வீட்டு வசதி வாரியத்தில், தவணை கட்ட தவறியோருக்கு, வட்டி தள்ளுபடி திட்டத்தை, ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க முதல்வர் அனுமதித்தும், அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
நிலுவை தொகை : தமிழகத்தில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள், முறையாக தவணை செலுத்தாததால், வட்டி, அபராத வட்டி ஆகியவை சேர்ந்து நிலுவைத் தொகை அதிகரித்து விடுகிறது. இதனால், அவர்கள் விற்பனை பத்திரம் பெற முடிவதில்லை.
இதையடுத்து, அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி, இறுதி விலை வித்தியாச தொகை ஆகியவற்றில், குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்யும் திட்டம், 2011ல் அறிவிக்கப்பட்டது; பின், 2014 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, 14 ஆயிரத்து, 992 பேர் நிலுவைத் தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெற்றனர். மேலும், 23 ஆயிரத்து, 600 பேர் நிலுவைத் தொகையை செலுத்தாததால், விற்பனை பத்திரம் பெற முடியவில்லை. அவர்கள் நலன் கருதி, அபராத வட்டி தள்ளுபடி திட்டம், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என, செப்., 17ல், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை.அரசு ஒப்புதல்
இது குறித்து, வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
முதல்வர் அனுமதி அளித்தும், அரசாணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வீட்டு வசதி துறை செயலருக்கு, நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்றார்.