யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/16

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி நிறுத்தம்!

மாணவர்கள் கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மடிக்கணினி, சைக்கிள்,பள்ளி சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் 
புத்தகங்கள், புத்தகப் பைகள், கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் போன்றவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்குவதற்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆங்கில அகராதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆங்கில அகராதி வழங்கும் திட்டம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில அகராதி மூலம் பாடத்தில் வரும் பல்வேறு புதிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை அறியமுடியும். மேலும், அதற்கான அர்த்தத்தையும் தமிழில் அறியலாம். பாக்கெட் டிக்‌ஷ்னரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால், பள்ளிக்கு எடுத்து வருவதிலும் எந்த சிரமமும் இல்லை.

தமிழகத்தில், மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. எனவே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், ஆங்கில பாடத்தில், உரையாடல், கதை விரிவாக்குதல், கட்டுரை எழுதுதல் போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பொதுத்தேர்வில், ஆங்கிலம் 2ஆம் தாளில், சுமார், 30 மதிப்பெண்களுக்கு மேலாக, சிந்தித்து எழுதும் வினாக்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற, அகராதி பெரிதும் உதவியாக இருக்கும். பள்ளி மாணவர்களின், ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகிறது. எனவே, நடப்பு கல்வியாண்டில், 9ஆம் வகுப்பு மானவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கில அகராதி வழங்க கல்வித்துறை முன்வர வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக