யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/3/17

ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை: நிதி மசோதாவில் திருத்தம்.

ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கான அதிகபட்ச உச்ச வரம்பு ரூ. 3 லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக மாற்றுவதற்கான திருத்தம் உள்பட நிதி மசோதாவில் 40 திருத்தங்களை மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. இது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாகும்.

மக்களவையில் நிதி மசோதா செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நிறுவனங்கள் சட்டம், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிச் சட்டம், கடத்தல் மற்றும் அன்னியச் செலாவணி சட்டம், டிராய் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் போன்ற சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டன. சிறிய அளவிலான தீர்ப்பாயங்களை இணைத்து அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவது, தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 40-இல் 12-ஆகக் குறைப்பது ஆகியவையே இத்திருத்தங்களின் நோக்கமாகும்.
மத்திய பட்ஜெட்டில் ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.3 லட்சம் என்று அறிவிக்கப்பட்டதை ரூ.2 லட்சமாக மாற்றுவதற்கான திருத்தம் உள்பட நிதி மசோதாவில் 40 திருத்தங்களும் அவையில் தாக்கல் செய்யப்பட்டன.

திருத்தங்களைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசினார்.
இவ்வளவு அதிக எண்ணிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாகும். இதற்கு திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், இந்திய குடியரசுக் கட்சி (ஆர்எஸ்பி) ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ’பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடாமல். புறவாசல் வழியாக திருத்தங்கள் சேர்க்கப்படுகின்றன' என்று அவை ஆட்சேபம் தெரிவித்தன. எனினும், அந்த ஆட்சேபங்களை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்.

இதனிடையே, மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ’ரொக்கப் பணப் பரிவத்தனைகள் இதுவரை ரூ. 3 லட்சம் என்று அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பானது தற்போது ரூ.2 லட்சம் என்று குறைக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அதே தொகைக்கு அபராதம் விதிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக