யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/4/17

இந்திய அளவில் டாப் 10 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு:The Hindu

இந்திய அளவில், தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் பிரத்யேக மதிப்பீட்டு அளவுகோல் வரையறுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


இவற்றில் முதல் 10 தலைசிறந்த கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவ கல்லூரி ஆகியன இடம்பெற்றுள்ளன.

பட்டியல் பின்வருமாறு:

டாப்10 கல்லூரிகள்:

1. மிராண்டா ஹவுஸ் - புதுடெல்லி

2. லயோலா கல்லூரி- சென்னை, தமிழ்நாடு

3. ஸ்ரீநாம் வத்தகக் கல்லூரி- புதுடெல்லி

4. பிஷப் ஹீபர் கல்லூரி- திருச்சி, தமிழ்நாடு

5. ஆத்மா ராம் சனாதன தர்ம கல்லூரி - புதுடெல்லி

6. புனித சேவியர் கல்லூரி - கொல்கத்தா (மேற்குவங்கம்)

7. லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரி- புதுடெல்லி

8. தயாள் சிங் கல்லூரி- புது டெல்லி

9. தீன தயாள் உபாத்யாய கல்லூரி - புதுடெல்லி

10. மகளிர் கிறிஸ்துவ கல்லூரி - சென்னை, தமிழ்நாடு

டாப்10 பல்கலைக்கழகங்கள்:

1. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் - பெங்களூரு

2. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - புதுடெல்லி

3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

4. ஜவஹர்லால் நேரு சென் டர் ஃபார் அட்வான்ஸ்ட் சைன்டிபிக் ரிசேர்ச்

5. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

6. அண்ணா பல்கலைக்கழகம்

7. ஐதராபாத் பல்கலைக்கழகம்

8. டெல்லி பல்கலைக்கழகம்

9. அமிர்த விஷ்வ வித்யாபீடம்

10. சாவித்ரிபா புலே பல்கலைக்கழகம் - புனே

டாப்10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்

1. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்

2 ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - பெங்களூரு

3. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கொல்கத்தா

4. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - லக்னோ

5. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கோழிக்கோடு

6. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - டெல்லி

7. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - காரக்பூர்

8. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - ரூர்கீ

9. சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் - ஜான்ஷெட்பூர்

10. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - இந்தூர்

டாப்10 பொறியியல் கல்லூரிகள்

1. ஐஐடி மெட்ராஸ்

2. ஐஐடி மும்பை

3. ஐஐடி காரக்பூர்

4. ஐஐடி புதுடெல்லி

5. ஐஐடி கான்பூர்

6. ஐஐடி ரூர்கீ

7. ஐஐடி குவாஹட்டி

8. அண்ணா பல்கலைக்கழகம்

9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

10. ஐஐடி ஐதராபாத்

ஒட்டுமொத்த அளவில் டாப் 10 கல்வி நிறுவனங்கள்:

1. ஐஐஎஸ்சி - பெங்களூரு

2. ஐஐடி - சென்னை

3. ஐஐடி - மும்பை

4. ஐஐடி - காரக்பூர்

5. ஐஐடி - டெல்லி

6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: புதுடெல்லி

7. ஐஐடி - கான்பூர்

8. ஐஐடி - குவாஹட்டி

9. ஐஐடி - ரூர்கீ

10. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவச
மற்றும் கட்டயாக கல்வி உரிமை சட்டத்தில் ஒவ்வொரு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும்.
அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 8–ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கல்வி கட்டணம்

இதற்கான கல்வி கட்டணம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? என்று கேட்டு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அதன்படி 2015–16–ம் ஆண்டுக்கு தமிழக பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி கட்டணம் ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிதியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையும், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடக்க பள்ளிகள் இயக்குனரகமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம் வழங்க உள்ளது. மாவட்டம் வாரியாக பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியை வழங்கும்.

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுபேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள தனியார் (சியோன்) பள்ளியில், 2-ஆம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி ஸ்ருதி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 25 இல் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் அடிபட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதையடுத்து, பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக நீதிபதிகளின் உத்தரவின்பேரில், தமிழக அரசு சிறப்பு விதிமுறைகளை வகுத்தது. அதில், ஒவ்வொரு பேருந்திலும் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதோ, அதற்கு அதிகமாக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றக் கூடாது. பேருந்திலும் முதல் படியின் உயரம் (தரையில் இருந்து) 250 மி.மீ.க்கு குறையாமலும் 300 மி.மீ.க்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓட்டுநர் பகுதியை தனியாக பிரிக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்க பட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று பள்ளிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய சிறப்பு விதிமுறைகளை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தமனு பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ், அரசு பேருந்துகளில் காலை மாலை நேரங்களில் பயணிப்போரில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மாணவர்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த ஒரு நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை ஆனால் தனியார் பள்ளிகள் முறையாக பராமரிப்பு செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதேசமயம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்களை சிறப்பு அதிகாரி முன் தனியார் பள்ளிகள் ஆய்வுக்கு கொண்டு செல்லவேண்டுமென்ற நிபந்தனையை 6 மாதத்துக்கொருமுறை என மாற்றி அமைக்கப்படுகிறது.

ஆனால் தனியார் பள்ளிகள் பேருந்துகள் விதிகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த மற்ற நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை அளிக்கப்போகும் எஸ்பிஐ!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச
வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டுமென்ற புதிய விதி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது, எஸ்பிஐ துணை வங்கிகளுக்கு இந்த விதி, ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியுடன் இணைப்பதற்கான செயல்முறைகளில் ஐந்து துணை வங்கிகள் உள்ளன. எஸ்பிஐ என்னும் பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகள் இணைந்து செயல்படத் துவங்க உள்ளன.

இந்தத் துணை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ விதிக்கும் மினிமம் பேலன்ஸ் தொகை வைப்பு, தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதத்தொகை எனப் புதிய விதிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இந்தஅறிவிப்பின் படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள், மெட்ரோ பகுதியில் 5000 ரூபாய், புறநகர்ப் பகுதிகளில் 3000 ரூபாய், நகர்ப்புறங்களில் 2000 ரூபாய், கிராமப் பகுதிகளில் 1000 ரூபாய் என, குறைந்த வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TPF TO GPF Account Slip Soon will publish

ஆசிரியர் சேமநலநிதி 2014 -2015 வருட கணக்கீட்டுத்தாள்
இந்தவாரத்தில் வெளியாக வாய்ப்பு. மாநிலக் கணக்காயர் அலுவலகத்தில்( AG'S) இருந்து  திருத்தம் செய்யப்பட வேண்டிய
மாநகராட்சி /நகராட்சி ஆசிரியர்கள் கணக்கீட்டுத்தாள் விபரங்கள் சரிசெய்யப்பட்டு NIC இல் (National information centre) விபரங்கள் சனிக்கிழமை (01/04/2017) 
அன்று ஒப்படைக்கப் பட்டதால் உடனடியாக வெளியாக வாய்ப்பு.

தங்களின் சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து 2014 -15 கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.

200 ரூபாய் நோட்டு வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்

3/4/17

பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும்.-தொடக்கக்கல்வி இயக்குநர்

31/03/2017 பிற்பகல் காணொலிக்காட்சி மூலம் தொடக்கக்கல்வி இயக்குநர் தமிழகத்தில் உள்ள எல்லா AEEO களுக்கும் meeting 
நடத்தி சில விபரங்கள் கூறியுள்ளார்.* (கூட்டம்2.00 to 4.30 வரை நடந்தது.)


➡காலையில் AEEO ஏதேனும் ஒரு பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.இல்லையேல் AEEO மேல்
நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

➡பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினார்.

➡புத்தக பூங்கொத்து படிக்கும் நிலையில் இருக்க வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமைக்குள் சரியாக இருக்கவேண்டும்.

➡ஆசிரியர்கள் முழுநேரமும் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருக்கக்கூடாது.

➡காலனி, புத்தக பை,கலர்பென்சில், கிரையான்வரைபடபெட்டி முதலியவை தர நிர்ணயம் செய்த பின் வழங்கவேண்டும்.

➡பாடநூல் கழக செயலர் திரு கார்மேகம் அவர்களும் கலந்துகொண்டு பல விபரங்கள் கூறியுள்ளார்.


➡அடுத்த ஆண்டுக்கான புத்தகம் மே 15 குள் வந்துவிடும் எனவும் உபரிஅதிகம் இருக்கக்கூடாது எனவும் அறிவுறித்தியுள்ளார்.

AIDED SCHOOL TEACHERS SEE BIG THREAT IN TET

G.O.1880-HIGHER SEC. SCHOOL COMPUTER INSTRUCTOR-REG PAY ORDER

2009 ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்டவர்களின் -ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் -இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

31ல் விற்ற 41 ஆயிரம் வாகனங்களை பதிவு செய்வதில் சிக்கல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், மார்ச் 31ல் வாங்கிய, 41 ஆயிரம் வாகனங்களை
பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமும் 6,000
தமிழகத்தின், 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 60 பகுதி நேர அலுவலகங்கள் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை தினங்களை கழித் தால், தினமும், சராசரியாக, 6,000 வாகனங்கள் பதிவாகின்றன.
இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலு வலகங்களில், ஊழியர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. 104 வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் உள்ள நிலையில், 54 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதே போல், 229 கிரேடு 2 ஆய்வாளர் பணிக்கு, 102 பேரும், 178 கிரேடு 2 ஆய்வாளர் பணிக்கு, 88 பேர் மட்டும் பணியில் உள்ளனர்.
பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஆய் வாளர் பணியிடம் காலி யால், புதிய வாகனங்கள் பதிவில் தாமதம் ஏற்படுகிறது. இந் நிலையில், 'பி.எஸ்., - 3' தொழில்நுட்பங்களில் தயாரித்த வாகனங்களை, மார்ச், 31க்கு பின் விற்க கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விலை குறைப்பு
இதனால், 31ம் தேதி, வாகன விற்பனையை அதிகரிக்க, இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கார்களுக்கும், உற்பத்தி நிறுவனங்களும் விலை குறைப்பை அறிவித்தன. அன்று மட்டும், 41 ஆயிரம் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன; அவற்றுக்கு பதிவு கோரி, ஆன்லைனில் பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
ஏப்., 1, 2 விடுமுறை நாட்கள்என்பதால், வாகன பதிவு இல்லை. இன்று, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் நிலையில், 41 ஆயிரம் வாகனங் களை பதிவு செய்ய, ஏராளமானோர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது: மார்ச் 31ல் மட்டும், 41 ஆயிரம் வாகனங்கள் பதிவுக்காக, ஆன்லைனில் விண்ணப்பித்துள் ளன.இதனால், தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில், இன்று, வாகன பதிவு களை கட்ட வாய்ப்புள்ளது.

அதேநேரம், வாகன ஆய்வாளர் 1, வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அனைத்து வாகனங் களையும் ஒரே நாளில் பதிவு செய்ய முடியாது. மலிவு விலை வாகனம் வாங்கியவர்கள், பதிவுக்காக, குறைந்தபட்சம், நான்கு நாட்கள் வரை காத்திருக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNTET -ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற வேண்டியகட்டாயத்தில் 300 ஆசிரியர்கள்.

ஒரேநேரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை பெற்ற 3,200 பேரில், 300 பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 2011 டிசம்பரில் 3,200 பேருக்கு, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமனஆணை வழங்கப்பட்டது. இதற்காக 2011 மே மாதம் 2,900 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், அதே ஆண்டு நவம்பரில் 300 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. மே மாதம் நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பில் பங்கேற்ற 2,900 பேருக்கு, பணி வரன் முறை மற்றும் தகுதி காண் பருவம் முடிக்கப்பட்டு, நிரந்தரப் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.ஆனால், நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 300 பேருக்கு இதுவரை பணி வரன் முறையும், தகுதி காண் பருவமும் வழங்கப்பட வில்லை. 2010-க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டதால் 3,200-இல்,300 பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பணி நியமன ஆணை பெற்ற போதிலும், அதில் 2,900 பேருக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள300 பேர் பணி வரன் முறை, தகுதிக் காண் பருவம் பெற, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த 300 பேரும், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின், வரும் ஏப்ரல் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த 300 பேரும், முன்னுரிமை அடிப்படையில் (அதாவது மாற்றுத்திறனாளிகள், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள், முன்னாள் ராணுவத்தினர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், அருந்ததியினர்) பணி வாய்ப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகைகள் இல்லை: தகுதிக் காண் பருவம் பெறாததால், தற்செயல் விடுப்பைத் தவிர, ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, பொங்கல் போனஸ், மருத்துவ விடுப்பு போன்ற அரசின் பயன்களை பெற முடியாத நிலையில் 300 ஆசிரியர்களும் உள்ளனர். தற்போது 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதாலும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய நிலை இருப்பதாலும், தகுதித் தேர்வுக்குதயாராவதில் சிரமம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.


இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது: ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு என்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனால், சமமான கல்வித் தகுதியுடன் ஒரே நேரத்தில் பணி வாய்ப்பு பெற்ற போதிலும், முன்னுரிமை அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ஏன்? கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சமம் என்னும் போது, அதை கற்பிக்கும் ஆசிரியர்களிடையே இதுபோன்ற பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா? 2010-இல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் மட்டும் சமார் 18,000 ஆசிரியர்கள் சிறுபான்மையினர் பள்ளிகள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர் என்றார்.

ஆசிரியர் பணி - குற்றமும் தண்டனையும் குற்றமும் தண்டனையும்!!

ஆசிரியர் பணிதான் இருப்பதிலேயே கொஞ்சம் சிரமமான பணி
என்பது எமது கருத்து.*

*வளரும் தலைமுறையை வார்த்தெடுக்கும் பொறுப்பு என்பது சாதாரணமல்ல..! அதற்குப் பொறுமையும் நிதானமும் அவசியம்.*

*ஓர்ஆசிரியர் மாட்டிக்கொள்வதைப் போன்று வேறு எவரும்
மாட்டமாட்டார்கள். "கற்ற கல்வியைவைத்து என்ன செய்தாய்?” என்ற கேள்விக்கு பதில் கூறாமல் ஓர் அடிகூட நகரமுடியாது என்பதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது.*

*ஃபிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் குற்றமும் தண்டனையும் எனும் பகுதியில் (மலையாளம்) மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்து கூறுகின்றார்:*

*அது ஒரு தேர்வு நேரம். வகுப்பில் மாதாந்திரத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவன் காப்பி அடித்துக்கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் டி.பி. தோமஸ் மாஸ்டர் அதைக் கவனிக்கவில்லை.*

*ஆயினும் திடீரென அங்கே வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனடியாக அவனுக்குத் தண்டனையும் அறிவித்தார். தண்டனை என்ன தெரியுமா..? பள்ளிக்கூட அசெம்ப்லி ஒன்றுகூட்டப்பட்டு அனைவர் முன்னிலையிலும் குச்சியால் கையில் ஆறு அடி அடிப்பதுதான் அன்றைய பெரும் தண்டனை. அசெம்ப்லி கூட்டப்பட்டது.*

*ஆனால் இந்த முடிவை தோமஸ் மாஸ்டர் பலமாக எதிர்த்தார். "அவன் தவறு செய்தமைக்குக் காரணம் நான்தான். ஆகவே எனக்கே அந்தத் தண்டனையைத் தாருங்கள். எனது பணியையும் கற்பித்தலையும் நான் சரியாகச் செய்திருந்தால் இந்த மாணவன் காப்பி அடித்திருக்க மாட்டான். ஆகவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை எனக்கே தாருங்கள்” என்று அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் கூறவும் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் திகைத்தது.*

*தலைமை ஆசிரியரோ தோமஸ் மாஸ்டரை கண்ணியத்துடன் பார்த்தலும் மாணவனுக்குத் தண்டனைக் கொடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தோமஸ் மாஸ்டரும் விடவில்லை. இறுதியில் ஆசிரியரின் நிர்ப்பந்தத்திற்கு தலைமை ஆசிரியர் அரைமனதுடன் சம்மதித்தார்.*

*அந்த மாணவனை சுட்டிக்காட்டியவாறு தலைமை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடம் கூறினார்: "இவன் செய்த தவறுக்காக இப்போது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்”.*

*உடனே தாமஸ் மாஸ்டர் கூறினார்: "இல்லை.. இல்லை.. இவன் செய்த தவறுக்காக அல்ல... நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எனது பணியை நான் சரியாக செய்திருந்தால் இவன் காப்பியடித்திருக்க மாட்டானே” என்று கூறியவாறு அனைத்து மாணவர் முன்னிலையிலும் கை நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்றார்.*

*தலைமை ஆசிரியர் அவருடைய கையில் ஓர் அடி கொடுத்தார். பள்ளிக்கூடமே திகைத்தது மாணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுமொத்த மாணவர்களும் அழுதனர். உடனே அந்த மாணவன் அழுதவண்ணம் தலைமை ஆசிரியர் முன்னால் முட்டுக்குத்தி நின்றவாறு, "இனியும் ஆசிரியரை அடிக்க வேண்டாம்..” என்று கெஞ்சினான்.*

*பின்னர் தோமஸ் மாஸ்டரின் காலைக் கட்டிக்கொண்டு கதறினான்: "நான் செய்தது தவறுதான். நான் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை பெறுவதைக் காண எனக்கு சக்தி இல்லை. தோற்றாலும் சரியே இனி ஒருபோதும் நான் காப்பி அடிக்க மாட்டேன் மாஸ்டர்..!”*


*இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்றத்தைக் குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் ஓர் புதிய பாடத்தை அன்றுதான் பள்ளிக்கூடமே கற்றுக்கொண்டது. அறிவும் அனுபவமும் ஒருங்கே பெற்ற ஒரு நிகழ்வு இது.

'அனைத்து பாடப்பிரிவினரும் சி.ஏ., படிப்பில் சேரலாம்'

பிளஸ் 2வில், எந்த பிரிவு மாணவர்களும், சி.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளில் சேரலாம்' என, கல்வியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

'தினமலர்' மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கும், வழிகாட்டி நிகழ்ச்சியில், இரண்டாம் நாளான நேற்று, இன்ஜினியரிங், ஆட்டோமேஷன், ஐ.டி., துறை மற்றும் சி.ஏ., என்ற ஆடிட்டர் படிப்பு குறித்தும், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் முறை குறித்தும், கல்வியாளர்கள் ஆலோசனை அளித்தனர்.


ஆடிட்டர் சரவண பிரசாத்: ஆடிட்டிங் துறையில் வேலைவாய்ப்புகளை பெற, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் ஒன்றை, படிக்க வேண்டும். இந்த மூன்று படிப்புகளும், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளை, தொலைநிலையில் மட்டுமே படிக்க முடியும். ஆடிட்டிங் துறைக்கு கடினமான பயிற்சி அவசியம். பயிற்சி எடுத்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். முதலில் தகுதி தேர்வும், பின், இடைநிலை தேர்வும், பின், இறுதி நிலை தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறுவோர், ஓர் ஆண்டு நிறுவன பயிற்சியை மேற்கொள்ள, சி.ஏ., அமைப்பு ஏற்பாடு செய்கிறது. பயிற்சிக்கு பின், கேம்பஸ் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். முதல் வேலைவாய்ப்பிலேயே, மாதம், 50 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம். அதேபோல, பி.காம்., ஹானர்ஸ் உடன், ஒரே ஆண்டில், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்பு உள்ளது.


கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி: எந்த கோர்ஸ் படித்தாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதை படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். படிக்கும் போதே திறனை வளர்த்து கொள்ள வேண்டும். எதில், வாய்ப்பு, வளர்ச்சி என்பதை தெரிந்து, படிப்புகளை தேர்வு செய்யுங்கள். இன்ஜினியரிங் துறையில் மட்டுமே, ஆண்டுக்கு, மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கின்றன. படிக்கும் போதும், வேலையில் சேர்ந்த பிறகும் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். சமீபத்தில், தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட, 458 பேரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலையை விட்டு வெளியேற்றி உள்ளன. படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போல, கல்லுாரியை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கல்வியாளர்கள் பேசினர்.

மின்னணு குடும்ப அட்டையைப் பயன்படுத்துவது எப்படி?

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் நவீன மின்னணு குடும்ப அட்டைகளைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என
அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


தமிழகம் முழுவதும் 1.89 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்தாள் இணைப்புடன் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில், போலி குடும்ப அட்டைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து போலி அட்டைகளை ஒழிக்கவும் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் கட்டுப்படுத்தவும் நவீன கையடக்க அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை (ஏப்.1) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பயன்படுத்துவது எப்படி: இந்த அட்டையை கூட்டுறவு நியாய விலைக்கடையில் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தஅட்டையை பெற்றதும் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய சதுர பெட்டி வடிவிலான நவீன இயந்திரம் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
அந்தஇயந்திரத்துடன் பில் போடுவதற்கும் தனியாக ஒரு சிறிய இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வாங்க கடைக்கு சென்றதும் மின்னணு குடும்ப அட்டையை சிறிய சதுர பெட்டி வடிவ இயந்திரத்தின் மேலே உள்ள வெள்ளை நிற விளக்கு வெளிச்சத்தில் வைத்தால் போதுமானது. உடனே அந்த இயந்திரம் செயல்படத் தொடங்கும்.
மற்றொரு இயந்திரம் மூலம் அந்த அட்டைக்கான பொருள்கள் ஒதுக்கீடு அளவுக்கு விற்பனையாளர்கள் பில் போடுவார். அதைத் தொடர்ந்து நாம் வாங்கும் பொருள்களின் விவரம் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டையில் பதிவாகும்.
இதுதொடர்பான விவரங்கள் செல்லிடப்பேசியிலும் குறுஞ்செய்தியாக அறிந்து கொள்ளலாம்.

இதன்மூலம் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்பின்றி தகுதியானவர்களுக்கு பொருள்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2/4/17

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு
வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.
குறைந்த பண இருப்பு
பெருநகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.
குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
மாநகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
நகர, சிறு நகர, கிராமபுறப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.
டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதேபோல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.
எஸ்பிஐயுடன் இணையும் 5 வங்கிகள்

இந்தகட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

TN Lab Assistant Post - Weightage Calculation Method (press News)




மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி - தமிழக அரசு ஊழியர்கள் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

நாகப்பட்டினம்: தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் 10,61,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாகும். இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வேலைநிறுத்தத் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சற்றே சமாதானமடைந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். எனினும் தங்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்தநிலையில் தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார். ஊதியக்குழு அமைப்பது, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை - தமிழக முதல்வர் வழங்கினார்

ஒரு ஆண்டு முழுவதும் "இன்டர்நெட்" கட்டணம் ரூ.200 மட்டுமே!! - இது எப்படி இருக்கு?

பகனடாநாட்டைச் சேர்ந்த டேட்டாவின்ட் நிறுவனம் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.200 கட்டணத்தில் இன்டர்நெட் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது. 


இந்தியாவில் ரூ.100 கோடி முதலீட்டில் தொலைத்தொடர்பு சேவையில் இறங்க உள்ள டேட்டா வின்ட் நிறுவனத்தின் திட்டமே இன்டர்நெட் அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்து, சந்தையைப் பிடிப்பது தானாம்.
மத்திய அரசிடமிருந்து இன்னும் ஒருமாதத்தில் அனுமதி கிடைக்க இருக்கும் நிலையில், களத்தில் இறங்க டேட்டா வின்ட் நிறுவனம் தயாராகிவிட்டது. ஏற்கனவே இந்த நிறுவனம் இந்தியாவில் குறைந்தவிலையில் டேப்லட், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது, இந்நிலையில் தொலைத்தொடர்பு சேவையிலும் இறங்க அனுமதி கிடைக்க உள்ளது.
தொலைத்தொடர்புதுறையில் களத்தில் இறங்கும் டேட்டாவின்ட் நிறுவனம் தனியாகச் செயல்படாமல், மற்றொரு நிறுவனத்துடன் இணைந்தே செயல்பட உள்ளது
இதுகுறித்து டேட்டா வின்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனீத் சிங் துளி டெல்லியில் நேற்று கூறுகையில், “மத்திய அரசிடமிருந்து இந்தமாதம் அல்லது அடுத்த மாதத்துக்குள் தொலைத்தொடர்பு சேவைக்கான அங்கீகாரத்தை பெற்று விடுவோம். முதல்கட்டமாக ரூ.100 கோடி முதலீடு செய்ய இருக்கிறோம், எங்கள் கவனம் முழுவதும், டேட்டா சேவை மட்டுமாகவே இருக்கும். எங்கள் நோக்கம் இந்திய மக்களுக்கு மாதத்துக்கு ரூ.20 கட்டணத்தில், ஆண்டுக்கு ரூ.200க்கு மிகாமல் இன்டர்சேவை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது தான். இப்போது ஜியோ நிறுவனத்தில் மாதத்துக்கு குறைந்தபட்சம் 300 ரூபாய் இன்டர்நெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் மாதத்துக்கு ரூ.1400 வரையிலும் செலுத்தியவர்களுக்கு ஜியோ வந்தபின் செலவு குறைந்துள்ளது. ஆனால், எங்கள் நிறுவனம் மூலம் மாதத்துக்கு ரூ.20 கட்டணமும், ஆண்டுக்கு ரூ.200 கட்டணத்திலும் இன்டர்நெட் சேவை அளிக்க இருக்கிறோம்.  எங்களுடைய சேவை நிச்சயம் 4ஜிசேவையாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.
இப்போதுள்ள நிலையில் ஜியோ நிறுவனம் மட்டுமே ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மாதம் ரூ.303 செலுத்தினால், அன்லிமிடட் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை அளித்துள்ளது.
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன், ஏர்டெல், ஐடியா நிறுவனமும் நாள்தோறும் 1ஜி.பி. டேட்டா என்று 30 நாளுக்கு 30 ஜி.பி. டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற கணக்கில் ரூ.335 கட்டணத்தில் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டேட்டா வின்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு கடும் போட்டியாகவே இருக்கும்.

யார்எப்படி போட்டிபோட்டால் என்ன… மக்களுக்கு சலுகை விலையில் இன்டர்நெட் இணைப்பு யார் கொடுக்கிறார்கள் என்பதே முக்கியம்….

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை செல்போனில் டவுன்லோடு செய்யலாம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

ள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற விரிவுரையாளர்கள்
பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 9 துறைகள் தோற்றுவிக்கப்பட்டு, கூடுதலாக 36 கல்வியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
கணினி யுகத்தின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு தேவையான பாடப்பொருள் சார்ந்த 950 சிடிக்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் மூலம் தங்களது பாடங்களை டவுன்லோட் செய்து படிக்கும் வசதியும் இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு !!

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ்
சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்  அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5  விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் பள்ளிகளின் விவரம்:

1. கோ.து.வ.ச.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001.

2. புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்.

3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி..

4. புனித லூர்தன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

5. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில், ஈரோடு  638 001.

6. எஸ்.எஸ்.கே.வி. (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.  .

7. எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில். கன்னியாகுமரி  

8. சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர்.

9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கூட்டரங்கம்,கிருஷ்ணகிரி.  

10. ஓ.சி.பி.எம். (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, மதுரை  625 002.

11. இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், நாகப்பட்டினம். - 611 003.

12. அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு), மோகனூர் ரோடு, நாமக்கல்  637 001,

13. தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூர்.

14. ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை  622 001.    

15. சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம். இராமநாதபுரம்  

16. புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரிசிபாளையம், சேலம் - 636 009.  

17. செயிண்ட் ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.

18. தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, மேரிஸ் கார்னர், தஞ்சாவூர்    

19. புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம் - 643 001.  

20. நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி  625 531.  

21. காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மெயின் ரோடு, சோ.கீழ்நாச்சிப்பட்டு, திருவண்ணாமலை - 606 611.  

22. ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.

23. டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, மோதிலால் தெரு, திருவள்ளூர் - 602 001.    

24. ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரயில் நிலையம் அருகில், திருப்பூர் - 641 601.  

25. பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சி  620 002.  

26. சாரா தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி  - 627 002.

27. விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.    

28. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி, வேலூர்                                                      
29. தூய  இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பாண்டி சாலை, விழுப்புரம்  

30. சத்ரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி விருதுநகர். விருதுநகர்.    

31. நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி மெயின் ரோடு, அரியலூர்.

சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும்.  சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது


சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள்  ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுகதகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., முதல்வர் நடவடிக்கையால் 'மிஸ்டர் கிளீன்' ஆன அலுவலர்கள்!!!

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் அதிரடி உத்தரவுகளால், அரசு அலுவல கங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிரடி
மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிகாரிகள்,ஊழியர்கள்,அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதோடு, எந்த கோப்பு களும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தேக்கம் அடையாத வகையில் பணியாற்ற துவங்கியுள்ளனர்.


உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப் பேற்று, 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசு அலுவலகங்களில் முன் எப்போதும் இல் லாத வகையிலான மாற்றங்கள் தென்படுவ தாக, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனுக்குடன் அதிகாரிகளின் பார்வைக்கு
கொண்டு செல்லப்பட்டு, தங்கள் கோரிக்கை களுக்கு தீர்வு கிடைப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்களோ, அதி காரிகளோ சரியான நேரத்திற்கு பணிக்கு வந்ததாக வரலாறு கிடையாது. ஆனால், முதல்வர் ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், காலை, 9:30 மணிக்கே அனைவரும் வந்து விடுகின்றனர். மாலை எவ்வளவு நேரம் ஆனாலும், அன்றைய பணியை முடிக்காமல், யாரும் வீட்டிற்கு செல்வதில்லை.

பல மாதங்களாக கிடப்பில் இருந்த கோப்புகள் கூட வேகமாக நகர்கின்றன. புதிதாக தரப்படும் கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் உடனுக் குடன் சரிபார்க்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப் படுகிறது.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

அரசுஅலுவலகங்களில், பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து, அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

அரசுஅலுவலகங்களில் பான் மசாலா மெல் வதற்கு விதிக்கப்பட்ட தடையால், சக ஊழியர் கள் பலரும், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர். பல
ஆண்டு பழக்கத்தை ஒரே நாளில் நிறுத்த முடியாததால், அவர்கள், சூவிங்கம் உள்ளிட்ட பொருட்களை மெல்கின்ற னர். எனினும், நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது, சரியான நேரத்திற்கு முன்பாகவே அலுவலகம் வராவிட்டால், வாகனங்களை நிறுத்த கூட இடம் கிடைப்பதில்லை. அனைத்து ஊழியர்களும் முன்கூட்டியே அலுவலகம் வந்து விடுவதால், அலுவல் பணிகளும் சரியாக நடக்கின்றன.

இது, உ.பி.,யில் நிகழ்ந் துள்ள மிகப் பெரிய மாற்றம் என்பதை மறுக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்

TNTET 2017 - Exam Tips for English

டெட்வெற்றி நிச்சயம் - கட்டுரை - பாபு பட்டதாரி ஆசிரியர் பூங்குளம் 
பாடவாரியான வெற்றி குறிப்பு _ இன்றைய பாடம் : ஆங்கிலம்
பகுப்பு முறை :
Prose -4
Poem-4

Grammer - 13
Letter writing- 4
Teaching of English -5
:::::::::::::::PROSE:::::::::::::::
Synonyms
Antonyms
Homophones
Prose related one marks


 ::::::::::::::::POEM:::::::::::::::
FORMET OF POEMS
POEM words meanings
Author information
Teaching of poetry
::::::::::::::::  Grammar. ::::::::::::::::
* Part of speech
*Active & Passive voice
*Direct & Indirect speech
*Tense
*Types of sentence
* model Auxiliary verb
* Compound sentence
*degrees of Comparison
*Comprehension ( important topic - 4 to 5 marks)
* Error spot
* Question tag
* syllabification
* Phrases
* Idioms
*If clause
*Sentence pattern
*Phrasal verbs
*Punctuation
*Gerunds
*Infinitive's
*Preposition
*Article
*Anagrams
*Phonetics
*Singular & plural
*Simple, compound, Complex
:::::::::::: Teaching of English::::::::
Methods of teaching
Types
Explanation
Language skill
::::::::::::: Extra topics:::::::::
Complete grammar parts via work books
Solve Skill based simple one marks
ஆங்கிலம் முழு மதிப்பெண் பெறுவது கடினமே எனினும் தலைப்பு வாரியான நுணுக்கமான கருத்துகளை படிப்பதால் வெற்றி எட்டி விடும் தூரமே


வாழ்த்துகளுடன் - தேன் கூடு

TNTET - 2017 Exam Tips for Tamil

டெட்வெற்றி - கட்டுரை - பிரதீப்  பட்டதாரி ஆசிரியர் வேலூர்

" பாட வாரியான வழிகாட்டல் தொகுப்பு"
இன்று _ தமிழ்:

30 மதிப்பெண்: 10 செய்யுள் + 10 உரநடை + 10 இலக்கணம்

எனவேமூன்று பிரிவுகளையும் சம விகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும்



 செய்யுள் :
*பாடல்
*பாடலாசிரியர்
*பாடல் பாக்கள்
*பொருள்
*ஆசிரியர் குறிப்பு
*செய்யுள் குறிப்பு
*ஆசிரியர் பிற நூல்கள்
*செய்யுள் தொடர்புடைய நூல்கள்
*சிறப்பு பெயர்கள்
*ஊர்கள் / மாவட்டம் | நாடு
*பிறந்த வருடம்
*விருதுகள் / பரிசுகள்
*பாடலில் உள்ள கருத்துகள்
*மேற்கணக்கு, கீழ்கணக்கு
*சிற்றிலக்கியம்
*காப்பியம்
*சமய நூல்கள்
*ஆழ்வார், நாயன்மார்கள்

உரைநடை :
*பாட கருத்துகள்
*சிறப்பு பெயர்கள்
*புகழ் வாய்ந்த மனிதர்
*வருடங்கள்
*தமிழ் மொழி | நாடு சிறப்புகள்
*அறினர்கள் குறிப்புகள்
*மேற்கோள் வரிகள் - நூல்கள்
*அடைமொழி
*சிறப்பு பெயர் - வழங்கியவர்

இலக்கணம் :
* எழுத்திலக்கணம்
முதலெழுத்து + சார்பெழுத்து
வகைகள், விளக்கம், உதாரணம்
* சொல் இலக்கணம்
பதம்-பகுபதம், பகா பதம்
கிளவி - இரட்டை கிளவி
மொழி-தனி, பொது
* பொருள் இலக்கணம்
அகம், புறம்
வகை
பொருள்
நிலம், கரு பொருள், உரிபொருள்
* அணி இலக்கணம் :
அணியின் வகைகளை தொகுக்க
தற்குறிபேற்றம், உயர்வு நவிற்சி, உவமை, உருவகம் ... போன்றவை
* யாப்பிலக்கணம்
* அசை
* சீர்
* தளை
* அடி
* தொடை
* பா வகை
இவைதவிர்த்து,
மொழிதிறன் பயிற்சி :
* பிற மொழி சொற்கள்
* மரபு பிழை
* மயங்கொலி பிழை
* ஒற்று மிகும் இடம்

பாடபகுதி :

வகுப்பு 3 முதல் 10 வரை
தெளிவான புரிதலோடு படித்தல்
தொடர் பாட பகுதி :
தொடர்பு உடைய ஆசிரியர், நூல் குறிப்புகள்
தொடர்புடைய இலக்கணமும் வகுப்பு 11, 12 வகுப்பில் படித்தல் முழு வெற்றி பெற்று தரும்


வாழ்த்துகள்.... தேனி துளியாய் சிறுக சிறுக சேகரிப்போம் - #தேன்கூடு

TNTET - 2017 Exam Tips for Maths

பாடவாரியான வழிகாட்டுதல் தொகுப்பு:::
 இன்றைய பாடம் - கணிதம்

  30 மதிப்பெண் :
நேரடி வினாக்கள் (6)
வாழ்வியல் கணிதம் (18)

தயாரிப்பு வினாக்கள் (6)

  :::::நேரடி வினாக்கள்:::::

எண்கள்
இயற்கணிதம்
அளவியல்
வடிவியல்
புள்ளியல்
முக்கோணம், வட்டம், மற்ற வடிவங்கள்
பரப்பளவு, சுற்றளவு
(வகை, பிரிவுகள், மதிப்புகள், வரையறை)
இவைசார்ந்த நேரடி வினாக்கள் பாட பகுதி சார்ந்தவற்றை படிப்பதன் மூலம் பெறலாம்

::::::: வாழ்வியல் கணிதம் ::::::

விகிதம்
சதவிகிதம்
லாபம் , லாப%
நட்டம், நட்ட %
தனிவட்டி
கூட்டு வட்டி
இயற்கணித நடைமுறை கணக்குகள்
வயதுகணக்குகள்
எண்ணியல் கணக்குகள்
மீ.பெ.வ , மீ.பொ.ம
கலப்பு மாறல்
முக்கோண பண்புகள்
வட்டபண்புகள்
வடிவஅதிகரிப்பு, குறைப்பு
சுருக்குக
வேலை- ஆட்கள்
தூரம் - வேகம்
பரப்பு, சுற்றளவு, கன அளவு

::::::::: தயாரிப்பு வினாக்கள்::::::

மன கணக்குகள்
படம்சார் கணக்குகள்
விட்டுப் பட்ட எண்கள்
பொருந்தாத எண்
பெரியது, சிறியது எது?
எறுவரிசை, இறங்கு வரிசை
பின்னம், தசமம் ஒப்பீடு
கலப்பு பின்னம், நேர் பின்னம்

:::::::::: கூடுதல் பகுதிகள் ::::::::::

வகுப்பு 9 மற்றும் 10
கணம்(படம் சார் கணக்கு)
மெய்யெண் தொகுப்பு ( அனைத்து வகைகள்)
மடக்கை
இயற்கணிதம் ( தொகுப்பு )
வடிவியல் (இணை கரம், நாற்கரம், கன உருவம் / கூட்டு உருவம், வட்டம் )
அளவியல் (கன சதுரம், செவ்வகம், கூம்பு, உருளை , ேகாளம்)
புள்ளியியல் (சராசரி, இடைநிலை, முகடு, வீச்சு)
நிகழ்தகவு ( நாணயம், பகடை, சீட்டு கட்டு)
வகுப்பு 11, 12 தேவைஅல்ல.

::::::: பயிற்சி முறை :::::::

அனைத்து கணக்குகளையும் விரைவாக எளிதாக பயிற்சியுடன் விடை காண பழகுங்கள்
வாழ்வியல் கணிதம் தெளிவுற அறிதல் கட்டாயம்
கணிதம் பொறுத்தவரை வினாவிற்கான விடை வினாவில் ஒளிந்துள்ளது. புரிந்து தெளிவாய் தீர்வு காணுங்கள்
தினம் 1 மணிநேரம் ஒரு தலைப்பை பயிற்சி காணுங்கள்
கணிதவெற்றியும் எட்டி விடும் தூரம் தான் - வாழ்த்துகள்

7th PC : ஊழியர்களுக்கு புதிய 'அலவன்ஸ்' கிடைப்பதில்... தாமதம்? இன்னும் தீரவில்லை 7வது சம்பள கமிஷன் குளறுபடி

மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப, 'அலவன்ஸ்' எனப்படும், 'படி'களை மாற்றி அமைப்பதில்,
இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இதனால், ஏப்., 1 முதல், புதிய விகித அடிப்படையில், 'படி' வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப் படுகின்றன; ஊதியக் குழு பரிந்துரையின் அடிப் படையில், சம்பள விகிதம் மாற்றி அமைக்கப் படுகிறது.

அதன்படி, ஏழாவது ஊதியக் குழு அளித்த பரிந் துரைகளை, மத்திய அரசு, 2016ல் அமல்படுத்தி யது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.5 சதவீதமும், ஓய்வூதியதாரர்களுக்கு, 24 சதவீதமும் ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, சம்பளத்துடன் கூடிய படியும், உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக, மத்திய நிதித் துறை செயலர் தலைமையில், 2016 ஜூலையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பல மாதங்களாக ஆய்வு செய்து வரும் இக் கமிட்டி, தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க, கால தாமததித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர் களுக்கு இதுவரை, 196 வித மான படிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பலவற்றை ரத்து செய்யும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது. அது போலவே, வீட்டு வாடகை படியை முடிவு செய்வதிலும் சிக்கல் நீடிக் கிறது. இக்கமிட்டி, நீண்ட ஆலோசனை நடத்திய பின்னும் முடிவு எட்டப்படவில்லை. சில தினங் களுக்கு முன், டில்லியில் கூடிய இக்கமிட்டி கூட்டத் தில், சில படிகளை ரத்து செய்வது தொடர்பாக, மத்திய அரசின், 14 துறைகளிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு மேலும் தாமதமாக கூடும். எனவே, முன்ன தாக திட்டமிட்டபடி, புதிய நிதியாண்டின் துவக்க மான, ஏப்., 1ல் இருந்து, மாற்றியமைக்கப் பட்ட, படிகளை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது.எனினும், பணிகளை முடித்து, பார்லி., கூட்டத் தொடர் முடிந்த பின், ஏப்., இறுதி யில், மத்திய அரசு, படி விபரங்களை அறிவிக்கலாம் என, தெரிகிறது. அதே சமயம், படிகளை, முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டு வாடகை 'படியில்' மாற்றம்?

'மெட்ரோ' நகரங்களில், அடிப்படை சம்பளத் தில், 30 சதவீதம் வாடகை படியாக வழங்கப்படுகிறது. இதை, 24 சதவீதமாக குறைக்க வேண்டும் என,ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்து இருந்தது. இதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர் . எனவே, தற்போது உள்ளபடி,30 சதவீத வீட்டு வாடகை படியே, தொடர்ந்து வழங்க கமிட்டி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

53 படிகள் நீக்கம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு, தற்போது, 196 வித மான, 'படிகள்' வழங்கப்படுகின்றன. இவற்றில், சமையல், கண்காணிப்பு, முடிவெட்டுதல், சோப், சீருடை, துவைத்தல், ஷூ, சுருக் கெழுத்து என, பலவித படிகள் வழங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இவற் றில் சில நீக்கப்படுகின்றன. மேலும், சில வற்றை ஒன்றிணைத்து ஒரே படியாக வழங்க வும், கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 196 படிகளில், 53 படிகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், 36 படிகள் மற்றவற்றுடன் இணைக்கப்படுகின்றன.

பிஎஸ்என்எல் அதிரடி : ஒரு ரூபாய்க்கு 1ஜிபி டேட்டா.!

ஒருவழியாக ஜியோவின் ஆக்கிரமிப்பு சேவைகள் முடிவுக்கு வந்தது என்று பிற நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ஜியோ
அடுத்த 3 மாதங்களுக்கான அதன் "கிட்டத்தட்ட" இலவச சேவைகளை அறிவித்துள்ளதை தொடர்ந்து மீண்டும் இந்திய தொலைத்தொடர்பு துறைகளுக்குள் கட்டண யுத்தம் கிளம்பியுள்ளது. முதலில் ஐடியா நிறுவனம் இன்று அதன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ.300/- கட்டண சேவை சலுகையை முன்னெடுத்துள்ளது. மறுபக்கம் மாநிலத்தின் டெல்காஸ் நிறுவனமான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் முன்னெடுத்துள்ள சலுகைகள் பயனர்களுக்கு திருவிழாக்காலம் ஆரம்பித்துள்ள ஒரு மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.339/-  

ரூ.339/-
நாள் ஒன்றிற்கு 10ஜிபி எம்டிஎன்எல் இப்போது அதன் ரூ.319/- திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்கும் அதன் திட்டத்தை அறிவித்துள்ளது மறுபுறம் பிஎஸ்என்எல் நாள் ஒன்றிற்கு 10ஜிபி அளவிலான தரவை வழங்கும் அதன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
2ஜிபி எம்டிஎன்எல் வழங்கும் ரூ.319/- திட்டத்தின் கீழ், பயனர்கள் எம்டிஎன்எல் பிணையத்தில் உள்ள வரம்பற்ற குரல் அழைப்புகளோடு சேர்த்து ஒரு நாளைக்கு 2ஜிபி தரவையும் அனுபவிக்கலாம். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ரூ.319 திட்டமானது தற்போது தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் உள் எம்டிஎன்எல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை மறுபக்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 திட்டமானது ஒரு நாளைக்கு 10ஜிபி அளவிலான தரவு இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை வரம்பற்ற இலவச அழைப்புகளை (எந்த நெட்வொர்க்குடனும்) வழங்குகிறது.
ரூ.339/- இந்த பிஎஸ்என்எல் திட்டம் ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்கு தள்ளும் ஒரு திட்டம் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதேபோல 28 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டா வழங்கும் ரூ.339/- திட்டமும் பிஎஸ்என்எல் ஜியோவிற்கு எதிராய் வெளியிட்ட சிறந்த கட்டண சலுகைகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNTET 2017 - Exam Tips - Science!

டெட்வெற்றி நிச்சயம் - கட்டுரை - பிரதீப் பட்டதாரி ஆசிரியர் - பூங்குளம்

பாட வாரியான டிப்ஸ் - இன்று : அறிவியல்

பகுப்புகள்:
தாவரவியல் - 8
விலங்கியல் - 8
இயற்பியல் - 7
தாவரவியல் - 7
மேலும்
நேரடி வினாக்கள் - 15 முதல் 20 வரை
சிந்தித்து விடையளித்தல் வினாக்கள் - 10 வினாக்கள்
வகுப்பு 6- 10 வரை : 22 - 24 மதிப்பெண்
தொடர்புடைய பாட பகுதி - 11 & 12- 6 மதிப்பெண்
::::::::::: தாவரவியல் ::::::
* வகைபாடு
* பண்புகள்
* பயன்கள்
* தாவரவியல் பெயர்
* சட்டம் - ஆண்டுகள்
* அறிஞர் கண்டுபிடிப்பு
* மொனி ரா
* புரோடி ஸ்டா
* பூஞ்சை
* தாவரம் - பிரையோ பைட் / டெரிட்டோ பைட் / ஜின்னோல் பெர்ம் / ஆஞ்சியோஸ்பெர்ம்
* இவற்றின் பண்பு பயன்கள்
* ஒரு வித்திலை
* இரு வித்திலை
* சுவாசம்
* ஒளி சேர்க்கை
* தாவர நோய்கள்
:::::::::: விலங்கியல் :::::::
வகைபாடு
தனிபண்பு
விலங்கு நுண்ணுயிரி
நோய்கள்
பரவும் விதம்
உணவுஉட்கொள்ளல், செரித்தல் முறை
பாலூட்டி வகைப்பாடு
மனிதன் பண்புகள்
உறுப்பு மண்டலம்
நாளமுள்ள, நாளமிள்ளா சுரப்பி
முக்கிய உறுப்பு - கருத்துகள்
இனபெருக்க நிலை - ஹார்மோன்
::::::::: இயற்பியல்::::::::
அடிப்படை அலகு
வழிஅலகு
SI குறியீடு
அளவீட்டியல்
ஒளிபண்பு
ஒலிபண்பு
மின்னியல்
காந்தவியல்
ஆடிகள்
நிறம், எதிரொளிப்பு
இயற்பியல் பண்புகள்
அலகுகள், குறியீடுகள்
::::::::::::: வேதியியல் :::::::
வேதிவினைகள்
அமிலம்
காரம்
தனிமம்
தனிமவரிசை அட்டவணை
பயன்கள்
மூலக்கூறு
சேர்மம்
உலோகம்
அலோகம்
உலோகபோலி
பயன்கள்
பண்புகள்
வினைகள்
PH மதிப்பு
:::::::::: கூடுதல் பகுதி :::::::::
மேற்கண்ட பாட பகுதி சார்ந்த கருத்துகள்  11 , 12 வகுப்பில் கூடுதலாக படித்தல் முழு மதிப்பெண் பெற்று தரும்
√அறிவியல் பொறுத்தவரை மறைமுக வினாக்களே அதிகம்
√தெளிவுற படித்தல் மிக அவசியம்
√பாட பகுதியும் அதிக செறிவு மிக்கது
√விரைவில் மறந்து விடும். திருப்புதல் இப்பாடத்தில் மிக முக்கியம்
√அறிவியல் பெயர்களை வாழ்வியல் நிகழ்வோடு Hint வைத்து படிக்கவும்
√கடினம் எனினும் இப் பாடம் வெற்றியின் அடிப்படை சாராம்சம்
√இயலாது என எதுவும் இல்லை
இலக்கு தெளிவாக இருக்கும் போது

🐝🐝🐝வாழ்த்துகள் _ தேன்கூடு

வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-2 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை பிளஸ்-1 வகுப்புக்கு மாற்றம் வருமா?

வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-2 வகுப்பு பாடத்திட்டத்தில் எவ்விதமாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் பிளஸ்-1 வகுப்புக்குபாடத்திட்டம் மாற்றுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும்என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாடத்திட்டம்

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம்தயாரித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பொதுவாக5 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாற்றம்செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த வகுப்புகளுக்கு பாடத்திட்டம்எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.இந்த வருடம் ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரிதமிழக அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது.பின்னர் அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்ததீர்மானம் அப்படியே இருக்கிறது. எனவே ‘நீட்’ தேர்வில் இருந்துவிலக்கு அளிக்கப்படுமா? என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.

மாற்றம் வருமா?

ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிக்கூடங்கள் தொடங்கஉள்ளன. பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே இலவச பாடப்புத்தகங்கள்வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்பணிகள் கழகம் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்குபாடப்புத்தகங்களை அச்சடித்து விட்டது. எனவே பிளஸ்-2 வகுப்புபாடத்திட்டத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை.

தற்போது 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை பாடப்புத்தகம்அச்சிடப்பட்டு வருகிறது. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிட்டபிறகு 11-வது வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன.எனவே பிளஸ்-1 வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா? எனமாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

அரசு முடிவு எடுக்கும்

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்-1வகுப்புகள் தொடங்க இன்னும் 2½ மாதங்களே உள்ளன. இந்நிலையில்அவசரமாக வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்புபாடத்திட்டத்தை மாற்றுவது சிரமம். இருப்பினும் இது குறித்துஅரசு தான் இறுதி முடிவை எடுக்கும் என்றனர்.பிளஸ்-1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு,அந்த மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் போது புதியபாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

GST - ஜுலை 1 தெரிந்து கொள்வோம்....

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏராளமான மாற்றங்கள்...அனைவரும் அறிய வேண்டிய அறிவிப்புகள்.

ஏப்ரல் 1-ந்தேதி என்பது பொதுவான மாதப்பிறப்பு என்பதைக் காட்டிலும் 2017-18ம் நிதியாண்டு பிறக்கிறது என்பதுதான் சிறப்பானது. இந்த நிதியாண்டில் பல மாற்றங்களை பிரதமர் மோடி தலைமையிலானஅரசு செய்துள்ளது.
பட்ஜெட்டை முன்கூட்டியே அதாவது பிப்ரவரி 1-ந்தேதியேதாக்கல் செய்து, நிறைவேற்றியுள்ளது. பட்ஜெட்டில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. சலுகைகள் முதல் புதிய வரிகள் வரை, வரி குறைப்பு அனைத்தும் அமலாகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது.

இதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, வருமான வரி விலக்கு என பல மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.  அவை என்ன என்பது தெரிந்துகொள்ளலாம்.

வருமானவரி குறைப்பு

1.2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் வருமானவரி செலுத்து அளவு குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதாவது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரைஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள், 10 சதவீதம் வருமானவரி வரி செலுத்தி வந்தனர். அதை 5 சதவீதமாக பட்ஜெட்டில் குறைத்து நிதிஅமைச்சர் ஜெட்லி அறிவித்தார்.அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.அதாவது இந்த நிதியாண்டு முதல் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5. லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் மட்டுமே வருமானவரி செலுத்தினால் போதுமானது.அதிலும், வீட்டுவாடகை, குழந்தைகளின்படிப்பு,மருத்துவச்செலவு என 80 சி படிவத்தில் கணக்குகாட்டினால், அதையும் செலுத்த தேவையில்லை.

2. ரூ.3.5 லட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் ஆண்டுக்கு ரூ.2575 வரி செலுத்தினால் போதுமானது, இதற்கு முன்பு இது ரூ.5,150 ஆகஇருந்தது. மேலும், வரிசெலுத்தியதை திரும்பப் பெறும் டேக்ஸ் ரிபேட் அளவு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் கூடுதல்வரி

3. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் வருமானவரியோடு சேர்த்து, கூடுதல் வரியாக 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது நடைமுறைக்கு வருகிறது.

15சதவீதம் வரி

4. ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல்வருமானம் இருப்பவர்களுக்கு ஏற்கனவே செலுத்தும் வருமானவரியோடுசேர்த்து கூடுதல் வரியாக 15 சதவீதம் செலுத்துவதும் நடைமுறைக்கு வருகிறது.

ஒருபக்க வருமானவரி ரிட்டன் படிவம்

5. ஆண்டுக்கு ரூ. 5லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள்,முதல்முறையாக வருமானவரி செலுத்துபவர்களுக்காக ஒரு பக்கம் கொண்ட வருமானவரி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல்முறையாக வருமானவரி செலுத்தும் நபர்களிடம் அதிகமான விசாரணைகளும் நடத்தப்படாது. ஐ.டி.ஆர்.1 என்ற ஒருபக்க படிவம் மட்டுமே வர உள்ளது.

அபராதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம்

6. 2017-18ம் நிதியாண்டில் வருமானவரி ரிட்டன்களை 2018,டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பாக செலுத்தினால்ரூ.5ஆயிரம் அபராதமும், அதற்கு பிறகு செலுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அதேசமயம், ரூ.5 லட்சம் வரைஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. ஆயிரம் மட்டுமே அபராதம்விதிக்கப்படும்.

வரிவிலக்கு

7. ராஜீவ்காந்தி சேமிப்பு திட்டத்தில் இதற்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு 80சிசிஜி படிவத்தின் படி வரிபிடித்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த நிதியாண்டு முதல் அந்த வரிபிடித்தம்செய்யப்படாது.

வரிபிடித்தம் இல்லை

8. தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்பது இருப்பவர்கள் தங்களின் முதலீட்டில் இருந்து பாதி அளவு பணத்தை இடையே எடுத்தால், வரிபிடித்தம் செய்யப்பட்டுவந்தது. ஆனால், அது மாற்றப்பட்டு பாதிபணம் வரை எடுத்தாலும் வரிவிதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ரூ.2லட்சத்துக்கு மேல் தடை

9.ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரொக்கமாக ரூ. 2லட்சத்துக்குமேல் யாருக்கும் பரிமாற்றம் செய்ய முடியாது. வர்த்தகர்கள் வங்கியில் இருந்து ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கமாகவும் எடுக்க முடியாது. அவ்வாறு ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கப்பரிமாற்றம்செய்தால், எந்தஅளவு பரிமாற்றம் செய்கிறார்களோ அதே அளவு அபராதம் விதிக்கப்படும்.

மருந்துகள் விலை உயர்வு

10. சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை, புற்றுநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான 875 அத்தியாவசிய மருந்துகளின் விலை 2சதவீதம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்கிறது.

இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு

11. ஏப்ரல் 1-ந்தேதி முதல் காப்பீடு பிரிமியம், வாகனங்களுக்கான மூன்றாம்நபர் காப்பீடு பிரிமியம் ஆகியவை 5 சதவீதம்  உயர்த்தப்படுகிறது. அதிலும் 150சிசி முதல் 350 சிசி வரை, அதற்க மேல் உள்ள சிசி உள்ள பைக்குகளுக்கு மூன்றாம்நபர் (தேர்டுபார்ட்டி இன்சூரன்ஸ்)காப்பீடு 40 சதவீதம் உயர்கிறது. கார்களில் 1000 சிசிக்கு மேல் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.

எஸ்.பி.ஐ. வங்கி அபராதம்

12. எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பாக நகரங்களில் வசிப்போர் ரூ.5ஆயிரம், சிறுநகரங்களில்வசிப்போர் ரூ.3ஆயிரம், கிராமங்களில் வசிப்போரு ரூ.ஆயிரம் வைத்துஇருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.100முதல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.மேலும், மாதத்துக்கு 3 முறை மட்டுமே ரொக்கமாக டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் செய்தால், ரூ. 50 சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆதார் கட்டாயம்

13. ஜூலை 1-ந்தேதி முதல் பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கண்டிப்பாக ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.
ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும்சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள்என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது.

3–ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பளபணம் வங்கிகளில் செலுத்தப்படும்.

அந்தவகையில் 4–ந்தேதிதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளபணம் கிடைக்க உள்ளது.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கானஎழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தவிவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.

அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.


நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.

குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

1.மாநகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

2.நகர, சிறு நகர, கிராமபுறப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.

3.டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

4.ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

5.அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

6.எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.

7.எஸ்பிஐயுடன் இணையும் 5 வங்கிகள்
இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

Lab Assistant Post - Experience Certificate Form



முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க 2 நாள்கள் அவகாசம் நீட்டிப்பு.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்ப தற்கான கால அவகாசம் மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு  நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.  அதன்படி, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 4-ஆம் தேதி கடைசித் தேதி என்றும், இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரின்ட் எடுத்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஏப்ரல் 5 கடைசித் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளது. அவற்றில் 3 நாள்கள் அரசு விடுமுறை நாள்கள் என்பதால், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். எனவே, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து கால அவகாசம் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது:  விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 6 கடைசித் தேதி என்றும், இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிண்ட் எடுத்து தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு ஏப்ரல் 7 கடைசித் தேதி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இணையதளத்தில் விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் உள்ளது என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். எனவே, இணையதளத்தில் பதிவு (ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ்) செய்துவிட்டு அதன் பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பிரின்ட் எடுத்து தபாலில் அனுப்புவதற்கு பதில், விண்ணப்பங்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபாலில் அனுப்பலாம்.

இரண்டு முறைகளில் விண்ணப்பித்தாலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.

ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யாதவர்கள் கவனத்திற்கு..! தொடரும் விலை போர்: ஏப்ரல் 15 வரை ஜியோ பிரைம் உறுப்பினராக மாறலாம் மற்றும் பல அதிரடி ஆஃபர்கள்..!

                              
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது முதல் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகள் வாரி வழங்கியது. இப்போது என்னவென்றால் ஜியோவின் வெல்கம் ஆஃபர் மற்றும் நியூ இயர் ஆஃபர்கள் முடிந்த நிலையில் மார்ச் 31-ம் தேதிக்குள் பிரைம் மெம்பராக மார வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்த ஜியோ ஏப்ரல் 15 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது.


அது மட்டும் இல்லாமல் மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் ரீசார்ஜ் செய்து மகிழலாம் என்றும் ஜியோ அறிவித்துள்ளது. இதனால் போட்டி நிறுவனங்கள் இடையில் நேரடியாக விலைப் போரில் ஈடுபட்டு வருகின்றது ஜியோ என்று கூறலாம்.

ஜூலை வரை ஆஃபர்
ஏப்ரல் 15-ம் தேதிக்குள் யாரெல்லாம் ஜியோ பிரைம் 99 ரீசார்ஜ் செய்கின்றார்களோ அவர்கள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தல் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபரை ஜூலை வரை தொடர்ந்து பயன்படுத்தி மகிழலாம்.
  
சம்மர் சர்பிரைஸ்
இந்தச் சலுகை திட்டத்தின் பெயரை சம்மர் சர்பிரைஸ் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை ஜியோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  
ஆகஸ்ட் ரீசார்ஜ் செய்தால் போதும்
ஜியோ பிரைம் ரீசார்ஜினை செய்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இந்தச் சம்மர் சர்பிரைஸ் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் மாதம் தான் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
  
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
ஜியோ நெட்வொர்க்கின் பிரம் ஆஃபரில் இது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பதாகவும், அது ஏப்ரல் 15-ம் தேதிக்குள் 100 மில்லியன் பயனர்களைக் கடக்கும் என்றும் ஜியோ எதிர்பார்க்கின்றது.
  
அம்பானி அறிவிப்பு
ஜியோ இலவச சேவை முடிவுறுகின்றது. ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யுங்கள் இல்லை என்றால் உங்களுக்கான சேவை துண்டிக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிரடி ஆஃபரால் இலவசத்தைப் பயன்படுத்திய பிறகு தூக்கி எறிந்துவிடலாம் என்று இருந்த ஜியோ பயனர்களும் பிரைம் ஆஃபர் ரீசார்ஜ் செய்வார்கள் என்பது ஜியோவின் திட்டமாகும்.

   தரம்படுத்தப்பட்டு வரும் சேவை
ஜியோ நெட்வொர்க் சேவையில் பல தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதால் சேவையில் இடையூறுகள் அதிகமாக உள்ளன. இதனைப் போக்கும் வகையில் இன்னும் சில நாட்களில் பல மடங்கு சேவை தரம்படுத்தப்பட்டுவிடும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
  
கூடுதலாக 100,000 கோடி முதலீடு
ஜியோ நிறுவனத்திற்காக 200,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாதகும், வரும் மாதங்களில் தொலைத்தொடர்பு நெட்வோர்க் டவர்களுக்காக 100,000 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  
போட்டி நிறுவனங்களின் நிலை
6 மாதங்களாக இலவச ஆஃபர்களை ஜியோ நிறுவனம் அளித்து வந்ததால் போட்டி நிறுவனங்களான வோடாபோன், ஐடியா, மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெறும் சிக்கல்கள் உருவாகி போட்டி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது மற்றும் சிறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி 99 ரூபாய் பிரிமியம் ரீசார்ஜ் மற்றும் 149 ரூபாய் முதல் பிற ரீசார்ஜ் போக்குகளையும் அறிவித்திருந்தார்.

   வருவாய் இழந்த போட்டி நிறுவனங்கள்
ஜியோவால் அக்டோபர்-டிசம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 55 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, இதுவே வோடாபோன் நிறுவனம் 1.9 சதவீதம் வரை சேவை வருவாயை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது.

குறுஞ்செய்தி வந்தால் மட்டும் மின்னணு அட்டை பெற ரேஷன் கடைக்குச் செல்லுங்கள்.

செல்லிடப்பேசியில் எட்டு இலக்க ரகசிய எண் உங்களுக்கு வந்தால் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை பெற ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும். அந்த எண்ணை நியாய விலைக் கடை காண்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

நியாய விலைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணும், ஆதார் எண்ணும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசிக்கு எட்டு இலக்கம் கொண்ட ரகசிய எண்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த எண்களுடன் உங்களது செல்லிடப்பேசியை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும்.

அதனை விற்பனையாளரிடம் காண்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். பழைய அட்டையிலும் பொருள்கள்: மின்னணு குடும்ப அட்டை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மின்னணு குடும்ப அட்டையைப் பெறாதவர்களுக்கு பழைய அட்டையை (தாள்களைக் கொண்டது) அடிப்படையாகக் கொண்டு பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் மதுமதி தெரிவித்தார்.

எப்போது முடியும்: மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி, இரண்டு மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதங்களுக்குள் மாநிலம் முழுவதும் வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வக உதவியாளர் தேர்வு பெயர்பட்டியல்கள் வெளியீடு.

பள்ளிகளுக்கான ஆய்வ உதவியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்தோர் மதிப்பெண் விவரங்களுடன் மதுரையில் 4 இடங்களில் பட்டியல்கள் சனிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் தேர்வானவர்களின் சான்று சரிபார்க்கும் பணிகள் வரும் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மதுரை ஓ.சி.பி.எம்.பள்ளியில் நடைபெறவுள்ளன. இதில் 267 பேருக்கு தற்போது அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 சான்று சரிபார்ப்புக்காக வருவோருக்கு மதிப்பெண்களுடனான பெயர்ப்பட்டியல் சனிக்கிழமை காலையில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், மாவட்டக் கல்வி அலுவலக வளாகங்கள் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக வளாகம் ஆகியவற்றில் ஒட்டப்பட்டன. பெயர்ப் பட்டியல்களை ஏராளமானோர் வந்து பார்த்துச்சென்றனர்.

ஓ.சி.பி.எம்.பள்ளியில் நடைபெறும் சான்று சரிபார்க்கும் பணியை எளிதில் செயல்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, நேர்முக உதவியாளர் ஆதிராமசுப்பு ஆகியோர் செய்துள்ளனர். 

Certificate Verification List for the Direct Recruitment Of Lab Assistant

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு.