யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/9/16

"மாணவர்கள் அறிவு தேடலில் இருந்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிவரும்

மாணவ, மாணவிகள் அறிவு தேடலில் இருந்தால் மட்டுமே பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும் என, தமிழ்நாடு கடலோரக் காவல் படை கூடுதல் இயக்குநர் சி. சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.


விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சைலேந்திர பாபு மேலும் பேசியதாவது:

பிளஸ் 2 தேர்வில் 6 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்தாலும், சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே உயர் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். மாணவர்கள் அறிவு தேடலில் ஆர்வம் காட்டினால், அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியும். இந்தியா வல்லரசாக வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செய்தாலே இந்தியா வல்லரசாகி விடும். ஆசிரியர்கள் அதிக புத்தகங்கள் வாசித்தால் மட்டுமே மாணவர்களின் திறனுக்கேற்ற அறிவு தேடலை கொடுக்கமுடியும்.

மாணவ, மாணவியர் வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், மகிழ்ச்சி, உழைப்பு, வெற்றி என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து கடினமாக உழைக்க வேண்டும். இந்திய ஆட்சிப் பணி, குடியுரிமை தேர்வுகளுக்கு இலவசமாக ஆலோசனை மற்றும் உதவிகள் செய்து வருகிறேன். எனவே, என்னை இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பின்னர், மாணவ, மாணவிகள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் கதிர்வளவன் வரவேற்றார். முடிவில், சுயநிதிப் பாட பிரிவு இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக