யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/7/18

சரியாகப் படிக்காதவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்

சரியாகக் கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது என்பது உள்பட தனியார் பள்ளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 இதற்கான சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
 தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தொல்லை கொடுக்கக் கூடாது. பாலியல் தொல்லையில் இருந்து மாணவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

 தனியார் பள்ளிகளில் நல்ல அறிவுடைய பாடத்திட்டம் சார்ந்தவை, இணையான பாடத் திட்டம் சார்ந்தவை மற்றும் பிற பாடத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 விடைத்தாள் மதிப்பீடு: அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவும் தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் அதனுடைய கட்டடங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். அரசின் சார்பாக நடத்தப்படும் தேர்வுகள், விடைத்தாள்கள் மதிப்பீடு போன்ற பணிகளுக்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை மாற்றுப் பணிக்காக அனுப்பிட வேண்டும்.
 அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி ஆகியன மேற்கொள்ளப்படும். தேவைப்படும்பட்சத்தில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களை அதில் ஈடுபடுத்த அனுப்பிட வேண்டும்.
 கட்டணத்தை முறைப்படுத்த...தனியார் பள்ளிக் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டு அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தைத் தவிர வேறு எந்தப் பெயரிலும் கட்டணத்தை பெறக் கூடாது.
 சரியாகப் படிக்காதவர்கள்: தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் யாரையும் சரியாகப் படிக்கவில்லை எனக் காரணம் கூறி பொதுத் தேர்வுகள் எழுதுவதில் இருந்து தடுக்கக் கூடாது. தனியார் பள்ளிகளுக்குள் நலன்களைக் கெடுக்கும் வகையிலான போட்டிகளை நடத்தக் கூடாது.
 வெளிப்படையான சேர்க்கை: தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் கல்வி ஆண்டின் சேர்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக குறைந்தபட்சம் 30 நாள்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேர்க்கை குறித்த அறிவிப்பை, பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும், இணையதளத்திலோ அல்லது தகவல்களைத் தெரிவிக்கும் பள்ளி தொடர்பான பிற அம்சங்களின் வாயிலாகவோ வெளியிட வேண்டும்.
 பெற்றோர்-ஆசிரியர் சங்கம்: அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளிலும் கல்வி மற்றும் கற்பித்தல் சூழலின் தரத்தை மேம்படுத்தவும், அதில் பெற்றோரை பங்கெடுக்கச் செய்யவும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை அமைக்க வேண்டும்.
 அனுமதி பெறாமல் மூடக் கூடாது: தனியார் பள்ளியையோ அல்லது பள்ளியில் தொடங்கப்படும் பாடப் பிரிவையோ உரிய அரசு அமைப்பின் ஒப்புதலைப் பெறாமல் மூடக் கூடாது. அவ்வாறு மூடும் போது படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உரிய தகுந்த ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
 ஆசிரியர்களுடன் ஒப்பந்தம்: தனியார் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகக் குழு தேவைப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தம் செய்யலாம். இவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளருடன், பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஏற்கெனவே பணியிலுள்ள பணியாளருடன் சட்டம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் ஒப்பந்தத்தைச் செய்து செயல்படுத்திட வேண்டும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தங்கம் தென்னரசு கேள்வி: இந்த மசோதா தொடர்பான விவாதம் வியாழக்கிழமையே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மசோதாவில் உள்ள அம்சங்களை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் சூழல் இல்லாமல் நீட் தேர்வுக்கு பயற்சி அளிக்கும் மையங்களாக மாறி வருகின்றன. அதைத் தடுப்பதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள
...

அண்ணா பல்கலை, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இ.மெயில், செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை-2018 இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு
மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு காலை 9, 10.30, பிற்பகல் 12, 2 மணி என 4 நிலைகளாக நடத்தப்பட உள்ளது. நாளை (சனிக்கிழமை) முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவுக்கு காலை 9, 10.30, பிற்பகல் 2 மணி என 3 நிலைகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு காலை 9, 10.30, பிற்பகல் 12, 2, 3 மணிக்கு நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு பிரிவு மாணவர் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். இதில் மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொது கலந்தாய்வு
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்ததும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 10-ந்தேதிக்கு பின்னர் பொது கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில், மதிப்பெண்ணுக்கு ஏற்ற வகையில் கல்லூரியை தேர்வு செய்வது எப்படி? என்பது குறித்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதை கலந்தாய்வுக்கு செல்ல இருக்கும் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பிளஸ் 1 தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்ன?

பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு, அரையாண்டு தேர்விற்கான பாடப்பகுதிகளை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக பாடத்திட்ட மாணவர்கள் நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் 1ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு வினாத்தாளில், 20 சதவீத அளவுக்கு, மாணவர்களின் சிந்தனை திறனை பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுக்கான, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு முதல் அறிமுகமாகி உள்ளது. இந்த பாடத்திட்டப்படி, பாடம் நடத்தும் முறைகள் குறித்து, சமீபத்தில் தான், கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த கருத்தாளர்கள், வரும் வாரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதுவரை பயிற்சி இல்லாததால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்னவென்று, பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.அதனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், எந்த பாடங்கள் வரையிலும் தேர்வுகள் நடத்தப்படும்; அதற்கான வினாக்கள் எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே, புதிய பாடத்திட்டத்தில், பருவ தேர்வுகளுக்கான பாடப்பகுதிகளை, பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளன

இன்றைய கல்வி மாற்றத்தின்சவால்களும் - சவால்களைஎதிர்கொள்ளும் வழிகளும்

இன்றைய கல்வி செயல்முறையில்ஒவ்வொரு நாளும் ஒவ்வொருமாற்றமும், செயல்திட்டமும் அமல்படுத்திவருகின்றனர், இத்தகைய சூழலில்தனியார் மற்றும் அரசு பள்ளி  என்றவேறுபாடின்றி செயல்படுதல் வேண்டும். அப்போது தான் நல்ல முறையில் நமதுபள்ளியின் நிர்வாகத்தை நிர்வகிக்கமுடியும். எனவே இத்தகைய மாற்றங்கள்யாவும் நமக்கு புதிதாகவும் ஒருசவாலாகவும் உள்ளது.

இந்த சவால்களை சாதனையாக மாற்றQB365 நமக்கு மிகவும் பயனுள்ளவகையில் அமைந்துள்ளது. QB365 மூலம்மாணவர்களுக்கு தேவையானவினாக்கள் மற்றும் விடைகள் மேலும்கணக்கிற்கு தேவையான தீர்வுகள்  ( Questions, Answerkeys, Solutions ) எனஅனைத்தையும் மாணவர்களின்தன்மைக்கு ஏற்ப வழங்கலாம். மேலும்அவர்கள் பின்தங்கிய பகுதியைஉணர்ந்து மீண்டும் மீணடும் பயிற்சிஅளிக்கலாம்.
Online Tests  மூலம் எழுத்து தேர்வுகளைதவிர்த்து இணைய வழி மூலம்தேர்வுகள் நடத்தலாம், இதனால் எதிர் வரும் காலங்களில் நுழைவுத்தேர்வினை சிறப்பாக எழுதஅவர்களுக்கு ஏதுவாக அமையும். மேலும் பல்வேறு வகையானமேற்படிப்புகள் பற்றிய தகவல்களும், அவற்றின் தேர்வு முறைகள் போன்றஅனைத்தையும் மாணவர்கள் பெறலாம்.
எனவே இத்தகைய சாதனை சாப்ட்வேரை அனைவரும் பெற
Visit Qb365.in  [ OR ] 86083 91000 , 86083 92000, 86083 93000 இந்த எண்ணிற்கு Missed call கொடுக்கவும் நன்றி..

Flash News : TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : 


அமைச்சர் செங்கோட்டையன்
வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று  முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5-ம் தேதி அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் பிளாஸ்டிக் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்டைகிறது.
 இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு பாதிப்படைகின்றன. எனவே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி வருகிற 2019 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பாரம்பரிய முறையான வாழையிலை, பாக்கு மட்டைகளினாலான தட்டு, தாழம்பூ இலை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்

அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்!!



அரசு அரசு உதவிபெறும் கல்லூரியில் பணி புரியும் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு -அரசாணை வெளியீடு :

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரியில் பணி புரியும் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு -அரசாணை வெளியீடு :
7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழக அரசு பேராசியர்களுக்கு ஊதிய விகிதத்தை மாற்றி வெளியிட்டுள்ளது .இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6/7/18

'டிப்ளமா' ஆசிரியர் படிப்புக்கு மவுசு குறைந்தது : 713 பேருக்கு நாளை, 'ஆன்லைன்' கவுன்சிலிங்

தமிழக பள்ளிக்கல்வித்துறையின், டி.எல்.எட்., என்ற, 'டிப்ளமா' ஆசிரியர் படிப்புக்கான போட்டி, வெகுவாக குறைந்துள்ளது. மொத்தமுள்ள, 1,050 இடங்களுக்கு, 831 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அங்கமாக இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்தப் படுகின்றன. மாவட்ட அளவில், 12; வட்டார அளவில், ஏழு மற்றும் அரசின் நேரடி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், எட்டு என, 27 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், 32; சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 243 என, தனியாக, 275 நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.ஐந்து ஆண்டுகளாக, ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான மவுசு, மாணவர்கள் மத்தியில் கடுமையாக குறைந்துள்ளது. பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலானோர், பட்டப்படிப்பு, டிப்ளமா, இன்ஜினியரிங் போன்றவற்றில் சேர்கின்றனர். ஆசிரியராக பணியில் சேர, பட்டம் முடித்து, பி.எட்., படிப்பதால், டி.எல்.எட்., என்ற டிப்ளமாவில் சேர, ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், இந்த ஆண்டு, தாங்களே மாணவர்களை சேர்ந்து கொள்ள, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. மற்ற, 27 அரசு நிறுவனங்களுக்கு மட்டும், எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், ஜூன், 30 வரை பெறப்பட்டன. மொத்தம், 1,050 இடங்களுக்கு, 831 மட்டும் விண்ணப்பித்தனர். அவர்களில், 713 பேர் மட்டுமே, படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, நாளை ஆன்லைன் வழி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்குக்கான தகவல்கள், இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வழியே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி தெரிவித்தார்.
பி.எட்., படிக்க 6,700 பேர் ஆர்வம் : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான, பி.எட்., கவுன்சிலிங்கில் பங்கேற்க, 6,700 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். விண்ணப்ப பரிசீலினை, நாளை துவங்க உள்ளது. தமிழக அரசு, கல்லுாரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டில், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், பி.எட்., படிப்பிற்கு, 1,753 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இம்மாதம் மூன்றாம் வாரம் நடக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான, விண்ணப்ப வினியோகம், ஜூன், 21ல் துவங்கி, ஜூன், 30ல் முடிந்தது. மொத்தம், 6,700 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அவகாசம், நேற்று முன்தினம் மாலை முடிந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் ஆய்வு பணி, நேற்று துவங்கியது. நாளை முதல், விண்ணப்ப பரிசீலினை துவங்க உள்ளது. இந்த பணிகளை, சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி, பேராசிரியை தில்லை நாயகி தலைமையிலான, மாணவர் சேர்க்கை கமிட்டி மேற்கொண்டுள்ளது.
மேல் படிப்புக்கு வாய்ப்பு : டி.எல்.எட்., என்ற டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோர், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுகின்றனர். ஆசிரியர் பணிக்காக, மற்ற பட்டதாரிகளை போல், 'டெட்' தேர்வில் மட்டும், தேர்ச்சி பெற வேண்டும். டிப்ளமா முடித்தோர், பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இந்த வசதிகள் இருந்தும், பலர் டிப்ளமா படிக்க ஆர்வம் காட்டவில்லை.
- நமது நிருபர் -

பள்ளிகளில் 'நீட்' தேர்வு பயிற்சி; தமிழக அரசு தடை

தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் வழியாக 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:

● தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் சட்டத்தில் உள்ள விதிகளை பல பள்ளிகள் மீறுவது தெரிய வந்துள்ளது. சட்ட விதிகளின்படி தனியார் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் சேவை அடிப்படையில் மட்டுமே கல்வி நிறுவனத்தை நடத்த வேண்டும். லாப நோக்கில் நடத்த அனுமதி இல்லை.

● தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1974ன் படி,பள்ளி வளாகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்தில் வகுப்பு நடத்தவும், முதன்மை கல்வி அதிகாரி அனுமதிக்கும் தேர்வுகளை நடத்தவும் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆசிரியர் கல்வித்தகுதி :

● இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பிரிவு - 23 ஒன்றாவது உட்பிரிவின்படி, பள்ளி வளாகத்தில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில் கல்வித்தகுதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த கல்வித்தகுதி இல்லாதவர்களை பயிற்சி வகுப்பு நடத்த ஈடுபடுத்தினால் அது விதி மீறிய செயல்.

● தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1973ல் பிரிவு - 3ன்படி,அங்கீகாரம் அளித்த படிப்பை தவிர வேறு பாடங்களை பயிற்றுவிப்பது விதிமீறல். மாணவர்களின் விருப்பத்தை மீறி டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர் என ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மட்டும் கற்பித்தல் பணியை ஊக்குவிக்க கூடாது.

இதே சட்டத்தில் விதி - 9 பிரிவு - 2ல் உள்ளவாறு, எந்த ஒரு கல்வி நிறுவனமும் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் கட்டணமோ அல்லது நன்கொடையோ வசூலிக்க கூடாது. பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் போது இந்த நிபந்தனையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

புகார் என்ன?

சில தனியார் பள்ளிகளில்,போட்டி தேர்வுகளை சந்திக்கசிறப்பு பயிற்சி தருவதாக வணிக ரீதியிலான தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி வேலை நேரங்களில்கற்பித்தல் பணிகள் நடத்தப்படுகின்றன.

இந்த செயல் பள்ளி வளாகத்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், அரசு அங்கீகரித்த பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவதையும் சீர்குலைக்கிறது. சில பள்ளிகளில் நுழைவு தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தருவதாக கூறி ஆறாம் வகுப்பு முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஆசிரியர் பணிக்கு தேசிய கல்வி கவுன்சில் விதிக்கும் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு பாட சுமை, மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ள நிலையில், வணிக ரீதியில் தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த பயிற்சி,பள்ளிகள் இடையே லாபநோக்கத்திலான ஆரோக்கியமற்ற போட்டியை ஏற்படுத்திஉள்ளது.

வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை பள்ளிகள் வசூலிக்கும் தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பள்ளிகளில் பாடம் நடத்துவது, பயிற்சி அளிப்பது, தேர்வுக்கான வழிமுறைகளை விளக்குவது போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

'நீட்' பயிற்சிக்கு தடை :

● இதன்படி தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். பள்ளி வேலை நாட்களில், பள்ளி வளாகத்தில் தனியார் நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள் வழியாக வணிக நோக்கில் சிறப்பு பயிற்சி அளிக்க கூடாது.

● பள்ளியில் எந்த மாணவரையும், 'சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர வேண்டும்' என கட்டாயப்படுத்த கூடாது. தனியார் பள்ளிகளுக்கான சுயநிதி கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலிக்க கூடாது. சிறப்பு பயிற்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது

● எந்த பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதோ அந்த அனுமதியின் படி பிளஸ் 1, பிளஸ் 2வில் அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பாடங்களை நடத்த வேண்டும்

● இந்த உத்தரவுகளை மீறும் பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து செய்வது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும். முதன்மை கல்வி அதிகாரிகள்ஆய்வு செய்து, விதிமீறுவோரை கண்டறிய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அரசின் பயிற்சி நடக்குமா?
தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கான பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சி விதியை மீறுவதாக இருக்காதா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசின் 'நீட்' தேர்வு பயிற்சி தொடர்ந்து நடத்தப்படும். அரசு மற்றும் உதவி பள்ளிகளில் பள்ளி வேலை நேரங்களில் தனியார் நிறுவனங்களின் 'நீட்' தேர்வு பயிற்சியை நடத்தவில்லை; விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டது. மாணவர்கள் அவர்களாகவே பதிவு செய்து தங்கள் விருப்பத்தின்படி வந்தவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. மாறாக பள்ளிகளில் ஒரு பாடப்பிரிவில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி வேலை நேரங்களில் 'நீட்' பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் எந்த மாணவரிடமும் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனவே சட்டத்திற்கு உட்பட்டு இந்த பயிற்சி தொடரும். இவ்வாறு கூறினர்.

சி.பி.எஸ்.இ.,க்கும் பொருந்தும் :
பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியதாவது: சில பள்ளிகளில் 'நீட், ஜே.இ.இ.,' பயிற்சி என்ற பெயரில் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான இலக்கை நோக்கி படிப்பதில்லை. அனைவரும் நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேர வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டம் அல்லாமல் தமிழகத்தில் இயங்கும் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட மற்ற பாடத்திட்ட பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அந்த பள்ளிகளும் பாடத்திட்டத்தை தவிர்த்து பள்ளி வேலை நேரங்களில் தனியார் நிறுவனங்களின் போட்டி தேர்வு பயிற்சி அளிக்க கூடாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகார சட்ட விதிகள் இந்த பள்ளிகளுக்கும் பொருந்தும்; அவர்களுக்கு தனியாக எந்த சலுகையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - 

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

நாமும் தெரிந்துகொள்வோம்

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.


3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.

4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட்டும்,கார்களில் செல்லும் நான்கு பேரும் சீட் பெல்ட் போட வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!



இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைகடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயண பாதுகாப்பு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி இனி பின்பக்க சீட்டில் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகும். மேலும் கார்களில் செல்லும் நான்கு பேரும் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும். வானங்களில் முன்பக்க விளக்கின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். அதேபோல் உயரதிகாரிகள், காவலர்களும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி வரும் 27ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது


புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது- திண்டுக்கல் எங்கெல்ஸ்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.*

*குறைந்தபட்சம் இந்த திட்டத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.*

*இந்த நடைமுறை அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தில் மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்படும்.*

*சில குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை சிறப்பு நேர்வுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்*

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

JD / DEO பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த தலைமையாசிரியர்கள் பெயர் பட்டியல் அனுப்பு இயக்குநர் உத்தரவு.





பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள சிக்கல்கள்.

முறைகேடுகளையும் நேர விரயத்தையும் தடுக்க COMPUTER BASED EXAMINATION தேர்வு நடத்த TNPSC திட்டமிட்டுள்ளது,

உடற்கல்வி வருடாந்திர செயல் திட்ட அட்டவணை- 2018- 2019

Attendance App - தற்காலிகமாக நிறுத்தி வைப்பு, EMIS ID CARD PHOTO பதிவேற்றம் செய்யக் கூடாது மற்றும் EMIS DATA பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அறிவுரைகள் - SPD PROC

சரியாகப் படிக்காதவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்

சரியாகக் கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது என்பது உள்பட தனியார்
பள்ளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 இதற்கான சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
 தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தொல்லை கொடுக்கக் கூடாது. பாலியல் தொல்லையில் இருந்து மாணவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
 தனியார் பள்ளிகளில் நல்ல அறிவுடைய பாடத்திட்டம் சார்ந்தவை, இணையான பாடத் திட்டம் சார்ந்தவை மற்றும் பிற பாடத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 விடைத்தாள் மதிப்பீடு: அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவும் தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் அதனுடைய கட்டடங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். அரசின் சார்பாக நடத்தப்படும் தேர்வுகள், விடைத்தாள்கள் மதிப்பீடு போன்ற பணிகளுக்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை மாற்றுப் பணிக்காக அனுப்பிட வேண்டும்.
 அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி ஆகியன மேற்கொள்ளப்படும். தேவைப்படும்பட்சத்தில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களை அதில் ஈடுபடுத்த அனுப்பிட வேண்டும்.
 கட்டணத்தை முறைப்படுத்த...தனியார் பள்ளிக் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டு அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தைத் தவிர வேறு எந்தப் பெயரிலும் கட்டணத்தை பெறக் கூடாது.
 சரியாகப் படிக்காதவர்கள்: தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் யாரையும் சரியாகப் படிக்கவில்லை எனக் காரணம் கூறி பொதுத் தேர்வுகள் எழுதுவதில் இருந்து தடுக்கக் கூடாது. தனியார் பள்ளிகளுக்குள் நலன்களைக் கெடுக்கும் வகையிலான போட்டிகளை நடத்தக் கூடாது.
 வெளிப்படையான சேர்க்கை: தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் கல்வி ஆண்டின் சேர்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக குறைந்தபட்சம் 30 நாள்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேர்க்கை குறித்த அறிவிப்பை, பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும், இணையதளத்திலோ அல்லது தகவல்களைத் தெரிவிக்கும் பள்ளி தொடர்பான பிற அம்சங்களின் வாயிலாகவோ வெளியிட வேண்டும்.
 பெற்றோர்-ஆசிரியர் சங்கம்: அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளிலும் கல்வி மற்றும் கற்பித்தல் சூழலின் தரத்தை மேம்படுத்தவும், அதில் பெற்றோரை பங்கெடுக்கச் செய்யவும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை அமைக்க வேண்டும்.
 அனுமதி பெறாமல் மூடக் கூடாது: தனியார் பள்ளியையோ அல்லது பள்ளியில் தொடங்கப்படும் பாடப் பிரிவையோ உரிய அரசு அமைப்பின் ஒப்புதலைப் பெறாமல் மூடக் கூடாது. அவ்வாறு மூடும் போது படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உரிய தகுந்த ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
 ஆசிரியர்களுடன் ஒப்பந்தம்: தனியார் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகக் குழு தேவைப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தம் செய்யலாம். இவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளருடன், பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஏற்கெனவே பணியிலுள்ள பணியாளருடன் சட்டம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் ஒப்பந்தத்தைச் செய்து செயல்படுத்திட வேண்டும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தங்கம் தென்னரசு கேள்வி: இந்த மசோதா தொடர்பான விவாதம் வியாழக்கிழமையே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மசோதாவில் உள்ள அம்சங்களை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் சூழல் இல்லாமல் நீட் தேர்வுக்கு பயற்சி அளிக்கும் மையங்களாக மாறி வருகின்றன. அதைத் தடுப்பதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்துமா என்று கேள்வி எழுப்பினார்.
 இதற்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், சிபிஎஸ்இ பள்ளிகள் ஒருமுறை மட்டுமே தடையின்மைச் சான்றிதழ் பெற்றால் போதும் என இருந்தது. இப்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசிடம் இருந்து தடையின்மைச் சான்று பெற வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
 விடுமுறை நாள்களில்: தனியார் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி நாள்களில் பயிற்சி அளித்தால் அவர்களுக்கான உரிமைகள் ரத்து செய்யப்படும் என்றார்.a

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு புதிய கட்டடம் - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து மாவட்டங்களிலும்,
பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.




  சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சக்கரபாணி: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள, மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, கலையரங்கம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, அரசு முன் வருமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அந்த பள்ளியில், போதிய வசதி உள்ளது.
சக்கரபாணி: அந்த பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.நான்கு வகுப்பறை உடைய கட்டடம் பழுதடைந்துள்ளது. ஒரு கட்டடம் இடியும் நிலையில் உள்ளது.அதற்கு பதிலாக, 12 வகுப்பறைகள் உடைய, புதிய கட்டடம் கட்ட வேண்டும். கூடுதலாக, ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்து, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர்.

  சக்கரபாணி: அனைத்து பள்ளிகளுக்கும், தேவையான கட்டடம் கட்டித்தர வேண்டும். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர், மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்?
அமைச்சர் செங்கோட்டையன்: அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் வாயிலாக, பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்யவும், பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்டவும் உத்தரவிடப் பட்டுள்ளது.'நீட்' தேர்வு குறித்த புள்ளி விபரம் தற்போது இல்லை. இந்த ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள், இந்த மாதத்தில் துவங்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டில் பாடங்கள்; கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுனர்

ராமநாதபுரம் : அனைவருக்கும் கல்வி இயக்க
ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.



ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் உலகராஜ். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனரான இவர், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை மூலம் மாணவர்களை கவரும் வகையில் ஏற்கனவே பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

  தற்போது, தனியார் பள்ளிகளில் பயன்படுத்துவது போன்ற ஸ்மார்ட் போர்டு கல்வியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி வருகிறார். 'இன்ராக்டிவ்' என்ற கருவி மூலம், புரஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் நடத்தி வருகிறார். இதில், பென் டிரைவ் பயன்படுத்தியும் பாடங்கள் நடத்தலாம்.
இதேமுறையில் வேலுார் மாவட்டம் வாணியம்பாடியில் ஆசிரியர் அருண்குமார் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். இதை அறிந்த உலகராஜ் அவரிடம் சென்று இதனை கற்று வந்துள்ளார். இதற்காக ரூ.80 ஆயிரம் சொந்த செலவில், புரஜெக்டர், லேப்டாப் , இன்ட்ராக்டிவ் கருவி, ஸ்பீக்கர், ஸ்கிரீன் உள்ளிட்ட உபகரணங்கள் என வாங்கியுள்ளார்.
ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் சென்று இந்த முறையில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஸ்மார்ட் போர்டில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். லேசர் பேனாவை மாணவர் கையில் கொடுத்து ஸ்கிரீனில் எழுதப்படும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுத வேண்டும். அந்த மாணவர் சரியாக எழுதும் வரை கற்றுக்கொடுக்கப்படுகிறது.

  இதனால், கூடுதல் பயிற்சி கிடைக்கும். சரியாக எழுதியதும் வாழ்த்துக்கள், சிறப்பு, நன்று, என அறிவிப்பு வருவதுடன், மத்தாப்பு கொளுத்துவது போல், கைதட்டல், கை கொடுப்பது, டாடா காட்டுவது போல் திரையில் வரும். இதை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்கள் எளிதல் உற்சாகத்துடனும், கற்றலில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க முடிகிறது, என்றார் உலகராஜ்.

வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க, மாணவர்களுக்கு தோப்புக்கரணப் பயிற்சி!!!

வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க,
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தோப்புக்கரணம் போட்டு, பயிற்சி அளிக்கப் படுகிறது.

  ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தில், வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை அலமேலு தலைமையில், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். 6 - 10ம் வகுப்பு வரை, 155 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
காலை, 9:30 மணிக்கு, பள்ளி துவங்கியதும், மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க, தோப்புக்கரணம் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரும், 10 தோப்புக்கரணம் போடுகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பயிற்சிக்கும் முன்னோடியாக, தோப்புக்கரணம் திகழ்கிறது. இதை செய்வதால், அனைத்து நரம்பு மண்டலத்துக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, மாணவர்கள் சுறுசுறுப்படைவர். காதை பிடித்து, உட்கார்ந்து எழும்போது, மூளை நரம்புகள் துாண்டப்படும்.இதனால், மூளை செயல்பாட்டை ஒருநிலைப்படுத்த முடியும்.
ஆட்டிசம் குறைபாடு தவிர்க்கப்படும்; கற்றல் குறைபாடு நிவர்த்திஆகும்.
தொடர் பயிற்சியால், வகுப்பு துவங்கும் முன்பே, அவரவர் வகுப்பறையில், மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமாக தோப்புக்கரணம் போடுகின்றனர். உடல்நிலை சரியில்லாவிடில், கட்டாயப் படுத்துவதில்லை. இதேபோல், நகம் வெட்டுதல், கைகளை சுத்தமாக கழுவுதல், என சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதனால், எங்கள் மாணவர்களுக்கு, தலைவலி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது, தங்களுடன், அசல் அடையாள அட்டை ஒன்றை, பயணியர் வைத்திருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. ஆனால், பயணத்தின்போது, அசல் அடையாள அட்டை தொலைந்து விடுமோ என்ற பயம், பலருக்கும் உண்டு.

இந்நிலையில், பயணத்தின்போது ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் பயணியர், இனி அதை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 'அரசு அடையாள அட்டைகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும், 'டிஜி லாக்கர்' என்ற மொபைல் செயலி மூலம், ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

5/7/18

1,6,9,11 வகுப்பு பாடப்புத்தகங்கள் எளிமையா உள்ளனவா? என ஆய்வுக்கூட்டம்

குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக பாடநூல் ஆய்வுக்கூட்டம் சனியன்று நடந்தது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர். 1,6,9,11 ஆம் வகுப்புப் பாடநூல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டாலும் நேரம் போதாமை காரணமாக முதல் வகுப்பு நூல்களுக்கானவை மட்டும் முன் வைத்து பேசப்பட்டது. பிற நூல்களுக்கு மீண்டும் விரைவில் கூடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பாடநூல்களில் உள்ள நிறை குறைகளை ஆசிரியர்கள் பட்டியலிட தொகுத்திருக்கிறோம். தொகுத்தவற்றை மீண்டும் சரிபார்த்து உறுதிப்படுத்தியபின் பரிந்துரைகளை விரைவில் பதிவிடுகிறோம். அரசுக்கும் அளிக்கிறோம். பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தது மட்டுமல்லாமல் வெகு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் பங்கேற்றது பெருமகிழ்வைத் தந்தது. பேராசிரியர்களின் ஆதரவு போற்றத்தக்கது.

எம்.பி.பி.எஸ்.: அரசு கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள்:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை 1,329 மாணவர்களுக்கு: தமிழகத்தில் மொத்தம் 2,447 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; இவற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் 1,329 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 1,118 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்துப் பிரிவினருக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
1,118 காலியிடங்கள்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 828 பேர் அழைக்கப்பட்டு, 813 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 719 இடங்கள் நிரம்பின. சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. மூன்று நாள்கள் கலந்தாய்வின் முடிவில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 29 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், தனியார் கல்லூரிகளில் 59 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 808 இடங்கள் நிரம்பின.
4 இடங்கள்: பொதுப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு: தரவரிசைப் பட்டியலில் 1,418 -இலிருந்து 2,380 வரையிலான 963 அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா : காத்திருக்கும் 5,500 ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில்
நிரந்தர பணி இல்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 5,500 பேர் உள்ளனர். மத்திய இடைநிலை கல்வி வாரிய உத்தரவின்படி, பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.ஆனால், மாநிலங்கள் தமது கொள்கைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து, அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதன்படி கேரள அரசு, 2012 மார்ச் 31க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா 2012 ஜூலை 28-வரை விலக்கு அளித்துள்ளது.அதுபோல் தமிழகத்தில் முன் தேதியிட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளரிடம் 5,500 ஆசிரியர்கள் மனு அளித்தனர். சென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் இதனை வலியுறுத்தினர்.
ஆனால் இதுவரை அதற்கான உத்தரவு வராததால் 5,500 ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதி மறுகூட்டல், மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்குப் பின் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. 
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் புதன்கிழமை (ஜூலை 4) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.எல்.எட்., தேர்வு தேர்ச்சி: ஆசிரியைகளுக்கு சிக்கல்

தேசிய அளவில் தனியார் பள்ளிகளில் பி.எட்., தகுதி இல்லாத ஆசிரியர் மத்திய அரசின் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனத்தின் (தி நேஷனல் ஓபன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் – என்.ஐ.ஓ.எஸ்.,) டி.எல்.எட்., (ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) கல்வி தகுதி பெற வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டது.

டி.எல்.எட்., தகுதியை 2019க்குள் பெற வேண்டும் என்ற நிபந்தனையால் உடல் ரீதியான மற்றும் மகப்பேறு காலங்கள் போன்ற காரணங்களால் ஆசிரியைகள் பலர் இத்தகுதி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை 80 ஆயிரம் காலி இடங்கள்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கையில், சிவில் பிரிவில், 13 ஆயிரத்து 874 இடங்கள் உட்பட, மொத்தம், 80 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில், கடந்த 30ல் துவங்கியது. பொதுப்பிரிவான சிவிலுக்கு நடந்து முடிந்துள்ளது. தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள, 500 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து, 20 சதவீத அடிப்படையில் சிவிலுக்கு, 15721 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2150 பேர் விண்ணப்பித்ததில், 1847 பேர் மட்டுமே பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்றனர். 13 ஆயிரத்து 874 இடங்கள் காலியாக உள்ளன.மெக்கானிக்கலை பொருத்தவரை, 21 ஆயிரத்து 670 இடங்களுக்கு, 4800 பேர் விண்ணப்பித்துள்ளனர். எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு, 50 ஆயிரத்து 989 இடங்களுக்கு, 4050 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 
நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட, 90 ஆயிரம் இடங்களில், 10 ஆயிரம் இடங்களே நிரம்பும் நிலை இருப்பதால், 80 ஆயிரம்காலி இடங்களுடன் கல்லுாரிகள் செயல்படும் நிலை உள்ளது.

4/7/18

சிறுபான்மையினர் பகுதிகளில் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு, சில பரிந்துரைகளை அளித்துள்ளது; அதன் விபரம்:சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர், பாகுபாடு மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்.இதன் மூலம், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் கல்வியறிவு பெறுவர். முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில், உருது நடுநிலைப் பள்ளிகள் துவங்க வேண்டும். அங்கு, தாய்மொழியாக உருது இருக்க வேண்டும்.இவ்வாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 விடைத்தாளில் கூட்டல் பிழை : ஆசிரியர்கள் உட்பட, 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்'

பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் ஏற்படுத்திய, ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர் கள், 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பின், தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியாகின. இந்தத் தேர்வை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய, சலுகை வழங்கப்பட்டது.இந்த சலுகையை பயன்படுத்தி, 2,500க்கும் மேற்பட்டவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மறுமதிப்பீடு முடிவுகள், இரு வாரங்களுக்கு முன் வெளியாகின. அதில், 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால், மதிப்பெண் மாறியது.இந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை ஆய்வு செய்து, அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள், துறை அலுவலர்கள் யார் யார் என, பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஆசிரியர்கள் உள்ளிட்ட, 1,000 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.விளக்கத்துக்கு சரியான பதில் அளிப்பவர்களை தவிர, மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தேர்வுத்துறையில் இருந்து ஆசிரியர்களின் பட்டியல், பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 

எந்த தரவரிசைக்கு எந்த இன்ஜி., கல்லூரி? : 3 ஆண்டு விபரம் வெளியிட்டது பல்கலை

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எந்த தரவரிசைக்கு, எந்த கல்லுாரி கிடைக்கும் என்ற புதிய தகவலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதில், மூன்றாண்டு தரவரிசை எண்கள் இடம் பெற்றுள்ளன. 
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.04 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியானது. ஜூலை, 10க்கு பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இந்நிலையில், தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தை போக்கும் வகையில், அண்ணா பல்கலையில் இருந்து, புதிய வழிகாட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான, https://tnea.ac.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், எந்த தரவரிசை எண் வரையிலான மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு கிடைத்தது. இன வாரியாக எவ்வளவு, 'கட் ஆப்' மதிப்பெண் தேவை, 2015 முதல், 2017 வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள், கல்லுாரி வாரியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொண்டால், கல்லுாரிகளை எளிதில் தேர்வு செய்ய முடியும். 

கால்நடை மருத்துவ படிப்பு : இன்று தரவரிசை பட்டியல்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, உணவு தொழில்நுட்பம் போன்ற
படிப்புகளில், 360 இடங்கள் உள்ளன. அதேபோல, கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் போன்ற, பி.டெக்., படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 12 ஆயிரத்து, 217 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இன்று காலை, வெளியிடப்படுகிறது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர், பாலச்சந்திரன் வெளியிட உள்ளார்.

நீட் தேர்வு: வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஎஸ்இ.,க்கு நீதிபதிகள்  கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவை

* நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? 

* நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில், தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

* தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட ஆங்கில வார்த்தையை, தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் போது, என்ன வார்த்தை என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்கபட்டுள்ளதா?

* கல்வி என்பது அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும்.

* சிபிஎஸ்இ-க்கு இணையாக, தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு படம் கற்பிக்கப்படுகிறதா?

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

*IT returns தொடர்பான விளக்கங்கள்

நமதுநண்பர்கள் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.

அவைகள் குறித்து நமது நண்பர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர் தெரிவித்தவை:

✍🏻மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும்.

✍🏻 *அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்*.

✍🏻 ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

✍🏻 தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் *2.5லட்சத்தை தாண்டினால்* கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும்.

✍🏻 சம்பளம் வழங்கும் அலுவலர் E-TDS(24-Q) தாக்கல் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் IT Return தாக்கல் செய்யாதபட்சதில் கட்டாயம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புதல் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டு முதல் கடுமையாக மேற்கொள்ளும்.

✍🏻 *அடுத்ததாக ஒரு வதந்தி, பலர் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது குறித்தும் கேட்கப்பட்டது*

✍🏻 5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் கட்டாயம் onlineலும் 5லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் online லோ அல்லது வருமான வரி அலுவலகத்தில் offline லோ தாக்கல் செய்யலாம் என்பதை சிலர் தவறாக புரிந்துகொண்டு 5லட்சத்து குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கின்றனர்.

மேலும் ஒருசில ஊழியர்கள்

✍🏻 *சம்பளம் தவிர*
Fixed Deposits,
Shares,
Mutual Fund
உள்ளிட்ட *பிற முதலீடுகள்* ஏதேனும் செய்திருப்பின் அதன் மூலம் பெற்படும் *வட்டி, டிவிடென்ட்* போன்ற *ஆதாயத் தொகையும்* *26as படிவத்தில் update ஆகும்*.

✍🏻 அந்த ஆதாயத் தொகைக்கான வரியையும் நாம் *தனியாக செலுத்த வேண்டும்* அல்லது அதற்கு வரிகள் ஏதேனும் பிடிக்கப்பட்டிருந்தால் E-filing செய்யும்போது கணக்கு காட்டி அதிகமாக பிடித்தம் செய்தியிருப்பின் அந்த தொகையை திரும்ப பெறுதல் (refund),
குறைவாக பிடித்தம் செய்திருப்பின் மீதி வரியை செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

*வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31*

*கடைசி நேர இணையதள பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இப்போதே செய்து விடுவது நல்லது.*

3/7/18

இன்று கிடைத்த ஒரு தகவல் பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றியது.


   30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.
   உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=
22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=
18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.
முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.
    30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்
    அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.
    பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.
  ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,இதை
6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும்.(அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.
   (பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)
  30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
   இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.
   ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 
5333×120=639960ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்
18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)
    நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
   பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 7%DA வழங்கப்படுகிறது.இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.
   40000க்கு 5000 DA என்றால் 12.5%DA வரும். இந்தளவுக்குத் தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இதையும் தாண்டும்.ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.
நன்றி


இது CPS ல் உள்ளவர்களுக்கு  பொருந்தாது

பொது பிரிவு மருத்துவ கவுன்சில் இன்று துவக்கம் : சிறப்பு பிரிவில், 40 பேருக்கு இடம் கிடைத்தது

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், 40 பேர் இடங்கள் பெற்றனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலில், 44 ஆயிரத்து, 332 பேர் தகுதி பெற்று உள்ளனர். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல் நோக்கு மருத்துவமனை யில், நேற்று துவங்கியது.இதில், சிறப்பு பிரிவினர் எனப்படும், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என, 101 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 63 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 38 பேர்; பி.டி.எஸ்., படிப்பில், இரண்டு பேர் என, 40 பேருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டன.மாற்றுத் திறனாளிகள் தரவரிசை பட்டியலில் இடம் பெறாதவர்களும், கவுன்சிலிங் வளாகத்திற்கு நேற்று வந்திருந்தனர். அவர்களில், ஏற்க தகுதி வாய்ந்தவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.சிறப்பு பிரிவினர் பிரிவில், எட்டு பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று நடைபெறுகிறது. இதில், தரவரிசை பட்டியலில், 444வது இடம் வரை உள்ளோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

1,6,9,11 ம் வகுப்புகளுக்கு QR CODE ல் அனைத்து வீடியோக்களையும் உள்ளடக்கிய தொகுப்பு. Q.R. Code Video Special

இந்த கல்வியாண்டில் புதிதாக வழங்கப்பட்டு உள்ள பாடப் புத்தகத்தில் உள்ள QR Code வீடியோக்கள் அனைத்து பாடத்திற்கும் YouTube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேவையானவர்கள் பார்த்து பயன்பெறவும்.


நீங்கள் பதினோராம் வகுப்பு தமிழ் போதிக்கும் ஆசிரியரா? கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையான அனைத்து தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்
+1 தமிழ் Q.R Code Videos: Click here to download
பதினோராம் வகுப்பு விலங்கியல் முதல் தொகுதி பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து காணொளி காட்சிகள் (24 கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்
+1 விலங்கியல் Q.R.Code Videos: Click here to download
பதினோராம் வகுப்பு வரலாறு முதல் தொகுதி பாடப்புத்தகத்தில் உள்ள முதல் படத்திற்கான காணொளி காட்சிகள் பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்
+1 History QR Code Video: Click here to download
முதல் வகுப்பிற்கான Tamil Subject QR Code காணொளி காட்சிகள் (31 Videos) இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 Std Tamil QR Code videos : Click here to download
முதல் வகுப்பிற்கான English Subject QR Code காணொளி காட்சிகள் (15 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 Std English QR Code videos :Click here to download
முதல் வகுப்பிற்கான சூழ்நிலையியல் (EVS) Subject QR Code காணொளி காட்சிகள் (10 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
First STD EVS: Click here to download
முதல் வகுப்பிற்கான Maths Subject QR Code காணொளி காட்சிகள் (10 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
FIRST STD MATHS FIRST TERM: Click here to download
ஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
6 Std Tamil QR Code videos :Click here to download
ஆறாம் வகுப்பு முதல் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது
6 Std Science QR Code videos :Click here to download
ஆறாம் வகுப்பு முதல் பருவம் சமூக அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
6 Std S0cial Science QR Code videos :Click here to download
ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
9 Std Tamil QR Code videos :Click here to download
ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது
9 Std Science QR Code videos : Click here to download
அறிவியல் பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்காக உயர் நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தேவையான 500க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில காணொளி காட்சி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

FLASH NEW : – 8 CEO’S TRANSFERRED – G.O 121 – ORDERS ISSUED



மாநில பாடத்திட்டத்தில் +2 படித்தவர்களுக்கு 70% எம்.பி.பி.எஸ். இடம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

மாநில பாடத்திட்டத்தில் +2 படித்தவர்களுக்கு 70% எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.


  சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர்களுக்கு 30% எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். பொதுப்பிரிவினருக்கு நடக்கும் கலந்தாய்வின் முதல்நாளான இன்று 598 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

SCERT-புதிய பாடத்திட்டம்-புதிய பாடநூல்கள்-பாடக்கருத்துகளை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனை சார்பு

தொழில் பாடப் பிரிவை தவிர்க்கும் அரசுப் பள்ளிகள்

உடனடி PAN NUMBER திட்டம்!

புதிதாக பான் கார்டு பெற விரும்பும் தனி
நபர்களுக்கு, ஆதார் எண் அடிப்படையில், இணையம் வாயிலாக, உடனடியாக பான் எண் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை, வருமான வரித்துறை துவக்கி உள்ளது. வருமான வரித்துறை, சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு விபரம்

ஆதார் எண் வைத்துள்ள, தகுதி உள்ள தனி நபர்களுக்கு, இணையம் வாயிலாக, உடனடியாக, 'இ - பான்' எண் ஒதுக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில், குறுகிய காலத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

2,283 அரசு தொடக்கப் பள்ளி களில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் விரைவில் தொடக்கம்!

மாநிலம் முழுவதும், 2,283 அரசு தொடக்கப் பள்ளி களில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கும் பணிகள், 42 கோடி ரூபாயில் துவங்க உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வரிசையில், அரசு பள்ளிகளில், கணினி வசதியுடன் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.இந்நிலையில் புதிதாக, 2,283 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 42 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன; இதற்கான பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.


இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாவட்ட வாரியாக, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒரு சரகத்திற்கு, ஐந்து பள்ளிகள் வரை, 403 சரகங்களில் தேர்வு செய்யலாம். இதன்படி, 75க்கும் மேல் மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகள்; 100 மாணவர்களுக்கு மேல் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு, பட்டியலில் இடம் தர வேண்டும்.

கூடுதல் மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு, முன்னுரிமை தர வேண்டும். தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். வகுப்பறைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சுவர் மற்றும் மின் வசதிகள் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின் படி, பள்ளிகளை தேர்வு செய்து, பட்டியல் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

#கருணைஅடிப்படைபணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு..



1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?

தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?

இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.

2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.

3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.

4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.

5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.

6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.

7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.

8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?

காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?

அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ...

 எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறைந்த வயது 18 ஆகும்.

12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?

தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..

  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், 

மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா?
 உரிமையுடன் கோரலாமா?

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்...மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, 

 ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்..

தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?

திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்...

1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).

2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.

3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

School Morning Prayer Activities - 03.07.2018



✅பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

🎯திருக்குறள் 

🎯பழமொழி

🎯பொன்மொழி

🎯இரண்டொழுக்க பண்பாடு

 🎯இன்று

🎯பொது அறிவு

🎯நீதிக்கதை

🎯இன்றைய செய்தி துளிகள்

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தினால் இவ்வளவு சேமிக்கலாம்...!

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக, ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுர்வோர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலும் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மேலும் மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் மின்கட்டணத்தில் இருந்து 1% தள்ளுபடி வழங்க போவதாக அறிவித்துள்ளது. இதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்ததும் சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரியவருகிறது. இந்த புதிய திட்டம் மூலம் மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்காக நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுழலும், ஊழியர்களின் பணிச் சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வழியாக மின்கட்டணம் செலுத்துவதன் மூலம், மின்வாரிய அலுவலகங்களில், நுகர்வோர் நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை.

ஊழியர்களுக்கு பணிச்சுமை குறையும். ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOW TO APPLY PASSPORT...



ஸ்மார்ட்போனிலேயே பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி?

🌷மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் எம்பாஸ்போர்ட் சேவா செயலியில் (mPassportSeva) புதிதாய் பாஸ்போர்ட் பெறுவோர் விண்ணப்பிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

🌷ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் எம்பாஸ்போர்ட்சேவா ஆப் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த செயலி 'கன்சுலர், பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு' (Consular, Passport and Visa (CPV) Division) மூலம் வழங்கப்படுகிறது.

🌷தற்போதைய பாஸ்போர்ட்சேவா வலைத்தளத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளை கொண்டே இந்த செயலியில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். 

🌷எனினும் மொபைல் செயலியின் இன்டர்ஃபேஸ் புதிதாய் மாற்றப்பட்டு இருக்கிறது.

🌷ஸ்மார்ட்போனில் செயலியை கொண்டு பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்:

செயலி டவுன்லோடு செய்யவும்

1 - செயலி டவுன்லோடு செய்யவும் 
முதலில் இலவசமாக கிடைக்கும் எம்பாஸ்போர்ட் சேவா செயலியை ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

2 - பதிவு செய்யவும்
செயலியை திறந்ததும், திரையில் தோன்றும் புதிய பயனர் பதிவு செய்யக்கோரும் 'New User Registration' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3 - பாஸ்போர்ட் அலுவலகம்
நீங்கள் வசிக்கும் நகரத்துக்கு ஏற்ப பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்வு செய்ய வேண்டும். 

புதிய வழிமுறையில் பயனர்கள் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்க வழி செய்கிறது.

 அந்த வகையில் உங்களது சொந்த ஊர் சென்னை ஆனால் நீங்கள் மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்களில் வசித்தாலும், புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து, அவற்றை நீங்கள் தற்போது இருக்கும் நகரிலேயே பெற முடியும்.

முழு விவரங்கள்

4 - முழு விவரங்கள்
இனி செயலியில் உங்களது முழு விவரங்கள்: 

பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.

5 - பிரத்யேக லாக் இன்
உங்களுக்கான பிரத்யேக லாக்-இன் குறியீடு தேர்வு செய்து, குறியீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

அதன்பின் கடினமான கடவுச்சொல் ஒன்றை பதிவிட வேண்டும். 

உங்களது மின்னஞ்சல் லாக்-இன் குறியீட்டை கூட செயலியில் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பு பலப்படுத்தவும்

6 - பாதுகாப்பு பலப்படுத்தவும்
எதிர்காலத்தில் ஏதேனும் சூழலில் பாஸ்வேர்டு ரீசெட் செய்வதற்கான பாதுகாப்பு கேள்வி மற்றும் பதிலை செட் செய்யவும்.

 நீங்கள் செட் செய்யும் பாஸ்வேர்டு மறந்து போகும் பட்சத்தில் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

7 - கேப்ச்சா
தகவல்களை உறுதி செய்ததும், சிறிய புகைப்படத்தினுள் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை டைப் செய்து சப்மிட் (Submit) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

மின்னஞ்சல்

8 - மின்னஞ்சல்
உங்களது அக்கவுன்ட்-ஐ வெரிஃபை செய்ய பாஸ்போர்ட் அலுவலம் சார்பில் அனுப்பப்படும் மின்னஞ்சலை க்ளிக் செய்ய வேண்டும்.

9 - அக்கவுன்ட் வெரிஃபிகேஷன்
மின்னஞ்சலில் வரும் வெரிஃபிகேஷன் லின்க்-ஐ க்ளிக் செய்ததும், வலைத்தளம் ஒன்று திறக்கும் அங்கு உங்களின் லாக்-இன் ஐடியை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

செயலியை ரீஸ்டார்ட் செய்யவும்

10 - செயலியை ரீஸ்டார்ட் செய்யவும்

இனி எக்சிஸ்டிங் யூசர் (Existing User) பட்டனை க்ளிக் செய்து உங்களின் லாக்-இன் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் கேப்ச்சா உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். 

இனி புதிதாய் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் திரை திறக்கும்.

11 - ஆவணங்கள்
இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்து, திரையில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

பணம் செலுத்தலாம்

12 - பணம் செலுத்தலாம்
புதிய பாஸ்போர்ட் பெற டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்ய முடியும்.

13 - ஆவணம் சரிபார்க்கவும்
விண்ணப்ப படிவத்தை முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ததை உறுதிப்படுத்திக் கொண்டு உங்களின் ஆவணங்களை சரிபார்க்க முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம், ரூ.1,000 பரிசு

தஞ்சாவூர் : 'அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயம், 1,000 ரூபாய் பரிசாக தரப்படும்' என அறிவித்து இருந்த கிராமத்தினர், பெரிய விழா நடத்தி, 28 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.


தஞ்சாவூர், பேராவூரணி அருகே உள்ளது, துலுக்க விடுதி கிராமம். இங்கு, 1998 முதல், துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், கிராம மக்களே செய்து வந்தனர். 2003ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, கல்வித் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். 83 மாணவர்கள் மட்டுமே இருந்ததால், '120க்கு மேல் மாணவர்கள் இருந்தால் மட்டுமே, தரம் உயர்த்த முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளியை தரம் உயர்த்த நினைத்த கிராம மக்கள், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டனர். இதன்படி, 'பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயமும், 1,000 ரூபாய் பரிசுமும் வழங்கப்படும்' என, அறிவித்தனர். இதனால், நடப்பு கல்வியாண்டில், 28 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். அறிவித்தபடி, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா, நேற்று முன்தினம் பள்ளியில் நடந்தது. 

பேராவூரணி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராசு, மணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயம் மற்றும், 1,000 ரூபாய் பரிசு வழங்கினார். தற்போது, 96 மாணவர்கள் உள்ளனர். எனவே, பள்ளியை தரம் உயர்த்தும் கோரிக்கையை, மீண்டும் எழுப்ப, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சீருடையில் மாற்றம்

அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், ஆறாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.59.50 லட்சம் மதிப்பிலான ஜெ.ஜெ. கலையரங்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான ஜெ.ஜெ. புதிய வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றை திறந்துவைத்து முதல்வர் கே.பழனிசாமி பேசியது:
கல்வி வல்லுநர்களைக் கொண்டு புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2018-19-ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் கல்வித் துறைக்கு அதிக அளவில் ரூ.27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்க ரூ.967.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 2,939 மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ.438 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளன.
பல்வேறு தொடர் முயற்சிகளால், தொடக்க நிலை வகுப்புகளில் 2011-12-ஆம் ஆண்டில் 99.36 நிகர சேர்க்கை விகிதம் 2017-18-ஆம் ஆண்டில் 99.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர் தொடக்க நிலை வகுப்புகளில் 2011- 12-ஆம் ஆண்டில் 99.63 நிகர சேர்க்கை விகிதம், 2017-18-ஆம் ஆண்டில் 99.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இடைநிற்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 1 முதல் 5 மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு!!

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை
இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது! தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது. அதன்படி ஆதார் பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. 

ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் நடத்துவதில் தனி சிக்கல்கள்!!

தெலுங்கு மொழி ஆசிரியர்கள் தமிழ் மாணவர்கள் பாதிப்பு!!!

2/7/18

ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம்! நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிரடி உத்தரவு!


சிரியர்கள் வருகைப்பதிவை தினசரி
எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் மெத்தனம் காட்டிவரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் பழமையான கடலுார் மாவட்டத்தில் புகழ் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.
 இங்கு படித்த பலர் நாட்டின் பல்வேறு உயர் பதவிகளில் பணி புரிந்து வருகின்றனர். அந்தளவிற்கு கல்வியில் சிறந்த விளங்கிய கடலுார் மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற அரசின் உத்தரவால்,பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதன் காரணமாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து போதிய கற்றல் திறனின்றி உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், பொதுத் தேர்வுகளில் தேர்ச்சிசதவீதம் மாவட்டத்தில் வெகுவாக குறைந்து மாநில பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணி நேரத்திற்கு சரிவர வராததே இதற்கு முக்கிய காரணம் என்பதை கடந்த 2010ம் ஆண்டு கலெக்டராக இருந்த அமுதவல்லி கண்டறிந்து, ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திட எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி துவங்கும் நேரம் முடிந்ததும் ஆசிரியர்கள் வருகை விபரத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திற்கு (நிக்) மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.
இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு கட்டாயம் வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்பாட்டினால், மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் திறன் படிப்படியாக உயர்ந்து வருவதால், பொதுத்தேர்வில் கடைசி இடத்தில் இருந்த கடலுார் மாவட்டம் தற்போது 27ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்புவதில் பல தலைமை ஆசிரியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 1,082 தொடக்கப் பள்ளிகள், 341 நடுநிலைப் பள்ளிகள், 146 உயர்நிலைப் பள்ளிகள், 135 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,704 அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு துவக்கத்திலேயே 208 தொடக்கப் பள்ளி, 47 நடுநிலைப் பள்ளி, 24 உயர்நிலைப் பள்ளி, 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்த 296 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர். எஸ்.எம்.எஸ்., அனுப்பிய தலைமைஆசிரியர்களில் 115 பேர் வருகைப்பதிவை தவறாக அனுப்பியுள்ளதால், பதிவு ஏற்கப்படவில்லை.பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை ஆய்வு செய்த, கலெக்டர் தண்டபாணி, வருகைப்பதிவு எஸ்.எம்.எஸ்., பதிவுநாளுக்கு நாள் குறைந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (பொறுப்பு) முனுசாமி, ஆசிரியர்கள் வருகைப்பதிவை தினமும், குறித்த நேரத்தில் எஸ்.எம்.எஸ்., அனுப்பவும், தவறும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை அன்று மாலைக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 2018 மாத பள்ளி நாள்காட்டி & Training Days


BEO அலுவலக குறைதீர் நாள் : 7.7.18
 சனிக்கிழமை வேலை நாள் : 21.07.18 & 28.7.18
 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி
(I STD)
 1 batch: 13&14.7.18
2 batch: 16&17.7.18
3 batch: 18&19.7.18
4 batch: 20&21.7.18
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி (VI std)
Maths&social : 
1 batch: 9&10.7.18
2 batch : 11&12.7.18
Tamil& Science
1 batch : 13&14.7.18
2 batch: 16&17.7.18
  English 
1 batch:18&19.7.18
2 batch: 20&21.7.18
 R.L : இல்லை
 அரசு விடுமுறை இல்லை
 CRC - இல்லை
 கல்வி வளர்ச்சி நாள் : 15.7.18
 ஜூலை மாத வேலை நாள்கள் : 24
 இதுவரை மொத்த
வேலை நாள்கள் :45

அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு

லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அதன் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கும் விழா நடந்தது. திருச்செங்கோட்டில் நடந்த விழாவில் பாராட்டு சான்றுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு ரூ.27 ஆயிரத்து 205 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த மாதம் லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வருகிறார்கள். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 6 வாரம் தங்கியிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஆங்கிலத்தை கற்றுத்தர இருக்கிறார்கள்.

அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ 3 ஆயிரம் பள்ளிகளில் கொண்டுவர டெண்டர் விடப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறைக்கு 10 கணினி, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 20 கணினி என வழங்கி இணையதள பயிற்சி அளிக்கப்படும். ஒரு சிறந்த ஆசிரியர் 100 பள்ளிக்கு காணொலி காட்சி மூலமாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 15 இடங்களில் சி.ஏ. பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஆடிட்டர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். 20 ஆயிரம் மாணவர்கள் இதன்மூலம் தணிக்கை பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.