யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/2/16

எஸ்எஸ்எல்சி தேர்வு மாணவர்களுக்கான பதிவு எண்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம்தேதி வெளியாகிறது. 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு தேர்வு பதிவு எண்கள் ஒதுக்கிய பட்டியலும் பள்ளிகளுக்கு வந்து சேர்ந்துள்ளன. 

வரும் 22ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.அறிவியல் பாடத்தில் இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் சோதனைகள் தொடர்பான அட்டவணைகள் 15ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் வர உள்ளன. இதை அடிப்படையாக வைத்து 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் தொடங்கிமார்ச் 5ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுக்கு சாதகமாக ஜாக்டோ செயல்படுகிறது- தினகரன்

போராடு
இல்லை போராட வழிவிடு

சங்க வேறுபாடு கடந்து அனைத்து இடைநிலையாசிரியர்களும் Facebook மற்றும் WhatsApp-ல் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துவது ஜேக்டோ பொறுப்பாளர்களுக்கு சேரவில்லையா...?

இல்லை அதற்கு நீங்கள் செவிசாய்க்கவில்லையா...?

மேலிருந்து கீழ் பரவுதல் என்பது அதிகாரம்...
கீழிருந்து மேலே பரவுதல் என்பது அங்கிகாரம்...

இதில் TNPTF இரண்டாவது வகை.

அடிமட்ட உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு இடமளித்து தொடர் போராட்ட களமிறங்கியுள்ளது.

முடிந்தால் அதிகார
வர்க்கத்தை மோதிப்பார்..
இல்லையேல் எங்களை
வேடிக்கை பார்...

TNPTF நவம்பர் மாதம் முதல் தோடர்வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜாக்டோவிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது..
ஆனால், இதுவரை அதற்கு ஜாக்டோ ஒத்துழைக்கவில்லை..

2002-ல்  தொடர் வேலை நிறுத்தத்தை TNPTF முன்னின்று நடத்தியது. பெரிய சங்கங்கள் எல்லாம் ஓடி ஒழிந்து கொண்டன.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் அந்த சங்களின் ஆசிரியர்களும் பள்ளியை இழுத்து மூடியதால், அந்த சங்கங்களின் மாநில நிர்வாகம் போராடும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது என்பது வரலாறு சொல்லும் உண்மை.

நண்பர்களே...
போற்றுவோர் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் புறம் தள்ளி களம் காணுங்கள்

கதை சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி காலத்தை வீணாக்காதே..

இன்னல்படும் இடைநிலை ஆசிரியர்கள் இன்முகம் காண இடைவிடாது உழைப்போம்..

நண்பர்களது விமர்சனம்
நம்மை வீரியப்படுத்தட்டும்..

அமைச்சரவை அளவிலான
பேச்சு வார்த்தைக்கு பின்னால்
அடுத்த கட்ட போராட்டத்தை அவ்விடத்திலேயே அறிவிக்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் இல்லை இதுவரை...

வேண்டாம் நண்பர்களே
கடந்த கால 750க்கு மஞ்சள் துண்டு போர்த்தியது போல்
தற்பொழுது ஏதாவது 500க்கு பச்சை ஆடை
அணிவிக்க தயாராகி விட்டதா ஜேக்டோ....???

என்ற என்னைப் போன்ற அப்பாவி ஆசிரியரின் உணர்வை உணர்ந்து வேலைநிறுத்த போரை
அறிவித்து அரசுக்கு நமது அழுத்தத்தை கொடுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை வணங்குகிறேன்.

-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியன் 

PG TRB:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.புதிதாக 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்க உள்ளது. 

இதற்கான அனுமதியை பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது. இனிமேல் எப்படி தேர்ந்து எடுக்கிறது. எந்த பாடத்திற்கு எத்தனை ஆசிரியர்கள் என்ற விவரம், எந்த தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்ற முழு விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது.

கும்பகோணத்தில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழாவையொட்டி10நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பிப்ரவரி 24ஆம்தேதிவரைவிடுமுறை அளித்துமாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தில் மீண்டும் பிப்ரவரி25ஆம்தேதிபள்ளிகளில் திறக்கப்படும் என்று மாவட்டஆட்சியர்அறிவித்துள்ளார். மாகமகம் பெருவிழாபாதுகாப்புக்காக வரும்போலீசார், பள்ளிகளில்தங்குவதால்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும்: மாநில தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்து நடைபெறும் அரசு ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடுஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.


