தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு 2017-18ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.755லிருந்து ரூ.900ஆகவும், கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.875 லிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இந்தஉயர்த்தப்பட்ட உணவுக் கட்டணம், 2017-18ம் கல்வியாண்டு ஜூன் 2017 முதல் மாணவ, மாணவியருக்கு வழங்கிட முதல்வர் அனுமதி வழங்கியதோடு, அதற்கான கூடுதல் செலவினத் தொகையான 12 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 750 ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 1338 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 86,807 மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள்.