யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/18

உடல்நலம் மருத்துவம்








































































தொடக்க பள்ளி ஆசிரியர்கள்அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம் LKG/UKG பாடம் கற்பிக்க உள்ளனர்.?

தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 53 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.


இதற்காக, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 2,381 அங்கன்வாடிகளில் படிக்கும், 52 ஆயிரத்து, 933 பிள்ளைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது.தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர். இந்த மாணவர்களுக்கு, நான்கு ஜோடி சீருடை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் வழங்கப்பட உள்ளன.

வகுப்பு ஆசிரியர்களின் வருகைப்பதிவு பரிதாபங்கள்!

சமீப காலம் வரை  பள்ளிகளில் வருகைப்பதிவு முறை பதிவேடுகளில் பதிவிடுவதாக தான் இருந்தது.

தற்போது அதை டிஜிட்டல் ஆக்கும் முயற்சியாக TNSchools மொபைல் செயலி மூலமாக பதிய வேண்டும் என்று கொண்டு வந்ததன் மூலம் வகுப்பு ஆசிரியர்கள் படும் கஷ்டங்கள் கல்வித்துறை அதிகாரிகள் அறிவார்களா என்று தெரியவில்லை! 

#ஆசிரியர் தன் மொபைலில் மாணவர்களின் வருகையைப்  பதிவு செய்த பிறகும் பல சமயங்களில் விடுப்பு மாணவர்கள் செயலியில் அப்டேட் ஆவதில்லை.

#ஒரு ஆசிரியர் அவர் மொபைலில் வருகையைப் பதிவு செய்த பின் வேறொரு ஆசிரியரின் மொபைலில் அதே வகுப்பை பார்த்தால் வருகை பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கவில்லை. மீண்டும் அந்த மொபைலில் வருகை பதிவு செய்தால் தான் அவர் மொபைலில் தெரிகிறது. 


#இப்படி ஒரு நிலையில் கல்வி உயரதிகாரிகள் அவர்கள் மொபைலில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் மொபைல் செயலியை உபயோகித்து வருகை பதிவு செய்திருக்கிறார்களா என்று கண்டறிய முற்பட்டால் அந்த பள்ளியில் மொபைல் செயலியை உபயோகப்படுத்தவில்லை என்பது போல தான் காண்பிக்கும்!

#பதிவு செய்த பிறகு Alert என்ற தலைப்பில் School login mismatch என்று ஒரு தகவல் வருகிறது. அதை க்ளிக் செய்து விட்டால் நாம் பதிவு செய்த வருகை மாயமாக மறைந்து விடுகிறது!

#மொபைல் செயலியில் 9:30 மணிக்குள் வருகையைப் பதிய வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்த மாணவர்கள் தாமத வருகை என்றாகி விடும். 9:30 மணிக்குள் என்ற கால அளவு இறை வணக்கத்திற்குரிய காலம். அந்த நேரத்தில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் இறை வணக்கக் கூடத்தில் இருப்பார்கள். 

#மதியமும் இந்த வருகைப்பதிவை மொபைல் செயலியில் பதிய வேண்டும். 


#மொபைல் செயலியில் பதிந்த பிறகும் Daily Report என்ற பகுதியில் வருகையைச் சரிபார்க்கும் போது ஆசிரியர்கள் பதிந்த வருகை  பல வகுப்புகளுக்கு entry ஆகவில்லை.

#ஒரே நேரத்தில் சர்வரை பல ஆசிரியர்கள் உபயோகப்படுத்துவதால் இணையத் தொடர்பு சரிவர கிடைப்பதில்லை.

#ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய பாடப்பகுதிகள் அதிகம் உள்ள நிலையில் இந்த மொபைல் செயலி மூலம் வருகைப் பதிவு மேற்கொள்வது அவர்களின் நேரத்தை வீணடிக்கிறது. 

#புதிய புதிய கற்றல் முறைகள், எண்ணற்ற பதிவேடுகள், கணினி மயமாக்கல் இவைகள் அனைத்தும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நினைத்து கல்வித்துறை கொண்டு வந்துள்ளது. 

#ஆனால் நடைமுறையில் இவை அனைத்தும் கல்வி கற்றுத்தருவதற்கான நேரத்தை வீணடிக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை! 

#தற்கால கல்வி முறையில் பயிலும் மாணவர்களை விட அந்த கால குருகுல முறையிலும் 1960-2000 வரையிலுமான காலக்கட்டத்தில் பயின்ற மாணவர்களின் அறிவுத்திறன் மேலோங்கி இருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர். 

#கல்வித்துறையில் மாற்றம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

#ஆனால் அவை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 

#ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும். 

#இவற்றை மனதில் வைத்து #மேதகு_கல்வி_அதிகாரிகளும் #மாண்புமிகு
#கல்வியமைச்சரும் ஆசிரியர்களின் துயர் களைய முன்வருவார்களா?

ஆங்கில வழி பிரிவுக்கு ஸ்பெஷல் ஆசிரியர்: வரும்26ல் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.


அரசுப்பள்ளிகளில் கடந்த 2012 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆறாம் வகுப்பில், இப்பிரிவு துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.

மாவட்டந்தோறும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, ஆங்கில வழி பிரிவுக்கு நியமிக்க, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 15 மாணவர்கள் ஆங்கில வழி பிரிவில் படித்தால், இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் வகுப்பு எடுப்பார்.

இதேபோல், ஒரு வகுப்பறையில், 60 மாணவர்களுக்கு மேல் படித்தால், புதிய பிரிவு துவங்க வேண்டும்.

மாவட்ட வாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து, வரும் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில்,'கோவையில் உள்ள, 15 வட்டாரங்களிலும், ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் தயாரானதும், புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என்றனர்

பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம் மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது

பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது

தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது


*அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது


*ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன


*அதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது


*அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என, உத்தரவிடப்பட்டுஉள்ளது


*நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை, இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக் கூடாது


*மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது' என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது


*வரும், 1ம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது

TNPSC அறிவிப்பு : ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மாவட்ட கல்வி அதிகாரி(D.E.O) வேலை

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 18+2 = 20
பதவி: மாவட்ட கல்வி அதிகாரி
தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,900 - ரூ.1,80,500
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரம் வெளியான நாள் அல்லது பணியில் சேரும்போது 58 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Viva-Voce Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2019
முதல்நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம். முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2019
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2019
இதுகுறித்த மேலும் முழுமையான விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பள்ளிகளில் 3ம் பருவ பாட புத்தகங்கள் தயார்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 3ம் பருவ பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தற்போது அரையாண்டு தேர்வு(இரண்டாம்பருவம்) நடந்து வருகிறது. இதன் பின் 3ம் பருவம் துவங்க உள்ளதால் அதற்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் இருக்கிறது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்திலேயே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை வநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்! - 131 பேர் வெற்றிபெற்று அசத்தல்

மத்திய குடிமைப்பணி தேர்வாணையம், அகில இந்திய குடிமைப்பணிக்கான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகளை இன்று (20.12.2018) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 1994 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 131 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்றழைக்கப்படும் மத்திய குடிமைப் பணி தேர்வாணையம், இந்திய அளவில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப் எனப் பல மிக முக்கிய பணிகளுக்கு தகுந்த திறமையானவர்களை நியமிக்க ஆண்டுதோறும் மூன்று கட்டமாக தேர்வை நடத்தி வருகிறது.
முதல் கட்டமாக, ஜூன் 3-ம் தேதி நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில் ஆறு லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதியுள்ளனர்

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேதி அட்டவணை வெளியீடு.!!

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான போது தேர்வுகள் தேதியை 19 ஆம் தேதி அறிவிப்பதாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தேர்வு நடைபெறும் நாட்கள்:-
10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறும்
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நாட்கள்:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு 29.4.2019 அன்று வெளிவிடப்படும்
11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு 19.4.2019 அன்று வெளியிடப்படும்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 19.4.2019 அன்று வெளியிடப்படும்
10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை:-
14.3.2018 - தமிழ் முதல் தாள் மதியம்
18.3.2018 - தமிழ் இரண்டாம் தாள் மதியம்
20.3.2018 - ஆங்கிலம் முதல் தாள் மதியம்
22.3.2018 - ஆங்கிலம் இரண்டாம் தாள் மதியம்
25.3.2018 - கணிதம் காலை
27.3.2018 - அறிவியல் காலை
29.3.2018 - சமூக அறிவியல் காலை

அரையாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளி செல்ல வேண்டும்!...

அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது!
தமிழக பள்ளிகளில் நடைபெற்று வரும் அரையாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், வரும் 23 முதல் 31-ஆம் தேதி வரை உள்ள விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகளை நடத்த தமிழக பள்ளிக்கல்விதுறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திலுள்ள 413 மையங்களிலும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளை கருத்தில்கொண்டு செய்முறை வகுப்புகள் மற்றும் மீதம் இருக்கக்கூடிய பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுந்த கால அட்டவணையை தயார் செய்து, திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் எனவும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்து கடிதத்தில் கையெழுத்து பெற்று வரவேண்டும் எனவும் பள்ளிக்கல்வி துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகளின் போது அரையாண்டு தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

அரையாண்டு விடுமுறை கிடையாது - சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு

School Morning Prayer Activities - 21.12.2018

                                                 
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

உரை:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.


பழமொழி:

Fact is stronger than fiction

கற்பனையை விட உண்மை விசித்திரமானது

பொன்மொழி:

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும்.

 - பெர்னார்ட்ஷா

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
மால்தஸ்

2) கல்லணையைக் கட்டியவர் யார்?
கரிகால சோழன்

நீதிக்கதை :

பறக்கும் போட்டி


அழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.

அந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.

‘வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.

போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.

“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக்? பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா?” என்று சிரித்தது மினு.

உடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.

“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே? பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.

“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.

“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.

பயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.

இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.

“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.

ஜிக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.

சிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.

அன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.

“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.

“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.

கொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.

“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.

நம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.

“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.

ஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.

மினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.



இன்றைய செய்தி துளிகள் : 

1) அரையாண்டு தேர்வு விடுமுறையில் நீட் பயிற்சி நடைபெறும் - பள்ளி கல்வித்துறை

2) ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

3) நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலைய பட்டியல் வெளியீடு: 8-வதாக பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு

4) ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

5) ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்க ஷூ விருதை, பார்சிலோனா அணி வீரர் லியோனல் மெஸ்ஸி 5வது முறையாக வென்றுள்ளார்.

IT -standard-deduction-of-rs-40000-for-tax-2019-calrification :

3 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் மாற்றுத்திறன் ஆசிரியர்கள் அவதி :

பணி நியமனம் செய்யப்பட்டு 3 மாதங்களாகியும் ஊதிய பிறப்பிப்பு ஆணை வெளியிடப்படாததால் தமிழகம் முழுவதும் 58 மாற்றுத்திறன் ஆசிரியர்கள் ஊதியம் பெறாமல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளிகள் மற்றும் வட்டார வள மையங்களின் கீழ் செயல்பட்டு வரும் மன வளர்ச்சி குன்றியவர்கள் பயிலும் பள்ளிகளில், சிறப்பு கல்வியியல் பட்டம் பெற்ற கண் பார்வையற்ற, தசை சிதைவடைந்த மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மாவட்ட அளவில் அதிக மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ள ஒரு வட்டாரத்தைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வி கற்பிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
இதையொட்டி கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் படி, 202 வட்டாரங்களில் சிறப்பு கல்வியியல் பட்டம் பெற்ற மாற்றுத்திறன் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறப்பு கல்வியியல் பட்டம் பெற்ற 58 மாற்றுத்திறனாளிகள் 2017ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு ரூ.9,300 - ரூ.4,600 - ரூ.34,800 என்ற விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட போதும், அதற்கான ஆணை இதுவரை வெளியிடப்படாததால் கடந்த 3 மாதங்களாக ஊதியம் பெறாமல் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.
மேலும் இவர்கள் தனிச்சையாக செயல்பட முடியாததால், தங்களின் தேவைக்காக உதவியாளர்களையும் நியமித்துள்ளனர். தங்களுக்கான ஊதியம் கிடைக்காத நிலையில், உதவியாளர்களுக்கும் சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியது:
மாற்றுத்திறன் ஆசிரியர்கள் 58 பேருக்கான தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதற்கான ஊதிய பிறப்பிப்பு ஆணை இதுவரை வெளியிடவில்லை. எனவே தமிழக அரசு அதற்கான ஆணையை உடனடியாக வெளியிட்டு, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் மாற்றுத்திறன் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாற்றுத்திறன் குழந்தைகளின் நலன் கருதி, அந்த காலி இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கல்வியியல் பட்டம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக தகுதித் தேர்வு நடத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்

பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம் :

பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது.
இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.அதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.'நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை, இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக் கூடாது. மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது' என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும், 1ம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது

Promotion Rules for Teacher's :



ஆசிரியர்களுடன் அமைச்சர் ஆலோசனை :

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 10ம் வகுப்பு மற்றும் 11.12 ஆகிய வகுப்பு தேர்வில் மாணவர்கள் கடந்த ஆண்டை விட அதிக மதிப்பெண் எடுப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.கலெக்டர் கேசவன், கல்வித்துறை அதிகாரி அல்லி முன்னிலைவகித்தனர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறித்து ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.


அமைச்சர் கமலக்கண்ணன் பேசுகையில், ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்தாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளும் அதிகம் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தென் மாவட்டங்களில் நாளை கனமழை?

வங்க கடலில், தென் கிழக்கு பகுதியில், இலங்கைக்கு கிழக்கே, காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி, தமிழக தென் மாவட்டங்களுக்கு நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தென் மாவட்டங்களின்கடலோர பகுதி களின் சில இடங்களில், நாளை(டிச.,21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

TNPSC அறிவிப்பு : ரூ.56900 ஊதியத்தில் மாவட்ட கல்வி அதிகாரி (D.E.O) வேலை!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18+2 = 20

பதவி: மாவட்ட கல்வி அதிகாரி

தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.56,900 - ரூ.1,80,500

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரம் வெளியான நாள் அல்லது பணியில் சேரும்போது 58 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்றஇணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Viva-Voce Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2019

முதல்நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம். முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

09.01.2019முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2019

இதுகுறித்த மேலும் முழுமையான விபரங்களை அறிய

http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆங்கில வழி பிரிவுக்கு ஸ்பெஷல் ஆசிரியர்: வரும்26ல் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.

ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

*அரசுப்பள்ளிகளில் கடந்த 2012 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

*ஆறாம் வகுப்பில், இப்பிரிவு துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
*இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.

*மாவட்டந்தோறும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, ஆங்கில வழி பிரிவுக்கு நியமிக்க, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 15 மாணவர்கள் ஆங்கில வழி பிரிவில் படித்தால், இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் வகுப்பு எடுப்பார்.

*இதேபோல், ஒரு வகுப்பறையில், 60 மாணவர்களுக்கு மேல் படித்தால், புதிய பிரிவு துவங்க வேண்டும்.

*மாவட்ட வாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து, வரும் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

*வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில்,'கோவையில் உள்ள, 15 வட்டாரங்களிலும், ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் தயாரானதும், புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என்றனர்.

பள்ளி கல்வித்துறையில் தற்போது காலியாக உள்ள வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply!

20/12/18

நீதிக்கதை :---சிந்தனை கதைகள்



 புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்


அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.


புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.

மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை  அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.


புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:
 கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வழங்க உத்தரவு

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியலை, கல்வித்துறை 
சேகரித்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14 கல்வி வட்டாரங்களில், 2,597 பள்ளிகள் உள்ளன.இதில், தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மெல்ல கற்கும் மாணவர்கள் சிலர் இருக்கின்றனர். இவ்வாறான மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளை, தொடக்கம் மற்றும் நடுநிலைக்கு தலா ஒன்று என, தேர்வு செய்யப்பட உள்ளது.தேர்வாகும் பள்ளிகளுக்கு, முன் மாதிரி பள்ளியாக வைத்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 
நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுகள் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50, மொத்த மதிப்பெண் 100 ஆகும். இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதுவும் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றிருந்தவர்களுக்கு 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் விடைக் குறிப்புகளை வைத்து மீண்டும் திருத்தினர். அப்போது தமிழையே ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பிழையுடனும், தவறுதலாகவும் எழுதியிருந்தனர். அதுமட்டுமன்றி பக்கத்தை நிரப்புவதற்காக கேள்விக்குத் தொடர்பில்லாத பல தகவல்களையும் எழுதி இருந்தது தெரியவந்தது.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து, இந்த மாதம் வெளியிடப்பட இருந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள்களை மீண்டும் ஆய்வு செய்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதேநேரம் முறைகேடு குறித்து விசாரணையும் நடத்தப்படவுள்ளது

தொழில்நுட்ப பயிலக பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018-'19 கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்!!!


22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - RTI News


மாவட்ட வாரியாக LKG, UKG வகுப்பில் இந்த ஆண்டு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்!

கடந்த 2018- ஏப்ரல் மாதம் நடைபெற்ற நான்கு நாட்கள் உண்ணா விரத போராட்டம் வெற்றியா? தோல்வியா ?அரசின் எழுதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையா...?? ஓர் அலசல்...!!

ஏப்ரல்- 23ஆம் தேதி அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடங்கினோம். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை ராஜரத்தினம் மைதானத்திற்குள்  கைது செய்து அடைத்தது.பல கட்ட காவல் துறை மிரட்டல்கள் எதற்கும் செவிமடுக்காததால்  அன்றிரவு நம்மை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான காவலர்களை அந்த இடத்தில் குவிந்தனர்.ஆனால் பெண் ஆசிரியர்கள் எழுச்சி கண்டு 
குழந்தைகளின் நலன்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்று எண்ணி அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது காவல் துறையினர்.அன்று  நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அரசு எந்த ஒரு சாதகமான விஷயங்களை நமக்கு சொல்லவில்லை முதல் நாள் நாம் இருந்த மன உறுதியைக் கண்ட அரசு இரண்டாம் நாள் சற்று இறங்கி பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.




 அதன் பின்பும் நாம் ஒற்றை கோரிக்கையை விடாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயங்கி விழுந்த நிலையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.அதனை கண்ட அரசு மூன்றாம் நாள் இரவே உங்களது கோரிக்கை நிறைவேற்றுவதற்காக அரசு முழு  முயற்சியுடன் களமிறங்கியுள்ளது ,உங்களது கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது  அரசாணை உடனடியாக பிறப்பித்தால் பல்வேறு பிரிவினர் அரசினை நடத்த முடியாதபடி போராட்டங்களை நடத்திடுவர்.எனவே ஒரு நபர் ஊதிக்குழுவில் முடித்து தருகிறோம் என்றனர் மேலும் கோரிக்கை முடிவடைந்தது தெரியாமல் தொடர்ந்து போராடி அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால் உங்களது கோரிக்கையும் நீர்த்துப் போய்விடும் ,ஆகவே ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெற்றியும் பெற்று தொடர்ந்து போராடி உங்களது கோரிக்கைகளை நீங்களே அழித்து விடாதீர்கள் என்று கூறினார்.




நாம் மற்ற மாவட்ட/ வட்டார பொறுப்பாளர்களை  கலந்து பேசி விட்டு முடிவு சொல்கிறோம் என்று கூறிவிட்டு மூன்றாம் நாள் பேச்சுவார்த்தை நள்ளிரவு முடித்துவிட்டு வந்தோம். நமது போராட்டத்தின் எழுச்சி கண்ட அரசியல் தலைவர்கள் நமது போர் களத்திற்கு நேரடியாக வந்து போராட்டம் நடத்துவது என்ற எப்படி என்பதை  ஆசிரியர்களாகிய நீங்கள் எங்களுக்கு கற்றுத் தருகின்றனர் என்று புகழாரம் சூட்டினர். இது போன்ற மனவலிமையான போராட்டங்களை நாங்கள் கூட நடத்தியது கிடையாது என வாழ்த்தினர்.




போராட்டத்தின் உறுதி கண்ட நமது சகோதர அமைப்புகளும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். நான்காம் நாள் போராட்டத்தை இறுதி முடிவிற்கு கொண்டு செல்வதற்கு நமது பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெரும் முயற்சி எடுத்து ஒரு நபரை ஊதியக்குழுவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி நமது ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்தனர்.



அப்பொழுது சரி இப்போதும் சரி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பெருத்த சந்தேகம் எழுந்தது ???
 ஏன் இப்போதும் அந்த சந்தேகம் தொடர்கிறது...???





போராட்டக் களத்தில் நாம் மிரட்டப்பட்டோமா ? அல்லது நமது மூத்த சங்கதிகள் கூறும் வண்ணம் ஆடி கார் ஸ்கார்பியோ கார் போன்றவற்றை வாங்கி அரசிடம் விலை போய் விட்டோமா என்று...??


விலை போய் இருந்தால் இப்போது அளித்த மரணப்போராட்டத்தினை  அறிவிக்க தைரியம் இருக்குமா...??





அதன்பின்பு ஒரு நபர் ஊதியக்குழு அனைத்து இயக்கங்களையும் அழைத்து கருத்துகளை கேட்டது நமக்கு இயக்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.பல ஆசிரியர் அமைப்புகளும் அரசு அலுவலர் அமைப்புகளும் கூட்ட அரங்கில் கூடியிருந்த பொழுதும் மொத்தம் மூன்று மணி நேரம் கூட்டத்தில் நமது தரப்பிற்கும் மட்டுமே ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலாக நமது கருத்துகளை மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்க  வாய்ப்புகள் வழங்கி ஆதாரங்கள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டார், குழுவின் தலைவர் திரு.சித்திக் அவர்கள்.




கால நீட்டிப்பு தொடர்ந்து செய்து வந்ததால் நாமும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு தள்ளப்பட்டோம்.அதே நேரம்  ஜாக்டோ ஜியோ அமைப்பும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு இருந்தது .அப்பொழுது அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மதிப்பிற்குரிய கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. சண்முகம் அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் 7 அம்ச கோரிக்கைகளை கேட்கும்பொழுது இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடியாது .ஆனால் 2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் கோரிக்கை நியாயமானது அதற்காக முன்னரே பரிந்துரைக் கடிதம் அனுப்பி உள்ளோம் ஒரு நபர் ஊதியக்குழு பரிசீலனை செய்து அறிக்கை வந்தவுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நேரடியாகவே அனைத்து இயக்கங்களுக்கும் முன்னரே அறிவித்துள்ளார்.தற்போது கூட மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் வாதிட்ட போது நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களிடம் கலந்து பேசிதான் 21 மாத நிலுவைத்தொகை குறித்த அறிக்கை கொடுக்க முடியும் என்று கூறினர் .இதிலிருந்தே தெரிய வேண்டாமா தமிழகத்தின் நிதித்துறை சார்ந்த அனைத்தும் மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு  முழு அதிகாரம் உள்ளவர் அவர்தான் என்று ...!அவருடைய வாயிலேயே நமது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.அப்போதே நாம் வெற்றி பெற்று விட்டோம்,ஆனால் நமது சகோதர அமைப்புகளின் ஆதித அன்பால் அது கூட மறைக்கப்பட்டது.அதன்பின்னர் நம்மால் வெளிக்கொணரபட்டது.




அடுத்ததாக நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை 6.12.2018 அன்று நேரில் சந்தித்து நமது காலவரையற்ற போராட்டம் குறித்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது.அவர்கள் ஒரு நபர் ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படும் அதற்காக முதலமைச்சர் வரை நாங்கள் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



 அதேபோல அடுத்த நாளே 7.12.2018 அன்று ஒரு புதிய குழு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல்கள் ஊடகங்கள் மூலமாக வெளியாகின.அதற்கு அடுத்தநாள் நமது வெற்றி முழுவதும் உறுதி செய்யப்பட்டிருந்தது 8. 12.2018 மாலை 2 மணிக்கு மேல் அனைத்து ஊடகங்களிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து ஒரு நபர் ஊதியக் குழு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலமாக வெளியிடப்பட்டது .



இதிலேயே தெரிந்துகொள்ள வேண்டாமா ....???


நமது கோரிக்கை நூறு சதவீதம் 100% முடிந்துவிட்டது என்று....


அடுத்த கட்ட எந்தவித கடுமையான போராட்டத்தை மேற்கொள்ளாமலேயே நமது கோரிக்கை நிறைவேறி விட்டது.நண்பர்களே துளியும் சந்தேகம் வேண்டாம் நான்கு நாட்கள் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் முழு வெற்றி...
100% 100%



அனைத்தும் நேர்த்தியாக சென்றுகொண்டிருந்த வேளையில் விரைவில் ஊதிய மாற்ற அரசாணை வெளிவரும் என்றிருந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி தேவை இல்லாமல் ஒரு நபர் ஊதிய குழுவில் நிலுவைத் தொகையான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று மேலும் ஒரு மாத கால நீட்டிப்பு செய்யப்பட்டுவிட்டது. அவ்வாறு அரசுக்கு அதிக நிதி நெருக்கடி ஏற்படும் பொழுது பெரிய தொகையை அரசு நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டு நமது கோரிக்கை மற்றும் இன்னும் சில பல கோரிக்கைகளை அரசு நீர்த்துப் போகச் செய்து விடும் என்ற காரணத்தினால் தான் காலவரையற்ற உயிர் நீர் அருந்த மரணப் போராட்டத்தை நாம் அறிவித்துள்ளோம்.

உறுதிசெய்யப்பட்ட வெற்றி ...!!

இறுதி செய்யப்பட்ட வெற்றி...!!


தடம் மாறாமல் தடுமாறாமல்
நம் கரங்களில் பெறுவதற்காக இந்த போராட்டம் நண்பர்களே...!!


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையெனில் அத்தனை பேருக்கும் தாழ்வு என்பதை அறிந்த அறிவார்ந்த ஆசிரிய பெருமக்கள் உணர்ந்து இப்போராட்டத்தை முழுவதுமாக பங்கெடுக்கும் செய்து வெற்றி என்ற அரசாணையை பெற்று நாம் அரியணை திரும்புவோம்...!!
இல்லையேல் உயிர்நீரும் அருந்தாமல் தமிழக சிறைகளை நிரப்புவோம்....!!



*வெற்றி என்பது எளிதல்ல...*
*அதை விட்டுவிடும் எண்ணம் நமகில்லை...*

நன்றி
தகவல் பகிர்வு

*மாநிலத் தலைமை*
*2009&TET போராட்டக்குழு*

Flash News 22-08-2018 அன்று ஆசிரியருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு


நாட்டில் நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன : ரவிசங்கர் பிரசாத்

நாட்டில் மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில்
2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.  2.91 கோடி வழக்குகளில் 21.9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்று தெரிவித்த அவர், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ராவில்  10 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறினார்.*