கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற இருந்த புள்ளியியல் ஆய்வாளருக்கான தேர்வு கஜா புயலின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தத் தேர்வினை வரும் 23 ஆம் தேதி நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான புதிய நுழைவுச் சீட்டினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றையை தினம் நடைபெற இருந்த உதவி நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது