யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/10/16

மீண்டும் முத்திரை பதித்த மூலத்துறை பள்ளி...


மேதகு வேண்டாம்; மாண்புமிகு போதும்'

சென்னை:'மேதகு என்பதற்கு பதிலாக, மாண்புமிகு என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும்' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை, அவர்களது பெயருக்கு முன், மாண்புமிகு எனக்கூறி கவுரவப்படுத்துவர். அதே நேரத்தில், கவர்னரை அழைக்கும் போது, 'மேதகு ஆளுனர்' என, கவுரவமாக அழைப்பர்.

இந்நிலையில், தமிழக கவர்னரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், தமிழக கவர்னரை இதுவரை, 'மேதகு ஆளுனர்' என, குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இனி, 'மாண்புமிகு ஆளுனர்' என அழைத்தால் போதும் என்று, கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். அதே நேரம், கவர்னரை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்திக்கும் போது, மேதகு ஆளுனர் என்றழைப்பது கடைபிடிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரில் வந்தால் உடனே வேலை:டாக்டர்களுக்கு அரசு சிவப்பு கம்பளம்

நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது; 414 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும், எம்.எஸ்., - எம்.டி., என்ற முதுநிலை பட்டம் பெற்ற, அறுவை சிகிச்சை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. அதனால், சிறப்பு பிரிவு டாக்டர்களை, கூடுதலாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மயக்கவியல் - 91; பொது மருத்துவர் - 30; மகப்பேறு மருத்துவர் - 130, ரேடியாலஜி - 22 பேர் உட்பட, 414 சிறப்பு பிரிவு, உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை தற்காலிக பணியில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. எம்.ஆர்.பி., எனப்படும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.'போட்டி தேர்வுகள் இல்லை; நேரில் வந்தால் போதும், வேலையில் சேரலாம். இதற்கு, நவ., 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. 
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:உயர் சிறப்பு மருத்துவம் படித்தோருக்கு, தனியார் மருத்துவமனைகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எதிர்பார்த்ததை விட சம்பளமும் கிடைக்கிறது; இதனால், அரசு பணியில் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளது. எனவே, நிலைமையை உணர்ந்த அரசு, நேரில் வந்தால் வேலை என, சிவப்புக் கம்பளம் விரிந்துள்ளது. இதற்கு உரிய பலன் கிடைக்குமா என, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுதவிர, முதுநிலை மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனைகளில் நிபந்தனை அடிப்படையில் பணியாற்றி வரும், 1,800 டாக்டர்களையும், அரசு பணி வரன்முறை செய்யஉள்ளது.

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன?

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நிலையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. கருத்துக் கேட்பு, செப்., 30ல் முடிந்தது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில கல்வி அமைச்சர்களுடன், கல்விக்கான மத்திய அரசு குழு, நாளை ஆலோசனை நடத்துகிறது. எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது, 10ம் வகுப்பில், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத் திட்டத்திலும், கட்டாய பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.இதில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபீதா உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து, தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உள்ளனர்.

'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'

பேராசிரியர் பணி தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.நாடு முழுவதும், பல்கலை மற்றும் கல்லுாரி களில் பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மட்டும் பேராசிரியராக, தமிழக அரசு நடத்தும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழகத்தில், தெரசா பல்கலை, பிப்ரவரியில் இத்தேர்வை நடத்தியது. எட்டு மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. 

உயர் கல்வி துறை:செட் தேர்வுக்கு பின், ஜூலையில் ஒரு நெட் தேர்வு முடிந்து, அடுத்த தேர்வு, ஜனவரியில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு, அக்., 17ல் துவங்கியது. 'செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர், நெட் தேர்வு எழுதுவர். எனவே, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும்' என, நெட், செட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில், '10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது' என, நமது நாளிதழில், அக்., 20ல், செய்தி வெளியானது. 
தெரசா பல்கலை :இதைத் தொடர்ந்து, இன்று காலை, 10:00 மணிக்கு, செட் தேர்வு முடிவு வெளியாகும் என, தெரசா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வு முடிவை, http://www.motherteresawomenuniv.ac.in, www.setresult2016.in என்ற இணையதளங்களில் - நமது நிருபர் -அறியலாம்

சித்தா கலந்தாய்வு நடக்குமா?வரும் 31ல் முடியுது அவகாசம்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு மாதங்களாக தவம் கிடக்கின்றனர். ஒரு வாரத்தில், சேர்க்கை அவகாசம் முடிவதால், கலந்தாய்வு நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதிக் கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன; இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

விண்ணப்பித்து, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், தர வரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. வழக்கமாக, அக்., இறுதிக்குள் கலந்தாய்வு முடிந்து, கல்லுாரிகள் துவங்க வேண்டும்; இதுதான் விதிமுறை. இதன்படி, அவகாசம் ஒரு வாரத்தில் முடிகிறது. அதனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்குமா என, விண்ணப்பித்தோர் புலம்புகின்றனர். தனியார் கல்லுாரிகளில் இடங்கள் நிரம்ப வசதியாக, இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள், காலம் தாழ்த்துகின்றனரோ என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி, மாணவர் சேர்க்கைக்கு, 'ஆயுஷ்' கவுன்சில், அனுமதி அளிக்கும். ஆய்வுகள் முடிவடையாததால், மாணவர் சேர்க்கை அனுமதி இன்னும் கிடைக்கவில்லை; அதனால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை. மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, இம்மாதம் வரை அவகாசம் உள்ளது. அதற்குள் அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. முறையான அனுமதி கிடைக்காத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்படும். அடுத்த மாதம் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Atm Card இல் பின் நம்பர் மாற்றப் படவேண்டியவர்கள் விவரம் வெளியீடு இதில் உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் யார் a/c என்பதை நீங்கள் search இல் உங்களது district விவரம் தந்தால் போதும் உங்களது district இல் உள்ளவர்கள் விவரம் தோன்றும் அல்லது mobile no கொடுத்து search செய்து கொள்ளவும் இவர்கள் உடனடியாக தங்களது a/c pin no change செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் atm card pin no திருடப்பட்டவர்கள்  விவரம் வெளியீடு ...
இதில் நீங்கள் அல்லது உங்களது குடுமப்த்தில் உள்ளவர்களது a/c  atm card pin no கூட திருடப்பட்டிருக்கலாம் 
Atm Card இல் பின் நம்பர் மாற்றப் படவேண்டியவர்கள் விவரம் வெளியீடு இதில் உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் யார் a/c என்பதை நீங்கள் search இல் உங்களது district விவரம் தந்தால் போதும் உங்களது district இல் உள்ளவர்கள் விவரம் தோன்றும் அவர்களது atm pin no   உடனடியாக மாற்ற படவேண்டும்.
அல்லது உங்களது வங்கியில் கொடுத்த mobile பதிவு செய்து உங்களது a/c திருடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்....

