யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/6/18

உண்ணாவிரத போராட்டத்திற்கு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்போம் ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவிப்பு :

ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் (மே) 8-ந் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.


இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் கூறியதாவது.

‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். 11-ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார் கள்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் பணி நேரம் முடிந்த பிறகு மாலை நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட ‘ஜாக்டோ- ஜியோ’ பொறுப்பாளர்கள் சென்னையில் உண்ணாவிரத பந்தல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம்.

கடந்த 4-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்திற்காக மாவட்ட அளவில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நீட் தேர்ச்சி விவரம் :

தமிழகத்தில் ஜனவரி முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது? இதோ பட்டியல் :

தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அதில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடும் மாசுபாடு ஏற்படுவதால், தமிழகத்தில் 2019ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஷ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் மற்றும் தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டின் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ன் கீழ் தடை செய்ய அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் இந்த பொருட்களை தடை செய்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்தபழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்..

TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று
வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...!

சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.
பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.

கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்.
சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும். 

நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1ம் தேதி முதல் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும், இந்நிலையில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்பே (மே 29) தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வந்தது. 
இதனையடுத்து  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென்மாவட்டங்களில் நாளை முதல் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. கர்நாடக கடலோரப் பகுதிகளில் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாளை முதல் 10 நாட்களுக்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களை பொருத்தவரை வெப்பச்சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை மழைக்கு இப்போது வாய்ப்பு குறைவு என்றும் வெப்பநிலை இயல்பு வெப்பநிலைக்கு மாதிரி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல் 410முடிய)

1.6.2017 ல் கலந்தாய்வுமுலம் பணயில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த ஆண்டு நடக்கும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்புக்கள் !

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்புக்கள் வரலாம்.ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை தயார் செய்து  CEO அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.பலமாவட்டங்களில் விண்ணப்பங்கள் பெறபட்டுள்ளது.
இவண்
ந.கமலக்கண்ணன்
மாவட்டசெயலாளர்
TNPGTA
KANCHI

6/6/18

இன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, இம்மாதம், 2ம் தேதியுடன்விண்ணப்ப பதிவு 
முடிந்தது. இதில், 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2017ஐ விட, இந்தாண்டு, 19 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று காலை, 9:00 மணிக்கு, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒரே, 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

நீட்' தேர்வில் சென்னை மாணவிக்கு, 12ம் இடம்; கடந்த ஆண்டை விட தமிழகம் அதிக தேர்ச்சி

நீட்' தேர்வில், தேசிய அளவில், பீஹார் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மாணவர்களும், அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 12ம் இடம் பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்று, 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு, அதிகபட்சமாக, 691 மதிப்பெண் எடுத்து, பீஹார் மாணவி, கல்பனா குமாரி, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த, ரோஹன் புரோஹித், டில்லியை சேர்ந்த, ஹிமாஷு ஷர்மா ஆகியோர் இரண்டாம் இடமும், டில்லியை சேர்ந்த, ஆரோஷ் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த, பிரின்ஸ் சவுத்ரி ஆகியோர், 686 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
கீர்த்தனா சாதனை :

தமிழக மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளார். இவர், சென்னை கே.கே.நகரில் உள்ள,பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவி.

'சி.பி.எஸ்.இ., பாடத்தில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்றதும், இரண்டாண்டுகளுக்கு மேல், தொடர் பயிற்சி எடுத்ததும், வெற்றிக்கு காரணம்' என கீர்த்தனா கூறினார்.

தமிழக அரசு பள்ளிகளில், மூன்று மாதம் சிறப்பு பயிற்சி பெற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழக பாட திட்டத்தில், சென்னை கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளி மாணவர் சரண், எந்த பயிற்சியும் இல்லாமல், நீட் தேர்வில், 416 மதிப்பெண் எடுத்துள்ளார்.

மாநில அளவிலான தேர்ச்சியை பொறுத்தவரை, 74 சதவீதத்துடன், ராஜஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, 74; ஹரியானா, 73 சதவீதம் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. ஆந்திரா மாநிலம், 73 சதவீதம் பெற்று, நான்காம் இடம் பெற்றுள்ளது.

மாநிலங்கள் அளவில், அதிக எண்ணிக்கையில், 1.77 லட்சம் மாணவர்கள், நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா மாநிலம், 40 சதவீதத்துடன், 34ம் இடம் பெற்றுள்ளது. தமிழகம், 33ம் இடம் பெற்றுள்ளது. 

கர்நாடகா, 64 சதவீதத்துடன், ஒன்பதாம் இடமும்; தெலுங்கானா, 69 சதவீதம் பெற்று, ஆறாம் இடமும், கேரளா, 67 சதவீதத்துடன் ஏழாம் இடமும்; புதுச்சேரி, 40 சதவீதம் பெற்று, 32ம் இடமும் பெற்றுள்ளன.

மற்ற மாநிலங்களில், பல ஆண்டுகளாக, மருத்துவ நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எழுதி வந்தனர். தமிழக மாணவர்கள், இந்த ஆண்டு தான் முழுமையாக நுழைவு தேர்வு எழுத பதிவு செய்தனர். 

முதல் ஆண்டில், பெரிய அளவில் பயிற்சி எடுக்காமல், 40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, இந்த ஆண்டு முதன்முதலாக, நீட் தேர்வில் பங்கேற்ற, புதுச்சேரி மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்களும், 40 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் நுழைவு தேர்வுக்கு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவ நுழைவு தேர்வுக்கான, தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். 

தமிழகத்தில், 2017ல், 32 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதை விட, 13 ஆயிரம் அதிகமாக, 45 ஆயிரம் பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SCHOOL EDUCATION DEPATMENT-TAMILNADU-CENTRALLY SPONSORED SCHEME -REGISTRATION FORM 2018-19 FOR NMMS EXAM PASSED STUDENTS

அதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன்! இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்!

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு 
இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இதேபோல, 1000 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வணிகவியல் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் சிஏ தொடர்பான வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தவில்லை என்றும், இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். a

FLASH NEWS:DOWNLOAD-GPF ACCOUNT STATEMENTS FOR THE YEAR 2017-2018 RELEASED

5/6/18

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்வான சுமார் 45"ஆயிரம் மாணவர்களும் மருத்துவராகி விடுவார்களா..



என்றால்! முடியவே முடியாதென்பதே உண்மை!

வழக்கம்போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் (40%) தேர்வான தமிழகம் மட்டுமல்ல..
இந்தியா முழுவதும் தேர்வான 
யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்

வழக்கம்போல் விற்பனை சூடுபிடித்து ஒருகோடி ரூபாய்வரை மீண்டும் விற்க்கப்படும் டாக்டர் சீட்..
சுமார் 4000"முதல் 5000வரை மட்டுமே இங்கு காலியிடம் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏன்?
45"ஆயிரம்பேரை தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிக்கவேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்தால்
மருத்துவசீட் பலகோடிக்கு விற்கப்போவது நான் சொன்னது சரியாகப்படும்

இங்குமட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒருலட்சத்தை மட்டுமே எட்டிய காலியிடங்களுக்கு
பல லட்சம்பேரை பாஸ் செய்ய வைத்தது ஏன் என்றும் சிந்தித்தால் 
எளிதாகப்புரியும்

OBC BC FC 
110/760 
SC ST
90/760
இவ்வளவு குறைவான மதிப்பென் எடுத்தவர்
தேர்தவர் என்று முடிவுகளை அறிவிக்க
 காரணம் என்ன?
இனி யாராவது
கோடிகளை கொள்ளையடித்த
தனியார் கல்லூரிகளுக்கு மோடி ஆப்பதடித்தார் என்றால்...

இந்த விளக்கத்தை சொல்லி
திருப்ப ஆப்படியுங்கள்..

இத்தேர்வு முடிவின் மூலம் தெரியவந்தது என்னவென்றால்
பிராந்திய மொழிகளில் தேர்வெழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம்   
இந்தியா முழுவதும் 1.86%/ மட்டுமே

குறிப்பாக தமிழ்வழி எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.86% மட்டுமே
இவர்களும் கட்ஆப்பில் மற்றவர்களோடு ஓப்பிடும்போது 
ஒரு அரசுப்பள்ளி தமிழ்வழி மாணவனுக்கு கூட இடம் கிடைக்காது என்பது எதார்த்த களநிலவரம்

இதைத்தான் சொன்னோம்
கிராமப்புர மாணவர்கள் இனி மருத்துவராக முடியாது என்றும்
கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவரும் கிடைக்கமாட்டார்கள் என்று!

DSE PROCEEDINGS-NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை கோருதல் சார்பான இயக்குநர் அறிவுரைகள்.


1, 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது: வருகிறது சட்ட மசோதா

பள்ளிகளில் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதா கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
 பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைக்கவும், 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே 30-ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், ஜாவடேகர் இவ்வாறு கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன். அந்த உத்தரவை ஆய்வு செய்து வருகிறோம்; தேவையான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்வோம். 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவர உள்ளோம்.
 குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் 2009-க்கு இணங்கியதாக இருக்கும் இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தடையின்றி நிறைவேறும் என்று நம்புகிறோம். குழந்தைகள் குதூகலத்துடன் கல்வி பயில வேண்டும் என்பதே நமது விருப்பம். கல்வி கற்பதில் அவர்களுக்கு எந்த நெருக்கடியும் அளிக்கப்படக் கூடாது.
 உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி, குழந்தைகளுக்கான நெருக்கடியை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். ஒரு பள்ளிக் குழந்தையின் புத்தகச் சுமையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடந்த மாதம் 30-ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ஜிப்மர் MBBS நுழைவுத் தேர்வு: 1.54 லட்சம் பேர் எழுதினர்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுவை ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் 1,54,491 பேர் தேர்வு எழுதினர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள், அதன் காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்ப அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 3-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 751 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை, மதியம் என இரு பிரிவுகளாகத் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற முதல் பிரிவு தேர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களில் 81,886 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற 2-ஆவது பிரிவு தேர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களில் 72,605 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இரு பிரிவுகளாக நடைபெற்ற தேர்வில் மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் கலந்து கொண்டனர். இது 78.12 சதவீதமாகும்.
புதுச்சேரியில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு: புதுச்சேரியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி, ஆல்பா பொறியியல் கல்லூரி, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி, கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி உள்பட 7 மையங்களில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
முதல் பிரிவு தேர்வில் 901 பேரும், 2-ஆவது பிரிவு தேர்வில் 895 பேரும் என மொத்தம் 1,796 பேர் கலந்து கொண்டனர். இது 90.02 சதவீதமாகும்.
தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில், ஆதார் அட்டை மூலம் விவரங்கள் சரிபார்ப்பு, பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தரைதளத்திலேயே தேர்வு எழுத வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வு முடிவுகள் வருகிற 20-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெறும். வகுப்புகள் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரம் அறிய www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.in என்ற இணையதளத்தை மாணவ, மாணவிகள் பார்வையிடலாம்.ர்

வாட்ஸ் ஆப், பேஸ்புக் பயன்படுத்தினால் வரி:

கம்பாலா : உகாண்டா நாட்டில் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் படி இந்த சமூகவலைதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றிற்கு 200 சில்லிங் (ரூ. 3.54) வரிகட்ட வேண்டும்.

சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான தகவல், வதந்திகள் பரப்புவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

6- தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஜூன் -15 க்குள் வெளியாகும் என டி.என்.பிஎஸ்சி தகவல் !!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5mbfkImWFa-kkiuWUe_i9cbDslYqp1ByNvJpmhvvyflIbAYu7qzGR3s4Oq_jYza0CAoQnTQkvZzU_iQzmGTAFWGLH2V2DQEGlOQHkW968tDrLHVI_eZJHZur1aAJoAvHhKci85pi0WzU/s1600/IMG-20180603-WA0052.jpg

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது.அரசுத்துறையில், 2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள, ஐந்து லட்சம் பேருக்கு, மாத ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவை இல்லை. 

பணிக்காலம் முடிந்ததும், மொத்த, 'செட்டில்மென்டாக' பணப்பலன் வழங்கப்படுகிறது.இதன் காரணமாகவே, இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி, போராட்டங்கள் தொடர்கின்றன. 
இது குறித்து, தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெற்ற ஆசிரியர், பிரெட்ரிக் கூறுகையில், ''2003க்கு பின் பணியில் சேர்ந்து, மரணம், ஓய்வு, பணித்துறப்பு பிரிவுகளில், ஓய்வூதிய பலன்கள் கோரி, 8,323 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 6,478 பேருக்கு, 258.91 கோடி ரூபாய் ஓய்வூதிய பணப்பலன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஐ., மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன. 
''மேலும், கருவூலத் துறையில், துறைவாரியான தகவல்கள் இல்லை என்றும், மாதந்திர ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆணைகள் பெறப்படவில்லை என்றும், தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,'' என்றா

கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல்

பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களில் அலுவலர்கள் மட்டுமே அடிக்கடி மாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு கீழே பணிபுரியும் சிலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். 
அவர்கள் ஆசிரியர்கள் இடமாறுதல், பணப்பலன் வழங்குதல், நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், பள்ளி துணை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இருக்கைப் பணி கண்காணிப்பாளர், உதவியாளர், இளைநிலை உதவியாளர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்கான பணியை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருவதால், பணியாளர்கள் கலக்கமடைந்தனர்.

ஜூன் 11ல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங் :

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங், வரும், 11ம் தேதி துவங்குகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கவுன்சிலிங், மே மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு, 15 நாட்கள் தாமதமாக, வரும், 11ல், துவங்க உள்ளது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன், 11லும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன், 12ம் தேதியும், கவுன்சிலிங் துவங்கும் என, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்த கவுன்சிலிங், ஜூன், 21 வரை நடத்தப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள், அரசு பள்ளிகளிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்கிற்கு முன்னும், பின்னும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ள, கல்வித்துறை இயக்குனர்களுக்கு முழு அதிகாரம் அளித்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணையில், வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

MBBS படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், நீட் தேர்வு முடிவுக்கு பின், வினியோகிக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,050 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 456 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. மீதமுள்ள, 2,594 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு முடிவு, நாளை வெளியாக உள்ளது.இதனால், நடப்பாண்டு, மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என்ற, எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் குறிப்பேடு, இதுவரை வழங்கப்படவில்லை; உடனே வழங்க, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓரிரு நாட்களில்,தகவல் குறிப்பேடு சமர்ப்பிக்கப்பட்டு, அரசு ஒப்புதல் அளித்தபின், ஒரு வாரத்தில், விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என்றனர்.

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள்

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்காக அனைத்து பாடங்களும்.
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி FA(a) and FA(b) செயல்பாடுகள் 
இவை அனைத்தும் ஒரே கிளிக்.


...CLICK HERE TO - DOWNLOAD

Rule 9 cannot be INVOKED to promoted PG's*. பட்டதாரி ஆசிரியர் மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வருவதற்கு தகுதி உண்டு .பழைய நிலையில் தொடர HIGH COURT ORDER RELEASED.


4/6/18

ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா?



தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?

நல்ல வேலைக்கு போவா?

ஆங்கிலம் சரளமாக பேசவா?

குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??

ஏன்?
எதற்கு?
என்று சிந்தித்ததுண்டா??

Pre kg 25000 ல் துவங்குகிறது 
Lkg 40000
Ukg 50000
1st.60000
2ND 70000
3D. 80000
4TH 90000
5TH 100000
6TO8 1.20000
9TO10. 150000
11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்
9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.

சரி!
இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?

உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்

அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?

 ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து??

தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வரமுடியுமா?
சரி!
இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?

CBSE கல்லூரியிலா??
அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??

அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான் இல்லையா?

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,
மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?

இல்லை!
இல்லவே இல்லை!

இப்போது உங்கள் பிள்ளைகளோடு,அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?

பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் பிடிக்கவில்லையா?

இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?

 உங்கள் பிள்ளை சாதனையாளனா?

 இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?

உங்களுக்கு தெரியுமா?

 TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று?

TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?

 இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?

ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?

உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா? CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?

அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ??

இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?

அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??

வாருங்கள் குரல் கொடுப்போம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள்(உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் வரை) அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.

அப்படி சட்டம் இயற்றுவார்களா?

இயற்றினால் என்ன நடக்கும்?

அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடனும், கலெக்டர் மகனுடனும் நம்பிள்ளைகளும் படிப்பார்கள்.

கட்டட வசதிகள் அதிகமாகும்.

 சத்துணவு சத்தான உணவாகும்.

 நவீன  முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.

நம் செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும்.

சிந்திப்போம்!
மற்றவரின் சிந்தனையைத்தூண்டுவோம்! 

என்றும் அன்புடன்,

அரசு பள்ளி நலன் விரும்பி

உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு??

கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்

புதிய பாடப்புத்தகங்கள் குறித்து திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள்
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..

தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களில் வித்தியாசமாகக் காட்சி தருகிறது முகப்பு வாசகம். புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, “நம் மாணவர்களுக்காகப் பார்த்துப் பார்த்து இந்த புத்தகங்களைச் செதுக்கியிருக்கிறோம். இன்னும் இரண்டு வருடங்களில் பாருங்கள்... நம் மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வுகளை தங்கள் வசமாக்க ஆரம்பிப்பார்கள்” எனப் பெருமிதத்துடன் ஒலிக்கிறது உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் குரல்.
“எந்த விதத்தில் தனித்தன்மையானவை இந்தப் புத்தகங்கள்?”
“அந்தந்தத் துறைகளில் உச்சத்தில் இருக்கும் சிந்தனையாளர்கள்தான் பாடத்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ, என்.சி.இ.ஆர்.டி அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனையைப் பெற்றோம். இந்தக் கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கிறோம்.
ஒரு நுழைவுத்தேர்வை எழுதுவதில் தொடங்கி, நேர்காணல், என்ன படிக்கலாம், எதைப் படிக்கலாம் என்று நம் மாணவர்களுக்கு இருக்கும் தலைவலிகள் பற்றி நிறையவே யோசித்தோம். வெறும் எழுத்தால் நிரப்பப்பட்ட புத்தகங்களாக இருக்கக் கூடாது என முடிவெடுத்ததால் தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருக்கிறோம். புத்தகங்கள் முழுக்க QR CODE இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ஸ்கேன் செய்தால் அனிமேட் செய்த வீடியோக்களுக்குச் செல்லும். ஆசிரியர்கள் நடத்துவதில் சந்தேகங்கள் இருந்தால் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை ஸ்கேன் செய்தால் விர்ச்சுவல் ஆசிரியர் இணையம் மூலம் பாடம் எடுப்பார். பாடங்கள் தொடர்பாக 5 நிமிட வீடியோக்களும் தயார் செய்யப் பட்டிருக்கின்றன.
ஐ.சி.டி கார்னர் என்று ஒரு பகுதி அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நம் இந்தியப் பாடப்புத்தகங்களிலேயே இது புதிய வடிவம். பாடம் தொடர்புடைய இணையப் பயன் பாடுகளைக் கொடுத்திருப்போம். தொலைத்தொடர்பு அம்சங்கள் அத்தனையும் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும். ஆப் வடிவங்கள், விக்கிபீடியா பக்கங்கள், வெப்சைட்டுகள் எனப் பல்வேறு இணையத் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கூகுள் பாடி பிரவுசர் மூலம் மனித உடலியக்கத்தைப் பார்க்கலாம், தமிழ் விர்ச்சுவல் அகாடமியின் சொல் விளையாட்டுகள் இருக்கும், வரலாறு மற்றும் புவியியலுடன் கூகுள் எர்த் இணைக்கப்பட்டிருக்கும். ‘விர்ச்சுவல் டூர் ஆஃப் மியூசியம்ஸ்’ லிங்க் கொடுத்திருக்கிறோம், கணிதத்தில் ஜியோஜீப்ரா 360 டிகிரி படங்களுக்கான லிங்க் என மாணவர்களை அந்தத் தளத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் பாடப் புத்தகங்களை வடிவமைத்திருக்கிறோம்.
சின்னக் குழந்தைகள் ஆர்வமாகப் படிப்பதற்காக இசையமைப்பாளர்கள் மூலம் சில பாடல்களை இசையமைத்தி ருக்கிறோம். அனிமேஷன் வீடியோக்களையும் இணைத்தி ருக்கிறோம். ஸ்மார்ட்போனையும், டேப்லெட்களையும் ஏந்தியிருக்கும் மாணவர்களை இந்தப் புத்தகங்கள் நிச்சயம் கவரும்.
சோழர் காலத்துக் குமிழித் தூம்பு, கல்லணை கட்டப்பட்ட விதம், தஞ்சைப் பெரிய கோயில் வடிவமைப்பு என, படங்களாகவே விவரித்திருக்கிறோம். நம் ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகளின் விவரிப்புகளைக்கூடச் சேர்த்திருக்கிறோம்.
அழ.வள்ளியப்பா, ஈரோடு தமிழன்பன், பிரமிள், ஆத்மாநாம் கவிதைகள், நா.முத்துக் குமாரின் ‘மகனுக்கு எழுதிய கடிதம்’, பெரியார், ஜீவா தொடர்பான கட்டுரைகள், தாகூர் கடிதங்கள், நீலகேசி, இதழாளர் பாரதி, தாவோ சிந்தனைகள், யசோதர காவியம், கந்தர்வனின் ‘தண்ணீர்’, சுஜாதாவின் ‘தலைமைச் செயலகம்’, ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’, புதுமைப் பித்தன், சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், தி.ஜா, பிரபஞ்சன். பிச்சமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், அப்துல் ரகுமான், இன்குலாப், மீரா, வைரமுத்து, அ.முத்துலிங்கம், ரசூல் என பல்வேறு ஆளுமைகளின் எழுத்துகளையும், எண்ணங்களையும் நம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை, இசையமைப் பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்பான இசைக் கட்டுரைகளும் உண்டு. ஓவியர்கள் சில்பி, ஆதிமூலம், மருது, மணியம் செல்வன் போன்ற பலருடைய ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.”
“நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்தப் புத்தகங்கள் எந்தளவில் உதவும்?”
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு கேள்விகளுடன் நம் பாடப்புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் நம் புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. பயாலஜியைப் பொறுத்தவரை 99% கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக் கேள்விகள் பலவும் இந்தப் புதிய பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. அகில இந்திய அளவில் நடக்கக்கூடிய கடினமான நுழைவுத் தேர்வுகளை நம் மாணவர்கள் மாணவர்கள் எதிர்கொள்ள இந்தப் புதிய பாடத்திட்டம் நிச்சயம் உதவும். என்னுடைய கணிப்பின் படி அடுத்த ஐந்து வருடங்களில் நம் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் நாட்டிலேயே அதிக இடங்களைப் பெறுவார்கள். மற்ற மாநில இடங்களைக்கூடக் கைப்பற்ற ஆரம்பித்து நுழைவுத் தேர்வுகளில் அசைக்க முடியாத இடத்துக்குச் செல்வார்கள்.”
“தேர்வு முறைகளில் ஏதாவது மாற்றம் வர வாய்ப்பிருக்கிறதா?”
“நிறைய யோசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இரவில் அதைக் கொண்டுவர முடியாது. நேற்று வரை மனப்பாடம் செய்துவந்த மாணவர்களின் கையிலிருந்து அடுத்த நாளே புத்தகத்தைப் பிடுங்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதை நடைமுறைப் படுத்தமுடியும். இதை ஆசிரியர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். மாணவர்களை வகுப்பறைகளில் கேள்விகளைக் கேட்கப் பழக்க வேண்டும்.”
“நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் போன்ற விவகாரங்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள்தான் உரிய முடிவெடுக்க முடியும். இருந்தாலும் நாடு முழுக்க ஒரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அந்தந்த மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார்படுத்திட குறைந்தது மூன்று அல்லது நான்கு கல்வியாண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசே கருத்து தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் இந்தக் கருத்து மிக முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.
-
நன்றி-விகடன்

50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி



50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,''  என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து, பேசியதாவது:ஒன்றாம் வகுப்புக்கு, 'க்யூ ஆர்க்' என்ற கோடு மூலம், மொபைல் போனில் இசையோடு கலந்த கல்வியை கற்றுத் தர, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
அரசு பள்ளியை தேடி வரும் அளவுக்கு, மாணவர்களின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, சிறந்த கல்வியாளர்கள் மூலம், வெற்றிகரமாக எட்டு மாதத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது. மூன்றாண்டுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் அடுத்தாண்டே, 12 வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
'நீட்' தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கையாகும். இக்கட்டான சூழ்நிலையிலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தினோம்.இதற்காக பயிற்சி பெற்ற, 3,148 மாணவர்களில், 1,000 மாணவர்கள் மருத்துவராக வருவர். தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

TNPSC JOB | குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கு ஜூன் 15-க்குள் அறிவிப்புகள் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி அதிகாரி தகவல்

குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

ஓராண்டில் என்னென்ன பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடக்கின்றன? அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும்? தேர்வுகள், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்பன உள்ளிட்ட விவரங்களை கொண்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்ற பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் வெளியிடப்படவில்லை. ஃபாரஸ்ட் அப்ரடண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், உதவி சிஸ்டம் என்ஜினியர், உதவி சிஸ்டம் அனலிஸ்ட் தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் பணி தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரத்திலும், அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 3-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுவரையில் அந்த தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் ஜுன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்பட்டுவிடும். அதன்பிறகு இதர தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் உள்ளபடி குறித்த காலத்தில் வெளியிடப்படும்" என்றார்.

பள்ளி திறந்த நாளிலேயே புதியதாக 96 மாணவர்களை சேர்த்து சாதனை புரிந்த அரசு நடுநிலைப்பள்ளி

1வருட பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்!!!

முதல் வகுப்பு.... முதல்பருவம்.... ஆங்கிலம்..... Hello song.....


முதல் வகுப்பு தமிழ் பாடல் ஆலமரத்துல விளையாட்டு. QR CODE மூலம் பதிவிரக்கம் செய்யப்பட்டது!!!


32 மாவட்டங்களில் மாதிரி பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு :

தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,''  என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து, பேசியதாவது:ஒன்றாம் வகுப்புக்கு, 'க்யூ ஆர்க்' என்ற கோடு மூலம், மொபைல் போனில் இசையோடு கலந்த கல்வியை கற்றுத் தர, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
அரசு பள்ளியை தேடி வரும் அளவுக்கு, மாணவர்களின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, சிறந்த கல்வியாளர்கள் மூலம், வெற்றிகரமாக எட்டு மாதத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது. மூன்றாண்டுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் அடுத்தாண்டே, 12 வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
'நீட்' தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கையாகும். இக்கட்டான சூழ்நிலையிலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தினோம்.இதற்காக பயிற்சி பெற்ற, 3,148 மாணவர்களில், 1,000 மாணவர்கள் மருத்துவராக வருவர். தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்

கால்நடை மருத்துவ படிப்பு (B.V.Sc.,) விண்ணப்பிக்க அவகாசம்

கால்நடை மருத்துவ படிப்புக்கான, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., என்ற, கால்நடை மருத்துவம்; ஏ.ஹெச்., என்ற, கால்நடை பராமரிப்பு படிப்புக்கு, 820 இடங்கள் உள்ளன. 

இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதற்கான விண்ணப்பங்களை, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், மே, 21 முதல் பதிவிறக்கம் செய்யலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 11க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. 
தற்போது, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, வரும், 11ம் தேதி வரையும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும், 18ம் தேதி வரையும், அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.அதே போல, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் வெளி நாட்டினர், ஜூலை, 6 முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.ஜூலை, 20க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, கால்நடை மருத்துவ பல்கலை அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் சுமார் 15000 ஆசிரியர் பணியிடங்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது :

உறுதியாகாத இ - டிக்கெட்தாரர் இனி ரயில்களில் பயணிக்கலாம்!

புதுடில்லி:'இணையதளம் மூலம், 'இ - டிக்கெட்' பெற்று, காத்திருப்பு பட்டியலில் உள்ளோர், ரயில்களில், டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியர் வராத பட்சத்தில், படுக்கை வசதி உள்ள, அவர்களின் இருக்கைகளை பயன்படுத்தலாம்'

என்ற, டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.பாரபட்சம்காத்திருப்பு பட்டியலில் உள்ள, இ - டிக்கெட் பயணியர், டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், ரயிலில் பயணிக்க முடியாது; அதேசமயம், ரயில்வே கவுன்டரில் டிக்கெட் பெற்று, காத்திருப்பு பட்டியலில் இருந்தால், அத்தகைய பயணியரை, ரயிலில் பயணிக்க அனுமதிக்கும் நிலை இருந்தது.இது தொடர்பான வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2014, ஜூலையில் அளித்த தீர்ப்பில், 'காத்திருப்பு பட்டியலில் உள்ள, இ - டிக்கெட் பயணியர், கவுன்டரில் டிக்கெட் பெற்ற பயணியர் இடையே, பாரபட்சம் பார்க்கக் கூடாது.'இரு வகை பயணியரும், ரயிலில், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்துள்ள பயணியர் வராத பட்சத்தில், அந்த இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்' எனக் கூறப்பட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ரயில்வே சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரு முறை விசாரணைக்கு வந்தபோதும், ரயில்வே சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.உத்தரவுஇதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நேற்று உத்தரவு பிறப்பித்தது. ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்வதாக, நீதிபதிகள் அறிவித்தனர்.

பி.இ. படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் பதிவு: ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சனிக்கிழமை இரவு வரை விண்ணப்பிக்கலாம் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும். கடந்த 2017-இல் 1,40,633 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 8-ஆம் தேதி முதல்...விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக கலந்தாய்வு ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் சென்னைக்கு வராமல், அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். 
வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காகவும், அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1.52 லட்சம் பேர் விண்ணப்பப் பதிவு: பி.இ. படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. பதிவு செய்வதற்கான கால அவகாசம் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணி வரை 1,52,940 மாணவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 2017-18 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் சேர 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 14-ஆம் தேதி வரை... பி.இ. படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.
நாளை முதல்...அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 4) முதல் மாணவர்கள் லாகின் செய்து இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
சம வாய்ப்பு எண், தரவரிசைப் பட்டியல் எப்போது? பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் ஜூன் 5 அல்லது ஜூன் 6-ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்ட ஓரிரு நாள்களில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டு விடும்.
சம வாய்ப்பு எண் எதற்கு? பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும்.
அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ் 2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாணவர்களுக்கு எழுத்து எழுத பழகி கொடுத்த கலெக்டர் :

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை: மாணவர்களுக்கு
எழுத்து எழுத பழகி கொடுத்த கலெக்டர்
திருவண்ணாமலை, ஜூன் 2: கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளான்று, பாடப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சுமார் 40 நாட்கள் விடுமுறை கொண்டாட்டத்தில் குதுகலமாக இருந்த மாணவர்கள், மகிழ்ச்சியுடன் நேற்று பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு சாக்லெட், பூக்கள் போன்றவற்றை கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். அதேபோல், பள்ளி தொடங்கும் முதல் நாளில், முதலாம் வகுப்பு, 6ம் வகுப்பு, பிளஸ்2 போன்றவற்றில் சேருவதற்காக, மாணவர் தங்கள் பெற்றோருடன் திரண்டிருந்தனர். தனியார் பள்ளிகளைப் போல, அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், புதிய கல்வி ஆண்டின் முதல் நாளன்று வகுப்புகள் தொடங்கும் போதே, பாடப்புத்தகங்கள் சீருடை உள்ளிட்ட அரசின் இலவச திட்டங்களின் பயன்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் நேற்று பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், கணித உபகரணங்கள், வண்ண பென்சில்கள், சீருடை போன்றவை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாடப்புத்தகங்களை முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில், சார்பு நீதிபதி ராஜ்மோகன், தலைமை ஆசிரியர் ேஜாதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் பள்ளிகளின் செயல்பாடுகளை, முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் 5 மாவட்ட கல்வி அலுவலர்கள், 18 வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே இயங்கி வந்த இத்திட்டம், கல்வியின் அடிப்படையை கற்பிக்கும் நிலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, வண்ணம், வடிவம், எழுத்து போன்ற அடிப்படை கல்வியை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முயற்சியை திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், முன்பருவ கல்வி ஆரம்ப விழா நேற்று நடந்தது. அதில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு, முன்பருவ கல்வியில் சேர்ந்த குழந்தைகளை உற்சாகபப்டுத்தினார். அப்போது, குழந்தைகளை தமது மடியில் அமர வைத்து, குழந்தையின் நாவில் நெல் மணி கொண்டு தேன் தடவினார்.
மேலும், அரிசி, கோதுமை, நெல் ஆகியவற்றில் குழந்தைகளின் விரல் பிடித்து, தமிழின் முதல் எழுத்தான அ என்பதை எழுத வைத்தார். ஆரம்ப மற்றும் அடிப்படைக் கல்வியை நம்முடைய பாரம்பரியத்துடன் கலெக்டர் தொடங்கி வைத்தது பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் தமிழரசி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாம்பிகை, நகராட்சி ஆணையர் பாரிஜாதம் உட்பட கலந்துகொண்டனர்

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், இரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்*

மேலும் மாணவர்களின் வருகைப்பதிவு மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்துவிடும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் செயல்படுத்தப்படும் எனவும், இது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்

ஆசிரியர்கள் இருவேளையும் விரல் ரேகை (BIO METRIC ) பதிவு செய்யவேண்டும்! இதற்கென DPI வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை!

                                  

Biometric முறையில் ஆசிரியர்கள் வருகைப் பதிவு முறையில் காலை, மாலை என இரு வேளையும் biometric முறையில் விரல் ரேகைப் பதிவிட வேண்டும்.

இதற்கென DPI வளாகத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு அனைவரின் வருகைப்பதிவும் கண்காணிக்கப் படும்.

Biometric machineற்கு மின் இணைப்பு மட்டும் இருந்தால் போதும். காவல்துறை wireless போன்று பிரத்யேகமான அலைக்கற்றை மூலம் அவைகள் இணைக்கப்படும்.

அதனால் மலைப் பள்ளிகளில் செல்போன் சிக்னல் இருக்க வேண்டிய அவசியமில்லை.

மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்துமே மாற்றி அமைக்கப்படும்

FLASH NEWS- அரசுபள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...

FLASH NEWS- அரசுபள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து பேரவையில் அறிவிக்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி
 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து பேரவையில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 
ஆசிரியா்களுக்கு காலை-மாலை இரு நேரங்களிலும் பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்யப்படும். மேலும் தனியார் பள்ளிகள் கட்டண விபர பதாகைகளை வைக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

2017-2018 ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத் தாள் வெளியிடப் பட்டது.

  • www.agae.in
     என்ற இணையதளத்தில்
  • அவரவர்களின்
  • GPF/TPF NUMBER
  • DATE OF BIRTH
  • SUFFIX
  • உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

CTET NOTIFICATION -2018 :

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCN9QbRmGEwkrQKJx2wAHyIdIR1AEQWdYZTv-sYkL5CPiJbOQpmNxd5LYD39v87LNNqRE6zup5xlGjG73v8yh0vWaAMkV6ICk4JGiTkmuFgySNcQSlSY92-pI6vqOoIuwGdieuS5Mt440/s1600/download484da8ef_ed_2f0_2fPictures_2fScreenshots_2fScreenshot_20180603-154800.png

ANSWER KEY UPSC 2018 Civil Services (IAS) Prelims Exam GS Paper 1

3/6/18

அரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்...

சேலம் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததை அடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 650 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறாம் வகுப்பில் உள்ள 80 இடங்களுக்கு 260 மாணவ - மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் படிக்காத பெற்றொர்களின் குழந்தைகள், ஏழை, எளியவர்களின் குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் பள்ளியில் சேர்க்க தேர்வு செய்யப்பட வேண்டும்.

மீதமுள்ளவர்களுக்கு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறும் மாணவ - மாணவிகளை தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும், தன்னிச்சையாகவும், தகுதியற்றவர்களையும் முறைகேடாக தேர்வு செய்து பள்ளி திறக்கும் முன்பே பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று பள்ளி திறக்கப்பட்டதும், மாணவ - மாணவிகளின் சேர்க்கை குறித்த பட்டியலைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்களுடன், மாணவ - மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், "நான் இந்த பள்ளிக்கு தற்போதுதான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவில்லை. எனினும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த மாணவ - மாணவிகள் பட்டியலை கிழித்து எறிந்ததுடன், "மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே. முறையாக விதிமுறைகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்" என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி நிர்வாகத்தினர் இது தொடர்பாக நாளை (அதாவது இன்று) உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறை விவாதம்:

அரசு பள்ளி இல்லாத இடங்களில் மட்டும் தனியார் பள்ளிகளில் 25% சேர்க்கை நடத்துவது, நிதி வழங்குவது குறித்தும் அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கும் வகையில் அங்கன்வாடி மையங்களை துறைமாற்றம் செய்வது குறித்தும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பை வரவேற்போம். மழலையர் வகுப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.
---------------------------------------------------------

அ.தி.மு.க., - செம்மலை:

பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர், பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.சில தனியார் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல், இரண்டு ஆண்டுகள், பிளஸ் 2 பாடங்களை படிக்க வைத்தனர். இதை தடுக்க, பிளஸ் 1 பொதுத்தேர்வை, அமைச்சர்அறிமுகப்படுத்தி உள்ளார்.ஜெ.,வின் எண்ணங்களுக்கு, இந்த அரசு, செயல் வடிவம் கொடுத்து வருகிறது.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம், நலிவுற்றப் பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நாமே மாணவர்களை, தனியார் பள்ளிக்கு அனுப்புவதால், அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது.எனவே, அரசு பள்ளி இல்லாத இடங்களில் மட்டும், இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள் இருந்தால், அங்கு மாணவர்களை சேர்க்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

இந்த சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்திற்கு, மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு நிதி தரவில்லை.எனினும், சட்டத்தை அமல்படுத்தி வருகிறோம். உறுப்பினர் கூறியது, கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

செம்மலை:

அரசு பள்ளிகள் இல்லாத இடங்களில் மட்டும், தனியார் பள்ளிகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, முழு மானியம் வழங்க வேண்டும். தனியார் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,வகுப்புகள் உள்ளன.குழந்தைக்கு இரண்டரை வயதானாலே, பள்ளிக்கு அனுப்ப நினைக்கின்றனர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள், சீருடை, 'டை, ஷூ' அணிந்து செல்வதைக் கண்டு, செலவு அதிகமானாலும், தங்கள் குழந்தைகளை, அங்கு அனுப்புகின்றனர்.இதை பயன்படுத்தி, அப்பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இதை தவிர்க்க, அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க வேண்டும். மெட்ரிக் பள்ளி மோகத்தை தவிர்க்க, அரசு பள்ளிகளில், ஆரம்ப நிலையிலே, ஆங்கிலம் கற்பிக்க வேண்டும்.மெட்ரிக் பள்ளிகள் என்பதை மாற்ற வேண்டும். முன்னர், தனி பாடத்திட்டம் இருந்தது. தற்போது, சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மெட்ரிக் பள்ளி என, தனியாக இருக்க வேண்டியதில்லை. 'தனியார் சுயநிதிப் பள்ளி' என, பெயர் மாற்றினால், அந்த மோகம் குறையும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

அங்கன்வாடி மையங்கள், 90 சதவீதம், அரசு பள்ளி வளாகங்களில் தான் உள்ளன. எனவே, அங்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்குவது தொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், ஆலோசனை நடந்து வருகிறது.அங்கன்வாடி மையங்களை, துறை மாற்றம் செய்வது, ஆசிரியர்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ஆலோசித்து, விரைவில், நல்ல முடிவு எடுக்கப்படும்.எதிர்காலத்தில், தனியாரால் பள்ளிகள் நடத்த முடியுமா... என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளை மேம்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.
செய்தி: தினமலர்.

தமிழக அரசு அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.

தமிழக அரசு அறிவிப்பு:

ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.


முதல் சுற்றில் ஆசிரியர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்த பின்னர் 2ஆம் பருவம் முதல் அதே மெஷினில் EMIS எண்ணை இணைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.A

2018-19 கல்வியாண்டு கல்வி செயல்பாடுகள்*:

ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தபின் செய்யவேண்டியவை:
🔹SABL இல்லை.               

🔹படிநிலை(Ladder) இல்லை                          

🔹 அடைவுத்திறன் அட்டவணை இல்லை.   


🔹1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.                       

🔹4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.           

 🔹ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர்      4-5 வகுப்புகள்-ஒருவர்           

🔹மூன்றாசிரியர் பள்ளிகள்                      1-2 வகுப்புகள் ஒருவர்        3-4 வகுப்புகள் ஒருவர்   5 ம் வகுப்பு ஒருவர்.        3ம் வகுப்பில் மட்டும்  எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர்                            4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.                     

🔹 1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)                         

🔹9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை                 

🔹11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை                 

🔹1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்

🔹2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை                 

🔹3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.             

🔹    ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவிகள் கட்டாயம்.                        

🔹4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.  

ஆசிரியர்பாடத்திட்டம் எழுதும் முறை.....

பாடத்திட்டம் எழுதும் முறை :
வகுப்பு:
பாடம்:
பாடத்தலைப்பு:
திறன்: ( மொழிப்பாடம்)

பாடப்பொருள்:(பிறப்பாடம்)
கற்றல் விளைவுகள்:
ஆசிரியர் செயல்பாடுகள் :
ஆர்வமூட்டுதல்
கற்பித்தல்
இணைச்செயல்பாடுகள்:
தனிநபர் செயல்பாடுகள் :
மதிப்பீடு:
வலுவூட்டுதல்:
மேம்படுத்துதல்:
வீட்டுப்பாடம்:

Flash news: EMIS website open now 02.06.2018 at 8.00 am.


இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும். *C. E. O. உத்தரவு.*

அனைத்து *வட்டாரக் கல்வி அலுவலர்கள்* மற்றும் அனைத்து *மேற்பார்வையாளர்கள்* கவனத்திற்கு:

 *மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள்* :


இந்தக் கல்வியாண்டு
*(2018-2019)* முதல்...
இனிவரும் காலங்களில் இந்த *Whats Appல்* இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று *C.E.O.* அவர்கள் தெரிவித்துள்ளார்.

 *தகவல் பின்வருமாறு* :

1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்

2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,

3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை,

4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,

5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,

6. *இல்லை* எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,

7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம்.

மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.

*-தகவல் C.E.O.*A

LESSON PLAN (FIRST STANDARD)

Lesson plan:
Class :1
Subject : English


Topic : Crossing the road safely
Concepts : Leaning traffic signals for road crossing the road safely.

Learning out come :
Listens and learning about traffic signals,
Follow the traffic roles, Reads simple sight words,Associate pictures with words.

Teacher activity : Using with Proper TLM.
Motion ;Introduce the topic though pictures,songs, stories, discussion etc,,

Teaching activity :
The practice activity is based on the textual content with a motive to revice the text,
Students do the activity as a whole class with the activity with help of the teacher.

Peer support activity :
Teacher can help the students thought simple explanation and model,
Each member shares their ideas in group.
Peer group activity with book exercises .

Individual activity :Teacher or peer support can be given if needed,The students to complete the book activites, the teacher helps and facilitates.

Evaluation :Choose questions accordingly to test the students, Using for teacher manual book.

Reinforcement:
The reinforcement activities ensure understanding of concepets to the slow learners.Using with work book

Enrichment:The enrichment activities for the above average students.Using with loop material.

Home work :

Lesson plan or Notes of lesson :( SALM 4,5 Standards)

Class :
Subject :
Topic :
Concept or Content
Concept :(Language)

Content :(Other subject)
Learning outcomes:
Motivation:
Reading :
New words :
Concept map:
Consolidation :
Thinking activity :
Evaluation :
Reinforcment :
Enrichment:
Home work :A

Lesson plan or Notes of lesson :(1,2,3Standards)

Class :
Subject :
Topic :
Concept or Content

Concept :(Language)
Content :(Other subject)
Learning outcomes:
Teacher activities:
Motivation
Teaching activities
Peer group activities :
Individual activities :
Evaluation :
Reinforcment :
Enrichment:
Home work :

அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளிலும் தேவையான எண்ணிக்கையில் மின்விசிறிகளைப் பொருத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாததால், பள்ளிகள் திறப்பை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் 41 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாத நிலையில், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலை சமாளிப்பதற்கான மின்விசிறி வசதி கூட பல பள்ளிகளில் இல்லாத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது சரியானதல்ல.


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறை சார்பில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கும் முறையே ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளிலிருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. வழக்கம் போலவே கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதத்தின் முதல் வேலைநாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும், குறிப்பாக தென்மேற்கு பருவமழையின் எல்லைக்கு அப்பால் உள்ள வட மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக உள்ளது.

கத்திரி வெயில் முடியும் வரை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையைத் தாண்டாத சென்னையில் கத்திரி வெயில் முடிவடைந்த பிறகு 100 டிகிரிக்கும் கூடுதலான வெப்பநிலை பதிவாகி வருகிறது. வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசு பள்ளிகள் திறக்கப்படுவதை தமிழக அரசு ஒத்திவைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் வரும் 11 ஆம் தேதி முதல்தான் திறக்கப்படவுள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் பள்ளிகளும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் இம்மாத இறுதியில் தான் திறக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அரசுப் பள்ளிகள் மட்டும் அவசர, அவசரமாக திறக்கப்படுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனியார் பள்ளிகளில் மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆனால், அரசுப் பள்ளிகளில் மின்விசிறிகள் கூட இல்லை. சில நகர்ப்புற அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாகவும், நன்கொடையாளர்கள் மூலமாகவும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலான ஊரகப் பள்ளிகளில் மின்விசிறி வசதி இல்லை. மின்விசிறி உள்ள அரசு பள்ளிகளில் கூட ஆசிரியர்களும், முன்வரிசை மாணவர்களும் மட்டும் தான் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், அதை பயிற்றுவிப்பதற்கு வசதியாக பள்ளிகளின் வேலை நாட்கள் 210-லிருந்து 225 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க வேண்டியிருப்பதாக அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் வாதத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதேபாடத்திட்டத்தை பின்பற்றவுள்ள தனியார் பள்ளிகள் இம்மாத மத்தியில் தான் திறக்கப்படவுள்ளன என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு இன்னும் முழுமையான பயிற்சி அளிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே பள்ளிகளை திறப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

பாடத்திட்டத்தை முடிப்பதை விட மாணவர்கள் கோடை வெயிலில் பாதிக்கப்படாமல் இருப்பதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். எனவே, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு சீருடைகளும், பாடநூல்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரை பெற்று கோடை வெயில் தணிந்த பிறகு அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க அரசு ஆணையிட வேண்டும். இடைப்பட்ட காலத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளிலும் தேவையான எண்ணிக்கையில் மின்விசிறிகளைப் பொருத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் இன்று(சனிக்கிழமை) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்வெழுதிய விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை ஜூன் 2-ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 2 நகல்கள் எடுத்து ஜூன் 4 முதல் 6-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு ஜூன் 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

                         

புதுச்சேரி: புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு ஜூன் 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்குள் வாட்ஸ்ஆப்பில் இடம்பெறவுள்ள 6 புதிய அம்சங்கள்.!

                                              

உலகின் மிக பிரபலமான உடனடி-செய்தி (இன்ஸ்டென்ட் மெசேஜிங்) பயன்பாடான வாட்ஸ்ஆப், சுமார் 1.5 பில்லியன் தினசரி பயனர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, வாட்ஸ்ஆப் புதிய மேம்படுத்தல்களை உருட்டிய வண்ணம் உள்ளது.
உலகின் மிக பிரபலமான உடனடி-செய்தி (இன்ஸ்டென்ட் மெசேஜிங்) பயன்பாடான வாட்ஸ்ஆப், சுமார் 1.5 பில்லியன் தினசரி பயனர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, வாட்ஸ்ஆப் புதிய மேம்படுத்தல்களை உருட்டிய வண்ணம் உள்ளது.

அப்படியாக, அடுத்த ஒரு வாரத்திற்குள் வாட்ஸ்ஆப்பில் இடம்பெறவுள்ள 6 புதிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. சோதனை கட்டங்களை தாண்டி வெகுஜன மக்களின் கைகளுக்கு செல்லும் அந்த 6 புதிய அம்சம் தான் என்ன.?



01. கிளிக் டூ சாட்.!
இந்த வாட்ஸ்ஆப் அம்சமானது, உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்டில் சேமிக்க படாத ஒரு எண்ணிற்கு கூட மெசேஜ் செய்ய அதுவும். இந்த புதிய அம்சம் அந்த தேவையற்ற எண்களை சேமிப்பதற்கான தேவையை குறைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சுருக்கமாக சொன்னால், ஒரு சேமிக்கப்படாத எண்ணுடன் உரையாடலை தொடங்க ஒரு இணைப்பை உருவாக்க இந்த அம்சம் அனுமதிக்கும். இது தொழில் வல்லுனர்களுக்கு மிகவும் எளிதான அம்சமாக இருக்கும்.


02. பேஸ்புக் உடன் உடனடி லின்க் பரிமாற்றங்கள்.!
வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை நாம் அறிவோம். அதனால் இந்த புதிய அம்சம் அறிமுகம் ஆவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது பயனர்களுக்கு 'Send To Whatsapp' விருப்பத்தின் மூலம் உடனடியாக ஒரு இணைப்பை பகிர அனுமதிக்கும். இனி டிராப் டவுன் மெனுவில் உள்ள ஷேர் விருப்பத்தை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.


03. க்ரூப் ஆடியோ கால்ஸ்.!
க்ரூப் வீடியோ கால்களுடன் சேர்த்து வாட்ஸ்ஆப், அதன் க்ரூப் ஆடியோ அழைப்புகள் சார்ந்த அம்சத்திலும் கவனம் செலுத்தியது. அதன் விளைவாக, வரும் வாரம் இந்த அம்சம் வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இந்த புதிய அம்சம் ஒரே நேரத்தில் பலருடன் வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் நிகழ்த்த அனுமதிக்கும்.


04. செலெக்ட் ஆல்.!
ஆண்ட்ராய்டுக்கான இந்த அம்சம். ஒரே நேரத்தில் அனைத்து மெசேஜ்களை தேர்ந்தெடுக்க உதவும். இனி ஒவ்வொரு மெசேஜாக செலெக்ட் செய்து அவற்றை மார்க் தெம் ஆஸ் ரீட் அல்லது அன்ரீட் என்று குறிக்க வேண்டிய அவசியம் இருக்காது. உடன் இந்த அம்சம் அனைத்து சாட்களையும் ஒரே நேரத்தில், விரைவாக டெலிட் செய்ய அனுமதிக்கும்.


05. மீடியா விசிபிலிட்டி.!
வாட்ஸ்ஆப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் காணப்பட்டுள்ள இந்த அம்சமானது, வாட்ஸ்ஆப் வழியாக கிடைக்கும் மீடியாக்களை போன் கேலரியில் காட்சிப்படுத்தலாமா அல்லது வேண்டமா என்கிற அதிகாரத்தை பயனர்களுக்கு வழங்கும். 
அறியாதோர்களுக்கு, இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்ஆப் ஐஓஎஸ் பதிப்பில் உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு.

அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:
பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக 2,283 திறன் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
 நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத் திட்டத்தை மாணவர்களுக்கு சீரிய முறையில் பயிற்றுவிக்க ஏதுவாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடைப் பயிற்சி அளிக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் அவர்களது தலைமைப் பண்பினை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியும், ஆய்வு அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் மேற்கொள்ளப்படும்.

 மாதிரிப் பள்ளிகள்: மாவட்டத்துக்கு ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இந்தப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாகச் செயல்படும் வகையில், ஒரு பள்ளிக்கு ரூ.50 லட்சம் வீதம் ரூ.16 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்.


 திறன் அட்டை திட்டம்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் அட்டை வழங்கும் திட்டம் ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள், ஆதார் எண் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக நிகழ் கல்வியாண்டில் வழங்கப்படும். இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

CM CELL REPLY- TET-TEACHER APPOINTMENT- REGARDING :

பணி நிறைவு பாராட்டு*

பணி நிறைவு பாராட்டு* இன்று 31-5-2018-ல் அரசுப்  பணிநிறைவு பெறும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர்  *திருமதி .வ.மண்டோதரி*  அவர்களுக்கும்,                        மாநில பொருளாளர்       *திரு. சீனிமோகன்* அவர்களுக்கும்,            மாநில இணை செயலாளர் *திரு. கிரிதரன்* அவர்களுக்கும், தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ள              வட சென்னை                          மாவட்ட தலைவர்              *திரு. கண்ணியப்பன்* அவர்களுக்கும் தென்சென்னை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் தங்களின் ஓய்வுக்காலத்தில் எல்லா வளங்களும் , பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.
அன்புடன் எஸ்மா. *எஸ்.கே.சரவணன்*       தென் சென்னை மாவட்ட அமைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர், த.நா. சட்டதிட்ட விதிகள்குழு .
[ *பணி நிறைவு பாராட்டு* இன்று 31-5-2018-ல் அரசுப்  பணிநிறைவு பெறும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர்  *திருமதி .வ.மண்டோதரி*  அவர்களுக்கும்,                        மாநில பொருளாளர்       *திரு. சீனிமோகன்* அவர்களுக்கும்,            மாநில இணை செயலாளர் *திரு. கிரிதரன்* அவர்களுக்கும், தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ள              வட சென்னை                          மாவட்ட தலைவர்              *திரு. கண்ணியப்பன்* அவர்களுக்கும், திருச்சி மாவட்ட தலைவர்                                           *திரு. அ மதி* அவர்களுக்கும் தென்சென்னை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் தங்களின் ஓய்வுக்காலத்தில் எல்லா வளங்களும் , பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.
அன்புடன் எஸ்மா. *எஸ்.கே.சரவணன்*       தென் சென்னை மாவட்ட அமைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர், த.நா. சட்டதிட்ட விதிகள்குழு .

உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு??

ஆசிரியர்பாடத்திட்டம் எழுதும் முறை!!!

FLASH NEWS:-தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை!!


பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர் கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர் விவரங்கள் கோருதல்-சார்பு.