யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/9/16

ஆசிரியையின் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆசிரியை உள்பட பலரிடன் ஏடிஎம் அட்டையை நூதன முறையில் பறித்து பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை மகாலட்சுமி (35) பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 1-ஆம் தேதி செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். அவர் பணம் எடுத்த போது ரசீது மட்டுமே வந்துள்ளது.


இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் தன்னை காவலர் என்று கூறிக் கொண்டு, செல்லிடப்பேசியில் பேசியபடியே மகாலட்சுமிக்கு பணம் எடுக்க உதவினார்.

அப்போது, ரூ.5 ஆயிரத்தை எடுத்து மகாலட்சுமியிடம் கொடுத்துவிட்டு, அவரது ஏடிஎம் அட்டைக்கு பதிலாக மற்றொரு ஏடிஎம் அட்டையை அந்த இளைஞர் கொடுத்துள்ளார். இதைக் கவனிக்காமல் அந்த ஏடிஎம் அட்டையை வாங்கிக்கொண்டு மகாலட்சும் வீட்டுக்குச் சென்றார்.

அந்த இளைஞர் ஆசிரியையின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி செங்கம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் ரூ.1.20 லட்சத்தை எடுத்துள்ளார்.

இதுகுறித்த குறுஞ்செய்தி செல்லிடப்பேசிக்கு வந்ததைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகாலட்சுமி, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்குப் பதிந்து, ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான அந்த இளைஞரின் புகைப்படத்துடன் கடந்த 6 மாதங்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், செங்கம் பேருந்து நிலையத்தில் வியாக்கிழமை மாலை சந்தேகத்தின்பேரில், இளைஞர் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர், செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (32) என்பதும், ஆசிரியை மகாலட்சுமியிடம் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதுடம் தெரிய வந்தது.

மேலும், இறையூர் கிராமத்தில் ஒருவரிடம் ரூ.12 ஆயிரம் உள்பட பலரிடம் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக