யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/16

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?

தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பவர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்று 
சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் எந்நேரமும் அவர் மாற்றப்படலாம் என்று கருதப்படுகிறது. அப்படி அவர் மாற்றப்படும் பட்சத்தில் அடுத்த புதிய தலைமைச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

🖊தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிலேயே பல ஆண்டுகள் அனுபவம் படைத்தவர்கள், மூத்தவருக்குத்தான் தலைமைச் செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், ராமமோகன ராவ் விஷயத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி வரிசையில் 19-வது இடத்தில் இருந்த ராமமோகன ராவுக்கு மற்ற 18 பேர்களை புறம் தள்ளி விட்டு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

🖊கிரிஜா வைத்தியநாதன்

இப்போது இவருக்கு முன்பு 18 பேரில்  ஒருவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 18 பேரில் முதலிடத்தில் இருப்பவர் சக்தி காந்ததாஸ். இவர் இப்போது மத்திய அரசு பணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்து இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் நில நிர்வாகத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர், கமிஷனராக இருக்கிறார். எல்லோரையும் விட தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்போதைக்கு இவர்தான். இவர் எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாத ஒருவர் என்கிறார்கள். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1981 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர். இவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். இவர் ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் இருக்கிறது.

🖊வி.கே.ஜெயக்கொடி

18 பேரில் தமிழக கேடரில் இருக்கும் 8 அதிகாரிகள் தற்போது டெல்லியில் இருக்கின்றனர். இவர் தவிர தற்போது ஞானதேசிகன் ஏற்கனவே தலைமைசெயலாளர் ஆக இருந்திருக்கிறார். இவர் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 7வது இடத்தில் இருக்கும் கே.கந்தன் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். 9-வது இடத்தில் அம்புஜ் சர்மா தொழில்துறை இயக்குனர் மற்றும் கமிஷனராக இருக்கிறார். 12-வது இடத்தில் இருக்கும் வி.கே.ஜெயகோடி பவர்பின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இவருக்கும் தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

🖊சண்முகம்

13-வது இடத்தில் இருக்கும் மீனாட்சி ராஜகோபால் கிராமவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராக இருக்கிறார். 16-வது இடத்தில் இருக்கும் ராஜிவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக இருக்கிறார். இவரும் புதிய தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறார். 17-வது இடத்தில் இருக்கும் கே.சண்முகம் நிதித்துறை கூடுதல்முதன்மைச் செயலாளர் ஆகவும் இருக்கிறார். இவருக்கும் தலைமைச் செயலாளர் ஆக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இவர் நிதித்துறையில் அனுபவம் மிக்கவர் என்கிறார்கள். ஆட்சியாளர்களுடன் வளைந்து போகும் திறன் கொண்டவர் என்றும் சொல்கிறார்கள். 18-வது இடத்தில் இருக்கும் சி.சந்திரமவுலி வணிகவரித்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கமிஷனராக இருக்கிறார்.  இவர்களைத் தவிர ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ்-க்கும் தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

🖊சீனியாரிட்டி முக்கியம்

இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் கூறுகையில். "தமிழகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் டிசம்பர் 31 உடன் ஓய்வு பெறுகின்றனர். தலைமை செயலாளர் பதவி என்பது பணி மூப்பு அடிப்படையில்தான் வரவேண்டும். தங்களுக்கு யார் ஏற்றவர்களாக இருக்கின்றனர் என்பதைப் பார்த்து ஆட்சியாளர்கள்  நியமிப்பதால் சீனியாரிட்டி பார்ப்பதில்லை. இப்போது மிகவும் மூத்தவர் என்று பார்த்தால் கிரிஜா வைத்திய நாதன் இருக்கிறார். அவருக்கு இன்னும் சில வருடங்கள் பணி இருக்கிறது. அவர் மீது சர்ச்சைகள் ஏதும் இல்லை. விதிமுறைப்படி அவர்தான் நியமிக்கப்பட வேண்டும்" என்றார். ஆனால், தலைமைச் செயலக வட்டாரத்தில் தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக