யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/2/17

அஞ்சலகங்களில் சீருடைப் பணியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விற்பனை

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தருமபுரி மாவட்டத்திலுள்ளதலைமை அஞ்சலகம், பாலக்கோடு, அரூர், பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டக் கண்காணிப்பாளர் ஆ. சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
விண்ணப்பக் கட்டணங்களும் அஞ்சலகங்களில் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் சென்றடைவதற்கான கடைசித் தேதி பிப். 22. விண்ணப்பத்துக்கான விலை ரூ. 30.விண்ணப்பிக்க விரும்புவோர் அருகிலுள்ள அஞ்சல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் உரிய நேரத்தில் சென்றடைய விரைவு அஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம்.

இதற்காக தலைமை அஞ்சலகம், ஆட்சியரம், அன்னசாகரம், வெண்ணாம்பட்டி, குமாரசாமிப்பேட்டை, ரயில் நிலையம், தருமபுரி தெற்கு ஆகிய அஞ்சலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட்வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்வுத் துறையின், http://www.tndge.in/ என்ற இணையதளம் மூலம், கடந்த, 7 முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அனைத்து பள்ளிகளும், தங்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, பிப்., 20க்குள் அவர்களிடம் வழங்க வேண்டும். தொடர்ந்து, தேர்வுக்கு தயாராவதற்கு, அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும்

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவை வருமாறு:-

* அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம்பணி இடங்கள் உருவாக்கப்படும். இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள்எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரம் ஆக உயரும்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 76 பேர்சேர்க்கப்படுவர். அதன்பின்னர் உள்துறை அமைச்சக பணியாளர்எண்ணிக்கை 24 ஆயிரத்து 778 ஆக அதிகரிக்கும்.

* போலீஸ் துறையில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் புதிதாக இணைவர்.அதன்பின்னர் இந்த துறையில் பணியாளர்கள் எண்ணிக்கை11 லட்சத்து 13 ஆயிரத்து 689 ஆகிவிடும்.

* வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 2 ஆயிரத்து 109 பேர் பணிஅமர்த்தப்படுவார்கள்.

* புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறையில் 2 ஆயிரத்து 27 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இந்த தகவல்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

TET' தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினியோகம் (தினமலர்)

திருப்பூர் : மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி புரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர்தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை, தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு, ஏப்., 29ம் தேதியும்; பட்டத்தாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, 30ம் தேதியும் நடக்கிறது. இத்தேர்வு எழுதுவோருக்கான விண்ப்ப வினியோகம், நாளை துவங்குகிறது.விண்ப்பங்கள் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, குமார் நகர் மாநகராட்சி பள்ளி, அனுப்பர்பாளையம், அவிநாசி, பல்லடம், கொடுவாய், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், வெள்ளக்கோவில் ஊத்துக்குளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ப்பம் வழங்கப்பட உள்ளது.விண்ப்பங்கள், வரும், 27ம் தேதி வரை வழங்கப்படும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ப்பங்கள், 28ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் நிற்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்களை திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை. எனினும், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

வேலூர்- தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
இந்த திட்டத்தில் பயனடையவும், அரசின் பல்வேறுசலுகைகளை பெறவும் ரேஷன் கார்டு மிகவும் அவசியமாகிறது. புதிய ரேஷன் கார்டு வேண்டுபவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்தின் மீது ஆர்டிஓ மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் விசாரணை நடைபெறும். அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எல்காட் நிறுவனத்தில் ரேஷன் கார்டு அச்சடித்து விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பம் கொடுத்த 60 நாட்களுக்குள் கார்டு வழங்கவேண்டும் என்பது விதி.ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்குவதில்லை என புகார்கள் உள்ளன.இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் அனைத்து இசேவை மையங்களிலும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். மேலும் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவைகளும் செய்யலாம்.இந்த சேவைக்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ஏப்ரல் மாதம் முதல் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவேண்டிய அவசியம் இருக்காது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். இதுகுறித்த தகவல்களை இசேவை மைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில் நியமனம்

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளின் போது, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு நடக்கிறது. 
இதனால் தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தலுக்கு, அவர்கள் துணை போகின்றனர் என்ற குற்றச்சாட்டு, சமீப காலமாக வலுத்துள்ளது. ஒரு சில மையங்களுக்கு, ஒரே ஆசிரியர்கள் திரும்பத்திரும்ப செல்கின்றனர். எனவே, பொதுத்தேர்வு ஆசிரியர் நியமன முறையை, மாற்ற வேண்டும் என்று, ஆசிரியர்கள் மற்றும் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் நடப்பாண்டில், பொதுத்தேர்வு மையத்துக்கான, ஆசிரியர் நியமனத்தில், குலுக்கல் முறையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற விருப்பமுள்ள, தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அது ஏற்கப்பட்ட பின், பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்படும். அதன்பின் கலெக்டர், கல்வித்துறை இணை இயக்குனர், ஆசிரியர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில், தேர்வு மைய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், இதற்கான குலுக்கல் நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும், குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு முன்பே, தேர்வு மையம் குறித்து தகவல்தெரிவிக்கப்படும். முறைகேடு புகாருக்கு ஆளான தேர்வு மையங்களில், முழுமையாக வீடியோ செய்யப்படும்.

SSLC - PUBLIC EXAM 2017 - PRIVATE CANDIDATES CAN APPLY BY "TATKAL" - INSTRUCTIONS

14/2/17

பிரிட்ஜ்

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி

நல்ல குடிநீர் என்பதற்கும்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்

அரசு இ - சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?

அரசு, 'இ - சேவை' மையங்களில், இணையதளம் மூலம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையை, உணவு துறை துவக்க உள்ளது.
தமிழகத்தில், ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் உணவு பொருட்கள் வாங்குவது உட்பட, அரசின் பல சலுகைகளைப் பெற, ரேஷன் கார்டு அவசியம். ரேஷன் கார்டு பெற வேண்டும் எனில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. இதற்கு தீர்வாக, புதிய நடைமுறை வரஉள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் சேவைக்கான பணி முடிந்துள்ளது. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். த

ற்போது, முகவரி மாற்றம்; பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை இணையதளத்தில் செய்யலாம். தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், எல்காட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம், 'இ - சேவை' மையங்கள் உள்ளன. அவற்றின் மூலமும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் துவங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இன்று முதல் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !!

பேராசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வான ‘செட்’ தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 12 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி,பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன் "நெட்' (பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு)அல்லது "செட்' (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. அதேபோல், மாநில அளவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் ‘செட்’ தேர்வு நடத்தப்படுகிறது.இந்நிலையில்,2017 ஆம் ஆண்டிற்கான ‘செட்’ தேர்வு கொடைக்கனலில் உள்ள அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு,ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். இந்த தேர்வுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கத் தவறியாதவர்கள், அபராதமாக ரூ.300 செலுத்தி மார்ச் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்."செட்' தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.1,250-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ஆகவும் தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,நெட் தேர்விற்கு 500 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அன்னைத் தெரசா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திட்ட வேலையை மாற்றி, நிரந்தரப் பணி வழங்க, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.

திட்ட வேலையால் வாழ்வாதாரத்தை இழக்கும், 16549 பகுதிநேர ஆசிரியர்களை (பயிற்றுநர்களை), தமிழக அரசு நிரந்தரப் பணிக்குமாற்ற வேண்டும்.
தமிழக அரசானது,  மத்திய அரசின் திட்ட வேலையை, மத்திய-மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 2012-ஆம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களை (உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன், கட்டிடவியல்)ஒப்பந்த அடிப்படையில், ரூ.5000/- தொகுப்பூதியத்தில்பகுதிநேரமாக பணியாற்றும் வகையில் நியமித்தது. 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 அரைநாள்கள் வீதம், மாதத்தில் 12 அரைநாள்கள் பணியாற்றஉத்தரவிடப்பட்டது. இவர்களுக்கு தொகுப்பூதியம் முதலில் கிராமக் கல்விக்குழு மூலமாகமாகவும், தற்போதுபள்ளி மேலாண்மைக்குழுவாலும் வழங்கப்பட்டு வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப்பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோது, முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்) ரூ.2000/- ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.7000/- வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக், ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட கணினி இயக்குபவர்களைப் போல பல்வேறு துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு அறிவித்ததை அமுல்படுத்த வேண்டும்.

2012ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒவ்வொரு வருடமும் 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளமே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின் போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேற்பட்ட பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு, தொடர் கோரிக்கையான முழுநேரப் பணிவழங்கவில்லை.கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15000/-, ஹரியானாவில் ரூ.10000/- வீதம் வழங்கப்படுகிறது. மேலும், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு,கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. எனவே, மற்ற மாநிலங்களில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு  10000/- முதல் 15000/-வரை தொகுப்பூதியமும், ஒன்றுக்கும் அதிகமான பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்புகளும் இதுவரை தமிழகத்தில் அமுல்படுத்தப்படவில்லை. எனவே பொருளாதார சிக்கல்களால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400/- கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சமவேலை – சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை, மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த வேலையில் உள்ளதால் பண்டிகை கால ஊக்கத்தொகை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டுவருகிறது. மகளிர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. பணி நியமனம் மற்றும் பணி நிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும், ஒரே கல்வித் தகுதியில் உள்ளவர்களில் இருவேறு நிலைகளில் பணிமர்த்தி, ஒரு பிரிவினர் அரசு சலுகைகளுடன் சிறப்பாசிரியர்களாகவும், மறு பிரிவினர் ரூ.7000/- தொகுப்பூதியத்தில் மத்திய அரசின் திட்ட வேலையில், ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேரப் பயிற்றுநர்களாகவும் பணியாற்றி வருவதை தமிழக அரசு தீர்வு காண வேண்டும். ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுநர்களை, பணிநிரந்தரம் செய்தது போல 16549 பகுதிநேரப் பயிற்றுநர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்

வெறும் மூன்றே ரூபாயில் ஏர்செல் அன்லிமிடட் டேட்டா நாள் முழுவதும்... இதோ உங்களுக்காக...

ஜியோ சவாலைத் தொடர்ந்து அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள, பல கவர்ச்சிகரமான திட்டங்களை தினந்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில் ஏர்செல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக மிக மலிவான விலையில் 3ஜி டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.ஒரு நாளுக்கான அன்லிமிடட் டேட்டாவை வெறும் 3 ரூபாய்க்கு வழங்க இருக்கிறது.ஏர்செல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிலிருந்து *122*557# என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து உங்கள் போனின் திரையில், ஒரு பாப் அப் தோன்றும். அதில் 1 என டைப் செய்து சென்ட் பட்டனை அழுத்தவும்.மெசேஜ் சென்றபின், மீண்டும் ஒரு பாப் அப் திரையில் தோன்றும்.அதில் பல ஆப்ஷன்கள் இருக்கும். அதற்கும் 1 என்பதை டைப் செய்து பதில் அனுப்ப வேண்டும்.

அதற்கடுத்து ஒரு நாளுக்கான மொபைல் டேட்டா ஆக்டிவேட் செய்யப்பட்டது என்ற அறிவிப்பு மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.இதற்கான கட்டணமான ரூ.3 உங்களுடைய மெயின் பேலன்ஸிலிருந்து கழிக்கப்படும்.அடுத்த நொடி முதல் ஒரு நாளுக்கான மொபைல் டேட்டா சேவையை நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த முடியும்.

TET தேர்ச்சி பெற்றும் வாழ்வு இல்லை!

முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!

உங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.

இப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.


தவனைக் காலம் அதிகரிப்பு
இந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.

புதிய திட்டங்கள்
2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
வீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.


6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்
ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்
ஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்
18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.

மொத்த நன்மை
மேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திடீர் வழக்கு

24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எம்.எல்.சர்மா என்பவர் இந்த வழக்கைப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வழக்கில், சசிகலாவுக்கு போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இதுதொடர்பான பட்டியலையும் அவர் ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டார். ஆனாலும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது. 24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே சுப்பிரமணியம் சாமி, இன்றைக்குள் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் வழக்குத் தொடர வாய்ப்புண்டு என்று டிவீட் போட்டிருந்தார். இந்த நிலையில் சர்மா என்பவர் வழக்குப் போட்டுள்ளார்.

TET விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும்?

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் இழுபறி நடந்துவருகிறது.
அதாவது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டால் எவ்வாறு அதனை சரியான முறையில் கையாள்வது என்று பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது 14 லட்சம் விண்ணப்பங்கள் அனைத்தும் விற்பனை செய்யும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்ய தயார் நிலையில் இருக்கின்றன.

இருந்தபோதும் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான முறையான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.நாளைக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டால் உடனடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.