தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளாலேயே நிரப்பப் பட்டு வந்தன.
ஒவ்வொரு கல்லூரி யிலும் 15 சதவீத இடங்கள் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு மூலமாக நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழை வுத் தேர்வு என்ற புதிய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப் படையில் மருத்துவ, பல் மருத் துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.இதில் தமிழகம் உட்பட ஒருசில மாநிலங்களுக்கு மட்டும் இந்த ஆண்டு விதிவிலக்கு அளிக்கப்பட் டிருக்கிறது. எனவே, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் மாணவர் சேர்க்கை முறை மூலம் (பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில்) மாணவர்கள் சேர்க்கப் பட்டார்கள். மத்திய அரசின் உத்தரவுகாரண மாக, அடுத்த ஆண்டிலிருந்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கு மாண வர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற சூழல் உருவாகி உள்ளது. இதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நீட் நுழைவுத் தேர்வுக்கு இப்போ திருந்தே மாணவர்களை தயார்படுத்தத் தொடங்கிவிட்டன. நீட் நுழைவுத் தேர்வானது மாணவர்களின் நினைவாற்றலை சோதிக்கும் வகையில் இல்லாமல் பாடங்களில் அவர்களின் ஆராயும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறனையும் அறியும் வகையில் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்களை செய்து வருகின்றன. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாண வர்கள் சேர்க்கப்படுவதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் அரசு கல்லூரியில் சேருகிறார்கள்.
அடுத்த ஆண்டு நீட் நுழைவுத் தேர் வின் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் என்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு அரசுப் பள்ளிகளை தயார்படுத்தும் வகையில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை நீட் நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் நன்றாக படிக்கும் மாணவ, மாணவி களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் விசேஷ வகுப்பு கள் எடுப்பார்கள். மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வண்ணம் இந்த சிறப்புப் பயிற்சி அமைந்திருக்கும். அரசுப் பள்ளி களில் இத்தகைய சிறப்புப்பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்ணப்பன் கூறினார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஐஐடி, ஜெஇஇ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் வகையில் ‘டேன்எக்ஸெல்’ (TANEXCEL) என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களை படிப்படியாக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) மாநில திட்ட இயக்ககம் மூலமாக இது செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 100 அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. அது இந்த ஆண்டு மேலும் 122 அரசுப் பள்ளி களுக்கு விரிவுபடுத்தப்பட்டு இருக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக