யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/4/17

கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது துணைவேந்தர் பேட்டி.

கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது என்றும்,பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கைநடைபெறும் என்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதுணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை

கால்நடை மருத்துவ படிப்பில் சேர வழக்கம் போல பிளஸ்–2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கால்நடை மருத்துவம் மற்றும் உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர 380 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல கலந்தாய்வு மூலம் நடைபெறும்.விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பி பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப முறை முழுக்க முழுக்க ஆன்லைன் கிடையாது. இந்த படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது. வழக்கம் போல பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தரவரிசை பட்டியல்

மேலும் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த ஆய்வில் 1007 என்ஜினீயரிங் கல்லூரிகள், 542 மேலாண்மை கல்லூரிகள், 535 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 316 மருந்தியல் கல்வி நிறுவனங்கள், 200 பல்கலைக்கழகங்கள்ஆக மொத்தம் 2 ஆயிரத்து 600 கல்வி நிறுவனங்கள் பங்கு பெற்றன.பல்கலைக்கழகங்களுக்கான மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 38–வது இடத்தை பெற்றது. ஆனால் மாநில அளவில் 4–வது இடத்தை பிடித்தது. மேலும் கல்வி மற்றும் கல்வி கற்றலுக்கான சூழல்களை வழங்கிடும் விதத்தில் தேசிய அளவில் 6–வது இடத்தையும், மாநில அளவில் 2–வது இடத்தையும் பிடித்து இருக்கிறது.

முதல் இடம்

இந்தியாவில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்கள் 14 உள்ளன. அந்த பல்கலைக்கழகங்களில்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முதல் இடத்தை பெற்றுள்ளது.இவ்வாறு துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

Jio-வின் கோடைகால சலுகைகளின் சந்தேகங்களும் ... தீர்வுகளும்..!

இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ.
                                               

கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி ஜியோ இலவச சேவைகள் நேற்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக வருகின்ற 15-ஆம் தேதி வரை ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகலாம் என்றும் ரூ.99 (பிரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (ஏப்.15) அடுத்த 3 மாதங்களுக்கு அளவற்ற இணைய தள வசதி, அழைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோடைகால அதிரடி சலுகை (சம்மர் சர்ப்ரைஸ் ஆஃப்ர்) என்ற புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் வரும் 15-ம் தேதி வரை இலவச சலகைகளை பெறலாம். தற்போது அந்நிறுவனத்தில் 100 மில்லியன் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களில், 70 மில்லியன் பேர் ஜியோ பிரைம் திட்டத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில், கோடைகால அதிரடி சலுகையின் ஒரு பகுதியாக மேலும் 3 மாதங்களுக்கு இலவச சேவை தொடரும் என்று ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோவின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்களின் அந்த குழப்பத்திற்கான தெளிவுகள் கீழ்கண்டவாறு...

* ஜியோ கோடைகால சலுகைகள் என்ன?
ஜியோவின் கோடைகால சலுகைகள் மூலம் ஜியோ இலவச சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற வரும் 15-ம் தேதிக்குள் ரு.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி, பின்னர் ரூ.303 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்து கொண்டால் இந்த சலுகை 3 மாதத்திற்கு கிடைக்கும்.

* ஜியோ கோடைகால சலுகை பலன் என்ன?
- அளவற்ற இலவச அழைப்புகள்
- இலவச எஸ்எம்எஸ்
- பல அளவு கொண்ட டேட்டாக்களுடன் இலவச 4 ஜி இணைய சேவையை பெறலாம்.

* பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் கோடைகால சலுகை கிடைக்குமா?
ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி இணைந்துவிட்டால் உங்களது செல்பேசி எண் குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். அதன் பிறகு இணைப்பு துண்டிக்கப்படும்.  கோடைகால சலுகை பெற ரூ.303 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்வது அவசியம்.

* ரூ.303 செலுத்தினால் கோடைகால சலுகையின் பயன்கள் என்ன?
ரூ.303 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா வரும் ஜூன் 30-ம் தேதி வரை கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்திய ரூ.303 திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்பட்டிற்கு வரும். அது ஜூலை 8-ம் தேதி வரை செல்லுபடியாகும்.

* ரூ.149 திட்டம் தேர்வு செய்திருந்தால் கிடைக்கும் பலன் என்ன?
ரூ.149 செலுத்தி ரீசார்ஜ் செய்த வாடிக்காயாளர்களுக்கு கோடைகால சலுகைகள் கிடைக்காது. அவர்கள் மேற்கொண்டு ரூ.303 செலுத்தி ரீசார்ஜ்  செய்தால் கோடைகால சலுகைகள் கிடைக்கும். ஏற்கனவே, செலுத்திய ரூ.149 இருப்பில் வைக்கப்பட்டு  3 மாதங்கள் மற்றும் கூடுதலாக ஒரு மாதம் கழித்து, கோடைகால சலுகை முடிந்தவுடன் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ரூ.149 திட்டம் அமலுக்கு வரும்.

* கோடைகால சலுகை மூலம் ரூ.99 மற்றும் ரூ.499 திட்டங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
அளவற்ற இலவச அழைப்புகள், எஸ்எ  ம்எஸ் மற்றும் 2ஜிபி எப்யுபி அளவுடன் 4ஜி டேட்டா கிடைக்கும்.

* ரூ.4,999 அல்லது ரு.9,999 திட்டங்களை தேர்வு செய்திருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?
இந்த திட்டங்கள் அனைத்தும் 3 மாதங்கள் கழித்து அமலுக்கு வரும். அது வரை இலவச சேவையை தொடர்ந்து பெறலாம்.

* கோடைகால சலுகை பெற மொத்தம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
திட்டத்தின்  கட்டணமாக ரூ.99ம் சலுகை கட்டணமாக ரூ.303 என மொத்தம் ரூ.404 செலுத்த வேண்டும்.

* 100 ஜிபி திட்டம் சலுகைகள் விவரம் என்ன?
கோடைகால சலுகைகளின் கீழ் இந்த திட்டத்திற்கும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.999 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு கூடுதலாக 100 ஜிபி டேட்டா பெறலாம்.

இதன் மூலம் ஒருவர் ரூ.999 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் 100 ஜிபியுடன் கூடுதலாக 60 ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கும் 90 ஜிபி டேட்டா குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு கிடைக்கும்.

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் மூலம் ரூ.33½ கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்கு கிடைத்தது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மாதம் 6–ந் தேதி தமிழ்நாடுமுழுவதும் ஏராளமான பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும்பணி தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைசமர்ப்பிக்க கடந்த மாதம் 23–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
பிளஸ்–2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 37ஆயிரத்து 293 பேரும், பி.எட் படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 2ஆயிரத்து 964 பேரும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைசமர்ப்பித்தனர். மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257பேர்இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்குஆசிரியர் தகுதி தேர்வு 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

ரூ.33½ கோடி வருமானம்

தற்போது மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.பரிசீலனைக்கு பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிச்சீட்டுதயாரித்து இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் எத்தனைதேர்வு மையங்களை அமைப்பது என்றும் தற்போது ஆலோசனைநடந்து வருகிறது.ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படிவத்துடன் தேர்வுகட்டணமாக ரூ.500–ஐ வரைவோலையாக அனுப்பஅறிவுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்ரூ.250–ஐ வரைவோலையாக அனுப்ப சலுகை வழங்கப்பட்டது.மொத்த விண்ணப்பதாரர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆவர். இவர்கள்மூலம் ரூ.3½ கோடி வருமானம் கிடைத்தது.

இவர்களை தவிர 6லட்சத்து 257 பேரின் விண்ணப்பம் மூலம் ரூ.30 கோடியே 1லட்சத்து 28 ஆயிரத்து 500 வருமானமாக கிடைத்தது. மொத்தத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.33½ கோடி வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் எல்டிசி, உதவி கணக்காளர் வேலை



இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் 2017 - 18-ம் ஆண்டிற்கான எல்டிசி, உதவி கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Ministry of Defence
காலியிடங்கள்: 08
பணியிடம்: ஜபல்பூர் (மத்திய பிரதேசம்)
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Lower Division Clerk (LDC) - 07
பணி: Assistant Accountant - 01
தகுதி: 10, 2 அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900 - 1,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10622_86_1617b.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 205 நிர்வாக அதிகாரி வேலை.

கொல்கத்தாவில் செயல்பட்டு  வரும் நேஷ்னல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-ல் 205 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officers (Generalist)
காலியிடங்கள்: 205
சம்பளம்: மாதம் ரூ.32,795 - 62,315
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும்.
 முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 3.6.2017, 4.6.2017
தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nationalinsuranceindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை.

8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Bailiff - 07
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: Junior Bailiff - 03
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver (Male) - 01
8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றி 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Record Clerk - 03
தகுதி: 10-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Watchman (Male) - 06
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Masalchi - 04
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Sanitary Worker-Cum-Gardener - 01
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Sweeper - 02
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Gardener - 01
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Office Assistant - 43
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant - 43
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ecourts.gov.in/tn/salem என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Principal District Judge, Principal District Court, Salem - 636007.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.04.2017

மத்திய அரசு அலுவலகத்தில் கணக்காளர், சுருக்கெழுத்தர் வேலை.



சென்னையில் செயல்பட்டு வரும் "National Biodiversity Authority" நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Accounts Officer
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: Office/ Computer Assistant
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Steno 'C'
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
விண்ணப்பிக்கும் முறை: www.nbaindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
National Biodiversity Authority, 5th Floor, TICEL Bio Park, CSIR Road, Chennai - 600 113
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nbaindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TNTET - ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் -2017 தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் .

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்  ஏப்ரல் 3-வது வாரத்தில்  வழங்க ஏற்பாடு.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.

 இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பட்ட தாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (தாள்-2) 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் (மொத்தம் 8 லட்சம் பேர்) விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென் னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. தற் போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக அதாவது ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எனவே, தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்பு நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், புதிதாக நடத்தப்பட உள்ள தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்களையும் அரசு கேட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதால் அதற்கேற்ப கணிசமான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படித்துக்கொண்டிருக்கும் போது அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து படிப்பை முடிக்கலாமா?

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு விடுப்பு நாளை ஈடு செய்தல் சார்பான சிவகங்கை மாவட்டத்தில் 08.04.2017 (சனிக்கிழமை) அன்று பள்ளி வேலைநாளாக செயல்படும் -மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிக்கை.


TNTET -2017 Exam Tips for Psychology

டெட் வெற்றி நிச்சயம் - கட்டுரை - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்🏆
                                                 

பாட வாரியான டிப்ஸ் : இன்று - உளவியல்
பகுப்புகள்:


கூற்றுகள்  - அறிஞர்கள் --: 5-8
சோதனைகள் _ அறிஞர்கள்
படிநிலைகள்: 5-6
வகுப்பறை சூழல் சார் உளவியல் : 10-12
விடலை பருவ உளவியல் : 5
உளவியல் பிரிவுகள் : 2
அறிவுரை பகர்தல், தொடர் நிகழ்வு : 3

::::மிக முக்கிய தலைப்புகள் | கூறுகள் ::::

* கற்றல் - வகைகள்
* கற்றல் முறைகள்
* ஊக்குவித்தல் கூறுகள்
* கவனித்தல், கவன சிதைவு
* நினைவு கூர்தல்
* சிந்தனை
* ஆக்கத்திறன்
* நுண்ணறிவு
* நுண்ணறிவு ஈவு
* ஆளுமை
* மன நலம்
* தலைமை பண்பு
* மனநலவியல்
* வளர்ச்சி
* வளர்ச்சி தேவைகள்
* மரபு
* சூழ்நிலை

::::வகுப்பறை சார்ந்து :::::

* மெதுவாக கற்போர் நிலை
* சராசரி மாணவர் நிலை
* மீத்திறன் மிக்க மாணவர்
* இவர்கள் பிரிப்பு முறை
* கையாளுதல்

:::::::: உளவியல் சோதனைகள் ::::::::

* உளவியல் சோதனைகள்
* அறிஞர்கள்
* முடிவுகள்
* சோதனை கருவிகள்
* முடிவின் படி நிலைகள்

:::::::: கோட்பாடுகள் :::::;::

* உள கோட்பாடு
* அறிஞர்கள்
* கருத்துகள்
* எதிர்ப்பும் வரவேற்பும்

:::::தொடர் பாட பகுதி ::::

* இயல்பு நிலை கடத்தல்
* விடலை பருவ மன எழுச்சி
* நெறி பிறழ்வு
* அறிவுரை பகர்தல்
* வழிகாட்டுதல்
√ உளவியல் குறைவான பாட பகுதியுடைய சிக்கலான பாடம்
√ புரிதல் உடன் படித்தல் அவசியம்
√ உளவியல் பாடத்திற்கு என குறிப்பிட்ட பாட புத்தகம் மட்டும் படிக்க கூற இயலாது
√ ஆசிரியர் பயிற்சியில் பயன்படுத்திய பயின்ற புத்தகம் படிக்கவும்
√ கூடுதலாக *மங்கல்* (Eglish) , மீனாட்சி சுந்தரம், சந்தானம், நகராஜன் புத்தகம் ஒன்றை படிக்கவும்
√ குழப்பம் தவிர்த்து நிதானித்து விரைவாக தெளிவாக படிக்கவும்
இலக்கு எளித்தல்ல...
எட்ட நினைத்தால் ...
முயல துவங்கு ...
🐝வாழ்த்துகளுடன் தேன்கூடு.

5/4/17

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம்: மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால் அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின் மோட்டர் வாகன விதியை ரத்து செய்து சென்னை
உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின் குறிப்பிட்ட விதிமுறைகள் தொழில் நடைமுறைக்கு சிரமமாக இருப்பதாக கூறி வாகனப்பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இரண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்தவழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் மத்திய அரசின் மோட்டர் வாகன விதிகளில் இரண்டு முக்கியமான விதிகளை ரத்து செய்து தீர்ப்பு அமைந்துள்ளது.

உரியகாலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்னும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதே போல வானங்களை விற்கும் போது தடையில்லா சான்றிதழ் பெற தாமதமானால் அபராதம் என்னும்  மத்திய அரசின் மோட்டர் வாகன விதியும் இந்த தீர்ப்பின் மூலம் ரத்து செய்யப்படுகிறது.


இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு விரைவில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை கட்டணம் உயர்வு : வாடிக்கையாளர்கள் அதிருப்தி

பாதுகாப்பு பெட்டக வசதி மற்றும் காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை
மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம் என்று பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

காசோலைகளை பொறுத்தவரையில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நிதியாண்டில் 50 காசோலைகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படும். 25 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.75 மற்றும் சேவை வரி பெறப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. 50 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கு சேவை வரி நீங்கலாக ரூ.150 கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட சேவைகளை அளிப்பதற்கு ரூ.20 கட்டணமாக பெறப்படும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்டுள்ளது.


பாரதஸ்டேட் வங்கியின் புதுக்கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் மாதாந்திர சராசரி இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FLASH NEWS : அனைத்து கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர்  அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதிடெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில்தேசிய தென்னிந்தியநதிகள் இணைப்புவிவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர்அய்யாக்கண்ணு தலைமையில்  போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில்முதல்நாள் சுமார்100 விவசாயிகள் வரை பங்கேற்றனர். தற்போது, பிறமாநிலவிவசாயிகளின் ஆதரவும் தமிழக விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம்அமைப்பது, விவசாயிகள்வாங்கிய வங்கிக்கடன்களைத் தள்ளுபடிசெய்தல், நதிகள்இணைப்பு, வறட்சிநிவாரணம் போன்றபல கோரிக்கைகளைமுன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில்ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டை ஓடு, மண்சட்டி, தூக்குக்கயிறுஉள்ளிட்டவற்றை வைத்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்  தங்கள்வாயில் எலிக்கறி, பாம்புக் கறியைவைத்துப் போராட்டம்நடத்தி வருகின்றனர். 22வது நாளாகத்தொடரும் இந்தப்போராட்டத்துக்குக்கிடைத்த பலனாக, விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை உயர்நீதிமன்றமதுரைக் கிளைதள்ளுபடி செய்துள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள்சங்கத்தின் தலைவர்  அய்யாக்கண்ணு தொடர்ந்தவழக்கை விசாரித்தஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை, “சிறு குறுவிவசாயிகள் மட்டுமன்றி அனைத்து விவசாயிகளும் பெற்றகடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்” என்று உத்தரவுபிறப்பித்துள்ளது.

