சென்னை புறநகர் மின்சார ரயில்களுக்கான சீசன் பயணச் சீட்டு, நடைமேடை அனுமதிச் சீட்டு ஆகியவற்றை செல்லிடப் பேசி மூலம் பெறும் வசதியை தெற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய செல்லிடப்பேசியில் (ஸ்மார்ட் போன்) பயணச் சீட்டு பெறும் வசதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் பொதுமக்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.முன்பதிவு அல்லாத ரயில் டிக்கெட்டுகளை செல்லிடப் பேசி மூலம் பெறும் வசதி தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது செல்லிடப் பேசி புறநகர் மின்சார ரயில்களுக்கான சீசன் பயணச் சீட்டு, நடைமேடை அனுமதி சீட்டு பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களில் 52 சதவீதம் பேர் சீசன்பயணச் சீட்டு பயன்படுத்துபவர்கள் ஆவர். அவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதி வியாழக்கிழமை (நவ. 5)முதல் நடைமுறைக்கு வந்தது. ஆன்ட்ராய்டு சாப்ட்வேர் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.செல்லிடப்பேசியில் பயணச் சீட்டை பதிவிறக்கம் செய்து பரிசோதகரிடம்காட்டினால் போதுமானது.காகிதம் இல்லாத இந்த நவீன வசதி மூலம் சீசன் பயணச் சீட்டு, நடைமேடை அனுமதி சீட்டு பெற முடிவதால் இனி கவுன்ட்டர்களில் வரிசையில் காத்து நிற்க தேவையில்லை. நேரமும் மீதமாகும். www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் சீசன் பயணச் சீட்டு எவ்வாறு எடுக்க முடியும் என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.நடைமேடை அனுமதிச் சீட்டு: தற்போது சென்னையில் உள்ள 5 முக்கிய ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் பொருந்தும் வகையில் நடைமேடை அனுமதிச் சீட்டு பெறும் வசதி வழங்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், பெரம்பூர் ஆகியரயில் நிலையங்களில் ஒட்டியுள்ள 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவர்கள் மட்டும் செல்லிடப் பேசி மூலம் நடைமேடை அனுமதி சீட்டு பெற முடியும்.இந்த 2 புதிய வசதிகள் மூலம் கவுன்ட்டர்களில் நிற்கும் நேரம் விரயமாவது தவிர்க்கப்படும். மேலும் பயணிகள் எளிதாக பயணச் சீட்டு பெற முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.