யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/1/17

UPCOMING TRAININGS

( 1 )
 IED TRAINING - FOR PRIMARY Trs  - 5 days

( 2 ) Maths TRAINING FOR UPPER PRIMARY MATHS TEACHERS ( 9.1.2017 , 10.1.2017,11.1.2017) - 3 DAYS

*( 3 )*IED TRAINING FOR UPPER PRIMARY TEACHERS - 5 DAYS 

( 4 ). BRITISH ENGLISH TRG FOR PRIMARY TEACHERS - 4 DAYS ( FOR PRIMARY TEACHERS )

BRITISH ENGLISH TRG 2 DAYS FOR UPPER PRIMARY TEACHERS

( 5 ). PRIMARY CRC 

( 6). UPPER PRIMARY CRC .

( 7 ). SMC TRAINING

( 8 ) SMF and PINDICS FORM FILLING

இலவச சைக்கிள் : முதல்வர் வழங்கினார்

பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று துவக்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில், 243 கோடி ரூபாய் செலவில், 11ம் வகுப்பு படிக்கும், 2.70 லட்சம் மாணவர்கள்; 3.49 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, தலைமை செயலகத்தில், ஏழு மாணவர்களுக்கு, முதல்வர்பன்னீர்செல்வம், இலவச சைக்கிள் வழங்கி வாழ்த்தினார்; தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரயில் பயணச்சீட்டு ரத்து: பணத்தை திரும்ப பெற தனி கவுன்ட்டர்: தெற்கு ரயில்வே அறிவிப்பு.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு பயணச்சீட்டை ரத்து செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மேற்கொண்டனர். ஆனால் அப்போது, கவுன்ட்டர்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான பணத்தை திரும்பிக் கொடுப்பதில் சிக்கல் இருந்ததால் அவர்களுக்கு ரசீது மட்டுமே வழங்கப்பட்டது.பயணியின் வங்கிக் கணக்கு எண் கொடுத்தால் முன்பதிவு ரத்துக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், நவம்பர் 8 -ஆம் தேதி தொடங்கி 3500 பேர் பயணச்சீட்டை ரத்து செய்துள்ளனர். அவர்களுக்கு பயண ரத்துக்கான ரசீதும் வழங்கப்பட்டது.

 இன்னும் சில பயணிகளுக்கு ரயில் பயணச்சீட்டு ரத்துக்கான ரசீதும், பணமும் திரும்ப தரும் நடைமுறையை துரிதப்படுத்த, சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் 5 -ஆவது மாடியில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.அங்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பயணச்சீட்டு ரசீதை செலுத்தி, வங்கி கணக்கு எண்ணையும் சமர்ப்பித்தால், மின்னணு பணப்பறிமாற்றம் முறையில் வங்கி கணக்கில் பயணச்சீட்டு ரத்துக்கான பணம் செலுத்தப்படும்.இந்த சிறப்பு கவுன்ட்டர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும்.

 மேலும் விவரங்களை 044 -2535 4897, 044 -2535 4746, 90031 60955 மற்றும் இ -மெயில் www.cco@sr.railnet.gov.in, www.dyccmclaims@sr.railnet.gov.in.

நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு.

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர,நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை. நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதிகிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்

சென்டம்' எடுக்க பள்ளிகள் குறுக்கு வழி : பள்ளி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

மதிப்பெண் குறைந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல், கட்டாய சான்று கொடுத்து வெளியேற்றும் பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச்சில், பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இந்த தேர்வில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட, பலகுறுக்கு வழிகளை கடைபிடிப்பதாக, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.பல பள்ளிகள், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், மதிப்பெண் பட்டியலை பார்த்து, மிகவும் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சியை எட்ட முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, கட்டாய சான்றிதழ் கொடுத்து, அவர்களை வெளியேற்றுவது தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில், தேர்ச்சி குறைய வாய்ப்புள்ள, மாணவர்களின் பெயரை, தனியார் கல்வி மையத்தின், தனித்தேர்வர்கள் பட்டியலில் சேர்த்து விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. அதனால், பல மாணவர்கள், பொதுத் தேர்வை எழுத முடியாமலும், பள்ளிக் கல்வியை முடிக்காமலும், இடையில் படிப்பை கைவிடும் அபாயம் உள்ளது.

இது போன்று செயல்படும் பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்ட மேல்நிலை பள்ளி களுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். பத்து மாத வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் விபரங்களை, தற்போது பொதுத்தேர்வுக்கான விபரங்களுடன் சரிபார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை மறுப்பு 40 ஆயிரம் ஊழியர்கள் வேதனை.

மத்திய அஞ்சல்துறை ஊழியர்க ளுக்கு பொங்கல் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளதால், தமிழகத் தில் 40 ஆயிரம் ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண் டாட முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். மத்திய அரசு 2017-ம் ஆண்டில் 17 நாள் விடுமுறை அறிவித் துள்ளது.
மத்திய அரசை பொறுத்தவரை ஜன. 26 (குடியரசு தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக். 2 (காந்தி ஜெயந்தி) ஆகியன நிரந்தர விடுமுறை நாளாகும். மற்ற விடுமுறை நாட்களை மத்திய அரசு அதி காரிகள் குழு முடிவு செய்து அறிவிக்கும். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 17 நாள் விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை தினமான ஜன.14 இடம் பெறவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளித்துவிட்டு இந்த ஆண்டு இல்லை என மறுத்து விட்டனர். ஜனவரி மாதத்தில் குடியரசு தினமான ஜன.26-ம் தேதி மட்டும் விடுமுறையாக அறி விக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளைப் பொறுத்தவரை அஞ்சல்துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறையிலும் வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை நாள். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாளாகும். அஞ்சல் துறையில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாளும் வேலை நாளாகும். அஞ்சல்துறை தவிர்த்து பிற மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை ஜன.14 வழக்கமான விடுமுறை நாளான சனிக்கிழமை வருவதால் பாதிப்பு எதுவும் இல்லை. அஞ்சல்துறை ஊழியர்களுக்கு ஜன.14 சனிக்கிழமை வேலை நாளாகும். அன்று விடுமுறை மறுக்கப்பட்டுள்ளதால் தமிழ கத்தில் 40 ஆயிரம் அஞ்சல் துறை ஊழியர்கள் பொங்கல் பண்டி கையை கொண்டாட முடியாத நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து தேசிய அஞ்சல் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு (சி பிரிவு ஊழியர்கள்) மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி கூறிய தாவது: மத்திய அரசு விடுமுறையை முடிவு செய்யும் குழுவில் அஞ்சல்துறை அதிகாரிகள் இடம்பெறவில்லை.

பிற துறை ஊழியர்களுக்கு ஜன. 14 சனிக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாக இருப்பதால் பொங்கல் பண்டிகையை விடுமுறை நாள் பட்டியலில் சேர்க் காமல் விட்டுள்ளனர். தமிழகத்தின் முக்கியமான பண்டிகை பொங்கல். தமிழர்கள் பண்டிகை இது. இப்பண்டிகையை மத்திய அரசின் பிற ஊழியர்கள் கொண்டாடும் நிலையில், அஞ்சல் துறை ஊழியர்களுக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை ஊழியர்களுக்கும் பொங்கல் விடுமுறை வழங்கக் கோரி அதிகாரிகளிடம் தொழிற்சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதில் முடிவு ஏற்படாவிட்டால் வழக்கு தொடர்வோம், என்றார்.

‘இக்னோ’ பி.எட். நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த நிலையில், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இக்னோ பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் ?

வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி படிப்படியாகத் தளர்த்தும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக நிகழ் நிதியாண்டின் வரி வசூல் தொகை இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணப் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு, அவை கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பணம் எடுப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் நிதிச் சூழலை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது.
நிலைமையைப் பொருத்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக ரிசர்வ் வங்கி தளர்த்தும்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் கடந்த மூன்று மாதங்களில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்புகளின் மூலம் வசூலான தொகை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் வரி வசூல் 13 சதவீதம் குறைந்ததாக அந்த மாநில அமைச்சர் அமித் மித்ரா குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வரி வசூல் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் நடந்துள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நல்ல ஆட்சி நிர்வாகம் இருக்கும் இடத்தில் வருவாயும் நன்றாக இருக்கும் என்பது புலனாகிறது.

நிகழ் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி வசூல் மூலம் அரசுக்கு ரூ. 16.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொகையைக் காட்டிலும் கூடுதான வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மறைமுக வரிவிதிப்பின் மூலம் கிடைத்த வருவாய், அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று நேரடி வரிவிதிப்பு வருவாயும் அதிகரித்துள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டிருந்த வரி வசூல் அளவில் தற்போது 65 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டு இறுதிக்குள், எதிர்பார்த்த அளவை விட அதிகமான வருவாய் ஈட்டப்படும் என்றார் அருண் ஜேட்லி.

TNTET-ஆசிரியர் தகுதி தேர்வின் மறு பிரதி சான்றிதழ்பெறலாம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2012, 2013 மற்றும் 2014ல், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது.
2012 தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்கள் வழியே, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.பின், 2013, 2014 தேர்வுகளில் பங்கேற்றோருக்கு, டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு, பதிவிறக்கம் செய்யாதோருக்கு, சான்றிதழ் மறு பிரதி வழங்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதி சான்றிதழின் மறு பிரதி தேவைப்படுவோர், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., பரிந்துரைப்படி, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மறு பிரதி சான்றிதழ், பதிவு தபாலில் அனுப்பப்படும் என, டி.ஆர்.பி.,யின் உறுப்பினர் செயலர், உமா தெரிவித்துள்ளார்.

PGTRB - முதுநிலை ஆசிரியர் காலி பணியிடம் அதிகரிப்பு: பள்ளி கல்வித்துறை மவுனம்.

அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 2,700 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாததால், பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மேல்நிலை பள்ளிகளில், 2013 - 14, 2014 - 15ம் ஆண்டுகளில் உருவான, 1,807 காலியிடங்கள், 2016 மே மாதம் நிரப்பப்பட்டன. பின், 2015 - 16ல் உருவான, 2,125 காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது.இதில், 50 சதவீதமான, 1,063 பணியிடங்கள் பதவி உயர்வின்மூலம் நிரப்ப முடிவானது. மீதமுள்ள, 1,062 பணியிடங்கள், போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி, ஓர் ஆண்டு நெருங்கியும், இன்னும் பணி நியமன பணிகள் துவங்கவில்லை. அதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் பாடம் நடத்த, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: மேல்நிலை பள்ளிகளில், தற்போது வரை, 2,700 இடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், அனுபவமில்லாத புதிய பட்டதாரிகளை, தற்காலிக அடிப்படையில் நியமித்து, நிலைமையை சமாளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் உயர்த்தி வழங்கப்படுமா?ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கடந்தஆண்டுகளில் A,B ஊழியர்களுக்கு 1000/- C,D ஊழியர்களுக்கு   3000/- வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது பொங்கல் போனஸ் தொகையினை உயர்த்தி வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும். சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது ...தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்கப்படுகிறது.

இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.இந்தச் சட்டத்தில் கடந்த 1993-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, போனஸ் உச்சவரம்பு அதிகபட்சமாக 3,500 என்று அறிவிக்கப்பட்டது. மேலும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.அதன்பின், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாக போனஸ் தொகை உயர்த்தப் படாததை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டன.

மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையை இரட்டிப்பாக்கவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்தவும் ஒப்புக் கொண்டது.இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள்குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்த ஆண்டு போனஸ் தொகையை ரூ.3,500-இல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்த தொகை 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.போனஸ் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக் காக அனுப்பப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் போது, போனஸ் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

5/1/17

நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.
இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை. நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் என
அறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

முதுநிலை ஆசிரியர் காலி பணியிடம் அதிகரிப்பு : பள்ளி கல்வித்துறை மவுனம்

அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 2,700 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாததால், பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2013 - 14, 2014 - 15ம் ஆண்டுகளில் உருவான, 1,807 காலியிடங்கள், 2016 மே மாதம் நிரப்பப்பட்டன. பின், 2015 - 16ல் உருவான, 2,125 காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதில், 50 சதவீதமான, 1,063 பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்ப முடிவானது. மீதமுள்ள, 1,062 பணியிடங்கள், போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி, ஓர் ஆண்டு நெருங்கியும், இன்னும் பணி நியமன பணிகள் துவங்கவில்லை. அதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் பாடம் நடத்த, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: மேல்நிலை பள்ளிகளில், தற்போது வரை, 2,700 இடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், அனுபவமில்லாத புதிய பட்டதாரிகளை, தற்காலிக அடிப்படையில் நியமித்து, நிலைமையை சமாளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

பொங்கல் போனஸ் உயர்த்தி வழங்கப்படுமா அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கடந்த ஆண்டுகளில் A,B ஊழியர்களுக்கு 1000/- C,D ஊழியர்களுக்கு   3000/- வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது பொங்கல் போனஸ் தொகையினை உயர்த்தி வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும்.


சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது ...
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்தில் கடந்த 1993-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, போனஸ் உச்சவரம்பு அதிகபட்சமாக 3,500 என்று அறிவிக்கப்பட்டது. மேலும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாக போனஸ் தொகை உயர்த்தப் படாததை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையை இரட்டிப்பாக்கவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்தவும் ஒப்புக் கொண்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்த ஆண்டு போனஸ் தொகையை ரூ.3,500-இல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த தொகை 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

போனஸ் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக் காக அனுப்பப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் போது, போனஸ் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

2300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

தமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் இளங்கலை பட்டத்துடன் பி.எட்., முடித்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியேற்றதற்கு பின் இவர்கள் முதுகலை, எம்.பில்., அல்லது பி.எச்டி., போன்ற உயர் பட்டப் படிப்புகள் பயில தொடக்க கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.இதற்காக 2009ம் ஆண்டிற்கு முன் சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க அலுவலர் அல்லது உதவி தொடக்க கல்வி அலுவலர் அளவிலேயே அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதி பெறமுடியாதபட்சத்தில் படிப்பு முடித்தவுடன் அவர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி அளிக்கப் பட்டது. உயர் படிப்புகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டதால் இதில் பல முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் 2009க்கு பின் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி பெற வேண்டும் என்றால், துறை செயலர் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனாலும் 2009ம் ஆண்டிற்கு பின் மாநில அளவில் 2300 ஆசிரியர்களுக்கு மேல் உயர்கல்வி முடித்து 'பின்னேற்பு' அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணப் பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய உத்தரவில், 'முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களிடம் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான உரிய விளக்கம் பெற்று, ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "மாநில அளவில் உயர்கல்வி பயின்று 2300 பேர் 'பின்னேற்பு' அனுமதிக்குகாத்திருக்கின்றனர். அனுமதி அளிக்க பல்வேறு சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தின. இந்நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.ஆசிரியர்களின் விளக்கம் ஏற்கப்பட்டால் அவர்களுக்கு பணப்பலன் உட்பட சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றனர்.

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த தி.மு.க. பொதுக்குழுவில் கோரிக்கை

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த தி.மு.க. பொதுக்குழுவில் கோரிக்கை
1.    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பு
2.         தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான பணம்.
3.         ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக!
4.         தமிழக விவசாயிகளின் தணியாத துயரம்!


5.         மதுரவாயல்  - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்
6.         """"நீட்"" - நுழைவுத் தேர்வை ரத்து செய்க!
7.         மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை
8.         கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் வழிபாட்டிற்கு அனுமதி
9.         இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
10.        சேலம் இரும்பாலையைத் தனியார்மய மாக்கும் முயற்சியைக் கைவிடுக!
11.         கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை!
12.        வர்தா புயல் நிவாரணம் வழங்குக!
13.        உள்ளாட்சித் தேர்தல்
14.        பொது விநியோகத் திட்டக் குளறுபடிகள்
15.        தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும்.
16.        ஊழல் செய்வோரைத் தண்டிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்துக.

பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் அகில இந்திய அளவிலான போட்டித்தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லையென செய்திகள் வெளியானது. இதனடிப்படையில், ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதி) தாமாக முன் வந்து பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை முறைபடுத்தி, கல்வி திட்டத்தை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

அதில், ‘‘தமிழக பள்ளிகளில் தற்போது முப்பருவ தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. 2009ல் தான் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ சிடி கல்வி முறையால் 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சைகை வழியான கல்வி முறை திண்டுக்கல் மாவட்டத்தில் பரிசோதனை முறையில் அமலாகியுள்ளது. 40 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 16 வகையான நலத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதற்காக கடந்த 2015-16ல் 3 ஆயிரத்து 45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நிதி அதிகரிக்கப்படுகிறது,’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தரமான மேம்படுத்தப்பட்ட கல்வியை வழங்க அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து எடுக்க உத்தரவிட்டனர். 

HDFC பேங்க் ஆஃப் இந்தியா வட்டி விகிதம் குறைப்பு !!

 எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல், யூனியன் ஆகிய வங்கிகள் கடன் வட்டித் தொகையை ஏற்கெனவே குறைத்திருந்தன. இந்நிலையில், தற்போது HDFC மற்றும் பேங்க் ஆஃப்

இந்தியா ஆகிய வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. குறிப்பாக,  HDFC வங்கி கடன் விகிதத்தை 0.90 சதவீதம் வரை, குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முன் சென்னைக்கு புயல் ஆபத்து??

பொங்கலுக்கு முன், சென்னையை புயல் தாக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை, 2016 அக்., 30ல் துவங்கியது. இதில், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை; வழக்கத்தை விட, 60 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது

. பருவமழை காலத்தில், கியான்ட், நடா மற்றும் வர்தா என, மூன்று புயல்கள் உருவாகின. வர்தா புயல், டிச., 12ல், சென்னையில் பலத்த சூறாவளியுடன் கரையை கடந்தது.

 இதில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு உடைமைகள், பயிர்கள், அரசு சொத்துகள் சேதம் அடைந்தன. பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதன்பின், மூன்று வாரங்களாக, தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. ஏரி, குளங்கள், அணைகள் உட்பட, நீர்நிலைகள் எல்லாம் வறண்டுள்ளன. 'மீண்டும் எப்போது மழை வரும்' என, விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில், வங்கக்கடலில், இலங்கைக்கு தெற்கே, பூமத்திய ரேகையை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. 'இது, படிப்படியாக வலுப்பெற்று, வட கிழக்கில் நகர்ந்து, அந்தமான் அருகே வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளது. புயல் உருவானால், வரும், 11ல், சென்னை அல்லது நெல்லுார் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும் !!

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விஷயத்தில், மதில்மேல் பூனையாக இருக்கும் தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும். அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளில், புதுச்சேரி மாணவ, மாணவியர் பின்தங்கியுள்ளனர். எப்போதாவது சிவில் சர்வீஸ் தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதை புகுந்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

 முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2021- -22ம் கல்வி ஆண்டில், புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்பது, அரசின் இலக்கு. தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்க, தனியார் பள்ளிகளின் நிலையோ மதில்மேல் பூனையாக உள்ளது.

சமச்சீர் பாடத்திட்டமா அல்லது சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமா என முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன. விதிமுறை மீறல் புதுச்சேரி மாநிலத்தில் 303 சுயநிதி தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 26 தனியார் பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற பள்ளி கல்வித் துறையிடம் என்.ஓ.சி., வாங்கியுள்ளன. மீதமுள்ள 227 தனியார் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாட புத்தகத்தை பின்பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தையே நடத்தி வருகின்றன. சமச்சீர் பாடத்தை நடத்த வேண்டிய தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடம் நடத்தி, அதன் மூலம், பெற்றோர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலித்து வருகிறது. தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டுமெனில், முதற்கட்டமாக அந்த மாநில கல்வித் துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பின், ஒரு ஆண்டிற்குள் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தை அணுகி இணைப்பு எண் பெற வேண்டும். இந்த இணைப்பு எண் எளிதில் கிடைப்பதில்லை. இடைநிலை கல்வி வாரியத்தின் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே இணைப்பு எண் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பு, விசாலமான விளையாட்டு மைதானம், காற்றோட்டமிக்க கட்டட வசதி, ஆய்வகம், நுாலகம் என, அனைத்தும் இருந்தால் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட உரிமம் வழங்கப்படுகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவு இடவசதி இல்லாததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் புதுச்சேரி கல்வித் துறைக்கு டிமிக்கி கொடுத்து வருகின்றன. கல்வித் துறையின் என்.ஓ.சி., பெறாமல், சட்ட விதிகளுக்கு மாறாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடங்களை, பல்வேறு தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன. எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டன் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், சமச்சீர் பாடத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் பள்ளி கல்வித் துறை வெளியிட வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் பள்ளிகளை இனம் கண்டு, கடிவாளமிட வேண்டும்.