யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/3/16

பாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்பு

தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம்முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. 
இவற்றில், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, ஓராண்டில் இருந்து,இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
என்.சி.டி.இ., உத்தரவு:
அதே போல், இரண்டு ஆண்டு படிப்பில்புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, என்.சி.டி.இ.,உத்தரவிட்டது; பாடத்திட்டத்தின் அம்சங்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பியது.இதன் அடிப்படையில், தமிழகத்துக்கு தேவையான பாடத்திட்டத்தை, கல்வியியல் பல்கலை கடந்த ஆண்டே தயாரித்தது.கல்லுாரிகள் எதிர்ப்பு:ஆனால், இதற்கு தமிழக அரசு உரிய நேரத்தில் அனுமதி அளிக்கவில்லை. செப்டம்பரில் மாணவர்களை சேர்த்த பின், அவசர அவசரமாக பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, கல்வியியல் பல்கலை வெளியிட்டது.புதிய பாடத்திட்டப்படி, முதல் ஆண்டு மாணவர்கள், ஒன்பது பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதற்கு தனியார் கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, பாடத்திட்டத்தை திருத்தும் பணியில் உயர்கல்வித் துறை ஈடுபட்டது.இதுவரை, 15 முறை பாடத்திட்டம் திருத்தப்பட்டும், இன்னும் பாடத்திட்டம் முடிவாகவில்லை என, கல்லுாரி நிர்வாகங்கள் தெரிவித்தன.இழுபறி நிலை:கல்லுாரி முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:பாடத்திட்டத்தை, உயர்கல்வி அதிகாரிகள் தன்னிச்சையாக திருத்துவதால், மாணவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என, அவர்களுக்கு தெரியவில்லை.
பொதுவாக பாடத்திட்டத்தை உருவாக்கினால் அதற்கு, கல்வியாளர்கள்,கல்லுாரிகள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் கொண்ட குழு மூலம் கருத்து கேட்க வேண்டும்.கல்வியாளர் கருத்துகளின் படி, திருத்தம் செய்ய வேண்டும் அல்லது புதிய அம்சங்களை சேர்க்கவோ வேண்டும்.இதை கல்வியியல் பல்கலை அதிகாரிகள் செய்யாததால், பாடத்திட்டத்தை முடிவு செய்வதில் இழுபறி நிலை உள்ளது.தற்போதே, ஆறு மாதங்களாக மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது என்று தெரியாமல் கல்லுாரிகள் தவிக்கின்றன. அடுத்த மாதம் தேர்வும் வந்து விடும்; அதற்குள் புதிய பாடத்திட்டம் கிடைத்து, பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா அல்லது தேர்வை தள்ளி வைக்க வேண்டுமா என, குழப்பத்தில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கல்விக் கடன்

கல்லீரல் காக்கும் பசலைக்கீரை

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்

கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்

ஒரு 'டம்ளர்' குடிநீரில் ஒரு கோடி 'பாக்டீரியா'

உளவியல் சொல்லும் உண்மைகள்

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி?

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று

SBI - useful information

15/2/16

'ஜாக்டோ'வில் குழப்பம்

ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக,'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக, பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த அமைப்புகள், 12 ஆண்டுகளுக்கு முன் நடத்திய வேலைநிறுத்த போராட்டம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது; 'டெசோ, டெஸ்மா' சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.


இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பின், இந்த இரு அமைப்புகளும் ஒற்றுமையாக, 2015 பிப்ரவரி முதல், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல்,உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் என, ஐந்து வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன; ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.சில தினங்களுக்கு முன், இரு அமைப்புகளையும் தனித்தனியே அழைத்து, அமைச்சர்கள் குழுபேச்சு நடத்தியது. பேச்சு தோல்விஅடைந்ததால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதே நேரத்தில், 'ஜாக்டோ' அமைப்பினரிடம்பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், 'பிப்., 16க்குபின், கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்' என, உறுதியளித்தனர்; அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.இந்நிலையில், 'ஜாக்டோ' அமைப்பில் இடம்பெற்றுள்ள, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து, நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடுமுதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பிப்., 17 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது.'ஜாக்டோ' அமைப்பில் உள்ள சங்கங்கள், தனித்தனியே வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பிப்ரவரி 16க்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், 17 முதல் அரசு ஊழியர்சங்கங்களுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.கே.டி.ஓ.சுரேஷ்மாநில தலைவர் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்வேலைநிறுத்தம் தொடர்பாக, கூட்டுக் குழுவில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியை ஏற்று, பிப்., 16 வரை காத்திருக்க முடிவுசெய்துள்ளோம்.இளங்கோவன்'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்

ரயில்வே ஊழியர்கள் ஏப். 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 13 லட்சம் பேர் பங்கேற்பார்கள்

