யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/10/15

TNPSC GK IMPORTANT DAYS---TNPSC,

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா?

ஒரு அறிவாளி தன்னைச் சூழ

கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்

காலை உணவும் சில சுவையான தகவல்களும்

காவிரி ஆறு கட்டுரை---பொதுஅறிவுகட்டுரை,

சரிவிகித உணவின் அவசியம் உணருங்கள்

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்

சொற்றொடர் வகைகள்

திருமணம் பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டுமா

நமது மொபைல் போனில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான தொலைப்பேசி எண்கள்

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்---தகவல் துளிகள்,

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி--தகவல் துளிகள்,

வியக்க வைக்கும் சோழர்களின் தேர்தலும்---தகவல் துளிகள்,

இதோ ஒரு கணித வித்தை !----தகவல் துளிகள்


இதை எப்படி செய்ய முடிகிறது என்பதை உங்களால் விளக்க இயலுமா ?
இதை உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் செய்து மகிழலாம்.
உங்கள் நண்பர்கள் யாரேனும் ஒருவரை ஒரு துண்டு காகிதத்தை எடுத்து மூன்று இலக்க எண்ணை எழுதச்சொல்லுங்கள். அந்த எண் எவ்வகையிலும் இருக்கலாம். அதாவது பூஜ்யங்கள் போன்றவற்றுடன் இருக்கலாம். அந்த எண்ணை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அதை அப்படியே அடுத்த நபருக்கு கொடுக்க சொல்லி அவரை அந்த மூன்று இலக்கத்து அருகில் அதே மூன்று இலக்க எண்களை எழுதச்சொல்லவும். அது இப்போது ஆறு இலக்க எண்ணாக இருக்கும்.
அதாவது உதரணத்திற்கு முதல் நபர் எழுதியது 308 என்றால் 308308
அந்த ஆறு இலக்க எண்ணை ஏழால் வகுக்க சொல்லுங்கள். ஏழால் வகுபடும் எண்கள் மிகக்குறைவு இந்த எண் ஏழால் மீதமின்றி வகுபடுமா என்ற சந்தேகம் வேண்டாம்! அந்த எண்கள் கண்டிப்பாக ஏழால் மீதமின்றி வகுபடும்.
வகுத்ததால் வந்த ஈவை மட்டும் வேறொரு காகிதத்தில் எழுதி வேறு யாருக்கும் தெரியாமல் மற்றொரு நபருக்கு கொடுக்கச்சொல்லவும்.
அந்த நபரை கொடுத்த அந்த எண்களை பதினொன்றால் வகுக்கச்சொல்லுங்கள். (மீதியில்லாமல் வரும்!)
வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்து மற்றொரு நபரிடம் கொடுக்கச்சொல்லுங்கள் ! அவரை அவ்வெண்ணகளை பதிமூன்றால் வகுக்க்ச்சொல்லுங்கள் !(கவலைப்படாதீர்கள் இதுவும் மீதிமில்லாமல் வகுபடும் !)
வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்ததை நீங்கள் வாங்கி முதன்முதலில் மூன்று இலக்கம் எழுதினாரே அவரிடம் கொடுங்கள் !
அவர் முதலில் எந்த மூன்று இலக்க எண்களை எழுதினாரோ அந்த எண்கள் அவர் கைகளில் இருக்கும் !?
இது நிகழ்ந்தது எப்படி ?
மாதிரி:

மூன்று இலக்க எண்: 234
ஆறு இலக்கமாக: 234234
அதை 7 ஆல் வகுக்க: 234234 /7 =
அதன் ஈவு: 33462
அதை 11 ஆல் வகுக்க: 33462 / 11
வரும் ஈவு : 3042
அதை 13 ஆல் வகுக்க 3042 / 13
வரும் ஈவு: 234 ! ஆரம்பத்தில் எழுதிய மூன்றிலக்க எண் !

அண்ணா நூலக பணிகளை முடிக்க தவறினால் பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆஜராக வேண்டி வரும் ஐகோர்ட்டு எச்சரிக்கை-Daily Thanthi

