யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/3/17

TNTET - வெளியானது ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம்! பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்

நீண்ட நாளாக எதிர்பார்த்த ஆசிரியர் தகுதித்தேர்வு மூன்று வருடத்திற்குப் பிறகு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
இன்று முதல் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்க ஆரம்பித்து
இருக்கிறது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம். தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். முதல் தாளுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ம் தேதியும், இரண்டாவது தாளுக்கான தேர்வு ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறும்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எந்தெந்தப் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்ற தகவலை ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் trb.tn.nic.in பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
50 ரூபாய் கொடுத்து விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்புவதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட பள்ளியில் வழங்க வேண்டும்.
விண்ணப்பத்தில் எந்தக் கல்வி மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக்கட்டணமாக 250 ரூபாயும், பிற பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு விண்ணப்பத்தில் இணைப்புத்தாள் (சலான்) இருக்கும். தேர்வுக்கான கட்டணத்தை அருகில் உள்ள இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அல்லது கனரா வங்கியில் செலுத்தி சலான் சீட்டினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். சரியான கட்டத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை மடிக்கக்கூடாது. தபால் வழியாக அனுப்பாமல் நேரடியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் சேரும் வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் போன்றவற்றை நினைவில் கொள்ளவும்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1-ல் பட்டயப்படிப்பு படித்தவர்கள் எழுதலாம். இந்த ஆண்டு பட்டயப்படிப்பிற்கான தேர்வினை முடிக்க உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பார்வைத் திறன் குறைந்தோர் முதல் தாள் விண்ணப்பிக்க முடியாது. இரண்டாவது தாளை ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து அதன் பின்பு பி.எட் படித்து முடித்தவர்கள் எழுதலாம். தற்போது பி.எட் முடிக்கும் தருவாயில் உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு தாளுக்கான தேர்வினையும் எழுத இருப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தாள்1 குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சுழல் அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரத் தேர்வாகவும், 150 கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் இருக்கும்.
மூன்று வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கவில்லை என்பதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இன்னும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என்ற தகவலும் உறுதியாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் 4000த்துக்கு மேற்பட்ட காலி இடங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 3000 பணியிடங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் ஐந்நூறு பணியிடங்கள் மட்டுமே காலியிடங்களாக இருக்கின்றன என்ற தகவலும் இருக்கிறது. ஆனால், ஒரு முறை தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால் ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அதனடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படும் என்பதால் 90 மதிப்பெண்ணைப் பெற வேண்டும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு நாளுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் மிகுந்த திட்டமிட்டுப் படிப்பது அவசியம்.
வாழ்த்துகள் ஆசிரியர்களே!

- ஞா. சக்திவேல் முருகன்

EMIS-STUDENTS APPLICATION-NEW FORM

TNTET - 2017:ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளனதமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள்,  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச்6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின் 2014 -15ஆம் ஆண்டு பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாளை ஏப்ரல் மாதம் தான் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு.

👉 2014 -2015 கணக்கீட்டுத் தாள் ஏப்ரல் மாதத்தில் தான் வெளிவர வாய்ப்பு.
👉ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின் 2014 -15 ஆம்ஆண்டு பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாளை ஏப்ரல் மாதம் தான் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு.
👉 நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் GPF கணக்காணது AG ஆல் ஏற்கனவே பராமரிக்கப் பட்டு வருவதால் அவர்களின் எண்ணை தனியாக வகைப்படுத்த வேண்டியுள்ளதால் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களில் விபரம் கோரப் பட்டுள்ளது.
🌷 தற்போது மேல்நிலைத் தேர்வுகள் நடைபெறுவதால் ஏப்ரல் மாதம் தான் விபரம் கிடைக்கப் பெறும்.
🌲அதன் பின்பே NIC இல் பதிவேற்றம் செய்யப்படும்.அதன் பின்பே பதிவிறக்கம் செய்ய இயலும்..

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்.

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது.
அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரை நடைபெற்றது.

இதன் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வரானார். புதிய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  ஆனாலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து ஓரிரு நாளில் வெளியாகும்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக டி.உதய சந்திரன் நியமனம்

உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா சிமெண்ட் கழக எம்.டி.யாக மாற்றம்

உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்

சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்



கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குநராக காமராஜ் நியமனம்

போக்குவரத்துத்துறை ஆணையராக தயானந்த கட்டாரியா நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம்

சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் நியமனம்

சென்னை ஆட்சியராக இருந்த மகேஸ்வரி , வணிக வரி இணை ஆணையராக நியமனம்

TNTET- 2017 : மாவட்ட வாரியாக விண்ணப்ப விநியோகம் மற்றும் பெற்றுக்கொள்ளும் மையங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், இன்று திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.
இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட வாரியாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் இடம் மற்றும் பெற்றுக்கொள்ளும் மையங்கள் விவரங்கள்:
மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Application Sales Centres and Application Receiving Centres
Prospectus

பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் .


தமிழக அரசு அறிவித்துள்ள பணியிட மாற்ற அறிக்கையின் படி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் செய்யப்பட்டு தமிழக சிமிண்ட் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கு பதிலாக உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நீண்ட காலமாக பள்ளிக் கல்வித் துறையில் இருந்த சபிதா மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

பள்ளிகளை மூடிய செயலர்
இவர் கல்வித் துறைக்கு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் பல மூடப்பட்டன என்றும், அரசு பள்ளிகள் பல மூடப்பட்டுள்ளன என்றும் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தன. என்றாலும், யாராலும் அசைக்க முடியாத சக்தியாக சபிதா கல்வித்துறையில் விளங்கி வந்தார்.
  
மாற்றுத்திறனாளிகள் வயிற்றில்...
விரிவுரையாளர் பணிக்கு பார்வையற்றோரை நியமிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய வரலாறுக்கு சொந்தக்காரரும் இவர்தான். ஆசிரியர்கள் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக 6-10-2009 அன்று விளம்பரம் வெளியிட்டது. அதில் பார்வையிழந்த, காதுகேளாதவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  
நிபந்தனையற்ற மன்னிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், பார்வையற்றோருக்கான இடஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றுவதாக கோர்ட்டில் உறுதி அளித்த பெருமை மிக்கவர் சபிதா.
  
தப்பியது கல்வி
இவர் மீது இடமாற்றம், பணி நியமனம் உள்ளிட்ட செயல்பாடுகளில் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் இவர் மீது எடுக்கவில்லை. தற்போது இந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

6/3/17

ARN செய்திகள்:9094830243... மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு


இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை…

Admission Help line – 9962814432
அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்

தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.

170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000 மட்டுமே
தொடர்புக்கு : 9962814432
.
1. B.E Mechanical Engineering,
2. B.E Electrical & Electronics Engineering
3. B.E Electronics & Communication Engineering
4. B.E Computer Science Engineering.
5. B.E Civil Engineering.
6. B.E Aeronautical Engineering
7. B.E Mechanical & Automation Engineering
8. B.E Electronic & Instrumentation Engineering
9. B.E Mechanical Engineering (Sandwich)
10. B.E Robotics
11. B.Tech Information Technology
.
இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. Kindly forward to all groups
.
SUCCESS கல்வி அறக்கட்டளை
முன்பதிவிற்கு அழைக்கவும்,  📞 9962814432 / 8680048146. 
இதை அனைவர்க்கும் பகிருங்கள்

பள்ளியில் கூடுதல் வகுப்பறை வசதி செய்து தர கோரிக்கை விடுத்த ஆசிரியருக்குமெமோ கொடுத்த இணை இயக்குனர். அதிச்சியில் ஆசிரியர்கள்!!!

அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை பொதுத்தேர்வு எழுதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த அத்தியாவசிய உணவுகளை சாப்பிடலாம்

ஏப்ரல் 2-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்
ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.5 வயதுக்குட்பட்டவர்கள்: தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக ஏப்ரல் 2-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.43 ஆயிரம் மையங்கள்: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என முக்கியமான இடங்களில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படும். மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சுமார் 1,500 நகரும் மையங்கள் நிறுவப்படும்.தொலை தூரம், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.


இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். எனவே அனைத்து தாய்மார்களும் இந்த முகாமைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் என்றார்.

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும்செயல்படும்.

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில்
பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும்.
தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையைதற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, கூறியதாவது:பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டிசேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் வைத் திருக்க வேண்டும். பிராட்பேண்டில் ஸ்டேடிக் ஐபி, டைனமிக் ஐபி என 2 வகை உள்ளது.

இதில் ஸ்டேடிக் ஐபி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தற்போது இப்புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய வசதியைப் பெற விண்ணப்பித்தால் முதலில் அவர்களுக்கு ‘2999’ என்ற எண்ணில் தொடங்கும் ஒரு டம்மி எண் வழங்கப்படும். இதை ஏற்கெனவே உள்ள லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும்.மேலும், ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘ஜொய்ப்பர்’ என்ற செயலியை (Zoiper App) பதிவிறக்கம் செய்ய வேண் டும். அதில் யூஸர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து இணைக்க வேண்டும். பிறகு, ‘அவுட்கோயிங்’, ‘இன்கமிங்’, டேட்டாசேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செல் போனில் சிம் கார்டு இல்லாமல் மேற்கண்ட செயலி மூலம் ‘கால்’ செய்யலாம். இதுதான் இச்சேவையின் சிறப்பம்சம்.சிலர் வீடுகளில் வாய்ஸ்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பார்கள். அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ‘கால்’ செய்யலாம்.


இச்சேவையைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் கிடையாது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். செல்போன் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் இச்சேவையைப் பயன்படுத்தி பேச முடியும். அத்துடன், குரல் அழைப்பும் (வாய்ஸ் கால்) நன்கு தெளிவாக கேட்கும்.இவ்வாறு கலாவதி கூறினார்.

டெட்' தேர்வு விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்

ஆசிரியர் பதவி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மூன்று
ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் குறிப்பிட்ட பள்ளிகளில் காலை 9மணி முதல் 5மணி வரை வழங்கப்படுகின்றன.

தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக, விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் வழங்கும் இடங்கள், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.வரும், 22 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அறிவித்துள்ள விண்ணப்பம் பெறும் மையங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

வரும், 23க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம் (19.3.2017).

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம் (19.3.2017)...

அன்பார்ந்த!..

பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் பி.எட் பயிலும் இருபால் மாணவர்களுக்கும் ஓர் அன்பான அழைப்பிதல், வருகின்ற

நாள்:19.3.2017
காலை:9மணி.
இடம்:VGS மஹால்
(திண்டுக்கல் பேருந்து நிலையம்   அருகில்)
பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
[மதிய உணவு வழங்கப்படும்]

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர்களின் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவசஉறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
1.இரண்டு புகைப்படம்,
2.பி.எட் சான்றிதழ் நகல்,
3.வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்).

பெண்கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
(தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.)

முக்கிய குறிப்பு:
[விடியல் பயணம் திண்டுக்கல் மாவட்டத்தோடு
இனிதே நிறைவுபெற உ்ளளது].

உறுப்பினர்கள் சேர்க்கை இலவசமாக பெற :
கீழ்கண்ட மாவட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும்  பொதுக் கூட்டத்தில்(திண்டுக்கல் கரூர் நாமக்கல் திருப்பூர் கோவை மதுரை தேனி இராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தஞ்சை திரூவாரூர்  திருச்சி புதுக்கோட்டை)
மாவட்ட கனிணி ஆசிரியர்கள்

திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில்  தங்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,9789180422,9894372125.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

TET தேர்ச்சி பெறவேண்டும் என்ற உத்தரவிலிருந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் விலக்களிக்க வேண்டும்*

பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு : 1,000 ஆசிரியர்கள் கலக்கம்

டெட்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், 1,000 ஆசிரியர்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாகி உள்ளது.

 மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில், 'அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மை அங்கீகாரம் பெறாத பள்ளிகளில், 2010 ஆகஸ்டிற்குப் பின், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், இந்த தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதார், பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.

இந்தஅறிவிப்பால், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திடீரென தேர்வை அறிவித்துவிட்டு, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அங்கீகாரம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வுக்கு பதில், ஆண்டு தோறும் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தலாம். மாறாக, திடீரென, 'டெட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கெடு விதிப்பது பிரச்னையை அதிகரிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வக உதவியாளர் நியமனம் 10 நாளில் முடிவெடுக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில்

 உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-

மாணவிகள் தேர்வு எழுதுவதை பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதி
வருகிறார்கள். மொழித்தேர்வை தமிழ், உருது, இந்தி,
 கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் மாணவர்கள் எழுத
அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவந்தார்.
இதன்காரணமாக கடந்த வருடத்தை விட இந்த வருடம்
பிளஸ்-2 தேர்வை 65 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகிறார்கள்.

ஆய்வக உதவியாளர்கள்
பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக
உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
அதுகுறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும்.

சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள்

இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். நீட் தேர்வை எழுத மாணவர்கள் தயாராக உள்ளனர்.

TET - விண்ணப்பம் வாங்கும் போதும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை!!

TET விண்ணப்பம் வாங்கும்போதும், விண்ணப்பத்தைப் பூர்த்தி
செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை குறித்து வேலூர் விடியல்
பயிற்சி மையம் வழங்கும் முக்கிய குறிப்புகள்.

குறிப்பு 1: விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- ஐ பணமாக செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பு 2: தேர்வுக் கட்டணம் செலுத்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி செலுத்து சலானைப் பூர்த்தி செய்து இந்தியன் வங்கி/ இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி/ கனரா வங்கிக் கிளையில் ரூ.500/- ஐ ( SC/ST (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம். ரூ 250/- ) செலுத்திட வேண்டும்.

குறிப்பு 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வங்கியில் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான செலுத்து சலானின் ஒரு பிரதியை கண்டிப்பாக இணைக்கவேண்டும்.

குறிப்பு 4: விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனைப் பேனாவினைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு 5: விண்ணப்பத்தை மடிக்கக் கூடாது.


குறிப்பு 6: புகைப்படத்தின் மீது Attestation செய்யக் கூடாது.

குறிப்பு 7: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக TRB க்கு அனுப்பக் கூடாது. அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி அல்லது அலுவலகங்களில் கொடுத்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 8: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தரப்படவில்லை.

குறிப்பு 9: ஒருமாவட்டத்தில் வாங்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின்பு வேறு மாவட்டத்திலும் திருப்பித் தரலாம்.

குறிப்பு 10: தாள்I மற்றும் தாள் II ஆகிய இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புபவர்கள் இரண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு 11: தேர்வு மாவட்டக் குறியீடுகள்


குறிப்பு 12: பாடக் குறியீடுகள்

தமிழ். : 100
ஆங்கிலம். : 104
கணிதம். : 300
இயற்பியல். : 400
வேதியியல். : 500
தாவரவியல். : 600
விலங்கியல். : 700


வரலாறு. : 800

5/3/17

இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும், இதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் பிறப்பித்து உள்ளது.

நாடுமுழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவ - மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை
அதிகரித்துள்ளது. மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதேபோல் சமையலர்கள், உதவியாளர்களும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதிய உணவு திட்டத்தில் சில இடங்களில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதற்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வழங்குவதாக புகார்கள் வந்தன. மேலும் பல மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதாக கணக்கிடப்படுகிறது.

எனவேஇது போன்ற முறைகேடுகளை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

TET - 2017" தேர்வு அறிவிக்கை தமிழில் வெளியிட கோரிக்கை

டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.ஆர்.பி., நடத்தும், 'டெட் ' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு, ஏப்., 29 மற்றும், 30ல், நடைபெற உள்ளது.


 இதற்கான அறிவிக்கை, கடந்த வாரம் வெளியானது.தேர்வுக்கான கட்டுப்
பாடுகள், இரு தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின. இரு அறிவிக்கைகளும், ஆங்கிலத்தில் உள்ளன. அதனால், நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூறியதாவது:மூன்றாண்டு இடைவெளிக்கு பின், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கான நிபந்தனைகள், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்கின்றனர்.ஆசிரியர் பணிக்கு வரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், பாடங்கள் குறித்து ஆங்கில அறிவை எதிர்பார்க்கலாம்; தொடர்புக்கான ஆங்கில மொழி புலமையை, எதிர்பார்க்க முடியாது. எனவே, 'டெட்' தேர்வுக்கான
அறிவிக்கை மற்றும் நிபந்தனைகளை தமிழில் வெளியிட வேண்டும்.அரசு விதிகளின்படி, அரசாணை மற்றும் அறிவிக்கைகளை தமிழில் வெளியிட வேண்டும்.

 ஆண்டு முழுவதும், நுாற்றுக்கணக்கான தேர்வை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி.,
யும், தமிழில் தான், அறிவிக்கை வெளியிடுகிறது. எப்போதாவது தேர்வு நடத்தும், டி.ஆர்.பி., விதிகளை பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தலைவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழை
புறக்கணித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'TET' தேர்வுக்கு குறைந்த அவகாசம்:தேர்ச்சி பெறாவிட்டால் பணி பறிபோகும் - ஆசிரியர்கள் கலக்கம்

ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர்கள்
கலக்கத்தில் உள்ளனர்.
இந்ததேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால்,அவர்களின் பணி பறிபோகும் நிலைஏற்பட்டுள்ளது.



  மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைசட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்'தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படவேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,அவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவிகிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும் என, அனைத்து அரசுஉதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால்,வழக்கு காரணமாக, டெட் தேர்வுதள்ளிப்போனது.
இந்நிலையில், பிரச்னைகள் முடிவுக்கு வந்து,ஏப்ரலில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்டஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும் என்றசூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தேர்வுக்கான அவகாசம் மிகவும்குறைவாக உள்ளதால், தேர்வில் தேர்ச்சி அடையமுடியுமா என, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்குழப்பத்தில் உள்ளனர்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது
இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மாநில தலைவர் செல்வம்
கூறியதாவது:

  மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.
வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதுஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.

31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன.
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன.

அதைநடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

வருமான வரி: அரசு ஊழியர்களுக்கு கிடுக்கி

அரசுஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம்
செய்யக்கூடாது. 

  இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான, ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசும், டீசல் விலை, லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த
விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி, 21.43 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
ஜனவரி 1 ஆம்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் , தமிழக அரசு 6 அல்லது 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது .

ஆள் பற்றாக்குறையால் திணறும் தேர்வு துறை

தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், தேர்வு பணிகளை கண்காணிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ல் துவங்கியது. இந்த தேர்வில், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, மாவட்ட வாரியாக இயக்குனர் மற்றும் இணை
இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்வு பணிகள் குறித்த புகார்கள், தேர்வில் பங்கேற்ற மாணவர் எண்ணிக்கை, தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை, காப்பியடித்தோர் எண்ணிக்கை குறித்த விபரங்களை, மாவட்ட வாரியாக பெற, தேர்வுத்துறைக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என, இரண்டு தேர்வுகளிலும், மாவட்டங்களிலிருந்து விபரங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரித்த போது, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் போதுமான ஆட்கள் இல்லாததால், தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிந்தவுடன் காப்பியடித்தவர்கள் விபரம், தலைமை
செயலகத்துக்கும், ஊடகங்களுக்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆள் பற்றாக்குறையால், தலைமை செயலகத்துக்கு தகவல் அனுப்பவே ஊழியர்கள் திணறுவதால், ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை தரப்பில், தேர்வுத் துறைக்கு கூடுதல் ஊழியர்களை அனுப்ப மறுப்பதால், தகவல் சேகரிப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

வருமான வரி: அரசு ஊழியர்களுக்கு கிடுக்கி

அரசு ஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம் செய்யக்கூடாது. இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான, ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச தொகைஸ்டேட் வங்கியில் ரூ.5,000 ஆக உயர்வு

பாரத ஸ்டேட் வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காவிட்டால், 50 - 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, 'ஏப்., 1 முதல், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேணாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும்' எனக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கை விபரம்:சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேண வேண்டும். பெருநகரங்களில் இருப்போர், தங்கள் சேமிப்புக் கணக்குகளில், 5,000 ரூபாய், பகுதியளவு நகரமயமான பகுதிகளில், 3,000 ரூபாய், கிராமப் பகுதிகளில், 1,000 ரூபாய், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு பேணாத வாடிக்கையாளர்களிடம், 50 முதல் 100 ரூபாய் வரை, அபராதமாக வசூலிக்கப்படும். வரும், ஏப்., 1 முதல், இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.
பெருநகரங்களில், வங்கிக் கணக்கில் பேணப்பட வேண்டிய இருப்புத் தொகைக்கும், தற்போது கணக்கில் உள்ள தொகைக்கும், 50 சதவீத வித்தியாசம் இருந்தால், 50 ரூபாய் அபராதமும், அதற்கான சேவை வரியும் வசூலிக்கப்படும்; 70 சதவீத வித்தியாசம் இருந்தால், 75 ரூபாய் அபராதம் மற்றும் சேவை வரி பெறப்படும். அதற்கு மேல் வித்தியாசம் இருந்தால், 100 ரூபாய் அபராதமும் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

நகர்ப்புறங்களில், 40 முதல் 80 ரூபாயும், பகுதியளவு நகர்ப் பகுதிகளில், 25 முதல் 75 ரூபாயும், கிராமப் புறங்களில், 20 முதல் 50 ரூபாயும் அபராதமாக பெற
திட்டமிடப்பட்டு உள்ளது.ஒரு மாதத்தில், மூன்று முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களிடம், 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது; அது, இனியும்
தொடரும். காசோலை புத்தகம் வழங்குதல், பணம் செலுத்துதலை நிறுத்துதல் போன்ற சேவைகளுக்கு கட்டணம் பெறப்படும்.

டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக, ஆண்டுக்கு, 125 முதல், 300 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., பரிவர்த்தனைகள், மாதத்திற்கு, பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் ஐந்து முறையும் இலவசமாக அனுமதிக்கப்படும்.

இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதியை, 2012ல் நீக்கியது. தற்போது மீண்டும் அந்த விதி அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் வசூலிக்கப்படும் தொகை, பாரத ஸ்டேட் வங்கியில், 25 கோடி சேமிப்புக் கணக்குகளை பராமரிக்க தேவைப்படும் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் என, வங்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.


மாநில தலைவர் செல்வம்
கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.
வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.

31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன.
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன.

அதை நடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

TNPSC - Results of Departmental Examinations - December 2016

TNPSC - துறைத் தேர்வுகள் - டிசம்பர்' 2016 [Dept. Exam. - Dec' 2016] தேர்வு முடிவுகள் வெளியீடு...

Results of Departmental Examinations - December 2016
(Updated on 03 March 2017)
Enter Your Register Number :                                                         

"TET - 2017" தேர்வு அறிவிக்கை தமிழில் வெளியிட கோரிக்கை

'டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டி.ஆர்.பி., நடத்தும், 'டெட் ' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு, ஏப்., 29 மற்றும், 30ல், நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை, கடந்த வாரம் வெளியானது.தேர்வுக்கான கட்டுப்
பாடுகள், இரு தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின. இரு அறிவிக்கைகளும், ஆங்கிலத்தில் உள்ளன. அதனால், நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.
இது குறித்து, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூறியதாவது:மூன்றாண்டு இடைவெளிக்கு பின், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கான நிபந்தனைகள், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்கின்றனர்.ஆசிரியர் பணிக்கு வரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், பாடங்கள் குறித்து ஆங்கில அறிவை எதிர்பார்க்கலாம்; தொடர்புக்கான ஆங்கில மொழி புலமையை, எதிர்பார்க்க முடியாது. எனவே, 'டெட்' தேர்வுக்கான
அறிவிக்கை மற்றும் நிபந்தனைகளை தமிழில் வெளியிட வேண்டும்.அரசு விதிகளின்படி, அரசாணை மற்றும் அறிவிக்கைகளை தமிழில் வெளியிட வேண்டும்.

 ஆண்டு முழுவதும், நுாற்றுக்கணக்கான தேர்வை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி.,
யும், தமிழில் தான், அறிவிக்கை வெளியிடுகிறது. எப்போதாவது தேர்வு நடத்தும், டி.ஆர்.பி., விதிகளை பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தலைவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழை
புறக்கணித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.