யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/16

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

SSA - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் NON - RESIDENTIAL TRAINING - இயக்குனர் செயல்முறைகள்












பாடத்திட்ட தரத்தை மேம்படுத்தக்கோரி வழக்கு:

பள்ளிக்கல்வி, உள்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழகத்தில்1 முதல் 10-ம் வகுப்பு வரையிலானபாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தக்கோரிய வழக்கில்உள்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்
மனுத் தாக்கல்செய்த தலைமை நீதிபதி அமர்வுஉத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில்கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள்முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால மாற்றத்துக்கு ஏற்பபாடத்திட்டங்களில் உரிய மாற்றம் கொண்டுவரவேண்டும் என அண்மையில் ஊடகங்களில்செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில்உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்(ஜூடிசியல்) பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல்செய்தார். அதில் தமிழகத்தில் 1 முதல்10-ம் வகுப்பு வரையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளஒரே மாதிரியான பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும், முறைப்படுத்தவும்தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதிஎஸ்.கே.கவுல், நீதிபதிஎஸ்.நாகமுத்து அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்குவந்தது.மனுவை விசாரணைக்கு ஏற்றஅமர்வு, உள்துறை, கல்வித்துறை முதன்மை செயலர்கள், தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வி துணைச் செயலர்கள், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி இயக்குனர்கள் ஆகியோர்4 வாரத்தில் பதில் மனுத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

'வாட்ஸ் ஆப்' வேணுமா போனை மாத்துங்க!

தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'வாட்ஸ் ஆப்'பை, பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'வாட்ஸ்ஆப்' அறிமுகமாகி, ஏழு ஆண்டுகளுக்குள், உலகெங்கும், 100 கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இது, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறஉள்ளது. இதனால், பழைய மென்பொருட்களில்இயங்கும் மொபைல் போன்களில், இனி, வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது.முதல்கட்டமாக, பழைய விண்டோஸ், ஆண்ட்ராய், ஆப்பிள் மென்பொருட்களில் செயல்படும் போன்களில், வாட்ஸ் ஆப்பை இந்தஆண்டு இறுதி வரை மட்டுமேபயன்படுத்த முடியும்.

அடுத்தஆண்டு, ஜூன் வரை, பிளாக்பெரி, நோக்கியா ஏ - 40, நோக்கியா சிம்பியான்எஸ் - 60 மென்பொருள் உடைய போன்களில், வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டுமானால், மொபைல் போனை மாற்றுவதைதவிர வேறு வழி இல்லை.

2/12/16

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சம்பளம் எடுக்க கட்டுப்பாடு.!!!

THANJAI TAMIL UNIVERSITY B.ED (2017 -2019) APPLICATION SUBMISSION LAST DATE EXTENDED

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2016

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

TRB: 1,260 கலையாசிரியர் பணியிடம் விரைவில் நிரப்ப அரசு திட்டம்'

ஆசிரியர்தேர்வு வாரியத்தால், 1,260 கலையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்,''
என, பள்ளிக் கல்வித்துறைஇயக்குனர், கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், இசைஉள்ளிட்ட, கலைப் பாடப் பிரிவுகளுக்கு, 1,260 பணியிடங்கள் காலியாக உள்ளன; நீண்டநாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறைஇயக்குனர் கண்ணப்பன் கூறுகையில்,''அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, கலைஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் சான்றிதழ்பயிற்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,260 கலையாசிரியர்பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள்அறிவிப்பு வெளியாகும். இத்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்,'' என்றார்.

SSA - 6 - 8 ஆம் வகுப்பு களில் Techno Club ஏற்படுத்துதல் மற்றும், சிறந்த கணினி இயக்கம் அறிந்த மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல் சார்ந்த செயல்முறைகள்

CCE- FOURTH WEEK WORKSHEET - ALL SUBJECT FOR ALL CLASS IN SINGLE PDF FILE

வங்கிகளை காப்பாற்றிய 'நடா' புயல் : மாத சம்பளம் பெறுவோர் வர தயக்கம்

நடா' புயலால், மாத சம்பளம் பெறுவோரின் முற்றுகையிலிருந்து, சென்னை மற்றும் கடலோர மாவட்ட வங்கிகள் தப்பின. செல்லாத நோட்டு அறிவிப்பால், பணப் புழக்கம் குறைந்து, சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க, உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களும், அரசு ஊழியர்களும் சம்பள பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா என பயந்தனர். நவ., 28க்குப் பின், வங்கியில் டிபாசிட் செய்யப்படும் செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கான உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கியதால், நிம்மதி அடைந்தனர். நேற்று முன்தினம் பணத்தை எடுக்க, அரசு ஊழியர்கள் குவிந்தனர். வங்கிகளில், போலீஸ் பாதுகாப்பு போடும் நிலை ஏற்பட்டது. நேற்று, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்தது. அரசு ஊழியர்களோடு, தனியார் நிறுவன ஊழியர்களும் குவிந்தால் எப்படி சமாளிப்பது என, வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர். 'நடா' புயல் அறிவிப்பால் நேற்று, சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலானோர், வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்தனர். வங்கிகளில் கூட்டம் குறைவாகவே இருந்ததால், வங்கி மேலாளர்கள் நிம்மதி அடைந்தனர். பல வங்கிகள், முற்பகலிலேயே மூடிக் கிடந்தன. ஏ.டி.எம்.,களிலும் பெரிய அளவில் கூட்டம் இல்லை.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், 'வங்கிகளில், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தர, போதிய பணம் கையிருப்பு இல்லை; அதனால், பயந்தோம். நல்ல வேளை, மழை காப்பாற்றி விட்டது. அடுத்த நாளை எப்படியாவது சமாளிப்போம்' என்றார். 

தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல் : ஏப்ரலில் நடத்த ஏற்பாடு

மதுரை: ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12 ஆயிரத்து 254 ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்., 17, 19ல் நடக்கும்' என செப்., 25ல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதுகுறித்த வழக்கு ஜன., 3க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல்களை நடத்த ஏதுவாக, துணை கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பதவி காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என தெரிவிக்கப்பட்டது. டிச., 31ல் இவர்கள் பதவி காலம் முடிகிறது. இவர்களது பதவி காலத்தை நீடிப்பது குறித்து, அரசு இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு பணிகள் துவங்கவில்லை. இடஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு, உயர்நீதிமன்றத்திற்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
'ஜனவரியில் பொங்கல், மார்ச்சில் அரசு பொது தேர்வுகள் வருவதால், ஏப்ரலுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகும் வாய்ப்பு உள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் 'டெக்னோ கிளப்'

தேனி: மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்க பள்ளிகளில் 'டெக்னோ கிளப்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் தொழில் நுட்ப கழகம் எனும் 'டெக்னோ கிளப்' துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிவியல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஐந்து பேர் உறுப்பினர்களாகவும், எட்டாம் வகுப்பு மாணவர் கிளப் தலைவராகவும் நியமிக்கப்படுவார். கிளப்பை வழி நடத்துபவர்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர் அல்லது அறிவியல் ஆசிரியர் நியமிக்கப்படுவர்.
போட்டி : சிறப்பாக செயல்படும் 'டெக்னோ கிளப்'களுக்கு இடையே தேர்வு போட்டி நடத்தப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வட்டாரம், மாவட்டம், மாநில போட்டிகளில் பங்கேற்பர்.

கட்டாய கல்வி உரிமை--- சட்டம் : மாணவர்களுக்கு போட்டிகள்

'ராமநாதபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் குறித்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளும் நடத்தப்படுகிறது.
போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் என, மூன்று கட்டமாக நடக்கிறது. பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பேறுவோருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகளில் வெல்பர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. டிச., இறுதிக்குள் போட்டிகளை நடத்தி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

NMMS - INSTRUCTIONS -APPLICATION FORMS - MATERIALS

SLAS - MATERIAL - 9 & 10 STD...

இன்று 02 .11.2016 நடைபெறும் தேர்வுக்கான CCE WORKSHEET - III MODEL QUESTION PAPER -SOCIAL SCIENCE TAMIL MEDIUM / ENGLISH MEDIUM QUESTION PAPERS AVL 3 TO 10 STD

CCE WORK SHEET - IV WEEK QUESTION PAPER SINGLE PAGE LINKS

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

 அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்
. 🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். 
அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
 🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
 பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 
பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும். 
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
 🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
 🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும். 
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும். முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும். புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
 🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும். 
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும். 
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.  
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும். 🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும். 
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
 🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். 
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
 🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
 🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும். 
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். 
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். 🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
 🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
 🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
 🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
 🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும். 🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும். 
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்
. 🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். 
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும். 🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.