யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/3/17

ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ் மதிப்பெண்' வெளியீடு ...,முழு விவரம்....

அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான
எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதன்அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும்.

சான்றிதழ் சரிபார்த்தல்

சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும்.

மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது ‘வெயிட்டேஜ்’ அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:-

‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம்

வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

கல்வித்தகுதிக்கு மதிப்பெண்

கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

கருத்தில் கொள்ளப்படும் தேதி

இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

பணிஅனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிப்படையான நியமனம்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும்.


தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் 'ஜாக்பாட்' : ஊதிய உயர்வு வழங்க அரசு திட்டம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள்
சேகரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர்.
தோட்டக்கலை, கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.


அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை

ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவுத் துறை தடை விதித்துள்ளது. ரேஷன் ஊழியர்களுக்கு, மாதத்தின் முதல், இரண்டு
ஞாயிற்று கிழமை வேலை நாள். 
அதற்கு மாற்றாக, அந்த வார வெள்ளிக் கிழமை விடுமுறை. ஏப்., 1ல் இருந்து, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவுத் துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, உணவுத் துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம், சமூகநலக் கூடங்களில், மக்களை அழைத்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அந்த பணியில், ரேஷன் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். புதிய ரேஷன் கார்டு வாங்கியதும், கடைக்கு சென்று, ஊழியரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்ததும் கார்டுதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., வரும். பின், வழக்கம் போல், கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். இதற்காக, ஏப்., 15 வரை, ஊழியர்கள், விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

34 வருடங்களாக இலவசமாகக் கல்வி போதிக்கும் மாற்றுத்திறனாளி! மலைவாழ் குழந்தைகளின் 'ஹீரோ' மாணிக்கம்

பிறவியிலேயே சூம்பிப்போன கால்கள், தவழ்ந்து நடக்கும் நிலையிலும், ஊனத்தைத் தூக்கி வீசிவிட்டு, கல்வி அறிவில்
பின்தங்கிய பகுதியாக விளங்கும் பச்சமலை மலைவாழ் குழந்தைகளுக்கு, 34 வருடங்களாக இலவசமாக கல்விச் சேவை புரிந்துவருகிறார், மாற்றுத்திறனாளியான மாணிக்கம்.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சமலையில் உள்ள புத்தூர்தான் இவரது சொந்த ஊர். பிறக்கும்போதே, இரண்டு கால்களும் ஊனமாக இருந்தன. நடக்க மிகவும் சிரமப்பட்டாலும், படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், திருச்சியில் தங்கிப் படித்த மாணிக்கத்தால், இ.எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல் படிக்க முடியவில்லை.  அதனால், சொந்த ஊரிலேயே தங்கியிருந்தவர், படிப்பதற்குத் தான் பட்ட கஷ்டங்களைத்  தன் ஊர் குழந்தைகள் படக்கூடாது என நினைத்தார்.
தன்ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும், அப்பகுதி மக்களுக்கு போதிய கல்வி விழிப்பு உணர்வு இல்லாததாலும், படிக்க வரும் குழந்தைகள் குறைவாக இருந்தனர். தன் கிராமத்தில், தான் படித்த பள்ளியின் நிலமையை மாற்ற எண்ணிய மாணிக்கம், அந்தப் பள்ளிக்குச் சென்று, குழந்தைகளுக்குப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

மாணிக்கத்திடம் பேசியபோது, “இப்பவே இந்தப் பகுதியில் கல்வி அறிவு குறைவாக இருக்குமென்றால், 48 வருடங்களுக்கு முன், இதைவிட மோசமாக இருந்திருக்கும். போக்குவரத்து வசதியே இல்லாத காலம். மக்களிடம் அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லாததால், பலர் பள்ளிக்குப் போனதே இல்லை. அதை உணர்ந்த அரசாங்கம், 5-ம் வகுப்பு வரை உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கியது. நான், இங்குதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பிறகு, அதற்குமேல் திருச்சியில் தங்கிப் படித்தேன். குடும்பச் சூழலால் இ.எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல் படிக்க முடியவில்லை. எனது அண்ணன் தங்கராசுக்கு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை கிடைத்தது. ஓய்வாக இருக்கும் நேரங்களில், அண்ணனுடன் பள்ளிக்கூடத்துக்குப் போவேன். அப்படிப் போகும்போது, ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் சிக்கல் இருப்பதை உணர்ந்தேன். நான் படித்த பள்ளிக்கும், சொந்த ஊர் குழந்தைகளுக்கும் கல்விச் சேவை செய்ய நினைத்து, விருப்பத்தை பள்ளித்  தலைமை ஆசிரியரிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார்.


