யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/8/16

Advertisement for Admission in B.Ed(IGNOU) for January 2017



தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் பள்ளிகல்விதுறை அறிவிப்புகளை வெளியிட்டார்.


அதில் முக்கியமானதாக, பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் அட்டெண்டன்ஸ் எனும் வருகை பதிவேடு முறை ஒழிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக எம்.என்.சி.நிறுவனங்களில் உள்ளது போல கைரேகை பதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில் பயோ-மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவு முறை முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 45 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் நல்லாசிரியர் விருதும், 5000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நல்லாசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ரொக்கப்பரிசாக 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

5 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 19 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்கு 28.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் 28 கோடியே 55 லட்சம் செலவில் செய்யப்படும்                        

பள்ளிகளில் இணையதளம் மூலம் கல்வியை நடைமுறைப்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 555 நடுநிலைப்பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணினிவழி கற்றல் மையங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்

ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்துவது எப்படி?

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய, நான்கு பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது; இதில், மாவட்ட கவுன்சிலர் மற்றும்
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் கட்சி ரீதியாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் மொத்தம், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர் பதவிகள்; 99 ஆயிரத்து, 324 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, இந்த முறை கட்சி ரீதியாக தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. கட்சி ரீதியாக தேர்தல் நடந்தால், அரசியல் குறுக்கீடுகள் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பயந்தனர். இந்நிலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கு வழக்கம் போல் கட்சி சார்பற்ற தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது; இதில், 54 ஆயிரத்து, 893 பேர் பங்கேற்றனர். இவர்களில் பலர், தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.'இதற்கான முடிவுகள், இன்று பிற்பகல்,

2:00 மணிக்கு மேல், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியாகும்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை – இந்தத் திட்டத்தில் உள்ளபடியே- செயல்பாட்டுக்கு வந்தால் மேல்தட்டு வர்க்கத்தவர்க்கு மட்டுமே இனி உயர்கல்வி கிடைக்கும்; உயர்கல்வி இனி, ஏழைக்கு எட்டாக்கனியாகவே போய்விடும்!

கல்வி எதற்காக?

கல்வி அறிவுக்கானது என்பதை மாற்றி, மதி்ப்பெண்ணுக்கானது என்றும், கல்வி முன்னேற்றத்துக்கானது என்பதை மாற்றி, வேலைவாய்ப்புக்கானது என்றும், கல்வி சமூகமாற்றத்துக்கானது என்பதை மாற்றி, வணிகத்துக்கே என்றும் ஆக்கப்பட்டுள்ள கொடுமையான இன்றைய சூழலில் இந்தப் புதிய தேசியக் கல்விக்கொள்கை ‘குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக’வே தோன்றுகிறது.கல்வியை சேவையாகக் கருதிய காலம் மலையேறிவிட்டது. இப்போது, ‘கல்வி வள்ளல்’ என்றால் நிச்சயமாக கல்வி வணிகர் என்பதே பொருள்!அண்ணாமலையார், பச்சையப்பர், அழகப்பர் இன்ன பிற சான்றோரும், கிறித்துவ மிஷினரியினரும் கல்வியை மக்கள் சேவையாகவும் மக்களோடு தொடர்புகொள்ளும் அறவழியாகவும் பார்த்த காலம் இப்போது இல்லையே!கவிஞர் தங்கம் மூர்த்தி சொல்வது போல,

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் 61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம்ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள்நியமனம்

சென்னை:ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரம் வழங்கியுள்ளது.இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.


அதன்பின், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்; சென்னைக்கு மட்டும் மாநகராட்சி கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வாக்காளர் பதிவு அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.தற்போது, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.அதன்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஊரக வளர்ச்சி துறைஉதவி இயக்குனர், வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அல்லது வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக,வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலரையும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லதுதுணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம்வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. 
இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல்,வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம், 1,277 முதுகலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது; நேற்று, 826 ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குனர்கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்.

தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் தாய் மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கினர்.அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழே கல்வி மொழியாக்கப்பட வேண்டும். அரசு, தனியார் துறைகளில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியிலும் தமிழ்வழியில் படித்தோருக்கே முன்னுரிமை அளித்து 100 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் தரமற்று இருக்கும் அரசுப் பள்ளிகளை தரப்படுத்தி அனைவருக்கும் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளிலேயே பயில வேண்டும். இந்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழிலேயே எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நுழைவுத்தேர்வு

சமீபத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன. இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள் ஓரளவு பங்கேற்றனர். மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களில் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில அரசு பின்பற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்களில் படித்த மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:-

பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்

தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயாரித்தது. இன்றைய சூழ்நிலை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ்-1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. ஆனால் ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் பெயர் அளவில் தான் பிளஸ்-1 வகுப்புகள்நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எனவே பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை உடனே மாற்றவேண்டும். பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த மாநில கல்விமுறையில் படித்த மாணவ-மாணவிகள் வெற்றிபெறுவது சிரமம்.

சிறப்பு வகுப்புகள்

பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வெற்றிபெறுவது சிரமம். சிறப்பு வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது.இவ்வாறு சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதே கருத்தை தமிழக கல்வியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

TNPSC:குரூப்-2 மெயின் தேர்வு: 10 ஆயிரம் பேர் எழுதினர்- 2 ஆயிரம் பேர் தேர்வெழுத வரவில்லை.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் 1094 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத்தேர்வு நடந்தது.இத்தேர்வை 4 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர். 
இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு12 ஆயிரத்து 337 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். விரி வாக விடையளிக்கும் வகையி லான மெயின் தேர்வு சென்னை, கோவை, சிதம்பரம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 8 மையங்களில் நேற்று நடைபெற்றது.சென்னையில் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்எம்டிஏ காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 10 இடங்களில் தேர்வு நடந்தது. மெயின் தேர்வை தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் எழுதினர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுத வரவில்லை. குரூப்-2 மெயின் தேர்வில் 80 சதவீதம் பேர் கலந்துகொண்டதாகவும் 20 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்.

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டேதெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நமது நாட்டில் கல்விக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்து அமைந்த அரசுகளும் அதனை முறையாக மறுஆய்வு செய்யவில்லை. முக்கியமாக 1976-ஆம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கொள்கை மறுஆய்வு செய்யப்படவே இல்லை. இப்போதையஅரசு கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறது.உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கல்வித் தரத்தைப் பேண முடிவதில்லை என்ற பிரச்னை உள்ளது.

இதனைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உயர் கல்வியில் தரத்தைப் பேணுவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் சர்வதேச கல்வி நிலையங்களுடன் நமது மாணவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில்இல்லை என்பது உண்மைதான்.

பல ஆண்டுகளாக நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் மகேந்திர நாத் பாண்டே..

தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016

22/8/16

தமிழ் இரண்டாம் பருவம் ஓன்று முதல் எட்டாம் வகுப்பு வரை

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: பறிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காலி பணி இடங்கள் இல்லை

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 20/8/16 அன்று நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டுமே இடமாறுதலுக்கு வாய்ப்பு கிடைத்தது.


தமிழகம் முழுதும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முன்னிலையில் ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.
ஆனால், தாங்கள் விரும்பிய எந்த மாவட்டத்திலும் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டும் இடமாறுதல் காட்டப்பட்டது. Zone.. ,2,3,4 ல் கணிதத்தில் காலி பணியிடங்கள் இல்லை எனவும்,zone.. 1 ல் மட்டும் ஒரே பணிடம் காட்டப்பட்டத்து.
இது மூன்றாண்டுகள் தொடர்ந்து இதே போன்ற நிலை உள்ளது. கல்வி அதிகாரிகளால் இடங்கள் மறைக்கப்பட்டு வருகிறதா?
அல்லது விலைபோக நிறுத்தி வைக்கப்பட்டதா? என சந்தேகம் எழுகிறது.
வேறு மாவட்டத்தில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய மகன்,மகள், கணவன் பெற்றோர்கள் இவர்கள் விடுத்து இங்கே படும் வேதனைகளுக்கு * இந்த அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது. சங்கங்கள் முனைப்போடு செயல்பட்டு *இதற்கான ஒரு தீர்வை விரைவில் நடவடிக்கைகள். மேற்கொண்டு நல்ல முயற்சி எடுக்க வேண்டும்.
அரசாங்கம் கலந்தாய்வு ஆணையை சென்ற ஆண்டில் நடத்திய முறையை மாற்றி அமைத்து கலந்தாய்வு நடத்த முடியும் எனில் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஒரு சலுகையை ஏன்உருவாக்க கூடாது.
கலந்தாய்வில் முதலில் ஒன்றியத்திற்குள், பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல், உடனே பதவி உயர்வு நடைபெறுகிறது. கடைசியாக மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுகிறது.
ஒன்றியத்திற்குள் , பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம் பதவி உயர்வு நடைபெற்றுவிடுவதால் மாவட்டத்தில் பணி இடங்கள் வாய்ப்பு குறைவு. மாவட்டத்தில் கடைசியாக மாறுதலும்,பதவி உயர்வு நடைபெறுகிறது.
மாறுதல் தனியாகவும், பதவி உயர்வு தனியாக நடத்த வேண்டும். இல்லையேல் முதலில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதை அரசாங்கம் நடைமுறை செய்யுமா?
மாணவர்கள் நலன் கருதி கலந்தாய்வு விதிகளை மாற்றும்போது, தனிதனியாக நடத்த இது சாத்தியம் ஏன் இல்லை. அப்போது அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கருத்தை அரசாங்கம் மற்றும் சங்கங்கள் செவி சாய்க்குமா?
அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் வேலை செய்யும்போது பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் ஏன் அடுத்த ஒன்றியத்திலும் வேறு மாவட்டத்தில் வேலை செய்ய கூடாது.
அரசு அலுவலர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணி புரிந்தால் மாறுதல் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தன் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் வழங்க வேண்டும்.
இல்லையேல் வேறு மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒரு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ந்தது மூன்று ஆண்டுகள் மாறுதல் கிடக்காத வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு ஊக்க ஊதியம் தரவேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி புரியும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதை ஏற்க்குமா? இந்த அரசாங்கம். இவர்களுக்கு குரல் தருவீர்களா? சங்க வாதிகள். 
இவர்களுக்கு இந்த சங்கங்கள் எந்த வகையில் உதவப்போகிறது.
நகரம் ஒட்டி வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அலவன்ஸ் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து தனி ஊதியம் வழங்க வேண்டும்.
அரசாங்கம் முதலில் பணியில் அமர்த்தும்போது விருப்பத்தின் பேரில் பணி சில சமயங்களில் வழங்குகிறார்கள், சில சமயம் அவர்களாகவே பணி அணை தேர்வு(ரேன்டம்) செய்து பணி வழங்குகிறது. ஏன் இந்த முரண்பாடு? இனி வரும் காலங்களில் ஒரே மாதிரியான முறை கடைப்பிடித்து பணி வழங்கவேண்டும்.
ஆசிரியர்கள் நலனுக்காக சங்கம் என்றால் சங்கங்கள், இந்த வகையான ஆசிரியர்களுக்கு சங்கம் ஏதாவது செய்யாதா? 
அரசாங்கத்திடம் ஏதாவது ஒரு வழி ஏற்படுத்தாதா? 
இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் பணிஇடங்கள் இல்லை என்று கூறியே கடமைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சங்கங்கள் ஏன் மௌனமாக உள்ளது.
ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெறும் போதும்,பதவி உயர்வு நடைபெறும்போதும் அனைத்து சங்கங்களும்,AEEO க்கள் அனைவரும் வந்திருந்து தவறு நடைபெறாமல் கலந்தாய்வு நடத்துகின்றனர். ஆனால் மாவட்டம் கலந்தாய்வில் யாரும் இருப்பதில்லை ஏன்?
வேறு மாவட்டத்தில் இருந்து வந்து தங்கள் ஒன்றியத்தில் பணி புரியும் இவர்கள் ஆசிரியர்கள் அல்லவா? இவர்களுக்கு யார் உதவி செய்வது சங்க பொறுப்பாளர்களே சிந்தியுங்கள். இதனால் இடங்கள் மறைக்கப்படுகிறது.
எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற அவல நிலையை ஏற்படாத வண்ணம் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.சங்கங்கள் இதற்கான ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும். அரசிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பேசியோ ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
வேதனையுடன் ஆசிரியர்கள் இவர்களின் புலம்பல் அரசாங்கம் செவி சாய்க்கமா?
ஏதாவது வழி செய்ய சங்கங்கள் முயற்சி செய்யுமா?
அன்புடன்
ஆசிரியர்கள்.*


RMSA SOCIAL ICT TRAINING

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளாலேயே நிரப்பப் பட்டு வந்தன. 

இணையதளம் மூலம் கலந்தாய்வு: 1,277 ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

தமிழக முதல்-அமைச்சர் ஆணையின்படி 2016-17-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 

நேற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலைஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 3,882 முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற விண்ணப்பித்து இருந்தனர். இதில் நேற்று நடந்த இணையதள கலந்தாய்வில் 1,277 முதுகலை ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்துக்குள் மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடந்தது.

இப்பணிகளை பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குனர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று கலந்தாய்வின் மூலம் மாறுதல் நடைபெறுவதை மேற்பார்வை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் பள்ளி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'
பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.