யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/1/17

கைவிடப்பட்ட 155 அரசு பள்ளிகள் : ஜெ., அறிவிப்பு; மரணத்தோடு 'காலாவதி'

தமிழகத்தில் 155 அரசு நடுநிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ் 2011-12ல் ஆண்டு 700 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டது. அரசியல் பின்னணி மற்றும் ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலில் இணைத்தது உட்பட சில காரணங்களால் 155 பள்ளிகளை அங்கீகரிக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மறுத்து விட்டதாக புகார் எழுந்தது.இதனால் இப்பள்ளிகளுக்கு அத்திட்டத்தில் இருந்து கிடைக்க வேண்டிய நிதிகள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், 2016ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் இந்த 155 பள்ளிகளையும் மேம்படுத்த தலா 1.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு மீது கல்வி அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வகுப்பறை, பெஞ்ச் வசதி இல்லாததால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் சூழ்நிலை உள்ளது.

மதுரை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தில் வேடர்புளியங்குளம், மலைப்பட்டி, நிலையூர், அயன்பாப்பாகுடி ஆகிய நான்கு அரசு நடுநிலை பள்ளிகள் இந்த 155 பள்ளிகள் 'லிஸ்ட்'டில் உள்ளன. இப்பள்ளிகளுக்கு 2011 முதல் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி கிடைக்கவில்லை.இதனால் போதிய வகுப்பறை, இருக்கைகள் வசதி இங்கு இல்லை. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். அரசு சிறப்பு உத்தரவு வெளியிட்டால், உலக வங்கி நிதியுதவியுடன் நபார்டு வங்கி சார்பில் இப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், இருக்கை வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மறைந்ததை அடுத்து கல்வி அதிகாரிகள் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக