யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/10/15

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி -கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்

தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 


இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.அதேபோல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு எண்: 175ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

கடந்த ஜூனிற்கு முன், ஒவ்வொரு ஐந்தாண்டு அல்லது ஆண்டு தோறும் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், ஜூனிற்கு பின் ஒவ்வொரு மாதமும் நிதித்துறைசார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் தான், சம்பளம் வழங்கப்படுகிறது.இதனால் ஆறு மாதங்களாக தாமதமாக சம்பளம் பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் முடியும் தருவாயிலும், அதற்கான நிதித்துறைஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால், நவ.,10 தீபாவளியை புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்கி இவர்களால் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., உட்பட பல திட்டங்களில் பணியாற்றம் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. 

நிதித்துறை ஒப்புதல் அதிகபட்சம் ஒவ்வொரு ஐந்து அல்லது குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒருமுறையாவது அளிக்க வேண்டும்.மாதத்தில் 20ம் தேதிக்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, ஒன்றாம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாட செய்ய முடியும். வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் திட்டப் பணிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்ல தயங்குவர், என்றார்.

30/10/15

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை

சென்னை :'தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது; ஆசிரியர்களாக பணிபுரிவோர் மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம். மொத்தம், 1,000 பேர் சேர்க்கப்படுவர். இதற்கு, நவ., 30க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, பல்கலை அறிவித்துள்ளது. 'கலந்தாய்வு டிசம்பரில் நடக்கும்; ஜனவரி முதல், வகுப்புகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளிகவனிப்பாரா கல்வி செயலர்

மதுரை:தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

அதேபோல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு எண்: 175ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.
கடந்த ஜூனிற்கு முன், ஒவ்வொரு ஐந்தாண்டு அல்லது ஆண்டு தோறும் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், ஜூனிற்கு பின் ஒவ்வொரு மாதமும் நிதித்துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் தான், சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனால் ஆறு மாதங்களாக தாமதமாக சம்பளம் பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் முடியும் தருவாயிலும், அதற்கான நிதித்துறை ஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால், நவ.,10 தீபாவளியை புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்கி இவர்களால் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., உட்பட பல திட்டங்களில் பணியாற்றம் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. நிதித்துறை ஒப்புதல் அதிகபட்சம் ஒவ்வொரு ஐந்து அல்லது குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒருமுறையாவது அளிக்க வேண்டும். 
மாதத்தில் 20ம் தேதிக்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, ஒன்றாம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாட செய்ய முடியும். வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் திட்டப் பணிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்ல தயங்குவர், என்றார்.

கல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.

அண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா உட்பட ஐந்து வங்கிகள் இந்த தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. www.vidyalakshmi.co.in என்ற இந்த புதிய இணையதளம் மூலமாக அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கடன் விவரங்கள் அனைத்தையும் ஒற்றைச் சாளரத்தில் (portal) மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
 இதுகுறித்து தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடக்கிறது.

 இந்தத் தேர்வுக்கென 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தயாராக உள்ளன. இந்த நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.
 விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சட்டசபை தேர்தல் பணி துவக்கம் கல்வி துறைக்கு அவசர கடிதம்

தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும், தேர்தல் பணியாற்ற உள்ள பணியாளர் பட்டியலைஅனுப்ப வேண்டும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார்.
அனைத்து பள்ளிக்கல்வி அலுவலகங்கள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்கான ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. எனவே, தங்கள் கல்வி நிறுவனங்களில், தேர்தல் பணியாற்ற தகுதியுள்ள ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும்அதிகாரிகளின் முழு விவரங்களை, தங்கள் நிறுவன தலைமை அதிகாரிகள் மூலம், மாவட்ட தேர்தல் துறைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பத்தையும், கல்விநிறுவனங்கள் பூர்த்தி செய்து, விரைவில் விவரங்கள் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது,வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு, ஓட்டுச்சாவடி அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதற்கட்டமாக, அதன் விவரங்களை மட்டும், தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளோம் என்றனர்.

அரசு பள்ளிக்கு மட்டும் மாறிய எஸ்.எஸ்.ஏ., திட்டங்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்த்து நடத்தப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, மற்றும் போட்டிகள் தற்போது அரசு பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் திறன் வளர்ப்பை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறை தான் அமலில் இருந்தது. தற்போது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே இப்பயிற்சி, போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 14-ம் தேதி கைகழுவும் தினத்தை முன்னிட்டு, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒன்றிய அளவில் எஸ்.எஸ்.ஏ., சார்பில் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்படவில்லை. நேற்று முன்தினம் தொடக்க, நடுநிலை பள்ளி அளவில் நடந்த ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு, சின்னையா அம்பலம் நடுநிலை பள்ளியில் நடந்தது. இதில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படவில்லை. ஆசிரியர்களை தொடர்ந்து, உதவி பெறும் பள்ளியை சேர்ந்தவர்களும் எஸ்.எஸ்.ஏ.,வால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: தேவகோட்டை ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட உதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகள், சாக்கோட்டை ஒன்றியத்தில் 35 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். அரசு பள்ளியை போன்றே உதவி பெறும் பள்ளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதுதான் இதுவரை நடைமுறையில் இருந்தது. தற்போது உதவி பெறும் பள்ளிகளை புறக்கணிக்கின்றனர். மாணவர்கள் நலனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்றார்.
அதிகாரி ஒருவர் கூறும்போது: அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளிகளுக்கு மட்டும் எஸ்.எஸ்.ஏ., பயிற்சி மற்றும் போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவி பெறும் பள்ளியை பொறுத்தவரை அவர்களுக்கு என்று தனி நிர்வாகம் உள்ளது. அவர்கள் மாணவர் நலனில் அக்கறை கொண்டு போட்டிகளை நடத்த வேண்டும். நிர்வாகிகள் பள்ளிகளின் மீது அக்கறை செலுத்த வேண்டும், என்றார்.

ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது

சென்னை: முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடந்துள்ளது. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பட்டப்படிப்பு முடித்திருந்தால், அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக, பதவி உயர்வு வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் இந்த பதவி உயர்வுக்கு, 372 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வுடன் இடமாறுதல் வழங்குவதில் எந்த முறைகேடும் இருக்கக் கூடாது என, அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில்கணிப்பொறி ஆசிரியர் தேவை

காரைக்குடி:அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும்,என தனியார் பள்ளி மாநில செயலாளர் சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேல்நிலை பள்ளிகளில் 2004-05-ம் ஆண்டு முதல் பாடத்தொகுதிகள் மாற்றியைமக்கப்பட்டன. பாடத்தொகுதி ஒன்றில் கணிதம்,இயற்பியல்,வேதியியல் பாடங்களோடு, கணிப்பொறி அறிவியல் பாடமும்,பாடத்தொகுதி மூன்றில் கணக்கு பதிவியல்,வணிகவியல்,பொருளியல் பாடங்களோடு கணிப்பொறி அறிவியல் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

கணிதம், இயற்பியல்,வேதியியல்,வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பிரிவின் கீழ் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் கணிப்பொறி ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி நிர்வாகத்தால் தொகுப்பூதியத்தால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.வளர்ந்து வரும் கால கட்டங்களில் கணிப்பொறி தேவை இன்றியமையாததாக உள்ளது. தமிழக முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட உதவி பெறும் பள்ளிகளில், 35 ஆயிரம் மாணவர்களுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். கணிப்பொறி அறிவியல் பாடத்தொகுதியை அங்கீகரித்த அரசு, ஆசிரியரை அங்கீகரிக்கவில்லை. எனவே, அவர்களை அரசு உதவி பெறும் பிரிவின் கீழ் வரையறை செய்து, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும், என்றார்

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.
அரசாங்கம் இந்தாண்டு சுகாதரமான வாழ்க்கையை அனைவரும் பெற வேண்டும் என்ற குறிக்கோளை அடைய முயற்சி செய்து வருகிறது. இதற்காக கிரமங்களில் வீடுதோறும் கழிப்பிடம் மற்றும் பள்ளிகள் அனைத்தும் முழுமையான கழிப்பிட வசதியை பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. திட்டத்தை தீட்டும் அரசாங்கம் அதை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க தவறுவதால் திட்டத்தின் பலன் முழுமையாக கிடைப்பதில் இடர்பாடு ஏற்படுகிறது.
பள்ளிகளில் கழிப்பிடம் அமைப்பதில் முனைப்பு காட்டும் அரசாங்கம் அதை
சுகாதரமாக பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே நாட வேண்டியுள்ளது. இது
குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்
முத்துப்பாண்டியன் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்
கூறியுள்ளதாவது
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் சுமார் 1175 அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில்
கிட்டதட்ட 67,000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பல
பள்ளிகள் முழுமையான கழிப்பிட வசதியும், சுத்தமான குடிநீர் வசதியும் இன்றி
செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ்
ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இந்தாண்டு முழுமையாக கழிப்பிடம் வசதியை
மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை அனைத்து
தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கழிப்பிடத்தை தொடர்ந்து
பராமரிக்க எவ்வித திட்டமும் இல்லாததால் பள்ளிகளின் கழிப்பிடங்கள்
சுகாதரமற்ற இடமாக மாறும் சூழல் உள்ளது. கழிப்பிடங்களை சுத்தம் செய்ய
ஊராட்சியின் துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள கல்வித்துறை
உத்தரவிட்டாலும் அதற்கான ஒத்துழைப்பை ஊராட்சி மன்றத் தலைவர்கள்
வழங்குவதில்லை. இதனால் கழிப்பிடங்களை சுத்தம் செய்ய இயலாமல்
தலைமையாசிரியர்கள் அவதியுறுகின்றனர்.
எனவே அரசாங்கம் மாணவர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் கிடைக்கவும், அருகாமை பள்ளிகளை இணைத்து குறைந்தபட்சம் ஒரு துப்புரவு பணியாளரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் விலை உயர்ந்த கணினி உபகரணங்கள் இருப்பதால் அதை பாதுகாக்க இரவு காவலரை சுழற்சி அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.

அஞ்சல் துறை செல்வமகள் திட்டம்: வயது 12-ஆக அதிகரிப்பு

அஞ்சலக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வயது 10-லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகர அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ("சுகன்யா சம்ரித்தி கணக்கு') மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் மொத்தம் 73 லட்சம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரையில் முதலீடான தொகை ரூ.2,328 கோடி ஆகும். இதற்கு முன்பு வரையில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் தொடக்க காலம் என்பதால் அரசு இரண்டு ஆண்டு சலுகை வழங்கி திட்டத்துக்கான பெண் குழந்தைகளின் வயதை 12-ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சலுகை வரும் 1.12.2015-ஆம் தேதி முடிவடைகிறது. அதனால் 3.12.2003 முதல் 2.12.2005 வரை பிறந்த பெண் குழந்தைகள் இத் திட்டத்தில் வரும் 1.12.2015 வரையில் சேரலாம். வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு, 10 வயது வரையில் உள்ள குழந்தைகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலன் அடைய முடியும்.
இதை பள்ளிகளில் 6,7-ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், பள்ளிகளில் ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். செல்வமகள் சேமிப்புக் கணக்கை கிளை அஞ்சலகங்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். இந்தக் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தது ரூ.1000-ம் செலுத்த வேண்டும். அதையடுத்து, ரூ.100 அல்லது அதன் மடங்குகளாகவோ செலுத்தலாம். இதில், குறிப்பிட்ட தவணை முறைகள் இல்லாமல் வசதிக்கேற்ப பணம் செலுத்தும் வசதி உண்டு. எல்லா அஞ்சலகங்களிலும் இதற்கான சிறப்பு சேவை முகாம் நவம்பர் மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் 9.2 கூட்டு வட்டி மிக கணிசமானதாகும் என்றார் மெர்வின் அலெக்சாண்டர்.

தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை!!

பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட கல்வி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தது.
இதில், முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி பேசியதாவது:வரும், அரசு பொதுத்தேர்வில், மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறைந்தால், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது.
தேர்தல் பணியில், யார் யார் ஈடுபட வேண்டும், யார் யாருக்கு விதிவிலக்கு என, தேர்தல்கமிஷன்அறிவித்துள்ளது.
* அதன்படி, கர்ப்பிணி அலுவலர்கள், முதல் மூன்று மாதமாகவோ அல்லது எட்டாவது மாதமாக இருந்தாலோ, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்* குடிநீர், மின்சாரம், மருத்துவம், தீயணைப்பு துறைகளில் உள்ள அலுவலர்களுக்கும், தேர்தல் பணியில் விலக்கு உண்டு
* ஆனால், தேர்தல் காலத்தில், 4, 5, 6, 7 மாத கர்ப்பிணியாக இருந்தால், பணியில் ஈடுபட வேண்டும். பதற்றமான ஓட்டுச் சாவடிகளில், 'மைக்ரோ அப்சர்வர்'களாக, வங்கி உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். கடந்த தேர்தலில், சில இடங்களில், கடைநிலை ஊழியர்களை, வங்கிகள் அனுப்பின. இதனால், சிக்கலான நேரங்களில் சரியான முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது
* இந்நிலை, வரும் தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதற்காக, வங்கி உயர் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இத்தகவலை, தேர்தல்கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி’ : மு.க.ஸ்டாலின்

சங்கராபுரத்தில் பட்டதாரி ரேணுகாதேவி பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். 2006ல் நிரந்தரம் செய்யப்பட்டனர்.அதிமுக ஆட்சி வந்ததும் பணி நீக்கம் செய்து விட்டது. 


இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பல ஆசிரியர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், என்றார்.

ஜெயலலிதாவுக்கு நிரந்தர ஓய்வு

திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரத்தில் நெசவாளர் குடும்பங்களை சந்தித்து, ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது: சிறுதாவூரில் ஓய்வு, கோடநாடு தோட்டத்தில் ஓய்வு என எப்போதும் ஓய்வில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு 2016 தேர்தல் நிரந்தர ஓய்வு அளிக்கும். இதனை மக்களே தீர்மானித்து விட்டனர். விலைவாசி உயர்வு விஷம் போல் ஏறி உள்ளது. இவற்றை எல்லாம் சரிசெய்ய இயலாத ஆட்சியாக அதிமுக உள்ளது. திமுக ஆட்சியில், மாதம் முழுவதும் ரேஷன் பொருட்கள் கிடைத்தது. இந்தஆட்சியில் மாதத்தின் தொடக்கத்திலேயே ரேஷனில் பொருட்கள் இல்லாமல் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ரேஷன் பொருட்களை பதுக்கி கள்ள மார்க்கெட்டியில் விற்று கலெக்சன் பார்க்கிற இந்த அதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்ட, முற்றுப்புள்ளி வைக்க 2016 தேர்தலில் மக்கள் நல்ல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

தேனும், பலாவும் தந்த மலைவாழ் மக்கள்

செம்மரக்கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட மலைமக்களிடம் கலந்துரையாடல் முடிந்து ஸ்டாலின் புறப்பட்டபோது அவருக்கு சுவையான மலை தேன், பலாப்பழத்தை கொடுத்து தங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தங்களுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்தினர். கல்வராயன்மலையில் அதிகம் விளையும் மரவள்ளி கிழங்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 10,000 வழங்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் மலைமக்கள் வேங்கோடு ஊராட்சி தலைவர் கல்யாணிகிருஷ்ணன் தலைமையில் ஆளுக்கொரு மரவள்ளி கிழங்குடன் கூடிய செடியுடன்வரிசையாக நின்று விடை கொடுத்தனர்

TET:Problems for APPOINTED TEACHERS with out TET( AFTER 23/8/2010)

பயத்துடனும், மன உளைச்சலுடனும், கண்ணீருடனும் தினம் தினம் நாங்கள்... 

23/08/2010 ற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் எங்களின் கண்ணீர் சிந்தும் நாட்கள் தீர வழி தேடியே நீண்ட வாழ்க்கை பயணம்.எங்களின் வாழ்க்கை எதிர் வரும் 2016 நவம்பர் 15 ல் முடிவுக்கு வரும் என தெரிந்தும் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றோம். எம் குறைகளை கேட்க கூட ஆள் இல்லை... 
பிறகு எப்படி தீர்வு கிடைக்கும்?


23/08/2010 ற்கு முன்பு மிகுந்த ஆவலுடன் ஆசிரியர் பணிக்காக பயின்று வெற்றிகரமாக பட்டம் பெற்று வாழ்க்கையில் ஓரு புதிய விடியல் கிடைக்கும் என பல நாட்கள் காத்திருந்து 23/08/2010 ற்கு பிறகு ஆசிரியர் தகுதி தேர்வின் வீரியத்தை தமிழக அரசே முறைப்படி அறிவிக்காத சூழலில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்று இன்று பாவப்பட்டவர்களாக பணியாற்றி வருகின்றோம்.அரசு போட்டி தேர்வு அல்ல...அரசு தகுதி தேர்வு என்று எப்போதும் கூறும் தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் நாங்கள் தகுதி இல்லாமல் பணியில் உள்ளோம் என 15/11/2016க்கு பிறகு எப்படி நிருபிக்கப் போகிறது?

அரசு வரையறைப்படி பணி நியமனம் பெற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிந்து வரும் நாங்கள் கடந்த காலங்களில் எங்கள் பாடங்களில் முழு தேர்ச்சி கொடுத்து இருந்தாலும் இன்றளவும் நாங்கள் ஆசிரியர்களாக யாராலும் மதிக்கப்படுவதில்லை.தகுதியற்ற ஆசிரியர்கள் மூலமாக கடந்த ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களும் தகுதி இழக்க வாய்ப்பு உண்டோ? கடந்த இரண்டரை வருடங்கள் TET பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. கல்வி துறை ஆசிரியர்கள் தேர்வு முறையில் ஒரு சில குழப்பங்கள்இருப்பது மறுப்பதற்கும் இல்லை. 

திடீரென ஒரு நாள் எங்களை பணியில் இருந்து நீக்கப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் கெடுவது மட்டுமல்ல... வாழ்க்கையே கெட்டு விடும் என்பது தானே உண்மை.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள சுமார் 8000 ஆசிரியர் குடும்பங்கள் தமிழக அரசின் ஒரு கொள்கை முடிவுக்கு இன்றளவும் காத்துக்கொண்டு உள்ளனர். 

23/08/2010க்குபிறகு பணியில் சேர்ந்த எங்களில் பலர் இன்னும் ஊதியம் பெறாத நிலையிலும், வளரூதியம், ஊக்க ஊதியம், தகுதி காண் பருவம் நிறைவு பெறாத நிலை, அரசின் சலுகைகள் முறையே பெற இயலாத சூழல்...இதை எல்லாம் தாண்டி நாங்கள் தகுதி பெறாத ஆசிரியர்கள் என மற்றவர்கள் சொல்ல அதை கேட்கும் போது இதயத்தின் ஆழத்தில் ஏற்படும் வலியை எடுத்துக் கூற வார்த்தைகள் இல்லை.மனதளவில் எங்கள் எதிர்பார்ப்புக்களையும், பிரட்சணைகளையும் முன் நிறுத்தி மிகப்பெரிய அளவில் போராடும் திறன் எங்களிடம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அரசியல் அறிஞர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் எமது கண்ணீர்படிந்த வேண்டுகோள் யாதெனில்...23/08/2010 ற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் தகுதி தேர்வு இல்லாது பணியில் சேர்ந்த எங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு அளித்து கடந்த கால கல்வி பயணத்தை ஆராய்ந்து, தேவைப்படின் பயிற்சிகள் பல கொடுத்து நிரந்தர பணியாக மாற்றி அரசாணை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு...
23/08/2010 ற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.
- Article By Mr. Chandru.

தேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் சேகரிப்பு.

சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள, ஆசிரியர்களின் விவரங்கள்அடங்கிய பட்டியலை சேகரித்து அனுப்ப மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தல், 2016ல் நடைபெறவுள்ளது. 


அதற்கான முன்னேற்பாடுகளில், தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்கான பிரத்யேக விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பெயர், பள்ளி மற்றும் இல்ல முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட, 17 பிரிவுகளின் கீழ், விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுதிங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டது. 


இதில் மாவட்டத்துக்குள் 1,310 பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டம் 555 பேரும் இடமாறுதல் பெற்றனர்.இதையடுத்து, இப்போது 900-க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 450 இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.இதற்கான ஆன்-லைன் பதவி உயர்வு கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிள்ளைகளிடம் சேமிப்புப் பழக்கம்: பெற்றோர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட உலக சிக்கன நாள் செய்தியில் கூறியிருப்பதாவது:


மக்களிடையே சிக்கன உணர்வை ஏற்படுத்தி, சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.'இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு' என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இதன் மூலம் சிறுகச் சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும்.மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்கள் குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால், அந்த தொகைக்கு உத்தரவாதமும் எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.'சிறுகக் கட்டி பெருக வாழ்' என்பதை உணர்ந்து தமிழக மக்கள் அனைவரும் தங்கள்வாழ்வு நலம்பெற அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

TNPSC :GROUP I HALL - TICKET PUBLISHED

BT TO PG PHYSICS ADDITIONAL PROMOTION PANEL RELEASED BY DSE TO FILL 41 P0STS RELINQUISHED ON 16.10.2015