யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/1/17

கணினி ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கணினி ஆசிரியர் பணிக்காப் பொதுக் கூட்டம் 8.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.அனைவரும் வாரீர்.
இடம்:விஜயா மால்,162 vettavalam road,By pass road corner ,திருவண்ணாமலை .

நேரம்:9.00 காலை மணி.
மதிய உணவு  வழங்கப்படும்.முக்கிய 

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுகணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும்எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,பி.எட் சான்றிதழ் நகல்,வேலைவாய்ப்பு அட்டை நகல்,இவற்றுடன் தங்களின்சுயவிபரம்  இணைத்து கொண்டுவரவும்.

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.

தொடர்புக்கு:
9150734191,9176093062,9751894315.

வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014.

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல்

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்டொடர் ஜனவரி 31-ம் தேதி துவங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 31-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் வரை நடத்தப்படுகிறது.

ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்வதற்காக பட்ஜெட் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் 92 ஆண்டுககளாக ரயில்வேதுறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ராஜ்நாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

IGNOU - B.Ed. Entrance Test October, 2016 Results held on 23.10.2016 Published

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அரிசிக்கான குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்பஅட்டைகளுக்கும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.5 சலுகை.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (எல்பிஜி) விலையை இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.5 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து, ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், பெட்ரோல், டீசல் வாங்கும்போது அதற்கான பணத்தை ரொக்கமில்லா பரிவர்த்தனையின்மூலம் மேற்கொள்வோருக்கு 0.75 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.60-க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.57.82-க்கும் விற்கப்படுகிறது. இதில் இணையவழி உள்ளிட்ட ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் வாங்குவோருக்கு லிட்டருக்கு 53 காசுகளும், டீசல் வாங்குவோருக்கு லிட்டருக்கு 43 காசுகளும் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சலுகையை சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. அதாவது, இணையவழியில் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து, அதற்கான பணத்தை இணையவழியில் இணையவங்கி வசதி, கடன் அட்டை, பற்று அட்டை (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு) மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.5 சலுகையை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை தொகை ரூ.5, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம் செலுத்தப்பட்ட நாளில் இருந்து 3 வேலை நாள்களில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, தில்லியில் தற்போது ரூ.434.71-ஆக உள்ளது. மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.585-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3/1/17

தமிழ்நாடு அரசு   ஊழியர்கள்  மற்றும்  ஆசிரியர்களுக்கு  பொங்கல்  பரிசாக
 ₹ 7000 ( சி   & டி  பிரிவு ஊழியர்களுக்கு ) 

₹  3000 ( எ  & பி  ஊழியர்களுக்கு )  

வழங்க  அரசாணை  தயாராகி  வருகிறது . இரண்டொரு  நாளில்  அறிவிப்பு  வெளிவரும்  என  எதிர் பார்க்கப்படுகிறது 

750 - pp க்காக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனு...

பள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு

பத்தாம்வகுப்பு வரை, கட்டாய கல்விவழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம்என, இரு
திட்டங்கள் அமலில்உள்ளன.
இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான,


ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட, மத்திய அரசுசார்பில், 60 சதவீத நிதி வழங்கப்படுகிறது.அதன்படி, 540 கோடி ரூபாய் கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்அனுப்பியது. அதை பரிசீலித்த மத்தியஅரசு, முதற்கட்டமாக, 89 கோடி ரூபாய் நிதிஒதுக்கியுள்ளது. அதில், 550 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள்அமைக்கப்பட உள்ளன

EMIS Updation..

 EMIS பதிவேற்றம்- 2017*

முன்னரேபதிவேற்றப்பட்ட அனைத்து வகுப்பு மாணவர்களின்தரவுகளை,

🔹புதுப்பித்துக்கொள்ள (UPDATE)



🔹வெளியேற்ற (TRANSFER)

🔹சேர்த்துக்கொள்ள (ADMIT)

EMIS தளத்தில்தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


ஆனால், *10, 11 & 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே மாணவர்களைப் புதிதாகநேரடிப் பதிவேற்றம் செய்ய இயலும்.*

ஹோட்டல்களில் இனி சேவை வரி கட்டாயமில்லையாம்!

 ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட செல்லும் மக்கள், தாங்கள் விருப்பப்பட்டால் மட்டும் சேவை வரியை(service tax) செலுத்தலாம்என மத்திய நுகர்வோர் விவகாரத்துறைகூறியுள்ளது. சேவை வரியை
கட்டாயமாக்கவேண்டாம், நுகர்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப அதை பெறலாம்என இந்திய உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவங்களில் நாம் சாப்பிட்ட உணவின்கட்டணத்தில் சேவை வரியும் கூடுதலாகவசூலிக்கப்படுவது வழக்கம். உணவகங்களின் சேவை திருப்தியளித்தால் மட்டும்வாடிக்கையாளர்கள் சேவை வரி செலுத்தலாம். விருப்பமில்லாதவர்கள் செலுத்த தேவையில்லையாம்.

பேஸ்புக்கில் அரசையோ அரசு அதிகாரிகளின் தவறையோ சுட்டிக்காட்டுவது தவறல்ல...... உச்ச நீதிமன்றம் அதிரடி !!

 2015 (7) SCC 423

(Supreme Court)

Manik Taneja & another - Vs- State of Karnataka & another

Facebook Postings against police - Criticising Police on Police's Official Face book Page - F.I.R
Lodged by Police



HELD - Facebook is a Public Forum - it Facilitates Expression of Public Opinion- Posting of One's Grievance Against Government Machinery Even on Government Facebook Page does not by itself Amount to Criminal Offence- F.I.R. Quashed.

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்டவாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்துவட்டாட்சியர்
அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்தவாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கானகால அவகாசம் கடந்த செப்டம்பர்30 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, பெயர் சேர்ப்பு -நீக்கலுக்காகஅளிக்கப்பட்ட 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

புதிதாக15 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் பட்டியல்வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், புதிதாக 15 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும்தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைமாநகராட்சியில் மண்டல அலுவலகங்களிலும், பிறமாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்தப் புதிய வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டு, அவை பொது மக்களின்பார்வைக்கு வைக்கப்படும்

29/12/16

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு

இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை படித்த பின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படுவர்.ஆனால், ஐ.ஐ.டி.,க்களில், பிஎச்.டி., படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதை சமாளிக்க, திறமையான மாணவர்களை நேரடியாக, பிஎச்.டி.,யில் சேர்க்க, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக, ஐ.ஐ.டி., கவுன்சில் கூடி, பிஎச்.டி., விதிகளை மாற்றியுள்ளது.இதன்படி, ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிக்கும் மாணவர்கள், 8.5 தர மதிப்பெண் பெற்றால் போதும். மாதம், 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிப்பில் நேரடியாக சேர்க்க, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது

TET சிலபசில் மாற்றம் வருமா ? -ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

TET சிலபசில்மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
ஆசிரியர்தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாடவாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற
கோரிக்கை வலுத்துள்ளது.
மத்தியஅரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர்தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது.



  இந்த அறிவிப்புக்கு, தமிழகஅரசு,2011 நவ., 11ம் தேதியில்தான், அரசாணை வெளியிட்டது.ஆனால், டெட் தேர்வுக்கான விதிமுறைகள், மத்திய அரசு அறிவித்ததேதியில் இருந்து பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்புபடி, ஒரு ஆண்டில், குறைந்தபட்சம் ஒரு தகுதித்தேர்வாவது நடத்தவேண்டும்.அரசாணை வெளியான பின், ஆசிரியப்பணியில் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், தேர்ச்சிபெற்றால் மட்டுமே, பணியில் தொடர முடியும்.


 இதனால், 2011 ஆக., 23ம் தேதிக்குமுன்பு, சீனியாரிட்டி அடிப்படையில், காலிப்பணியிடம் நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்புநடைமுறைகள் முடித்தவர்களுக்கு, டெட் தேர்வில் இருந்துவிலக்குஅளிக்கப்பட்டது.இதற்கு பின் பணியில்சேர்ந்த, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், டெட் தேர்வு எழுதவேண்டியது அவசியம். ஆனால் தமிழகத்தில், கடந்தமூன்றரை ஆண்டுகளாக,தேர்வு நடக்கவில்லை. இதனால், நிபந்தனை காலம் முடிந்தும், டெட்தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர்கள்கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:டெட்தேர்வு வினாத்தாள் படி, சமூக அறிவியல்பாடத்திற்கு மட்டும் 60 மதிப்பெண்களும், மற்ற பாடவாரியான பகுதிகளுக்கு, 30 மதிப்பெண்கள் மற்றும் உளவியல் பாடத்திற்கு, 30 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

இதற்குபதிலாக, ஆசிரியர்கள் தேர்வு செய்யும், முதன்மைபாடத்திற்கு, 60 மதிப்பெண்களும், மற்ற பாடங்களுக்கு 30 மதிப்பெண்களுக்கும், கேள்விகள் இடம்பெறும்படி, வினாத்தாள் திட்ட முறையை, மாற்றியமைக்கவேண்டும். மேலும், டெட் என்பது, தகுதியை நிரூபிக்கும் தேர்வு தான்.

வேறு பள்ளிக்குப் போகச் சொன்னால் நடவடிக்கை - பள்ளிக்கல்வி இயக்குனர்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ’ஸ்லோ லேனர்ஸ்’ எனப்படும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை பொதுதேர்வு எழுத அனுமதிக்காமல், அவர்களை வேறு பள்ளிக்குப் போகச் சொல்லி, கட்டாயப்படுத்தி வருகின்றன பல பள்ளிகள். இந்நிலையில், கல்வித்

தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

எனவே, இக்கல்வி ஆண்டு வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் அதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தள்ளிவைப்பு ஏன்?

