யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/1/17

உங்கள் வீட்டில் மின்தடை எப்போது? : 10 நாட்களுக்கு முன் தெரியும் வசதி

பராமரிப்பு பணி மின் தடை விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கி உள்ளது. துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணி செய்கிறது. 


பராமரிப்பு பணி : இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். அந்த விபரத்தை, மின் வாரியம், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பராமரிப்பு மின் தடை செய்யும் பகுதிகளை, 10 நாட்களுக்கு முன் தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், தினமும், பல இடங்களில் உள்ள மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டும், அந்த விபரம் தெரிகிறது; மற்ற நகரங்களில் வசிப்போருக்கு தெரிவதில்லை. 

இணையதளம்: தற்போது, 10 நாட்களுக்கு முன், பராமரிப்பு நடக்கும் துணை மின் நிலையங்கள்; அவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற விபரங்கள், மின் வாரிய இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளன. அனைவரும், அதை பார்த்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக