யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/16

கணவன் உண்ட தட்டில் மனைவி உண்ண இதுதான் காரணம்

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

குழந்தையின் நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்

கை தட்டினால் இவ்ளோ பலன்களா

கொசுக்கடியிலிருந்து மீள

சவுச்சவ் இதய நோயாளிகளுக்கு நல்லது.pdf

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன்?

டிப்ஸ்

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை

தமிழ்நாட்டின் முதன்மைகள்

தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா

நமது உடல்

நமது கண்களால் இறந்தகாலத்தை மட்டும் தான் பார்க்கின்றோம்

நல்ல குடிநீர் என்பதற்கும்

ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு.

ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் இந்தத்தேர்வு சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படுகிறது.2016 டிசம்பர் மாதத்துக்கான தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், ஜூலை மாதத் தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால், ஜனவரி மாதத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து ஜனவரி மாத நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 16-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 23-ஆக நீட்டித்தது. ஜூலை மாத நெட் தேர்வு முடிவை திங்கள்கிழமை சிபிஎஸ்இ வெளியிட்டது. www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

TNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்டதகவல்:-
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது.விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடுசெய்ய வேண்டும்.

 விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்பு தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டபின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது

தேசிய வருவாய் வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடைய மாணவர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் ஜனவரி 28ம் தேதி நடக்கஉள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் நாளை முதல் டிசம்பர் 2ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் டிசம்பர் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுஅனைத்து வட்டார அளவில் மையங்கள் அமைக்கப்பட்டு நடக்கும். இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் தமிழக கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு.

தமிழக அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.செல்லாத ரூபாய் நோட்டுப் பிரச்னை, ஏ.டி.எம்., மையங்களில் நீண்ட வரிசை போன்ற காரணங்களால் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்திருந்தது.
தமிழகத்தில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும், 7 லட்சத்துக்கும் அதிகமானஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன வங்கிக் கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படுகின்றன.ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் இந்தத் தொகை வரவு செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக, மாதத்தில் 18-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள்ளாக கருவூலம்-கணக்குத் துறை மூலமாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டுரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.பெரும் பிரச்னை: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் உள்பட தமிழகத்தில் அரசு அலுவலக வளாகங்களில் செயல்பட்டுவரும் வங்கிக் கிளைகளில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பலர் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றவும், வங்கிக் கணக்கில் பணத்தை எடுக்கவும் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். அவர்கள் தங்களது பணி நேரத்தில் இவ்வாறுவங்கிக் கிளைகளில் வரிசையில் நிற்பதால் பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.இதனால், அரசு வளாகங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களில் மாலை நேரத்தில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பணம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த ஒரு வார காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.கோரிக்கை ஏற்க மறுப்பு:தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதியன்று ஊதியமும், ஓய்வூதியமும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அப்படி வரவு வைக்கப்படும்போது, லட்சக்கணக்கான ஊழியர்கள், வயதான ஓய்வூதியதாரர்கள் தங்களது ஊதியத்தைஎடுக்க வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசுஅலுவலகங்களில் பணிகள் பாதிக்கும் சூழலும் உருவாகும்.இந்த நிலையில், மாத ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை ரொக்கமாக வழங்க தலைமைச் செயலக சங்கம் உள்பட அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்தக் கோரிக்கை தொடர்பாக, ரிசர்வ் வங்கியுடன் நிதித் துறை அமைச்சக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்பதற்கில்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக வழங்க முடியாத நிலையில், ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் படையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

IGNOU:தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு.

தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு | தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிசம்பர் 7-ம் தேதி வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் தங்கள் கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ளவும், மேற் படிப்புகள் படிக்கவும் தரமான படிப்புகளை வழங்குகிறது. ஆன்லைனில் விண்ணப்பம் அந்த வகையில், 2017-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க் கைக்கு தற்போது விண்ணப் பங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. சென்னை நந்தனத்தில் இக்னோ மண்டல அலுவலகத் திலும் பல்வேறு இடங்களில் உள்ள அதன் கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. விண்ணப்பம் மற்றும் விளக்கவுரையை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.ignou.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் மாதம் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலமாகவும் (www.onlineadmission.ignou.ac.in) விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இக்னோ பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் நந்தனம் அண்ணாசாலையில் உள்ள ஜிஆர் வணிக வளாகத்தில் (3-வது தளம்) இயங்குகிறது. அலுவலக தொலைபேசி எண்கள் 044- 24312766, 24312979.