யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/3/17

TET' தேர்வுக்கு குறைந்த அவகாசம்:தேர்ச்சி பெறாவிட்டால் பணி பறிபோகும் - ஆசிரியர்கள் கலக்கம்

ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவி கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், வழக்கு காரணமாக, டெட் தேர்வு தள்ளிப்போனது.
இந்நிலையில், பிரச்னைகள் முடிவுக்கு வந்து, ஏப்ரலில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், தேர்வுக்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளதால், தேர்வில் தேர்ச்சி அடைய முடியுமா என, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக