யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/15

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிகமான மழை வரும் பிப்ரவரி வரை தொடரும்: ஐ.நா. தகவல்

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் மேலும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 - 2016 ஆண்டுக்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் , மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் வரை தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவில் சராசரிக்கும் அதிகமான மழையும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதிகளில் அதிக மழை வெள்ளப்பெருக்கு ஏற்படும் வேளையில் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசிபிக் தீவுகளில் கடுமையான வறட்சி ஏற்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும்.

HEREAFTER ALLTHE DEPARTMENTAL EXAMS WILL BE CONDUCTED ON LINE ONLY THROUGH PRIVATE AGENCYமூத்த தோழர்கள் கவனத்திற்கு !"இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும். அதுவும் அதற்கான தனியார் AGENCY நியமனம்செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்படும் என்று இலாக்கா அதிகாரபூர்வமாக அறிவிப்பு. 


"இனி எப்போதுமே பேனா பென்சில் தேவை இல்லீங்கோ !மூத்த தோழர்கள் கணினியில் எல்லாம் செய்ய பழகுங்கோ !WEB SITE தெரியாது .. EMAIL தெரியாது என்று சொல்லும் மூத்த தோழர்களிடம் இதைப் பார்க்கும் இளைய தோழர்கள் எடுத்துச் சொல்லுங்கோ !ஊதியக் குழு பரிந்துரைப் படி EB CROSSING தேர்வு வச்சா கூட இனி கணினியில் தானுங்கோ !மோடியின் DIGITAL INDIA திட்டம் வந்துவிட்டதுங்கோ!

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென்கடலோரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.


கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. வழக்கமாக டிசம்பர் மாத மத்தியில், காற்று வீசும் திசையின் காரணமாக மழையின் தன்மை மாறுபடும். அந்த வகையில் தற்போது வடதமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்து, தென் தமிழகத்தில் தற்போது பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் குமரிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து மறைந்த நிலையில், தற்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடதமிழகத்தில் இரு தினங்களும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.நேற்று , தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, ஸ்ரீ வைகுண்டத்தில் 9, திருச்செந்தூரில் 7, நாகை, நான்குநேரியில் -5, ராதாபுரத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

TNTET -2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற அனைத்துஆசிரியர்களின் கவனத்திற்கு...

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் 
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....


அடுத்த இரண்டாம் கட்ட உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதிநடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது…

இது போராட்டம் அல்ல உண்ணாவிரத கூட்டம என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவித்துகொள்கிறோம்… .
நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை அணுக போகிறோம்… .
அன்று தீர்மானங்கள் நிறைவற்றப்படும்… இதுதான் மரபு….மரபை மீறி செய்யும் எந்த ஒரு முயற்சியும் பலன் தராது என்பதை அனைவரும்அறிவோம்…
அனைவரின் வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக ,தவறாது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினாலும் ஞாயிற்று கிழமை பெறப்பட்டுள்ளது.. .
எனவே அனைவரும் தவறாது தன் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்…

நாம் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை நம் வருகையின் மூலமேஅரசுக்கு உணர்த்த முடியும்… 
நேர்மறையான செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்…
மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...
அதை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வோம்…
நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்…
தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...

இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704
திருமதி. லாவண்யா : 90432 66059
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

11/12/15

மாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடன் வழங்குகிறது கனரா வங்கி!

இது தொடர்பாக கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் தேவையான இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். வசதி கடந்த 4-ம் தேதி முதல் செயல்படுகிறது.எங்கள் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக 40 பி.ஓ.எஸ். மொபைல் எந்திரங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் கையேந்தி சாதனங்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது.


மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடனாக வழங்கப்படும்.வீடு, கார் பழுது செய்ய அதன் மதிப்பில் 10 சதவீதம் தொகை கடனாக எந்த பரிசீலனை கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

நவம்பர், டிசம்பர் மாத தவணை தாமதமாக கட்டுபவர்களுக்கு அபராத வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.சேதமடைந்த, தொலைந்த ஏ.டி.எம். அட்டைதாரர்களுக்கு புதியகார்டுகள் இலவசமாக வழங்கப்படும். நுகர்வு கடன்கள் ரூ.10 ஆயிரம் வரை எந்த பிணையங்களும் இல்லாமல் வழங்கப்படும். அப்பல்லோ முனீச் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இயங்கி வரும் சுகாதார காப்பீட்டுத் தீர்வுகளை துரிதமாக பெற உதவப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இலவச வாகன பழுது பார்ப்பு முகாம்கள்: இடங்களை அறிவித்தது தமிழக அரசு

தமிழக அரசு அறிவித்துள்ள வாகன பழுது பார்ப்பு இலவச முகாம்கள் நடைபெறும் இடங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த முகாம் நாளை முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தப் பட்டியலில் மோட்டார் வாகன நிறுவனங்களின் முகவர்களாக உள்ளவர்களின் கடையின் பெயர், முகவரி, எந்த நகரத்தில் உள்ளது, முகவரின் செல்லிடப்பேசி, லேண்ட்லைன் எண் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனங்களை பழுது பார்ப்புக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால், பட்டியலில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட முகவரிடம் பேசாலம். பழுது பார்க்கும் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கிறதா, எத்தனை மணிக்கு வரலாம் போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதனால், வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.இந்தப் பட்டியல் தமிழக அரசின் இணையதளத்தில் (http://www.tn.gov.in/sta/service_centres_2wheeler.pdf) வெளியாகியுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

புதுச்சேரி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பர் 14-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தைகள் தின விழா தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா முன்னிலை வகித்தார்.குழந்தைகள் தினப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:


பள்ளிகளுக்கு பிள்ளைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தை கடந்த 2001-ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது. இதனால் இடைநிற்றல் குறைந்துள்ளது.பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்யும் போது, ஆசிரியர்கள் கண்டித்தால், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக நன்கொடை தந்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அரசு இலவசமாக கல்வி தருகிறது.குழந்தைகள் எப்படி படிக்கின்றனர் என ஆசிரியர்களை அணுகி பெற்றோர் கேட்க வேண்டும்.அண்மையில் துவக்க கல்வி ஆசிரியர் பணியிடங்களில் 425 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களே தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இன்றைய மாணவர்கள் அறிவுத்திறனில் படுசுட்டியாக உள்ளனர். ஆனால் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை படித்தால், சிறந்த மனிதர்களாக உருவாகலாம்.கல்வியோடு நுால்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் சிசுக் கொலை புதுச்சேரியில் இல்லை. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000-க்கு 42 என்ற விகிதத்தில்உள்ளது. புதுச்சேரியில் 1000-க்கு 17 மட்டுமே உள்ளது.அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக சத்தான உணவுகள் தரப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் கிளை மருத்துவக்கல்லுாரி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக 78 ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவ, மாணவியருக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவர்கள் அண்மையில் முடிந்த மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு அதிகம் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் 2014--15-ம் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர் களுக்கு முறையே 50 ஆயிரம்,30 ஆயிரம் , 20 ஆயிரம் ரூபாய் என 77 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.மாநில சிறந்த படைப்பாளிக் குழந்தைகள் விருதும் 16 பேருக்கு தரப்பட்டது. குழந்தைகள் தின போட்டியில் வென்ற 153 பேருக்கும் பரிசளிக்கப்பட்டது.அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் கிருஷ்ணராஜ், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இணை இயக்குநர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

டிச.,15ல் திருவள்ளூவர் பல்கலை., தேர்வு

.மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருவள்ளூவர் பல்கலை., தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி துவங்கி ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறும் எனபல்கலை., பதிவாளர் (பொறுப்பு) அமல்தாஸ் தெரிவித்துள்ளார்.தேர்வு அட்டவணையை பல்கலை., இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. 

அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை.இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளுக்கு மறு தேதி அறிவிப்பு

தொடர் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல்கல்லூரி பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மழை, வெள்ள பாதிப்பால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக, இப்போது சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. பருவத் தேர்வின் முந்தைய தேதிகள், மாற்றியமைக்கப்பட்ட புதிய தேதிகளின் விவரங்கள் அடங்கிய அட்டவணை:
CLICK HERE

சென்னையில் பள்ளிகளை திறப்பது எப்போது?- அரசிடம் நீடிக்கிறது குழப்பம்

சீரமைப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்வதால் சென்னையில் வரும் 13-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடியிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். ஆனால், 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தாவது:


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் பள்ளிகளில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மறு குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர், பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களின் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதிபடுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு நாட்களில் அப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.அதுமட்டுமல்லாது, மழை வெள்ளத்தில் பள்ளிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்காக டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.அந்த முகாம்களில் சான்றிதழ்களை தொலைத்தவர்கள் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.சுத்தப்படுத்தும் பணி துவங்காததாலும், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாலும் 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.

பள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்

MADRAS UNIVERSITY - வெள்ளத்தால் சான்றிதழ் இழந்தவர்கள் புதிய சான்றிதழ்கள் பெற விண்ணப்ப படிவம்

10/12/15

மருத்துவ நுழைவுத்தேர்வுசி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மருத்துவ நுழைவுத்தேர்வுசி.பி.எஸ்.இ., அறிவிப்பு
எய்ம்ஸ்' உட்பட, மத்திய மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு, அடுத்த ஆண்டு, மே 1ம் தேதி நடக்கும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

'ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும், மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கானபொது நுழைவுத்தேர்வு, வரும் 2016, மே 1ம் தேதி நடக்கும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மூன்றாம் வாரத்தில் வெளியாகும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி திருத்தியமைப்பு: இயக்குநர் உத்தரவு

நடப்பு கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நடைமுறையிலுள்ள 10ம் வகுப்பு அறிவியல் பாட நூலின் 2015ம் கல்வியாண்டிற்கான திருத்திய பதிப்பில் பாடநூல் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆலோசனையின்படி பாடநூல் தயாரிப்பு குழு அறிவியல் செய்முறை பயிற்சிகளை திருத்தியமைத்தது.

திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிக்கான பட்டியல் நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ் வழி அறிவியல் பாடநூல் செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 326, 345லும், ஆங்கில வழிக்கான செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 311, 332லும் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிகளின்படி கற்பிக்கவும், இதனை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண நிதிக்காக கணக்கெடுப்பு தொடக்கம்: குடும்ப அட்டை-வங்கி கணக்கு புத்தகம் இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்

வெள்ள நிவாரண நிதிவழங்குவதற்கான கணக்கெடுப்பு தொடங்கியது. குடும்ப அட்டை-வங்கி சேமிப்புகணக்கு புத்தகம்இல்லாவிட்டாலும்,
இதுகுறித்த தகவலை கணக்கெடுக்கும் அதிகாரியிடம்தெரிவித்தால் போதும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
மழை-வெள்ளம் பாதிக்கப்பட்டுகுடிசை வீடுகளைஇழந்தோருக்கு ரூ.10 ஆயிரமும், நிலையான வீடுகளில்வசித்து மழை-வெள்ளத்தால் பாதித்தோருக்குரூ.5 ஆயிரம்அளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு 10 கிலோ அரிசி, விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்படும் என்றும்முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லிசெவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்கள்:
வெள்ள நிவாரண கணக்கெடுப்புகளப் பணியில்21 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சென்னைமாவட்டத்தின் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். பணிகளை மேற்பார்வையிடஒரு சார்ஆட்சியர், 21 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 21 துணைஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடும்ப அட்டையை இழந்தோருக்கு...: வீடு வீடாகச்சென்று கணக்கெடுப்புப்பணி மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் போது பொதுமக்கள் தங்களதுகுடும்ப அட்டை, வங்கி கணக்குபுத்தகம் ஆகியவற்றைகாண்பிக்க வேண்டும். இவை சேதம்அடைந்திருந்தாலோ அல்லது அடித்து செல்லப்பட்டிருந்தாலோ தகவலை மட்டும் கணக்கெடுக்கும் அலுவலர்களிடம்தெரிவித்தால் போதும்.

புதிதாக கணக்கு தொடங்கப்படும்: பாதிக்கப்பட்டோருக்கு வங்கி சேமிப்புகணக்கு இல்லாவிட்டால், தனியாக சேமிப்புக்கணக்கு தொடங்கப்படும். வீடுகள் பூட்டப்பட்டுஇருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினைமறுகணக்கீடு என குறிப்பார். பிறகு, மீண்டும்கணக்கீடு செய்யப்படும். சென்னை மாவட்டத்திலுள்ளஅனைத்து பகுதிகளிலும்100 சதவீதம் முழுமையான கணக்கீடு பணி மேற்கொள்ளப்படும். எனவே, வெள்ளநிவாரண கணக்கெடுப்புப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்றார்.

