பள்ளிக்கல்வித் துறையில் கடந்த இரண்டு வாரமாக பதவியுயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆகிய பதவிகளுக்கு 03-09-2016 அன்று மாவட்டத்திற்குள்ளும் 04-09-2016 வெளி மாவட்டத்திற்கும் இணையவழி
ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் திடீரென இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.043248/சி3/இ1/2016 நாள்:31.8.2016 -ல் குறிப்பிட்டுள்ள ஆணையின் படி ரத்து செய்து இணையம் வழி அல்லாது(Manual) ஆக நேரடியாக
கலந்துகொள்ள ஆணையிட்டதின் மர்மம் என்ன என்பது புதிராக உள்ளது.
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்தால் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லையென்றாலும் கூட அருகாமை மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடத்தில் தனக்கு மாறுதலைப் பெற்றுக் கொள்வார்.ஆனால் தற்போது Manual ஆக மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றால் அந்த ஆசிரியர்கள் நேரிடையாக கலந்துகொள்ள வேண்டும்.இதனால் தனது சொந்த மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.
அங்கு காலிப் பணியிடம் இல்லையென்றால் வேறு வழி இல்லாமல் பழைய இடத்திலேயே பணிபுரிய வேண்டும்.இந்த வருடம் அருகாமை மாவட்டத்திற்காவது மாறுதல் பெற்றுவிடலாம் என்ற கொஞ்ச ஆறுதலான கனவும் பறிபோகும். காலிப் பணியிடங்களை மறைத்து பணம் பெற்றுக்கொண்டு மாறுதல் வழங்கத்தான் இப்படி ஒரு அறிவிப்பு கடைசி நேரத்தில் வந்துள்ளது என ஆசிரியர் சங்கங்கள் கொதிக்கின்றன.