யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/3/17

PAY COMMISSION NEWS :- ஊதிய குழு தொடர்பாக அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 31.03.2017 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்...

பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017

அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னரே உயர்கல்வி பயில சேர்ந்துள்ளமையால் துறைத்தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் எழவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(மேனிலைக்கல்வி) செயல்முறைகள் நாள்: 19.01.2017

டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது.
'அரசு பள்ளிகளில், 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்தது.

ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த நியமனத்துக்கு தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து, தேர்வர்களின் விபரங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், மார்ச், 10ல் வெளியிடப்பட்டன. பட்டதாரிகள், தங்களின் சுயவிபர பதிவுகளை திருத்தம் செய்ய, மார்ச், 20 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 24 ஆயிரத்து, 666 பேர், 'ஆன்லைன்' மூலம் தங்கள் பதிவை சரிபார்த்து, திருத்தம் செய்துள்ளனர்.இன்னும், 7,961 பட்டதாரிகள் சரிபார்க்கவில்லை. இவர்களுக்காக, இன்று ஒரு நாள் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தை தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் உமா தெரிவித்துள்ளார்.

மாலுமி' இல்லாமல் தத்தளிக்குது அனைவருக்கும் கல்வி திட்டம்!

தமிழகத்தில் 30 மாவட்டங்களில், எஸ்.எஸ்.ஏ., எனும் 'அனைவருக்கும் கல்வி திட்ட' கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி
பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. இதனால், 'முக்கோண சிக்கலில்' சிக்கி முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) தவிக்கின்றனர்.எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்காக கூடுதல் சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் மாறுதல், ஓய்வு போன்றவற்றால் காலியான பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. மேலும் 2013 டிசம்பரில், இத்திட்டத்தின் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணித்த 375 மேற்பார்வையாளர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டனர்.இதனால், கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, 'மாலுமி இல்லாத கப்பல்' போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆர்.எம்.எஸ்.ஏ., எனும் 'அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கும் சி.இ.ஓ., க்களே எஸ்.எஸ்.ஏ., திட்டத்தையும் சேர்த்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனால், பணிச்சுமை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். தமிழக பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக, 2,656 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்கு 1,476 கோடி ரூபாய், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு 1,264 கோடி ரூபாய் வரவேண்டும். ஆனாலும், மாநில அரசு போதிய நிதி ஒதுக்கிய நிலையில், கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.இவர்களிடம் ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களை ஒப்படைக்கலாம். இதன்மூலம் கல்விப் பணிகளில் சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும்; தகுதி அடிப்படையில் டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு கூறினர்

கல்வி கட்டண கமிட்டி புதிய தலைவர் மாசிலாமணி

சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி தலைவராக, ஓய்வு
பெற்ற நீதிபதி மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டண விகிதங்களை நிர்ணயிக்க, 2009ல், தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது.

அதன்படி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, தனியார், நர்சரி, மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது. கமிட்டியின் முதல் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார். அவருக்கு பின், ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவர், 2012ல் விலகினார். அந்த ஆண்டு ஜனவரியில், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், 2015 டிச., 31ல் ஓய்வு பெற்றார். அதன்பின், தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், கட்டண கமிட்டியின் பணிகள் முடங்கின. இது குறித்து, தினமலர் நாளிதழில், பல முறை செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், நேற்று கமிட்டி தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணியை நியமித்து, அரசு உத்தரவிட்டது. இவரது பதவி காலம், மூன்று ஆண்டுகள்

மாணவனுக்கு சித்ரவதை: கல்வி நிறுவனத் தலைவர் கைது!

கல்லூரி வளாக அறையில் அடைத்துவைத்து எட்டு நாள்கள் மாணவனை சித்ரவதை செய்ததாக கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது
செய்யப்பட்டார்.

கோவையில் பிரபலமான நேரு கல்வி குழுமம் இயங்கிவருகிறது. இந்தக் கல்வி குழுமத்தின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இந்தக் கல்வி குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேருகல்வி குழுமத்தில் திருச்சூர் எருமப்பட்டியைச் சேர்ந்த சக்கீர் சவுகத் என்கிற மாணவன் பயின்று வந்துள்ளார். இவரை, சில காரணங்களுக்காக கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் எட்டு நாள்களுக்கும் மேலாக அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதனையடுத்து, தப்பி வந்த மாணவனின் புகாரின் பேரில் நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் சிலரை திருச்சூர் எருமப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் பிரபலமாக செயல்படும் நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது: ஹைகோர்ட் நீதிபதி வேதனை

ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி இருப்பது வேதனையகவுள்ளது என்று நீதிபதி
கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் காளான்கள் போல் முளைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். எந்த கொள்கையும் இன்றி பிஎட், எம்எட் கல்வி நிறுவனங்களுக்கு எந்திரங்கள் போல் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதகாவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்விஐ கல்லூரி தொடுத்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக விளாசியுள்ளார். நாடு முழுவதும் எத்தனை பி.எட், எம்.எட் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிற்சி பெற்ற மாணவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 27 ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டில் ஆசிரியர் பயற்சி வகுப்பில் அதிக மாணவர்களைச் சேர்க்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லெட்டர் பாட் கல்வி நிறுவனங்கள் பெருக்கத்தால் தரமான ஆசிரியர்கள் உருவாவதில்லை என்றும் கல்வித் தரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்கள் கல்வி குறைபாட்டுக்கு ஆசிரியர்கள் தரம்மில்லாததுதான் காரணம் என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

TNPSC - DEPARTMENTAL EXAM APPLY LAST DATE 31.3.17

வருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்! பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வருமா வராதா என்ற குழப்பம் ஒரு பக்கம்... அடுத்த ஆண்டு முதல் பொறியியல்
படிப்புக்கும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது மத்திய அரசின் மனித வளத்துறை. அது மட்டுமில்லை... கலை அறிவியல் படிப்பு உள்பட பிற படிப்புகளுக்கும், தொழில்சார் வேலை வாய்ப்புக்கும் தேசிய அளவில் ஒரே தேர்வைக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. முதல்கட்டமாக, இந்தத் தேர்வுகளை எல்லாம் நடத்துவதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்க மத்திய அமைச்சரவையின் அனுமதியைப் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது மனித வளத்துறை.

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட்
தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது. விண்ணப்பங்களை பெற கடைசி நாளான நேற்று வரை, 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும், 5 லட்சத்து 60 ஆயிரம் பி.எட்., முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

ஏப்ரல் 1முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் 43 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கசாவடிகளில் தனியாரும் 14 சுங்க சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும்
கட்டணம் வசூலிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 23 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை மட்டுமின்றி ஆம்னி பஸ்களின் கட்டணமும் உயர்ந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
திருத்தணியை அடுத்த பட்டறைபெரும்புதூர், சூரப்பட், வானகரம், கோவை மாவட்டம் கன்னியூர், வாடிப்புரம், பரனூர், சேலம் மாவட்டம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி - சாலைபுதூர், பள்ளி கொண்டா, வாணியம்பாடி, நெல்லை மாவட்டம்- எட்டூர், கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை, திருச்சி சிட்டம்பட்டி,
மதுரை பூதக்குடி, சிவகங்கை- லெம்பாக்குடி, லட்சுமணப்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை சமுத்திரம் ஆகிய 20 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அனைத்து வாகனங்களுக்கும் ரூ.10 கூடுதலாக இனி வசூலிக்கப்படும். சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வதால் அனைத்து பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை உயர வாய்ப்பு உள்ளது.
சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்க செயலாளர் யுவராஜ் கூறியதாவது:-
சுங்கசாவடிகளுக்கு ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனம் எண்ணிக்கை கூடும் போது கட்டணத்தை குறைக்க வேண்டுமே தவிர உயர்த்தக்கூடாது. வானகரம்- வாலாஜாபாத் 93 கிலோ மீட்டர் துரத்திற்கு 6 வழிப்பாதை அமைக்கப்படுவதாக கூறி சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இதுவரையில் அங்கு 6 வழிப்பாதை அமைக்கப்படவில்லை. 4 வழி பாதைக்கு ஏன் கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டும்.

சாலைகளை பராமரிக்காமல், சாலை போடாமல் பணம் மட்டும் வசூலிக்கிறார்கள். மதுரவாயல்- தாம்பரம் பணி முடிந்துவிட்டது. எதற்காக இன்னும் டோல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இது பற்றி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

அரசாணை எண்.45 பகது நாள்.13.03.2017 - பள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை

FLASH NEWS: CPS AMOUNT TRANSFER TO GPF ACCOUNT G.O.No.288, dated 10th Nov 2016 issued (Employees initially enrolled under CPS and later brought under GPF as per High Court Orders

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்

திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு திறந்தநிலைபல்கலையில், கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என, இரு வகையில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 
2017 காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளதாக, பதிவாளர் விஜயன் அறிவித்துள்ளார்.இதற்கு, பல்கலையின்,http:/www.tnou.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். மண்டலஅலுவலகங்களில், நேரிலும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஏப்., 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்கள் உறுதி

இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். பிளஸ் 2 இயற்பியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. வினாக்கள் எளிமையாக இருந்ததால் சென்டம் மதிப்பெண் எடுக்கலாம், என மாணவர்கள் கூறினர்.
ஜி.முகேஷ்கண்ணன், அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தரகோசமங்கை: புளூ பிரின்ட் படியும், புத்தகம் படியும், வினாக்கள் இருந்ததால் எளிதாக பதிலளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் குழப்பமாக இருந்தபோதிலும் விடையளிக்க முடிந்தது. 3 மதிப்பெண் வினாக்களுக்கு யோசித்து பதில் எழுதுவது போல் இருந்தது. 5 மதிப்பெண் வினா கடந்த காலங்களை விட எளிமையாக இருந்தன. 10 மதிப்பெண் வினா மிக எளிமையாக இருந்தது. விரைவாக பதில் எழுதும் மாணவர்கள் 45 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வை முடித்திருக்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு சென்டம் உறுதி.வி.அனுஜா, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: நான்கு பகுதிகளிலும் 3, 5, 10 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. புத்தகத்தை முழுமையாக படித்திருந்தால் சராசரி மாணவர்கள் கூட 130 மதிப்பெண்எடுக்கலாம். கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் இந்த முறை கேட்கப்பட்டிருந்தன.

மாதிரி வினாத்தாள் அடிப்படையில் படித்ததால் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடிந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் நிச்சயமாக சென்டம் எடுக்க முடியும். போதிய நேரம் இருந்ததால் எழுதிய பதிலை சரி பார்க்க முடிந்தது.

இ.செல்வேந்திரன், ஆசிரியர், எலைட் பள்ளி, ராமநாதபுரம்: கற்கும் திறன் குறைந்த மாணவர்களும் எளிதில் பதில் அளிக்கும் வகையில் வினாக்கள் எளிமை. ஆசிரியரின் வழிகாட்டுதல் படி, புத்தகம் முழுவதையும் படித்து தேர்வெழுதியமாணவர்களுக்கு சென்டம் உறுதி. மெல்ல கற்கும் மாணவர்கள் 120 மதிப்பெண் எடுக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்தாண்டு சென்டம் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பாடப்பிரிவு களின் பெயர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் இடம் பெறும். 
மாணவர்களின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.இதனால், மாணவர்கள் உயர் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் செல்லும் நிலையில், பெயர் குழப்பம் ஏற்படுகிறது.எனவே, தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல் மாணவரின் பெயர் மற்றும் இனிஷியல், துாய தமிழில் இடம் பெற உள்ளது. அதேபோல், பள்ளியின் பெயரும், தமிழில் இடம் பெற உள்ளது.

இதுதொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில், 'மார்ச், 31க்குள், அனைத்துமாணவர்களின் பெயர்களும், தமிழ் இனிஷியலுடன், தேர்வுத் துறைக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும்' என்றார்.

DEE - EDUSAT PROGRAMME TO ALL AEEOs ON 23.03.2017 FOR WIFS

பிரதமர் பற்றி அவதூறு: ’வாட்ஸ்-அப்' குழு அட்மின் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடியைப் பற்றிய ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் அடங்கிய பதிவை ’வாட்ஸ் - அப்' குழுவில் பகிர்ந்து கொண்டதாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பிரதமரைப் பற்றிய அவதூறான கருத்துகள் அடங்கிய ஒரு பதிவு ’வாட்ஸ் - அப்' மூலம் பரப்பப்படுவதாக சங்காரி காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட ஒரு ’வாட்ஸ் - அப்' குழுவின் மூலமாகவே அந்த சர்ச்சைக்குரிய பதிவு முதன்முதலில் பரப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தக் குழுவை உருவாக்கிய நபர் (அட்மின்) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் திட்டமிட்டு இத்தகைய அவதூறுகளைப் பரப்பியது உறுதிப்படுத்தப்பட்டால், சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.