23/10/16

கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. 
அதன் முக்கிய அம்சங்களை, மூன்று மாதங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்டது;
அதற்கு, எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், கல்விக் கொள்கை குறித்த முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில், வரும், 25ல் நடக்கிறது. இதில், அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

*2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை*

TNGTF பொதுச்செயலாளர் செய்தி;

*2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை*

2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.இவர்கள் 5 ஆண்டிற்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனையுடன் பணியில் சேர அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி
2011-இல் பணி நியமனம் செய்யப்பட்ட இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆசிரியர்களின் 5 ஆண்டு பணிக் காலம் அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டு, நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் உத்தரவில் இதுகுறித்து தெளிவான விளக்கம் இல்லாததால், அந்தப் பள்ளிகளில் பணி யாற்றுவோரும் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து அரசு எதுவும் தெளிவான அறிவிப்பு வெளியிடாத நிலையில் சில மாவட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் இம்மாதம் வழங்க வேண்டிய ஆண்டு ஊதிய உய்ர்வை தன்னிச்சை யாக நிறுத்தி வைத்துள்ளனர்.இது ஆசிரியர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்வே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு *தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும*் என கேட்டுக்கொள்கிறோம்.
*பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்*
_பொதுச்செயலாளர_
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

சி.பி.எஸ்.இ., 10 ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு

கிராமமா, நகரமா? கல்வி அதிகாரிகள் குழப்பம்

அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு

முன் அரையாண்டுத் தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

வினாவங்கி புத்தகம் வினியோகம்

22/10/16

முடக்கப்பட்ட டெபிட் கார்டு: புதிய அட்டை எப்போது கிடைக்கும்? எஸ்பிஐ பதில்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனுடைய ஏடிஎம்களை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கியின் 6 லட்சம் டெபிட் கார்டுகள் உட்பட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டன்.


இது குறித்து எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக, பணம் எடுத்தல் மற்றும் பண பரிவர்த்தனைகளை, அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மட்டும் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் முடக்கப்பட்ட 6 லட்சம் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக புதிய டெபிட் கார்டுகள் இன்னும் 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்!

தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது விநியோகத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:


கடந்த சில வருடங்களாக புதிய குடும்ப அட்டைகள் வழங்க இயலாத நிலையில் உள்தாள் ஒட்டப்பட்டு பொருட்கள் வழங்கப் படுகின்றன.இவ்வாறு கால நீட்டிப்பு செய்யப் பட்ட குடும்ப அட்டை கள் மூலம் டிசம்பர் மாதம் வரை மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

இனி கையடக்கமான புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்க அரசு திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன் கடை களிலும் நவீன எலக்ட்ரானிக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதற்குரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து விண் ணப்பிக்க வேண்டும்.

பொது விநியோகத்துறை அதிகாரிகள் வீடுகளில் கள ஆய்வு செய்து, புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில் வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்கும் போது ஒரிஜினல் சான்று கள் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளும் இனி ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும்

டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி: ட்ராய் அறிவிப்பு.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.


ஜியோ வழங்கும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று, இந்திய தொலைத்தொடர்பு சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ராய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - தொலைத்தொடர்புச் சேவை விதிமுறைகளை மீறும் வகையில் ஜியோ செயல்படுவதால், அதனை 90 நாள் சலுகை அறிவிப்பு என்ற காலத்தை கடந்து, அனுமதிக்க முடியாது.

ஜியோ நிறுவனம், தனது 4ஜி இலவச சேவைகளை நீட்டிப்பதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டிராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

710 (210 BTs AND 500 PGs) POST PAY AUTHORIZATION




சி.பி.எஸ்.இ வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் ?

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. புதிய தலைவரை நியமிப்பதில் தாமதம் அரசு நிர்வாக முடக்கத்தையே உணர்த்துகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.


108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு

பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, பி.எஸ்ஸி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அல்லது செவிலியர் படிப்புகள், மருந்தாளுநர், பரிசோதனை நுட்புநர் உள்ளிட்ட படிப்புகளை முடித்த ஆண், பெண் இரு பாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.


எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறை நேர்முகம் ஆகியவற்றின்படி தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாள்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுப் படியாக ரூ. 100 வழங்கப்படும்.

ஓட்டுநர் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தவறியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் 23 முதல் 35 வயதுக்கு மிகாத ஆண்கள் தேர்வு செய்யப்படுவர். 162.5 செ.மீ. உயரம், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகளைக் கொண்டோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். மாத ஊதியம் ரூ. 11,100. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றைக்கே பணிநியமன ஆணை வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்க வருவதற்கான படிகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 73974 44158, 73977 24804 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.