யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/1/17

ஜெ' சொத்து: வழக்கு தள்ளுபடி!

ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க முடியாதென்று கூறி அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானதையடுத்து அவரது சொத்துகள் அனைத்தும் யாருக்கு போய் சேருமென கேள்வி எழுந்தது. தற்போது ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள வி.கே.சசிகலா வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டுமென்று தமிழக பொதுநலன் வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

“ஜெயலலிதா கடந்த 2016-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கில், தனக்கு ரூ.10,63,83,945 வங்கி டெபாசிட், ரூ.27,44,55,450 மதிப்புள்ள முதலீட்டு பத்திரங்களும், ரூ.41,63,55,395 மதிப்புள்ள நகைகளும், ரூ.72,09,83,190 மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் வாகனங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. அவருக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கி, அந்த சொத்துகளில் இருந்து வரும் வருமானத்தை ஜெயலலிதாவின் விருப்பத்தின்படி ஏழைகளின் நலனுக்காக செலவிட வேண்டும்.

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கவும், அந்த குழு ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும், பின்னர் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்கவும், அந்த சொத்துகளை நிர்வகிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க முடியாதென்று கூறி ரமேஷின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, "பொதுநல வழக்குகள் எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும், எது சம்பந்தமாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகள் அவர் சினிமாவில் இருந்தபோது சம்பாதித்தது. அந்த வகையில் மனுதாரரின் மனு ஏற்புடையதல்ல" என வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "தனிநபர் சார்புடைய வழக்குகளை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. அதனால் இந்த வழக்கை ஏற்க முடியாது" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறலாம்

NHIS -2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS - 2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format..

.http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx

12/1/17

PRESS RELEASE - பொங்கல் போனஸ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்திக் குறிப்பு

PRESS RELEASE - பொங்கல் போனஸ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்திக் குறிப்பு

DSE PROCEEDINGS- அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்குதல் மற்றும் ஆலோசனைப்பெட்டி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு

CPS க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓர் ஒப்பீடு -நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்

ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும்: அமைச்சர்-- ''ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, இப்போது இல்லை,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, தர
பட்டியல்தயாரித்தல் போன்றவற்றில், சில பிரச்னைகள் ஏற்பட்டன.இது குறித்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மனு, இரு மாதங்களுக்குமுன், தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ஆசிரியர் தகுதித்தேர்வு, மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குமுடிவுக்கு வந்ததால், விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்என, பள்ளிக் கல்வி அமைச்சர்பாண்டியராஜன் கூறியிருந்தார்.இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார்.

பின், அவர் கூறியதாவது:பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர் மற்றும் பணியாளர் பதவிக்கு, 8,000 காலியிடங்கள் உள்ளன; அவை விரைவில்நிரப்பப்படும். ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள்காத்திருப்பதால், அவர்கள் மூலம், காலிஇடங்கள் நிரப்பப்படும்.எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வை, உடனடியாக நடத்த வேண்டிய அவசியம்எழவில்லை. புதிதாக தேர்வை நடத்தினால், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கும் வேலை இல்லை என்றுகூறுவர். எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு, தாமதமாகவே வெளியாகும்.

17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி--

பதினேழு ஆண்டுகளுக்கு முன்கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளைமாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்விஅமைச்சரிடம், பட்டதாரி
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடக்க பள்ளி பட்டதாரிஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கானவிதிகளில், குளறுபடி நீடிக்கிறது. அதாவது, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில்சேர்ந்தவர்கள், தொடக்க பள்ளிகளில் தலைமைஆசிரியராகவும், பின், பட்டதாரி ஆசிரியராகவும்பதவி உயர்வு பெறுகின்றனர். தொடர்ந்து, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, பணிமூப்பு அடிப்படையில், பதவி உயர்வு பெறுகின்றனர்.ஆனால், ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், மதிப்பெண் அடிப்படையில்தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த பதவி உயர்வுஎதுவும் கிடைக்கவில்லை. 1999ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டஅரசாணைப்படி, பட்டம் பெறாமல் பணியில்சேர்ந்த ஆசிரியர்களுக்கே, பதவி உயர்வில் முன்னுரிமைவழங்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக் கல்வி துறைஅமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளிவைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சங்க பொதுச்செயலர், பேட்ரிக்ரைமண்ட் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாததால், 1999ல், இடைநிலை ஆசிரியர்களுக்குமுன்னுரிமை வழங்கும் வகையில், பதவி உயர்வு விதிகள்ஏற்படுத்தப்பட்டன. அதே நேரம், 14 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், பழைய விதிகளை மாற்றாமல், பதவி உயர்வு வழங்கப்படுவதால், நேரடிநியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்காமல், பாதிப்புஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் 4 ஆயிரம் உள்ளது அதை விரைவில் நிரப்புவோம் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தமிழகத்தில்காலியாக உள்ள ஆசிரியர் மற்றும்ஆசிரியரல்லாத 8 ஆயிரம் காலி பணியிடங்களை, ஏற்கனவே தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் இருந்து நியமனம் செய்யப்படுவார்கள்என்று அமைச்சர்
பாண்டியராஜன் கூறினார். சென்னை டிபிஐ வளாகத்தில்நற்பண்புகள் தொடர்பான பயிற்சியை நேற்று தொடங்கி வைத்தும்பயிற்சி கையேட்டை வெளியிட்டும் பள்ளிக் கல்வி அமைச்சர்பாண்டியராஜன் கூறியதாவது: தற்போது பாடத்திட்டத்துடன் இணைத்துநற்பண்புகளைகளையும் மாணவர்களுக்கு கற்றுத்தர பயிற்சி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு மத சின்னங்களான விபூதி, குங்குமம் உள்ளிட்டவற்றை அணிந்து வருவது குறித்துஇதுவரை 4 புகார்கள் வந்துள்ளது.
அவற்றின்மீது விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்கள்அவர்கள் விரும்பிய மதச்சின்னங்களை அணிந்து வரத் தடையில்லை. சில இடங்களி–்ல மருதாணிபோட்டுக் கொண்டு வரக்கூடாது என்றும்அப்படி போட்டு வந்தவர்களுக்கு அபராதம்விதித்துள்ளனர். மதம் சார்ந்த கட்டுப்பாடுகளைகொண்டு வர பள்ளிக்கு உரிமைஇல்லை. பிரான்ஸ் நாட்டில் உள்ள கல்வி முறைதமிழகத்தில் இல்லை என்பதை பள்ளிகள்புரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிகளில்ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதபணியிடங்கள் 8ஆயிரம் உள்ளன. இவற்றைநிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றைஆசிரியர் தகுதித் தேர்வு மூலம்செய்ய வேண்டும் என்பதில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். அதிலிருந்து அவர்களை தேர்வு செய்வோம். மீண்டும் மீண்டும் தகுதித் தேர்வு நடத்திபட்டியல்போடுவதில் அர்த்தம் இல்லை. எனவே ஏற்கெனவேதேர்ச்சி பெற்றவர்களை வைத்து பணியிடம் நிரப்பிவருகிறோம். வெயிட்டேஜ் முறை குறித்து சிலர்நீதிமன்றம் சென்றுள்ளனர். அதற்கான தீர்ப்பு வரதுரிதப்படுத்தி வருகிறோம். ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்4 ஆயிரம் உள்ளது அதை விரைவில்நிரப்புவோம். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன்தெரிவித்தார்.

ஒரே கல்வியாண்டில் 2 பட்ட படிப்பு ஆசிரியர் பணி கோரிய மனு தள்ளுபடி -உயர்நீதி மன்றம் உத்தரவு

Image may contain: text

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டுவிழாவை ஒட்டி, வரும் 17-ஆம்தேதியன்று அரசு விடுமுறை விடமுடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ
உத்தரவுவியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது.

அதிமுகநிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின்நூற்றாண்டு பிறந்த நாள் விழாவரும் 17-ஆம் தேதி கொண்டாடப்படஇருக்கிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியானஅதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும், ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தைக் கொண்டாடவும் அந்தக் கட்சி அறிவிப்புவெளியிட்டுள்ளது.

அரசு விடுமுறை: கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள்ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்ததினம் என்பதால் வரும் 17-ஆம் தேதியன்று அரசுவிடுமுறை விட தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இது குறித்து, அரசுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

அரசு பொது விடுமுறை விடவேண்டுமென்றால், அதற்கான கோப்புகள் பொதுத்துறையின் மூலமாக தயார் செய்யப்பட்டுமுதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இந்த பொது விடுமுறை என்பதுஊதியத்துடன் கூடியதாக இருக்கும். மத்திய-மாநில அரசுகளின்விடுமுறைப் பட்டியலில் இல்லாத தினங்களுக்கு ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்க முடியாது. எனவே, இதற்கென தனியான உத்தரவு பிறப்பிக்கப்படும்பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்படும்.


இந்த விடுமுறையை விடுவதற்கான கோப்புகள் கையெழுத்திடப்பட்டு, அதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை(ஜன.12) அல்லது வெள்ளிக்கிழமை (ஜன.13) வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள்தெரிவித்தன.

11/1/17

உங்கள் வீட்டில் மின்தடை எப்போது? : 10 நாட்களுக்கு முன் தெரியும் வசதி

பராமரிப்பு பணி மின் தடை விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கி உள்ளது. துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணி செய்கிறது. 


பராமரிப்பு பணி : இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். அந்த விபரத்தை, மின் வாரியம், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பராமரிப்பு மின் தடை செய்யும் பகுதிகளை, 10 நாட்களுக்கு முன் தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், தினமும், பல இடங்களில் உள்ள மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டும், அந்த விபரம் தெரிகிறது; மற்ற நகரங்களில் வசிப்போருக்கு தெரிவதில்லை. 

இணையதளம்: தற்போது, 10 நாட்களுக்கு முன், பராமரிப்பு நடக்கும் துணை மின் நிலையங்கள்; அவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற விபரங்கள், மின் வாரிய இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளன. அனைவரும், அதை பார்த்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு அவர் கூறினார்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான "நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் மாணவர்கள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத் திட்டம், மெட்ரிக் பாடத் திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கின்றனர். ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்இ, என்சிஆர்டி ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால் பிற பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர். குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத சூழல் ஏற்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு ஊழியர்கள் திருவள்ளுவர் தினம் கொண்டாட விடுமுறை அளிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மத்திய அரசு ஊழியர்கள் திருவள்ளுவர் தினத்தையும் கொண்டாட அனுமதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படும் முக்கியமான அறுவடை பண்டிகைதான் பொங்கல் என்பது தங்களுக்குத் தெரியும். பொங்கல் பண்டிகையுடன் இணைந்து, ஜல்லிக்கட்டு உட்பட பல்வேறு சமுதாய, புத்துணர்வு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்தப் பண்டிகை 3 அல்லது 4 நாள்கள் வரை நீடிக்கும். தமிழக அரசைப் பொருத்தவரை, இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை (திங்கள்கிழமை) விடுமுறை தினங்களாகும். உழவர் திருநாள் என்பதற்காக இந்த நாள்களில் அரசு விடுமுறை அளிக்கிறது.
தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளில் எப்போதுமே பொங்கல் தினம் வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சனிக்கிழமை பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தின விழா: இந்த நிலையில், மத்திய அரசின் 12 விருப்ப விடுமுறை தினப் பட்டியலில் தெரிவு செய்யக்கூடிய 3 விடுமுறை தினத்தில் கூடுதலாக தசரா, பொங்கல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் திருவள்ளுவர் தினத்தையும் மத்திய அரசு பணியாளர்கள் நலன் ஒருங்கிணைப்புக் குழு விடுமுறை தினமாக அறிவிக்க முடியும். அதன்படி, பொங்கல் தொடர்புடைய அனைத்து விழாக்களையும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களும் கொண்டாட வழி வகுக்கும்.

தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வித் திட்டம் வேண்டும்: பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி

மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக கல்வித்திட்டம் அமைய வேண்டும் என பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 21-ஆவது ஆண்டு கல்லூரி தின விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

நம் நாட்டில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. தில்லியில் பாலியல் துன்புறுத்தலால் பெண் ஒருவர் கொல்லப்பட்டபோது, நமது நாட்டை விமர்சித்தும், இங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் பத்திரிகைகள் தெரிவித்தன. ஆனால், லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில், இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள் இருப்பினும், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கதியால் நாடே ஸ்தம்பித்துவிட்டது. இதிலிருந்து இந்தியாவில் பெண்ணுக்குள்ள மரியாதையை அறிய முடியும் என எழுதப்பட்டிருந்தது.
நமது நாட்டின் பண்பாடு, கலாசாரம், பெற்றோருக்கு அளிக்கப்படும் மரியாதையை எடுத்துக் கூற யாரும் இல்லை. பெற்றோரை போற்றுதல், குடும்பமாக வாழ்தல் என்பது நமது வாழ்க்கையின் ஒரு பங்கு. ஆனால் இது வெளிநாட்டில் இல்லை.
குடும்பங்களை சட்டத்தின் மூலமாக உருவாக்க முடியாது. பிரிக்க மட்டுமே இயலும். சேர்ப்பதற்கு கலாசாரம், பாரம்பரியத்தால் மட்டுமே முடியும்.
நமது நாட்டில் படிக்காதவர்கள் வேலை அளிப்பவர்களாகவும், படித்தவர்கள் அவர்களிடம் வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர். இதற்கு அவர்களின் தன்னம்பிக்கையே காரணம். நமது நாட்டில் கல்விக்கும், தொழில்வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை.
மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லையென்றால் தொழில்வளர்ச்சி ஏற்படாது. தன்னம்பிக்கையே மனிதனை உயர்த்தும். மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக கல்வித் திட்டம் அமைய வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு தலைமை வகித்து, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பேசியது:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்போது, வங்கி அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. அவர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கிறதா, நேர்மை உள்ளதா என்ற சந்தேகம் வருகிறது. இது மொத்த சமுதாயத்தையும் கெடுக்கும் செயலாகும். இன்றைய மாணவர்கள் சிறந்த குடிமகனாக, சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றார்.
முன்னதாக, விழாவில் கல்லூரியின் செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார். முதல்வர் ஜெ.ராதிகா ஆண்டறிக்கை வாசித்தார். ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் தலைவர் ராஜகோபால், மாணவ, மாணவிகள், அனைத்துத் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு !

பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வங்கி கணக்கு வைத்திருப்போர் அனைவரும் பான் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஏற்கெனவே பதிவு செய்திருப்போருக்கு பிரச்னை இல்லை. கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வங்கி கணக்கு வைத்திருந்தாலும் இதுவரை பான்கார்டு இல்லாதவர்களுக்கு, Form 60-ஐ வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் Form-60 படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Form 60 படிவத்தில் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் முகவரி தொடர்புடைய சான்றுகள் மற்றும் புகைப்படத்தையும் இணைத்து வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைன் Form 60 படிவத்தை பெற, வங்கியின் பெயருடன் Form 60 என டைப் செய்தால் படிவம் PDF ஆக வரும்

பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு

தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 


இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர். இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது.  குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : தேர்வுத்துறை புது உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த  ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்
என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.


மேலும், செய்முறைத் தேர்விலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வில் 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க உள்ளனர்.

ஜாக்டோ -ஜியோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்....

1).CPS ஐ நீக்கி GPFஐ  கொண்டுவர அடுத்த கட்ட போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது...இதற்காக நம் ஜாக்டோஜியோ பொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஐயா அவர்களை விரைவில் சந்திக்கவுள்ளனர்.


2).தமிழகத்தில்  நிலவும் விவசாய வறட்சி நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் அனைத்து அரசு ஆசிரியர்கள் மற்றும் அனைத்து விதமான அரசு ஊழியர்களும் பிடித்தம் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

3)ஏழாவது ஊதிய குழு உடனடியாக அமல்படுத்தி இடைகால நிவாரண
நிதியாக 20% வழங்கவேண்டும்.

4)பொங்கல் போனஸ் அரசாணை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.


 தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் மற்றும் பல்வேறு அரசு ஊழி யர் சங்கங்கள், ஆசிரியர் அமைப்பு கள் இணைந்து ஜாக்டோ - ஜியோ அமைப்பாக உருவாகியுள்ளது. இதன் பிரதிநிதிகள் கூட்டம், சென்னை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.இதில், ஜாக்டோ - ஜியோவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெ.கணேசன் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களும் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. வறட்சி நிவாரணத்துக் காக ஜாக்டோ -ஜியோ சங்கங் களில் உள்ள ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்துள்ளோம். இது உத்தேசமாக ரூ.40 கோடி அளவுக்கு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்