யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/6/18

பிளஸ் 1 புத்தகத்தில், 'நீட்' வினாக்கள்; உயர்கல்வி தகவல்களை அள்ளி தருகிறது:

புதிய பாடத்திட்டத்தில் தயாரான, பிளஸ் 1 புத்தகத்தில், 'நீட்' மற்றும், ஜே.இ.இ., தேர்வு வினாக்களும்
, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
இந்தாண்டு, பிளஸ் 1 வகுப்புக்கு, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், புதிய பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு பக்கத்திலும், செய்முறை பயிற்சிகள் தரப்பட்டுள்ளன.
மாதிரி வினாத்தாள்பழைய பாடத்திட்ட புத்தகங்கள், கறுப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட நிலையில், புதிய புத்தகங்கள், பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன.


 ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு விதமான முன் மற்றும் பின், அட்டை படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

 பின் அட்டைகளில், சர்வதேச அளவிலான பிரபலமான விஞ்ஞானிகள், நிபுணர்கள், ஓவியங்கள் மற்றும் அரிய தகவல்கள், படத்துடன் இடம் பெற்று உள்ளன.

மேலும், பாடம் தொடர்புடைய உயர்கல்வி வாய்ப்புகள், அதற்கான கல்வி நிறுவனங்கள், பாடத்தை படிப்பதால் கிடைக்கும் திறன்கள், அதற்கான இலக்குகள், செய்முறைக்கான வழிகாட்டுதல் உள்ளன.

 மேலும், கருத்து வரைபடங்கள், காணொலி மற்றும் அனிமேஷன் படங்களுக்கான குறிப்புகள், பார்கோடுகள், பாடம் சார்ந்த இணையதள முகவரிகள் போன்றவையும், இடம் பெற்றுள்ளன.

அதேபோல், நீட், ஜே.இ.இ., - சி.ஏ., - டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான, மாதிரி வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

 அதில், எம்.சி.க்யூ., என்ற பல்வகை விடைக்குறிப்பு அடங்கிய, மாதிரி வினாக்கள் தரப்பட்டுள்ளன. எய்ம்ஸ் முதல் வேளாண் பல்கலை படிப்புகள் வரை, தகவல்கள் தரப்பட்டுள்ளன.

*71 ஆயிரம் பேர்*

'இந்த புத்தகங்களை பயன்படுத்தும் மாணவர்கள், படிக்க துவங்கும்போதே, படிப்பை முடித்த பின், அடுத்த இலக்கு என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

 இதற்காக, கல்வி ஆலோசகர்களை தேடி செல்ல வேண்டிய நிலை, இனி இருக்காது' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின்படி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், http://www.textbooksonline.tn.nic.in என்ற இணையதளத்தில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்த பாட புத்தகங்கள் மற்றும், பார்கோடில் இணைக்கப்பட்ட தகவல்களில், இதுவரை, ஆறு லட்சம் தகவல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதில், 71 ஆயிரம் பேர், தமிழக பாடநுால் கழகத்தின், 'மொபைல் ஆப்'களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆசிரியர் பணிநிரவல்: வலுக்கும் எதிர்ப்பு - கணிதப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான அனைத்துப்பாடங்களையும் பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் பல நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

 இதனால் கிராமப்புற மாணவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான உயர்நிலைக்கல்வியை எளிதாக பெற்று வருகின்றனர்.

RTE  சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களை அரசாங்கமே கல்விக்கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்பதால் பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 170க்கும் குறைவாகவே உள்ளது.

தற்போதுவரை இப்பள்ளிகளில் 6முதல் 8வகுப்புகளைக் கையாள 3பட்டதாரி ஆசிரியர்களும்,
9மற்றும் 10ஆம் வகுப்புகளைக் கையாள 5 பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் உயர்நிலைப்பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 8பட்டதாரி ஆசிரியர்கள் என்ற ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் 6முதல்10 வகுப்புகளுக்கான குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கையை 8இலிருந்து குறைத்து பணிநிரவல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பள்ளிகளில் ஒரே ஒரு கணித ஆசிரியர் 6முதல்10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் கணிதப்பாடத்தை முழுமையாகக் கற்பித்து , மெல்லக் கற்கும் மாணவர்களையும் பொதுத்தேர்விற்கு தயார்செய்வது என்பது இயலாத காரியம். கணிதப்பாடத்தின் கடினமான புதிய பாடத்திட்டத்தின் காரணமாகவும் , வேலைப்பளு கூடுதலாக இருக்கும் என்பதாலும் கணிதப்பாடத்தைக் கூடுதலாகக் கையாள மற்ற பாட ஆசிரியர்கள் முன்வருவதில்லை.

போட்டித்தேர்வுகளையும், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளையும் மாணவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற கணிதப்பாட புரிதல் மிகவும் அவசியமானது என மதிப்பிற்குரிய கல்வித்துறை செயலாளர் அவர்களும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


*எனவே அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 6முதல்10 வகுப்புகளைக் கையாள குறைந்தபட்சம் இரண்டு கணிதப்பட்டதாரி ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

EMIS அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு மாணவர்களின் புதிய பதிவு 20.06.2018 தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.


🌷கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர் விவரங்களை வகுப்புவாரியாக வருகைப் பதிவேட்டில் உள்ளபடி EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கீழ்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*

*🌷கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களின் விவரங்களும் தற்போது பயிலும் மேல்வகுப்பிற்கு EMIS குழுவால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சரியாக செயல்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.*

*🌷2018-19 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் புதியதாக சேர்க்கை ஆன மாணவர் சார்ந்த அனைத்து விவரங்களையும் 20.06.2018 ம் தேதிக்குள் உள்ளீடு செய்து முடித்திடல் வேண்டும்.*

*🌷 *2017-18 ஆம் கல்வி யாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் (தற்போதைய 2 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு முடிய) ஏதேனும் தகவல் விடுபட்டிருப்பின் அவற்றை சரிசெய்வதற்கான Updating option வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விடுபட்ட விபரங்களை இவ்வாய்ப்பினைக்கொண்டு சரிசெய்திடல் வேண்டும்.*

🌷 *2017-18 ஆம் கல்வியாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் எவரேனும் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் நிகழ்வில் அம்மாணவர் சார்ந்த விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும். மேலும் பள்ளியில் பயிலாத மாணவர் விபரங்களையும் common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.*

*🌷EMIS எண்ணுடன் மாற்றுச்சான்றிதழ் பெற்று புதியதாக வேறு பள்ளிக்கு சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை common pool ல் இருந்து எடுத்து சார்ந்த பள்ளிகளில் சார்ந்த வகுப்புகளில் சார்ந்த தலைமை ஆசிரியர்களால் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.*

*🌷இந்    நிகழ்வின் போது 2 முதல் 8 வகுப்புகளில் புதியதாக சேர்ந்த மாணவர் விபரங்களை common pool ல் இருந்து எடுக்க முடியாத நிலையில் மட்டும் அத்தகைய மாணவர் விபரங்களை சார்ந்த வகுப்புகளில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களால் புதிதாக பதிவு செய்திடல் வேண்டும்.*

*🌷5 மற்றும் 8 ம் வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளில் மாற்றுச்சான்றிதழ் வாங்கிய மாணவரின் விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.*

🌷 *நடப்பு கல்வியாண்டில் தினந்தோறும் நடைபெறும் சேர்க்கை/ நீக்கல் சார்ந்த விபரங்களை EMIS இணையதளத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் உடனுக்குடன் பதிவுகள் செய்து முடித்திடல் வேண்டும்.*

*🌷2018-19 ஆம் கல்வியாண்டில் EMIS இணையதளத்தில் அனைத்து வகுப்பு மாணவர் சார்ந்த அனைத்து விபரங்களையும் பதிவு செய்யும் பணியை 31.07.2018 ஆம் தேதிக்குள் முடித்திடல் வேண்டும்.*

*🌷எனவே சார்ந்த கல்வி மாவட்டம் வாரியாக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இப்பணியை எவ்வித குறைகளுகு இடமின்றி காலதாமதம் ஏற்படாமல் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.*


முதல் வகுப்பு மாணவர்களுக்கான கையெழுத்துப் பயிற்சி கையேடு மற்றும் சொல்வது எழுதுதல் வார்த்தைகள்!!

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சென்னையில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போதுமான நிதி அரசிடம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் பாரதிய ஜனதா மற்றும் புதிய கட்சிகளுக்கு மக்கள் மனதில் இடம் கிடைக்காது என்றார்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் - மாணவர் விகிதம் அட்டவணை ( ந.க.எண் 055838 - நாள்: 18.04.2018-ன் படி )




மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கலாமா ? RTI Reply!

மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கலாமா ? RTI Reply! 1.    மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்

 விடுப்பை துய்க்கலாமா ?

2.    தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?

3.    தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும்
       ஏற்புடையதா?

High School HM Case Judgement Copy (04.06.2018)

12/6/18

சென்னை எழிலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் உண்ணாவிரதம் : இரவு முழுவதும் தங்கினர் : பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் சென்னையில் 
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 தமிழக அரசு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்  என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த 7 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இருப்பினும் தமிழக அரசு இதுவரை அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. கடந்தாண்டு முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

 இதை கண்டித்து கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனால், முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ-ஜியோ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் தடையை மீறி போராட்டம் நடந்தது.

இந்நிலையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

 அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள ஆவின் வளாகம் முன்பு நேற்று காலை 10 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

 முன்னதாக, தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருவதால் பிரச்னைகளை தடுக்க உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் எழிலக வளாகம் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
 இதேபோன்று பிற மாவட்டங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று மாலை வரை அரசு அழைத்து பேசாததால் நேற்றிரவும் உண்ணாவிரதம் நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய எழிலகம் வளாகத்தில் போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

போராட்டம் குறித்து அமைப்பின் நிர்வாகி மாயவன் கூறுகையில், ‘‘பழைய ஓய்வூதியம் அமல்படுத்துவது, ஊதிய முரண்பாட்டை சரி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்க முடியாத நிலையில் திராணியற்ற அரசாக உள்ளது.

 அரசு துறைகளில் 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாமல் அந்த இடங்களை பறிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 அதை உடனே ரத்து செய்ய வேண்டும். தற்போது எங்கள் போராட்டம் நீடிக்கும். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் நீடிக்கும்’’ என்றார்.

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், 12 சதவீதம், 'பாஸ்' 51வது இடம் பிடித்தார் தமிழக மாணவர்

ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஹரியானா மாணவர், தேசிய அளவில் முதலிடம் பெற்றார். சென்னை தனியார் பள்ளி மாணவர், தேசிய அளவில், 51ம் இடம் பிடித்தார்.

ஐ.ஐ.டி., மற்றும், என்.ஐ.டி.,யில், மாணவர்கள் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வு முடிவை, தேர்வை நடத்திய, கான்பூர் ஐ.ஐ.டி., நேற்று வெளியிட்டது. இதில், மொத்தம், 360 மதிப்பெண்களுக்கு, 337 மதிப்பெண் பெற்று, ஹரியானா மாணவர், பிரணவ் கோயல், தேசிய, 'ரேங்க்' பட்டியலில் முதலிடம் பெற்றார். இவர், ஐ.ஐ.டி., ரூர்க்கி மண்டலத்தில், பதிவு செய்து தேர்வு எழுதியவர்.தமிழகத்தில், சென்னை மண்டலத்தில், சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த, விஜயவாடாவைச் சேர்ந்த மாணவர், மவுரிசிவ கிருஷ்ண மனோகர், அகில இந்திய அளவில், ஆறாம் இடம் பெற்றுள்ளார்.

சென்னையில், 'பிட்ஜீ' பயிற்சி மைய மாணவர், கிரிநாத், 285 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், 51ம் இடம் பிடித்துள்ளார். இவர், சென்னை மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் படித்து, பயிற்சி மையத்தில், நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர். அதேபோல, பல மாணவர்கள், பிட்ஜீ மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த விழாவில், பாராட்டும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

தேசிய அளவில், 23 ஐ.ஐ.டி.,க்களில், 11 ஆயிரத்து, 279 இடங்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,076 மாணவியர் உட்பட, 18 ஆயிரத்து, 138 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில், 8,794 பேர்; பிற்படுத்தப்பட்ட பிரிவில், 3,140; தலித் மாணவர்களில், 4,709 மற்றும் பழங்குடியினர் பிரிவில், 1,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐ.ஐ.டி.,க்களில், மாணவியரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, இந்த ஆண்டு முதல், மாணவியருக்கு தனி இட ஒதுக்கீடு அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, 800 இடங்கள் மாணவியருக்கு மட்டும், தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்க்க அவகாசம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங், சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம் தவறியவர்களுக்கு, சலுகை அளித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, இன்ஜி., 
கல்லுாரிகளில் சேர்வதற்கான, ஆன்லைன் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த கவுன்சிலிங்குக்கு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, இம்மாதம், 8ம் தேதி துவங்கியது. 42 உதவி மையங்களில் நேரம் ஒதுக்கி, விண்ணப்பதாரர்கள், சான்றிதழ்களுடன் வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாதவர்களுக்கு, புதிய சலுகை அளித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வர முடியாதவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கான கடைசி நாளான, ஜூன், 14க்கு முன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்திற்கு, எந்த நேரத்திலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரலாம்.அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு முறை தான் அனுமதிக்கப்படுவர். எனவே, வரும்போது, விண்ணப்ப படிவத்தை பிரதி எடுத்து, அதில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி வர வேண்டும். விண்ணப்பத்தின், மூன்றாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களின், நகல்களையும் எடுத்து வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 புத்தகம் விற்க சிறப்பு கவுன்டர்கள்

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கான, புதிய பாடப் புத்தகங்கள் 
வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வகுப்புகளில், புதிய பாடத்திட்ட பயிற்சிகளும் துவங்கியுள்ளன.பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட, பிளஸ் 1க்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்படுவது தாமதமானது. முடிந்த கல்வியாண்டில், பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்களின் மதிப்பெண் குறைந்ததால், இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்புகள், முன்கூட்டியே துவங்கியுள்ளன. ஆனால், புத்தகங்கள் கிடைக்காமல், மாணவர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், பிளஸ் 1 புத்தகங்கள், டிஜிட்டல் வடிவில், தமிழக பாடநுால் கழக இணையதளத்தில், சில தினங்களுக்கு முன் வெளியாகின. இதை தொடர்ந்து, புதிய புத்தகங்கள், இன்று விற்பனைக்கு வருகின்றன. தமிழக பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகங்கள் கிடைக்கும். சென்னை, டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் உள்ள, தமிழக பாடநுால் கழக விற்பனை மையத்தில், சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், https://textbookcorp.in என்ற இணையதளத்தில், ஆன்லைனிலும், 'புக்கிங்' செய்து, புத்தகங்களை வீட்டிலேயே, 'டெலிவரி' பெறலாம்.

மருத்துவ படிப்பு சேர்க்கை இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம். மேலும், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம்செய்தும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்காக, 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 18ம் தேதிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

'ஜூலை முதல் 'நீட்' பயிற்சி' பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,

நடப்பு கல்வி ஆண்டுக்கு, ஜூலை முதல், 'நீட்' பயிற்சி துவக்கப்படும்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில், நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: கடந்தாண்டு, அரசு வழங்கிய, நீட் தேர்வு பயிற்சியில், ௧,402 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவ கல்வி, 'கட் ஆப்' மார்க், நாளை வெளியிடப்படுகிறது. இதன் பிறகே, இம்மாணவர்களில் எத்தனை பேர், மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர், என்பது தெரியும். அரசின் பயிற்சியால், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், மருத்துவ கல்லுாரி செல்லும் மாணவர்களுக்கும், விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும் ஜூலை முதல், நீட் தேர்வு பயிற்சி துவக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும், எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள, 412 மையங்களிலும், நீட் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி : திருப்பூரில் அமைச்சர் செங் கோட்டையன் பேசியதாவது: புதிய பாடத்திட்டத்தை நடத்துவதற்கு, ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் பயிற்சியளிக்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் லேப்-டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கல்வித்தரத்தை மேம்படுத்த, 'ரோபோ கிளாஸ்' வகுப்பறையை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கல்வித்தரத்தை, தேசிய அளவில் உயர்த்தும் நோக்கத்தில் தான் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன, என்றார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 11.6.18 முதல் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு மொழிப்பாட தேர்வுகளை ஒரே பாடமாக்கி அரசாணை வெளியீடு




9/6/18

சட்டம்

சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்

சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும்

சில உளவியல் உண்மைகள்

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்

சிறுநீரக கோளாறு

செல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து

டாக்டர்நகைச்சுவை 2

டூரின் துணி யேசுநாதரின் இறப்பில் மொத்தமாக மூன்று துணிகள்

தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்

தாய் பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்

தான் வாழ பிறரை கெடுக்காதே

தினம் ஒரு குட்டிக்கதை

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்

தோல்வி என்றால்?

நமது மனதிலும்

நல்ல குடி நீர் என்பதற்கும்

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும்

பி.இ. சேர்க்கை: இன்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்: உதவி மையத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகச் செல்ல வேண்டும்

 பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக கலந்தாய்வு உதவி மையத்தில் மாணவர்கள் ஆஜராக வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,78,131 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதன்முறையாக ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. கலந்தாய்வை வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க 1,59,631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. 
42 உதவி மையங்களில்: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களிலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. 
அசல் சான்றிதழ் சரிபார்ப்பானது அனைத்து உதவி மையங்களிலும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும். காலை 9 - 10 மணி வரை ஒரு பிரிவு, 10-11 மணி வரை இரண்டாம் பிரிவு என ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவு மாணவர்கள் எனப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை. அதன் பிறகு பிற்பகல் 1.30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
மாணவர்கள், தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் உதவி மையத்துக்கு வந்து விடவேண்டும்.
மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியது என்னென்ன?: சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டிய மையம், தேதி, நேரம், வரிசை (டோக்கன்) எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாணவர் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் தங்களுடைய பயன்பாட்டாளர் குறியீட்டைப் பயன்படுத்தியும் இந்த விவரங்களை மாணவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும்.
அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்: மாணவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, ஆன்-லைன் பதிவு செய்த விண்ணப்ப நகலை பிரதி எடுத்து அதில் மார்பளவு புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்துச் செல்லவேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் (இணை மதிப்பெண் சான்றிதழ்), பிளஸ்-2 பொதுத் தேர்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும். 
தேவைப்படுவோர் இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவருக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான உறுதிமொழி, இலங்கை அகதிகள் என்றால் அதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், விளையாட்டு வீரருக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
நகல் மட்டும் வைத்துக் கொள்ளப்படும்: இந்தச் சான்றிதழ்களைப் பொருத்தவரை அசல் மற்றும் நகல் இரண்டையும் மாணவர்கள் எடுத்துச் செல்லவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் நகல் சான்றிதழ்கள் மட்டும் உதவி மையத்தில் வைத்துக் கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் மாணவர்களிடமே திருப்பி அளிக்கப்பட்டு விடும். 
ஏற்கெனவே வேறு படிப்புகளில் சேர்ந்தவர்கள் என்ன செய்வது?: சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாகவே, வேறு படிப்புகளில் சேர்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் அசல் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கும் மாணவர்கள், கல்வி நிறுவனத்தின் முதல்வரிடமிருந்து அத்தாட்சி (போனஃபைடு') கடிதத்தையும், அந்தக் கல்வி நிறுவனத்தின் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தால் போதுமானது. அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. 
ஆன்-லைன் கலந்தாய்வு குறும் படம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது, இடங்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பன குறித்த குறும் படம் ஒன்று அனைத்து உதவி மையங்களிலும் போட்டுக் காண்பிக்கப்படும்.
அத்துடன், ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான முழு விவரங்கள் அடங்கிய சிறிய புத்தகம் ஒன்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தச் சிறிய புத்தகத்தை மாணவர்கள் தவறாமல் கேட்டுப் பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். 
உதவி மையங்களுக்கு செல்ல முடியாவிட்டால்... 
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு உதவி மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மாணவருக்குப் பதிலாக அவருடைய பெற்றோர் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் பெற்றோர், மாணவரின் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், மாணவரின் அசல், நகல் சான்றிதழ்களையும் உதவி மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய பெற்றோர் தங்களுடைய அசல் புகைப்பட அடையாள (ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை, கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை) இதில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிப்பது அவசியம்.
மாணவரோ அல்லது பெற்றோரோ குறிப்பிட்ட தேதியில் உதவி மையத்துக்குச் செல்ல முடியாதபோது, கடைசி நாளான ஜூன் 14-ஆம் தேதியன்று தொடர்புடைய கலந்தாய்வு உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
இந்த இரண்டாவது வாய்ப்பிலும் உதவி மையத்துக்குச் செல்ல முடியாத மாணவர்கள், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றார் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ்.

மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்துள்ளார்.


தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் பேரவையில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வித்திட்டத்தின்கீழ் புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் புதிய தொழில்நுட்பத்தினை பள்ளிக்கல்வித்துறை புகுத்தவுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் அட்டைகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படு. பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவினை மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விடும்படி தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

மாணவர் இல்லாததால் மூடப்பட்ட முதல் அரசு பள்ளி

மாணவர்கள் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பள்ளியாக அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மூடப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சி அல்லம்பட்டியில் 1998-ல் சுமார் 50 மாணவர்களோடு அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இரு வகுப்பறைகளைக் கொண்ட பள்ளிக் கட்டிடம், சமையல்கூடம், கழிப்பறைகள், குடிநீர் தொட்டி,விசாலமான மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் செயல்பட்ட இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணிபுரிந்தனர். 

இப்பள்ளியில் அல்லம்பட்டி, மனவயல், தாழிச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகவும், அவர் ஒழுங்கீனமாக செயல்பட்டதாகவும் ஊர் மக்களால் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கல்வித் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய 

நடவடிக்கை இல்லையாம்.இதனால் விரக்தி அடைந்த மக்கள், மாணவர்களை இப்பள்ளிக்கு அனுப்பாமல் அங்கிருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அறந்தாங்கி தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கநிலைக்கு சுருங்கியதால், ஓராசிரியர் பள்ளியானது.


  
அப்போது, இங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பணியாற்றியதாகக் கூறி, கடந்த ஆண்டு பயின்ற 2 மாணவர்களும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர். 

இதனால், இந்தக் கல்வி ஆண்டுஇப்பள்ளி திறக்கப்படவில்லை. இங்கு பணியாற்றிய ஆசிரியரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மூடப்பட்டுள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இளைப்பாறும் இடமாகவும், திறந்த வெளி மதுபானக் கூடமாகவும் பள்ளி வளாகம் தற்போது மாறியுள்ளது.

இதுகுறித்து அல்லம்பட்டியைச் சேர்ந்த அழகர், கூறியது: அல்லம்பட்டி, தாழிச்சேரி, மனவயல் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் இருந்து சுமார் 60 மாணவர்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் செல்கின்றனர்.

அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு கடந்தசில ஆண்டுகளாக வந்த ஆசிரியர்கள் முறையாக பணியாற்றாததால் இப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் மறுத்துவிட்டனர். ஆசிரியர்களின் ஒத்துழைப்பின்மையால் இப்பள்ளியை மூடவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. கிராம வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்றார்.

முயற்சி பலனளிக்கவில்லைஅறந்தாங்கி கல்வித் துறை அலுவலர்கள்  கூறியபோது, “அல்லம்பட்டி கிராமத்தில் இருந்து பெரும்பாலான மாணவர்களை தனியார் பள்ளிக்கும், தாழிச்சேரியில் இருந்து பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் அனுப்புகின்றனர். 

EMIS 2018-2019 New Format (pdf)

FLASH NEWS:-தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதலில் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் என்பது நீக்கம் - இயக்குநரின் செயல்முறைகள்!!


தனியார் பள்ளிகளுக்கு 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' ?

தமிழக பள்ளி கல்வித்துறையில், 30 ஆண்டுகளுக்கு முன், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் துவங்கப்பட்டது. மாவட்ட வாரியாக, மெட்ரிக் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மெட்ரிக் பள்ளிகளை, மெட்ரிக் இயக்குனரகத்தில் இருந்து மாற்ற, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. 
இதற்காக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆளுடைய பிள்ளை தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இந்த குழு அறிக்கையில், அனைத்து வகை பள்ளிகளையும் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது. 
அதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கலைக்கப்பட்டு, 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' புதிதாக உருவாக்கப்பட உள்ளது. இதன் கீழ், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., என, அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளும், இணைக்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்ய வேண்டும்

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வருகிற மார்ச்-2019-ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள மற்றும் முதன்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வெழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.


மேலும் அனைத்து தனித்தேர்வர்களும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவுசெய்து கொண்டு, மாவட்டக்கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறை தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.

செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் பொதுத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதுதொடர்பான மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 30-ந்தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரயில் நிலையங்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.5 கேஷ் பாக் அளிக்கும் பேடிஎம்..!

பிளாஸ்ட் கழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்திய ரயில்வே நிர்வாகம் வதோதரா ரயில் நிலையத்தில் பேடிஎம் உடன் இணைந்து 5 ரூபாய் கேஷ்பாக் சலுகை திட்டத்தினை அறிவித்துள்ளது.


வதோதரா ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டிலை கிரஷ் செய்யும் இயந்திரத்தில் தண்ணீர் பாட்டில்களைக் கிரஷ் செய்யும் போது பேடிஎம் மொபைல் எண்ணைச் சமர்ப்பித்தால் இந்தக் கேஷ் பாக் சலுகை வழங்கப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் இன்று ரயில்வே அமைச்சகம் மற்றொரு பசுமை முயற்சியாகச் சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் வழங்குப்படும் உணவு பாக்கெட்களினை மக்கும் தன்மையுடன் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்தச் சேவையினை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மக்கும் பாக்கெட்களின் உணவினை விநியோகம் செய்யக் கூடுதலாக 1 முதல் 5 ரூபாய் செலவாகுவதாகவும் ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது..

24 மணி நேரம் போதவில்லை என புலம்ப வேண்டாம்.. பூமியில் ஒருநாள் 25 மணி நேரமாக அதிகரிக்க போகிறதாம்!

வருங்காலங்களில், நாள் ஒன்றிற்கான நேரம், 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 
அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் இதுபற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.


140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. ஆனால் வருடத்திற்கு 3.82 செ.மீ தூரத்திற்கு நிலவு விலகி சென்றபடியே உள்ளது.


விலகும் நிலவு
தற்போது அது முதலில் இருந்ததைவிட 44 ஆயிரம் கி.மீ தூரம் பூமியை விட்டு விலகி சென்று உள்ளது. எனவே இப்போது ஒரு நாள் நேரம் என்பது 24 மணி நேரமாக உள்ளது.


இதுவே, 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரம் 41 நிமிடங்களாக மட்டுமே இருந்தது.


25 மணி நேரங்கள்
நிலவு நகரும் அளவை கணக்கில் கொண்டு பார்த்தால், அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில், பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரங்களாக இருக்கும். அப்போது மக்களின் கால நேரம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஒரு நாளைக்கு 24 மணி நேரமே போதவில்லை என்று புலம்பும் பலர் நம்மில் உண்டு.

அவர்களின் வருங்கால சந்ததிகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 25 மணி நேரத்தை என்ஜாய் செய்யலாம்.

இதை நினைத்து அவர்கள் மனதை தேற்றிக்கொள்ளவும்.
வருங்கால சந்ததிகள்
25 மணிநேரமாக உயர்வது என்னவோ மகிழ்ச்சியான செய்திதான்.

ஆனால், அதுவரை உலகை நாம் பாதுகாப்பாக வைத்திருப்போமா, சுய நலத்திற்காக கூறு போட்டிருப்போமா, என்பதே நமது முன்னால் இருக்கும் கேள்வி

82 கல்லூரிகளுக்கு தடை! போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால்,

நாடு முழுவதும் உள்ள 70 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் தரம், இட வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தது. இதில் 70 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் என 82 மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி இல்லாமலும், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமலும் இருந்தது தெரியவந்தது. இதனால் இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தடை உத்தரவைப் பிறப்பித்ததாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்த காரணத்தினால், நாட்டில் மொத்தமுள்ள 64 ஆயிரம் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பத்தாயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது.
இதேபோன்று புதிய மருத்துவக் கல்லூரிக்காக விண்ணப்பிக்கப்பட்ட 37 தனியார் கல்லூரிகளும், 31 அரசுக் கல்லூரிகளும் என மொத்தம் 68 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும். மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்திலுள்ள  32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் இன்று பேசிய அவர்

 இன்னும் 1 மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள  32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என்றார். பேரவையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நூலகங்களை பராமரிக்க தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் நூலகங்கள் அமைக்க நூல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். எத்தனை நூல்கள் வழங்கினாலும் அதனை பெற்று கொண்டு, நூலகங்களில் வைப்பதற்கென தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணம் : நிகர்நிலை பல்கலை.,-களுக்கு உத்தரவு

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகள், மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜவஹர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வீதம் ஐந்தரை ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடிக்க 71.5 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு மேற்கண்ட கல்விக்கட்டணம் தவிர MBBS சீட் பெற நன்கொடை தனியே வசூலிக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று. கல்லூரியின் தரத்தை பொறுத்து ரூ.80 லட்சம் வரை கட்டாய நன்கொடை வசூல் வேட்டை நடைபெறுவது நிதர்சனம்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ( 12.06.2018 ) - காலை 11 மணிக்கு எடுக்க வேண்டிய உறுதிமொழி :

ஒகி புயலின் போது உயிரிழந்த, காணாமல் போனவர்களின் குடும்பத்தை சேர்ந்த 188 பேருக்கு அரசு பணி - அரசாணை வெளியீடு , G.O(Ms)No:111 - Dated :31.05.2018





8/6/18

சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகம் வெட்டி உள்ளிட்ட சுகாதாரப் பேழைகள்

சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகம்வெட்டி உள்ளிட்ட சுகாதாரப் பேழைகள் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் வி.சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்: எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் 43,205 சத்துணவு மையங்கள் வாயிலாக பயனடைந்து வருகின்றனர். இந்த மையங்களில் உணவு சமைக்கும்போதும், பரிமாறும்போதும் சுகாதாரத்தினைக் கடைப்பிடிக்க சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மையம் ஒன்றுக்கு ரூ. 400 செலவில் சோப்பு, நகம்வெட்டி, துண்டு, கையுறைகள் போன்றவை உள்ளடக்கிய சுகாதாரப் பேழைகள் அனைத்து மையங்களுக்கும் ரூ.1.73 கோடியில் வழங்கப்படும். 
குழந்தைகள் நலக் குழுக்கள்: பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக சென்னை மாவட்ட குழந்தை நலக் குழு அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைக் கையாள வேண்டியுள்ளது. எனவே, பராமரிப்பு, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஏதுவாக சென்னை மாவட்டத்துக்குக் கூடுதலாக இரண்டு புதிய குழந்தைகள் நலக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இதற்கு ஓராண்டுக்கு கூடுதலாக ரூ.21.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 
குடிநீர் வசதி: 1,132 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1.13 கோடியில் தேவையான குடிநீர் வசதி வழங்கப்படும்.
திருநங்கைகள் மானியம் ரூ.50,000: திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ளும் பொருட்டு வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ள மளிகைக் கடை அமைத்தல், கறவை மாடுகள் வளர்த்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல் போன்ற தொழில் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரமாக வழங்கப்பட்ட மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி ஆண்டொன்றுக்கு 150 திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ரூ.75 லட்சம் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். சத்துணவில் முட்டை சாப்பிடாத பயனாளிகளுக்கு வழங்கப்படும் வாழைப் பழத்தின் விலை ரூ.1.25-இலிருந்து ரூ.3.50-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு சேவை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் உணவூட்டு செலவினம் மாதம் ரூ.400-இலிருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படும். ஆண்டு பராமரிப்புச் செலவினம் ரூ.150-இலிருந்து ரூ.500-ஆக உயர்த்தப்படும் என்றார் அமைச்சர் சரோஜா. 

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் இல்லாமல் தேர்வு செய்ய நடவடிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக, வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெற முடியாத நிலை கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு தேர்வு வாரியம் மூலமாகத் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை தயவு செய்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 42 ஆயிரத்து 724 பேர் தேர்வு பெற்றார்கள். அதில், 13 ஆயிரத்து 781 பேர் பணியிடங்களைப் பெற்றனர். மீதம் உள்ளோருக்கு ஏழு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. பட்டதாரி ஆசிரியர்களில் 52 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 275 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அரசின் கடமையல்ல: தகுதித் தேர்வைப் பொருத்தவரையில், தேர்வர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க முடியுமே தவிர, அவர்கள் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது அரசின் கடமையல்ல. ஆனாலும், 2014-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 938 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் சான்றிதழ் வழங்குவது குறித்துப் பேசப்பட்டது. இதுதொடர்பான விசாரணை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைந்து அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

4th All Subject 1st Unit Lesson Plan

WORK DONE REGISTER (பணி செய் பதிவேடு)

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மின்தேவை அதிகரிக்கும் என்பதால் தடையின்றி மின்சாரம் விநியோகிக்க பொறியாளர்களை மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்') கீழ் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க...: கடந்த மார்ச், ஏப்ரல் (2018) மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தத்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், வேலூர், சென்னையில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத இயலும். 
தத்கலில் விண்ணப்பித்து தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் ஜூன் 11, ஜூன் 12 ஆகிய இரு தேதிகளில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். 
பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். 
தேர்வுக் கட்டணம்: ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35, கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு...: கடந்த மார்ச், ஏப்ரல் (2018) மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
தத்கலில் விண்ணப்பித்து தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 11, 12 ஆகிய இரு தேதிகளில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ள மார்ச், ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். 
கட்டணம் எவ்வளவு? தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500 என மொத்தம் ரூ.625-ஐ செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்த வேண்டும். 
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம்: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு நாடு முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிரwww.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். 
மொத்த இடங்கள்: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத அகில இந்திய இடங்கள் போக 2,594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதே போன்று தமிழகத்தில் சென்னை பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய இடங்கள் 30 போக, மீதம் உள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு கலந்தாய்வை நடத்த உள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கும் ஜூன் 18-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவுக்குச் சென்று சேர ஜூன் 19-ஆம் தேதி கடைசியாகும். ஜூலை 1-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
70,000 விண்ணப்பங்கள்: நேரடி விநியோகத்துக்காக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 45,000 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க 25,000 விண்ணப்பங்களும் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேற்கொண்டு விண்ணப்பங்கள் தேவைப்பட்டாலும் அச்சடித்து மீண்டும் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.

திருவள்ளூரில் மின்னலை செல்போனில் படம் பிடித்தவர் கதிர்வீச்சின் ஈர்ப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வந்தது. மதியம் 3 மணிக்கு மேல் வானிலை மாற்றம் அடைந்து, மாலையில் மழை பெய்தது. புழல், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்தக் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த ரமேஷ், துரைப்பாக்கத்தில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கனமழை பெய்யும் நேரத்தில் இவர், தனது நண்பர்களுடன் சுண்ணாம்பு குளம் பகுதியில் இறால் பண்ணையை பார்வையிட சென்றுள்ளார். அப்போது, அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. மின்னலை கண்ட ரமேஷ், அதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அப்போது செல்போனின் கதிர்வீச்சால் இழுக்கப்பட்ட மின்னல், ரமேஷின் முகம் மற்றும் மார்பில் தாக்கியுள்ளது. இதில் கருகியதும், பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ரமேஷ் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட பின்னர், பணிநிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும், என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் மற்றும் மாறுதல் கலந்தாய்வு, ஜூன் 14 முதல் துவங்குகிறது.மாநில அளவில் 12,000க்கும் மேல் பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக (சர்பிளஸ்) ஆக உள்ளனர். எனவேபணிநிரவலுக்கு பின் பொதுமாறுதல் நடந்தால் சில காலி இடங்களே ஏற்படும்.

மேலும், பட்டதாரி ஆசிரியரில் இருந்து உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, இரண்டு ஆண்டுகளாக நீடித்த நீதிமன்ற தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 1200 ஆசிரியர், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறும்பட்சத்தில் பொது மாறுதலில் அந்த 1200 காலி இடங்களும் காண்பிக்கப்படும்.

இதுகுறித்து உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் பாஸ்கரன் கூறியதாவது: பணிநிரவலுக்கு பின் பதவி உயர்வு அளிக்கப்பட்டால் மீண்டும் 1200 காலி இடங்கள் ஏற்படும்.இந்த இடங்களை முறைகேடு மூலம் நிரப்ப வாய்ப்பு ஏற்படும். மேலும் இணை இயக்குனர் - முதன்மை கல்வி அலுவலர் - மாவட்ட கல்வி அலுவலர் என்ற வரிசையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட பின்னர், பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தினால் மேலும் கூடுதல் காலியிடம் ஏற்படும். ஆனால் ஏனோ தலைகீழ் வரிசையில் கலந்தாய்வு நடக்கிறது, என்றார்.

நடப்பாண்டு ஆசிரியர் - மாணவர் நிர்ணயம், சென்ற ஆண்டு (1.8.2017) படி நிர்ணயிக்கப்பட்டதால் தான், உபரி ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இந்தாண்டு மாணவர் சேர்க்கை முடிந்த பின், அதன் அடிப்படையில் உபரிஆசிரியர் கணக்கிட வேண்டும், என ஆசிரியர்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

வாரத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியீடு:

கடந்த ஆண்டு அக்டோர் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற 85 காலியிடங்களுக்கான குரூப் I மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்திலும், கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற 9351 காலியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடப்படலாம் என்ற தோராய கால அட்டவணையினை டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 
2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையில்லையா யோசனைகள்!

இன்று பலர் என் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை. என்றோ.. அல்லது இந்த வேலை எனக்குத் தெரியாது, அந்த வேலை எனக்கு ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டு வேலைக்குச் செல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. வேலைவாய்ப்பின்மையைச் சமாளிக்கவும் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் சில சிறந்த வழிகள்: 
சுய உதவி பெறலாம்: நீண்ட காலம் வேலை இல்லாமல் இருப்பது உங்கள் சுய மரியாதையைப் பாதிப்பதோடு அது தன்நம்பிக்கையை குறைக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே உரிய நபர்களிடம் சிறந்த ஆலோசனைகளைப் பெறுவதோடு, உள்ளூர் நூலகம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடனான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். 
வேலைக்கான உதவியைப் பெறுங்கள்: தற்போதைய தேடல் வெற்றியடையவில்லை என்றால் புதிய வாய்ப்புகளுக்கு பொருத்தமாக உங்கள் விண்ணப்பத்தை மாற்றிக் கொள்ளலாம். வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றவாறு தகுதியை, தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்வதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். 
பிற வேலைவாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்கள்: உங்கள் முந்தைய வேலையின் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் வேறு ஒரு வேலையை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். எனினும் பகுதி நேர வேலை மற்றும் சில ஒப்பந்தப் பணிகளைச் செய்வதால் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் உங்கள் தொலைபேசிக் கட்டணம், புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியும். 
விரும்பிய நிறுவனத்தை நோக்கிச் செல்லுங்கள்: ஏதேனும் ஒரு நிறுவனத்தின் மீது உங்களுக்கு ஆர்வமோ, அல்லது பெரும் மதிப்போ இருக்குமானால் அந்த நிறுவனத்தில் கடைநிலைப் பணியானாலும் ஏற்றுக் கொண்டு நிறுவனத்தோடு உங்களை இணைத்துக் கொள்வது நல்லது. பின்னர் உங்கள் திறமையை, நேர்மையைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தில் உயர் பதவியை அடையும் வாய்ப்பை உருவாக்கலாம். 
நேர்காணலுக்கான திறன்களை வளர்த்தல்: நேர்காணலின் போது உங்களுக்கு அதிக நம்பிக்கை, தைரியம் தேவைப்படலாம் அல்லது ஒரு நிர்வாக உதவியாளராக சிறந்த தொழில்நுட்ப திறன்கள் தேவைப்படலாம். இணைய
தளம் மற்றும் உள்ளூர் பயிற்சி மையங்கள் இதற்கான வகுப்புகளை நடத்துகின்றன. அதன்மூலம் திறனை வளர்த்துக் கொண்டு தகுந்த வேலையை அமைத்துக் கொள்ளுங்கள். 
வேலை என்பது ஊதியத்துக்கானது மட்டுமல்ல. நம்மை நமக்கும் பிறருக்கும் அடையாளப்படுத்துவதும் ஆகும்.

முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்

110விதியின் கீழ் பணிநிரந்தர அறிவிப்பினை முதல்வர் வெளியிட தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை!!!

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் முதல்வருக்கு 3.6.2018 அன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். 
    அதில் கடந்த ஜீன், ஜீலை 2017ல் நடைபெற்ற  சட்டமன்ற கூட்டத்தொடரில் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்த திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்றும், பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் பதிலளித்திருந்தார்.
 ஆனால் ஜனவரி 2018ல் நடைபெற்ற கூட்டத்தொடரில் வேடச்சந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது தரப்பட்டுவரும் தொகுப்பூதியமான ரூ.7700/- ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தியதைகூட கல்வி அமைச்சர் கருத்தில் எடுத்தகொள்ளவில்லை.
அதைப்போலவே இந்த நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் கம்பம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது தரப்பட்டுவரும் தொகுப்பூதியமான ரூ.7700/- ஊதியத்தை ரூ.15000மாக உயர்த்தி தர வலியுறுத்தியதைகூட அமைச்சர் மறுத்தது கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்களுக்கு பதிலளித்ததற்கு நேர்எதிராக பேசியுள்ளது, அனைத்துவேலை நாட்களிலும் முழுநேரப்பணியுடன் பணிநிரந்தரத்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் வெவ்வேறு விதமாக கல்விஅமைச்சர் பதிலளித்து வருவது குறித்து அனைவரும் வேதனைக்குள்ளாகிவிட்டனர்.
முழுநேரவேலை கேட்டுவரும் பகுதிநேர ஆசிரியர்களின் தொடர்கோரிக்கைகளை ஏற்காத தமிழகஅரசு, மாறாக பள்ளிகளை இழுத்துமூடி பூட்டுபோடும் ஜாக்டோஜியோ கூட்டமைப்பின் போராட்ட நாட்களில் மட்டும் அரசு உத்தரவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமும் முழுஅளவில் பயன்படுத்தி 100% அளவில் பள்ளிகளை இயக்கிடும் அரசின் இரட்டைநிலையை கைவிட்டு 8 வருடப்பணிக்கு அங்கீகாரம் அளித்து அனைத்துவேலைநாட்களிலும் முழுநேரப்பணிடன்கூடிய காலமுறை ஊதியத்தில் சிறப்பாசிரியர்களாக பணியமர்த்திட வேண்டும்.
    மே மாத ஊதியம், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதலாக வேலை, இறந்துபோன பகுதிநேரஆசிரியர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணநிதி, 58 வயதைஎட்டி பணிஓய்வில் சென்ற பகுதிநேர ஆசிரியர்களுக்குக்கும் முதலமைச்சர் நிவாரணநிதி, பெண் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன்கூடிய மகப்பேறுகால விடுப்பு, அனைவருக்கும் அவரவர் இருப்பிட பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல், மாதத்தில் 1ந்தேதி சம்பளம் போன்ற கோரிக்கைகளை கேட்டு வலியுறுத்தி கேட்டுவந்தும் இதுவரை அரசு பரிசீலித்து வருவதாக தெரியவில்லை. மேலும் பொதுவாக ஒப்பந்த தொகுப்பூதிய பணிசெய்பவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுவரும் பி.எஃப், இ.எஸ்.ஐ, இ.பி.எஃப், இன்கிரிமென்ட்(ஆண்டுவாரியான ஊதிய உயர்வு), பண்டிகை போனஸ் போன்றவற்றையும் அரசு அமுல்செய்யவில்லை. 7வது ஊதியக்குழு அரசாணைப்படி 30% ஊதியஉயர்வையும் இதுவரை வழங்கவில்லை. அதைப்போலவே மத்தியஅரசின் குறைந்தபட்ச ஊதியத்தையும் நிர்ணயம் செய்து இதுவரை நடைமுறை செய்யவில்லை. 
    மேற்கண்ட இவை அனைத்தும் அரசு வழங்காததால் வாழ்வாதாரம் சுரண்டப்படுகிறது.  எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் தற்போது பணிபுரியும் 12637 தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கிவரும் குறைந்த தொகுப்பூதியமான ரூ.7700ஐ உயர்த்தி, வாரம் 3 அரைநாள்கள் மட்டும் பணி என்பதை மாற்றி இனி அனைத்து வேலை நாட்களிலும் முழுநேரப் பள்ளிப் பணியை வழங்கி, தமிழக அரசு மனிதநேயத்துடன் இந்த பட்ஜெட் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலாவது 110விதியின்கீழ் புதிய அரசாணை வெளியிட்டு சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என அக்கடிதத்தில் தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் நமது செய்தியாளர்களிடம் திரு.செந்தில்குமார் கூறியதாவது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கல்வி ஆண்டுகளில் 10 மாதங்களுக்கு மட்டுமே தொகுப்பூதியமாக ரூ.10000 வழங்கப்பட்டு வந்தது. இவர்களின் தொடர் போராட்டங்களை ஏற்று 14வது சட்டமன்றத்தில் ரூ5000 உயர்த்தி ரூ15000ஆக தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15வது சட்டமன்றத்தில் தற்போது நடந்த கல்விமானியக் கோரிக்கையின்போது உயர்கல்வித்துறை அமைச்சர்  அன்பழகன் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரைமுறை செய்யப்படும் என்று அறிவித்தார். எனவே கடந்த 8 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிசெய்துவரும் 12637 பகுதிநேர ஆசிரியர்களையும் பணிவரைமுறை செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அறிவித்து இருக்கவேண்டும் என்பதே அனைவரின் தொடர் கோரிக்கை ஆகும் என்றார்.
இவன், செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,செல் : 9487257203

BE - கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும்!

பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்க உள்ள நிலையில், முக்கிய விவரங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. மாணவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக கலந்தாய்வு உதவி மையத்தில் ஆஜராகி இருக்க வேண்டியது அவசியமாகும்.


தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,78,131 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான மாணவா் சோ்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளது. கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதில் பங்கேற்க 1,59,631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான சமவாய்ப்பு எண் ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து, விண்ணப்பித்தவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களிலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் மட்டும் மூன்று நாள்கள் கூடுதலாக ஜூன் 17 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.


இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

அசல் சான்றிதழ் சரிபார்ப்பானது அனைத்து உதவி மையங்களிலும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

காலை 9 - 10 மணி வரை ஒரு பிரிவு, 10-11 மணி வரை இரண்டாம் பிரிவு என ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவு மாணவா்கள் என பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

மதியம் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை. அதன் பிறகு மதியம் 1.30 முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

மாணவா்கள், தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் உதவி மையத்துக்கு வந்துவிடவேண்டும்.

மாணவா்கள் எடுத்துச் செல்ல வேண்டியது என்னென்ன?சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டிய மையம், தேதி, நேரம், வரிசை (டோக்கன்) எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாணவா் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதோடு, தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை இணையதளத்தில் தங்களுடைய பயன்பாட்டாளா் குறியீட்டை பயன்படுத்தியும் இந்த விவரங்களை மாணவா்கள் பார்த்துக் கொள்ளமுடியும்.

அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்: மாணவா்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, ஆன்-லைன் பதிவு செய்த விண்ணப்ப நகலை பிரதி எடுத்து அதில் மார்பளவு புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்துச் செல்லவேண்டும்.

அதோடு, பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் (இணை மதிப்பெண் சான்றிதழ்), பிளஸ்-2 பொதுத் தோ்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும்.

தேவைப்படுவோர் இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவருக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான உறுதிமொழி, இலங்கை அகதிகளுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரா் வாரிசு சான்றிதழ், விளையாட்டு வீரருக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த சான்றிதழ்கள் அனைத்தும் அசல் மற்றும் நகல் இரண்டையும் மாணவா்கள் எடுத்துச் செல்லவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னா் நகல் சான்றிதழ்கள் மட்டும் உதவி மையத்தில் வைத்துக்கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் மாணவா்களிடமே திருப்பியளிக்கப்பட்டுவிடும்.


ஏற்கெனவே வேறு படிப்புகளில் சோ்ந்தவா்கள் என்ன செய்வது?

இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாகவே, வேறு படிப்புகளில் சோ்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் அசல் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கும் மாணவா்கள், கல்வி நிறுவனத்தின் முதல்வரிடமிருந்து அத்தாட்சிக் (போனஃபைடு) கடிதத்தையும், அந்த கல்வி நிறுவனத்தின் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் சமா்ப்பித்தால் போதுமானது. அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்கத் தேவையில்லை.

பங்கேற்க முடியாதவா்கள் என்ன செய்வது?
கலந்தாய்வு உதவி மையங்களில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் மாணவா்கள் பங்கேற்க இயலாதபோது, மாணவருக்குப் பதிலாக அவருடைய பெற்றொர் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் பெற்றோர் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், மாணவரின் அசல், நகல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். அதோடு, அந்த பெற்றோர் தங்களுடைய அசல் புகைப்பட அடையாள அட்டை (ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை, கடவுச் சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை, ஆதார் அட்டை) ஏதாவது ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மாணவரோ அல்லது பெற்றோரோ குறிப்பிட்டத் தேதியில் பங்கேற்க இயலாதபோது, கடைசி நாளான ஜூன் 14 ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட கலந்தாய்வு உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

இந்த இரண்டாவது வாய்ப்பிலும் பங்கேற்க இயலாத மாணவா்கள், ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றார் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ்.

ஆன்-லைன் கலந்தாய்வு குறும்படம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணவா்கள் அனைவருக்கும், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது, இடங்களை எவ்வாறு தோ்வு செய்வது என்பன குறித்த குறும்படம் ஒன்று அனைத்து உதவி மையங்களிலும் போட்டுக் காண்பிக்கப்படும்.

அதோடு, ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான முழு விவரங்கள் அடங்கிய சிற்றேடு ஒன்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும். இந்தச் சிற்றேடை மாணவா்கள் தவறாமல் கேட்டுப் பெற்றுச்செல்ல வேண்டும் எனவும் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்:

மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்துள்ளார்.
 தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் பேரவையில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வித்திட்டத்தின்கீழ் புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் புதிய தொழில்நுட்பத்தினை பள்ளிக்கல்வித்துறை புகுத்தவுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் அட்டைகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படு. பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவினை மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விடும்படி தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

7/6/18

TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து
செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

சத்துணவில் முட்டை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்க திட்டம்

சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை உண்ண விரும்பாத
சிறுவர்களுக்கு ரூ.3.50 மதிப்பிலான வாழைப்பழம் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. ஒரு வாழைப்பழத்தின் செலவினத்தை ரூ.1.25-லிருந்து ரூ.3.50-ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.*

6,7,8 வகுப்புகளுக்கான புதிய பாட கால அட்டவணை!!!





பள்ளி தரம் உயர்த்த நிபந்தனை !!! விதிகளை மாற்ற வலியுறுத்தல்!!!

'பள்ளிகளை தரம் உயர்த்த, பொதுமக்கள் பங்களிப்பாக,
குறிப்பிட்ட தொகையை
செலுத்த வேண்டியுள்ளது.
இந்தவிதிமுறையை நீக்க வேண்டும்,'' என, தி.மு.க., -
எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - மாணிக்கம்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி
ஒன்றியம், கருப்பட்டி உயர்நிலைப் பள்ளியை,
மேல்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: விதிமுறைகள்
பூர்த்தியாகாததால், தரம் உயர்த்த இயலாது.

மாணிக்கம்: விதிமுறைகளை பூர்த்தி செய்கிறோம்.
தரம்உயர்த்த, அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: கண்டிப்பாக நடவடிக்கை
எடுக்கப்படும்.

காங்., - வசந்தகுமார்: களக்காடு பகுதியில் உள்ள
மேல்நிலைப் பள்ளியில், இரு பாலாரும் படிக்கின்றனர்.
அதை, ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என, பிரிக்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: முதலில்,
உயர்நிலைப் பள்ளியாக பிரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - பூங்கோதை: ஆரம்பப் பள்ளிகளில்,
மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆங்கில
மோகத்தால், குழந்தைகளை, ஆங்கிலப் பள்ளிகளில்
சேர்க்கின்றனர். எனவே, ஆரம்ப கல்வியில், தமிழ்
வழிக் கல்வியை போல், ஆங்கில வழி பள்ளிகளை
கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்:
இதுகுறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.

தி.மு.க., - தங்கம் தென்னரசு: நடுநிலைப் பள்ளியை,
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, பொதுமக்கள்
பங்களிப்பாக, ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி
உள்ளது. அதே போல், உயர்நிலைப் பள்ளியை
மேல்நிலையாக தரம் உயர்த்த, இரண்டு லட்சம்
ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.அந்த காலத்தில்,
அந்தவிதி தேவையாக இருந்தது. தற்போது, மத்திய
அரசுபல்வேறு திட்டங்களின் கீழ், நிதி ஒதுக்குகிறது.
மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது.எனவே, பொதுமக்கள்
பங்களிப்பு தேவையில்லாதது. இந்த நிதியை திரட்ட
சிரமமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் பங்களிப்பு
தேவைஎன்ற விதியை நீக்க, அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நல்ல கருத்து.
இதுகுறித்து, முதல்வர் மற்றும் துணை முதல்வருடன்
கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்ததுaa

1,2,3,4,5 PRIMARY TIME TABLE - PEDAGOGY METHOD






வருவாய் மாவட்டந்தோறும் அரசுத் தேர்வுத்துறை அலுவலகங்கள் அமைவதற்குரிய கட்டிடங்கள் தேர்வு செய்வதை உறுதிப்படுத்துவது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம்.

Flash News : Higher Secondary HM Seniority List As on 01.01.2018

BE - 1.59 லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் வெளியீடு: ஜூலை 6-இல் கலந்தாய்வு தொடக்கம் :

பொறியியல் படிப்பில் சேர ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த 1.59 லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்') செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 6- ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதன் முறையாக இந்த ஆண்டு ஆன்-லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கி ஜூன் 2-ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 1,59,631 பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிடக் கூடுதலாகும்.
சம வாய்ப்பு எண் வெளியீடு: இந்த நிலையில், ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சம வாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர், செயலர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், துணைவேந்தர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரிடமிருந்து தலா இரண்டு மூல (சீட்) எண்கள் பெறப்பட்டு, அதிலிருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்குமான சம வாய்ப்பு எண் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 
செல்லிடப்பேசி எண்ணுக்கும்...: இந்த சம வாய்ப்பு எண் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதோடு, மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். இதில், சம வாய்ப்பு எண்ணுடன், சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம், தேதி, நேரம், டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இதை மாணவர்கள் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.
சம வாய்ப்பு எண் எதற்கு?: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளோரில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும்போது, இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த பாட மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
கடந்த ஆண்டில் 27 மாணவர்களுக்கு...: கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதற்கு 27 மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது. எனவே, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்போது நிகழ் கல்வியாண்டில் எத்தனை மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வரும்.
ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடத்தப்படும்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும். அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
தரவரிசைப் பட்டியல் எப்போது?: சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.
இடங்கள் எவ்வளவு? : 2018-19-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி. ஆகிய மூன்று துறைகளில் 9,110 இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 1,020 இடங்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 4,960 இடங்கள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 1,362 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,61,679 இடங்கள் என மொத்தம் 1,78,131 பி.இ., பி.டெக். இடங்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இது கடந்த ஆண்டைவிடக் குறைவாகும்.
கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வில் 1,82,214 பி.இ., பி.டெக். இடங்கள் இடம்பெற்றிருந்தன என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
கலந்தாய்வு எப்போது?: பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வைப் பொருத்தவரை வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். முதல் கலந்தாய்வுக்குப் பின்னரே இந்த தேதி இறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
26 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம் 
வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு நடவடிக்கை, ஊதியக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பி.இ. படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இதன் காரணமாக, மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டு 26 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 
இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், 2018-19-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெறுவதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கும் 26 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை. அதன்படி, இந்த 26 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்காது என்றார் அமைச்சர் அன்பழகன்.