யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/18

FLASH NEWS : G.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..




EMIS SCHOOL PROFILE FORMAT FOR GOVT/AIDED PRIMARY/ MIDDLE SCHOOLS ONLY

பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : வரும் நிதியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களுக்கு கூடுதல் சுமை, நாட்கள் போதவில்லை என கோரிக்கைகள் வந்துள்ளதால் அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அவர் தகவல் அளித்துள்ளார்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - CEO PROCEEDINGS

உயர் நீதிமன்றம் மதுரை கிளை யில்4-12-2018 மற்றும் 10-12-2018 வழக்கு நடந்த நிகழ்வுகள் பற்றி ஜாக்டோ ஜியோ விளக்கக் கூட்டம்*

காலை 10  மணி முதல் மதியம் 1 மணிவரை*
*இடம்:- பெரியார் மன்றம் தருமபுரி*
*அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்*
*தருமபுரி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் Cpsஐ இரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோருதல் உள்ளிட்டு 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  4-12-18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 12 இலட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்புடன் மிகவும் சக்தியாகவும் எழுச்சியாகவும் நடத்த திட்டமிடபட்டிருந்தது.*



*நாம் நடத்த இருந்த ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக  மீண்டும்  பொது நல வழக்கு மதுரை  உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு  வழக்கு நடைபெற்று வருகிறது இது சம்மந்தமான நிகழ்வுகளை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில்  விளக்கக் கூட்டதத்தினை மாநிலம் முழுக்க மாவட்டட தலைநகரில் 16-12-18 அன்று   நடத்துவது என ஜாக்டோ ஜியோ  முடிவு செய்துள்ளது.*

 *ஜாக்டோ ஜியோ மாநில முடிவின்படி தருமபுரி மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான  ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம் 16-12-18 அன்று காலை 10  மணியளவில் தருமபுரி  பெரியார் மன்றத்தில் எழுச்சியாக நடைபெறவுள்ளது*

 *இந்த மாவட்ட அளவிலான விளக்கக் கூட்டத்தில்  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். மு.அன்பரசு (மாநில பொதுச்செயலாளர்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.*


*தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலையிலான ஆசிரியர்கள்  ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இணைப்பிலுள்ள அனைத்து துறை சங்கங்களின் மாநில மாவட்ட,வட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்டு அனைத்து அரசு ஊழியர்கள்,தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து  பணியாளர்கள் அனைவரும் 100%  தருமபுரியில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டத்தில் பங்கேற்குமாறு  கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றிபெறுவோம் இறுதி வெற்றி நமதே*



*நம்மால் முடியாதது வேறுயாராலும் முடியாது*


*வேறுயாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்*




இவண்
 B.M.கௌரன்
 *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*ஜாக்டோ ஜியோ*
*தருமபுரி*

15/12/18

ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா?



தற்போது சிம் கார்டு வாங்க ஆதார் நகல் அல்லது வேறு எந்த புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தின் நகல்,  அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்க்கும் வேலை தேவையில்லை. 

ஆதார் எண்ணைச் சொன்னாலே போதும். செல்போன் நிறுவனங்களின் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள கைபேசியில், அந்த செல்போன் நிறுவனத்தின் செயலியை Open செய்து, கையடக்க விரல் ரேகை Scanner ஐ பொருத்தி, நமது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, மிகச் சிறிய விரல் ரேகை Scanner ல், நமது விரலை வைக்கச் சொல்கிறார்கள்.

 அடுத்த நொடியே நம் புகைப்படத்துடன் கூடிய நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களும், சம்மந்தப் பட்ட செல்போன் நிறுவனத்தின் கைபேசியில் வருகிறது.

இதன் பின், சிம் கார்டு எண், அந்த சிம் கார்டுக்கான பத்து இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்து, செல்போன் நிறுவனத்தின் Terms and Conditions ல் டிக் செய்து, இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்ற விதத்தில் மீண்டும் மிகச் சிறிய விரல் ரேகை ஸ்கேனரில் விரலை வைக்கச் சொல்கிறார்கள்.

நாம் அந்த செல்போன் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு விட்டோம், என்பதை உணர்த்த அந்த நிறுவனத்தின் செயலி உள்ள கைபேசியில் பச்சைக் கலரில் டிக் வந்து விடுகிறது. 

அந்த நொடியே, புதிய சிம் கார்டு செயலாக்கம் செய்தாகி விட்டது. உடனே நீங்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். அதுபோலவே உடனே சிம் கார்டு செயல்படுகிறது.

இதற்கு தேவை, தொடு திரை கைபேசி, விரல் ரேகை ஸ்கேன் செய்யும் கருவி, இவை செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலி மற்றும் இணைய தள இணைப்பு. அவ்வளவு தான். 

