யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/18

வலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம் சென்னை சுற்றி மழை கொட்டும் :

சென்னை : 'வங்க கடலில் உருவாகியுள்ள, 'பெய்ட்டி' புயல் சின்னம், ஆந்திரா மற்றும் தமிழக கடற்பகுதி இடையே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வலுவாகுது,பெய்ட்டி,புயல் சின்னம்,சென்னை,மழை,கொட்டும்
புயல் சின்னத்தால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, மிக கனமழை பெய்யும் என, தெரிகிறது.தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை, நவ., 1ல் துவங்கியது. முதலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு, சென்னை முதல், தென் மாவட்டங்கள் வரை, பரவலாக மழையை கொடுத்தது.

பின், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 'கஜா' புயலாக மாறி, டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, வட மாவட்டங்களில் மழையை
கொட்டியது. டிச.,6 முதல், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், இந்திய பெருங்கடலை யொட்டி, வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இன்று நள்ளிரவுக்கு பின், புயல் சின்னமான, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மண்டலம், நாளை மறுநாள் புயலாக மாறி, வட மேற்கு திசையில் நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, தாய்லாந்து வழங்கியுள்ள, பெய்ட்டி என்ற பெயர், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புயல், அந்தமானுக்கு மேற்கு பகுதி வழியே சுழன்று, தமிழக கடற்பகுதியை நெருங்க உள்ளது.


கொட்டும் மழை :
இதனால், தமிழகத்தின் பாம்பன் முதல், ஆந்திராவின் நெல்லுார் வரை, கன மழையை கொடுக்கும். குறிப்பாக, நாகை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில், கனமழையை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புயல் சின்னம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
2 நாட்களுக்கு வறண்ட வானிலை:
வங்க கடலில் புயல் சின்னம் உருவாவதால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்காது என, வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடலை ஒட்டி, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதுவரை, இன்னும் இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில் குறிப்பிடும் படியாக மழை இருக்காது; வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களை பொறுத்தவரை, வரும், 13ம் தேதி வரை, வங்க கடலின் தெற்கு, தென் மேற்கு, தென் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அந்த பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். கடல் அலைகள் கொந்தளிப்பாகவும், மோசமான வானிலையும் இருக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு சலுகை :

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.


இனி, முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், இந்த வரி விலக்கு, பொருந்தும். இதனால், 2019 - 20 நிதி ஆண்டில், அரசுக்கு, 2,840 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளியில் தண்ணீரின் தரம் இணையதளத்தில் பதிவேற்றம் :

மத்திய அரசின் இணையதளத்தில், 15 அரசுப்பள்ளிகள், தண்ணீரின் தர அளவீட்டை, பதிவேற்றம் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் நினைவாக, மத்திய அரசு, தண்ணீர் பரிசோதிக்கும் புதிய திட்டத்தை அறிவித்தது.பள்ளி அறிவியல் புத்தகத்தில், துாய தண்ணீரை அடையாளம்காண்பதற்கான, சோதனை முறைகள் உள்ளன.

இதை செயல்வழியில் மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை,மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில், பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.கோவையில், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், இத்திட்டத்துக்கான செயல்விளக்கம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. தண்ணீரின் தரத்தை மாணவர்களை கொண்டு பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நுரை மிதப்பு முறை, தண்ணீரின் பி.எச்., தன்மை, உப்பு தன்மை ஆகிய மூன்று முறைகளில், சோதித்து கிடைக்கும் முடிவுகள், பதிவேற்றப்பட்டுள்ளன.இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள, ஆலோசனை நடப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகை பதிவுக்கு புதிய தொழில்நுட்பம் :

செயற்கை நுண்ணறிவு என்னும் ஆன்ட்ராய்டு ஆப் மூலம் மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் புதிய தொழில் நுட்பத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்வு சென்னை, அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. புதிய தொழில் நுட்ப வருகைப் பதிவை தொடங்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மாணவ மாணவியரின் முகத்தை அடையாளமாக வைத்து வருகைப் பதிவு செய்ய செல்போனில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருமுறை மாணவர்களின் போட்டோவை தனியாக படம் பிடித்து, அவர்களின் விவரங்கள் சேமித்து வைக்கப்படும். அதேபோல ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ மாணவியரின் போட்டோக்கள் அதில் சேமிக்கப்படும். அதற்கு பிறகு, தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் மாணவ மாணவியரை குழுவாக படம் பிடிப்பார்கள். வகுப்புக்கு வந்துள்ள மாணவர்கள், வராதவர்கள் குறித்த விவரங்களை செல்போனில் உள்ள செயலி காட்டிக் கொடுத்துவிடும்.

நெல்லை, குமரியை சேர்ந்த 80 இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் டிச.24ல் தொடக்கம் நாகர்கோவிலில் 15 நாள் நடக்கிறது :

நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் வரும் டிசம்பர் 24 முதல் 15 பதினைந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் துறையில் மேம்பாடு அளிப்பதற்காக இளம் மாணவர் அறிவியல் திட்ட விஞ்ஞானிகள் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மாணவர்களுக்காக வருகின்ற டிசம்பர் 24ம் தேதி தொடங்கி 15 நாட்கள் முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளது. பயிற்சிக்கு பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் கலந்து கொள்ள தகுதி உடையவர் ஆவர். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழியல் போன்றவற்றில் தரமிக்க வல்லுநர்களால் பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் மாணவ, மாணவியர் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ராஜாக்கமங்கலம் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவர்.

பயிற்சி நிறைவு நாட்களில் மாணவ மாணவியர் சுயமாக தயாரித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகளைக் கொண்டு அறிவியல் கண்காட்சி நடைபெறும். பயிற்சியில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் இந்துக் கல்லூரி அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்று இம்மாதம் 19ம் தேதிக்கு முன்னர் பூர்த்தி செய்து அளித்தல் வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் பட்டியல் 20ம் தேதி வெளியிடப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த 80 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். எனவே, முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். கலந்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சான்றிதழ் வழங்க உள்ளது.

TNPSC DEO Exam 2018 - தேர்வு அறிவிப்பு

பள்ளி கல்வியில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான போட்டி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்விலும்; 50 சதவீதம், நேரடி போட்டி தேர்வு வழியாகவும் நியமிக்கப்படுகின்றனர்.இதன்படி, தற்போது காலியாக உள்ள, 18 டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, மார்ச், 2ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. இந்த தேர்வின் வழியாக, நேரடியாக, 14 பேரும், அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், நான்கு பேரும் தேர்வு செய்யப்படுவர் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

JACTTO-GEO வழக்கு வதந்திகள்! உண்மை நிலவரம் உரைக்கும் - திண்டுக்கல்.எங்கெல்ஸ் :

ஜாக்டோ-ஜியோ வழக்கின் நேற்றைய (10.12.2018) விசாரணையின் நடவடிக்கைகளை 21 மாத நிலுவையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்களை பிளவுக்குட்படுத்தி மதிமயக்கும் செயலில் ஈடுபட்டு வரும் சில நபர்கள் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
🔥
🛡 இவர்களின் நோக்கம், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியமல்ல. மாறாக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான பிளவுகள் மட்டுமே.


🛡 இறுதியாக நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பங்கெடுக்க விடாது தடுத்தோர், வேலைநிறுத்தத்தில் தங்களின் ஒற்றைக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதாக கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அளிக்க பரப்புரை செய்தோர் இன்று ஜாக்டோ-ஜியோவை விமர்சிப்பது வேடிக்கையே.
🔥

🛡 இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருப்பின் ஊதியம் & ஓய்வூதியக் கோரிக்கையையும் வலியுறுத்தியிருப்பர். அப்படி கூறியிருப்பின் பிளவுபடுத்த இயலாது ஓய்வூதியக் கோரிக்கையால் மற்றவர்களுடன் பொதுமைப்படுத்தப்பட்டுவிடுவோம் என்பதாலேயே ஓய்வுக்கால வாழ்வாதாரக் கோரிக்கைக்காக குரல் எழுப்பாது மீறி எழுப்பும் குரல்களையும் ஒழித்து வருகின்றனர்.
🔥
🛡 இவர்களின் இத்தகைய போக்கு ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும் என்று கருதியும், இடைநிலை ஆசிரியர்களுக்குள் பரப்பப்பட்டுள்ள மிகத்தவறான பதிவுகளின் *உண்மை நிலையை உரைக்கும் நோக்கிலும், இடைநிலை ஆசிரியரும் CPS நீக்கம் குறித்த விழிப்புணர்வுப் பணிகளில் தொடர்ந்து களத்தில் நிற்பவருமான தோழர்.பிரடெரிக் எங்கல்ஸ்* சமூக வலைதளத்தில் பின்வரும் விளக்கத்தை அளித்துள்ளார்.
🔥
🔮 *"நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.*
🔥

🔮 *நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைக் காணாமல் தனது கற்பனை திறத்தால் நினைத்ததைத் தயவுசெய்து பொதுக்கருத்தாக பகிர வேண்டாம்.*
🔥
🔮 *21 மாத நிலுவை தொகையை மட்டும் ஜாக்டோ ஜியோ வலியுறுத்தவில்லை.*
🔥
🔮 *சித்திக் குழுவின் காலத்தை காலநீட்டிப்பு செய்யவும் ஜாக்டோ ஜியோ கேட்கவில்லை.*
🔥
🔮 *20.12.2018 அடுத்த கட்ட விசாரணை என்றும் அதற்குள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது அதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்பிறகே வழக்கு விசாரணை 07.01.2019 மாற்றம் செய்யப்பட்டது.*
🔥
🔮 *ஊதிய குறைதீர் குழுவினர் தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தான் அதில் யாருக்கு என்ன செய்யப்பட்டது என்பது தெரியவரும்.*
🔥
🔮 *சித்திக் குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய குறையை மட்டும் தீர்க்க அமைக்கப்படவில்லை.*
🔥
🔮 *CPS குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும்முன் தமிழக முதலமைச்சர் சேலம் கூட்டத்தில் பேசிய கருத்தும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.*

🔥
🔮 *CPS-ல் ஓய்வு பெற்ற, மரணம் அடைந்துள்ள 10,000 பேரின் நிலை குறித்தும் அரசிடம் கேட்கப்பட்டபோது, செட்டில்மென்ட் பற்றி மட்டும் குறிவிட்டு ஓய்வூதியம் குறித்த நமது வழக்கறிஞரின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்ததை அங்கிருந்தோர் அறிவர்.*
🔥
🔮 *மேலும், நீதிபதிகள் தமது உத்தரவு வெளிவந்தால் கூடுதல் விபரங்களை அறியலாம்.*
🔥
🔮 *அதற்கு முன்பு தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.*
🔥
🔮 எனவே, *போர்க்களங்கள் மாறலாம் போர்கள் மாறாது."*
🔥
🛡 இதுகுறித்து, அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, *"சார், நேற்று நீதிமன்றத்தில் இது தான் நடந்தது. நானே நேரில் சென்றிருந்ததால் நடந்ததைக் கூறியுள்ளேன். இனி இதனை நம்புவதா அல்லது கட்டுக்கதைகளை நம்புவதா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்."*
🔥
🛡 மேலும், *"CPS வல்லுநர்குழு அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் நாளை நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்தாக வேண்டும் என்பதையும், தமிழத்தில் உள்ள 149 துறைகளுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட One Man Commission report-ஐ 10 நாள் நீதிமன்ற விடுமுறை கழிந்து வரும் ஜனவரி 7-ற்குள் சமர்ப்பித்தாக வேண்டும் என்பதையும், 21 மாத ஊதிய நிலுவை குறித்த அறிவிப்பையும் ஜாக்டோ-ஜியோ-வின் வேலைநிறுத்த அறிவிப்பிற்குக் கிடைத்த முதல்கட்ட Positive Approach-ஆகவே பார்க்கிறேன்."*
🔥
🛡 *"அறிக்கைகளில் நமது கோரிக்கைகள் தீர்க்கப்படாது போனால் உறுதியான போராட்ட அறிவிப்பை ஜாக்டோ-ஜியோ அறிவிக்கும் எனவும் நம்புகிறேன்."* என்று கூறினார்.

மூன்றாம் பருவ பாடத்திட்ட புத்தகங்களை முறையாக அனைத்து வகுப்புகளுக்கும், உரிய நேரத்தில் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை:

'மாநில கல்வித்திட்டத்தின் கீழ், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய சிலபஸ் அடிப்படையில் புத்தகம் வழங்கப்படுகிறது

மூன்றாம் பருவத்திற்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. டிஜிட்டல் முறையில் இதற்கான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜன.,2ம் தேதி பள்ளி திறக்கும் போது, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, புதிய புத்தகம் வழங்க வேண்டும். இதற்கான ஆயத்த பணிகளில், தமிழ்நாடு பாடநுால் கழகம் ஈடுபட்டு வருகிறது.


கோவை மாவட்டத்தில், ஐந்தாம் வகுப்புக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், காலாண்டு விடுமுறைக்குப் பின், ஒரு மாதம் கழித்து வினியோகிக்கப்பட்டது. உரிய நேரத்தில் புத்தகம் வினியோகிக்காததால், ஆசிரியர்கள் சிலபஸ் முடிக்க இயலவில்லை.வரும் 17ம் தேதி, தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், தற்போது வரை, வகுப்புகள் எடுக்கப்படுவதால், தேர்வுக்கு தயாரிப்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

மூன்றாம் பருவ பாடத்திட்டத்துக்கு, இதேபோன்ற சிக்கல் எழுந்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். முன்கூட்டியே பாடப்புத்தக கொள்முதலுக்கு, திட்டமிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.



தாமதம் கூடாது:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில்,

''ஐந்தாம் வகுப்புக்கு தாமதமாக புத்தகம் வினியோகித்ததால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதம் நடத்த வேண்டிய பாடத்திட்டம், அவசர அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது மூன்றாம் பருவத்துக்கு, இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல், அனைத்து பள்ளிகளுக்கும், புத்தகம் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்

TET - முடித்தோரை அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் : அமைச்சர் செங்கோட்டையன் :

மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல் கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தரமான கல்வி வழங்குவது, புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளை நடத்துவது, பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சென்னையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினோம். அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளோம்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

11/12/18

நீதிக்கதை :சிந்தனை கதைகள்



சிறியதே அழகு


தாய் யானையுடன் நடை பயின்றுகொண்டிருந்த குட்டி யானை, அருகில் இருந்த புல்வெளியில் புள்ளிமான் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டது.

“அம்மா, அந்தப் புள்ளிமானோடு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமா?”

“மானோடு விளையாடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கவனமாக விளையாட வேண்டும். கல்லில் தடுக்கி கீழே விழுந்து, காயப்படக் கூடாது” என்று எச்சரித்தது தாய் யானை.

குட்டி யானையைக் கண்டதும் புள்ளிமான் மகிழ்ச்சியோடு ஓடிவந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.

“தினமும் வருகிறேன். நாம் இருவரும் ஜாலியாக விளையாடலாம்” என்றது குட்டி யானை.

“அது முடியாது. நீ பெரியவனாக வளர்ந்துவிட்டால், உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கும். அதனால் உங்க இனத்தினரோடு விளையாட ஆரம்பி” என்றது புள்ளிமான்.

“யார் சொன்னது? நான் பெரிசா எல்லாம் வளரவே மாட்டேன். எப்பவும் இப்படியே குட்டியா, அழகா இருப்பேன். இப்பவே அம்மா கிட்ட சொல்லி, என்னை வளர விடாமல் செய்துடறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது குட்டி யானை.

“அம்மா, மான் அழகா சின்னதா இருப்பதுபோல நானும் சின்னதாவே இருந்துடறேன். உங்களை மாதிரி பெரிய உடம்பு எனக்கு வேண்டாம்மா” என்று அப்பாவியாகச் சொன்னது குட்டி யானை.

”மான் சின்னதா இருக்கிறதும் நாம் பெருசா வளர்றதும் இயற்கை. இதை நீயோ நானோ நினைத்தால் மாற்ற முடியாது. பெரிய உடம்புதான் நம் இனத்துக்குப் பலம்” என்று தும்பிக்கையால் குட்டி யானையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னது அம்மா யானை.

குட்டி யானைக்கு இந்தப் பதிலில் திருப்தியில்லை. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வளர வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடச் சென்றுவிட்டது.

மறுநாள் புள்ளிமானைச் சந்தித்தது.

“என் அம்மாவிடம் நான் வளர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி கவலை இல்லை” என்று சிரித்தது குட்டி யானை.

“நீ ரொம்பச் சின்னவன். உனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது. வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.”

இரண்டும் சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று வந்தது. அதைக் கண்டதும் மானின் உடல் நடுங்கியது.

“குட்டி யானையே, வேகமாக ஓடிடு. சிறுத்தை வந்துகிட்டு இருக்கு. நானும் ஓடறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பாய்ந்து சென்றது புள்ளிமான்.

குட்டி யானைக்கு ஒன்றும் புரியவில்லை. சிறுத்தையின் கவனம் புள்ளிமானின் மீது இருந்ததால், குட்டி யானையை அது கண்டுகொள்ளவில்லை.


சிறுத்தையின் ஆக்ரோஷமான துரத்தலையும் புள்ளிமானின் உயிர் பயத்தையும் கண்ட குட்டி யானைக்கு முதல் முறையாகப் பயம் வந்தது.



தன்னை அறியாமல் அம்மா, அம்மா என்று கத்தியது குட்டி யானை. புள்ளிமானைப் பிடிக்க முடியாத சிறுத்தை மிகவும் ஏமாற்றமடைந்தது. குட்டி யானையைக் கண்டவுடன் மீண்டும் மகிழ்ச்சியடைந்தது. ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.

அதைப் பார்த்த குட்டி யானை, “அம்மா… அம்மா…” என்று அலறியது.

இலைகளைத் தின்றுகொண்டிருந்த அம்மா யானையின் காதில், குட்டியின் குரல் விழுந்தது. உடனே ஓடிவந்தது. அதற்குள் சிறுத்தை குட்டி யானையை நெருங்கிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையால் சிறுத்தையைப் பிடித்து, சுழற்றி வீசியது அம்மா யானை.

தூரத்தில் போய் விழுந்த சிறுத்தையால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வலியில் கதறியது.

“பொதுவா நம்மைக் கண்டால் சிறுத்தை பயப்படும். ஏனென்றால் நம் உருவம் அப்படி. தூக்கி வீசினால் ஒரு மாசத்துக்கு நடக்கக்கூட முடியாது. நீ சின்னவனாக இருப்பதால்தான் சிறுத்தை உன்னை நெருங்கியிருக்கிறது. நமது பலமே நமது பிரம்மாண்டமான உடல்தான். இப்பவாவது உனக்குப் புரியுதா?” என்று கேட்டது அம்மா யானை.


“நன்றாகப் புரிந்துவிட்டது அம்மா. புள்ளிமானுக்கு வேகமாக ஓடக் கூடிய கால்களும் நமக்கு பெரிய உருவமும் இயற்கை கொடுத்திருக்கு. நானும் நல்லா சாப்பிட்டு உங்களை மாதிரி பெரிய ஆளா வளரப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் வயிற்றுக்கு அடியில் போய் நின்றுகொண்டது குட்டி யானை.

School Morning Prayer Activities - 11.12.2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள் : 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

பழமொழி:

Even homer nods

யானைக்கும் அடி சறுக்கும்

பொன்மொழி:

மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1) ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை

2) கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
பர்மா

நீதிக்கதை :


ஒற்றைக் கொம்பனும் முதலை வாயனும்

பள்ளி இறுதி படிக்கும் மணி, நீலனைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்தான். ஒரு வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி, மணி அடித்தான். சத்தம் கேட்டு வெளியே வந்தான் நீலன்.

“என்ன மணி, இவ்வளவு தூரம்?”

“எனக்கு ஒரு உதவி செய்யணும் நீலன். பள்ளிக்கூடத்தில் காடு பற்றி ஒரு பிராஜக்ட் செய்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் காட்டைச் சுற்றிக் காட்டினால், எனக்கு உதவியாக இருக்கும். என்னைக் கூட்டிட்டுப் போறீயா?” என்று கேட்டான் மணி.

“இதெல்லாம் ஒரு உதவியா மணி? தினமும் நான் போற இடம்தானே? காடு பத்தி உனக்கு அதிகம் தெரியாது. அதனால காட்டுக்குள்ள நுழைஞ்சதிலிருந்து என்னோடதான் இருக்கணும். நான் சொல்றபடிதான் நடந்துக்கணும். அதுக்கு ஒத்துக்குறதுன்னா உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்றான் நீலன்.

“எதுக்கு இவ்வளவு பயம் காட்டறே? காட்டுக்குள்ள வீணா ஆபத்தில் சிக்கிக்கக் கூடாதுன்னு எனக்கும் தெரியும் நீலன். உன் சொல்படி கேட்கறேன், வா” என்றான் மணி.

இருவரும் பேசிக்கொண்டே காட்டுக்குள் நுழைந்தனர். ஓரிடத்தில் இரண்டு மரங்கள் ஒன்றாகப் பிணைந்திருந்தன. சற்றுத் தூரத்தில் சுவர் எழுப்பியதுபோல் மரங்கள் நெருக்கமாகவும் வரிசையாகவும் நின்றன. இந்தக் காட்சிகளை எல்லாம் படம் எடுத்துக்கொண்டான் மணி.

அப்போது தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. உஷாரானான் நீலன். “மணி, ஒத்தக் கொம்பன் வர்ற மாதிரி இருக்கு. நாம ரெண்டு பேரும் அந்தப் பாறைக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிடலாம். வேகமா வா” என்று மணியை அழைத்துக்கொண்டு சென்றான் நீலன்.

சில நிமிடங்களில் இரண்டு கொம்புகளுடன் கம்பீரமாக ஒரு யானை அந்தப் பக்கம் நடந்து சென்றது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பாறையை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“என்னப்பா, ஒத்தக் கொம்பன்னு சொன்னே, அதுக்கு ரெண்டு தந்தம் இருக்கே?” என்று கேட்டான் மணி.

“நான் சொன்னதுக்கு கொம்பு இருக்கிற ஒத்தை யானைன்னு அர்த்தம். இந்த மாதிரி யானை எப்பவும் கோபமா இருக்கும். மனுசங்களைக் கண்டால் விடாது. இது யானைக் கூட்டத்துல இருந்து விரட்டப்பட்ட யானை” என்று நடந்துகொண்டே சொன்னான் நீலன்.

விதம்விதமான பறவைகள், பறவைகளின் கூடுகள், தேன் கூடு, மான் கூட்டம், குரங்குகள் என்று வரிசையாகப் படம் பிடித்தபடி நடந்தான் மணி.

சிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் ஒரு குளத்தை அடைந்தனர்.

“இந்தப் பாறையில் உட்கார்ந்து ஓய்வு எடு மணி. நான் இந்த மரத்தில் ஏறி, உனக்கு ஈச்சம் பழங்களைப் பறித்துப் போடுறேன்” என்று சொல்லிவிட்டு, மரத்தில் ஏறினான் நீலன்.

குளத்தில் தண்ணீர் தெளிவாக இருந்தது. களைப்பில் தாகம் எடுத்தது. மெதுவாகக் குளத்துக்குள் இறங்கினான் மணி. தண்ணீர் குடித்தான். திடீரென்று குளத்தில் குளிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. கைப்பையைப் பாறையில் வைத்துவிட்டுத் திரும்பலாம் என்று நினைத்தபோது, நீலன் கத்தினான்.

  
“மணி, கையில் இருந்த பையை அந்த முதலை வாயில் வீசிட்டு, வேகமா கரையேறு” என்று சொல்லிக்கொண்டே மரத்திலிருந்து குதித்தான் நீலன்.

மணியும் பையைக் கழற்றி முதலையின் வாய் மீது வீசினான். இரை என்று நினைத்த முதலை, பையைக் கவ்வியபடி தண்ணீருக்குள் மூழ்கியது. மணி வேகமாகக் கரையேறினான்.

“நல்லவேளை நீலன், உன்னாலதான் இப்ப உயிரோட இருக்கேன். தண்ணியில நின்ன நானே கவனிக்கல. நீ எப்படிக் கவனிச்சே?” என்று படபடப்புடன் கேட்டான் மணி.

“பாறையிலதானே உன்னை உட்காரச் சொன்னேன். நீ என்கிட்ட சொல்லாமல் குளத்தில் இறங்கிட்டே. அதான் உன்னைக் கவனிச்சிட்டே இருந்தேன். முதலை மெதுவா உன்னை நோக்கி வாயைத் திறந்துகிட்டு வந்தது. உன்னை இறங்கி வந்து காப்பாத்த நேரமில்லை. அதான் பையை வீசச் சொன்னேன்.”

“ரொம்ப நன்றி நீலன். அந்தப் பையில் கொஞ்சம் ரூபாயும் நீ சொன்ன விஷயங்களின் குறிப்புகளும் வச்சிருந்தேன். எல்லாம் போச்சே…”

“போகட்டும் மணி. உயிர் பிழைச்சதே பெரிசு. இந்த ஈச்சம் பழங்களைச் சாப்பிட்டுக்கிட்டே நட” என்று ஈச்ச மரக் குச்சிகளைக் கொடுத்தான் நீலன்.


நீலனின் அனுபவ அறிவை நினைத்து வியந்தபடி, ஈச்சம் பழங்களைச் சுவைத்துக்கொண்டே நடந்தான் மணி.


இன்றைய செய்தி துளிகள் : 


1.அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

2.பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை : கியூ.ஆர்., கோடுடன் வழங்க, 'டெண்டர்' -க்கு அரசு அனுமதி

3.சிறப்பு வகுப்பில் பங்கேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு1.69கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க முடிவு.

4.ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்

5.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை : கியூ.ஆர்., கோடுடன் வழங்க, 'டெண்டர்'

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, கியூ.ஆர்., கோடுடன் கூடிய, அடையாள அட்டை வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனை, வரும், 14ம் தேதி நடக்கிறது.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு தொழில்நுட்ப திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன்படி, அனைத்து மாணவ - மாணவியருக்கும், 'சிப்' பொருத்தப்பட்ட, 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில், மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, வகுப்பு, பள்ளியின் பெயர், ரத்தப் பிரிவு, ஆதார் எண் உட்பட, அனைத்து விபரங்களும் இடம் பெறும்.கல்வி மேலாண்மை தகவல் அமைப்பால், மாணவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, 'எமிஸ்' என்ற, ஒருங்கிணைந்த அடையாள எண்ணும் இருக்கும். மாநிலம் முழுவதும் உள்ள, 37 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 71 லட்சம் மாணவர்களுக்கு, அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டம், 12.70 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அட்டை களில், சுய விபரங்கள் அடங்கிய, கியூ.ஆர்., கோடும் இணைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் நேற்று அறிவிக்கப்பட்டது. தேசிய அளவில் தரம் வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த நிறுவனங்களுக்கான முன் விளக்க கூட்டம், வரும், 14ம் தேதி, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கிறது. அதில், அடையாள அட்டைக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் குறித்து, அதிகாரிகள் விவரிக்க உள்ளனர். வரும், 18ம் தேதிக்குள், தனியார் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

'இ - மார்க்கெட் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும்' : அரசு அலுவலங்களுக்கு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு தேவையான, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை, 'இ - மார்க்கெட்' எனப்படும், 'ஆன்லைன்' வர்த்தக முறையில் வாங்க, செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர், எழுது பொருட்கள், கணினி சார்ந்த பொருட்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. இப்பொருட்களை, எங்கு, எப்படி வாங்குவது என்பதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.இதில், கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை, தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' வாயிலாக வாங்க வேண்டும். இதற்கும், துறை ரீதியாக கருத்துரு அனுப்புவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இருப்பினும், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், அதற்கான சார்பு பொருட்களை வாங்குவதில், குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. இதில், வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, இந்த நடைமுறையை, ஆன்லைன் முறைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, எல்காட் நிறுவனம், இ - மார்க்கெட் என்ற ஆன்லைன் சேவையை துவக்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள், வழக்கமான முறையில் பொருட்களை வாங்குவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தலைமை செயலகத்தில், சமீபத்தில் நடந்த அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில், இ - மார்க்கெட் தளத்தில், அரசு துறைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பொருட்கள் வாங்கும் அதிகாரி, அத்துறை சார்பில், இத்தளத்தில் பதிவு செய்து, பொருட்களை வாங்க, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.துறை வாரியாக, இ - மார்க்கெட் திட்டத்தில் பதிவு செய்த விபரத்தை தெரிவிக்கவும், செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், எந்தெந்த அரசு துறைகள், என்னென்ன பொருட்களை வாங்கியுள்ளன என்ற விபரம், அரசுக்கு நேரடியாக சென்றுவிடும்.

'குரூப் - 1' தேர்வு : 1.37 லட்சம் பேர் காத்திருப்பு

சென்னை: 'குரூப் -- 1' தேர்வு முடிவுக்காக, 1.37 லட்சம் பேர், எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் - 1 பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டது.இதன்படி, துணை கலெக்டர் - 29; டி.எஸ்.பி., - 34; வணிகவியல் உதவி கமிஷனர், தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி பதவிகளுக்கு தலா - எட்டு. துணை பதிவாளர் - ஒன்று, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - ஐந்து என, மொத்தம், 85 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.முதல் நிலை தகுதி தேர்வு, 2017 பிப்., 19ல் நடந்தது. இதில், 1.37 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, 2017 அக்., 13, 14, 15ம் தேதிகளில், பிரதான எழுத்து தேர்வு நடந்தது. முடிவுகள், 2018 ஜூனில் எதிர்பார்க்கப்பட்டன.ஆனால், 14 மாதங்களாகியும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு கள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

புகைப்படம் எடுத்து வருகை பதிவு : பள்ளி கல்வியில் இன்று அறிமுகம்

சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறையின் புதிய முயற்சியாக, மாணவ - மாணவியரை புகைப்படம் எடுத்து, வருகையை பதிவு செய்யும் திட்டம், இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பு, நவீன கணினி ஆய்வகம், பயோ மெட்ரிக் என, பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வகையில், வகுப்பில் உள்ள மாணவ - மாணவியரை வருகைப்பதிவு செய்வதில், புதிய தொழில்நுட்பத்தை, பள்ளி கல்வித்துறை, இன்று அறிமுகம் செய்கிறது.சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடக்கிறது. பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, புகைப்படம் எடுத்து வருகையை பதிவு செய்யும், ஆன்ட்ராய்ட் செயலி தொழில்நுட்பத்தை, அறிமுகம் செய்கிறார்.பெங்களூரைச் சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற நிறுவனம் சார்பில், 'ஆன்ட்ராய்ட்' வகை ஆப் வழியாக, இந்த தொழில்நுட்பம் அமலாகிறது.இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ் மாறன் கூறியதாவது:மாணவ - மாணவியரை, வகுப்பில் புகைப்படம் எடுக்கும்போது, அவர்களின் முக அடையாளம் அடிப்படையில், வருகைப்பதிவு செய்யப்படும். சீனாவில், ராணுவத்திலும், வேறு சில துறைகளிலும் இந்த திட்டத்தை பயன்படுத்துகின்றனர்.இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில், அசோக் நகர் பள்ளியில், இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.எப்படி செயல்படும்?வகுப்பில் உள்ள மாணவ - மாணவியரின் புகைப்படங்கள், முதலில் சேகரிக்கப்பட்டு, அவை, ஆன்ட்ராய்ட் ஆப் மற்றும் கணினி சர்வரில் உள்ளீடு செய்யப்படும். வகுப்பு ஆசிரியர், தங்கள் மொபைல் போனில் ஆன்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாட வேளையும், வகுப்பில் உள்ள அனைத்து மாணவ - மாணவியரின் முகம் பதிவாகும் வகையில், ஒரே ஒரு புகைப்படம் எடுத்தால் போதும். அந்த புகைப்படத்தில் பதிவாகும் மாணவ - மாணவியரின் முகங்கள், செயலி வழியாக வருகைப்பதிவு பட்டியலில் இணைந்து விடும்.இந்த தொழில்நுட்பத்தால், வருகைப்பதிவு எடுக்கும் நேரம் குறையும். கணினி முறையில், வருகைப்பதிவு விபரங்களை தொகுத்து வைக்கலாம். அவற்றை யாரும் போலியாக திருத்த முடியாது. இது, முழுக்க முழுக்க, 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' என்ற, கணினி வழி செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தில் செயல்படும்.

தகுதி இல்லாத ஆசிரியர் பட்டியல் வெளியிட்டு, காலியிடங்கள் அறிவிக்க வேண்டும் பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

தகுதி இல்லாத கலையாசிரியர் பட்டியலை வெளியிட்டு, களையெடுப்பதோடு, பள்ளிகளில் தகுதியானவர்களை பணியமர்த்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.நுாறு மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில், கலையாசிரியர் நியமிக்க வேண்டுமென, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில், 2012ல், 16 ஆயிரத்து, 548 பேர் பணி அமர்த்தப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாள் பணிபுரியும் இவர்களுக்கு, மாதம், 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.இப்பணியில், உரிய கல்வித்தகுதியின்றி பலர் பணிபுரிவதாக புகார் எழுந்தது. ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன், மாவட்டம் வாரியாக கலையாசிரியர்களின் கல்வி தகுதியை சரிபார்க்க உத்தரவிட்டார்.கோவை மாவட்டத்தில், 400 ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள், இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இதை ஆய்வு செய்யும் பணி நடப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தகுதியற்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதோடு, கல்வி தகுதி கொண்ட பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கலைப்பாடங்களில் கல்வி தகுதி கொண்ட பலர், பணிவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ''இவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். தகுதியற்றவர்கள் பட்டியல் வெளியிட்டு, காலியிடங்கள் அறிவிக்க வேண்டும்.

தகுதியானவர்களிடம் விண்ணப்பம் பெற்று, பணிவாய்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார்

பள்ளி மானிய தொகையை செலவிட புதிய கட்டுப்பாடுகள் - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. 

பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை தற்போது 4 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். மேலும் அவர்களது தேவைக்கு ஏற்பஉதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சில இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைக்காக ஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவது என்பது வேறு, அரசாணையை எரிப்பது என்பது வேறு. அரசு சார்பிலும் அரசாணையை எரித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பெற்றோருக்குப்பின் பராமரிக்க, காப்பகம் தேவை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, விரைவில் அனுமதி பெற்று  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு பள்ளிகளில், இரு பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க, கெடுபிடி காட்டுவதால் அதிருப்தியடைந்துள்ளனர்.


தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. புத்தக பக்கங்கள் அதிகமாக இருந்ததால், இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. முதல்பகுதி பாடத்திட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் பகுதி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. பாடங்கள் நடத்துவது குறித்து, முதுகலை ஆசிரியர்களுக்கு, இரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.

 சேலம் மாவட்டத்தில், பல மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவால், உயிரியல், தாவரவியல் பாடங்களை, ஒரே ஆசிரியர் நடத்தும் நிலை காணப்படுகிறது. கடந்த, 6, 7ல், தாவரவியல் ஆசிரியர்களுக்கு, இரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, டிசம்பர் 10 (நாளை), 11ல், மேட்டுப்பட்டி, சேலம் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், ஏற்கனவே தாவரவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்கக்கூடாது என, அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்

கொலுசு சிந்தனையைச் சிதறடிக்கிறதா? - "The Hindu" தலையங்கம்

கலாவுக்கு ஒரு பக்கம் வருத்தமாகவும் இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. ஸ்கூலுக்கு இனிமேல் பெண்கள் யாரும் கொலுசு அணிந்து வரக் கூடாது என்று அரசு சொல்லிவிட்டது. இனிமேல் அவள் வகுப்புத் தோழிகளின் கொலுசுச் சத்தம் கொலுசு இல்லாத அவளைச் சங்கடப்படுத்தாது.

ஆனால், கூடவே அம்மாவைக் கொஞ்சி, கெஞ்சி, சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து கொலுசு வாங்கிவிடலாம் என்ற கனவில் மண் விழுந்துவிட்டது.

அம்மாவுக்குச் சந்தோஷம். பரவாயில்லை அரசு இந்த மாதிரி தடை கொண்டுவந்தது நல்லதுதான். இப்போதைக்கு கலாவின் கனவை நிறைவேற்ற பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை.

சந்திராவின் அம்மா ஆசை ஆசையாக மல்லிகைச் செடி வளர்த்துவருகிறார். தினம் இரண்டு முழம் அளவுக்காவது பூ தேறிவிடும். அதை அடர்த்தியாகக் கட்டி, தான் கொஞ்சமும் சந்திராவுக்குக் கொஞ்சமும் வைப்பார்.

சந்திராவுக்கு மல்லிகைப் பூவைத் தினமும் வைத்துக்கொண்டு போகப் பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொன்னால் திட்டுவார்.

பூ வைக்கப் பள்ளிகளில் தடை வந்தது,  சந்திராவுக்கு வசதியாகப் போயிற்று. சந்திரா சொன்னதைக் கேட்டு அம்மாவுக்கு வருத்தமாயிற்று.

பொம்பளைப் பிள்ளைங்க பூ வைப்பதுதான் மங்களகரம். அரசு வைக்கலாம்னு சொல்லுதா, வைக்க வேண்டாம்னு சொல்லுதான்னு புரியலை. அரசு இப்படி எல்லாம் தனி மனித சுதந்திரத்துல தலையிடக் கூடாது என சந்திராவின் அம்மாவுக்குத் தோன்றியது.


கையாளக் கற்றுத்தர வேண்டாமா?

பேதம் தெரியக் கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் சீருடை என்பது வைக்கப் பட்டுள்ளது. அதேபோல் பூ, கொலுசு மாதிரியான விஷயங்களில் அனைவருக் குமான ஒரு வரையறை உருவாக்குவது சரியான விஷயமாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்குச் சொல்லப்படுகிற காரணம் தான்,  கேவலமாக இருக்கிறது.

மல்லிகைப்பூ வாசத்திலும் கொலுசுச் சத்தத்திலும் பையன்களுக்குக் கவனச் சிதறல் வந்துவிடுமாம். அதனால் கொலுசு அணியக் கூடாதாம்; பூ வைக்கக் கூடாதாம்.

இதே ரீதியில் போனால், பெண்களைப் பார்ப்பதால் ஆண்கள் மனம் சலனப்படும், அதனால் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பார்களா? பெண்களைப் பார்க்க முடியாவிட்டால் என்ன? மொபைலிலும் டிவியிலும் சினிமாவிலும் பெண்களை ஆண்கள் பார்ப்பதில்லையா? அதில் வரும் ஆபாசமான காட்சிகளைத் தடுக்க, தணிக்கையைச் சரியான தளத்தில் அமலாக்கத் தயங்கும் அரசு ஏன் சின்னஞ்சிறு பெண்களின் நடை, உடை பாவனைகளில் விதிகளைக் கொண்டுவருகிறது?

பையன்களின் மனம் சலனப்படுகிறது என்றால் சலனத்தைக் கையாள, தன் வசத்தில் தன் வாழ்வைக் கையில் எடுப்பதை அல்லவா நாம் சொல்லித்தர வேண்டும்.


அபத்தத்தின் உச்சம்

அதேபோல் தொலைக்காட்சி, சினிமா, மொபைல் பயன்பாட்டில் இம்மாதிரியான காட்சிகள் காணக்கிடைப்பதில் எந்தவிதச் சீரமைப்புகளைக் கொண்டுவர வேண்டும் என்றல்லவா யோசிக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் பெண்கள் அணியும் உடைகளுக்கும் காட்சியமைப்புகளுக்கும் எந்தவிதத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

கவர்ச்சிகரமான உடைகளில் தண்ணீருக்குள் மூழ்கி எழும்போது படங்கள் எடுப்பது, இறுக்கமான உடைகளை அணிந்தபடி பெண்கள் சேற்றில் புரள்வது, அந்தச் சேற்றை உடலின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து வழித்து  பக்கெட்டில் நிரப்புவது போன்ற நிகழ்ச்சிகள் ஆபாசம் மட்டுமல்ல; அபத்தத்தின் உச்சம்.

குடும்பமாக உட்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூசும் அளவுக்குத்தான் பெரும் பாலான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது குழந்தைகளின் மனத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைக் குழந்தைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுள்ள அனைத்துப் பெரியவர்களும் உணரவேண்டும். தொலைக்காட்சியில், மொபைலில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்; சலனப்படுகிறார்கள். பிம்பங்களாகப் பார்த்த வற்றை  நிஜமாகப் பார்க்க விழைந்து பெண்களின் மேல் பாலியல் சீண்டல்களை, பலாத்காரத்தைச் செலுத்துகிறார்கள்.


இந்த நிகழ்ச்சிகளைத் தடுக்க அரசு எந்தவிதச் சட்ட திட்டங்களையும் போடு வதில்லை. சொல்லப்போனால், தணிக்கை விதிமுறைகளைச் சரிவரப் பயன்படுத்தினாலே இன்றைக்கு வரக்கூடிய சினிமாக்களில் பாதி விஷயங்கள் அடிபட்டுவிடும்.

ஏற்றப்பட்ட கற்பிதம்

இந்தப் பிரச்சினையை வேறு கோணத்திலும் அணுக வேண்டியுள்ளது. பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் மேல் உள்ள ஆசை எப்படி வருகிறது? காலம் காலமாகப் பெண் என்பவள் அழகாக இருக்க வேண்டும் என்று ஆண், பெண் இருவர் மண்டைக்குள்ளும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

பூ, கொலுசு, வளையல், மூக்குத்தி, ஜிமிக்கி, பொட்டு, தோடு, சங்கிலி, மாலை, உடை என எல்லாவற்றிலும் அப்போதைய ஃபேஷனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத் துக்குப் பெண்கள் தள்ளப் படுகிறார்கள். உன் ஆளுமைத் திறனால் கம்பீரமாக இருப்பதுதான் உண்மையான அழகு என்று யாரும் அவளுக்குச் சொல்லித் தருவதில்லை.

இயல்பாகவே இம்மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தாத பெண்களைக்கூடச் சீண்டி, கிண்டல் அடித்து, ‘வழி’க்குக் கொண்டுவரப் பார்க்கின்றன சுற்றமும் தோழமையும்.

கற்பதே தீர்வு

ஆண்/பையன் கொலுசால், பூவால், இவற்றை அணிந்த பெண்ணால் கவரப் படுகிறான். பெண் இவற்றைப் பிரதானமாக நினைக்கும்படி வளர்க்கப்படுகிறாள்.

வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் உணர்வுகளைக் கையாளக் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களின் உலகம் அலங்காரத்துக்கு மட்டுமானது அல்ல; ஆளுமைப் பண்புகளால் நிரப்பட வேண்டியது என்ற பார்வையை ஆணும் பெண்ணும், பெற்றோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


இன்றைக்கு முக்கியமாகத் தேவைப் படுவது வளரிளம் பருவத்தினருக்கான வாழ்க்கைத் திறன் கல்வி. பால் பேதங்களைப் புரிந்துகொள்ளப்  பாலினம் (Gender) பற்றிய கல்வியும் மீடியாவைப் புரிந்துகொள்வதற்கான கல்வியும் தேவை. பாலியல் கல்வி குறித்த தவறான புரிதலால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இத்தகைய கல்விக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அவர்களும் பாலியல் சம்பந்தப்பட்டவை குறித்துப் பேசத் தெரியாமல் திணறுகிறார்கள். பிரச்சினை பெரியவர்களோடுதான்.

பாலியல் கல்வி என்பது உடல் உறவு கொள்வது பற்றி அல்ல. ஆண், பெண் உடற்கூறு பற்றி அறிதல், அந்தரங்க சுத்தம் உட்படத் தன் சுத்தம் பேணக் கற்றல், இனப்பெருக்க உடற்கூறு, பாலியல் உணர்வு - உறவு பற்றிப் புரிந்துகொள்ளுதல், பேச்சு, நடை, உடை, பாவனை, எதிர் பாலினரோடு சரியான தளத்தில் பழகுவது என எல்லாவற்றையும் பற்றி  காரண காரியங்கள், பின் விளைவுகளோடு   விளக்குவதும் அறிவுபூர்வமாக விஞ்ஞானபூர்வமாக உணரச் செய்வதும்.

மின் பிம்பங்கள் தரும் கவர்ச்சி மாயையில் இருந்து விடுபட அவற்றைத்  தவிர்ப்பது சாத்தியப்படாதபோது அவற்றைச் சரிவரக் கையாளக் கற்பதுதான் சரியான தீர்வு. முதலில் அரசும் பெற்றோரும் பள்ளிகளும் இதை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட முன்வந்தால்தான் வளரிளம் பருவத்தினரின் வாழ்வு ஆரோக்கியமானதாக இருக்கும்.


கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com | ஓவியம்: அ. செல்வம்

நீதிக்கதை :---சிந்தனை கதைகள்



சிறியதே அழகு


தாய் யானையுடன் நடை பயின்றுகொண்டிருந்த குட்டி யானை, அருகில் இருந்த புல்வெளியில் புள்ளிமான் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டது.

“அம்மா, அந்தப் புள்ளிமானோடு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமா?”


“மானோடு விளையாடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கவனமாக விளையாட வேண்டும். கல்லில் தடுக்கி கீழே விழுந்து, காயப்படக் கூடாது” என்று எச்சரித்தது தாய் யானை.

குட்டி யானையைக் கண்டதும் புள்ளிமான் மகிழ்ச்சியோடு ஓடிவந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.

“தினமும் வருகிறேன். நாம் இருவரும் ஜாலியாக விளையாடலாம்” என்றது குட்டி யானை.

“அது முடியாது. நீ பெரியவனாக வளர்ந்துவிட்டால், உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கும். அதனால் உங்க இனத்தினரோடு விளையாட ஆரம்பி” என்றது புள்ளிமான்.

“யார் சொன்னது? நான் பெரிசா எல்லாம் வளரவே மாட்டேன். எப்பவும் இப்படியே குட்டியா, அழகா இருப்பேன். இப்பவே அம்மா கிட்ட சொல்லி, என்னை வளர விடாமல் செய்துடறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது குட்டி யானை.

“அம்மா, மான் அழகா சின்னதா இருப்பதுபோல நானும் சின்னதாவே இருந்துடறேன். உங்களை மாதிரி பெரிய உடம்பு எனக்கு வேண்டாம்மா” என்று அப்பாவியாகச் சொன்னது குட்டி யானை.

”மான் சின்னதா இருக்கிறதும் நாம் பெருசா வளர்றதும் இயற்கை. இதை நீயோ நானோ நினைத்தால் மாற்ற முடியாது. பெரிய உடம்புதான் நம் இனத்துக்குப் பலம்” என்று தும்பிக்கையால் குட்டி யானையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னது அம்மா யானை.

குட்டி யானைக்கு இந்தப் பதிலில் திருப்தியில்லை. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வளர வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடச் சென்றுவிட்டது.

மறுநாள் புள்ளிமானைச் சந்தித்தது.

“என் அம்மாவிடம் நான் வளர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி கவலை இல்லை” என்று சிரித்தது குட்டி யானை.

“நீ ரொம்பச் சின்னவன். உனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது. வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.”

இரண்டும் சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று வந்தது. அதைக் கண்டதும் மானின் உடல் நடுங்கியது.


“குட்டி யானையே, வேகமாக ஓடிடு. சிறுத்தை வந்துகிட்டு இருக்கு. நானும் ஓடறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பாய்ந்து சென்றது புள்ளிமான்.

குட்டி யானைக்கு ஒன்றும் புரியவில்லை. சிறுத்தையின் கவனம் புள்ளிமானின் மீது இருந்ததால், குட்டி யானையை அது கண்டுகொள்ளவில்லை.


சிறுத்தையின் ஆக்ரோஷமான துரத்தலையும் புள்ளிமானின் உயிர் பயத்தையும் கண்ட குட்டி யானைக்கு முதல் முறையாகப் பயம் வந்தது.



தன்னை அறியாமல் அம்மா, அம்மா என்று கத்தியது குட்டி யானை. புள்ளிமானைப் பிடிக்க முடியாத சிறுத்தை மிகவும் ஏமாற்றமடைந்தது. குட்டி யானையைக் கண்டவுடன் மீண்டும் மகிழ்ச்சியடைந்தது. ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.


அதைப் பார்த்த குட்டி யானை, “அம்மா… அம்மா…” என்று அலறியது.

இலைகளைத் தின்றுகொண்டிருந்த அம்மா யானையின் காதில், குட்டியின் குரல் விழுந்தது. உடனே ஓடிவந்தது. அதற்குள் சிறுத்தை குட்டி யானையை நெருங்கிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையால் சிறுத்தையைப் பிடித்து, சுழற்றி வீசியது அம்மா யானை.

தூரத்தில் போய் விழுந்த சிறுத்தையால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வலியில் கதறியது.

“பொதுவா நம்மைக் கண்டால் சிறுத்தை பயப்படும். ஏனென்றால் நம் உருவம் அப்படி. தூக்கி வீசினால் ஒரு மாசத்துக்கு நடக்கக்கூட முடியாது. நீ சின்னவனாக இருப்பதால்தான் சிறுத்தை உன்னை நெருங்கியிருக்கிறது. நமது பலமே நமது பிரம்மாண்டமான உடல்தான். இப்பவாவது உனக்குப் புரியுதா?” என்று கேட்டது அம்மா யானை.


“நன்றாகப் புரிந்துவிட்டது அம்மா. புள்ளிமானுக்கு வேகமாக ஓடக் கூடிய கால்களும் நமக்கு பெரிய உருவமும் இயற்கை கொடுத்திருக்கு. நானும் நல்லா சாப்பிட்டு உங்களை மாதிரி பெரிய ஆளா வளரப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் வயிற்றுக்கு அடியில் போய் நின்றுகொண்டது குட்டி யானை.

GPF -CPS - NPS திட்டங்களின் சாதக பாதகங்களை விளக்கும் ஒப்பீட்டு அட்டவணை - திண்டுக்கல் ஏங்கெல்ஸ்



அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு

அரையாண்டு தேர்வுக்குப் பின், வரும் 22ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க, ஆறு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு வரும் 13ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு, வரும் 17ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு விடுமுறை, 22ம் தேதி துவங்கி, ஜனவரி 1ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி, மீண்டும் திறக்கப்படும். இதற்கு பின், மூன்றாம் பருவ பாடத்திட்டம் துவங்கும் என, இணை இயக்குனர் குப்புசாமி சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு இம்மாதம் முழுவதும் தொடர் பயிற்சி நடத்த திட்டம்

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொடர் பயிற்சி துவங்கியது


*அரசுப்பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தலை எளிமையாக்க, ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு தோறும் பயிற்சி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது

*நடப்பு கல்வியாண்டு முதல், மாற்றப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.மாணவர்களுக்கு உள்ள கற்றல் குறைபாடுகளை கண்டறிவதற்கு, அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது

*இத்தேர்வில், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் அளவிடப்படுகிறது. மாணவர்களை இத்தேர்வுக்கு தயார் செய்வது குறித்து, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு 11ம்தேதி முதல் நடக்கிறது

*உடுமலை, தாராபுரம், பல்லடம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்களிலும் ஒவ்வொரு மையத்தில் நடக்கிறது

சிறப்பு வகுப்பில் பங்கேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு1.69 கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க முடிவு

பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் சென்னை  மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ₹1.69 கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி பள்ளியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள்  பொதுத் தேர்விற்கு தயாராக மாலையில் 4 மணி முதல் 6 மணி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அனைவருக்கும் மாநகராட்சி சார்பில் கருப்புக் கடலை, வெள்ளை கடலை, பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, வேர் கடலை, கருப்புக் கடலை என்று 6 வகையான  சுண்டல் வழங்கப்படும்.
அதன்படி இந்தாண்டு மாணவர்களுக்கு சுண்டல் வழங்க ₹1.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் உள்ள 70 மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டு 10 ம் வகுப்பில் 6267 மாணவர்களும், 11 ம் வகுப்பில் 5201 மாணவர்களும், 12 ம் வகுப்பில் 5077 மாணவர்களும் படித்து வருகின்றனர்.


இதன்படி பார்த்தால் மொத்தம் 16 ஆயிரத்து 545 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். அந்த மாணவர்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களுக்கு ஆறு வகையான சுண்டல் வழங்கப்படும். இதன்படி  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 142 நாட்களுக்கும், 11  மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 119 நாட்களுக்கும் சுண்டல் வழங்கப்படும்.இதற்காக ஒரு மாணவனுக்கு நாள் ஒன்றுக்கு ₹8 செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் மார்ச் மாதம் வரையில் 16,545 மாணவர்களுக்கு சுண்டல் வழங்க ₹1.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களது தேவையான பொருட்களை அவர்களே திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு நகர்புற கூட்டுறவு சங்கத்தில் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளிலேயே சுண்டல் தயாரித்து  வழங்குவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்

                                                

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ என்னும் இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தில்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல், உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இந்த எண்ணிற்கு வரும் புகார்களை சேவை மையத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் முறையாக பதிவு செய்து வைக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த சேவை மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க இது ஏதுவாக இருக்கும்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்தி வைப்பு உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பழைய ஓய்வூதியம் குறித்த அறிக்கை வரும் புதன்கிழமை தரவும் உத்தரவு. ஊதியமுரண்பாடு களையும் குழு காலநீட்டிப்பு.

அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும் என்றார்.

அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் 4 வகையான வண்ண சீருடைகள் அறிமுகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

முதன்மை கல்வி அலுவலரிடம் ரூ. 78,000/- மோசடி!!

Flash News : CPS குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

புதன்கிழமைக்குள் CPS குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
*வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு:
*இரு கமிட்டிகளின் அறிக்கையை பெற்று  அடிப்படையில்  நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை  ஜனவரி 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில்  சமர்பிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

TN School Attendance - EMIS students Attendance App updated 2.0.2 new version :

                                                      

TN SCHOOLS APP - பள்ளிக் கல்வித்துறையின்
ஆன்ட்ராய்டு ஆப் இல் இருந்த குறைகள் களையப்பட்டு புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது...Report முன்பு சரியாக வராமல் இருந்தது. தற்போது Monthly Report , Daily Report போன்றவை சரியாக வருகிறது.. எனவே ப்ளேஸ்டோரில் app ஐ Update செய்து கொள்ளலாம்...
▪Latest Version:  2.0.2
▪Updated Date: 8.12.2018

Direct Download link Here

நடப்பாண்டில் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் : ஆர்டிஐ-யில் தகவல் :

நடப்பாண்டில் வெறும் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்துள்ள இந்த பதிலில் 894 மருத்துவ இடங்களை அள்ளியது சிபிஎஸ்இ மாணவர்களே எனவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.20 கோடியை பள்ளி கல்வித்துறை செலவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் TRB நிறைவேற்றவில்லை! முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது? விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த தேர்வர்கள் கோரிக்கை!

ஹெல்மெட் அணிய வில்லையா ? அப்ப அலுவலகங்களில் அனுமதியில்லை - அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு :

BREAKING NEWS:-ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்தி வைப்பு!


பி.லிட் முடித்து பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பின்னர் பயின்ற பி.எட் கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க இயலாது -அரசு முதன்மை செயலரின் கடிதம்!!!



நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு:

இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு
ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். ஒரு உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு.


அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும். மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை வளர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.

எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் குறித்து விளக்கி கூறலாம். அதில் வேளாண்மை திட்டங்களில் அரசின் உதவி பெறுதல், விவசாயிகள் ஓய்வு நேரத்தில் கோழிப்பண்ணைகள், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல் உள்ளிட்ட தொழில்கள் செய்வது குறித்து அறிவுரைகளை வழங்கலாம்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க உதவலாம். நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மாணவர்கள் போலீசாருக்கு உதவிட முன்வரவேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் உதவவேண்டும்.

ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும்.

10/12/18

அரையாண்டுத் தேர்வு 2018 - மாதிரி வினாத்தாள்கள்



✍🏼 1st Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 2nd Standard - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 3rd Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 4th Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 5th Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8



✍🏼 6th Standard  - Term 2 Model Questions
 https://goo.gl/nF9ccX

✍🏼 7th Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 8th Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 9th Standard - Term 2 Model Questions
https://goo.gl/nF9ccX



✍🏼 10th Standard - Half Yearly 2018 - Model Questions
https://goo.gl/gbFGRC

✍🏼 11th Standard - Half Yearly 2018 - Model Questions
https://goo.gl/tDKKuR

✍🏼 12th Standard - Half Yearly 2018 - Model Questions
https://goo.gl/47Yc3i

12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு - 2018 அரசு மாதிரி வினாத்தாள்கள் - Download Here



👉 https://goo.gl/p7xxfh

📮 Tamil  Model Question

📮 English Model Question

📮 Maths Model Question

📮 Physics Model Question

📮 Chemistry Model Question

📮 Biology  Model Question

📮 Botany Model Question

📮 Zoology Model Question

📮 Computer Applications

📮 Computer Science

📮 Commerce Model Question

📮 Accountancy Model Question

📮 Economics Model Question

📮 Business Maths Model Question


👉 https://goo.gl/p7xxfh

11 ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு - 2018 அரசு மாதிரி வினாத்தாள்கள் - Download Here



👉 https://goo.gl/mF21WS

🔰 Tamil  Model Question

🔰 English Model Question

🔰 Maths Model Question

🔰 Physics Model Question

🔰 Chemistry Model Question

🔰 Biology  Model Question

🔰 Botany Model Question

🔰 Zoology Model Question

🔰 Computer Applications

🔰 Computer Science

🔰 Commerce Model Question

🔰 Accountancy Model Question

🔰 Economics Model Question

🔰 Business Maths Model Question


👉 https://goo.gl/mF21WS

நீதிக்கதை :---சிந்தனை கதைகள்




சிறியதே அழகு

தாய் யானையுடன் நடை பயின்றுகொண்டிருந்த குட்டி யானை, அருகில் இருந்த புல்வெளியில் புள்ளிமான் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டது.

“அம்மா, அந்தப் புள்ளிமானோடு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமா?”

“மானோடு விளையாடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கவனமாக விளையாட வேண்டும். கல்லில் தடுக்கி கீழே விழுந்து, காயப்படக் கூடாது” என்று எச்சரித்தது தாய் யானை.

குட்டி யானையைக் கண்டதும் புள்ளிமான் மகிழ்ச்சியோடு ஓடிவந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.

“தினமும் வருகிறேன். நாம் இருவரும் ஜாலியாக விளையாடலாம்” என்றது குட்டி யானை.

“அது முடியாது. நீ பெரியவனாக வளர்ந்துவிட்டால், உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கும். அதனால் உங்க இனத்தினரோடு விளையாட ஆரம்பி” என்றது புள்ளிமான்.

“யார் சொன்னது? நான் பெரிசா எல்லாம் வளரவே மாட்டேன். எப்பவும் இப்படியே குட்டியா, அழகா இருப்பேன். இப்பவே அம்மா கிட்ட சொல்லி, என்னை வளர விடாமல் செய்துடறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது குட்டி யானை.

“அம்மா, மான் அழகா சின்னதா இருப்பதுபோல நானும் சின்னதாவே இருந்துடறேன். உங்களை மாதிரி பெரிய உடம்பு எனக்கு வேண்டாம்மா” என்று அப்பாவியாகச் சொன்னது குட்டி யானை.

”மான் சின்னதா இருக்கிறதும் நாம் பெருசா வளர்றதும் இயற்கை. இதை நீயோ நானோ நினைத்தால் மாற்ற முடியாது. பெரிய உடம்புதான் நம் இனத்துக்குப் பலம்” என்று தும்பிக்கையால் குட்டி யானையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னது அம்மா யானை.

குட்டி யானைக்கு இந்தப் பதிலில் திருப்தியில்லை. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வளர வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடச் சென்றுவிட்டது.

மறுநாள் புள்ளிமானைச் சந்தித்தது.

“என் அம்மாவிடம் நான் வளர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி கவலை இல்லை” என்று சிரித்தது குட்டி யானை.

“நீ ரொம்பச் சின்னவன். உனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது. வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.”

இரண்டும் சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று வந்தது. அதைக் கண்டதும் மானின் உடல் நடுங்கியது.

“குட்டி யானையே, வேகமாக ஓடிடு. சிறுத்தை வந்துகிட்டு இருக்கு. நானும் ஓடறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பாய்ந்து சென்றது புள்ளிமான்.

குட்டி யானைக்கு ஒன்றும் புரியவில்லை. சிறுத்தையின் கவனம் புள்ளிமானின் மீது இருந்ததால், குட்டி யானையை அது கண்டுகொள்ளவில்லை.


சிறுத்தையின் ஆக்ரோஷமான துரத்தலையும் புள்ளிமானின் உயிர் பயத்தையும் கண்ட குட்டி யானைக்கு முதல் முறையாகப் பயம் வந்தது.

தன்னை அறியாமல் அம்மா, அம்மா என்று கத்தியது குட்டி யானை. புள்ளிமானைப் பிடிக்க முடியாத சிறுத்தை மிகவும் ஏமாற்றமடைந்தது. குட்டி யானையைக் கண்டவுடன் மீண்டும் மகிழ்ச்சியடைந்தது. ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.

அதைப் பார்த்த குட்டி யானை, “அம்மா… அம்மா…” என்று அலறியது.

இலைகளைத் தின்றுகொண்டிருந்த அம்மா யானையின் காதில், குட்டியின் குரல் விழுந்தது. உடனே ஓடிவந்தது. அதற்குள் சிறுத்தை குட்டி யானையை நெருங்கிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையால் சிறுத்தையைப் பிடித்து, சுழற்றி வீசியது அம்மா யானை.

தூரத்தில் போய் விழுந்த சிறுத்தையால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வலியில் கதறியது.

“பொதுவா நம்மைக் கண்டால் சிறுத்தை பயப்படும். ஏனென்றால் நம் உருவம் அப்படி. தூக்கி வீசினால் ஒரு மாசத்துக்கு நடக்கக்கூட முடியாது. நீ சின்னவனாக இருப்பதால்தான் சிறுத்தை உன்னை நெருங்கியிருக்கிறது. நமது பலமே நமது பிரம்மாண்டமான உடல்தான். இப்பவாவது உனக்குப் புரியுதா?” என்று கேட்டது அம்மா யானை.


“நன்றாகப் புரிந்துவிட்டது அம்மா. புள்ளிமானுக்கு வேகமாக ஓடக் கூடிய கால்களும் நமக்கு பெரிய உருவமும் இயற்கை கொடுத்திருக்கு. நானும் நல்லா சாப்பிட்டு உங்களை மாதிரி பெரிய ஆளா வளரப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் வயிற்றுக்கு அடியில் போய் நின்றுகொண்டது குட்டி யானை.

கருணை காட்டாத கஜா புயல்: தமிழக கனவு ஆசிரியரின் பெருந்தன்மையான முடிவு

கனவு ஆசிரியர் என்ற விருதைப் பெற்றிருக்கும் தமிழக ஆசிரியர், மீண்டும் ஒரு முறை அந்த விருதுக்கு தான் தகுதியானவரே என்று நிரூபித்துள்ளார். ஒரே ஒருவருக்கு உதவி செய்து விடுவதால், உலகமே மாறிவிடாது. ஆனால், உதவி பெற்ற அந்த ஒருவரின் உலகமே மாறிவிடும். இதனை நிரூபித்திருக்கிறார் அந்த ஆசிரியர் மகன்களால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வந்த மூதாட்டி, கஜா புயலால் வீடிழந்து தெருவில் தவித்து வந்தார்.kaninikkalvi. அவரை தத்தெடுத்து, புது வாழ்வு அளித்துள்ளார் அந்த கனவு ஆசிரியர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யூனியனைச் சேர்ந்த மருதவனத்தில் ஒரு சிறிய குடிசையையே தனது உலகமாக நினைத்து வாழ்ந்து வந்தார் 75 வயது பாக்கியம்
5 மகன்கள் இருந்தும் அனைவரும் கைவிட்ட நிலையில், அக்கம் பக்கத்து வீட்டாரின் உதவியோடு தனியாக வசித்து வந்தார். டெல்டா பகுதிகளை கருணையே இல்லாமல் தாக்கிய கஜா புயல், மூதாட்டியைக் கைவிட்ட மகன்களை விட மிக மோசமாக நடந்து கொண்டது. ஆம் அவரது குடிசையைப் பந்தாடிச் சென்றது. ஏற்கனவே வாழ்விழந்து தற்போது வீடிழந்து, செய்வதறியாது இருந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் தேற்றி தங்களது பாதுகாப்பில் வைத்திருந்தனர் இந்த பகுதியில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்வதில் உறுதுணையாக இருந்த ஆசிரியர் பூபதி, இந்த மூதாட்டியைப் பற்றி அறிந்து ஒரு முடிவை எடுத்தார்.
அதுதான் அவரை தானே தத்தெடுத்து பராமரிப்பது என்று உடனடியாக பூபதி தனது மனைவி பிருந்தாவுடன் நேராக மூதாட்டி இருக்கும் பகுதிக்குச் சென்று அவருக்குத் தேவையான ஆடை, சாமான்கள் எல்லாம் கொடுத்து, அவரது வீட்டைக் கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்தார் தனது கையைப் பிடித்துக் கொண்ட பாக்கியம் அம்மாள், கண்களில் கண்ணீர் தளும்ப பேசினார். எனக்கு 5 பிள்ளைகள் இருந்தும் கைவிட்டுவிட்டன. யார் என்றே தெரியாத தங்கள் உதவி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அப்போது அவரிடம் நான் ஒரு உறுதி அளித்தேன்
இன்று மட்டுமல்ல, உங்களது இறுதிக் காலம் வரை உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தேன். இனி மாதந்தோறும் அவர் வாழ்வதற்குத் தேவையான பணத்தை அனுப்பிவிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் நான் எனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாக எண்ணுகிறேன் என்று பெருமிதத்தோடு கூறினார். இதை ஒரு சாதாரண செய்தியாக நினைக்காமல், நமக்கான ஒரு முன்னுதாரணமாக எண்ணினால் இதுபோன்று பலருக்கும் புதிய உலகம் பிறக்கும்

2 Days Training For BT Teachers - Proceedings & Training Schedule

ஆலோசனை *20 பல்கலைகளுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து *கல்வி தரத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

புதுடில்லி:மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், கல்வி நிறுவனங்கள், தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதில் ஆரோக்கிய மான போட்டியை உருவாக்கும் வகையிலும், சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 ஆலோசனை! ,கல்வி தரத்தை, மேம்படுத்த, மத்திய அரசு, திட்டம்

நாடு முழுவதும் செயல்படும், அரசு, தனியார் பல்கலைகள், மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்கின்றன. பல்கலைகள் நேரடியாகவும், அதன் உறுப்பு கல்லுாரிகள் மூலமாகவும், பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், கல்வித்துறையில் சிறந்து செயல்படுவதோடு, மாணவர்களுக்கு தேவை யான உள் கட்டமைப்பு, ஆராய்ச்சி துறைக்கு தேவையான அம்சங்களை ஒருங்கே பெற்ற பல்கலைகளை தேர்வு செய்து, அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்பு குழுஅந்த வகையில், கல்வித்துறையை சேர்ந்த சிறந்த நிபுணர்களை நியமித்து, சிறப்பு குழு அமைத்து, அவர்கள் மூலம், பல்கலைகளை மத்திய அரசு தேர்வு செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக, 

மும்பை, டில்லியில் செயல்படும், ஐ.ஐ.டி.,க்கள் மற் றும் பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் மையம் ஆகிய அரசு நிறு வனங் களுக்கு, சமீபத்தில் இந்த அந்தஸ்து வழங்க பட்டது.அத்துடன், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மணிப்பால் பல்கலை மற்றும் விரைவில் துவங்கப் பட உள்ளரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பல்கலை ஆகியவற்றிற்கும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில், உள் கட்டமைப்பு, ஆய்வு பணிக்கு தேவையான அம்சங்கள் மற்றும் மாணவர் களின் திறனை மேம்படுத்தும் அம்சங்கள் இருப்ப தால், இந்த அந்தஸ்து வழங்கப் பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடவடிக்கைகள்

இந்நிலையில், நாட்டில் செயல்படும், 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும், 10 தனியார் கல்வி நிறுவனங் களுக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிபுணர் குழு, தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பட்டியல் வெளியானதும், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழுகூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். அதன் பின், அதிகார பூர்வ மாக, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:சிறப்பு அந்தஸ்து கோரி, இதுவரை, 114 கல்வி நிறுவனங் கள் விண்ணப்பித்துள்ளன.

அவற்றில், பல்வேறு, இந்திய தொழில்நுட்ப

கல்வி நிறுவனம் எனப்படும், ஐ.ஐ.டி.,க்கள், என்.ஐ.டி.,எனப்படும், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங் களும் இடம் பெற்றுள்ளன.

இவற்றில், தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அதிலும், முன்னிலை யில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

யாருக்கு வாய்ப்பு?

ஐ.ஐ.டி., சென்னை, டில்லி பல்கலை, ஜாதவ்பூர் பல்கலை, அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., ேகாரக்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு, விரைவில் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்கும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சி.பி.எஸ்.இ., தேர்வு மாணவர்கள் தவிப்பு

பொதுத் தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படாததால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்; எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என, கல்வி ஆண்டு துவங்கும் போதே, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர்கள் திட்டமிட்டு படிக்க, வசதியாக உள்ளது. ஆனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பொது தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை.டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி, முடிவு களை அறிவிக்க, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தொழிற்கல்வி மாணவர்களுக்கு பிப்ரவரியிலும், மற்ற மாணவர்களுக்கு மார்ச்சிலும், தேர்வுகள் துவங்கும் என, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே அறிவித்தது.ஆனால், தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு, எப்போது தேர்வுகள் துவங்கும் என்பது தெரியாமல், மாணவர்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தேர்வுகள் துவங்கும் தேதியை, விரைந்து அறிவித்தால், திட்டமிட்டு படிக்க வசதியாக இருக்கும் என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

JACTTO-GEOவிடம் ஆசிரியர் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும்❗ சித்திக்-ஸ்ரீதர் குழுக்களும்‼*

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய குறைகள் நீண்டகாலக் கோரிக்கைகளாக உருப்பெற்று அதைத் தீர்க்கக் கோரும் களப் போராட்டங்கள் தீவிரமடையும் சூழலிலும் அதை நேரடியாகக் களையாது கோரிக்கை மீதான *உரிமை வேட்கையைத் தணிக்கும் விதமாகவே குறைதீர் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழகம் கண்ட வரலாறு.*