அந்த சங்கத்தைச் சேர்ந்த மாநில தலைவர் மோசஸ் 15–ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளார்.இன்றும் (சனி) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை என்பதால் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் எழுச்சி கூட்டம் நடத்துகின்றனர். 15–ந்தேதி முதல் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாநில நிர்வாகிகள் சென்று அரசு ஊழியர்களை சந்தித்து போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி கூறியதாவது:–தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் 3 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 எங்களின் போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி ஆதரவு தெரிவித்து உள்ளது. திங்கட்கிழமை முதல் அரசு ஊழியர்களுடன் ஆசிரியர்களும் மறியலில் ஈடுபடுவார்கள்.இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் எழுச்சி கூட்டம் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் பங்கேற்கிறார்.எங்கள் போராட்டத்திற்கு தலைமை செயலக ஊழியர் சங்கம் தார்மீக ஆதரவு அளித்துள்ளது. திங்கட்கிழமை முதல் போராட்டம் தீவிரமாகும்.அமைச்சர்கள் 9–ந்தேதி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 11–ந்தேதி அறிவிப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

எங்களது 20 கோரிக்கைகளில் 4 மட்டும் முதல்– அமைச்சர் தலையிட்டு அரசாணை வெளியிடுவது தொடர்பானதாகும். மற்ற கோரிக்கைகள் துறை அதிகாரிகளின்மெத்தன போக்கு மற்றும் குறைபாடுகளை களைவது சம்பந்தமாகும். எனவே 4 முக்கிய கோரிக்கைகளை மட்டும் முதல்–அமைச்சர் ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாமக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அன்புமணி

பாமக ஆட்சிக்கு வந்தால் சில மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துத்துறை அரசு ஊழியர்களுமே தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 


அவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தம் அறிவித்திருக்கின்றனர். ஆனால், இப்போராட்டங்கள் அனைத்தும் ஏதோ செவ்வாய் கிரகத்தில் நடைபெறுவதைப் போலவும், இவற்றுக்கும் தங்களுக்கு தொடர்பில்லை என்பது போலவும் அதிமுக அரசு அமைதியாக இருப்பது கண்டிக்கத்தக்கது.அரசு ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், செவிலியர்கள் உட்பட பல்வேறு துறையினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஏற்கனவே பல சுற்று போராட்டங்களை நடத்தி முடித்துவிட்டு அடுத்தகட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களில் கவுரவ விரிவுரையாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட சில கூடுதல் கோரிக்கைகள் இருக்கும் நிலையில் அவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால், போராட்டம் நடத்தும் அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளும் பொதுவானது தான்.ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நடைமுறைப்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது தான் அரசு ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமானவை ஆகும்.இந்த கோரிக்கைகள் எதுவும் இன்று புதிதாக முளைத்த கோரிக்கைகள் அல்ல. புதிய ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 01.01.2004 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்னோடியாக 01.04.2003 முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமை முன்கூட்டியே பறிக்கப்பட்டது. அன்று தொடங்கி 13 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசு பணியாளர்களுக்கு 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. அப்போதிலிருந்தே அரசு ஊழியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதிமுக அரசுக்கும், திமுக அரசுக்கும் உண்மையான அக்கறை இருந்திருந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எப்போதோ நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், இரு அரசுகளுக்குமே அக்கறை இல்லாததால் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.2003ஆம் ஆண்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜெயலலிதா, 2011-ஆம் ஆண்டு தேர்தலில் அந்த திட்டத்தை ரத்து செய்வதாகவும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்துவதாகவும் வாக்குறுதி அளிக்கிறார். அதை நம்பி அரசு ஊழியர்களும் வாக்களிக்கிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.2001-2006 காலத்தில் அதிமுக அரசால் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் திமுக ஆட்சியில் திரும்பத் தரப்படும் என்று 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் கருணாநிதி அறிவித்தார். அவ்வாறுபறிக்கப்பட்ட உரிமைகளில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பத் தருவதற்கு 2006-2011 காலத்தில் கருணாநிதி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 2009-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தான் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதனால் எழுந்த ஊதிய பாகுபாடுகளை களைய வேண்டியது திமுக அரசின் கடமை. ஆனால், அதன்பின் 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், அரசு ஊழியர்களுக்கிடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்வைத்தனர்.அப்போது நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி புள்ளி விவரங்களுடன் வாதாடினார். அதை திமுக அரசு சார்பில் ஏற்றுக்கொண்ட அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். 

அதற்குப் பிறகும் பல முறை இந்த கோரிக்கைகளை ஜி.கே. மணி வலியுறுத்திய போதும் அவைநிறைவேற்றப்படும் என்று தான் திமுக அரசு உறுதியளித்தது. ஆனால், எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.இத்தகைய வரலாற்றுக்கு சொந்தக்காரரான கருணாநிதி தான்,‘‘கல்லில் நார் உறிக்காதீர்கள். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புங்கள். காலம் கனியும், காரியம் கைகூடும், காத்திருப்பீர்’’ என்று கூறி இன்னும் ஒரு முறை அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற முயல்கிறார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து இதுவரை பேச்சு நடத்தக் கூட முன்வராத ஜெயலலிதா, வரும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இதே வாக்குறுதிகளை மீண்டும் அளித்து வாக்குகளை வாங்க முயற்சி செய்யக்கூடும். 

காரணம்... மக்களின் மறதி தான் அவர்களின் மிகப்பெரிய மூலதனம்.ஆனால், 50 ஆண்டுகளாக அவர்களை நம்பி ஏமாந்து வரும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இனியும் ஏமாறத் தயாராக இல்லை. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களை அடுத்த வாரம் சந்தித்து பேச்சு நடத்த இருக்கும் நான்,பாமக ஆட்சியில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சமூக ஒப்பந்தத்தை செய்து கொள்ளவிருக்கிறேன். அந்த ஒப்பந்தத்தின்படி பாமக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பி.எஃப். பணத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளலாம்

வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) தொடர்பான வசதிகளை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி மூலம் பி.எஃப். பணத்தைப் பெறும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்) உயரதிகாரி ஒருவர், தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:


குர்கான், துவாரகை, செகந்தராபாத் ஆகிய இடங்களில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பான, மத்திய தகவல் மையங்கள் விரைவில் அமையவுள்ளன.

இந்தத் தகவல் மையங்களுடன், நாடு முழுவதும் உள்ள 123 பி.எஃப். அலுவலகங்களும் இணைக்கப்படும்.

 இதற்கான கணிப்பொறி பரிமாற்றகங்கள் நிறுவும் பணி, வரும் மே மாதம் நிறைவடையும். பின்னர் அதுதொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பி.எஃப். பணத்தை இணையவழியில் பெறும் வசதி ஆகஸ்ட் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும்.

இதன்படி, பிஎஃப் பணத்தை பெறுவதற்கு வங்கிக் கணக்குகள், ஆதார் அட்டை எண், பான் அட்டை எண் ஆகிய விவரங்களை இணைத்து, வாடிக்கையாளர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 பின்னர், அவர்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பி.எஃப். தொகை உரியவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நாடு முழுவதும் தற்போது 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடரும்: நஜீம் ஜைதி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருந்தால், அதனை சேர்ப்பதற்கு காலஅவகாசம் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, அரசியல் கட்சிகள்-அதிகாரிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: மழை-வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தோருக்கு இலவசமாக புதிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து தனிப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படும்.


தவறுதலாக பெயர் நீக்கப்பட்டிருந்தால் வாக்காளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்கள் தங்களது பெயரை புதிதாகச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி 10 தினங்களுக்கு முன்பு வரை பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.
எனவே, யாருடைய பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோ அவர்கள் பெயர் சேர்ப்பதற்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்படும். எனவே, பெயர் நீக்கம் செய்யப்பட்டோர் தங்களது பெயரைச் சேர்க்கலாம்.

முதல் முறை வாக்காளர்கள்: தமிழகத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களாக 18 லட்சம் பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த வயதை உடையவர்கள் 26 லட்சம் பேர் உள்ளனர். எனவே, அவர்களையும் பெயர் சேர்ப்புக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் நஜீம் ஜைதி.

படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 13 பேருக்கு மாற்றுச் சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. 


இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரத்தில் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி மாற்றுச் சான்றிதழ் (டி.சி) அளித்து பள்ளியை விட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒரு சில மாவட்டங்களில் ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 இவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும், இவ்வாறு செய்வது தவறாகும். 
 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், குறைந்தபட்ச மதிப்பெண் பெறவும் கற்றல் உபகரணங்கள், குறுந்தகடுகள், கையேடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. 
 குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது, கையேடுகள், உபகரணங்கள் மூலம் அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 மேலும் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு ஏற்கனவே கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை முழுவதுமாக நம்பி பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள்.
 தமிழக அரசும் மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கியுள்ள இந்தத் தருணத்தில் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். 
 அதுபோன்று நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுமாயின் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்: பொன். இராதாகிருஷ்ணன்

அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது பிரச்னைகளை அரசின் பார்வைக்கு உடனுக்குடன் எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பிரச்னைகளை மொத்தமாகச் சேர்த்துக் கொண்டு போராடுவதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும்.

தலைவர்களின் சந்திப்பை வைத்து கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாது. தமிழகத்தின் நன்மையைக் கருதி, பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்காததால் பாஜகவின் கூட்டணி குறித்து அவசரப்படத் தேவையில்லை.
 மக்கள் நலக் கூட்டணிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் வைகோ, கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தமிழகத்தின் கடந்த கால நிகழ்வுகளை மனதில் வைத்து வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும், ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு கொண்டு வருவதாகக் கூறி வருகின்றனர். பூரண மது விலக்கு என்பது தேர்தல் பிரசாரத்துக்காக வைத்துக்கொள்ளாமல் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
 தமிழகத்தில் விவசாயிகளைப் பாதிக்கும் எண்ணெய் எடுக்கும் பணி அல்லது குழாய்ப் பதிக்கும் பணிகளை மத்திய அரசு செயல்படுத்தாது என்றார்

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 2015-16ஆம் ஆண்டிற்கான நேரடி நியமனம் / இதர நியமன முறைக்கான காலிப் பணியிடம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியீடு



6/2/16

ரூ.25 கோடி 'தண்டம்' 10,000 இலவச 'லேப்டாப்'கள் மாயம்

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், மாணவர்களுக்கு வழங்காமல் மாயமான, 10 ஆயிரம், 'லேப்டாப்'களுக்கான கணக்கை சரிக்கட்ட முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். மாயமான, 'லேப்டாப்'களுக்காக, 25 கோடி ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சொந்த பணத்தில் இருந்து செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், 2011 - 12 முதல், பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச, லேப்டாப் வழங்கப்படுகிறது.இதுவரை, 22 லட்சம் மாணவர்களுக்கு, 5,500 கோடி ரூபாய் மதிப்பில்,
லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், ஒரு, லேப்டாப்பின் மதிப்பு, 25 ஆயிரம் ரூபாய்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம், லேப்டாப்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில், இதில், முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

அதாவது, 
* பல பள்ளிகளில், மாணவர்கள் படித்து முடித்து சென்ற பின், அவர்களின் பெயரில், லேப்டாப்கள் எடுக்கப்பட்டு, வெளி சந்தையில் விற்கப்பட்டுள்ளன
* பல பள்ளிகளில், பூட்டு உடைக்கப்பட்டு, லேப்டாப்கள் திருடு போயின
* போலி மாணவர்கள் பெயரில், லேப்டாப் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 'மாணவர்களின் ஆதார் எண்இருந்தால் மட்டுமே, லேப்டாப் வழங்க வேண்டும்; மாணவரின் கையெழுத்து அவசியம்' என, கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.மேலும், ஐந்து ஆண்டுகளாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனமான, 'எல்காட்' சார்பில், பள்ளி களுக்கு வழங்கப்பட்ட, லேப்டாப்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்டவை; திருப்பி அனுப்பப்பட்டவை; திருடு போனவை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவை குறித்து, மாவட்ட வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.இதில், தமிழகம் முழுவதும், 10 ஆயிரம், லேப்டாப்களின் கணக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணக்கை எப்படி சரி செய்வது என தெரியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.




'பிப்.,10க்குள் செலுத்த வேண்டும்':பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு: 
* திருடு போனதாக கூறப்பட்ட, லேப்டாப்களுக்கான பணத்தை, தலைமை ஆசிரியர்களே ஏற்றுக் கொண்டு, பிப்.,10க்குள் செலுத்த வேண்டும் 
* சேதமான, லேப்டாப்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்* மாணவர்களுக்கு வழங்கப்படாமல், கணக்கில் விடுபட்ட, லேப்டாப்கள் குறித்து உரிய விளக்கம்அளிப்பதுடன், அதற்கான செலவை ஏற்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.10 ஆயிரம், லேப்டாப்களின் மதிப்பு, அரசின் திட்ட மதிப்பீட்டின் படி, 25 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

CPSல் பணியில் சேர்ந்தவர்கள் - “ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்!” -

“ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்!”

புதிய ஓய்வூதியத் திட்டத்தால் நிம்மதியிழந்த அரசு ஊழியர்கள்

“அரசு ஊழியர்களை நவீன பிச்சைக் காரர்களாக மாற்றிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்பவர் களுக்கே வரும் தேர்தலில் எங்கள் வாக்கு” என்று அதிரடி முடிவில் இறங்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். ‘பங்களிப்புடன் கூடிய புதிய பென்சன் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களாகச் சேரும் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டப்படிதான் பென்சன் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.


‘‘புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணையான அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் மாதம்தோறும் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகைக்கு இணையாக அரசு தனது பங்கைச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவிகிதம், ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக்கப் படும். மீதமுள்ள 40 சதவிகிதத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதந்தோறும் ஓய்வூதியமாக அளிக்கப்படும்” என்று அறிவித் தனர். தமிழகத்தில் ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என சுமார் நான்கு லட்சம்பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, ஊழியர்களின் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அவர்களின் ஓய்வுக்காலத்தில் திருப்பித் தர டெல்லியில் ‘ஓய்வூதியத் தொகை வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்’ செயல்பட்டு வருகிறது.

ஓய்வுபெற்ற பிறகும் பலன் அளிக்காத புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் பேசினோம். “புதிய ஓய்வூதியத் திட்டம் வந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஓர் அரசு ஊழியர்கூட பயன்பெறவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்றவர்களும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

ஊழியர்களிடம் இருந்து ஏழாயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டிருக்கிறது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்குத்தொகை இரண்டும் பி.எஃப்.ஆர்.டி.ஏ-வுக்குச் செலுத்தப் படவில்லை. அந்தத் தொகை என்ன ஆனது என்பதுதான் எங்கள் கேள்வி?

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த பலன்கள் இந்தத் திட்டத்தில் இல்லை. குடும்ப பென்சன், பணிக்கொடை எதுவும் இந்தத் திட்டத்தில் கிடையாது. எங்களிடம் பிடித்தம் செய்த தொகையை மட்டுமாவதுத் திருப்பித்தரலாம். அதையும் இந்த அரசு தர மறுக்கிறது. தமிழக அரசு இந்தத் தொகையை வைப்புநிதியாக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர். அதனால் எங்களுக்கு என்ன பயன்? ஓய்வுபெறும் ஊழியர்கள் வெறும் கையோடு போகும் நிலை உள்ளது.

ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியாற்றிய நாய்கள், குதிரைகள்கூட ஓய்வுபெற்றபின், அவற்றின் பராமரிப்புக்குப் பணம் ஒதுக்கும் அரசு, எங்களை மட்டும் அலட்சியம் செய்வது ஏன்?” என்றார்.

மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம்’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஆனால், ஊழியர்களின் பணம்கூட ஒழுங்காக ஆணையத்தில் செலுத்தப் படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் உள்ளது. ஆனால், மாநில அரசில் அது இல்லை. ஊழியர்களின் பணத்தைவைத்து பங்குச் சந்தையை வளர்க்கத்தான் இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துகின்றனர். ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் எந்தப் பணமும் கிடைக்காமல் நவீன பிச்சைக்காரர்களாக மாறும் நிலை உள்ளது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் இதே அ.தி.மு.க உறுப்பினர்கள், இடதுசாரி உறுப்பினர்களோடு இணைந்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு ஊழியர்களிடத்தில் மாறுபாடான நிலையைக் கடைப்பிடிக்கின்றனர். வரும் தேர்தலில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவோம் என்று உறுதியாகக் கூறும் கட்சிக்குத்தான் நாங்கள் வாக்களிப்போம்” என்றார்.

அரசுப்பள்ளி வகுப்பறைகளில் விரைவில் வண்ண வண்ண சித்திரங்கள் கற்பனை வளத்துடன் ஆங்கிலம் கற்பிக்க திட்டம்

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில், அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல் திறனை ஊக்குவிக்கும் புது திட்டம் கல்வித்துறையால், செயல்படுத்தப்பட்டுள்ளது. மேகத்தில் மிதப்பது, நிலாவை பிடிப்பது என குழந்தைகளின் உலகம் என்றுமே, கற்பனை வளமும், வண்ணமயமான காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், பள்ளிக்குள் நுழைந்ததும், அவர்களின் உலகத்தை விட்டு வெளியேற்றி, தங்களுக்கான சூழலை இழப்பதாக கருதுகின்றனர் இன்றைய பள்ளி குழந்தைகள். 



கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டாலும், அதை கற்பிக்கும் விதத்தில் புதுமையை எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கு ஏமாற்றமே.
புத்தகங்களில், பார்க்கும் வண்ண ஓவியங்களை, தங்களின் கற்பனை களத்தின் காட்சிகளாக படைப்பதற்குள், 'மெல்லக் கற்கும் குழந்தைகள்' என பலரும் முத்திரை குத்தப்படுகின்றனர். இன்னல்களுக்கிடையே, பிடித்த முறையில் பாடம் கற்க முடியாமல், படித்த பாடத்தையும் புரிந்துகொள்ள அவகாசம் அழிக்கப்படாத நிலையில்லாத கல்வி முறையில், மாற்றமாகவே வந்துள்ளது, வகுப்பறைகளில், வண்ண சுவர் சித்திரங்களை வரைதல் மூலமாக பாடம் நடத்தும் முறை.


தமிழ், ஆங்கிலம் உச்சரிப்பு பிரச்னை
தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் 'ஆல்பாஸ்' கல்வி முறையால், அரசு பள்ளி குழந்தைகளை வாட்டி வதைக்கும் இன்றைய பிரச்னையாக இருப்பது, தமிழ் மற்றும் ஆங்கிலம் உச்சரிப்புகள் தான். குழந்தைகளின் கற்பனை வளத்தை மேம்படுத்தும் 'படம் பார்த்து கதை வழக்கத்தை மீண்டும் குழந்தைகளிடையே கொண்டுவரும் முயற்சியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் முப்பது மாவட்டங்களில், குறிப்பிட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த கட்டட வசதி, மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


எந்தெந்த பள்ளிகள் தேர்வு
உடுமலையில், சின்னவீரம்பட்டி, சின்னபூலாங்கிணறு, போடிபட்டி நடுநிலைப்பள்ளிகள், எலையமுத்துார், கரட்டூர் துவக்கப்பள்ளிகள், மடத்துக்குளம் ஒன்றியத்தில், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், சாமராயப்பட்டி நடுநிலைப்பள்ளிகள், காரத்தொழுவு, மேற்கு கொமரலிங்கம் துவக்கப்பள்ளி, குடிமங்கலம் ஒன்றியத்தில் சோமவாரப்பட்டி, கோட்டமங்கலம், முருங்கபட்டி, புக்குளம், லிங்கமநாயக்கன்புதுார் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதற்கான படங்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஓவியர்களைக்கொண்டு இப்பணிகளை செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில், 16 படங்கள் அமையும் வகையில் ஓவியங்கள் இடம்பெற, ஒரு பள்ளிக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

TET : தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. 



'ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால், நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது,' என கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர், 'பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார். 


இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதியாக நிர்ணயித்துள்ளது. இதில் அரசு தலையிட முடியாது. 


சிறுபான்மையினர் பள்ளி, சிறுபான்மையினர் அல்லாத பள்ளி என கல்வித் தகுதியை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 
இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, எஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜராயினர்.

நீதிபதிகள் : 'இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என அரசு வழக்கறிஞர் கூறுகிறார். அது முடிவுக்கு வரும்வரை, பணியாற்றும் காலத்திற்குரிய சம்பளத்தை, ஆசிரியருக்கு வழங்க வேண்டும். பணியை விட்டு நீக்கக்கூடாது. பணியில் தொடர்வது என்பது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றனர். இதுபோல் தாக்கலான பல்வேறு வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

30/1/16

பாஸ்போர்ட் முன்பதிவு தேதியை இனி விண்ணப்பதாரரே தேர்வு செய்யலாம் : மண்டல அலுவலர் தகவல்

பாஸ்போர்ட்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, முன்பதிவு தேதியை விண்ணப்பதாரரே தேர்வு செய்யலாம்,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பொதுமக்கள் நலன் கருதி, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது சில விதிகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் இடத்தை மாற்ற விரும்புவோர், புதிய விதியின்படி பிறந்த தேதிக்கான பிறப்பு சான்றிதழ் மற்றும் அதற்கான அபராதம் செலுத்தி மாற்றலாம். பிறந்த இடம் மாற்ற கோருவோர், சரியான பிறந்த இடம் வேறு மாநிலத்தில் அமைந்திருப்பின், அதற்கான நீதிமன்றம் உத்தரவு, அனைத்து கல்வி சான்றிதழில் பிறந்த இடம் மாற்றம் செய்த பின், தவறான பிறந்த தேதி குறிப்பிட்ட காரணத்தை அறிய போலீஸ் அறிக்கைக்குட்பட்ட பிறகு, சரியான பிறந்த இடம் குறிப்பிட்டு புதுப்பித்தால் பாஸ்போர்ட் பெறலாம்.ஒரே முகவரியில் பெறப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு சமர்ப்பித்தால், ஆன்லைன் மூலம் ஆவணங்களை சரிபார்த்த பிறகு முதலில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, பிறகு போலீஸ்விசாரணைக்கு உட்படுத்தப்படும். இந்த பாஸ்போர்ட் பெறுவோர் படிவம் 1ஐ சமர்ப்பிக்க வேண்டும்.பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, முன்பதிவு தேதி, முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற முறையில் வழங்கப்பட்டது. ஜன., 27 முதல் முன்பதிவு தேதியை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்யலாம். டிஜிட்டல் மயமாக்கத்தால் காவல் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்வது 34 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையும் விரைவுபடுத்திட அலைபேசி அல்லது மடிக்கணினி மூலம் காவல் விசாரணையை அனுப்ப வழி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 1.20 கோடி பாஸ்போர்ட் மற்றும் அதை சார்ந்த சேவை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை

இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்கவேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,எச்சரிக்கை விடுத்துள்ளது.கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். 


அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பல சட்ட மற்றும் அரசு அமைப்புகளிடம் யு.ஜி.சி., கருத்து திரட்டியதில், இரண்டு டிகிரி முறைக்கு எதிரான கருத்துகள் வந்துள்ளன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கல்லுாரிகள், இரண்டு பட்ட முறையில் மாணவர்களை சேர்க்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், ஏற்கனவே படித்தவர்களின் நிலை என்ன என, பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பம் குறித்து, தரமான கல்விக்கான கூட்டமைப்பு ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது:உயர் கல்வியில் மேலாண்மை செய்யும், என்.சி.டி.இ., - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., போன்றவை, பட்டப்படிப்பு தொடர்பாக, பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு பட்டம் பெற்ற பின், அவ்வப்போது உத்தரவை மாற்றி விடுவதால், பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, குறைந்தது, 20 ஆண்டுகளுக்கு இதுதான் விதிமுறை என, தொலைதுார பார்வையுடன் முன்னோடியான விதிமுறைகளை வகுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

"பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.நேற்று முன்தினம், திருப்பூர் கதிரவன் மெட்ரிக் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசிவராமை, ஆறாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை செய்தான். இச்சம்பவத்தை அடுத்து, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனை கூட்டம், குமார் நகர்"இன்பேன்ட் ஜீசஸ்' பள்ளியில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்; மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.கலெக்டர் ஜெயந்தி பேசுகையில், ""குழந்தைகளிடம் அன்பும், ஆதரவும் காட்ட வேண்டும்; ஆசிரியர்களை முழுமையாக நம்பி, குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். 


குழந்தைகளை, ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும். மாணவர்களிடம் அன்பாக பழகும் ஆசிரியரை தலைவராக கொண்டு, பள்ளிதோறும் ஆசிரியர்களை கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்க வேண்டும். அக்கமிட்டி மூலம் மாணவர்களுக்கு வாரந்தோறும் "கவுன்சிலிங்' தர வேண்டும். பள்ளியில், மறைவிடம் இருக்கக்கூடாது. திறந்தவெளி கிணறுஇருந்தால் உடனடியாக மூட வேண்டும். குறும்பு செய்யும் மாணவர்களை கண்டறிந்து, தனியாக "கவுன்சிலிங்' தர வேண்டும்,'' என்றார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் பேசுகையில்,""குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர்களை ஒருமுகப் படுத்துதல் முக்கியம். "படி படி' என, துன்புறுத்தாமல், படிக்க வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். நகைச்சுவையாக கல்வி கற்பிக்க வேண்டும்,'' என்றார்.

நீதிபோதனை வகுப்பு தேவை

உளவியல் நிபுணர் அருள்வடிவு பேசுகையில், ""குழந்தைகளின் குடும்ப பின்னணி, பெற்றோர், உறவினர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது, குழந்தையை பற்றி அறிந்து கொள்ள உதவும். இன்றைய குழந்தைகள், பாடப்புத்தகங்களை தவிர, மற்ற புத்தகங்களை படிப்பதில்லை. நீதி போதனை வகுப்பு நடத்தி, பிரச்னை ஏற்படும்போது, அதற்கான தீர்வு என்னஎன்பதை விளக்க வேண்டும். நற்பண்புகளை வளர்க்க வேண்டும். குழந்தைகளின் முன், பெற்றோர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்; தகாத வார்த்தை பேசினால், அவர்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும்,'' என்றார். கூட்டத்தில், தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்."விளையாட அனுமதியுங்க' மனநல மருத்துவர் ரமேஷ் பரமானந்தம் கூறியதாவது: இதுபோன்ற சம்பவத்துக்கு பெரிதும் காரணம், "டிவி' மற்றும் சினிமா போன்றவற்றில் வெளிப்படும் வன்முறைகளே. குழந்தைகளைவெளியே விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை. கீழே விழுந்து காயமேற்படும் என கூறி, வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், "டிவி', மொபைல்போனுக்கு, குழந்தைகள் அடிமையாகி, நேரத்தை செலவிடுகின்றனர். தற்போது, கார்ட்டூன் சேனல்களில் கூட வன்முறை, சண்டை காட்சிகள் வந்து விட்டன. மொபைல் போன்களிலும் சண்டைகள், துப்பாக்கி சுடுதல் என, வன்முறை விளையாட்டுகள் அதிகமுள்ளன. இது, குழந்தைகளின் மனதில் வன்முறை குணத்தை ஏற்படுத்தும்.குழு விளையாட்டுகளில் ஈடுபடும்போது, வெற்றி, தோல்வியை சகஜமாக எடுக்கும் மனநிலை; விட்டுத்தரும் மனப்பாங்கு வரும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற குணம், வெறியாகும் மாறும் போதே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. எதையும் அன்பாக கற்றுத்தர வேண்டும்; ஆக்ரோஷம் என்பது ஆரோக்கியம் அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளி நேரம் முடிந்ததும், ஆள்நடமாற்ற பகுதியில், "ஒன் டு ஒன்' என, மாணவர்கள் தங்களுக்குள் மோதும் போக்கு உள்ளது. இதற்குமுன், பள்ளிகளில் நன்னெறி கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன; தற்போது கிடையாது.பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை, ஆசிரியர்களின் கவனமின்மை ஆகியன, மாணவர்களை தடம் மாற வைக்கிறது. ஒழுக்க கல்வி, விளையாட்டு நேரங்களிலும், மாணவர்கள் படிக்க வைக்கின்றனர். அதனால், மாணவர் மனதில் விட்டுக் கொடுக்கும் தன்மை, ஒழுக்க முறைகள் மறைந்து வருகின்றன. கல்வித்துறை, மறுகோணத்தில் சிந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பாட வாரியாக ஆசிரியர்கள் விபரம்

விருதுநகர்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பாடவாரியாக உள்ள ஆசிரியர்களின் விபரங்களை ஜன.,27 முதல் ஜன.,29 மாலை 5 மணிக்குள் www.tn.dge.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளித் தலைமையாசியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரிஒருவர் கூறுகையில்,“ஒரு மாவட்டத்தில் எந்த பாடத்தில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என தெரிந்தால், தேர்வு திருத்தும் பணிகளில் எதாவது ஒரு பாடத்தின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின், அந்த பாடத்தின் ஆசிரியர்கள் அதிகம் உள்ள மாவட்டத்திற்கு விடைத்தாளை அனுப்பி, விரைவில் திருத்தும் பணியை முடிக்க முடியும்என்ற திட்டத்துடன் இதன் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது,” என்றார்.

பள்ளிக் கல்வித் துறை-இளநிலை உதவியாளர் நியமனம்: கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காகதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்குசனிக்கிழமை (ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6 என்ற முகவரியில்சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் தகுதி பெற்றவர்கள், தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு கடிதத்தையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் எடுத்து வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.