பள்ளிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றநடவடிக்கை எடுக்கவேண்டும் எனபள்ளிக் கல்விஇயக்ககம் உத்தரவிட்டுள்ளதுஇதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குபள்ளிக்
கல்விஇயக்ககம் செவ்வாய்க்கிழமைவெளியிட்ட சுற்றறிக்கை:-
மழை, வெள்ளத்தால் அதிகபாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் திறக்கப்படும்நிலையில், வெள்ளநீர் சூழ்ந்துள்ளபள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுடன்இணைந்து வெள்ளநீரை வெளியேற்றதேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும்.
அதோடு, பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளைச்சுற்றி பிளிச்சிங்பவுடரைத் தெளிக்கவேண்டும். பள்ளிகளில்உள்ள பொத்தான்கள்சரியாக உள்ளனவா, மழைநீர் படாமல்உள்ளனவா என்பதைச்சரிபார்க்க வேண்டும்.
மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவாஎன்றும், மின்இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்கவேண்டும். வெள்ளநிவாரண முகாம்களாகசெயல்படும் பள்ளிகளில் முறையாகக் குப்பைத் தொட்டிகளைவைத்து குப்பைகள்அகற்றப்பட வேண்டும்.
சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதால், மாணவர்களை அதனருகில்செல்ல அனுமதிக்கக்கூடாது உள்ளிட்டஅறிவுரைகளை தலைமையாசிரியர்களுக்கு வழங்கவேண்டும் எனஅந்தச் சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு பல்கலைக்கழகஆசிரியர் சங்கம்தங்களது ஒருநாள் ஊதியத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக
அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலர் என்.பசுபதி செவ்வாய்க்கிழமைவெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அண்மையில் பெய்தமழை காரணமாகதலைநகர் சென்னைஉள்ளிட்ட சிலகடலோர மாவட்டங்களில்ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பேரிடரால்அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநில அரசுடன்இணைந்து அவர்களுக்குதுணையாகப் பணியாற்றஎங்களது சங்கம்முடிவு செய்துள்ளது. மேலும், அரசுக்குஉதவும் வகையில்சங்க உறுப்பினர்கள்தங்களது ஒருநாள் ஊதியத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அதன்படி, சென்னைப்பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், பாரதிதாசன், திருவள்ளுவர்பல்கலைக்கழகங்களில் இணைவு பெற்றுள்ள, அரசு உதவிபெறும் கல்லூரிகளில்பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் சுமார்ரூ. 1 கோடியைநிவாரண நிதியாகவழங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தொடக்கக்கல்வி - அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெறும் -இயக்குனர் செயல்முறைகள்



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகாக, தனி குழு - இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு

பள்ளி வளாகங்கள் மற்றும்வகுப்புகளில், வெள்ளம் புகுந்ததால், 'பெஞ்ச், டெஸ்க்' போன்றவை நாசமாகியுள்ளன. மேலும், மாணவர்களின்பிறப்பு
மற்றும்மாற்று சான்றிதழ்கட்டுகளும் நீரில் மூழ்கி, பாழாகியுள்ளன. வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்காக, தனிகுழுக்களை அமைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இணை இயக்குனர்கள்நாகராஜ முருகன், உமா, சுகன்யா, நரேஷ், பழனிச்சாமிஉள்ளிட்டோர், நேற்று பள்ளிகளை ஆய்வு செய்தனர்.அவர்கள் கண்டறிந்ததாவது:

● பள்ளிகளின் மேஜை, நாற்காலி, பெஞ்ச், டெஸ்க்ஊறிப்போய், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

● மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஆசிரியர்களின் வேலை மற்றும் ஊதியம் தொடர்பானஆவணங்களும் சேதம் அடைந்துள்ளன

● வகுப்பறைகளில் நீர் புகுந்ததுமட்டுமின்றி, பாம்பு, பூனை, தேள், ஆமை, எலி, தவளை, பூச்சிகளும் புகுந்துள்ளன. அவற்றின் எச்சங்களும், வகுப்பறைகளில்நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை சுத்தம்செய்யும் பணிகள்நடக்கின்றன.

அதிக பாதிப்பு
● சென்னையில், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான் பேட்டை, கிண்டி, சூளைமேடு, சி.எம்.டி.ஏ., காலனி, சாலிகிராமம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள்
● காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், இரும்புலியூர், பல்லாவரம் உள்ளிட்டபகுதிகள்

● திருவள்ளூர் மாவட்டத்தில், அயனம்பாக்கம், மணலிபுதுநகர் உள்ளிட்ட பகுதி பள்ளிகளில், 100 சதவீதஇழப்புகள் ஏற்பட்டுள்ளன.