இப்போது ஆசிரியர்களின் ஆன்லைன் வருகைப் பதிவுக்கு இதை நடைமுறை படுத்த முடியுமா? எனப் பார்ப்போம்.

ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு, தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகைப் பதிவுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியரிடம் கைவிரல் ரேகையை ஸ்கேன் செய்யும் கருவியை வழங்கி, அதனை தலைமை ஆசிரியரின் கைபேசியில் இணைத்து விட்டால், ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வருகைப் பதிவு தயார்.

இதற்கு அதிகபட்சம் ரூ,1000 தான் செலவாகும் என கூறப்படுகிறது.

பள்ளிக்கு வந்ததும் தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகை பதிவுக்கான செயலியை Open செய்து, நமது ஆதார் எண்ணை பதிவு செய்து, மொபைலுடன் இணைக்கப்பட்ட ஸ்கேனரில் விரல் ரேகை வைத்தால், நாம் பள்ளிக்கு வந்து விட்டோம் என பதிவாகும்.

எந்த நேரம் வருகையை பதிவு செய்தோம், எந்த இடத்திலிருந்து பதிவு செய்தோம் என்பது உள்ளிட்ட விவரங்கள் எமிஸ் இணையதள சர்வரில் பதிவாகி விடும்.

இம்முறை பதிவை, காலை 9.00 மணி, மதியம் 12.40 மணி, மதியம் 1.30 மணி மற்றும் மாலை 4.00 மணி என நான்கு வேளை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை கட்டளையிட்டால், OP அடிக்கும் ஆசிரியர் களின் நிலை படு திண்டாட்டமாகி விடும்.

இது போன்ற முறை விரைவில் நடைமுறை படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

எது வந்தாலும் சந்திக்க தயாராகவே இருப்போம்!

இனி வெள்ளி தோறும் CEO, DIET, BEO தலைமையில் "Team Visit" - Proceedings :

TN Schools App - ஆன்லைன் வருகைப் பதிவு பற்றிய சில ஆலோசனைகள்:

TN schools செயலியில், ஒவ்வொரு ஆசிரியரும் எந்த வகுப்பிற்கு கற்பிக்கிறார் என்பது பல பள்ளிகளில் ஏற்கனவே பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர், அவர் வகுப்பிற்கு மட்டும் ஆன்லைன் வருகையை பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுமானவரை, ஒரே கைபேசியிலிருந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வருகை பதிவு செய்வதை தவிர்ப்பது நல்லது.

ஆசிரியர்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கற்பிக்கும் வகுப்பு போன்ற அனைத்து விவரங்களும் EMIS இணைய தளத்தில் பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் அவர் வகுப்பிற்கு மட்டும், அவரின் சொந்த கைபேசி மூலம் மாணவரின் ஆன்லைன் வருகை பதிவு செய்வதால், அன்றைய தினம் அவர் பள்ளிக்கு வருகை தந்துள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது.

அனைத்து வகுப்பாசிரியர்களும் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆன்லைன் வருகை பதிவு செய்துள்ளனரா?

பச்சை கலர் டிக் அனைத்து வகுப்புகளுக்கும் காண்பிக்கிறதா? என்பதை தலைமை ஆசிரியர் தினமும் இரண்டு வேளைகளிலும் (மு.ப. / பி.ப)  சரி பார்ப்பது நல்லது.

ஆன்லைன் பதிவு நேரம்  முற்பகல் 9.30 மணி மற்றும் பிற்பகல் 1.30 மணி.

 ஏதேனும் ஆசிரியர் சரியாக பதிவிடா விட்டால், தலைமை ஆசிரியரும் பொறுப்பேற்க நேரிடும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

விரைவில் ஆசிரியர்களுக்கு ஆதார் எண் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

காலை 9.30 க்கு மேல் மதியம் 11.55 வரை தாமதமாக வரும் மாணவர்களையும் பதிவு செய்ய இயலும். ஆனால் ஆசிரியர் மறதியாக 10 மணிக்கு பதிவு செய்தால், அனைத்து மாணவர்களும் தாமதமாக வந்ததாக கணக்கிடப்படும். மேலும் ஆசிரியர் தாமதமாக வருகை புரிந்தாரா? என்ற சந்தேகமும் எழ வாய்ப்புள்ளதால் மிகச் சரியாக காலை 9.30 மணிக்கு பதிவு செய்வது நல்லது.

ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் ஆன்லைன் வருகைப் பதிவு செய்வதால் சர்வர் மெதுவாக வேலை செய்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சர்வரின் திறன் மேம்படுத்தப்பட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண இயலும்.

பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்

பள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த வகையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ. ஆர்.டி., சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி பாடத் திட்டம் அமலில் உள்ளது.இதன் அடிப்படையில், மாநிலங்கள், தங்கள் பாடத் திட்டங்களை உருவாக்குகின்றன. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., பாட புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில், மாணவர்களுக்கு அதிக சுமை தரும் பாடங்கள் உள்ளதாக, பல்வேறு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, என்.சி.இ. ஆர்.டி.,யின் பாடத் திட்டத்தை பாதியாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மாணவ - மாணவியர், வெறும் பாட புத்தக படிப்பு மட்டுமின்றி, திறன் வளர்க்கும் முயற்சிகளி லும் ஈடுபடுவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

100 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி :

நீலகிரி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் தாலுகாக்களை உள்ளடக்கி, 200க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளிகளில், ஆரம்பம் முதல் தமிழ் வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.சில ஆண்டுகளாக, ஆங்கில வழி கல்விக்காக, பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடியதால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தன. சில அரசு பள்ளிகளில், சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டுமே இருந்ததால், அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கி, தரமான கல்வி அளிக்கும் வகையில், பள்ளி தலைமையாசிரியர், பி.டி.ஏ., உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கைக்காக, வீடு, வீடாகச் சென்று ஆங்கில வழி கல்வி துவக்குவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் கார்த்திக் கூறியதாவது:

மாவட்டம் முழுவதும், இரண்டு ஆண்டுகளில், 100 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியின் பிரதிபலிப்பாக, இனி வரும் ஆண்டுகளில், மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

BT TEACHERS - Staff Fixcation Details reg Proceedings!

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது: தேர்ச்சி பெற வரும் மார்ச் 31 வரை கால அவகாசம்

த்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 302 சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்ய கடந்த 2010ம் ஆண்டு சிறப்பு போட்டி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் பணியாற்றி வந்த 243 சத்துணவு பணியாளர்கள், 59 அங்கன்வாடி பணியாளர்கள உட்பட மொத்தம் 302 பி.எட். பட்டதாரிகளை சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க சிறப்பு போட்டி எழுத்துதேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டிருந்தது. பின்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டிருந்தது.இந்தநிலையில் சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: 2011-12ம் ஆண்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அதில் தெர்வு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக தெளிவுரை கோரப்பட்டது. இதனை தொடர்ந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களில் 2011-12ல் நடைபெற்ற சிறப்பு தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் கருத்துரு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பான அரசின் கடிதத்தில் விலக்கு அளிக்ககோரும் கோரிக்கையை நிராகரித்தும் அவர்களுக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31ம் தேதி வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வாரியாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு:

தொடக்க கல்வித்துறையில் நீண்டநாள் பள்ளிக்கு வராமல் விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 1,200க்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக வகுப்பு எடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணக்குகளுக்கு தீர்வு காணுதல், உள்ளிட்ட திறன்களில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
சில ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு, வராததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்காக, மாவட்ட வாரியாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், ''நீண்டநாள் விடுப்பில், மூன்று ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயர் பட்டியலை, இயக்குனரகத்துக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்,'' என்றார்

2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்


தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9,  பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்தனர்.  க்யூ.ஆர். குறியீடு,  பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள்,  பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி  2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

இதில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் கூறியது:  தமிழக அரசின் சார்பில் இரண்டாவது கட்டமாக 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இவற்றில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

இதற்காக சிபிஎஸ்இ, பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம்,  ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம்.

176 பாடங்கள் வடிவமைப்பு:   இந்த நான்கு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட மொத்தம் 176 பாடங்களை வடிவமைக்க வேண்டும்.  ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழு மேலாய்வு செய்யும்.  தற்போதைய நிலவரப்படி பாடத் திட்டத்தின் ஆங்கில வடிவம் நிறைவு பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வடிவமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.  இரண்டாம் கட்ட புதிய பாடத்திட்டத்தில் தற்போதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

வரும் ஜனவரி இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு பிப்ரவரி இறுதியில் பாடநூல்களை அச்சடிப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.

கல்விச்சிறகுகளின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் WhatsApp குழுவில் பெற  7010284757 என்ற எண்ணை இணைக்கவும்.

ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று கூறிய அவர், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.

2018-19ம் கல்வி ஆண்டில் நடந்த கவுன்சலிங் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் : கல்வித்துறை செயலருக்கு உத்தரவு:


மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பலர் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இடமாறுதல் பெற்றுள்ளனர். எனவே, 2018-19ல் கவுன்சலிங்கில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.ஆதிகேசவலு ஆகியோர், ‘‘கல்வித்துறையின் மே 29ல் வெளியான அரசாணைப்படி 2018-19ம் கல்வி ஆண்டில் நடந்த கவுன்சலிங் தொடர்பான அதிகாரபூர்வ ஆவணங்களை கல்வித்துறை முதன்மை செயலர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். அதில், பணி மாறுதல் பெற்றவர்களின் விபரம் இருக்க வேண்டும். மேலும், கடந்த ஜூன் 18க்கு பிறகு பொதுமாறுதல் மூலம் எத்தனை மாறுதல் வழங்கப்பட்டது. முந்தைய கவுன்சலிங்கில் எத்தனை காலியிடம் ஏற்பட்டது. அந்த காலியிடம் பிறகு காட்டப்பட்டதா, எப்படி நிரப்பப்பட்டது, மாறுதல் பெற்றவர்கள் குறிப்பிட்ட கட்ஆப் காலத்தை பூர்த்தி செய்திருந்தனரா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  ஒட்டுமொத்தமாக 2018-19ல் கவுன்சலிங் மூலம் மாறுதல் பெற்றவர்கள் விபரம், அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 3க்கு தள்ளி வைத்தனர்

பள்ளி நேரத்தின்போது ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் - CEO :

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு !

2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இளங்கோவன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது

DSE - தேசிய வருவாய் வழித் தேர்வு ( NMMS ) - மாணவர்களின் விண்ணப்பங்களை NSP இணையதளத்தில் புதுப்பித்தல் - காலக்கெடு 15.12.2018 அன்று முடிவடைகிறது.



14/12/18

அரசாணையை எரித்த ஆசிரியர்கள் நடவடிக்கை உறுதி: செங்கோட்டையன்

ஈரோடு: ''அரசாணையை எரித்தது தவறு என்ற ரீதியில், '17 பி' சார்ஜ் வழங்கப்பட்டுள்ள, 1,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கேட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், எங்கெங்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்த பகுதி, எம்.எல்.ஏ., - அமைச்சர்கள் உதவியுடன், 7,500 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளோம். 'டெட்' தேர்வு எழுதி பாஸ் செய்த, அந்தந்த பகுதியில் உள்ளவர்களும், பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில், கூடுதலாக, 6,500 பேருக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கும், பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.அவர் ஆசிரியரும் அல்ல; பெற்றோரும் அல்ல. அவர் கூறி உள்ள குற்றச்சாட்டுக்கு, அரசு உரிய பதில் தெரிவித்துஉள்ளது.புதிய திட்டத்தில், 15 குழந்தைகளுக்கு கீழ் உள்ள பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதி தராது என தெரிவித்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை.அரசாணையை எரித்ததால், 1,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, '17 பி' சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்களே அரசாணையை எரிப்பது எப்படி ஏற்புடையது. சட்ட ஆணையை கிழித்ததற்கே, சட்டசபையில், அன்பழகன் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் பதவி இழந்தனர். அரசாணை, அரசியலமைப்பு சட்டம் என எதுவாக இருந்தாலும், அதை எரித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்காக, அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 1, 'அட்மிஷன்' முன்பதிவு துவக்கம்

புதிய கல்வி ஆண்டுக்கு, இன்னும், ஆறு மாதங்கள் உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் தற்போதே, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஏப்ரலில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு மதிப்பெண் வந்த பின், ஜூனில் தான் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.ஆனால், தனியார் பள்ளிகள் தற்போதே, பிளஸ் 1க்கு, 'அட்வான்ஸ் புக்கிங் அட்மிஷன்' துவங்கியுள்ளன. 10ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியரிடம், பிளஸ் 1க்கு எந்த பிரிவு வேண்டும் என, பதிவு செய்யப்படுகிறது.முன்பதிவு விண்ணப்பத்தில், பொது தேர்வில் எவ்வளவு பெற வாய்ப்புஉள்ளது என, உத்தேச மதிப்பெண் பெற்று, பிளஸ் 1ல் விரும்பும் பிரிவில் இடம் ஒதுக்கப்படுகிறது.சில பள்ளிகள், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான பயிற்சியை சேர்த்து வழங்குவதாக கூறி, கட்டணம் வசூலிக்கின்றன.அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்ட இடங்களை காட்டி, மீதமுள்ள இடங்களை, கல்வி ஆண்டு துவங்கும் போது, அதிக விலைக்கு விற்கவும் இடைதரகர்கள் தயாராகியுள்ளதாகவும், புகார் எழுந்துள்ளது.சென்னை, கோபாலபுரத்தில் உள்ள பிரபல பள்ளியின் முகப்பேர், சூளைமேடு கிளைகளில், பிளஸ், 1 அட்மிஷனுக்கு, ஜன., 12க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, அறிவிக்கப்பட்டுஉள்ளது.எனவே, பள்ளி கல்வி துறை உடனடியாக தலையிட்டு, பிளஸ் 1 அட்வான்ஸ் புக்கிங் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வரும் 15, 16ல் கனமழை

சென்னை: 'வரும், 15ம் தேதி முதல், இரண்டு நாட்கள், கனமழை கொட்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.இது, படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.இது குறித்து, சென்னை மண்டல வானிலை மைய துணை பொது இயக்குனர், பாலசந்திரன் அளித்த பேட்டி:தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், தமிழக, வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு மாவட்டங்கள் இடையே கரையை கடக்கும்.இதனால், 15, 16ம் தேதிகளில், தமிழக, வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில், கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நாளை இரவு முதல், வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். மணிக்கு, 75 கி.மீ., வேகம் வரை, சூறாவளி காற்று வீசவும் வாய்ப்புள்ளது.எனவே, வங்க கடலின் தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு பகுதிகளுக்குள், 16ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு…!!

                                                
கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற இருந்த புள்ளியியல் ஆய்வாளருக்கான தேர்வு கஜா புயலின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தத் தேர்வினை வரும் 23 ஆம் தேதி நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான புதிய நுழைவுச் சீட்டினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றையை தினம் நடைபெற இருந்த உதவி நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

Flash News : அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்கள் சரண் செய்தல் இயக்குனர் செயல்முறைகள் - SURPLUS POST DETAILS -REG

2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் ஊழல் லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி வழக்கு: நாளை இடைக்கால உத்தரவு!

2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரிய வழக்கை, இடைக்கால உத்தரவிற்காக  நாளைக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஆசிரியர்கள் பொது இடமாறுதல் நிர்வாக காரணங்களுக்காக நடைபெற வேண்டும். இடமாறுதலுக்கான காரணம் அந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு விதிப்படி நடைபெறாமல், ஊழல் அடிப்படையில் நடந்துள்ளது.

மாவட்டங்களில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில்  இடமாறுதல் நடைபெறும். தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள்,  வடமாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட மாட்டார்கள். ஆனால், இவ்வாண்டு நடைபெற்ற ஆசிரியர் பொது இடமாறுதலில், விதிகளை மீறி பல இடமாறுதல்கள் நடைபெற்றுள்ளன. இதற்காக லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல கோடிகளை எட்டும். இதனால் பிற மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற இயலாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வெறும் 5 மாதங்கள் பிற மாவட்டங்களில்  பணியாற்றியவர்கள், லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

பதவிஉயர்வையும் லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளனர். வெளிப்படையின்றி, லஞ்ச அடிப்படையில் நடைபெற்றுள்ள இந்த ஆசிரியர் பொது இடமாறுதல், பிற ஆசிரியர்களின் நலன்களை பாதிக்கும் வகையில்உள்ளது. எனவே, லஞ்ச அடிப்படையில் நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல் குறித்து புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அரசாணை எண் 403 அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்.  ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 11,990 பேர் இந்த கலந்தாய்வில் பங்கெடுத்ததாகவும், விதிப்படி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதற்காக நாளைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

நீட் பயிற்சி பெறும் மாணவர்களின் வருகையை நூறு சதவீதம் தலைமைஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்

நீட் பயிற்சி பெறும் மாணவர்களின் வருகையை நூறு சதவீதம் தலைமைஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்..மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு

புதுக்கோட்டை,டிச.11: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டம் அருள்மிகுபிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது..

தலைமையாசிரியர்கள் கூட்டத்தினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களின் நலன் கருதி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  அவர்கள் நமது மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்துள்ளார்கள்..எனவே இந்தாண்டு நமது நீட்பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக்கல்லூரியில் அதிகளவில் இடம்பெற வசதியாக அந்த மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்திட வேண்டும்.பயிற்சிக்கு வரும் மாணவர்களின் வருகையினை நூறுசதவீதம் தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்..கஜாபுயலினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 47000 மின்கம்பங்கள்,650 கிலோமீட்டர் தூரமுள்ள மின்கம்பிகளும் சேதமடைந்தன..ஆனால் அதனை சரிசெய்யும் பணியில் நமதுமாவட்ட,வெளிமாவட்ட,வெளி மாநில மின் ஊழியர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.அரசு எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம்.எனவே கஜாபுயலின் தாக்கம் குறித்தும்,சேதம் குறித்தும்,மீண்டது குறித்தும் மாணவர்கள் அறிந்திடும் வகையில் தலைமைஆசிரியர்கள்,ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கூறிட வேண்டும். மேலும் இந்தாண்டு அரசு பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியினை மிக விரைவில் முடித்திட வேண்டும்.அரசு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக உயர்த்திட தலைமைஆசிரியர்களும்,ஆசிரியர்களும் உழைத்திட வேண்டும்.மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தக் கூடிய மன்றச் செயல்பாடுகளை ஒவ் வோர்   பள்ளியிலும் நடத்தி  மாதந்தோறும் முதன்மைக் கல்வி அலுவலத்துக்கு அறிக்கை அளித்திட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் கி.பழனிவேலு,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம்,கபிலன் மற்றும்  பள்ளிக்கல்விதுணைஆய்வாளர்கள்,தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

New Star Health Insurance - Annexure 3 Form

புதிய உடல்நல காப்பீடு அட்டை பெறாத HF பிடித்தம் செய்யப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பின்வரும் படிவத்தை பதிவிறக்கம் செய்து தங்களது ஊதியம் வழங்கும் அதிகாரியிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் காட்டி உங்களுக்கு அல்லது உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

Click here And Download

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும்," என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி அறிவுறுத்தினார்.
மதுரையில் மாவட்ட, கிராம கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., சுபாஷினி தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் அமுதா, மீனாவதி, முத்தையா, கஸ்துாரி பங்கேற்றனர்.இயக்குனர் தெரிவித்ததாவது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் அனுமதியின்றி நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கும், கற்பித்தலில் திறமையில்லாத ஆசிரியர் விவர பட்டியல் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்தேதியிட்டு விடுப்பு அளித்தல், தேதியின்றி விடுப்பு கடிதம் அளித்தல், தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. தரச்சான்று பெற்ற பின் நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். உதவி பெறும் பள்ளிகளில் 'எமிஸ்' பதிவுகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை ஒப்பிட்டு கண்காணிக்க வேண்டும். மாணவர் வருகை கல்வித்துறை 'ஆப்'பில் மேற்கொள்ள தயாராக வேண்டும் என்றார்.

வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை :

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க சட்டமியற்ற தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015 ஆம் வருடம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் பணியை தொடங்கியது. ஆனால் ஆதார் என்பது தனி மனித உரிமை என்பதால் அதை பொதுப் பணிகளுக்கு உபயோகிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ப்பட்டதால் இந்த பணி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஆதார் இணைப்பு பல பணிகளுக்கு தேவை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்நிலியில் கள்ள ஓட்டுக்களை தவிர்க்க ஆதாரை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர். 'உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரு சில அரசு பணிகளுக்கு மட்டுமே ஆதாரை இணைக்க முடியும். அதுவும் சட்டப்படி வேறு அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே இணைக்க வேண்டும்.
தற்போது வாக்காளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வாக்களர்களை அடையாளம் கண்டுக் கொள்ளவும் இரண்டு இடங்களில் பதிவு செய்வதை தடுக்கவும் ஒரு அடையாள முறை தேவைப்படுகிறது. எனவே தேர்தல் ஆணையம் ஆதாரை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
அத்துடன் தற்போதுள்ள நிலையில் சட்டமாக்கபட்டால் மட்டுமே ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் இணைப்பு நடத்த முடியும். எனவே இதை பாராளுமன்றத்தில் சட்டமாக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த இணைப்புக்கு அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு அளிக்கும் என்னும் நம்பிக்கை உள்ளதால் விரைவில் சட்டம் இயற்றப்பட்டு ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் இணைப்பு சட்டமாக்கப்படும்' என தெரிவித்துள்ளார்

2004 இல் சுனாமியால் பெற்றோரை இழந்த 2 வயது பெண் குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்த அரசு செயலர் தற்போது கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபடும் போது 17 வயது ஆன அந்த பெண்ணை பார்த்து கண்கலங்கிய அதிகாரி:



அப்பா" என்று ஓடி வந்த
அரசுப்பள்ளி மாணவி - தழுவி அணைத்து கண்கலங்கிய அரசு செயலர்

நாகை, கஜா புயலின் சீரமைப்பு ஆய்வு பணியின் போது, ஆதரவற்ற மாணவியை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அழியா நினைவால் கண்கலங்கினார். தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் மாணவியின் கண்களில், தாரை தாரையாக கண்ணீர்கொட்டிய நெகிழ்ச்சியான தருணத்தில் அங்கிருந்த ஆசிரியர்களும் கண்கலங்கினர்.


நாகை மாவட்டத்தில், 2004ல், கோரதாண்டவம் ஆடிச் சென்ற சுனாமியின் இரண்டாவது நாளில் கீச்சாங்குப்பம் கடலோரத்தில், 2 வயது குழந்தையின் அழுகுரல் கேட்டமீனவர்கள், குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். குழந்தையை அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்க உத்தரவிட்ட கலெக்டர், காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, 150 குழந்தைகள் மீது, தனி கவனம் செலுத்தி வந்தார்.

கீச்சாங்குப்பம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட, 2 வயது குழந்தைக்கு மீனா என்றும், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்று பெயர் சூட்டப்பட்டது. நாள்தோறும் வேலை பளுவுக்கு இடையிலும், ராதாகிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் காப்பகத்தில் சில மணி நேரங்களை செலவழித்து வந்தார். இதனால், இத்தம்பதியை, அப்பா - அம்மா என்று காப்பக குழந்தைகள் அழைத்தனர்.