நாடு முழுவதும்ரயில்வே ஊழியர்கள் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதில் 13 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.‘மத்திய அரசு ஊழியர்களுக் கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும். அடிப்படை ஊதி யம் ரூ.26 ஆயிரம் என்று நிர்ணயித்து, இதற்கேற்ப மற்ற சம்பள விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 


ரயில்வே தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் மத்திய அரசு ஊழியர்களின் ‘தேசிய கூட் டுப் போராட்டக் குழு’ அமைக் கப்பட்டுள்ளது.இதில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளன. அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் (ஏஐஆர்எப்), இந்திய ரயில்வே தொழி லாளர் சம்மேளனம் (ஐஎன் டியூசி), தெற்கு ரயில்வேயில் எஸ்ஆர்எம்யூ, டிஆர்இயூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன. வேலை நிறுத்தம் தொடர்பான அறி விப்பை எஸ்ஆர்எம்யூ தலைவர் கண்ணையா நாளை (15-ம் தேதி) அறிவிக்கவுள்ளார்.இந்நிலையில், டிஆர்இயூ சங்கத்தின் செயல் தலைவர் ஆர்.இளங்கோவன் நேற்று கூறியதாவது:மார்ச் 11-ம் தேதி நோட்டீஸ்புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கக் கூடாது, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். 

அதற்கான நோட்டீஸை ரயில்வே மண்டலங்களில் உள்ள பொது மேலாளர்களிடம் மார்ச் 11-ம் தேதி வழங்க உள்ளோம். தெற்கு ரயில்வேயில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் முதல்வர் நல்ல முடிவு அறிவிப்பார்: சத்துணவு ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பில் இடம்பெற்ற சங்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின.இந்த நிலையில் இந்த கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது.


அதில் இடம் பெற்ற பழனிசாமி,டெய்சி ஒரு அணியாகவும், மு.வரதராஜன், ராஜேந்திரன், ஆறுமுகம், மீனாட்சி, முருகேஸ்வரி ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்தனர்.வரதராஜன் தலைமையிலான சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து விலகி கொண்டனர். போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து மு.வரதராஜன் கூறியதாவது:–சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் பழனிசாமி மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவாக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை திசை திருப்பி கொண்டு சென்றார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் கூட்டமைப்பில் இருந்து விலகி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.சட்டசபை கூட்டத் தொடரில் முதல்– அமைச்சர்எங்கள் கோரிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறோம். சாதகமான அறிவிப்பு இல்லை என்றால் அடுத்தக்கட்டமாக கூடி முடிவு செய்வோம் என்றார்.

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுத 7 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை

தேர்ச்சி சதவிகிதம் குறைந்துவிடும் என்ற காரணத்தினால், ராமநாதபுரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7 மாணவ, மாணவியருக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அப்பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள்வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.


ராமநாதபுரம் அரண்மனை அருகில் உள்ளது தனியார் மேல்நிலைப் பள்ளி. இங்கு, பத்தாம் வகுப்பு பயின்று வரும் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த இனியராஜ், முதலூர்கர்ணன், கலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களான ராஜசிங்கம், ஜோதிகா, மூவிதா, முதுனாள் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார் மற்றும் ராணி ஆகிய 7 மாணவ, மாணவியர், இந்தாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துவிடும் என்ற காரணத்தினால், இவர்கள் 7 பேரும் பொதுத் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டுக்கு நிர்வாகம் விண்ணப்பிக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட 7 பேரும் பள்ளி நிர்வாகத்தின் செயல் குறித்து வெளியே தெரிவித்தனர்.இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெங்குளம்ராஜூ கூறுகையில், பள்ளி நிர்வாகம் இந்த 7 பேரும் பொதுத் தேர்வு எழுதுவதற்குரிய அனுமதிச் சீட்டை பெற நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, அதற்கான காலமும் முடிந்துவிட்டது. எனவே, பள்ளி நிர்வாகத்தின் இச்செயல்குறித்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம் என்றார்.

இது சம்பந்தமாக, பள்ளியில் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு தெரிவிக்கையில், மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்காதது, பள்ளி நிர்வாகத்தின் தவறாகும். தகவல் அறிந்தவுடன் பள்ளிக்கு வந்து விசாரணைநடத்தி உடனடியாக தேர்வுத் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கும்படியும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளோம். விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும் என்றும் தெரிவித்தார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., படிப்பு ரத்து செய்ய கல்லூரிகள் முடிவு.

தமிழகம் முழுவதும், 60 இன்ஜினியரிங் கல்லுாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்துள்ளன.


இன்ஜி., கல்லுாரிகளில், மே முதல் வாரத்தில், மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. ஜூலை, 30க்குள், அரசு ஒதுக்கீடுக்கான இடங்களும்; ஆக., 14க்குள், நிர்வாக ஒதுக்கீடுக்கான இடங்களும் நிரப்பப்படும். அதற்கு முன், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அங்கீகாரம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. வரும், 28ம் தேதிக்குள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., கெடு விதித்துள்ளது. அதனால், 500க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள், அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து வருகின்றன. சில கல்லுாரிகள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை படிப்புக்கான மையத்தை மூடவும், சில பாடப்பிரிவுகளை ரத்து செய்யவும் கோரியுள்ளன. தற்போதைய நிலையில், 60 இன்ஜி., கல்லுாரிகள், பல்வேறு பாடப்பிரிவுகளை ரத்து செய்ய கோரிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., - எம்.பி.ஏ., பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் முன்வராததால், அப்படிப்புகளை தொடர்ந்து நடத்த முடியாது என கல்லுாரிகள் தெரிவித்துள்ளன. அதேபோல், இன்ஜி., கல்லுாரி வளாகங்களில் தனியாக செயல்படும் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை கல்லுாரிகளை மூடவும், சில கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. அதற்கு, மாணவர் சேர்க்கை குறைவு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமை போன்ற காரணங்களை தெரிவித்துள்ளன. இதற்கிடையில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பி.இ., - பி.டெக்.,கில் புதிதாக தொழில் சார்ந்த பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கேட்டுள்ளன. தொழிற்சாலைகளுடன் இணைந்து நடத்தப்படும் புதிய பாடப்பிரிவுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

67 மாணவர் விடுதிகள் திறப்பு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கான 67 விடுதிகள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில், பிப்ரவரி 8-இல் நடைபெற்றநிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலம் இவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்று தமிழக அரசுசனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன், துறை செயலர் (பொறுப்பு) த.உதயசந்திரன், ஆணையர் தா.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விடுதிகளில், கிரானைட் சமையல் மேடை, குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, சூரிய ஒளிமூலம் நீரை சூடுபடுத்தும் கருவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

திறக்கப்பட்ட கட்டடங்களின் விவரம்:

விழுப்புரத்தில் தரை-இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம். திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான 25 விடுதிகள்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவை கவுண்டம்பாளையம்,திருவாரூர் மன்னார்குடி, தேனி பெரியகுளம், நீலகிரி கூடலூர் ஆகிய இடங்களில் கல்லூரிகளுக்கான மாணவ-மாணவியர் விடுதிகள்.விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, கரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளிக்கான 12 விடுதிகள், 

திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,திருவாலூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 20 விடுதிகள்.திருவாரூர் வலங்கைமான், வேலூர் வாணியம்பாடி, கோவை, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர், தேனி காமயகவுண்டன்பட்டி ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகள்

சுகாதார புள்ளியியல் அதிகாரி பணி: TNPSC அறிவிப்பு.

தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


அறிவிப்பு எண். 2/2016 விளம்பர எண்: 429/2016 தேதி:12.02.2016 பணி: Block Health Statistician காலியிடங்கள்: 172 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800 தகுதி: இரண்டாம் வகுப்பில் எம்.எஸ்சி கணிதம் அல்லது புள்ளியியல் முடித்திருக்க வேண்டும். கட்டணம்: ஒரு முறை பதிவு கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.100. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2016 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.03.2016 தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I 05.06.2016 அன்று காலை 10 - 1 மணி வரை. தாள் - II 05.06.2016 அன்று மதியம் 2.30 - 4.30 வரை நடைபெறும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in

சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் -தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்

பள்ளிகளில் மாயமான கம்ப்யூட்டர் சயின்ஸ் அச்சடித்த புத்தகங்கள் வீணாகும் அவலம்சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்ட,'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற கணினி அறிவியல் பாடம், ஐந்து ஆண்டுகளாக மாயமாகிவிட்டது. அதனால்,அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் புத்தகங்கள், பாடநுால்கழககிடங்கில் மக்கி போகும் நிலையில் உள்ளன.


தமிழகத்தில், 2011ல், சமச்சீர்கல்வி பாடத்திட்டம், 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை அறிமுகமானது.அப்போது, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல்அறிவியல் ஆகியவற்றுடன், கணினி அறிவியல் பாடமும் அறிமுகம்செய்யப்பட்டது.

முதலாம்ஆண்டில், கணினி அறிவியலுக்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டு வினியோகம்செய்யப்பட்டன. அடுத்து வந்த ஆண்டுகளில், கணினி அறிவியல் பாடமும், புத்தகமும்பள்ளிகளுக்கு வழங்கப்படாமல் மாயமாகின. இதற்காக அச்சடிக்கப்பட்டபுத்தகங்கங்கள், பாடநுால் கழக கிடங்கில் முடங்கி, கரையான் அரித்து மக்கும்நிலையில் உள்ளதாக தகவல்கள்வெளியாகி உள்ளன.அனைத்து தனியார் பள்ளிகளிலும், 1ம்வகுப்பு முதல், கணினி அறிவியல் பாடம் மற்றும், 'ஸ்மார்ட் க்ளாஸ்' என்றகணினிவகுப்பு கண்டிப்பாகநடத்தப்படுகின்றன. அதனால், ௫ம் வகுப்பிலேயே, தனியார் பள்ளிமாணவர்கள், கணினி இயக்கத்தை கற்று, பள்ளி பாடங்களை, 'டிஜிட்டல்' வழியில்படிக்கவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், அரசு பள்ளிகளில், பிளஸ் 1ல்கணினி அறிவியல் என்ற பாடப்பிரிவை எடுத்தால் மட்டுமே கணினி இயக்குதல் குறித்துபடிக்க முடியும். அதேநேரம், சில பள்ளிகளில் சிறப்பாசிரியர் என்ற அடிப்படையில்,கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,பாடப் புத்தகமோ, முறையான வகுப்போ, தேர்வோ கிடையாது.சான்றிதழை ஒப்படைக்க திட்டம்:தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர்குமரேசன் கூறியதாவது:தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட, 2,000 மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல்பாடப்பிரிவே இல்லை. கணினி அறிவியலில், பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர்தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு எழுத முடியாது; கல்வி அதிகாரி பணிக்கான,ஏ.இ.ஓ., - டி.இ.ஓ., தேர்வையும் எழுத முடியாது.அதனால், 21 ஆயிரம் பேர் கணினிஅறிவியல் முடித்து விட்டு, வேலையில்லாமல் தவிக்கிறோம்; போட்டித் தேர்வுக்கும்வாய்ப்பில்லை. எனவே, எங்கள் சான்றிதழ்களைஅரசிடம்ஒப்படைக்கும் போராட்டம் நடத்தஉள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
9626545446.

14/2/16

போட்டித்தேர்வு அறிவுரை மையமாக மாறும் வேலை வாய்ப்பு அலுவலகம் பதிவு செய்து காத்திருப்போர் நிலை?

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை அழைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத அறிவுறுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து,அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். 


நம்பிக்கையில் 70 சதவீதத்தினருக்கு மேல் தங்களது பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றனர். பதிவு மூப்புஅடிப்படையில் வேலை பெறுவதை விட, போட்டித் தேர்வை எழுதி, அரசு வேலைக்கு செல்ல வழிகாட்டியாக வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தன்னார்வ பயிலகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் சிலர் பயன்பெறுகின்றனர்.இந்நிலையில் பிளஸ் 2, டிகிரி, டிப்ளமா பதிவுதாரர்களை போட்டித் தேர்வு எழுத உற்சாகப்படுத்தும் அறிவுரை வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தாலுகா வாரியாக பதிவுதாரர்கள் சான்றுகளுடன் நேரில் வரவழைக்கப்படுகின்றனர். அரசு வேலைக்கு பரிந்துரைக்க அழைக்கின்றனர் என்ற ஆர்வத்தில் பதிவுதாரர்கள் வருகின்றனர். அவர்களிடம் போட்டித் தேர்வுகளை எழுதி வேலை வாய்ப்பு பெற அறிவுரை கூறுவதால் வேலை வாய்ப்பற்றோர் எரிச்சலடைகின்றனர்.

வேலை வாய்ப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், “ எங்களிடம் பதிவு மூப்பு பட்டியல் பெற்றாலும், நேரடி விண்ணப்பம் பெற்று ஆட்களை தேர்வு செய்யும் முறையே நடைமுறையாகும் நிலை உள்ளது. படித்த ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு குறித்து அறிவுரையை கூறி, அரசு வேலைக்கு வழி காட்ட வேலை வாய்ப்பு இயக்குனரகம் வலியுறுத்தி யுள்ளது. இதற்காக பதிவுதாரர்களை அலைபேசியில் அழைத்து அறிவுறுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது,” என்றார்

படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ்வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 13 பேருக்கு மாற்றுச் சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-


10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரத்தில் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி மாற்றுச் சான்றிதழ் (டி.சி) அளித்து பள்ளியை விட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒரு சில மாவட்டங்களில் ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும், இவ்வாறு செய்வது தவறாகும். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், குறைந்தபட்சமதிப்பெண் பெறவும் கற்றல் உபகரணங்கள், குறுந்தகடுகள், கையேடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது, கையேடுகள், உபகரணங்கள் மூலம் அவர்களின் கல்வித்தரத்தைஉயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு ஏற்கனவே கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை முழுவதுமாக நம்பி பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

தமிழக அரசும் மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கியுள்ள இந்தத் தருணத்தில் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.அதுபோன்று நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுமாயின் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.