அண்மையில் உயர் நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை ரத்து செய்தது. அவர்கள் ஆளும்கட்சியின் பிரமுகர்களாக இருப்பதால் அவர்களின் நியமனத்தை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த உறுப்பினர்கள் தலைமையில்தான் நேர்முகத் தேர்வு குழுக்கள்

அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிபதி களுக்கான நேர்முக உதவியாளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான நேர்காணல் தள்லீ வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதி களுக்கான நேர்முக உதவியா ளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14,15 மற்றும் டிசம்பர் 7, 14, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு ஜனவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாகக் காரணங் களுக்காக நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

22/12/16

வேளாண் கடன் - வட்டி செலுத்த அவகாசம் நீட்டிப்பு!

வேளாண் கடன்களுக்கான வட்டியை செலுத்தும் கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் நீட்டித்துள்ளதோடு, குறுகிய காலத்துக்குள் தொகையை சரியாகச் செலுத்துவோருக்கு, வட்டித் தொகையில் 3 சதவிகிதம் 
தள்ளுபடிச் சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி மதிப்புக்கு வேளாண் கடன் வழங்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதன்படி, செப்டம்பர் மாதம் வரையில் ரூ.7.56 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்தப் பணத்தில் 86 சதவிகித நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியும், வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றை திரும்பச் செலுத்தமுடியாத நிலையிலும் தவித்து வருகின்றனர். எனவே, பழைய ரூ.500 நோட்டுகளைக் கொண்டு அரசின் விதைப் பண்ணைகளில் இருந்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. அதேபோல, அவர்களின் கடனைப் பொருத்து உரங்களை வழங்கும்படியும் உர நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வட்டியைச் செலுத்த அவர்களுக்கு கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் வரை நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சக கூடுதல் செயலர் ஆஷிஷ் குமார் பூடானி கூறுகையில், ‘விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.3 லட்சம் ஓராண்டு குறுகியகால கடனுக்கு 7 சதவிகித வட்டி விதிக்கப்படுகிறது. கடனை சரியாகச் செலுத்துவோருக்கு 4 சதவிகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரைக்குள் வேளாண் கடனுக்கான வட்டியைச் செலுத்த விவசாயிகளுக்கு 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணியிடங்கள்!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்

கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கட்டணம்: ரூ.500/- இதனை "இயக்குனர், ஜிப்மர், புதுச்சேரி”

என்ற பெயருக்கு புதுச்சேரி ஜிப்மர் கிளையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்..

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து, டாக்டர்.அசோக் பதே, துணை இயக்குனர், ஜிப்மர் அலுவலகம்,புதுச்சேரி-605 006. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.01.2017

மேலும், விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி நிறுத்தம்!

மாணவர்கள் கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மடிக்கணினி, சைக்கிள்,பள்ளி சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் 
புத்தகங்கள், புத்தகப் பைகள், கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் போன்றவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்குவதற்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆங்கில அகராதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆங்கில அகராதி வழங்கும் திட்டம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில அகராதி மூலம் பாடத்தில் வரும் பல்வேறு புதிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை அறியமுடியும். மேலும், அதற்கான அர்த்தத்தையும் தமிழில் அறியலாம். பாக்கெட் டிக்‌ஷ்னரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால், பள்ளிக்கு எடுத்து வருவதிலும் எந்த சிரமமும் இல்லை.

தமிழகத்தில், மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. எனவே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், ஆங்கில பாடத்தில், உரையாடல், கதை விரிவாக்குதல், கட்டுரை எழுதுதல் போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பொதுத்தேர்வில், ஆங்கிலம் 2ஆம் தாளில், சுமார், 30 மதிப்பெண்களுக்கு மேலாக, சிந்தித்து எழுதும் வினாக்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற, அகராதி பெரிதும் உதவியாக இருக்கும். பள்ளி மாணவர்களின், ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகிறது. எனவே, நடப்பு கல்வியாண்டில், 9ஆம் வகுப்பு மானவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கில அகராதி வழங்க கல்வித்துறை முன்வர வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு எப்போது?

தமிழகத்தில், மக்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு பல மாதங்கள் வரை ரேஷன் கார்டு வழங்கப்படாமல் 
இருக்கிறது. இதனால், தீபாவளி முதல் புதிய ரேஷன் கார்டுகளை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும், ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆதார் இணைப்பு பணி 47 % மட்டுமே முடிவடைந்துள்ளதால், ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ’ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்குவதற்கான பணிகள் 320 கோடி ரூபாய் செலவில் நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 5.43 கோடி பேர் ஆதார் எண்ணை ‘ஸ்மார்ட்’ அட்டை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 90% பணிகள் முடிந்துள்ளது. சென்னையில் 57.19% பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. எனவே, சென்னையில் இணைப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டு வடிவமைப்பு இன்னும் முடிவாகவில்லை. அது முடிவானதும், கார்டு அச்சிடும் பணி தொடங்கப்படும். எனவே, அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.