புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும், 'செல்லாத நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, பணம் பெற்றுக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது போல, முன்னரே அறிவிக்கப்பட்ட படி, டிசம்பர், 30 வரை, பழைய நோட்டுகளை வங்கி களில், 'டிபாசிட்' செய்தும், புதிய கரன்சியாக எடுத்துக் கொள்ளலாம்.
கள்ள நோட்டு மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்க, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது' என, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 8ல் அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை, நவ., 24ம் தேதி வரை, வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டது; டிச., 30 வரை, வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதலில், 'ஒரு நாளைக்கு, 4,000 ரூபாய் வரை மாற்றலாம்' என, அறிவிக்கப்பட்டது; பின், 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. மேலும், ஒருவர், ஒருமுறை மட்டுமே பணத்தை மாற்றும் வகையில் விரலில் மை வைத்து, விதிமுறை கடுமையாக்கப்பட்டது.
பணப் புழக்கம் குறைவு
வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டதால், பணப் புழக்கம் குறைந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும் குறிப் பிட்ட சில சேவைகளுக்கு, டிச., 15ம் தேதி வரை, பழைய, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்என, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை:
செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, பணம் பெறுவதற்கான அவகாசம் முடிந்து விட்டது. இனி, செல்லாத ரூபாய் நோட்டுகளை, டிச., 30 வரை, வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.
அரசின் நோக்கம்
ஏற்கனவே அறிவித்த படி, செல்லாத ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பெற லாம். ஒருவர், அதிகபட்சமாக, 2,000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும்.
பணப் புழக்கத்தை சீராக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்கு இல்லா தோர், இனியா வது வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கிளை, மாநில தலைநகரங்களில் மட்டுமே உள்ளது.மற்ற பகுதிகளில் வசிப்போர், தங்களிடம் உள்ள செல்லாத நோட்டு களை, வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்து, பணமாக மாற்றலாம் என்பது மட்டுமே அவர்களுக்கு உள்ள ஒரே வழி.
டிஜிட்டல் பரிவர்த்தனை
லோக்சபாவில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பதிலில் கூறியதாவது:கரன்சி பணப் புழக்கத்தை குறைத்து, 'டெபிட், கிரடிட் கார்டு கள்' மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்கு விக்க, அரசு தீவிரம் காட்டுகிறது. கார்டு பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்தால் தான், கறுப்புப் பணம் கட்டுக்குள் வரும். எல்லா தரப்பு மக்களிடமும் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்த னையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
ஆன்லைனில், 'ஷாப்பிங்' செய்வதை ஊக்கு விக்க, அரசு விரும்புகிறது. கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை ஏற்கப்பட்டுவிட்டால் வரி வரு வாயை பெருக்க முடியும். மின் கட்டணம் முதல் ஷாப்பிங் வரை, எல்லா வித பரிவர்த் தனைகளையும், ஒரே ஒரு எண் மூலம் செலுத் தும் ஒருங்கிணைந்த முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நாட்டில், 80 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. இதில், 40 கோடி கார்டுகள், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க அதிகளவில் பயன்படுத்தப் படுகின்றன. கார்டு பரிவர்த்தனை மூலம் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும்; மோசடிகளை யும் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.