யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/16

அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு

3 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகத்துடன் ஆங்கில இலக்கண பயிற்சித்தாள் அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு



மொழித்திறன் மேம்பாட்டுக்காக3 முதல் 8-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்குஆங்கில இலக் கணபயிற்சித்தாள்கள் பாடப்புத்தகத்துடன் இணைத்துவழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்பி.பெஞ்சமின் அறிவித் துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று

பள்ளிக் கல்வித்துறை மானியகோரிக்கை மீதானவிவாதத்துக்கு பதிலளித்துஅவர் பேசியதாவது:



பள்ளி கல்வித்துறைக்கு கடந்த 5ஆண்டுகளில் 86,193 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுடன் சேர்த்து ரூ.1.10லட்சம் கோடிஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான நலத்திட்டத்துக்காக ரூ.15,474.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான சிறப்புஊக்கத்தொகை திட்டத் தின் கீழ்ரூ.1,810 கோடி மாணவர் கள்வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்துக்காக இந்த ஆண்டுரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிஅவசியம் என்பதைகருத்தில்கொண்டு, அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வியில் 2012-13ம் ஆண்டுமுதல் ஆங்கில வழி பிரிவுகள்தொடங்கப்பட்டுள்ளன.தற்போது வரை 3 லட்சத்து 95ஆயிரத்து 858 மாணவர்கள்இதில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். ஆசிரியர்பணியிடங்களை பொறுத்தவரை79,354 பணியிடங் கள்ஒப்புவிக்கப்பட்டு, 74,316பணியிடங்கள் பணி மூப்பு மற்றும் நேரடி நியமனம் மூலம்நிரப்பப்பட்டுள்ளன.மாற்றுத்திறனாளி குழந்தைகள்ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 353பேருக்கு கல்வி, உதவிஉபகரணங்கள் ரூ.32.15கோடியில் வழங்கப்படும்.கல்வியில் பின்தங் கியஒன்றியங்களில் செயல்படும் 44மாதிரி பள்ளிகளுக்கு ரூ.4கோடியில் கணினி மற்றும்உபகரணங்கள் வழங்கப்படும்.


விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்று வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 93 பகுதி நேரநூலகங்கள் ஊர்ப்புறநூலகங்களாக தகுதிஉயர்த்தப்படும். இதற்கெனநூலகர் பணியிடங்கள்உருவாக்கப்படும். சென்னைமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தில் ஆங்கிலவழியில் தொடக்க கல்விபட்டயப்படிப்பு தொடங்கப்படும்.இதில், 50 மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்பெறுவர். பள்ளிமாணவர்களின் மொழித்திறன்மேம்பாட்டுக்காக 3 முதல் 8-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணபயிற்சித்தாள்கள் பாடப்புத்தகத்துடன் இணைத்து வழங்கப்படும்.அரசு தேர்வு இயக்ககத்தில்தேர்வு பணிகளை மேற்கொள்ளதனிப்பிரிவு அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது:
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.இதற்காக அரசு சார்பில் அனுபவம்வாய்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்.

உத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு, பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது.
அங்குள்ள கான்பூர் மாநகராட்சி சார்பில், 'துப்புரவு தொழிலாளர் பணிக்கு, 3,275 இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்கள் தேவை' என, விளம்பரம் செய்யப்பட்டது. அதில், 1,500 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மற்றவை, இடஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படவுள்ளன.

இதற்கு கல்வி தகுதி எதுவும் தேவையில்லை.ஆனாலும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், இந்த பணிக்காக குவிந்துள்ளன. விண்ணப்பித்த பலர், பட்டபடிப்பு, முதுநிலை பட்டங்கள் பெற்றவர்கள். விண்ணப்பித்த பலரின் கல்வி தகுதியை பார்த்து, அதிகாரிகளுக்கு தலை சுற்றத் துவங்கியுள்ளது. 'அதிகம் படித்த இவர்களை, துப்புரவு பணிக்கு எப்படி தேர்வு செய்வது' என, மாநகராட்சி நிர்வாகம் குழம்பி போயுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் இன்னும் உள்ளதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை, ஏழு லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை----பொதுஅறிவுகட்டுரை,


வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் ஆசிரியர் தின சிறப்பு கட்டுரைபொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.
மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.
இனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.
குப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கமாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.
அதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் "" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே! இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்'' என்று பல முறை சொல்லியும் அந்த மாணவர் அழுக்கான குல்லாவையே அணிந்து வந்தாராம். இதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்த ஆசிரியர், மாணவரின் தலையிலிருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தாராம்.
ஆசிரியரே தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்துச் சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டதும் அந்த மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். அதன் பிறகு அந்த மாணவர் குல்லாவை எப்போதும் சுத்தமானதாகவே அணிந்து வந்தாராம்.
கல்வியை மட்டும் மாணவருக்குக் கற்றுத் தராமல் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுத்தந்த இந்த ஆசிரியர் யார்?
தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்தவர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பி.எச்டி. டாக்டர் பட்டம் பெற்றவர். மிகச் சிறந்த கல்வியாளர். அவர் தான் டாக்டர் ஜாகீர் ஹுசைன்.
அவர் நடத்தி வந்த பல்கலைக்கழகத்துக்கு காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் உள்பட பலரும் நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவரது பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தவர்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்த பலரும் திடீரென நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டனர்.
நிதி நிலைமை மோசமான நிலையிலும்கூட கல்விக் கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாத ஜாகீர் ஹுசைன், நிதி நிலைமையைச் சரிசெய்ய தன்னுடைய சம்பளத்தையும் மற்ற ஆசிரியர்களின் சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதென முடிவு செய்தார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் அதற்கு உடன்பட்டார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.
அனைவரும் மாதம் ரூ.300 சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால் மற்ற பல்கலைக்கழகங்களில் பணி செய்த ஆசிரியர்களின் சம்பளமோ ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்த நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ரூ.300 மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த செய்தி மிகப்பெரிய தியாகமாகப் பேசப்பட்டது.
ஊதியக் குறைவுக்காக எந்தவித ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ நடத்தவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்தது. மாதம் ரூ.300 சம்பளமாகப் பெறும் தொகையையும் குறைத்துக் கொண்டு ரூ.200 சம்பளமாகப் பெற்றனர். இதுவும் அதைவிட பெரிய தியாகச் செயலாகப் பேசப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு நிதி நிலைமை மேலும் மோசமாகவே ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை ரூ.150 ஆகவும் குறைத்துக் கொண்டனர்.
ஆனால் ஜாகீர் ஹுசைனோ தனது சம்பளத்தை ரூ.95 ஆக குறைத்துக் கொண்டார். இந்த 95 ரூபாய் மாதச் சம்பளத்தில் தான் சுமார் 20 ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.
இந்த தேச உணர்வும், தியாக உணர்வும் இருந்த கல்வியாளரைத்தான் இந்தியா தனது குடியரசுத் தலைவருக்கான கட்டிலில் மூன்றாவது முறையாக அமரவைத்து அழகு பார்த்தது.
இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். கீழே இருப்பவர் மேலே போக ஏறிச்செல்ல உதவும் ஏணியும், இக்கரையில் இருப்பவர் அக்கரைக்குச் செல்லத் தோணியும் உதவுவதைப் போல மாணவச் செல்வங்களுக்காகவே தங்களை உருக்கிக் கொண்டு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும் இந்த மெழுகுவர்த்திகள் போற்றுதலுக்குரியவர்கள். வணக்கத்துக்கு உரியவர்கள்.
ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அப்துல் கலாம்களாக மாற்றி விட முடியும். அவமானங்களும், அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
சம்பவங்கள் மூலம் விளக்கி அவர்களை உருக வைக்க முடியும்.மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்துவோம்!



ஆசிரியர்களுக்கு வரிசலுகை -சலுகையல்ல, அங்கீகாரம்...தினமணி கட்டுரை---பொதுஅறிவுகட்டுரை,

ஆசிரியர்களுக்கு வரிசலுகை -சலுகையல்ல, அங்கீகாரம்...தினமணி கட்டுரை
மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம்.
மோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா போன்ற 50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள மக்கள் தொகையின் கூடுதலைவிட அல்லது கனடா மக்கள் தொகையின் மூன்று மடங்கைவிட இது அதிகம்.
ஆனால், கல்வியாளர்களுக்கு, எனக்கு, அந்த எண்ணிக்கை தொடக்க மற்றும் அடிப்படைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையைத்தான் நினைவுபடுத்துகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வி ஆண்டு அறிக்கையின் புள்ளி விவரங்கள் சில முக்கிய பிரச்னைகளை எழுப்புகின்றன. அதிகமான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளனர், பள்ளிக்கு வருகின்றனர் என்கின்ற நல்ல செய்திகளுக்கிடையே கவலையளிக்கும் ஒரு செய்தியும் இருக்கிறது.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 5.5 கோடி குழந்தைகளிடையே, எழுத்துகளை இன்னதென்று கண்டறிய முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 13% லிருந்து 32% வரை அதிகரித்திருக்கிறது.
அதுபோலவே, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளில் பயிலும் எட்டு கோடி மாணவர்களிடையே 50% மாணவர்கள் அடிப்படைக் கணிதத்தில் இன்னும் கூடுதல் பயிற்சி பெற வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களின் வாசிக்கும் திறன் போதுமானதாக இல்லை.
ஆசிரியர் பற்றாக்குறையினால் உயர்கல்வித் துறையில் நிலவும் நெருக்கடி பற்றி, சொல்லாமலிருப்பதே மேல். நம் பள்ளி முறை, தர அடிப்படையில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு வகுப்பிலும் கற்க வேண்டிய கல்வியைப் புறக்கணிக்கிறது.
கல்லூரிச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டால், அவை கல்லூரியை விட்டு வெளியே செல்வதற்காக இருக்கிறதே தவிர, தகுந்த தொழிலுக்கோ வேலைக்கோ மாணவர்களை தயார்படுத்துவதாக இல்லை.
இதை உடனே மாற்றிவிட முடியாதுதான். ஆனால், கல்வித் துறையில் தலைமை தாங்கும் ஆசிரிய - ஆசிரியைகள் மனது வைத்து முனைப்புடன் செயல்பட்டால் இதனைக் கவனித்து சரி செய்துவிட முடியும்.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஆசிரியர்களுக்குப் போதிய சம்பளம் இருக்கவில்லை. வாழ்க்கை வசதிகள் கிடையாது. பணி நிரந்தரம், ஓய்வூதியம் என்று எதுவும் கிடையாது.
ஆனாலும், அவர்கள் தனிப் பயிற்சி (டியூஷன்) எடுக்கவில்லை. தனது மாணவ - மாணவியருக்குத் தனி கவனம் செலுத்திப் பாடம் புகட்டினார்கள்.
வீட்டில் வறுமை இருந்தாலும், ஆசிரியர் பணிக்கு வெளியுலகில் கெüரவம் இருந்தது. வருங்கால சந்ததியரை உருவாக்குகிறோம் என்கிற கடமை உணர்வும், பெருமிதமும் அவர்களுக்கு இருந்தன.
ஆசிரியப் பணி என்பது சேவையாகவும், ஆசிரியர்கள் தெய்வீகமானவர்களாகவும் கருதப்பட்ட காலம் அது. இன்று அப்படியில்லை.
இன்றைய ஆசிரியர்களுக்கு அவர்களது பணி என்பது ஏனைய அலுவலகப் பணிகளைப் போன்ற ஒன்றாகத்தான் தெரிகிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தி, நல்ல தரமான மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களை சமுதாயம், அதாவது, அரசு அங்கீகரித்து அவர்களது பணியை "தேச சேவை'யாக ஏற்றுக் கொள்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுகள் மட்டுமே போதாது.
பிரதமர் மோடி உணர்ச்சி ததும்பும் தன்னுடைய ஆசிரியர் தின உரையில் ஆசிரியர் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட விரும்புவதாகச் சூளுரைத்தார். உலகத்திற்கு ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அது மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கக்கூடிய லட்சியப் பார்வையாகும். அதற்குத் தகுந்த செயல்பாட்டுத் தலையீடு வேண்டும். என்.சி.டி.ஈ (NCTE) இதில் முனைப்போடு இறங்கி உள்ளது.
சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதன் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டப் படிப்புத் திட்டம் ஓர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை ஆகும். இதன்மூலம், இளைஞர்களை ஆரம்பத்திலேயே கவர முடியும்.
வழக்குரைஞர்கள், மருத்துவர்களைப் போல ஆசிரியர்களும் தொழில்முறைக் கல்வி பயில இது வழிகோலும். ஒரு பல்கலைக்கழகம் பலத்த போராட்டத்துக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பை ஆரம்பித்தது போன்ற முயற்சி இது.
அத்தகைய செயல்படும் கல்வித் துறையின் புதிய திட்டத்திற்கு மாறுதலை உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிதி உதவி அவசியமாகிறது.
நிதித் துறையின் தன்னிச்சை அதிகாரத்தினால், கடந்த எட்டு ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம் கோடி வரியானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியை சிலர் பாராட்டுகிறார்கள். சிலர் குறை கூறுகிறார்கள். அது போகட்டும். பெரு நிறுவனங்களுக்கு அளித்தது போன்ற குபேர வரிச் சலுகையை ஆசிரியப் பெருமக்களுக்குத் தர வேண்டியதில்லை. ஒரு குசேல சலுகையாவது ஆசிரியர்களுக்குத் தரப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
அதன் மூலம், ஆசிரியர் சமுதாயமே புத்துணர்வுடன் பிரதமர் மோடி விரும்பும் புதிய இந்தியாவைப் படைக்க முனைப்புடன் செயல்படும் என்றால், ஏன் ஆசிரியர்களுக்கு அதுபோன்ற சலுகையை அரசு தரக்கூடாது?
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்குவதுடன் வரி விலக்கும் வழங்கப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. பெரு நிறுவனங்களுக்கு வரி விலக்குகள் அளிப்பது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவில்லையா?
அதுபோல ஆசிரியர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்டால், அது அறிவு வளர்ச்சிக்கு உதவும் தானே? இதைச் செய்வதால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடப் போவதில்லை.
ஆசிரியர் துறையில் அதிருப்தி வளர்ந்து வருகிறது. ஆசிரியராக விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை அரிதாகி வருகிறது. நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?
ஆசிரியர் பணியில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வத்தை மீட்டெடுத்தாக வேண்டும். அதற்குக் கையாளப்பட வேண்டிய பல வழிகளில் ஒன்று வரிச் சலுகை.
இந்தப் புனிதத் தொழிலுக்கு வருமான வரி விதிப்பை மொத்தமாகக் கைவிடும் கொள்கை (100% I‌nc‌o‌m‌e Ta‌x ‌r‌eba‌t‌e) ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அடையாளமாக இருக்கும்.
தவிர, பிரதமர் இந்த புனிதப் பணியின் மீது கொண்டுள்ள அக்கறையையும் அது வெளிப்படுத்தும். ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயமே பிரதமரின் கனவை நனவாக்க முனைப்புடன் செயல்படும்.
ஆசிரியர்கள் தங்களுக்கு பொறுப்பு இல்லாத இலவச சலுகை கிடைப்பதை விரும்புவதில்லை. இது கவனத்திற்குரியது. எனவே, இந்த முழு வருமான வரிச் சலுகை, "ஆண்டு கல்வி அறிக்கை' (A‌n‌n‌ua‌l Aca‌d‌e‌m‌ic R‌e‌t‌u‌r‌n)ஒன்றை ஒவ்வொரு ஆசிரியரும் தாமாகவே முன்வந்து கணினி மூலமாக அளிப்பதன் அடிப்படையில் அமைக்கலாம்.
ஆசிரியர்களின் ஆண்டு அறிக்கை நான்கு பரிமாணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவை மாணவர் கல்வி, தன் முன்னேற்றம், நிறுவன வளர்ச்சி, சமுதாய சேவை என்பன ஆகும். இந்த அறிக்கையை தேவை அடிப்படையிலும் பரிசீலனையும் செய்யலாம்.
நிறைவேற்றக்கூடிய இலக்குகளை எந்த ஆசிரியர் அடையவில்லையோ அவர் 100 சதவீத வரிச் சலுகைக்கு அருகதையற்றவர்.
மேலும், இத்தகைய (AAR) சமர்ப்பிப்பதில் எந்தவிதமான ஊழலும் இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது என்பது இன்றைய கணினி வளர்ச்சியில் சாத்தியமானதே.
மக்கள் தொகையில் செழுமையூட்டி ஆதாயம் உண்டாக்குவது ஆசிரியர் கைகளில் உள்ளது. அவர்கள் அறிவு வல்லமையைத் தருபவர்கள். வருமான வரி விலக்கு என்பது அவர்களது புனிதமான சேவைக்கு சமுதாயம் தரும் அங்கீகாரம், அவ்வளவே.
நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வர இருக்கும் நிதிநிலை அறிக்கையில், சிறப்பு அறிவிப்பாக ஆசிரியர்களுக்கு வருமான வரி விலக்கு என்கிற அறிவிப்பு வருமானால், அது இந்திய சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடும்.
பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது குபேரர்களுக்குக் கிடைக்கும் கொள்ளை லாபம். ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை என்பது குசேலர்களின் பிடி அவல்!
கட்டுரையாளர்: எஸ். வைத்தியசுப்பிரமணியம்,தலைவர், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

குரூப் 4 தேர்வுகள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு, நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள்குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி,
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345*
*இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121*
*வரி தண்டலர் - 8*
*நில அளவர் - 532*
*வரைவாளர் - 327*
*தட்டச்சர் - 1714*
*சுருக்கெழுத்து தட்டச்சர் - 404

ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிறசெப்டம்பர் மாதம் 8-ம் தேதியாகும். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதியாகும். தேர்வு நாள் வருகிற நவம்பர் மாதம் 6-ம் தேதியாகும்.விருப்பமுள்ளவர்கள் www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாற்ற மத்திய அரசுதிட்டம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது.உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். 
இதன்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பு, தங்கள் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி, தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்து கேட்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டில்லியில் வரும், 23, 24ம் தேதிகளில் நடக்கிறது.இதில், பாடத்திட்டத்தை தரம் உயர்த்துதல், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளி களுக்கு தேவையான பாடத்திட்டம் ஏற்படுத்துதல் போன்ற, பல அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

தேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, நவ., 6ல் நடக்கும். இதற்கான விண்ணப்ப அறிவிப்பை, தமிழக அரசின் தேர்வுத்துறை வெளியிடும் என,என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.