யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/3/17

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது
இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மாநில தலைவர் செல்வம்
கூறியதாவது:

  மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.
வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதுஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.

31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன.
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன.

அதைநடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக