செயல்பட்ட தி.மு.க.,அரசும் கண்டுகொள்ளவில்லை.கடந்த 2011 தேர்தலின் போது ஜெயலலிதா,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டம் தொடரும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்து 5 ஆண்டும் முடியப்போகிறது,இன்னும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை.ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இறந்து விட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்டஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை இன்றுவரை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வறுமை யில் வாடுகிறது.

இரண்டு லட்சம்

ஆசிரியர்களிடமிருந்து சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படுகிறது.பிடித்தம் செய்த பணம் குறித்து கல்வித்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்கும் போது தெரியவில்லை என்றே தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பணம் எங்கே செல்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

முதல்வர் ஜெயலலிதா பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிப்பார் என தளராமல் நம்பிக்கையோடு இன்றுவரை காத்திருக்கிறோம்.மகப்பேறு விடுப்பின்போது செல்லும் ஆசிரியைகளுக்கு, பதிலி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், துவக்க, நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைக்கென தனியான இயக்குனரகங்களை அரசு ஏற்படுத்திட வேண்டும், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வினை கைவிடவேண்டும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை வரவேற்கிறோம்,அதே வேளையில் உதவிபொருட்களை ஆசிரியர்களே எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தபால்துறை மூலமாக பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வினியோகம் செய்துவந்தனர். அதே போன்று இனிவரும் காலங்களிலும் தபால் துறை மூலமாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்

போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.

அப்போது ராமசாமி, சிவராஜ் இருவரும் பணியில் சேருவதற்காக 10-ஆம் வகுப்புசான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தனர். இந்தச் சான்றிதழ்கள் கோவையில் உள்ள தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ராமசாமி, சிவராஜ் இருவரும் கொடுத்த 10-ஆம் வகுப்புச் சான்றிதழ்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் இருவர் மீதும் மடத்துக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் 2-இல் நடைபெற்று வந்தது. இதில், போலியான சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக ராமசாமி, சிவராஜ் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்ற நடுவர் சுதா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதில், அரசு வழக்குரைஞராக பி.சிவசுப்பிரமணியம் ஆஜரானார்.

30 முதல் ஆசிரியர்கள் தொடர் மறியல்

வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜேக்டோ அறிவித்துள்ளது. கோவை தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேக்டோ மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 

மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை, ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சிவானந்தா காலனியில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.முன்னதாக, மறியல் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில்ஜனவரி 27 முதல் 29-ஆம் தேதி வரை ஆசிரியர் சந்திப்பு இயக்க சுற்றுப்பயணம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் த.அருளானந்தம், சு.கணேஷ்குமார், ந.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி, 

2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுகிறது.அதேபோல், 2011ம் ஆண்டு முதல் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்புஆசிரியர்களுக்கும், தமிழக அரசு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், 1,188 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.இதில், பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டில், ஒவ்வொரு பிரிவுக்கும், தலா, 1சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆயினும், தற்போது விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து, தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக கூறி, போட்டித் தேர்வுகளை நடத்தாமல், தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

காலம் தாழ்த்துகிறது:சிறப்பு ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த, 2012ம் ஆண்டுக்கு பிறகு, நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவில்லை.தற்போது, சிறப்பு ஆசிரியர்கள் பணிக்காக, ஒரு லட்சம் பேர் தயாராக இருக்கின்றனர்.ஆனால், சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிடாமலேயே, ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு:பாமக புகார்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் அரசு விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என பாமக குற்றம்சாட்டியது.


பாமக மாநில துணைத் தலைவர் வடிவேல், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்தியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள அசுஉதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் ஆசிரியர் நியமனம் செய்வதில் அரசு விதிமுறைகளை மிறி நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆசிரியர் பணிநியமனத்தில் பதிவுமூப்பு அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 160 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் கடந்த வாரத்தில் 13 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்ப்பட்டுள்ளன. இதில், தகுதியில்லாத நபர்கள் அரசுவிதிமுறைகளுக்கு உள்படாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.தற்போது போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியில்லாதவர்கள் ஆதாயத்தின் அடிப்படையில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்படுகின்றனர். இதனால், பள்ளிக் குழந்தைகளில் கல்வி பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகும். தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புஅடைந்துள்ளனர்.எனவே, நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் வெளிப்படையான தன்மை நிலவ வேண்டும். இதில் அரசுவிதிமுறைகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.

அப்போது ராமசாமி, சிவராஜ் இருவரும் பணியில் சேருவதற்காக 10-ஆம் வகுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தனர். இந்தச் சான்றிதழ்கள் கோவையில் உள்ள தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ராமசாமி, சிவராஜ் இருவரும் கொடுத்த 10-ஆம் வகுப்புச் சான்றிதழ்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இருவர் மீதும் மடத்துக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் 2-இல் நடைபெற்று வந்தது. இதில், போலியான சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக ராமசாமி, சிவராஜ் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்ற நடுவர் சுதா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதில், அரசு வழக்குரைஞராக பி.சிவசுப்பிரமணியம் ஆஜரானார்.

ஆசிரியர் குடும்பத்திற்கு பணப்பலன் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டனர், இவர்களின் குடும்பத்திற்கு பணப்பலன் வழங்கவில்லை. தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர் தியாகராஜன் காளையார்கோவிலில் கூறியதாவது:மத்திய அரசு நாடு முழுவதும் ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு,'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' செயல்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலில் 2004ல் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை செயல்படுத்தினார். பங்களிப்பு திட்டத்தை கைவிடக்கோரி வலியுறுத்தி வருகிறோம். 2006--11ல் செயல்பட்ட தி.மு.க.,அரசும் கண்டுகொள்ளவில்லை.

கடந்த 2011 தேர்தலின் போது ஜெயலலிதா,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டம் தொடரும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்து 5 ஆண்டும் முடியப்போகிறது,இன்னும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை.ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இறந்து விட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை இன்றுவரை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வறுமை யில் வாடுகிறது. இரண்டு லட்சம்
ஆசிரியர்களிடமிருந்து சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படுகிறது.

பிடித்தம் செய்த பணம் குறித்து கல்வித்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்கும் போது தெரியவில்லை என்றே தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பணம் எங்கே செல்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிப்பார் என தளராமல் நம்பிக்கையோடு இன்றுவரை காத்திருக்கிறோம்.

மகப்பேறு விடுப்பின்போது செல்லும் ஆசிரியைகளுக்கு, பதிலி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், துவக்க, நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைக்கென தனியான இயக்குனரகங்களை அரசு ஏற்படுத்திட வேண்டும், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வினை கைவிடவேண்டும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை வரவேற்கிறோம்,அதே வேளையில் உதவிபொருட்களை ஆசிரியர்களே எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தபால்துறை மூலமாக பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வினியோகம் செய்துவந்தனர். அதே போன்று இனிவரும் காலங்களிலும் தபால் துறை மூலமாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

தீவிரமாக ஆராய்கிறது பதிவுத்துறை எந்த ஊரில் இருந்தும் பத்திரப்பதிவு சாத்தியமா?

சொத்து அமைந்துள்ள பகுதிக்கு செல்லாமல், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பத்திரப்பதிவு செய்யும், புதிய வசதிக்கான சாத்தியக் கூறுகளை பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும், சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. குறைந்துள்ளது.

இங்கு, சொத்து விற்பனை, குடும்பத்துக்குள் நடக்கும் பரிமாற்றம், திருமண பதிவு, நிறுவனங்கள் பதிவு என, ஆண்டுக்கு, 32 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளாக, இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

தற்போது, பொது அதிகார ஆவணங்களை மட்டுமே, பொதுமக்கள் அவரவர் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. விற்பனை ஆவணங்களை, சொத்து அமைந்துள்ள பகுதிக்கான, சார்-பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

சொத்து விற்பனை ஆவணங்களின் உண்மை தன்மையை சரி பார்ப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல் காரணமாகவே, இந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாற்றம்:பதிவுத் துறையில், குறிப்பிட்ட சில பணிகளில், தற்போது தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதனால், சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகும் ஆவண விவரங்களை, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், தலைமையகத்தில் இருந்தும் கண்காணிக்கலாம். இதன் தொடர்ச்சியாக, எந்த அலுவலகத்தில் இருந்தும், சொத்து விற்பனையை பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாத்தியமாவது எப்போது?

பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பதிவுத்துறையில், தகவல் தொகுப்புகள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளன. இதனால், எந்த ஊரில் உள்ள சொத்து தொடர்பான வில்லங்க விவரத்தையும், பொதுமக்கள் இருந்த இடத்தில் இருந்தே, இணையதளம் வாயிலாக அறிய முடியும். அத்துடன், 'ஸ்கேன்' செய்யப்பட்ட ஆவணங் களின் தொகுப்பை, எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பார்க்கும் வசதி விரைவில் வர உள்ளது.

இதனால், தமிழகத்தின் எந்த பகுதியில் இருக்கும் சொத்து விற்பனையையும், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்திலும், பதிவு செய்து கொள்ளும் வசதியையும் அளிக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கான, வழிமுறைகள், சட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம்; விரைவில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழகத்தில், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன
* ஆண்டுக்கு 32 லட்சம் ஆவணங்கள் பதிவாகின்றன
* சொத்து வில்லங்க விவரத்தை, இருந்த இடத்தில் இருந்தே பார்க்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை

'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது. 

8.5 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். சென்னையில், சில தேர்வு மையங்களை பார்வையிட்ட, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறுகையில், ''பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம், தகுதியானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு மவுசு கூடி விட்டது. வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என்றார்.

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி, 2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

அதேபோல், 2011ம் ஆண்டு முதல் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கும், தமிழக அரசு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், 1,188 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

இதில், பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டில், ஒவ்வொரு பிரிவுக்கும், தலா, 1 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆயினும், தற்போது விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து, தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக கூறி, போட்டித் தேர்வுகளை நடத்தாமல், தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

காலம் தாழ்த்துகிறது:சிறப்பு ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:கடந்த, 2012ம் ஆண்டுக்கு பிறகு, நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவில்லை.
தற்போது, சிறப்பு ஆசிரியர்கள் பணிக்காக, ஒரு லட்சம் பேர் தயாராக இருக்கின்றனர்.

ஆனால், சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிடாமலேயே, ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஆல் பாஸ்' திட்டம் மாநிலங்களுக்கு கெடு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்காமல், அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்ய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது. இந்த திட்டப்படி, 'அனைவருக்கும் கட்டாயமாக பள்ளிக்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம், சரியாக நிறைவேறவில்லை' என்ற, புகார் எழுந்தது.


இதுதொடர்பாக, மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சார்பில், குழு நியமிக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இதில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் நிபந்தனைகள் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, மாநிலங்கள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க, 2015 ஆகஸ்டில், மத்திய அரசு கடிதம் அனுப்பியது. பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் கருத்து தெரிவிக்காததால், ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மத்திய அரசு கெடு விதித்து உள்ளது.

நிபந்தனைகள் என்ன?
* ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வு
நடத்தி, சி.சி.இ., என்ற தொடர் மதிப்பீட்டு முறையை பின்பற்ற வேண்டும்
* தேர்வில், மூன்று, ஐந்து மற்றும் எட்டு என, மூன்று தரவரிசை வழங்கப்படும். எட்டாம் தரம் பெறும் மாணவர்களை, அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்யக்கூடாது
* அனைத்து வகுப்பு மாணவர்களும், குறைந்தது, 80 சதவீதம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பது கட்டாயம்.

குடியரசு தினம் என்றால் என்ன? ஒரு பார்வை

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.
ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு,  இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்