யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/3/17

FLASH NEWS: CPS AMOUNT TRANSFER TO GPF ACCOUNT G.O.No.288, dated 10th Nov 2016 issued (Employees initially enrolled under CPS and later brought under GPF as per High Court Orders

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்

திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு திறந்தநிலைபல்கலையில், கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என, இரு வகையில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 
2017 காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளதாக, பதிவாளர் விஜயன் அறிவித்துள்ளார்.இதற்கு, பல்கலையின்,http:/www.tnou.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். மண்டலஅலுவலகங்களில், நேரிலும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஏப்., 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்கள் உறுதி

இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். பிளஸ் 2 இயற்பியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. வினாக்கள் எளிமையாக இருந்ததால் சென்டம் மதிப்பெண் எடுக்கலாம், என மாணவர்கள் கூறினர்.
ஜி.முகேஷ்கண்ணன், அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தரகோசமங்கை: புளூ பிரின்ட் படியும், புத்தகம் படியும், வினாக்கள் இருந்ததால் எளிதாக பதிலளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் குழப்பமாக இருந்தபோதிலும் விடையளிக்க முடிந்தது. 3 மதிப்பெண் வினாக்களுக்கு யோசித்து பதில் எழுதுவது போல் இருந்தது. 5 மதிப்பெண் வினா கடந்த காலங்களை விட எளிமையாக இருந்தன. 10 மதிப்பெண் வினா மிக எளிமையாக இருந்தது. விரைவாக பதில் எழுதும் மாணவர்கள் 45 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வை முடித்திருக்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு சென்டம் உறுதி.வி.அனுஜா, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: நான்கு பகுதிகளிலும் 3, 5, 10 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. புத்தகத்தை முழுமையாக படித்திருந்தால் சராசரி மாணவர்கள் கூட 130 மதிப்பெண்எடுக்கலாம். கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் இந்த முறை கேட்கப்பட்டிருந்தன.

மாதிரி வினாத்தாள் அடிப்படையில் படித்ததால் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடிந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் நிச்சயமாக சென்டம் எடுக்க முடியும். போதிய நேரம் இருந்ததால் எழுதிய பதிலை சரி பார்க்க முடிந்தது.

இ.செல்வேந்திரன், ஆசிரியர், எலைட் பள்ளி, ராமநாதபுரம்: கற்கும் திறன் குறைந்த மாணவர்களும் எளிதில் பதில் அளிக்கும் வகையில் வினாக்கள் எளிமை. ஆசிரியரின் வழிகாட்டுதல் படி, புத்தகம் முழுவதையும் படித்து தேர்வெழுதியமாணவர்களுக்கு சென்டம் உறுதி. மெல்ல கற்கும் மாணவர்கள் 120 மதிப்பெண் எடுக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்தாண்டு சென்டம் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பாடப்பிரிவு களின் பெயர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் இடம் பெறும். 
மாணவர்களின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.இதனால், மாணவர்கள் உயர் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் செல்லும் நிலையில், பெயர் குழப்பம் ஏற்படுகிறது.எனவே, தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல் மாணவரின் பெயர் மற்றும் இனிஷியல், துாய தமிழில் இடம் பெற உள்ளது. அதேபோல், பள்ளியின் பெயரும், தமிழில் இடம் பெற உள்ளது.

இதுதொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில், 'மார்ச், 31க்குள், அனைத்துமாணவர்களின் பெயர்களும், தமிழ் இனிஷியலுடன், தேர்வுத் துறைக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும்' என்றார்.

DEE - EDUSAT PROGRAMME TO ALL AEEOs ON 23.03.2017 FOR WIFS

பிரதமர் பற்றி அவதூறு: ’வாட்ஸ்-அப்' குழு அட்மின் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடியைப் பற்றிய ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் அடங்கிய பதிவை ’வாட்ஸ் - அப்' குழுவில் பகிர்ந்து கொண்டதாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பிரதமரைப் பற்றிய அவதூறான கருத்துகள் அடங்கிய ஒரு பதிவு ’வாட்ஸ் - அப்' மூலம் பரப்பப்படுவதாக சங்காரி காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட ஒரு ’வாட்ஸ் - அப்' குழுவின் மூலமாகவே அந்த சர்ச்சைக்குரிய பதிவு முதன்முதலில் பரப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தக் குழுவை உருவாக்கிய நபர் (அட்மின்) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் திட்டமிட்டு இத்தகைய அவதூறுகளைப் பரப்பியது உறுதிப்படுத்தப்பட்டால், சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை: நிதி மசோதாவில் திருத்தம்.

ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கான அதிகபட்ச உச்ச வரம்பு ரூ. 3 லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக மாற்றுவதற்கான திருத்தம் உள்பட நிதி மசோதாவில் 40 திருத்தங்களை மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. இது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாகும்.

மக்களவையில் நிதி மசோதா செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நிறுவனங்கள் சட்டம், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிச் சட்டம், கடத்தல் மற்றும் அன்னியச் செலாவணி சட்டம், டிராய் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் போன்ற சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டன. சிறிய அளவிலான தீர்ப்பாயங்களை இணைத்து அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவது, தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 40-இல் 12-ஆகக் குறைப்பது ஆகியவையே இத்திருத்தங்களின் நோக்கமாகும்.
மத்திய பட்ஜெட்டில் ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.3 லட்சம் என்று அறிவிக்கப்பட்டதை ரூ.2 லட்சமாக மாற்றுவதற்கான திருத்தம் உள்பட நிதி மசோதாவில் 40 திருத்தங்களும் அவையில் தாக்கல் செய்யப்பட்டன.

திருத்தங்களைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசினார்.
இவ்வளவு அதிக எண்ணிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாகும். இதற்கு திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், இந்திய குடியரசுக் கட்சி (ஆர்எஸ்பி) ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ’பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடாமல். புறவாசல் வழியாக திருத்தங்கள் சேர்க்கப்படுகின்றன' என்று அவை ஆட்சேபம் தெரிவித்தன. எனினும், அந்த ஆட்சேபங்களை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்.

இதனிடையே, மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ’ரொக்கப் பணப் பரிவத்தனைகள் இதுவரை ரூ. 3 லட்சம் என்று அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பானது தற்போது ரூ.2 லட்சம் என்று குறைக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அதே தொகைக்கு அபராதம் விதிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? உங்களுக்கான சில முக்கியமான டிப்ஸ்

பல்வேறு வழக்குகளாலும்
அரசியல் சூழ்நிலைகளாலும் தள்ளிக்கொண்டே போனது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஆசிரியர் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஒருவழியாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுவிட்டது.
இது ஆசிரியப் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

கல்வித்தகுதி
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் (D.T.Ed.) முடித்தவர்கள் எழுதலாம். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை இளங்கலை பட்டப்படிப்புடன் B.Ed முடித்தவர்கள் எழுதலாம். தமிழ் இலக்கியப் படிப்பைப் பொறுத்தவரையில், B.Lit. பட்டத்துடன் B.Ed. அல்லது D.T.Ed. அல்லது தமிழ்ப் புலவர் பயிற்சி (தமிழ் பண்டிட் பயிற்சி) படித்தவர்கள் எழுதலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் 22.3.2017ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 23.3.2017ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப்படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரங்களை http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு முறை
ஆசிரியர் தகுதித் தேர்வு மூன்று பிரிவு களில் நடைபெறும். ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் (D.T.Ed) படித்தவர்கள் தாள் ஒன்றினை எழுத வேண்டும்.கலைப்பட்டதாரி ஆசிரியர்கள் (B.A. + B.Ed.) மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் (B.Sc. + B.Ed) தாள் இரண்டுஎழுத வேண்டும்.
மூன்று பிரிவுகளுக்கான தாள்களுமே 150 கேள்விகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண்.

முதல் தாள் 5 பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள்
கணிதம் - 30 மதிப்பெண்கள்
சூழ்நிலையியல்/அறிவியல் - 30 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்

இரண்டாம் தாள் கலைப் பிரிவு, நான்கு பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள்
சமூக அறிவியல் - 60 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்
இரண்டாம் தாள் அறிவியல் பிரிவு, நான்கு
பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள்
கணிதம் மற்றும் அறிவியல் - 60 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்
வெறுமனே ‘ஜஸ்ட் பாஸ்’ என்பது வேலை பெறுவதற்கு உதவி செய்யாது என்பதைத் தேர்வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வேலை வாய்ப்பு பெறுவதற்கு ‘வெயிட்டேஜ்’ முறையைத் தமிழக அரசு பின்பற்றுகிறது.

முதல் தாளில் வெற்றி பெற்று, இடைநிலை ஆசிரியராக விரும்புபவர்களுக்கு, அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பட்டயப்படிப்பு மதிப்பெண்களில் இருந்து 25 சதவீதமும், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் ‘வெயிட்டேஜ்’ முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும்.

இரண்டாம் தாளில் வெற்றி பெற்று பட்டதாரி ஆசிரியராக விரும்புபவர்களுக்கு அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 10 சதவீதமும், டிகிரி மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பி.எட்.மதிப்பெண்கள் 15 சதவீதமும், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் என்ற அளவில் ‘வெயிட்டேஜ்’ முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும்.
+2, டிகிரி மதிப்பெண்கள் எல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவை. இனிமேல் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தகுதித் தேர்வில் நாம் எவ்வளவு அதிகம் மதிப்பெண்கள் பெறுகிறோம் என்பதை வைத்துத்தான் நம் வேலை வாய்ப்பை உறுதி செய்யமுடியும்.

ஆக, ஆசிரியர் வேலை தேடுவோர் கையில் உள்ள ஒரே மந்திரக்கோல், தகுதித் தேர்வு மட்டுமே!. மொத்தமுள்ள 150 கேள்விகளுக்கு 130 மதிப்பெண்களையாவது தாண்டினால்தான் அரசு ஆசிரியர் பணியை நோக்கி நெருங்க முடியும். எனவே, தகுதித் தேர்வுக்குத் திட்டமிட்டு சரியாக, நிறைவாக தயாராக வேண்டும்.

மூன்று தாள்களுக்கும், தமிழ், ஆங்கிலம், உளவியல் ஆகியவை பொதுவானவை. தமிழ்ப் பாடத்திற்கு ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். இலக்கண அறிவோடு, பாடப்பகுதியில் உள்ள முழுமையான இலக்கிய, உரைநடைச் செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலப் பாடத்திற்கு அடிப்படை இலக்கணம் அவசியம். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களின் பயிற்சிகளை முறையாக ‘ஒர்க் அவுட்’ செய்து பார்த்தால் போதும்.குழந்தை வளர்ப்பு உளவியல் என்பது கொஞ்சம் புதிய பகுதி, இதற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனாலும் தேர்வர்கள், தங்களது. D.T.Ed. அல்லது B.Ed படிப்பில் படித்திருப்பீர்கள்.
மனவெழுச்சி, சமூக உணர்வு, ஒப்பார் குழு, அறிவு வளர்ச்சி, உளவியல் முறைகள், தனி ஆள் ஆய்வு, பல்வேறு உளவியல் அறிஞர்களின் கொள்கைகள், வளர்ச்சி, முன்னேற்றம், முதிர்ச்சி, சிந்தனை மற்றும் மொழி, கவனித்தல், மன நோய்கள், வழி காட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல், மீத்திறக் குழந்தைகள், கற்றல் கோட்பாடுகள் ஆகியவை இந்தக் குழந்தை வளர்ப்பு உளவியலில் அடங்கியிருக்கும்.

முதல் தாளுக்கான சூழ்நிலையியல் பாடத்திற்கு அரசு வெளியிட்ட (பழைய) சூழ்நிலையியில் பாடங்களைப் படிக்க வேண்டும்.அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு ஆறு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல், அறிவியல், கணிதப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும்.பாடங்களைப் படிக்கும்போது, ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள பயிற்சி வினாக்களை மட்டும் படிக்காமல், பாடம் முழுவதையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.குறிக்கோளோடு படியுங்கள். உற்சாகத்தோடு தேர்வுக்குத் தயாராகுங்கள்!
வாழ்த்துகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
எஸ்.வடிவேல் M.A., M.S.(IT)

தனியார் பள்ளி கட்டண குழுவின் புதிய தலைவராக மாசிலாமணி நியமனம்

தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக டி.வி.மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தக் குழுவின் தலைவராக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு செயல்பட்டு வந்தார். அவரது பதவிக்காலம் கடந்த 2015-ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக நீதிபதி டி.வி.மாசிலாமணி நியமிக்கப்படுகிறார்.

TNPSC - DEPARTMENTAL EXAM APPLY LAST DATE 31.3.17

TET -தேர்வுக்கு துறை அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு !

அரசு பணியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 ஐ எழுதுபவர்கள் துறை அனுமதி பெறுவதற்கான கடிதம்.

22/3/17

EDUSAT PROGRAMME FOR ALL AEEOs ON 23.03.2017

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 24.03.2017 அன்று சென்னையில் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது(நாள் 20/3/17)

தொடக்கக் கல்வி-EMIS இணைய தளத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்தல் 31/3/17 -க்குள் முடிக்கப்பட வேண்டும்-சார்பு நாள்:20/3/17.

அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள். நம் பணத்தை அவர்களிடம் சுழற்சிக்குக் கொடுத்து நாம் அதற்கு கமிஷன்
தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.


செல்வ மகள் சேமிப்புக் கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம்' எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன.


1. செல்வ மகள் சேமிப்புக் கணக்கு!


இதுபெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.


2. பொன் மகன் பொது வைப்பு நிதி!


செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் பொதுவான ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்ச முதலீடாக 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.


3. தொடர் வைப்புக் கணக்கு!


மாதந்திர சேமிப்புக்காக தொடர் வைப்புக் கணக்கு (Recurring Deposit (RD) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை.


4. கால வைப்புக் கணக்கு!


குறைந்த கால சேமிப்புக்காகக் கால வைப்புக் கணக்கு (Time Deposit (TD) Account) தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் 2 வருடங்களுக்கு 7.1 சதவிகிதமும், 3 வருடங்களுக்கு 7.3 சதவிகிதமும், 5 வருடங்களுக்கு 7.8 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.


5. முதியோருக்கான சேமிப்புத் திட்டம்!


அதிகபட்ச வட்டியுடன் வருமான வரிச் சலுகையும் (80C) பெற முதியோருக்கான சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account)தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.


6. மாதாந்திர வருமானத் திட்டம்!


நிலையான மாத வருமானத்துக்கு மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme (MIS) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு மேற்கொள்ளலாம்.


7. தேசிய சேமிப்புப் பத்திரம்!


வருமான வரிச் சலுகை (80C) பெறத் தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificates -NSC) திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்து வருடங்கள் வட்டி 8 சதவிகிதம் வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை.


8. கிஸான் விகாஸ் பத்திரம்!


112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை.



`அதிக வட்டி, அதிக லாபம்' தருகிறேன் என்று யார் சொன்னாலும், எந்த நிறுவனம் சொன்னாலும் நம்பாதீர்கள். அலசி ஆராய்ந்து அதன் பின்னே முதலீட்டினைத் தொடங்குங்கள். நம் ஊரில் வங்கிச் சேவை இல்லாத கிராமம்கூட இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அஞ்சல் அலுவலகம் இல்லாத எந்த ஒரு கிராமமும் இல்லை. இன்றும் ஏதோ ஒரு மூலையில் தனது சிறகினை விரித்து சேவையை வழங்கி வருகிறது. வங்கிகளைப்போல பரிவர்த்தனைக் கட்டணம், மினிமம் பேலன்ஸ் என்று எந்த ஒரு நெருக்கடியும் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் இல்லை. 50 ரூபாய்தான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் சேமிப்புக் கணக்குபோல, குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் துறையில் இருக்கின்றன. நாளைய பாதுகாப்புக்கு இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

FLASH NEWS: வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -மத்திய அரசு அறிவிப்பு. PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -மத்திய அரசு
அறிவிப்பு.

PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்பிக்க வேண்டியது கட்டாயாமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே எல்பிஜி இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆதார் எண்ணையும் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துபவரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக‌ பின்தொடர வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது‌.


இதற்கான வருமான வரிப் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன. மேலும் நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது. வருமான வரிப் படிவத்தில் கணக்கு தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2 லட்சத்திற்கு மேலான ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு, அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் -மத்திய அரசு

ரூ.2 லட்சத்திற்கு மேலான ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு, அதே
அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் -மத்திய அரசு


ரொக்க பரிவர்த்தனையின் உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாக குறைக்கப்படும் என மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தகவல்.

கல்வித்துறையில் விரைவில் மாற்றம் -கல்வியமைச்சர் தகவல்

Census E-Register

21/3/17

ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பள்ளி கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் தலைமை தாங்கினார்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா
குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் ரெ.இளங்கோவன், க.அறிவொளி, ச.கண்ணப்பன், கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார்.அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–


  ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும். போதிய ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டுக்குள் நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.