இக்குழுக்கள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்வையில் அரசின் தீரமிகு செயல்பாடாகவும், வழக்காடு மன்றப் பார்வையில் தீர்ப்பிற்கான செயல்பாடாகவும் அமைந்துள்ளதே அன்றி *அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கோரிக்கை களையும் தீர்விற்கான செயல்பாடாக அமைந்ததே இல்லை.*
அதற்கு 7-வது தமிழக ஊதியமாற்றக் குழுவிற்குப் பின் (நமது பார்வையில் 6th Pay Commission) அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவே சாட்சி. எனவே தான் 8-வது தமிழக ஊதியமாற்றக் குழுவிற்குப் பின்பும் கோரிக்கைகள் களையப்படாது போராட்டங்கள் தொடர்கின்றன.
தற்போதும் ஜாக்டோ-ஜியோ மீண்டுமொரு வீரியமிகு போராட்ட முகட்டில் நிற்கையில், அதன் கடந்த கால களப்போராட்டங்களில் ஒரு பொருட்டாகக் கண்டு கொள்ளப்படாத CPS நீக்க வல்லுந‌ர் குழுவும், அரசு ஊழியர் ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன.
உண்மையில் *JACTTO-GEO போராட்டங்கள் எந்நிலையிலும் அரசு அமைக்கும் குழுக்களைக் காரணம் காட்டி நகர்த்தப்படவோ - நிறுத்தப்படவோ இல்லை* என்பது எனது அனுபவத் தெளிவு.
நான் பெற்ற அனுபவத்தைப் பெற்றிருப்பினும் அதை மறந்துவிட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இதன்வழி அதை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், தற்போது குழுவைக் காட்டி ஏமாற்றும் வித்தைக்குள்ளாகச் சிலர் சிக்குண்டுள்ளனர்.
தற்போதும் ஓய்வூதிய வல்லுந‌ர் குழு & ஊதிய முரண்தீர் ஒரு நபர் குழு இரண்டையும் கவனத்தில் ஏற்றி நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கண்கள் பூத்துப்போய்க்கிடக்கின்றன.
இவ்விரண்டுமே JACTTO-GEOவின் கோரிக்கைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை என்பதை முன்பே உணர்ந்ததாலேயே குழுக்களின் முடிவிற்குக் காத்திருக்காது களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது JACTTO-GEO.
JACTTO-GEO-வின் போக்கினை உணர்ந்தோர் அனைவரும் வேண்டுவது, *10.12.2018-ற்குப் பின் காலம் தாழ்த்தாது 11.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த களத்தில் இறங்க வேண்டும்* என்பதே.
ஏனெனில் வழக்காடு மன்ற அனுபவங்களும், அரசின் சாக்குப்போக்கான உறுதியளிப்புகளும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது, *"காத்திருப்புகள் அல்ல களப்போராட்டமே தீர்வைத் தரும்!"* என்பதைத்தான்.
_கற்று மறந்தோரின் நினைவூட்டலுக்காக குழுக்கள் அமைக்கப்பட்ட முறைமையும் ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நடைமுறையையும் பறவைப் பார்வையாக இங்கே பகிர்ந்துள்ளேன்._
*🔛 10.02.2016*
பல கட்டப் களப் போராட்டங்களைக் கடந்து *தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் CPS நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்* இறங்கியது.
*🔛 11.02.2016*
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற *அமைச்சர் குழு & ஜாக்டோ கூட்டமைப்பிற்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.* எனினும், முன்னரே தீர்மானித்திருந்த போராட்ட அறிவிப்பை ஜாக்டோ கூட்டமைப்பு அறிவிக்கவில்லை.
*🔛 12.02.2016*
எனவே, *ஓய்வூதியக் கோரிக்கையோடே இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய கோரிக்கையையும் வலியுறுத்தி* திருச்சி மாநிலச் செயற்குழு முடிவின்படி *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பு சங்கங்களும் வேலைநிறுத்தத்தில்* உடன் இணைந்தன. *19.02.2016-ல் சட்டப்பேரவையில் முதல்வர், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதிய (ரூ.1,500) உயர்வு, சமையல் உதவியாளர் பணப்பயன் ரூ.25,000 உயர்வு, குழுக் காப்பீட்டு தொகை 3 லட்ச ரூபாய் உயர்வு, அரசு ஊழியர் நிர்வாக தீர்ப்பாயம்* உள்ளிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையோடே போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னரே *CPS-ல் இறந்த பணியாளருக்கு பங்களிப்பு தொகை வழங்க ஆணை* வெளியிடப்பட்டது.
*🔛 19.02.2016*
பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, *பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான* சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க *வல்லுந‌ர் குழு* அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.
*🔛 26.02.2016*
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய *G.O.Ms.No.65, Finance (PGC) Department, dated 26.02.2016-ன்* படி *திருமதி.சாந்தசீலா நாயர் இ.ஆ.ப* தலைமையில் வல்லுந‌ர் குழு அமைக்கப்பட்டது.
_(அதன்பின்னர் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டிற்கும் மேலாகக் காலநீட்டிப்பு செய்யப்பட்ட வல்லுந‌ர் குழு திரு.ஸ்ரீதர் தலைமையில் தற்போது அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.)_
*🔛 07.09.2017*
பலகட்ட தனிச்சங்கப் போராட்டங்களையும் பிரிவினைகளையும் கடந்து உருப்பெற்ற *JACTTO-GEO கூட்டமைப்பு செப்.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்* இறங்கியது.
*🔛 15.09.2017*
அரசின் நெருக்கடிகள், நீதிமன்றத் தடைகள், அனைத்தையும் கடந்து தீரமுடன் 8 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் *சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை JACTTO-GEOவிற்கு அளித்த உத்தரவாதத்தின் படி 15.09.2017 பிற்பகல் 2 மணிக்கு பணிக்குத் திரும்பினர்* ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்.
*🔛 21.09.2017*
JACTTO-GEO-வின் கோரிக்கைகள் மீதான நியாயத்தை உணர்ந்த நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால், *தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கை 30.11.2017-க்குள் பெறப்படும்* என்று உறுதியளித்தார்.
மேலும், 30.09.2017-ற்குள் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அரசிற்கு உத்தரவிட்டதோடு, *13.10.2017-ல் புதிய ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் 23.10.2017-ல் இடைக்கால நிவாரணம் குறித்து அறிவிக்க வேண்டும். வேலைநிறுத்தம் தொடர்பாக எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது. வேலைநிறுத்த காலத்திற்கு ஊதியப் பிடித்தம் செய்யக் கூடாது* என நீதிமன்றம் உத்தரவிட்டது.
*🔛 11.10.2017*
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகள் *G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, Dated: 11.10.2017.-ன்* படி வெளியிடப்பட்டது.
*🔛 08.12.2017*
ஊதிய முரண்பாடுகளோடே நடைமுறைக்கு வந்த ஊதியக்குழு அரசாணை, CPS நீக்கக் கோரிக்கை பரிசீலிக்கப்படாமை & ஜாக்டோ-ஜியோ மீதான வழக்கு விசாரணை டிசம்பர் 20-க்கு ஒத்திவைப்பு உள்ளிட்ட சூழலில் 08.12.2017 மதுரையில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று அடுத்த கட்ட போராட்ட அறிவிப்புகளோடே, சனவரி 4-வது வாரத்தில் இருந்து, *ஜாக்டோ-ஜியோவின் அனைத்து உறுப்பு சங்கங்களும் மாவட்டம் வாரியாக சுழற்சி முறையில், சென்னையில் காலவரையற்ற தொடர் மறியலில்* ஈடுபடுதல் எனவும் அறிவித்தது.
*🔛 15.12.2017*
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களை நேரில் சந்திப்பதாக இருந்த நிலையில், தவிர்க்க இயலாத அலுவல் காரணமாக முதல்வரை நேரில் சந்திக்க இயலாததால் *கோரிக்கை & நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான மனுவை முதல்வர் அலுவலகத்திலும், தலைமைச் செயலர் & நிதித்துறை முதன்மைச் செயலரிடம்* வழங்கப்பட்டது.
*🔛 08.01.2018*
மாண்புமிகு தமிழக *ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித்* அவர்கள் தனது ஆளுநர் உரையில் *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒருநபர் குழு* அமைக்கப்படும் என அறிவித்தார்.
*🔛 19.02.2018*
ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்படாத சூழலில் வழக்கமான காலம் கடத்தும் நடவடிக்கையாக *FINANCE (PAY CELL) DEPARTMENT G.O.Ms.No.57, Dated: 19th February, 2018-ன் படி M.A.சித்திக் இ.ஆ.ப* அவர்களின் தலைமையில் *31.07.2018-ற்குள் அறிக்கை சமர்ப்பிக்க* ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
*🔛 21.02.2018*
நீண்ட கால கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காது 30.11.2017-ல் சமர்ப்பிப்பதாக தலைமைச்செயலாளரே நீதிமன்றத்தில் உறுதியளித்த CPS நீக்க வல்லுநர்குழுவின் அறிக்கையே வெளிவரா சூழலில் ஊதியத்திற்கான ஒரு நபர் குழு அமைத்ததன் நோக்கம் உணர்ந்து, முன்னர் அறிவித்தபடியே சிறு கால தாமதத்துடன் *21.02.2018 முதல் 4 நாள்களாக சென்னையில் ஜாக்டோ-ஜியோ-வின் மறியல்* போராட்டம் நடைபெற்றது.
*🔛 24.02.2018*
4 நாள்கள் மறியலைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட வடிவத்தினைத் திட்டமிடக்கூடிய ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் மீண்டுமொரு மாவட்ட மறியலைத் தொடர்ந்து, *1985, 1988--ல் நடைபெற்ற தலைநகர் முற்றுகையைப் போன்று* மற்றுமொரு வீரஞ்செறிந்த முற்றுகையை 08.05.2018 அன்று, இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்களைச் சென்னையில் கூட்டி *தலைமைச் செயலக முற்றுகை நடத்துதல்* எனத் தீர்மானிக்கப்பட்டது.
*🔛 08.05.2018*
*சென்னையே முடங்கும் அளவிற்கு இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்கள் சென்னையில் கூடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட* முயன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோரை அடைக்க தற்காலிகச் சிறையின்றி தலைநகரே திக்குமுக்காட இறுதியில் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் நிரம்பியது.
*🔛 11.06.2018*
*ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் & மாநில நிர்வாகிகள் சென்னையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.* நான்காம் நாளில் அரசின் அடக்குமுறைகளால் முடிவிற்கு வந்தது.
*🔛 03.12.2018*
மீண்டும் பலகட்ட சிக்கல்களையும் போராட்டங்களையும் கடந்து பிரிந்து சென்ற இயக்கங்கள் இணைந்ததையடுத்து ஒருவார கால தாமதத்துடன் 04.12.2018-ல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கும் முன்னாக *நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வேலைநிறுத்தம் 10.12.2018 வரை ஒத்திவைக்கப்பட்டது.*
*🔛 10.12.2018 ❓❓❓*
_முதல் 10 பத்திகளை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு 10.12.2018-ஐ எதிர்கொள்ள JACTTO-GEO மாநில உயர்மட்டக் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன்._
கோரிக்கைகளை உடன் நிறைவேற்றாது வேறு ஏதேனும் காரணங்களோ அல்லது வழக்கமான வெற்று வாக்குறுதிகளோ அரசின் தரப்பில் தரப்படுமாயின் *உடன் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியாக வேண்டும் என்பதே ஜாக்டோ-ஜியோவிடம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*
*_உரிமை வேட்கையோடே உள்ள ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் ஏதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஜாக்டோ-ஜியோ