பதவி உயர்வில், ராதாகிருஷ்ணன் நாகையை விட்டு சென்றாலும், ஆண்டு தோறும் அன்னை சத்யா காப்பக குழந்தைகளை வந்து பார்த்து, செல்லாமல் இருந்ததில்லை. இந்நிலையில் காப்பகத்தில் இருந்த குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி சென்று விட்ட நிலையில், மீனாவும், சவுமியாவும் காப்பக பராமரிப்பில் உள்ளனர்.

நேற்று முன்தினம் நாகையில் கஜா புயல் சீரமைப்பு பணி ஆய்வில் இருந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அரசு உதவிப் பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் மீனாவை திடீரென்று சந்தித்தார். 2 வயதில் கண்டெடுக்கப்பட்டு, 17 வயது சிறுமியாக பள்ளி சீருடையில் இருந்த மீனா, அப்பா என்று சந்தோஷ குரலில், ஆனந்த கண்ணீருடன் ஓடிவரவும், தன் மகளை போல் அரவணைத்த அவர் தன்னை அறியாமல் கண் கலங்கினார்.

பின், நலம் விசாரித்த ராதாகிருஷ்ணனிடம், தான் பி.காம்., படிக்க விரும்புவதாக மீனா தெரிவித்தார்.நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, மேல் படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்தவர், தனியார் கல்லுாரியில், பி.ஏ.முதலாமாண்டு படிக்கும் சவுமியாவின் நலம் குறித்து, மீனாவிடம் கேட்டறிந்தார்.மற்றொரு நாளில் சவுமியாவை சந்திப்பதாக உறுதியளித்து, புறப்பட்டு சென்றார்

வங்கக்கட்லில் புயல் - துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் :

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோல் நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரியிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கட்லில் புயல் உருவாவதை ஒட்டி பலத்த காற்று வீசுவதால் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறை பயிலரங்கில் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறை பயிலரங்கில் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் "அவர்களின்" என்கிற வார்த்தை தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக..
வேலூர் மண்டல இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு.

வேலூர் மண்டல இணை இயக்குநரின் செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர் பிறப்பிப்பவர் திரு. இராஜாராம் என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ வாக்கியங்களையும் அவற்றுள் எது தவறு, எது சரி என்பதையும், இணையான தமிழ்ச் சொற்களையும்  பின்வருமாறு தருகிறேன்.

பார்வை 1 - ல் கண்ட = தவறு
பார்வை 1 - இல் கண்டுள்ள = சரி

30 - ம் தேதி என்பது தவறு
30 - ஆம் தேதி என்பது சரி.

கடிதப் பொருள் குறித்து எழுதும் போது அதன் இறுதியில் குறித்து, சார்பாக என்று எழுதுதல் தவறு.

தொடர்பாக என்று எழுதுவதே சரி.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு = தவறு
ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு = சரி

பயணத்திட்டம் = தவறு
பயண நிரல் = சரி.

அய்யா = தவறு.
ஐயா = சரி.

ஊதியப் பட்டியல் = தவறு.
ஊதியப் பட்டி = சரி.

அனுப்புனர் = தவறு.
அனுப்புநர் = சரி.

இயக்குனர் = தவறு
இயக்குநர் = சரி.

நகல் = தவறு.
படி = சரி.

கட்டிடம் = தவறு.
கட்டடம் = சரி.

விபரம் = தவறு.
விவரம் = சரி.

ஆவண செய்யுமாறு = தவறு.
ஆவன செய்யுமாறு = சரி.
( சிலர் ஆவணம் செய்யுமாறு என்று கூட எழுதிவிடுகின்றனர்.)

நிர்வாகம் = தவறு.
நிருவாகம் = சரி.

பொருப்பு = தவறு.
பொறுப்பு = சரி.

விடுமுறை விண்ணப்பம் = தவறு.
விடுப்பு விண்ணப்பம் = சரி.

சில்லறைச் செலவினம் = தவறு.
சில்லரைச் செலவினம் = சரி.

ஆரம்பம், துவக்கம் = தவறு.
தொடக்கம் = சரி.

அனுமதி = தவறு.
இசைவு = சரி.

தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை, தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு முறையே முதற்பரிசாக ரூபாய் 3000/-ம், 2ஆம் பரிசாக ரூபாய் 2000/-ம், 3ஆம் பரிசாக ரூபாய் 1000/-ம் வழங்கப்படுகின்றன. இதேபோன்று தெரிவு செய்யப்பெற்ற தலைமைச் செயலகத் துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அரசாணை எண். 1134. நாள்: 21.06.1978 இல் ஆணையிடப்பட்டுள்ளது.

ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.

E pay slip பற்றி பார்ப்போம்.*

*ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.இதைப் பற்றி பலர் அறிந்து 
பயன்பெற்றாலும்,ஒரு சிலர் இதை அறியாமல் உள்ளனர்.அவர்களும் அறிய வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறேன்.கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து employee code என்ற பகுதியில் உங்கள் PF/Cps number கொடுக்கவும்,suffix என்ற பகுதியில் EDN கொடுத்து பின்னர் password ஆக உங்கள் பிறந்தநாளை slash குறியுடன்[eg:01/01/1980] கொடுத்து* *உள்நுழைந்தாள் payslip,annual income statement ,paydrawn purticulars என்ற மூன்று பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதைக் கிளிக் செய்து எந்த financial year வேண்டுமோ அதையும் select செய்து உங்கள் ஊதியத்தை பிடித்தங்களுடன் பார்க்கலாம்.மேலும் அந்த pageஇல் உள்ள நீலநிற print buttonஐ கிளிக் செய்தால் pdf (or)exel file ஆக donloadம் செய்யலாம்.தகவலுக்காக*

School Morning Prayer Activities - 14.12.2018

School Morning Prayer Activities - 14.12.2018 


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

உரை:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

பழமொழி:

Every heart hearth its own ache

தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி

பொன்மொழி:

எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
துருக்கி, இத்தாலி

2) யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ஜப்பான்

நீதிக்கதை :
என் வீடு


பண்ணைபுரம் என்ற ஊரில் விசாகன் என்ற புத்திசாலி கிழவர் வசித்து வந்தார். ஒருமுறை கிழவரது மனைவி, ஊருக்குச் சென்றிருந்தாள். கிழவர் மட்டும் அப்போது வீட்டில் இருந்ததால், வெளியே செல்லும்போதெல்லாம் வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம்.

ஒருமுறை அவர் வெளியே சென்று விட்டு வரும்போது, அவர் வீட்டிலிருந்து ஒரு திருடன் மூட்டையுடன் வெளியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே கிழவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டில் ஒரு பொருள் கூட இல்லை. சுத்தமாக காலி செய்து வைக்கப்பட்டிருந்தது.

கிழவர் வேகமாக வெளியே ஓடி வந்து திருடனைப் பின் தொடர்ந்தார்.
திருடன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து தான் கொண்டு வந்த மூட்டையை அங்கு வைத்து விட்டுக் கொல்லைப்புறம் சென்றான்.

வீட்டுக்குள் வந்த கிழவர், அங்கு பார்த்த போது வீடு முழுவதும் அவருடைய பொருட்கள் நிறைந்திருக்கக் கண்டார்.

அந்த பலே திருடன் ஒவ்வொரு நாளாக கிழவரின் வீட்டிற்கு வந்து, அவருக்கே தெரியாமல் அவருடைய பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி வந்திருக்கிறான்.

உடனே கிழவர் அங்கிருந்த பாய் ஒன்றை எடுத்துப் போட்டு அதில் படுத்துக் கொண்டார்.

கொல்லைப் புறம் சென்ற திருடன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். அங்கு கிழவர் படுத்திருப்பதைக் கண்டு, “”யார் நீ?” என்று கேட்டான் திருடன்.

“”என்னைத் தெரியவில்லையா? நான்தான் விசாகன்!” என்று கூறினார்.

“”நீ விசாகனாக இருந்தாலும் சரி, குசாகனாக இருந்தாலும் சரி. என் வீட்டில் உனக்கு என்ன வேலை?” என்று திருடன் அதட்டினான்.

“”உன் வீடா? என் வீட்டிற்குள் நீ வந்து என்னையே மிரட்டுகிறாயா?” என்றார் கிழவர்.

“”உனக்கென்ன பைத்தியமா? என்ன உளறுகிறாய்?” என்றான் திருடன்.

“”இதோ பார்! என் வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் நீ இங்கே கொண்டு வந்து வைத்து விட்டாய். அப்படியானால் நான் புது வீட்டிற்கு குடியேறி இருக்கிறேன் என்று தானே பொருள்? நானும் நீண்ட நாட்களாக வீடு மாற வேண்டும் என்று நினைத்திருந்தேன். வீடு நன்றாக இருக்கிறது. வாடகை எவ்வளவு?” என்றார் கிழவர்.


தான் கிழவனிடம் வசமாக மாட்டிக் கொண்டதை அறிந்த திருடன் தான் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று கிழவரின் வீட்டில் திரும்பவைத்து விட்டான்.

இன்றைய செய்தி துளிகள் : 
1.12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தபின்னர் 413 மையங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

2.நாகை மற்றும் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3.புயல், மழையை எதிர்கொள்ள 4 நாட்களுக்கு தென்னைக்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்: தோட்டக்கலைத்துறை

4.நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேன-வின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

5.உலக கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் நெதர்லாந்து