யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/1/16

வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம் : மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்

சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.
இதன்படி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ஊனமுற்றோருக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில் எத்தனை இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக சொல்லி போட்டித் தேர்வை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருகின்றனர்.
தையல் ஆசிரியை பிரியதர்ஷினி கூறுகையில், “2012 ஏப்ரலுக்கு பின் 4 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் செய்யவில்லை. தற்போது சிறப்பு ஆசிரியர் பணிக்காக சுமார் 90ஆயிரம் பேர் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது,”என்றார்.

செட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு

செட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு
மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் தகுதி (செட்) தேர்வுக்கான கட்டணம், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நெட்' தேர்வைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) யுஜிசி சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இப்போது இந்தத் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி: இந்த தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான கட்டணம் முன்னர் ரூ. 500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 600-ஆக உள்ளது. மாநில அளவிலான தகுதித் தேர்வு மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும். இதற்கு யுஜிசி அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு 2016-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான (செட்) தகுதித் தேர்வு, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ. 1,500 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 1,250-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 500-ம் என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண நிர்ணயம் விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம் கூறியதாவது:நியாயமில்லை: 
"நெட்', "செட்' இரண்டு தேர்வுகளையும் நடத்துவதற்கான அனுமதியை யுஜிசி-தான் வழங்குகிறது.
இந்த நிலையில்"நெட்' தேர்வுக்கு கட்டணமாக ரூ. 600 வசூலிக்கப்படும் நிலையில், "செட்' தேர்வு கட்டணம் ரூ. 1,500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றார். தமிழகத்தில் கடைசியாக கடந்த 2012-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் "செட்' தேர்வு நடத்தப்பட்டபோது தேர்வுக் கட்டணமாக ரூ. 1,000 வசூலிக்கப்பட்டது. இப்போது மேலும் ரூ.500 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மாணவர்களை கடுமையாகபாதிக்கும். எனவே, கட்டணத்தைக் குறைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்றார்.இதுகுறித்து தேர்வை நடத்தும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் என். கலா கூறியது:விசாரிக்கப்படும்..: "செட்' தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையிலேயே, இப்போதையக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது:"செட்' தேர்வை நடத்த இந்த ஆண்டு அனுமதித்துள்ளோம். இந்தத் தேர்வை நடத்த அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவு இன்னும் யுஜிசி-க்கு வந்து சேரவில்லை. இதனால் தேர்வுக் கட்டணம் குறித்த தகவல் தெரியவில்லை. எனவே, விவரங்கள் யுஜிசி-க்கு கிடைத்ததும் கட்டணம் குறித்து விசாரிக்கப்படும் என்றார்

7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட் - முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை

7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட் - முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை
பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தி.மலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார், கடந்த 20ம் தேதி, போளூர் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது, சந்தவாசல் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள், கஸ்தம்பாடி பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள், பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரிவந்தது. அவர்களுக்கு ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்..

விழி இழந்தாலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை:

விழி இழந்தாலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை:
கீழக்கரை: விழி இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறார் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை வள்ளி.திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் வள்ளி,34. 5வயதுவரை சக பெண் குழந்தைகளுடன் ஓடி, சாடி விளையாடிய வள்ளியை திடீரென்று அம்மை நோய் தாக்கியது.
கண் வலி அதிகரிக்கவே இவரது தாயார் டாக்டர்களிடம் ஆலோசனை கேட்காமல் மருந்துகடையிலிருந்து வாங்கிய சொட்டு மருந்தை வள்ளியின் கண்ணில் விட்டுள்ளார். விளைவு இரண்டு கண்ணும் பார்வை பறிபோனது.மனம் தளராத வள்ளி பள்ளி படிப்பை பாளையங்கோட்டை மேரி சார்ஜன் பெண்கள் பள்ளியில் முடித்தார். பட்டப் படிப்பை மதுரையில் உள்ள கல்லூரியில் முடித்துள்ளார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் அப்பாத்துரை. இவரும் பார்வை இழந்தவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.டி.ஆர்.பி., தேர்வு மூலம் ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியில் சேர்ந்து கடந்த 6 மாதமாக பணியாற்றி வருகிறார். பாடங்களைமணிக்கணக்கில் நடத்தினாலும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உரிய விளங்கங்களுடன் அவர்களது மனதில் பதியவைக்கிறார். மாணவிகளின்துணையோடு வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் செல்கிறார்.
ஆசிரியர் வள்ளி கூறியதாவது:
நான் 5 வயது சிறுமியாக இருக்கும் போது, அம்மை நோய் தாக்கியது. தவறுதலாக சொட்டு மருந்தை எனது கண்ணுக்குள் அம்மா விட்டு விட்டார். அதன் விளைவாக கண் பார்வை பறிபோனது. பெற்றோர்களின் முயற்சியால் சிறப்பாசிரியர்கள் மூலம் எனது கல்விக்கான தீபத்தை விடாமுயற்சி, தன்னம்பிக்கை எனும் திரியால் சுடர் ஏற்றினேன். தற்போது மாணவர்களுக்கு பாடத்துடன், எளிதில் வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையையும் ஊட்டி வருகிறேன்.இளமையில் கற்கும் அடித்தள மான கல்வியே, உயர்கல்விக்கும், வேலை வாய்ப்பிற்கும் மகுடமாக திகழ்கிறது. தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கு, எனது நிலையை பார்க்க செய்து தூண்டுகோலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன், என்றார்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்புஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட பல்வேறு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் வந்திருந்த அரசு ஊழியர்களும் பங்கேற்றனர்.

வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம் :

வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம் :மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்:
சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.இதன்படி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ஊனமுற்றோருக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில் எத்தனை இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக சொல்லி போட்டித் தேர்வை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருகின்றனர்.தையல் ஆசிரியை பிரியதர்ஷினி கூறுகையில், “2012 ஏப்ரலுக்கு பின் 4 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் செய்யவில்லை. தற்போது சிறப்பு ஆசிரியர் பணிக்காக சுமார் 90ஆயிரம் பேர் தயார்நிலையில் இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது,”என்றார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா?: இணையதளத்தில் சரிபார்க்கலாம்:

22/1/16

ஆசிரியரா, பேராசிரியரா: பட்டதாரிகள் குழப்பம்

மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது.


இந்த தேர்வு, அடுத்த மாதம், 21ல் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முதுநிலை பட்டதாரிகள், சிசெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாக, மாநில அரசின் சார்பில் நடத்தப்படும், 'செட்' தேர்வு அறிவிப்பை, அன்னை தெரசா பல்கலை அறிவித்துள்ளது; இதற்கான தேர்வு நாளும், பிப்., 21 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படுவதால், மத்திய அரசின் பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதா அல்லது, மாநில அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதா? என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.


இது குறித்து, 'நெட், செட்' சங்க ஆலோசகர் பேராசிரியர் சாமிநாதன் கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு பின், செட் தேர்வு நடக்க உள்ளது. தற்போது அதை எழுதாவிட்டால், அடுத்த தேர்வுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அதனால், பட்டதாரிகளின் வயது அதிகமாகி வேலையில் சேர முடியாது. எனவே, தமிழக அரசின் செட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


பதிவாளரிடம் விசாரணை
செட் தகுதித் தேர்வு பொது அறிவிக்கையில், தேதியை தவறாகக் குறிப்பிட்டது குறித்து, அன்னை தெரசா பல்கலை பதிவாளர் கலாவிடம், உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா, நேற்று விசாரணை நடத்தினார். 'அறிவிக்கையில் தவறு நடந்தது எப்படி; அறிவிக்கை பைலை கையாண்டவர்கள் யார்?' என, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், செட் தேர்வுக்காக தனியே உருவாக்கப்பட்ட, http:/www.setexam2016.in/ இணையதளத்தில், சரியான தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பிப்., 21ல் செட் தேர்வு நடக்கவுள்ளது. ஜன., 20 முதல், பிப்., 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.


பொது பிரிவினருக்கு, 1,500 ரூபாய்; பிற்படுத்தப்பட்டோருக்கு, 1,250 ரூபாய்; பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 500 ரூபாய் என, தேர்வு கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம்

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் இ-சேவை மையத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டண தொகை ரூ.1ல் இருந்து ரூ.1000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.10ம், 

மின் கட்டண தொகை ரூ.1001ல் இருந்து ரூ.3,000க்குள் இருந்தால் சேவை கட்டணம் ரூ.20ம்,  மின் கட்டண தொகை ரூ.3001ல் இருந்து ரூ.5,000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.30ம், மின் கட்டணம் ரூ.5001ல் இருந்து ரூ.10,000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.50ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் கேட்டுள்ளார்!!!

CPS தொடர்பான அனைத்து அரசாணைகளும் நிதித்துறை மூலம் வெளியிடப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத்துறை வாயிலாக செயல்படுகிறது.

CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு  CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் நிதித்துறை முதன்மைச்செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்

வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்

சென்னை:''அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால், வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:மார்க்சிஸ்ட் - டில்லிபாபு: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, வாடகை குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா?வைத்திலிங்கம்: ஆறாவது ஊதியக் குழு மூலம் கிடைத்த சம்பள உயர்வு மற்றும் தமிழக அரசு வழங்கிய வீட்டுக்கடன் ஆகியவற்றால், அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்டி குடியேறி 

வருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை. இதனால், சென்னை, கோவையைத் தவிர, பிற பகுதிகளில், அரசின் வாடகைக் குடியிருப்புகள் காலியாக உள்ளன. எனவே, புதிதாக வாடகை குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.

'நெட்' தேர்வில் யோகா பாடம் சேர்ப்பு

சென்னை,:தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்தது. இதில், 161 மாணவ, மாணவியருக்கு, கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.

அதில், 42 பேர் முனைவர் பட்டமும், 106 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றனர்; 14 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை துணைவேந்தர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின், யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் அளித்த பேட்டி:யோகா பட்டப்படிப்புக்காக, யு.ஜி.சி., அளிக்கும், 400 கோடி ரூபாய், 44 பல்கலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 'நெட்' எனப்படும் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில், யோகா பாடமும் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

257 சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடம்: ஜன. 29 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 257 அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 29ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதெடார்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி:
சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக பிற பள்ளிகளில் உள்ள சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்கள், இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். அனைத்து பிரிவினரும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் 21 முதல் 40 வயதிற்குள்பட்டவராகவும், பழங்குடியினர் 18 முதல் 40 வயதிற்குள்பட்டவராகவும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதிற்குள்பட்டவாகவும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன், கல்விச்சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  அனைத்து பணியிடங்களும் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இனச் சுழற்சி முறை மற்றும் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே 3 கி.மீ. சுற்றளவு தூரம் ஆகியற்றின் அடிப்படையிலும் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.   விண்ணப்ப படிவங்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்.

காலிப்பணியிடம் மற்றும் இன சுழற்சி விவரங்கள் குறித்தும் விண்ணப்பம் வழங்கப்படும் அலுவலகங்களில் உள்ள விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன.29ஆம் தேதிக்குள் அந்தந்த அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ், அனைத்து பிரிவு முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கடந்த, 2015 நவ., டிச., மாதங்களில் நடந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் நேற்று மாலை, 5:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், www.b-u.ac.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண்களை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

மேலும், மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றுக்கு, விண்ணப்பிக்க, பிப்., முதல் தேதி, இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாடி ரீமா ரோஸ் தெரிவித்துள்ளார்

மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக RTI மூலம் கேட்கப்பட்ட கேள்வி

அடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும் ஓர் அளவு கோலா?

விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் குருப் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (Aeronautical Quality Assurance) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க், ஓட்டுநர் உள்ளிட்ட 80 குருப்‘சி’ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Stenographer-GradeII
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்தில் 10 நிமிடங்களுக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk(LDC)
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Civilian Motor Transport Driver (Ordinary Grade)(CMTD (OG)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MultiTaskingStaff:(MTS)
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dgaeroqa.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் ஏதாவதொரு மண்டலங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
லக்னோ மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA, DGAQA,
Min of Defence,
C/OHAL, LUCKNOW, PIN:226016.
கொல்கத்தா மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
6, Esplande East, Kolkata-700069.
பெங்களூரு மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
Vimanapura Post, C/OHAL, Bengalauru-560017.
ஹைதராபாத் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
HALPost, Hyderabad-500058.
நாசிக் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
DDG, (Nasik),
DGAQA, Min of Defence,
C/OHAL, Ojhar-422207.
ஜபல்பூர் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
CO, AQAW(A),
DGAQA, Min of Defence,
Khamaria, Jabalpur-482005.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2016

பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு: இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு

அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,068 தொடக்கப் பள்ளிகள்; 302 நடுநிலைப் பள்ளிகள், 162 உயர்நிலைப் பள்ளிகள்; 146 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,678 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகங்களை,திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள துாய்மைக் காவலர்கள் துப்புரவு செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. ஒரு சில, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன என, கல்வி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து, ஊரகப் பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை, மகளிர் குழுக்கள் மூலம் நியமிக்க, மாவட்ட நிர்வாகம்,ஊரக வளர்ச்சி துறைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.அதன்படி, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளான மகளிர் குழுக்களிடம், பள்ளி கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது.

வழிகாட்டி நெறிமுறை:

ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் இருப்பினும், புதிய ஆட்களை கல்வி குழுவினர் நியமிக்க வேண்டும் பள்ளியின் கிராமக் கல்விக் குழு கணக்கில், வட்டார வளர்ச்சி அலுவலரால் ஊதியப் பணம் விடுவிக்கப்படும்பள்ளி தலைமை ஆசிரியரால், சம்பந்தப்பட்ட மகளிர் குழுக்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படும்முதற்கட்டமாக, ஒன்றிய பொது நிதியில், மூன்று மாதத்திற்கு உரிய ஊதியத்தை கல்வி குழு வங்கி கணக்கில் இருப்பு வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இந்த மாத இறுதிக்குள், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை நியமித்து, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அவர்களுக்கு மாத ஊதியத்துடன் கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தேவைப்படும் பணமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தக்க பணியாளர்களின் ஊதியம், துப்புரவுக்குத் தேவைப்படும் பொருட்கள் கொள்முதல் செய்ய வழங்கப்படும் தொகையும் மாறுபடும்.இவ்வாறு அவர் கூறினார். 

13/1/16

B.Ed., 2 ஆண்டு பயிற்சி :பணி புரியும் பள்ளியில் விடுப்பு ஏதும் எடுக்காமல் பயிற்சி எடுக்கலாம்.



3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியல் தயாரிக்க, 'தினமலர் ' செய்தி எதிரொலியாக கல்வித்துறை சார்பில், நேற்று திருத்தப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 3 பட்டதாரி ஆயிரம் ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அளவில் 1.1.2016 அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இதில், 2002--2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூன்றாயிரம் பேரை பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை.இதனால் பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டது.'தினமலர் ' செய்திஇதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, பணிமூப்பு பட்டியல் தயாரிக்க திருத்தப்பட்ட உத்தரவை அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேற்று கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.அந்த உத்தரவில் '31.12.2002 வரை (2002 ஜூலை உட்பட) நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலையில் இருந்து பட்டதாரியாக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறை மற்றும் தொடக்க கல்வியில் இருந்து பள்ளிக்கல்விக்கு மாற்றமானவர் களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். முந்தைய உத்தரவில் 2000--2001 என குறிப்பிட்டதை 2001--2002 என திருத்தம் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நிம்மதிதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் திவ்யநாதன், துணைத் தலைவர் முகிலன் ஆகியோர் கூறுகையில், 'கல்வி இயக்குனர் கண்ணப்பன்மேற்கொண்ட இந்நடவடிக்கையால் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்,' என்றனர்.