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து பணிகளையும் 2 மாதங்களுக்குள் செய்து முடிக்கவில்லை என்றால், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது. 
அண்ணா நூலகம் 
சென்னை கோட்டூர்புரத்தில் 2010-ம் ஆண்டு ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்’ கட்டப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி, ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வக்கீல்கள் ஆஷா, சுதந்தரம் ஆகியோரை சட்ட கமிஷனர்களாக நியமித்து, நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த சட்ட கமிஷனர்கள் நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை தமிழக அரசு நிவர்த்தி செய்யவேண்டும் என்றும் நூலக வளாகத்தில் உள்ள கருத்தரங்கங்களை வாடகைக்கு விட்டு வருமானத்தை பெருக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. 
திடீர் ஆய்வு 
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்கீல் கமிஷனர்கள் ஆஷா, சுந்தரம் ஆகியோர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், ‘கடந்த வாரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திடீரென சென்று நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னர், நூலகத்தில் உள்ள அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. ஆனால் நூலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கு மூடிய நிலையிலேயே உள்ளது. அதை பொது பயன்பாட்டிற்கு விடவில்லை’ என்று கூறியிருந்தனர். 
அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ். மூர்த்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு குறைபாடு 
வக்கீல் கமிஷனர்கள் அறிக்கையைப் பார்க்கும்போது, நூலகத்தில் சில பணிகள் நடந்துள்ளன. சில பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நூலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இயங்காததாலும், பாதுகாப்பு பணி தனியாரிடம் ஒப்படைத்துள்ளதாலும், பல புத்தகங்கள் காணாமல் போய் விட்டது. எங்களைப் பொறுத்தவரை, நூலகத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதேநேரம், பாதுகாப்புப் பணிக்காக ஆண்டுக்கு ரூ.2.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகை எதற்காக செலவிடப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த விவரங்களை அரசு தெரிவிக்கவேண்டும். மேலும், நூலகப் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது.
கால அவகாசம் 
புதிதாக புத்தகங்கள் வாங்குவது, மின்னணு நூலகம் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தற்போது, நூலகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும். கருத்தரங்க அறை, உணவகம், தியேட்டர் ஆகியவற்றில் முக்கியப் பணி நடந்துள்ளது. ஆனால், அவற்றை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. 
கழிவறை, குடிநீர், குளிர்சாதன வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகளை முடிக்க டிசம்பர் மாதம் வரை அரசு கால அவகாசம் கேட்கிறது. 
ஆஜராக வேண்டும் 
மேலும், 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரூ.31.66 கோடி வரியை (செஸ்) சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது. இத்தொகையில், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். 
நூலகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் 2 மாதத்துக்குள் அரசு முடிக்க வேண்டும். அப்படி முடிக்காவிட்டால், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடவேண்டியது வரும். இந்த வழக்கு விசாரணை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். 
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆப்பிளைச் சாப்பிடச் சொன்னது யார்?

இந்த மண்ணில் ஆப்பிளுக்கு இணையான, அதை விடவும் கூடுதலான சத்துகள் கொண்ட பழங்களே இல்லையா என்ன? ஆய்வுகள் அப்படிச் சொல்லவில்லை. உதாரணத்துக்கு, 1 கப் ஆப்பிள் (138 கிராம்) பழத்தில் 81 கலோரி, 21 கிராம் மாவுச்சத்து, 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஆண்டிஆக்சிடெண்ட்ஸ் உள்ளன. அதே ஒரு வாழைப் பழத்தில் (சுமார் 118 கிராம்) 108 கலோரி, 27 கிராம் மாவுச்சத்து, 1.2 கிராம் புரதச்சத்து, 2.8 கிராம் நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துகளும் உள்ளன.

ஒரு கொய்யா (100 கிராம்) பழத்தில் 68 கலோரி, 14.32 கிராம் மாவுச்சத்து, 8.92 கிராம் சர்க்கரை, 5.40 கிராம் நார்ச்சத்து, 2.55 கிராம் புரதச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் பி1; பி2; பி3; பி5; பி6; பி9; சி; கே, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொடாசியம் உள்ளன.
ஒரு சிறிய பப்பாளிப் பழத்தில் (சுமார் 100 கிராம்) 39 கிலோ கலோரி, 9.81 கிராம் மாவுச்சத்து, 0.61 கிராம் புரதச்சத்து, 0.14 கொழுப்புச்சத்து, 1.80 கிராம் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், எலெக்ட்ரோ லைட்கள், பைட்டோ சத்துகள் உள்ளன.
அதிலும் நெல்லிக்காய் அபாரமான சத்துகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வெறும் 100 கிராம் நெல்லிக்காயில் நீர்ச் சத்து மட்டும் 81.8%, 96 கலோரி, 0.5 மில்லி கிராம் கனிமம், 3.4% நார்ச்சத்து, 13.7 கிராம் மாவுச்சத்து, 1.2 மில்லி கிராம் இரும்புச் சத்து, 50% சுண்ணாம்புச்சத்து (கால்சியம்), இன்னும் ஏராளமான வைட்டமின்களும் உள்ளன.
இப்படி இந்திய மண்ணில் எத்தனையோ பழ வகைகள் இருக்க வந்தேறியான ஆப்பிளுக்கு ஏன் இவ்வளவு மவுசு என்பதை உற்றுக் கவனித்தால், உணவு அரசியல் புரியும். எப்பாடுபட்டாவது 60% ஆப்பிள் பழத்தை இறக்குமதி செய்வது யாருக்கு லாபம்? இத்தனை மடங்கு ஆப்பிள் சிலாகித்துப் பேசப்படுவது ஒரு விதத்தில் நுகர்வுக் கலாச்சாரத்தின் நீட்சியே. ஆப்பிள், ஸ்டிராபெரி எனப் பெருமையாக உச்சரிக்கும் நம் உதடுகள் வாழைப்பழம், சீதாப்பழம், கொய்யாப்பழம் போன்ற உள்ளூர் பழ வகைகளைச் சொல்லும்போது ஸ்ருதி குறைவது காலனிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து இன்னும் நாம் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது.
இன்று உலக அளவில் காய், கனிகள் விளைச்சலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது இந்தியாதான். அதிலும் மாம்பழம், வாழைப்பழம், தேங்காய், முந்திரி, பப்பாளி, மாதுளை, திராட்சை என்று பல காய்/ கனிகள் விளைச்சலில் முதலிடம் பிடித்திருப்பது நாம்தான். இவற்றில் பல நம்மால் ஆப்பிளைக் காட்டிலும் குறைந்த விலைக்கு வாங்கக்கூடியவை. ஆனால், வாங்க முடியாத ஆப்பிளைப் பார்த்துக்கொண்டே 16 கோடிக் குழந்தைகளின் எதிர்காலத் தோடு விளையாடிக்கொண்டிருக்கிறோம் நாம்!
ம.சுசித்ரா, தொடர்புக்கு:

மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறைக்கு என அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. அதனால் பணம் எதுவும் செலவளிக்காமல் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள், சைக்கிள் உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் நிறையபேர் 100-க்கு 100 மதிப்பெண் பெறுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த மாணவர்கள் புரிந்து படித்திருக்கவேண்டும். பாடப்புத்தகங்களின் பின்னால் கொடுக்கப்படும் கேள்விகளை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு சிலமாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள்.எனவே அனைத்துமாணவர்களும் பாடத்தை புரிந்துபடிக்கவேண்டும் என்பது அரசு தேர்வுத்துறையின் முடிவு. மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படித்து தேர்வுஎழுதும் முறை அரையாண்டு தேர்விலேயே முதல்முதலாக அறிமுகப்படுத்தப்படுகிறது. 

அரையாண்டு தேர்வுக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடக்கும். அரையாண்டு தேர்வு தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொருந்தும்.அரசு தேர்வுத்துறை அரையாண்டுக்கு வினாத்தாள்களை சி.டி.வடிவில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும். அவர் அதை காப்பி எடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பிரிண்ட் எடுத்துக்கொடுப்பார்.ஆனால் சில தனியார் பள்ளிகள் அரசு தேர்வுத்துறை நடத்தும் பொது அரையாண்டு தேர்வை நடத்தாமல் அவர்களே தனியாக தேர்வை நடத்துகிறார்கள். அவ்வாறு நடத்தும் பள்ளிகள் எந்த எந்த பள்ளிகள் என்று கணக்கு எடுத்து அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பள்ளிகளும் அரசு தேர்வுத்துறை நடத்தும் அரையாண்டு தேர்வை நடத்துங்கள். அதுவே மாணவ-மாணவிகளுக்கு நல்லது.இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி -கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்

தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 


இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.அதேபோல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு எண்: 175ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

கடந்த ஜூனிற்கு முன், ஒவ்வொரு ஐந்தாண்டு அல்லது ஆண்டு தோறும் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், ஜூனிற்கு பின் ஒவ்வொரு மாதமும் நிதித்துறைசார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் தான், சம்பளம் வழங்கப்படுகிறது.இதனால் ஆறு மாதங்களாக தாமதமாக சம்பளம் பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் முடியும் தருவாயிலும், அதற்கான நிதித்துறைஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால், நவ.,10 தீபாவளியை புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்கி இவர்களால் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., உட்பட பல திட்டங்களில் பணியாற்றம் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. 

நிதித்துறை ஒப்புதல் அதிகபட்சம் ஒவ்வொரு ஐந்து அல்லது குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒருமுறையாவது அளிக்க வேண்டும்.மாதத்தில் 20ம் தேதிக்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, ஒன்றாம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாட செய்ய முடியும். வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் திட்டப் பணிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்ல தயங்குவர், என்றார்.