யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/1/17

பொங்கல் போனஸ் உயர்த்தி வழங்கப்படுமா அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கடந்த ஆண்டுகளில் A,B ஊழியர்களுக்கு 1000/- C,D ஊழியர்களுக்கு   3000/- வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது பொங்கல் போனஸ் தொகையினை உயர்த்தி வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும்.


சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது ...
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்தில் கடந்த 1993-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, போனஸ் உச்சவரம்பு அதிகபட்சமாக 3,500 என்று அறிவிக்கப்பட்டது. மேலும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாக போனஸ் தொகை உயர்த்தப் படாததை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையை இரட்டிப்பாக்கவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்தவும் ஒப்புக் கொண்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்த ஆண்டு போனஸ் தொகையை ரூ.3,500-இல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த தொகை 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

போனஸ் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக் காக அனுப்பப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் போது, போனஸ் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

2300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

தமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் இளங்கலை பட்டத்துடன் பி.எட்., முடித்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியேற்றதற்கு பின் இவர்கள் முதுகலை, எம்.பில்., அல்லது பி.எச்டி., போன்ற உயர் பட்டப் படிப்புகள் பயில தொடக்க கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.இதற்காக 2009ம் ஆண்டிற்கு முன் சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க அலுவலர் அல்லது உதவி தொடக்க கல்வி அலுவலர் அளவிலேயே அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதி பெறமுடியாதபட்சத்தில் படிப்பு முடித்தவுடன் அவர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி அளிக்கப் பட்டது. உயர் படிப்புகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டதால் இதில் பல முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் 2009க்கு பின் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி பெற வேண்டும் என்றால், துறை செயலர் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனாலும் 2009ம் ஆண்டிற்கு பின் மாநில அளவில் 2300 ஆசிரியர்களுக்கு மேல் உயர்கல்வி முடித்து 'பின்னேற்பு' அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணப் பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய உத்தரவில், 'முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களிடம் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான உரிய விளக்கம் பெற்று, ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "மாநில அளவில் உயர்கல்வி பயின்று 2300 பேர் 'பின்னேற்பு' அனுமதிக்குகாத்திருக்கின்றனர். அனுமதி அளிக்க பல்வேறு சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தின. இந்நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.ஆசிரியர்களின் விளக்கம் ஏற்கப்பட்டால் அவர்களுக்கு பணப்பலன் உட்பட சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றனர்.

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த தி.மு.க. பொதுக்குழுவில் கோரிக்கை

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த தி.மு.க. பொதுக்குழுவில் கோரிக்கை
1.    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பு
2.         தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான பணம்.
3.         ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக!
4.         தமிழக விவசாயிகளின் தணியாத துயரம்!


5.         மதுரவாயல்  - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்
6.         """"நீட்"" - நுழைவுத் தேர்வை ரத்து செய்க!
7.         மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை
8.         கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் வழிபாட்டிற்கு அனுமதி
9.         இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
10.        சேலம் இரும்பாலையைத் தனியார்மய மாக்கும் முயற்சியைக் கைவிடுக!
11.         கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை!
12.        வர்தா புயல் நிவாரணம் வழங்குக!
13.        உள்ளாட்சித் தேர்தல்
14.        பொது விநியோகத் திட்டக் குளறுபடிகள்
15.        தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும்.
16.        ஊழல் செய்வோரைத் தண்டிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்துக.

பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் அகில இந்திய அளவிலான போட்டித்தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லையென செய்திகள் வெளியானது. இதனடிப்படையில், ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதி) தாமாக முன் வந்து பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை முறைபடுத்தி, கல்வி திட்டத்தை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

அதில், ‘‘தமிழக பள்ளிகளில் தற்போது முப்பருவ தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. 2009ல் தான் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ சிடி கல்வி முறையால் 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சைகை வழியான கல்வி முறை திண்டுக்கல் மாவட்டத்தில் பரிசோதனை முறையில் அமலாகியுள்ளது. 40 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 16 வகையான நலத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதற்காக கடந்த 2015-16ல் 3 ஆயிரத்து 45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நிதி அதிகரிக்கப்படுகிறது,’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தரமான மேம்படுத்தப்பட்ட கல்வியை வழங்க அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து எடுக்க உத்தரவிட்டனர். 

HDFC பேங்க் ஆஃப் இந்தியா வட்டி விகிதம் குறைப்பு !!

 எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல், யூனியன் ஆகிய வங்கிகள் கடன் வட்டித் தொகையை ஏற்கெனவே குறைத்திருந்தன. இந்நிலையில், தற்போது HDFC மற்றும் பேங்க் ஆஃப்

இந்தியா ஆகிய வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. குறிப்பாக,  HDFC வங்கி கடன் விகிதத்தை 0.90 சதவீதம் வரை, குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முன் சென்னைக்கு புயல் ஆபத்து??

பொங்கலுக்கு முன், சென்னையை புயல் தாக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை, 2016 அக்., 30ல் துவங்கியது. இதில், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை; வழக்கத்தை விட, 60 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது

. பருவமழை காலத்தில், கியான்ட், நடா மற்றும் வர்தா என, மூன்று புயல்கள் உருவாகின. வர்தா புயல், டிச., 12ல், சென்னையில் பலத்த சூறாவளியுடன் கரையை கடந்தது.

 இதில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு உடைமைகள், பயிர்கள், அரசு சொத்துகள் சேதம் அடைந்தன. பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதன்பின், மூன்று வாரங்களாக, தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. ஏரி, குளங்கள், அணைகள் உட்பட, நீர்நிலைகள் எல்லாம் வறண்டுள்ளன. 'மீண்டும் எப்போது மழை வரும்' என, விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில், வங்கக்கடலில், இலங்கைக்கு தெற்கே, பூமத்திய ரேகையை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. 'இது, படிப்படியாக வலுப்பெற்று, வட கிழக்கில் நகர்ந்து, அந்தமான் அருகே வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளது. புயல் உருவானால், வரும், 11ல், சென்னை அல்லது நெல்லுார் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும் !!

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விஷயத்தில், மதில்மேல் பூனையாக இருக்கும் தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும். அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளில், புதுச்சேரி மாணவ, மாணவியர் பின்தங்கியுள்ளனர். எப்போதாவது சிவில் சர்வீஸ் தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதை புகுந்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

 முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2021- -22ம் கல்வி ஆண்டில், புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்பது, அரசின் இலக்கு. தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்க, தனியார் பள்ளிகளின் நிலையோ மதில்மேல் பூனையாக உள்ளது.

சமச்சீர் பாடத்திட்டமா அல்லது சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமா என முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன. விதிமுறை மீறல் புதுச்சேரி மாநிலத்தில் 303 சுயநிதி தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 26 தனியார் பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற பள்ளி கல்வித் துறையிடம் என்.ஓ.சி., வாங்கியுள்ளன. மீதமுள்ள 227 தனியார் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாட புத்தகத்தை பின்பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தையே நடத்தி வருகின்றன. சமச்சீர் பாடத்தை நடத்த வேண்டிய தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடம் நடத்தி, அதன் மூலம், பெற்றோர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலித்து வருகிறது. தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டுமெனில், முதற்கட்டமாக அந்த மாநில கல்வித் துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பின், ஒரு ஆண்டிற்குள் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தை அணுகி இணைப்பு எண் பெற வேண்டும். இந்த இணைப்பு எண் எளிதில் கிடைப்பதில்லை. இடைநிலை கல்வி வாரியத்தின் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே இணைப்பு எண் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பு, விசாலமான விளையாட்டு மைதானம், காற்றோட்டமிக்க கட்டட வசதி, ஆய்வகம், நுாலகம் என, அனைத்தும் இருந்தால் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட உரிமம் வழங்கப்படுகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவு இடவசதி இல்லாததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் புதுச்சேரி கல்வித் துறைக்கு டிமிக்கி கொடுத்து வருகின்றன. கல்வித் துறையின் என்.ஓ.சி., பெறாமல், சட்ட விதிகளுக்கு மாறாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடங்களை, பல்வேறு தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன. எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டன் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், சமச்சீர் பாடத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் பள்ளி கல்வித் துறை வெளியிட வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் பள்ளிகளை இனம் கண்டு, கடிவாளமிட வேண்டும்.

ரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12--ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் 
அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங் கப்பட்டது.

பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11--ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெரு மளவில் பயனடைந்து வரு கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா வின் வழிகாட்டுதலின் படி,  2016- 2017ஆம் கல்வி யாண்டில், 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 11-ஆம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங் கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 7 மாணாக்கர் களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்திய நாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர்  சந்திரசேகரன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவு !!

.புயல், ஜெ.மறைவு ஆகியவற்றால் விடப்பட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.



நடா புயலின் காரணமாக கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளிலும், முதல்வர் ஜெயலலிதா மறைவால் 6-ம் தேதியும், வர்தா புயலால் 12-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

தற்போது அந்நாள்களை ஈடு செய்யும் வகையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்விடுமுறைகளுக்கு பதிலாக ஜனவரி 21,28, பிப் 4,11 ஆகிய சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் இயங்கும் என இணை இயக்குநர் ஜே.கிருஷ்ணராஜூ அறிவித்துள்ளார்

4/1/17

7-வது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தக் கோரிதலைமைச் செயலகத்தை முற்றுகையிட மாநகராட்சி ஊழியர்கள் முடிவு.

சென்னைமாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள்சங்க பொதுச்
செயலர் எஸ்.புருஷோத்தமன் கூறியதாவது:
மத்தியஅரசு அறிவித்த 7-வது ஊதியக் குழுபரிந்துரை மத்திய அரசுத்துறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படவில்லை. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும்பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுஅறிவிக்கும். அதன்பிறகு அதில் உள்ள குறைபாடுகளைபோக்க குழு அமைத்து ஆய்வுசெய்யும். ஆனால் இந்த முறைஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தாமல், தமிழக அரசு குழுஅமைத் துள்ளது. அந்த குழு செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.அதனால், 7-வது ஊதியக் குழு பரிந்துரையைதமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தைமீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 10-ம் தேதி காலை11 மணிக்கு தலைமைச் செயலகத்தை முற்றையிடதிட்ட மிட்டிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து முதல்வர்ஓ.பன்னீர் செல்வத்தைசந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்க இருக்கிறோம்என்றார்.

15 வயது பூர்த்தியானவர்களுக்கு மறு ஆதார் பதிவு கட்டாயம்

சென்னை: 'ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயதுபூர்த்தியான நபர்கள், தங்களது கைரேகை, கருவிழிபதிவு போன்ற, 'பயோமெட்ரிக்'
தகவல்களை, ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு, நேரில் சென்று அளிக்க வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, ஆதார்எண் வழங்க, தமிழகம் முழுவதும், 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, தமிழ்நாடுஅரசு கேபிள் நிறுவனம் மற்றும்தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிர்வகித்துவருகின்றன.இம்மையங்களில், அக்., 1 முதல், டிச., 31 வரை, 9.91 லட்சம் பேருக்கு, ஆதார்எண்ணிற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மத்திய அரசுவெளியிட்ட, ஆதார் சேர்க்கை விதிமுறைகளின்படி, ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயதுபூர்த்தியான நபர்கள், தங்களது பயோமெட்ரிக் தகவல்களை, 15 வயது பூர்த்தியடைந்த நாளில் இருந்து, இருஆண்டுகளுக்குள், மீண்டும் கட்டாயமாக அளிக்க வேண்டும். எனவே, இன்று முதல், நிரந்தர சேர்க்கைமையங்களில், 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை அளிக்கலாம்; இதற்கு, கட்டணம் எதுவும்கிடையாது.இவ்வாறு குமரகுருபரன் தெரிவித்துஉள்ளார்.

அரசு இ - சேவை மையங்களில் ஏப்ரல் முதல் ரொக்கம் ஏற்கப்படாது

ரொக்கமில்லாபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள, அரசு, 'இ- சேவை' மையங்களில், ஏப்ரல், 1ம் தேதி முதல், 'கிரெடிட்,
டெபிட் கார்டுகள்' மூலம்மட்டுமே, கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், மின் ஆளுமை திட்டத்தில், 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட இடங்களில், இ - சேவை மையங்கள்இயங்கி வருகின்றன. சாதாரண மக்களுக்கு, குறைந்தசெலவில் அரசின் சேவைகள் கிடைப்பதற்காக, நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில், இணையதளம் வழியாக வருவாய், மாநகராட்சி, மின் துறை, உள்ளாட்சி துறைஉள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட சேவைகள், எளிதில் கிடைக்கின்றன. பொதுமக்கள்அதிகளவில் வரத் துவங்கியதை தொடர்ந்து, ரொக்கமில்லா பரிவர்த்தனையை, ஏப்ரல் முதல் அங்கும்கட்டாயமாக்க, அரசு திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, இ - சேவை மையங்களைநடத்தி வரும் துறைகளுக்கு, கடிதம்எழுதப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிக் கணக்கு உள்ளவர்கள், மொபைல் போன் வாயிலாக, பணம்செலுத்தும், 'இ - வாலட்' திட்டம், இ - சேவை மையங்களில், 2016 டிசம்பரில்அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'ஆதார்' கார்டுதாரர்களுக்கு பயன்படும் வகையில், கைரேகை பதிவு செய்யும், 'பயோமெட்ரிக்' முறையை அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ளோம். அதற்கான கருவிகளை, சம்பந்தப்பட்டதுறைகள் வாங்க வேண்டும். மேலும், பிப்ரவரி முதல், டெபிட் மற்றும்கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், ரொக்கமாகவும், இ - சேவை மையங்களில்கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஏப்ரல் 1ம்தேதி முதல், ரொக்கப்பணம் ஏற்கப்படாது. டெபிட், கிரெடிட் மற்றும் இ - வாலட்மூலமாக மட்டுமே கட்டணம் பெறப்படும். இதற்காக, பி.ஓ.எஸ்., எனப்படும், 'ஸ்வைப் மிஷின்'களை, வங்கிகளுடன் கலந்தாலோசித்த பின், வாங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் தேர்வு எழுதியோருக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்

சென்னை: கடந்த அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு தேர்வு
எழுதியோருக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர், நவ., 3 முதல், தற்காலிகமதிப்பெண் சான்றிதழை,

அவர்களே, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச்மற்றும் ஜூனில் நடந்த தேர்வுகளில், தேர்ச்சி பெறாதோர், அக்டோபர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பர். அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழும், மற்றவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழும்வழங்கப்படும். சான்றிதழை, இன்று முதல் தேர்வுமையத்தில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்லாஸ்' தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தமிழகபள்ளி
கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அனைவருக்கும் கல்விஇயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களின் கீழ், மத்திய அரசு, மாணவர்களுக்காக, பல கோடி ரூபாய்நிதி உதவி செய்கிறது.
பள்ளிகளின்உள்கட்டமைப்பு, ஆய்வகம், நுாலகம், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், ஆசிரியர்களுக்குசிறப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, இந்நிதிபயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப, மாணவர்களின் கல்வி யில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதா என்பதை, 'ஸ்லாஸ்' தேர்வின் மூலம், பள்ளி கல்வித்துறை முடிவு செய்கிறது. ஒன்பதுமற்றும், 10ம் வகுப்புகளுக்கு, இந்தஆண்டுக்கான, 'ஸ்லாஸ்' தேர்வு, டிசம்பரில்முடிந்து விட்டது. தமிழகம் முழுவதும், 6,200 பள்ளிகளில், தலா, 30 மாணவர்கள் என, 3.72 லட்சம் பேரிடம் இத்தேர்வுநடத்தப்பட்டது. இன்னும் இரு வாரங்களில், இதன் முடிவுகள் வெளியாகின்றன.

இது குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்அறிவொளி கூறியதாவது: சாதனை கணக்கெடுப்பான, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவுகளின்படி, திறன் படைத்த மாணவர்கள்எந்த பள்ளியில் உள்ளனர்; அவர்களுக்கு, பிரச்னையாக உள்ள பாடப்பகுதி எதுஎன்பதை, அறிய முடியும். அதற்கேற்ப, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளிக்கவேண்டும். அதற்கு வசதியாக, சம்பந்தப்பட்டபாட ஆசிரியர்களுக்கும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
Image may contain: text

பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில், "தமிழர்
திருநாளாம் பொங்கல்திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன்கொண்டாடும் வகையில், குடும்ப அட்டை அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்குஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கியசிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கப்படும்.

இந்தப்பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல்திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும். இதன்மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவர். ஏழை, எளிய, சாமானியமக்கள் பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட இது வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.

புதிய போராட்டம் -அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

Image may contain: text

வீட்டில் கழிப்பிறை இல்லை ஆசிரியர் சஸ்பெண்ட்

Image may contain: text

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்
.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் 30 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, பெயர் சேர்ப்பு -நீக்கலுக்காக அளிக்கப்பட்ட 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

புதிதாக 15 லட்சம் பேர்:

 வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், புதிதாக 15 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்தப் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அவை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

7-வது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தக் கோரிதலைமைச் செயலகத்தை முற்றுகையிட மாநகராட்சி ஊழியர்கள் முடிவு.

சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் எஸ்.புருஷோத்தமன் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக் குழு பரிந்துரை மத்திய அரசுத்துறைகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத் தில் இதுவரை அமல்படுத்தப் படவில்லை. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் பரிந்துரையை தமிழக அரசு ஏற்று அறிவிக்கும். அதன்பிறகு அதில் உள்ள குறைபாடுகளை போக்க குழு அமைத்து ஆய்வு செய்யும். ஆனால் இந்த முறை ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத் தாமல், தமிழக அரசு குழு அமைத் துள்ளது. அந்த குழு செயல் படுகிறதா என்றே தெரியவில்லை.அதனால், 7-வது ஊதியக் குழு பரிந்துரையை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தைமீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 10-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தை முற்றையிட திட்ட மிட்டிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்க இருக்கிறோம் என்றார்.

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு தமிழில் எழுதிய மாணவர்கள் 20 சதவீதம் தேர்ச்சி.

தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால்(என்.சி.இ.ஆர்.டி) நடத்தப்பட்ட, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வுமற்றும் திறனறித் தேர்வில் தமிழ் வழியில் படித்து தமிழிலேயே தேர்வு எழுதிய 20 சதவீதம் பேர் தேர்வாகி உள்ளனர். 
6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காக தேசிய அளவில் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் திறனறித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக ஒரு வகுப்புக்கு 20 பேர் வீதம் ஒவ்வொரு மாநிலத்திலும் 120 பேர் தேர்வு செய்யப்படுவர். இதன்படிகடந்த நவம்பர் 20-ம் தேதி நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வை இந்திய அளவில் சுமார் 98 ஆயிரம் பேரும் தமிழக அளவில் சுமார் 9,500 பேரும் எழுதினர். தற்போது இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்வாகி இருக்கும் 120 பேரில் 60 பேர் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தேர்வை பள்ளிகள் மூலம் அல்லாது தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து எழுதியவர்கள் 800 பேர். இவர்களில் நாற்பது பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ் வழியில் கற்று தமிழிலேயே தேர்வை எழுதியவர்களில் 25 பேர் தேர்வாகியுள்ளனர். இது மொத்தத் தேர்ச்சியில் சுமார் 20 சதவீதமாகும் இதில் தேர்வாகி இருக்கும் 120 பேரில் 60 பேர் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்வை பள்ளிகள் மூலம் அல்லாது தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து எழுதியவர்கள் 800 பேர். இவர்களில் நாற்பது பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ் வழியில் கற்று தமிழிலேயே தேர்வை எழுதியவர்களில் 25 பேர் தேர்வாகியுள்ளனர். இது மொத்தத் தேர்ச்சியில் சுமார் 20 சதவீதமாகும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட செய்முறை தேர்வுகள் ஜனவரி7, 8 தேதிகளில் ஈரோட்டில் நடக்கின்றன.

இதுகுறித்து  பேசிய இந்தத் தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான், "செய்முறை தேர்வுகள் 120 மாணவருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அவர்களில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அந்த 18 பேரில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த 12 பேரும் அடுத்தகட்டமாக தேசிய அளவில் டெல்லியில் நடத்தப்படும் திறனறி பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர்'' என்று சொன்னார்.