யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/9/16

"ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் முதல்வர் பரிசு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர் முதல்வர் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அத்துறை அலுவலர் தனலிங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சோóந்த தலா 1000 மாணவ, மாணவியருக்கு முதல்வர் பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 1073 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்த மாணவர்கள், 1,101-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, மாணவ, மாணவியர் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் தங்களது கல்லூரி மூலம் முதல்வர் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

21 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகள்: தணிக்கை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 2011-15 காலக்கட்டத்தில் ரூ.3,231 கோடியில் 21,29,196 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதி, வருவாய், பொது-சமூகப் பிரிவு என தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கணக்காய்வு, தணிக்கை குறித்த அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பொது-சமூகப் பிரிவு கணக்காய்வு, தணிக்கை அறிக்கையில் மடிக் கணினி விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் விவரம்:-

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ""விலையில்லா மடிக் கணினிகள் வழங்குதல்'' எனும் திட்டத்தை ஜூன் 2011-இல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டதா, மடிக் கணினிகளைப் பயன்படுத்த போதுமான ஆதரவு சேவைகள் அளிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்ய கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 21,90,683 மடிக்கணினிகளில் 21,69,196 மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டதுபோக, 21,487 மடிக்கணினிகள் மாவட்டங்களின் வசம் உள்ளன.

கல்வி ஆண்டு முடிந்த பின்னர்...தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு ("எல்காட்') நிதிகள் தாமதமாக விடுவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு மடிக் கணினிகள் கல்வி ஆண்டு முடிந்த பின்னரே விநியோகிக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாக இருந்தும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகளில் நடந்த மடிக் கணினிகள் திருட்டு காரணமாக ஏற்பட்ட இழப்பு, மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்

திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த மாதம் 27, 28 }ஆம் தேதிகளில் நடைபெற்றது.


திருவள்ளூரில் முகமது அலி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு குழப்பங்களுடன் கலந்தாய்வு நடந்து முடிந்ததாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:

சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்குமாறு 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மாலை 4.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படாததால், சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். சிலருக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கிடைக்காததால், தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இதற்கான கடிதமும் முறைப்படி வழங்கப்படவில்லை. இருப்பினும், தகவலறிந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை காலை அங்கு வந்தனர்.

இதில், பாட வாரியாக கலந்தாய்வில், ஒரு பாடத்துக்கு அரை மணி நேரம் வீதம் ஒதுக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

பள்ளிகள் அமைந்திருக்கும் இடம், பல ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிந்து கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் நேரம் வழங்கப்படவில்லை.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அளித்திருந்த புள்ளிவிவரங்கள் பெரும்பாலானவை தவறாக இருந்தன.

பணியில் சேர்ந்த தேதி, தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி வெவ்வேறாக இருந்தும், பணியில் சேர்ந்த தேதியை தற்போது பள்ளியில் சேர்ந்த தேதியாக தவறுதலாக தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.

இந்த பணி நிரவலில் வெளியகரம், வெள்ளியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, போரூர், திருமுல்லைவாயல், பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, பாண்டேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், செல்வாக்குள்ள சில ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்துகொண்டு, தேவையான பள்ளிக்கு மாற்றுவதற்கான ஆணையை திங்கள்கிழமை வாங்கிச் சென்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, கல்வித் துறை அதிகாரிகள் இக்கலந்தாய்வு குறித்து உரிய விசாரணை நடத்தி மீண்டும் பணி நிரவலை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேந்திரீய வித்யாலயா பள்ளி: விதிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இப்பள்ளிகளை அமைக்க போதிய அளவில் நிலம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இப்போது கிராமப் பகுதிகளில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்க 10 ஏக்கர் நிலமும், நகர்ப்புறங்களில் 8 ஏக்கர் நிலமும், பெருநகரங்களில் 4 ஏக்கர் நிலமும் தேவை என்று விதி உள்ளது. இந்த நில அளவை குறைத்துக் கொள்வது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ஏனெனில், பள்ளிகளை அமைக்க போதிய அளவு நிலம் ஒரே இடத்தில் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.

நாட்டில் இப்போது ஆயிரத்துக்கும் அதிகமான கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இப்பள்ளிகளைத் திறந்து வருகிறது

ஆசிரியையின் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆசிரியை உள்பட பலரிடன் ஏடிஎம் அட்டையை நூதன முறையில் பறித்து பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை மகாலட்சுமி (35) பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 1-ஆம் தேதி செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். அவர் பணம் எடுத்த போது ரசீது மட்டுமே வந்துள்ளது.


இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் தன்னை காவலர் என்று கூறிக் கொண்டு, செல்லிடப்பேசியில் பேசியபடியே மகாலட்சுமிக்கு பணம் எடுக்க உதவினார்.

அப்போது, ரூ.5 ஆயிரத்தை எடுத்து மகாலட்சுமியிடம் கொடுத்துவிட்டு, அவரது ஏடிஎம் அட்டைக்கு பதிலாக மற்றொரு ஏடிஎம் அட்டையை அந்த இளைஞர் கொடுத்துள்ளார். இதைக் கவனிக்காமல் அந்த ஏடிஎம் அட்டையை வாங்கிக்கொண்டு மகாலட்சும் வீட்டுக்குச் சென்றார்.

அந்த இளைஞர் ஆசிரியையின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி செங்கம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் ரூ.1.20 லட்சத்தை எடுத்துள்ளார்.

இதுகுறித்த குறுஞ்செய்தி செல்லிடப்பேசிக்கு வந்ததைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகாலட்சுமி, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்குப் பதிந்து, ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான அந்த இளைஞரின் புகைப்படத்துடன் கடந்த 6 மாதங்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், செங்கம் பேருந்து நிலையத்தில் வியாக்கிழமை மாலை சந்தேகத்தின்பேரில், இளைஞர் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர், செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (32) என்பதும், ஆசிரியை மகாலட்சுமியிடம் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதுடம் தெரிய வந்தது.

மேலும், இறையூர் கிராமத்தில் ஒருவரிடம் ரூ.12 ஆயிரம் உள்பட பலரிடம் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அரசின் கடிதம்.

சவாலை சந்திப்பாரா புதிய பள்ளி கல்வி அமைச்சர்?


பள்ளி கல்வித்துறைக்கு, புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக சவாலாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா என, ஆசிரியர் சங்கங்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சராக, பெஞ்சமின் இருந்தபோது, ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், முறைகேடுகள் ஓரளவு களையப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்தன. தற்போது, புதிய அமைச்சராக மாபா பாண்டியராஜன் பதவியேற்றுள்ளார். இவரும், ஒரு கல்வியாளர் என்பதால், பள்ளிக் கல்வியில், மாற்றங்கள் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்துறை உயர் அதிகாரிகள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் நெருக்கடிகளை தாண்டி, அமைச்சரால் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.




சவால்கள் என்ன? : 




● ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள, 10 ஆண்டு கால பழமையான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்

'பயோ மெட்ரிக்' திட்டத்தை முறையாக அமலுக்கு கொண்டு வந்து, 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்கள் மீது, தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, புதிய பங்களிப்பு திட்டம் ரத்து செய்வது குறித்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்

தொடக்க பள்ளிகளில், ஒற்றை இலக்க மாணவர் சேர்க்கையை, அதிகரிக்க வேண்டும்

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்த வேண்டும்

பொதுத் தேர்வுகளில், முறைகேடுகளை கட்டுப்படுத்த, தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இணையாக, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற, திட்டம் வேண்டும்

அரசு பள்ளி ஆசிரியர்கள், அடிக்கடி இடம் மாறுவதையும், அரசு நிகழ்ச்சிகள், அலுவலக பணிகளில் ஈடுபடுவதை தடுத்து, கற்றல் முறையை கண்காணிக்கும் திட்டம் கொண்டு வரவேண்டும்

நலத்திட்டங்களை செயல்படுத்துதல், அதற்கான பொருட்களை கொள்முதல் செய்தலுக்கான, டெண்டர் போன்றவற்றில், வெளிப்படைத்தன்மை வேண்டும்

திறமையான அதிகாரிகளை ஊக்குவிப்பதுடன், பதவி உயர்வில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இப்படி, ஏராளமான பணிகள், புதிய அமைச்சர் முன் காத்திருக்கின்றன. புதிய அமைச்சர், சிறந்த கல்வியாளர் என்பதால், அவரே நேரடியாக, 'பைல்கள்' பார்த்து, முடிவெடுப்பார் என, ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

2/9/16

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்த்தப்படும் - முதல்வர் அறிவிப்பு

CPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

CPS -பற்றிவிளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுவருகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்பாதிப்புகள் ,வடிவம்  ஓய்வூதியவரலாறு தற்போதைய நிலை, பத்திரிகை செய்திகள், CPS திட்டம் பற்றிய கேள்விகள் , பழையமற்றும் புதிய ஓய்வூதிய திட்டவேறுபாடுகள்  உள்ளிட்டவை  இடம்பெற்றுள்ளது. இப் புத்தகம் வேண்டுவோர்தொடர் கொள்க.
தொடர்புக்கு:

திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ் - 96299-27400
C.கார்த்திக்-98654-45689

CPS ACCOUNT SLIP-2015-2016

TRB appointment BT(Maths) Regularisation

துப்புரவு பணியாளர் ஊதியம் CM Cell Letter

DSE:புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மின்னணு மேலாண்மை மூலம் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக..



Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form - ஐ பூர்த்தி செய்து Aeeo அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். CPS MISSING CREDITS

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.

மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.

குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

5,451 காலியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது

Directorate of Government Examinations SSLC Supplementary Examinations, September / October 2016 Time Table

ஆசிய பல்கலை., பட்டியலில் இந்தியாவின் நிலை

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயர்கல்வி வழங்குவதில் முன்னணியில் இருப்பது ஐ.ஐ.டி., எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம். தற்போது நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்ததாக உயர்கல்வியில் இன்ஜினியரிங் படிப்பை ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசை மற்றும் இலக்காக உள்ளது. நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேரலாம். அதுபோல பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனமும் புகழ் பெற்றது. 

இவ்வளவு பெருமை மிக்க நமது ஐ.ஐ.எஸ்சி., மற்றும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் ஆசிய 

நாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

பிரிட்டனின் முன்னணி செய்தி நிறுவனமான 'ராய்ட்டர்ஸ்' ஆசியாவின் சிறந்த பல்கலைக்
கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 75 கல்வி 
நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா எத்தனை:

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஐ.ஐ.டி., 72வது இடத்தையும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) 73வது இடமும் பெற்றுள்ளது.

என்ன காரணம்

இந்தியாவின் சிறந்த ஐ.ஐ.டி.,களான மும்பை மற்றும் டில்லி ஆகியவை இந்த பட்டியலில் உயர்ந்த இடத்தை பெற்றிருக்க முடியும். ஆனால் பல்கலைக்கழகங்கள் என்று கணக்கிடும் போது, இந்தியாவில் அனைத்து ஐ.ஐ.டி., களையும் இணைத்து ஒரே பல்கலைக்கழகமாக வைத்து ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி, மும்பை ஐ.ஐ.டி.,களுடன் புதிதாக துவக்கப்பட்ட ஐ.ஐ.டி.,களையும் சேர்க்கும் போது, சராசரி குறைந்து கடைசி இடமே 
கிடைத்துள்ளது.

23: இந்த 75 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் அதிகபட்சமாக சீனாவின் 23 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா 20, ஆஸ்திரேலியாவில் 6, இந்தியா, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து தலா 2, நியூசிலாந்து 1 என இடம்பெற்றுள்ளன.

டாப் - 10 பல்கலைக்கழகம்

சிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 20 இடங்களில் ஜப்பான் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த 17 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
1) கே.ஏ.ஐ.எஸ்.டி., பல்கலைக்கழகம், தென் கொரியா
2) டோக்கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்
3) சியோல் தேசிய பல்கலைக்கழகம், தென் கொரியா
4) ஒசாகா பல்கலைக்கழகம், ஜப்பான்
5) போஹங் பல்கலைக்கழகம், தென் கொரியா
6) டேஹோகு பல்கலைக்கழகம், ஜப்பான்
7) கியோட்டோ பல்கலைக்கழகம், ஜப்பான்
8) சுங்யிங்வான் பல்கலைக்கழகம், தென் கொரியா
9) யோன்சி பல்கலைக்கழகம், தென் கொரியா
10) கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்

எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

சென்னை: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்., மாதம், பொதுத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, வரும், 6ல் வெளியாகிறது. ''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, செப்., 6 முதல், 10 வரை,

அவரவர் தேர்வு எழுதிய மையங்களில், பெற்றுக் கொள்ளலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.