இது குறித்து டெல்லியில்போராட்டம் நடத்திவரும் அய்யாக்கண்ணு  கூறுகையில், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.  

DSE ; BT TO PG PANEL AS ON 01/01/2017 RELEASED

TNTET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு பாரபட்சமற்ற முழு விலக்கு - சட்ட சிக்கல் தீர்வு

TNTET - ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் -2017 தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் . ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு.

ஆசிரியர்தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனைசெய்யும்
பணி ஆசிரியர் தேர்வுவாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விண்ணப்பதாரர்களுக்குஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில்ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில்நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள்கடந்த மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரைதமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனைசெய்யப்பட்டன. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பபடிவங்கள் மார்ச் 23-ம் தேதி வரைபெற்றுக்கொள்ளப்பட்டன.
இடைநிலைஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (தாள்-2) 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் (மொத்தம்8 லட்சம் பேர்) விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும்பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென் னையில் உள்ளஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்குஅனுப்பப்பட்டன. தற் போது, ஆசிரியர்தேர்வு வாரியத்தில் தகுதித் தேர்வு விண்ணப்பங்களைபரிசீலனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இப்பணி முடிவடைந்ததும் தகுதியுள்ளவிண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் ஏப்ரல்3-வது வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்ததேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.


வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்குமுன்பாக அதாவது ஜூன் 1-ம்தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும்என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எனவே, தகுதித் தேர்வுமுடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்புநடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. ஆனால், புதிதாக நடத்தப்படஉள்ள தகுதித் தேர்வு மூலம்இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும்என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்களையும் அரசுகேட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளதகுதித் தேர்வுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதால்அதற்கேற்ப கணிசமான காலியிடங்கள் நிரப்பப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4/4/17

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா? அறிய வேண்டிய தகவல்.

வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5
ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதேசில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தவிதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே இதற்குக் காரணம்.

அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும். வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது 30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.

உதாரணத்துக்கு...
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது. அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.

இந்தஅடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதோடு, மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.

இதுதவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

குறைந்த பண இருப்பு
பெருநகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம். இது குறித்து மேலே விரிவாகவே பார்த்துவிட்டோம்

குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?

எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

மெட்ரோ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஊரக, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.

டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதேபோல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.

இந்தகட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 6 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு

பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை முறைப்படி இணைந்தன. இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.


இந்தவங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட மூன்றாம் பருவத் தேர்வு -தொகுத்தறித் தேர்வு கால அட்டவணை -வகுப்பு - 1 முதல் 8 வரை

No automatic alt text available.

TNTET (Paper 2) - சமூக அறிவியல் பாடத்தில் வெற்றி பெற.... (வழிகாட்டுதல் கட்டுரை Mr. பாபு)

பாடவாரியான வழிகாட்டுதல் தொகுப்பு

பாடம் - சமூக  அறிவியல்

பகுப்புகள்:

வரலாறு       - 25 to 27
குடிமையியல்  - 15 to 17
பொருளியியல் - 15 to 17
புவியியல்      - 5 to 7

🔹 வரலாறு பாட பகுதியை கூடுதலாக வகுப்பு 11 மற்றும் 12 லும் படிக்கவும்.

🔸 தெளிவுற படித்தால் இப்பாடத்தில் 55 மதிப்பெண் மீறிய மதிப்பெண் பெற்று தரும்.

வாழ்த்துகளுடன் தேன்கூடு

கட்டுரை ஆக்கம்: பாபு, பூங்குளம்.

Thanks to 🙏

Mr. பாபு,
பட்டதாரி ஆசிரியர்,
பூங்குளம்,

வேலூர் மாவட்டம்.

SBI - NEW SERVICE CHARGES EFFECT FROM 01.04.2017

ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனை 2019 வரை நீட்டிக்க நடவடிக்கை, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

SSLC EXAM MARCH 2017- TAMIL & ENGLISH OFFICIAL ANSWER KEY

இந்திய அளவில் டாப் 10 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு:The Hindu

இந்திய அளவில், தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் பிரத்யேக மதிப்பீட்டு அளவுகோல் வரையறுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


இவற்றில் முதல் 10 தலைசிறந்த கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவ கல்லூரி ஆகியன இடம்பெற்றுள்ளன.

பட்டியல் பின்வருமாறு:

டாப்10 கல்லூரிகள்:

1. மிராண்டா ஹவுஸ் - புதுடெல்லி

2. லயோலா கல்லூரி- சென்னை, தமிழ்நாடு

3. ஸ்ரீநாம் வத்தகக் கல்லூரி- புதுடெல்லி

4. பிஷப் ஹீபர் கல்லூரி- திருச்சி, தமிழ்நாடு

5. ஆத்மா ராம் சனாதன தர்ம கல்லூரி - புதுடெல்லி

6. புனித சேவியர் கல்லூரி - கொல்கத்தா (மேற்குவங்கம்)

7. லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரி- புதுடெல்லி

8. தயாள் சிங் கல்லூரி- புது டெல்லி

9. தீன தயாள் உபாத்யாய கல்லூரி - புதுடெல்லி

10. மகளிர் கிறிஸ்துவ கல்லூரி - சென்னை, தமிழ்நாடு

டாப்10 பல்கலைக்கழகங்கள்:

1. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் - பெங்களூரு

2. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - புதுடெல்லி

3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

4. ஜவஹர்லால் நேரு சென் டர் ஃபார் அட்வான்ஸ்ட் சைன்டிபிக் ரிசேர்ச்

5. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

6. அண்ணா பல்கலைக்கழகம்

7. ஐதராபாத் பல்கலைக்கழகம்

8. டெல்லி பல்கலைக்கழகம்

9. அமிர்த விஷ்வ வித்யாபீடம்

10. சாவித்ரிபா புலே பல்கலைக்கழகம் - புனே

டாப்10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்

1. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்

2 ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - பெங்களூரு

3. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கொல்கத்தா

4. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - லக்னோ

5. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கோழிக்கோடு

6. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - டெல்லி

7. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - காரக்பூர்

8. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - ரூர்கீ

9. சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் - ஜான்ஷெட்பூர்

10. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - இந்தூர்

டாப்10 பொறியியல் கல்லூரிகள்

1. ஐஐடி மெட்ராஸ்

2. ஐஐடி மும்பை

3. ஐஐடி காரக்பூர்

4. ஐஐடி புதுடெல்லி

5. ஐஐடி கான்பூர்

6. ஐஐடி ரூர்கீ

7. ஐஐடி குவாஹட்டி

8. அண்ணா பல்கலைக்கழகம்

9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

10. ஐஐடி ஐதராபாத்

ஒட்டுமொத்த அளவில் டாப் 10 கல்வி நிறுவனங்கள்:

1. ஐஐஎஸ்சி - பெங்களூரு

2. ஐஐடி - சென்னை

3. ஐஐடி - மும்பை

4. ஐஐடி - காரக்பூர்

5. ஐஐடி - டெல்லி

6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: புதுடெல்லி

7. ஐஐடி - கான்பூர்

8. ஐஐடி - குவாஹட்டி

9. ஐஐடி - ரூர்கீ

10. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவச
மற்றும் கட்டயாக கல்வி உரிமை சட்டத்தில் ஒவ்வொரு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும்.
அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 8–ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கல்வி கட்டணம்

இதற்கான கல்வி கட்டணம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? என்று கேட்டு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அதன்படி 2015–16–ம் ஆண்டுக்கு தமிழக பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி கட்டணம் ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிதியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையும், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடக்க பள்ளிகள் இயக்குனரகமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம் வழங்க உள்ளது. மாவட்டம் வாரியாக பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியை வழங்கும்.

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுபேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள தனியார் (சியோன்) பள்ளியில், 2-ஆம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி ஸ்ருதி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 25 இல் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் அடிபட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதையடுத்து, பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக நீதிபதிகளின் உத்தரவின்பேரில், தமிழக அரசு சிறப்பு விதிமுறைகளை வகுத்தது. அதில், ஒவ்வொரு பேருந்திலும் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதோ, அதற்கு அதிகமாக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றக் கூடாது. பேருந்திலும் முதல் படியின் உயரம் (தரையில் இருந்து) 250 மி.மீ.க்கு குறையாமலும் 300 மி.மீ.க்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓட்டுநர் பகுதியை தனியாக பிரிக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்க பட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று பள்ளிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய சிறப்பு விதிமுறைகளை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தமனு பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ், அரசு பேருந்துகளில் காலை மாலை நேரங்களில் பயணிப்போரில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மாணவர்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த ஒரு நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை ஆனால் தனியார் பள்ளிகள் முறையாக பராமரிப்பு செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதேசமயம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்களை சிறப்பு அதிகாரி முன் தனியார் பள்ளிகள் ஆய்வுக்கு கொண்டு செல்லவேண்டுமென்ற நிபந்தனையை 6 மாதத்துக்கொருமுறை என மாற்றி அமைக்கப்படுகிறது.

ஆனால் தனியார் பள்ளிகள் பேருந்துகள் விதிகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த மற்ற நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை அளிக்கப்போகும் எஸ்பிஐ!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச
வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டுமென்ற புதிய விதி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது, எஸ்பிஐ துணை வங்கிகளுக்கு இந்த விதி, ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியுடன் இணைப்பதற்கான செயல்முறைகளில் ஐந்து துணை வங்கிகள் உள்ளன. எஸ்பிஐ என்னும் பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகள் இணைந்து செயல்படத் துவங்க உள்ளன.

இந்தத் துணை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ விதிக்கும் மினிமம் பேலன்ஸ் தொகை வைப்பு, தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதத்தொகை எனப் புதிய விதிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இந்தஅறிவிப்பின் படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள், மெட்ரோ பகுதியில் 5000 ரூபாய், புறநகர்ப் பகுதிகளில் 3000 ரூபாய், நகர்ப்புறங்களில் 2000 ரூபாய், கிராமப் பகுதிகளில் 1000 ரூபாய் என, குறைந்த வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TPF TO GPF Account Slip Soon will publish

ஆசிரியர் சேமநலநிதி 2014 -2015 வருட கணக்கீட்டுத்தாள்
இந்தவாரத்தில் வெளியாக வாய்ப்பு. மாநிலக் கணக்காயர் அலுவலகத்தில்( AG'S) இருந்து  திருத்தம் செய்யப்பட வேண்டிய
மாநகராட்சி /நகராட்சி ஆசிரியர்கள் கணக்கீட்டுத்தாள் விபரங்கள் சரிசெய்யப்பட்டு NIC இல் (National information centre) விபரங்கள் சனிக்கிழமை (01/04/2017) 
அன்று ஒப்படைக்கப் பட்டதால் உடனடியாக வெளியாக வாய்ப்பு.

தங்களின் சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து 2014 -15 கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.

200 ரூபாய் நோட்டு வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்

3/4/17

பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும்.-தொடக்கக்கல்வி இயக்குநர்

31/03/2017 பிற்பகல் காணொலிக்காட்சி மூலம் தொடக்கக்கல்வி இயக்குநர் தமிழகத்தில் உள்ள எல்லா AEEO களுக்கும் meeting 
நடத்தி சில விபரங்கள் கூறியுள்ளார்.* (கூட்டம்2.00 to 4.30 வரை நடந்தது.)


➡காலையில் AEEO ஏதேனும் ஒரு பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.இல்லையேல் AEEO மேல்
நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

➡பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினார்.

➡புத்தக பூங்கொத்து படிக்கும் நிலையில் இருக்க வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமைக்குள் சரியாக இருக்கவேண்டும்.

➡ஆசிரியர்கள் முழுநேரமும் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருக்கக்கூடாது.

➡காலனி, புத்தக பை,கலர்பென்சில், கிரையான்வரைபடபெட்டி முதலியவை தர நிர்ணயம் செய்த பின் வழங்கவேண்டும்.

➡பாடநூல் கழக செயலர் திரு கார்மேகம் அவர்களும் கலந்துகொண்டு பல விபரங்கள் கூறியுள்ளார்.


➡அடுத்த ஆண்டுக்கான புத்தகம் மே 15 குள் வந்துவிடும் எனவும் உபரிஅதிகம் இருக்கக்கூடாது எனவும் அறிவுறித்தியுள்ளார்.

AIDED SCHOOL TEACHERS SEE BIG THREAT IN TET

G.O.1880-HIGHER SEC. SCHOOL COMPUTER INSTRUCTOR-REG PAY ORDER

2009 ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்டவர்களின் -ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் -இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

31ல் விற்ற 41 ஆயிரம் வாகனங்களை பதிவு செய்வதில் சிக்கல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், மார்ச் 31ல் வாங்கிய, 41 ஆயிரம் வாகனங்களை
பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமும் 6,000
தமிழகத்தின், 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 60 பகுதி நேர அலுவலகங்கள் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை தினங்களை கழித் தால், தினமும், சராசரியாக, 6,000 வாகனங்கள் பதிவாகின்றன.
இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலு வலகங்களில், ஊழியர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. 104 வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் உள்ள நிலையில், 54 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதே போல், 229 கிரேடு 2 ஆய்வாளர் பணிக்கு, 102 பேரும், 178 கிரேடு 2 ஆய்வாளர் பணிக்கு, 88 பேர் மட்டும் பணியில் உள்ளனர்.
பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஆய் வாளர் பணியிடம் காலி யால், புதிய வாகனங்கள் பதிவில் தாமதம் ஏற்படுகிறது. இந் நிலையில், 'பி.எஸ்., - 3' தொழில்நுட்பங்களில் தயாரித்த வாகனங்களை, மார்ச், 31க்கு பின் விற்க கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விலை குறைப்பு
இதனால், 31ம் தேதி, வாகன விற்பனையை அதிகரிக்க, இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கார்களுக்கும், உற்பத்தி நிறுவனங்களும் விலை குறைப்பை அறிவித்தன. அன்று மட்டும், 41 ஆயிரம் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன; அவற்றுக்கு பதிவு கோரி, ஆன்லைனில் பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
ஏப்., 1, 2 விடுமுறை நாட்கள்என்பதால், வாகன பதிவு இல்லை. இன்று, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் நிலையில், 41 ஆயிரம் வாகனங் களை பதிவு செய்ய, ஏராளமானோர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது: மார்ச் 31ல் மட்டும், 41 ஆயிரம் வாகனங்கள் பதிவுக்காக, ஆன்லைனில் விண்ணப்பித்துள் ளன.இதனால், தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில், இன்று, வாகன பதிவு களை கட்ட வாய்ப்புள்ளது.

அதேநேரம், வாகன ஆய்வாளர் 1, வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அனைத்து வாகனங் களையும் ஒரே நாளில் பதிவு செய்ய முடியாது. மலிவு விலை வாகனம் வாங்கியவர்கள், பதிவுக்காக, குறைந்தபட்சம், நான்கு நாட்கள் வரை காத்திருக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNTET -ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற வேண்டியகட்டாயத்தில் 300 ஆசிரியர்கள்.

ஒரேநேரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை பெற்ற 3,200 பேரில், 300 பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 2011 டிசம்பரில் 3,200 பேருக்கு, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமனஆணை வழங்கப்பட்டது. இதற்காக 2011 மே மாதம் 2,900 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், அதே ஆண்டு நவம்பரில் 300 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. மே மாதம் நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பில் பங்கேற்ற 2,900 பேருக்கு, பணி வரன் முறை மற்றும் தகுதி காண் பருவம் முடிக்கப்பட்டு, நிரந்தரப் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.ஆனால், நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 300 பேருக்கு இதுவரை பணி வரன் முறையும், தகுதி காண் பருவமும் வழங்கப்பட வில்லை. 2010-க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டதால் 3,200-இல்,300 பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பணி நியமன ஆணை பெற்ற போதிலும், அதில் 2,900 பேருக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள300 பேர் பணி வரன் முறை, தகுதிக் காண் பருவம் பெற, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த 300 பேரும், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின், வரும் ஏப்ரல் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த 300 பேரும், முன்னுரிமை அடிப்படையில் (அதாவது மாற்றுத்திறனாளிகள், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள், முன்னாள் ராணுவத்தினர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், அருந்ததியினர்) பணி வாய்ப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகைகள் இல்லை: தகுதிக் காண் பருவம் பெறாததால், தற்செயல் விடுப்பைத் தவிர, ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, பொங்கல் போனஸ், மருத்துவ விடுப்பு போன்ற அரசின் பயன்களை பெற முடியாத நிலையில் 300 ஆசிரியர்களும் உள்ளனர். தற்போது 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதாலும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய நிலை இருப்பதாலும், தகுதித் தேர்வுக்குதயாராவதில் சிரமம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.


இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது: ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு என்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனால், சமமான கல்வித் தகுதியுடன் ஒரே நேரத்தில் பணி வாய்ப்பு பெற்ற போதிலும், முன்னுரிமை அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ஏன்? கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சமம் என்னும் போது, அதை கற்பிக்கும் ஆசிரியர்களிடையே இதுபோன்ற பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா? 2010-இல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் மட்டும் சமார் 18,000 ஆசிரியர்கள் சிறுபான்மையினர் பள்ளிகள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர் என்றார்.

ஆசிரியர் பணி - குற்றமும் தண்டனையும் குற்றமும் தண்டனையும்!!

ஆசிரியர் பணிதான் இருப்பதிலேயே கொஞ்சம் சிரமமான பணி
என்பது எமது கருத்து.*

*வளரும் தலைமுறையை வார்த்தெடுக்கும் பொறுப்பு என்பது சாதாரணமல்ல..! அதற்குப் பொறுமையும் நிதானமும் அவசியம்.*

*ஓர்ஆசிரியர் மாட்டிக்கொள்வதைப் போன்று வேறு எவரும்
மாட்டமாட்டார்கள். "கற்ற கல்வியைவைத்து என்ன செய்தாய்?” என்ற கேள்விக்கு பதில் கூறாமல் ஓர் அடிகூட நகரமுடியாது என்பதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது.*

*ஃபிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் குற்றமும் தண்டனையும் எனும் பகுதியில் (மலையாளம்) மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்து கூறுகின்றார்:*

*அது ஒரு தேர்வு நேரம். வகுப்பில் மாதாந்திரத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவன் காப்பி அடித்துக்கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் டி.பி. தோமஸ் மாஸ்டர் அதைக் கவனிக்கவில்லை.*

*ஆயினும் திடீரென அங்கே வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனடியாக அவனுக்குத் தண்டனையும் அறிவித்தார். தண்டனை என்ன தெரியுமா..? பள்ளிக்கூட அசெம்ப்லி ஒன்றுகூட்டப்பட்டு அனைவர் முன்னிலையிலும் குச்சியால் கையில் ஆறு அடி அடிப்பதுதான் அன்றைய பெரும் தண்டனை. அசெம்ப்லி கூட்டப்பட்டது.*

*ஆனால் இந்த முடிவை தோமஸ் மாஸ்டர் பலமாக எதிர்த்தார். "அவன் தவறு செய்தமைக்குக் காரணம் நான்தான். ஆகவே எனக்கே அந்தத் தண்டனையைத் தாருங்கள். எனது பணியையும் கற்பித்தலையும் நான் சரியாகச் செய்திருந்தால் இந்த மாணவன் காப்பி அடித்திருக்க மாட்டான். ஆகவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை எனக்கே தாருங்கள்” என்று அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் கூறவும் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் திகைத்தது.*

*தலைமை ஆசிரியரோ தோமஸ் மாஸ்டரை கண்ணியத்துடன் பார்த்தலும் மாணவனுக்குத் தண்டனைக் கொடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தோமஸ் மாஸ்டரும் விடவில்லை. இறுதியில் ஆசிரியரின் நிர்ப்பந்தத்திற்கு தலைமை ஆசிரியர் அரைமனதுடன் சம்மதித்தார்.*

*அந்த மாணவனை சுட்டிக்காட்டியவாறு தலைமை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடம் கூறினார்: "இவன் செய்த தவறுக்காக இப்போது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்”.*

*உடனே தாமஸ் மாஸ்டர் கூறினார்: "இல்லை.. இல்லை.. இவன் செய்த தவறுக்காக அல்ல... நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எனது பணியை நான் சரியாக செய்திருந்தால் இவன் காப்பியடித்திருக்க மாட்டானே” என்று கூறியவாறு அனைத்து மாணவர் முன்னிலையிலும் கை நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்றார்.*

*தலைமை ஆசிரியர் அவருடைய கையில் ஓர் அடி கொடுத்தார். பள்ளிக்கூடமே திகைத்தது மாணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுமொத்த மாணவர்களும் அழுதனர். உடனே அந்த மாணவன் அழுதவண்ணம் தலைமை ஆசிரியர் முன்னால் முட்டுக்குத்தி நின்றவாறு, "இனியும் ஆசிரியரை அடிக்க வேண்டாம்..” என்று கெஞ்சினான்.*

*பின்னர் தோமஸ் மாஸ்டரின் காலைக் கட்டிக்கொண்டு கதறினான்: "நான் செய்தது தவறுதான். நான் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை பெறுவதைக் காண எனக்கு சக்தி இல்லை. தோற்றாலும் சரியே இனி ஒருபோதும் நான் காப்பி அடிக்க மாட்டேன் மாஸ்டர்..!”*


*இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்றத்தைக் குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் ஓர் புதிய பாடத்தை அன்றுதான் பள்ளிக்கூடமே கற்றுக்கொண்டது. அறிவும் அனுபவமும் ஒருங்கே பெற்ற ஒரு நிகழ்வு இது.

'அனைத்து பாடப்பிரிவினரும் சி.ஏ., படிப்பில் சேரலாம்'

பிளஸ் 2வில், எந்த பிரிவு மாணவர்களும், சி.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளில் சேரலாம்' என, கல்வியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

'தினமலர்' மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கும், வழிகாட்டி நிகழ்ச்சியில், இரண்டாம் நாளான நேற்று, இன்ஜினியரிங், ஆட்டோமேஷன், ஐ.டி., துறை மற்றும் சி.ஏ., என்ற ஆடிட்டர் படிப்பு குறித்தும், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் முறை குறித்தும், கல்வியாளர்கள் ஆலோசனை அளித்தனர்.


ஆடிட்டர் சரவண பிரசாத்: ஆடிட்டிங் துறையில் வேலைவாய்ப்புகளை பெற, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் ஒன்றை, படிக்க வேண்டும். இந்த மூன்று படிப்புகளும், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளை, தொலைநிலையில் மட்டுமே படிக்க முடியும். ஆடிட்டிங் துறைக்கு கடினமான பயிற்சி அவசியம். பயிற்சி எடுத்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். முதலில் தகுதி தேர்வும், பின், இடைநிலை தேர்வும், பின், இறுதி நிலை தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறுவோர், ஓர் ஆண்டு நிறுவன பயிற்சியை மேற்கொள்ள, சி.ஏ., அமைப்பு ஏற்பாடு செய்கிறது. பயிற்சிக்கு பின், கேம்பஸ் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். முதல் வேலைவாய்ப்பிலேயே, மாதம், 50 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம். அதேபோல, பி.காம்., ஹானர்ஸ் உடன், ஒரே ஆண்டில், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்பு உள்ளது.


கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி: எந்த கோர்ஸ் படித்தாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதை படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். படிக்கும் போதே திறனை வளர்த்து கொள்ள வேண்டும். எதில், வாய்ப்பு, வளர்ச்சி என்பதை தெரிந்து, படிப்புகளை தேர்வு செய்யுங்கள். இன்ஜினியரிங் துறையில் மட்டுமே, ஆண்டுக்கு, மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கின்றன. படிக்கும் போதும், வேலையில் சேர்ந்த பிறகும் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். சமீபத்தில், தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட, 458 பேரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலையை விட்டு வெளியேற்றி உள்ளன. படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போல, கல்லுாரியை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கல்வியாளர்கள் பேசினர்.

மின்னணு குடும்ப அட்டையைப் பயன்படுத்துவது எப்படி?

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் நவீன மின்னணு குடும்ப அட்டைகளைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என
அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


தமிழகம் முழுவதும் 1.89 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்தாள் இணைப்புடன் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில், போலி குடும்ப அட்டைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து போலி அட்டைகளை ஒழிக்கவும் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் கட்டுப்படுத்தவும் நவீன கையடக்க அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை (ஏப்.1) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பயன்படுத்துவது எப்படி: இந்த அட்டையை கூட்டுறவு நியாய விலைக்கடையில் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தஅட்டையை பெற்றதும் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய சதுர பெட்டி வடிவிலான நவீன இயந்திரம் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
அந்தஇயந்திரத்துடன் பில் போடுவதற்கும் தனியாக ஒரு சிறிய இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வாங்க கடைக்கு சென்றதும் மின்னணு குடும்ப அட்டையை சிறிய சதுர பெட்டி வடிவ இயந்திரத்தின் மேலே உள்ள வெள்ளை நிற விளக்கு வெளிச்சத்தில் வைத்தால் போதுமானது. உடனே அந்த இயந்திரம் செயல்படத் தொடங்கும்.
மற்றொரு இயந்திரம் மூலம் அந்த அட்டைக்கான பொருள்கள் ஒதுக்கீடு அளவுக்கு விற்பனையாளர்கள் பில் போடுவார். அதைத் தொடர்ந்து நாம் வாங்கும் பொருள்களின் விவரம் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டையில் பதிவாகும்.
இதுதொடர்பான விவரங்கள் செல்லிடப்பேசியிலும் குறுஞ்செய்தியாக அறிந்து கொள்ளலாம்.

இதன்மூலம் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்பின்றி தகுதியானவர்களுக்கு பொருள்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2/4/17

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு
வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.
குறைந்த பண இருப்பு
பெருநகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.
குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
மாநகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
நகர, சிறு நகர, கிராமபுறப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.
டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதேபோல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.
எஸ்பிஐயுடன் இணையும் 5 வங்கிகள்

இந்தகட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

TN Lab Assistant Post - Weightage Calculation Method (press News)




மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி - தமிழக அரசு ஊழியர்கள் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

நாகப்பட்டினம்: தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் 10,61,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாகும். இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வேலைநிறுத்தத் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சற்றே சமாதானமடைந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். எனினும் தங்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்தநிலையில் தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார். ஊதியக்குழு அமைப்பது, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை - தமிழக முதல்வர் வழங்கினார்