சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
வியாசர்பாடியைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.
சென்னையில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம் குறித்து சமூக ஆர்வலர் எமி என்பவருக்கு தகவல் கிடைத்தது. இவரது தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பெசண்ட் நகர் தேவலாயத்துக்கு சென்றனர். அங்கு, மணமகள்கோலத்தில் நின்றிருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
திருமண வீட்டாரிடம் மணப்பெண்ணின் வயது சான்றிதழைக் கேட்டபோது, அதை தருவதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் இருவீட்டாரும் சமூக ஆர்வலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, திருவான்மியூர் போலீஸுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இது குறித்து திருமண வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு ,அவர்கள் இணங்கவில்லை.
பின்னர், மணமக்களின் பெற்றோர்களுக்கு தனிதனியாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து,இருவீட்டாரும் மாணவி திருமண வயதை அடைந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர்.
தற்போது மாணவி கெல்லீசில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுயுள்ளார். இது குறித்து குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படிப்பறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத கிராமபுறங்களில்தான் அதிகளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது என நினைத்தாலும், சிட்டி சென்னையிலும் இதுபோன்று திருமணங்கள் நடந்து வருவது கண்கூடாகக் தெரிகிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5480 பெண் குழந்தைத் திருமணங்கள் சென்னையில் நடந்துள்ளன. குழந்தைத் திருமணம் செய்து கொண்டவர்களில் 16,855 பேர் குறைந்த வயதில் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 5 பெண்களில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக யூனிசெஃப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.