இந்தப் பகுதியில் படிப்பறிவு குறைவு என்பதால் அவ்வளவாகப் பிள்ளைகள் படிக்க வர மாட்டார்கள். பெற்றவர்களிடம் பேசி, குழந்தைகளை அழைத்துவந்து பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம். இந்தப் பகுதியில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இருக்கக்கூடாது என நினைத்தேன். பள்ளியில் பாடம் நடத்தியதுபோக, காலையிலும் மாலையிலும் டியூஷன் எடுக்கிறேன். லீவு விட்டாலும் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவேன். அதனால், மாணவர்கள் நம் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். தமிழ், அறிவியல் பாடங்கள் எடுக்கிறேன்.

 ஆரம்பத்தில் இங்கு வேலைசெய்கிற ஆசிரியர்கள், என் செலவுக்கு 5, 10 ரூபாய் கொடுத்தாங்க. நம்ம ஊருக்குச் சேவைசெய்ய பணமெல்லாம் வேண்டாம் என மறுத்தேன். கைச்செலவுக்கு உதவும் என ஆசிரியர்கள், மாதம் 200ல் ஆரம்பித்து இப்போது 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். இப்படியே 34 வருடங்கள் போயிடுச்சு. இன்னும் கொஞ்ச காலம்தான். அதுவரை எங்க ஊரில் படிக்காத குழந்தைகளே இருக்கக்கூடாது என்பது என்னோட ஆசை. அதற்காக, சாகும்வரை  உழைப்பேன்” என்றார் நம்பிக்கையோடு.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்



பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி - சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.

அரசுபள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்'மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது. இது
குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


    அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.

இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 'வெயிட்டேஜ்'அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:- வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரைகாத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும்,8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள்அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ளவேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

பணிஅனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும்.


அதன்அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்? பேரவையில் அரசு தகவல்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை
அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.

  சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்த
விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை பேசியது: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கென நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு பரிந்துரைக்கும்போதுதான் நிதிச் சுமை எவ்வளவு எனத் தெரியும். அதன் அடிப்படையில் திருத்த மதிப்பீடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தக் கூடுதல் செலவுக்கான நிதி ஆதாரங்களும் அப்போது கண்டறியப்படும்.

உதய்திட்டம் இல்லாவிட்டால்….மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, அரசு கடன் ரூ.2.72 லட்சம் கோடியாக இருக்கும். ரூ.22,815 கோடி மின்சார வாரியத்தின் கடனை அரசு ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டது. இல்லையென்றால், அரசின் கடன் மார்ச் 31 நிலவரப்படி ரூ.2.50 லட்சம் கோடியாகத்தான் இருந்திருக்கும். பொது நிறுவனங்களின் கடன் இந்த ஆண்டு இறுதியில் ரூ.94,000 கோடி அளவு மட்டுமே இருக்கும். அடுத்த நிதியாண்டு இறுதியில் அரசின் கடன் அளவு ரூ.3.14 லட்சம் கோடியாகும் என்றார் ஜெயக்குமார்

Lab Assistant Pay scale!!!

salary – Pay scale

6CPC – Post – Pay scale – check your pay


I . Rs. 5200 – 20200 + G.P 2400
Junior Assistant – School Education Dept, Upper Division Clerk (UDC)
Typist, Stenographer Grade II
Lab Assistant

VAO

EXECUTIVE OFFICER, GRADE-III – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments
Junior Inspector – Tamil Nadu Co-operative Societies
Punch Operator – Government Data Centre
Rs. 5200 – 20200 + G.P 2600
Assistant

Rs. 5200 – 20200 + G.P 2800
Computer Operator
JUNIOR COURT ASSISTANT
DRAUGHTSMAN, GRADE-III

Rs. 5200 – 20200 + G.P 1900
Clerk – Ministry of commerce & Industry
Lower Division Clerk (LDC)

Rs. 8500 – 26300 + G.P 2800
Clerical Asst – Delhi Municipal Council
——————————————————
II. Rs. 9,300 – 34,800 + G.P 4200
Hindi Translator Grade B
Rs. 9,300 – 34,800 + G.P 4400
Motor Vehicle Inspector, Grade – II
Rs. 9,300 – 34,800 + G.P 4500
Librarian Grade – I
Scientific Assistant Grade-II
Rs. 9,300 – 34,800 + G.P 4600
Personal Assistant
SCHOOL ASSISTANT
Assistant Grade B
Tamil Pandit
Librarian (KV school)
Finance officer(KV school)
Rs. 9,300 – 34,800 + G.P 4700
FOREMAN
Rs. 9,300 – 34,800 + G.P 4800
STATISTICAL INSPECTOR
GHS HM
———————————————————-
III. Rs. 15600 – 39100 + G.P 5100
Assistant Engineer – Tamil Nadu Industries
Technical Assistant
Testing Assistant
Rs. 15600 – 39100 + G.P 5400
Assistant Commissioner
Labour Officer
Superintendent
Vice Principal (KV school)
Rs. 17240 – 36640 + G.P

ASSISTANT ADMINISTRATIVE OFFICER in LIC

Rs. 15600 – 39100 + G.P 5700
DEO

Rs. 15600 – 39100 + G.P 6000
PHYSICAL DIRECTOR (COLLEGE)
COLLEGE LIBRARIAN

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி !!

பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம், மத்திய
அரசின் அடுத்த செக்..!

ஜூலை1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான் கார்டு செல்லாது.


 நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையோ அவர்களது பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது. பான் கார்டு வரி செலுத்தும் அனைவருக்கும் பான் கட்டாயம், வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் கார்டை அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

 மானியம் என்றாலே ஆதார் கட்டாயம் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் அதார் எண் தேவை என்பதைக் கொண்டு வருகின்றது, முக்கியமாக மானியம் பெறும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பள்ளி சத்துணவு சாப்பாட்டிற்கும் ஆதார் அன்மையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவிற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறியுள்ளது.

ரயில்வே பாஸ் மத்திய அரசைப் பொருத்த வரை இன்னும் ரயில்வே ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் பாஸ்களுக்கு அதார் எண் கட்டாயம் ஆக்கப்படவில்லை.

 இந்தியர்களின் வருமானத்தைக் கண்டறிவது எளிது ஆதார் கார்டு, பாண் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதினால் கோடி கணக்கான இந்தியர்களின் வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களை வருமான வரித்துறையினரால் எளிதாகக் கண்டறிய முடியும்.

மாற்று அடையாள அட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருங்காலத்தில் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அனைத்து அடையாள அட்டைகளுக்கும் ஆதார் அட்டை மாற்றாக இருக்கும் என்று வருமான வரிக்கு ஆதார் எண் கண்டிப்பாகத் தேவை என்று அறிவிக்கும் போது கூறினார்.


எதனால் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் மேலும் ஆதார் அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும் அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்கலாம் என்றும் அருன் ஜெட்லி தெரிவித்தார்.

24/3/17

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை வெளியீடு. 4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

அரசுபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை வெளியீடு.
4,384 பணியிடங்களை நிரப்ப சென்ற ஆண்டு நடை பெற்ற தேர்வுமுடிவுகள் நாளை வெளியிடப்படும் கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளது 

 அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை

வெளியீடு.  4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

DSE ; PAY ORDER FOR 31 TAMIL PG TEACHERS

PAY ORDER FOR 7979 BT POSTS FROM APRIL 2017 TO JUNE 2017

PENSION – New Health Insurance Scheme 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account – Orders – Issued.

தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் சார்பான அரசாணை 199 நாள் 21.03.2017

ஐந்து பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் என்றால், அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் எப்படி உயரும்?!'' - கொதிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ஒரு வேதனையான கருத்தை பதிவு செய்திருக்கிறார். 'தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்காக, நாடு முழுக்க ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், அந்தக் கல்லூரிகள் பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லை. அந்தக் கல்லூரிகளில் படித்த ஆசிரியர்களின் தரமும் மோசமாக இருக்கிறது. இதனால், மாணவர்கள் தங்கள் பெயரைக்கூட எழுதமுடியாத அளவுக்கு, அவர்களின் கல்வி நிலை மோசமாக இருக்கிறது' என வேதனையாகக் கூறியுள்ளார்.
நீதிபதியின் இந்தக் கருத்து மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளின் நிலை குறித்து கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.
"நீதிபதி என்.கிருபாகரன் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள், பின்னர் பி.எட்., எம்.எட். முடித்து, ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல தனியார் கல்வியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் தரமான கல்வி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. மேலும், அந்தக் கல்லூரிகளில் பயிலும் பல மாணவர்கள், கல்லூரிக்குச் சரியாக செல்லாமல், பணம் கொடுத்து வருகைச் சான்றிதழை பெறுகிறார்கள். இப்படியான மாணவர்கள் ஆசிரியர்களானப் பின்னர், அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதில்லை. இதனால், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும் தங்கள் பெயரையே எழுதத் தெரிவதில்லை. இதுதான் நீதிபதியின் வேதனையும்கூட.
2012- 13-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியான தகுதியுள்ள ஆசிரியர்கள்தான் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். விதிவிலக்காக, அரசுப் பள்ளிகளில் பணம் கொடுத்தும், மனப்பாட திறனால் தகுதியானதுமான ஆசிரியர்கள் சிலரைத் தவிர்த்து, மற்ற அனைவருமே திறமையான ஆசிரியர்கள்தான். ஒவ்வோர் ஆசிரியரும் தான் படித்த ஒரு துறை பாடத்தில்தான் திறமை மிக்கவராக இருப்பார். ஆனால், தமிழக அரசுதான் அரசுப் பள்ளிகளில் போதிய பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது. இதனால், ஐந்தாம் வகுப்புக்குட்பட்ட பள்ளிகளில் ஒரே ஆசிரியரே மாணவர்களுக்கு ஐந்து பாடங்களையும் எடுக்கும் நிலை இருக்கிறது. ஓர் ஆசிரியரால், எப்படி ஐந்து பாடங்களையும் நல்ல முறையில் கற்பித்து, திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்? இத்தகைய அரசு பள்ளிகளின் தரமும் எப்படி உயரும்? என ஆவேசமாக கேள்வியை எழுப்புவதுடன் பிரின்ஸ் கஜேந்திரபாபு தனியார் பள்ளிகளில் இருக்கும் நிலையையும் கூறுகிறார்.
தனியார் பள்ளிகளிலோ குறைந்த ஊதியத்துக்குத் தகுதி குறைவான ஆசிரியர்கள் பலரை நியமிக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களுக்கு கடுமையான பணிச்சுமையும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் இத்தகைய தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து படிப்பதற்கே தொடர்ந்து ஊக்கம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்களும், தங்கள் பிள்ளை அதிக மார்க் எடுத்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, பிள்ளையின் கற்றல் திறனைப் பார்ப்பதில்லை. சி.வி.ராமன், ராமானுஜம், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை என எந்த அறிஞரையும் தனியார் பள்ளிகள் உருவாக்கவில்லை. இன்றைக்கும் சமூகத்துக்கு உதவும்படியாக பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
ஒருமாணவரைத் திறமையானவராகவும் எதிர்காலத்தின் நல்ல குடிமகனாகவும் மாற்றுவது, பள்ளி ஆசிரியர்களின் பணி. ஆனால், ஆசிரியர்களே வெறும் டிகிரி மட்டும் பெற்று, அந்த டிகிரிக்கு பொருத்தமான கல்வி அறிவுடன் இல்லாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய நிலை. இதனால், ஏராளமான மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து, அடிப்படை வசதிகள், கல்வி கற்கும் தகுதியில்லாத கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்க வேண்டும். தமிழக அரசும் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தி, தகுதியுள்ள ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்" என்கிறர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

- கு.ஆனந்தராஜ்

இன்முகத்தோடு உங்கள் இல்லம் தேடி வருகிறார் தபால்காரர் இனிய அஞ்சல் சேவை உங்களுக்கு செய்ய

No automatic alt text available.

1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகள் ஒரே மாதத்தில் அழிப்பு: பரிசு வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்



பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த 1.24 லட்சம் சீமைக் கருவேல மரங்களை ஒரே மாதத்தில் அழித்து அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஓந்தாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளில் 174 பேர் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் குழுவாகவும், தனியாளாகவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்பயனாக, இதுவரை 1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தவிழிப்புணர்வு நடவடிக்கைக்கு பள்ளித் தலைமையாசிரியர் துரைராஜ், முதுநிலை பொருளியல் ஆசிரியர் ராஜசேகரன், முதுநிலை தமிழாசிரியர் சிவக்குமார் ஆகியோர் தூண்டுகோலாக அமைந்துள்ளனர். இதுதொடர்பாக ஆசிரியர் ராஜசேகரன் கூறியது:

சீமைக் கருவேல மரங்களை அழிப்பது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கடந்த மாதம் 20-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமிருந்து தலைமையாசிரியருக்கு இ-மெயில் வந்தது. இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியரின் அறிவுரையின்படி நானும், ஆசிரியர் சிவக்குமாரும் சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பள்ளி இறைவணக்க நேரத்தில் மாணவர்களிடம் பேசினோம்.

வளர்ந்த சீமைக் கருவேல மரங்களை மாணவ, மாணவிகளால் வெட்ட முடியாது என்பதால், சீமைக் கருவேல செடிகளை வேருடன் பறிக்குமாறும், இதன்மூலம் ஓரிரு ஆண்டுகளில் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தினோம்.
 

அதன்படி, கடந்த 20-ம் தேதி 69 மாணவ, மாணவிகள் 81,276 செடிகளையும், 21-ம் தேதி 18 மாணவர்கள் சேர்ந்து 2,479 செடிகளையும் பறித்து வந்தனர். தொடர்ந்து, பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஊர் முழுவதும் சீமைக் கருவேல செடிகளை அகற்றி வருகின்றனர். ஒரு மாதத்தில் இப்பகுதியில் இருந்த 1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகளைப் பறித்துள்ளனர்.

சீமைக் கருவேல செடிகள் ஒழிப்பு ஒருங்கிணைப்புப் பணியில் பள்ளியின் பிற ஆசிரியர்கள் சார்லஸ், அழகு சுப்பிரமணியன், முனியசாமி, சாந்தி, பவானி ஆகியோரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுத் தேர்வு முடிந்தபின், கோடை விடுமுறை நாளிலும் இப்பணியை தொடருவோம் என்று மாணவர்கள் உறுதியளித்துள்ளனர். மாணவ, மாணவிகளின் ஆர்வத்தை ஊக்குவிக்க, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் சொந்த செலவில் பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வருகின்றனர் என்றார்.


8,000 செடிகளை அழித்த ‘தனியொருவர்’
 

ஆசிரியர் ராஜசேகரன் மேலும் கூறும்போது, “பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் கிஷோர் மட்டும் ஒரே நாளில் தனியாளாக சுமார் 2,000-க்கும் அதிகமான சீமைக் கருவேல செடிகளை பறித்துவந்தார். அவரை ஊக்குவிக்க டீ-சர்ட் பரிசு வழங்கினோம். தொடர்ந்து அவர் இதுவரை 8,000-க்கும் அதிகமான சீமைக் கருவேல செடிகளை பறித்துள்ளார். அதேபோல, 9-ம் வகுப்பு மாணவிகள் கஜப்பிரியா, தனலட்சுமி, சவுமியா, தீபிகா, ராகவி, யுவஸ்ரீ ஆகியோர் இணைந்து 12,500 சீமைக் கருவேல செடிகளை பறித்துள்ளனர். யார் யார் எத்தனை செடிகளை பறித்து வருகின்றனர் என்று தனியாக பதிவேடு வைத்து பதிவு செய்து வருகிறோம்” என்றார்.

தொடக்கக்கல்வி - 24.3.2017 அன்று நடைபெற இருந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை ஒத்திவைப்பு

TET' தேர்வு கோடை விடுமுறையில் நடத்தப்படுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்,
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.

  இத்தேர்வு எழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால்மாலை வெகு நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம் கிடைப்பதில்லை.குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக முடிவதில்லை.

அரசுஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை. இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும், 'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாகவிண்ணப்பிக்கும் நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளானநேற்று (மார்ச், 23)
வரை மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பி.எட்., படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். டெட் தேர்வு ஏப்.,29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Lab Assistant Exam Result