யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/4/17

வெயில் தாக்கம்: பள்ளிகளுக்கு முன்கூட்டியே லீவு?

கோடை வெயிலின் உச்சத்தால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது.      சமச்சீர் கல்வியில், 10ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கும்,  தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 29 வரை தேர்வு நடத்தி, அதன்பின், விடுமுறை அறிவிக்க, திட்டமிடப்பட்டிருந்தது. 

திட்டம் : ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், முன்கூட்டியே கோடை விடுமுறை விட, தனியார் பள்ளிகள் திட்டமிட்டன. பல பள்ளி வளாகங்களில், 'வர்தா' புயலால், மரங்கள் விழுந்து, நிழல் இல்லாமல், வெட்ட வெளியாக காணப்படுகின்றன. இதனால், வகுப்பறைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதேபோல், பெரும்பாலான மாவட்டங் களில், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதையும் சமாளிக்க முடியாமல், பள்ளி நிர்வாகங்கள் அவதிப்படுகின்றன. இந்த காரணங்களை பள்ளிகள் முன் வைத்ததால், கோடை விடுமுறையை முன்கூட்டியே விட,கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.

தேர்வுகள் : எனவே, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், ஏப்., 14க்குள் விடுமுறையை அறிவிக்க முடிவு செய்து, தேர்வுகளை விரைவுபடுத்தியுள்ளன. பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று முன் தினம் தேர்வுகள் துவங்கின. ஏப்., 21ல், தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படுகிறது.


தொடக்க பள்ளிகள் தவிப்பு : தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். இதனால், ஏப்., 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''கோடை வெயிலை கருதி, தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் சிறார்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை விட, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த பள்ளிகள், பெரும்பாலும் கிராமங்களில் இருப்பதால், மாணவர்கள் கோடை வெயிலில், நீண்ட துாரம் வந்து செல்வது தவிர்க்கப்படும்,'' என்றார்.

08.04.2017 (சனிக்கிழமை) அன்று பள்ளி வேலைநாளாக செயல்படும்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு விடுப்பு நாளை ஈடு செய்தல் சார்பான சிவகங்கை மாவட்டத்தில் 08.04.2017 (சனிக்கிழமை) அன்று பள்ளி வேலைநாளாக செயல்படும் -மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிக்கை.

எஸ்.பி.ஐ., கணக்கு வேண்டாம்: ரூ.575 அபராதம்!!!

பாரதஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ள, 575 ரூபாய் அபராதம்வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி
அடைய வைத்து உள்ளது.

 பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை சமீபத்தில் உயர்த்தியது.இதன்படி, மாநகரங்களில், 5,000; நகரங்களில், 3,000; சிறிய நகரங்களில், 2,000, கிராமங்களில், 1,000 ரூபாய் என, இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறையும்பட்சத்தில், தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படவுள்ளது.இதனால், இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர், தங்கள் வங்கிக் கணக்கை மூட விரும்புகின்றனர். இதற்காக, வங்கியை அணுகினால், 575 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல், நடப்புக் கணக்கை மூடுவதாக இருந்தால், 1,000 ரூபாய்க்கு மேல், கட்டணம் செலுத்த வேண்டும். இது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு மாணவி, சில ஆண்டுகளுக்கு முன், 500 ரூபாய் செலுத்தி இருந்தார். அந்த கணக்கை அவர் முடிக்க வந்த போது, அபராதத் தொகையை கழித்து விட்டு, 20 ரூபாய் மட்டும் கொடுத்த போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது' என்றார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு : கணினி ஆசிரியர்களின் அடுத்த 'செக்'

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை
புறக்கணிப்பதாக, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு செய்ய நாள் ஒன்றுக்கு வழங்கும் விடைத்தாள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கனவே பி.ஜி., ஆசிரியர்கள் சங்கம் ஒன்று, திருத்தும் பணியை புறக்கணிப்பதாக அறவித்தது.

இதையடுத்து தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் நாள் ஒன்றுக்கு 22ல் இருந்து 20 விடைத்தாளாக குறைக்கப்பட்டது, திருத்தும் மதிப்பூதியம் உயர்த்துவது உட்பட ஆசிரியர்களின் கோரிக்கையை தேர்வுத் துறை நேற்று ஏற்றதால், புறக்கணிப்பு கைவிடப்பட்டது.இந்நிலையில், கணினி ஆசிரியர்களின் ஒரு கோரிக்கைகூட நிறைவேறாததால், திருத்தும் பணியை அவர்கள் இன்று முதல்புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் கூறியதாவது:பி.ஜி., ஆசிரியர்கள் போல் கணினி ஆசிரியர்களும் கல்வி செயலர், இயக்குனர் என தொடர்ந்து மனுக்கள் அளித்தோம். பிற பாடங்கள் ஆசிரியர் கோரிக்கைகளை தேர்வுத்துறை ஏற்றுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 20 விடைத்தாள் என்பதை 15 ஆக குறைப்பது, உழைப்பூதியம் 3.75 ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாக உயர்த்த வேண்டும் உட்பட கணினி ஆசிரியர்களின் எந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

இதனால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உள்ளோம், என்றார்.விடைத்தாள் திருத்தும் பணி துவக்க நாளான நேற்று முதன்மை மற்றும் கூர்ந்தாய்வாளர் திருத்தினர். இதில் கணினி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இன்று உதவி தேர்வாளர்திருத்தும் பணி துவங்குகிறது. இந்நிலையில் கணினி ஆசிரியர்களின் ஒரு சங்கத்தினர் புறக்கணிப்பால், கணினிஇயக்க செயல்பாடுகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , விளையாட்டு விடுதியில் 7,8,9,11 ஆகிய வகுப்புகளில் சேர , விண்ணப்பம் சென்று சேர வேண்டிய இறுதி நாள் 20/4/17




ஆசிரியர்களின் கவனத்திற்கு - SB Account ஐ SGSP Account ஆக மாற்ற - வங்கி விண்ணப்ப படிவம்

ஏப்ரல் 1 முதல் SBI வங்கியில் SB accountல் minimum balance குறைந்தால் அபராதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்க
ப்பட்டுள்ளது.

*Minimum Balance*

Metropolitan 5000
Town 3000
Rural 1000


வங்கி கணக்கு மூலம் சம்பளம் பெறுபவர்கள் இதை தவிர்க்க நம் SB Account ஐ SGSP Account ஆக மாற்ற வேண்டும்.

அதற்கான கடிதத்தை உரிய இணைப்புகளுடன் உரிய ஆசிரியர் கையொப்பத்துடன் AEEO அலுவலகத்தில் அளிக்க வேண்டும். AEEOவின் கையொப்பத்துடன்  SBI வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நம் account மாறும் வரை Minimum Balance
வைத்திருப்பது நல்லது.

மாதிரி கடிதம் இங்கே

CLICK HERE TO DOWNLOAD SGSP.......FORM

வெயிட்டேஜ் முறையில் மாற்றம் இருக்காது : அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில்வெயிட்டேஜ் முறையில் மாற்றம் இருக்காது என்றுபள்ளி கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார். கல்வி குறித்ததகவலை வழங்கபுதிய
இணையதளத்தைதொடங்க உள்ளதாகசெங்கோட்டையன் தெரிவித்தார்.

NEET'' நுழைவுத்தேர்வு : விண்ணப்பிக்க இன்றே கடைசி

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 7ல், நடக்கிறது. 
இதற்கான, 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்ரல், 1ல் முடிந்தது. இந்தத் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க, தடை விதிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டது. அதனால், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்று வரை நீட்டிக்கப்பட்டது.

 இன்று நள்ளிரவு, 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின், ஆன் லைன் பதிவுகள் நிறுத்தப்படும். 'தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தால், வரும் கல்வி ஆண்டில், மருத்துவச் சேர்க்கையில் சிக்கலை தவிர்க்கலாம்' என, கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழில் 'இ - மெயில்' வசதி பி.எஸ்.என்.எல்., அசத்தல்.

தமிழ் உட்பட, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' உருவாக்கும் செயலியை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி உள்ளது.மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்துக்கு வலு சேர்க்க, இணையதளம் மூலம் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், 'டேட்டா மெயில்' என்ற செயலியை, பி.எஸ்.என்.எல்., உருவாக்கி உள்ளது.
இதில், தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' முகவரியை உருவாக்கலாம்.மொபைல் எண்ணை மட்டுமே உள்ளீடு செய்து, விரும்பிய மொழியில், விரும்பிய பெயருடன்,

 இ - -மெயில் முகவரியை உருவாக்கலாம். கூடுதல் சிறப்பு அம்சமாக, ரேடியோ என்ற தனிப்பிரிவு உள்ளது. கணக்கு துவங்குவோர், இப்பிரிவுக்குள் சென்று, விருப்பமான பெயரில், 'ரேடியோ சேனல்' துவக்கலாம்.இதன் மூலம், தங்களது குரலில், செய்தி உட்பட எத்தகைய கருத்துக்களையும் பேசி ஒலிபரப்பலாம். சமூக வலைதளங்களில், இந்த ரேடியோவை இணைத்து, ஒலி வடிவிலும் பகிரலாம்.'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, இதுவரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இதைபதிவிறக்கம் செய்துள்ளனர்.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் : 'சென்டம்' வழங்க கடும் கட்டுப்பாடு.

பத்தாம் வகுப்பு விடை திருத்தத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்கள், குளறுபடியின்றி திருத்துவரா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது. இதில், 10.38 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
விடைத்தாள் திருத்தம், மாநிலம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட முகாம்களில், பல்வேறு மையங்களில், ஏப்., 1ல் துவங்கியது. முதலில் தமிழ், ஆங்கிலம் மொழி பாடத்திற்கு விடைத்தாள் திருத்தம் துவங்கியது.முதல் இரண்டு நாட்கள், தலைமை விடை திருத்துனர் மூலமும், பின், உதவி திருத்துனர்கள் மூலமும், விடைகள் திருத்தம் செய்யப்படுகிறது.மொழி பாடத்தில், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்கப்பட்டால், அதற்கு இரண்டு வகை, மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. முதன்மை தேர்வாளரும், பின் முகாம் அலுவலரும், பின், முதலில் விடைத்தாளை திருத்தியவரை தவிர, வேறு இரு ஆசிரியர்கள் மூலமும், ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.அதன் பின்னும், ஒரு மாணவர் சென்டம் எடுத்தால், அந்த விடைத்தாள், சென்னையில் உள்ள தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு, கண்காணிப்பு கமிட்டி மூலம், மறு ஆய்வு செய்த பின், மதிப்பெண் இறுதி செய்யப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள், கல்வியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.'மதிப்பீடு சரியாக இருந்தால் தான், அடுத்தகட்டமாக, மாணவர்கள் தேர்வு செய்யும் துறைகளும் சரியாக இருக்கும்' என, பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.அதே நேரம், விடை திருத்தத்தில் மறுமதிப்பீடு, மதிப்பெண் இன்றி பக்கம் விடுபடுவது போன்ற குளறுபடிகள் இன்றி, விடை திருத்தம் நடக்குமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

ஆர்வம் காட்டாத அரசு ஆசிரியர்கள் :

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விடுப்பு எடுத்து, அவர்கள் விடை திருத்தத்தை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து, பணியிட மாற்றம், பணியில் கவனமின்மை என, பல புகார்களில், 'மெமோ' கொடுத்து,நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு விடைக்குறிப்பில் குளறுபடி : ஒன்றரை மதிப்பெண்ணில் சர்ச்சை.

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு, விடைக்குறிப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின், 'சென்டம்' வாய்ப்புக்கு, 'செக்' வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது. 
ஏப்., 1முதல், மொழி பாடத்திற்கான விடைத்தாள் திருத்தம் துவங்கி உள்ளது. இதில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மொழி பாடத்திற்கான விடைக்குறிப்புகள், தரமான முறையில்தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய பாடங்களுக்கான, தலைமை விடைதிருத்துனர்களுக்கான விடை திருத்தம் நேற்று துவங்கியது.

இதில், தேர்வுத்துறையின் விடை குறிப்புகளை பெற்ற ஆசிரியர்கள், அவற்றை ஆய்வு செய்ததில், அறிவியல் பாட விடைக்குறிப்பு, குளறுபடியாக உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது, 50வது கேள்வியில், 'இரு வித்திலை தாவர விதையின் அமைப்பை படத்துடன் விவரிக்க' என்ற, ஐந்து மதிப்பெண் கேள்விக்கு, விடைக்குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், அவரை விதையின் படம் வரைந்து, நான்கு பாகங்களை குறித்தால், இரண்டு மதிப்பெண்களும், அவரை விதையை பற்றிய, ஒவ்வொரு சரியான குறிப்புக்கும், தலா அரை மதிப்பெண் வீதம், ஆறு குறிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண்களும், வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே வினா, 2014, பொது தேர்வில்வந்தபோது, மூன்று விடைக்குறிப்புகளை எழுதினாலே, ஒவ்வொன்றுக்கும், தலா ஒரு மதிப்பெண் வழங்கலாம் என, கூறப்பட்டிருந்தது. இதன்படி, படம் வரைந்து, மூன்று குறிப்புகள் எழுதினால் போதும், என, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்துள்ளனர்.

ஆனால், இந்த ஆண்டு ஆறு குறிப்புகளை எழுத வேண்டும் என, விடைக்குறிப்பில் மாற்றி கொடுக்கப்பட்டதால், பல மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.மூன்று குறிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண்களுக்கு பதில், ஒன்றரை மதிப்பெண் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, 'சென்டம்' பெறும் மாணவர்களுக்கு, ஒன்றரை மதிப்பெண், சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது துணைவேந்தர் பேட்டி.

கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது என்றும்,பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கைநடைபெறும் என்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதுணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை

கால்நடை மருத்துவ படிப்பில் சேர வழக்கம் போல பிளஸ்–2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கால்நடை மருத்துவம் மற்றும் உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர 380 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல கலந்தாய்வு மூலம் நடைபெறும்.விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பி பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப முறை முழுக்க முழுக்க ஆன்லைன் கிடையாது. இந்த படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது. வழக்கம் போல பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தரவரிசை பட்டியல்

மேலும் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த ஆய்வில் 1007 என்ஜினீயரிங் கல்லூரிகள், 542 மேலாண்மை கல்லூரிகள், 535 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 316 மருந்தியல் கல்வி நிறுவனங்கள், 200 பல்கலைக்கழகங்கள்ஆக மொத்தம் 2 ஆயிரத்து 600 கல்வி நிறுவனங்கள் பங்கு பெற்றன.பல்கலைக்கழகங்களுக்கான மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 38–வது இடத்தை பெற்றது. ஆனால் மாநில அளவில் 4–வது இடத்தை பிடித்தது. மேலும் கல்வி மற்றும் கல்வி கற்றலுக்கான சூழல்களை வழங்கிடும் விதத்தில் தேசிய அளவில் 6–வது இடத்தையும், மாநில அளவில் 2–வது இடத்தையும் பிடித்து இருக்கிறது.

முதல் இடம்

இந்தியாவில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்கள் 14 உள்ளன. அந்த பல்கலைக்கழகங்களில்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முதல் இடத்தை பெற்றுள்ளது.இவ்வாறு துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

Jio-வின் கோடைகால சலுகைகளின் சந்தேகங்களும் ... தீர்வுகளும்..!

இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ.
                                               

கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி ஜியோ இலவச சேவைகள் நேற்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக வருகின்ற 15-ஆம் தேதி வரை ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகலாம் என்றும் ரூ.99 (பிரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (ஏப்.15) அடுத்த 3 மாதங்களுக்கு அளவற்ற இணைய தள வசதி, அழைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோடைகால அதிரடி சலுகை (சம்மர் சர்ப்ரைஸ் ஆஃப்ர்) என்ற புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் வரும் 15-ம் தேதி வரை இலவச சலகைகளை பெறலாம். தற்போது அந்நிறுவனத்தில் 100 மில்லியன் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களில், 70 மில்லியன் பேர் ஜியோ பிரைம் திட்டத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில், கோடைகால அதிரடி சலுகையின் ஒரு பகுதியாக மேலும் 3 மாதங்களுக்கு இலவச சேவை தொடரும் என்று ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோவின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்களின் அந்த குழப்பத்திற்கான தெளிவுகள் கீழ்கண்டவாறு...

* ஜியோ கோடைகால சலுகைகள் என்ன?
ஜியோவின் கோடைகால சலுகைகள் மூலம் ஜியோ இலவச சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற வரும் 15-ம் தேதிக்குள் ரு.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி, பின்னர் ரூ.303 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்து கொண்டால் இந்த சலுகை 3 மாதத்திற்கு கிடைக்கும்.

* ஜியோ கோடைகால சலுகை பலன் என்ன?
- அளவற்ற இலவச அழைப்புகள்
- இலவச எஸ்எம்எஸ்
- பல அளவு கொண்ட டேட்டாக்களுடன் இலவச 4 ஜி இணைய சேவையை பெறலாம்.

* பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் கோடைகால சலுகை கிடைக்குமா?
ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி இணைந்துவிட்டால் உங்களது செல்பேசி எண் குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். அதன் பிறகு இணைப்பு துண்டிக்கப்படும்.  கோடைகால சலுகை பெற ரூ.303 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்வது அவசியம்.

* ரூ.303 செலுத்தினால் கோடைகால சலுகையின் பயன்கள் என்ன?
ரூ.303 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா வரும் ஜூன் 30-ம் தேதி வரை கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்திய ரூ.303 திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்பட்டிற்கு வரும். அது ஜூலை 8-ம் தேதி வரை செல்லுபடியாகும்.

* ரூ.149 திட்டம் தேர்வு செய்திருந்தால் கிடைக்கும் பலன் என்ன?
ரூ.149 செலுத்தி ரீசார்ஜ் செய்த வாடிக்காயாளர்களுக்கு கோடைகால சலுகைகள் கிடைக்காது. அவர்கள் மேற்கொண்டு ரூ.303 செலுத்தி ரீசார்ஜ்  செய்தால் கோடைகால சலுகைகள் கிடைக்கும். ஏற்கனவே, செலுத்திய ரூ.149 இருப்பில் வைக்கப்பட்டு  3 மாதங்கள் மற்றும் கூடுதலாக ஒரு மாதம் கழித்து, கோடைகால சலுகை முடிந்தவுடன் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ரூ.149 திட்டம் அமலுக்கு வரும்.

* கோடைகால சலுகை மூலம் ரூ.99 மற்றும் ரூ.499 திட்டங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
அளவற்ற இலவச அழைப்புகள், எஸ்எ  ம்எஸ் மற்றும் 2ஜிபி எப்யுபி அளவுடன் 4ஜி டேட்டா கிடைக்கும்.

* ரூ.4,999 அல்லது ரு.9,999 திட்டங்களை தேர்வு செய்திருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?
இந்த திட்டங்கள் அனைத்தும் 3 மாதங்கள் கழித்து அமலுக்கு வரும். அது வரை இலவச சேவையை தொடர்ந்து பெறலாம்.

* கோடைகால சலுகை பெற மொத்தம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
திட்டத்தின்  கட்டணமாக ரூ.99ம் சலுகை கட்டணமாக ரூ.303 என மொத்தம் ரூ.404 செலுத்த வேண்டும்.

* 100 ஜிபி திட்டம் சலுகைகள் விவரம் என்ன?
கோடைகால சலுகைகளின் கீழ் இந்த திட்டத்திற்கும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.999 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு கூடுதலாக 100 ஜிபி டேட்டா பெறலாம்.

இதன் மூலம் ஒருவர் ரூ.999 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் 100 ஜிபியுடன் கூடுதலாக 60 ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கும் 90 ஜிபி டேட்டா குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு கிடைக்கும்.

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் மூலம் ரூ.33½ கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்கு கிடைத்தது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மாதம் 6–ந் தேதி தமிழ்நாடுமுழுவதும் ஏராளமான பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும்பணி தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைசமர்ப்பிக்க கடந்த மாதம் 23–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
பிளஸ்–2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 37ஆயிரத்து 293 பேரும், பி.எட் படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 2ஆயிரத்து 964 பேரும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைசமர்ப்பித்தனர். மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257பேர்இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்குஆசிரியர் தகுதி தேர்வு 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

ரூ.33½ கோடி வருமானம்

தற்போது மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.பரிசீலனைக்கு பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிச்சீட்டுதயாரித்து இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் எத்தனைதேர்வு மையங்களை அமைப்பது என்றும் தற்போது ஆலோசனைநடந்து வருகிறது.ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படிவத்துடன் தேர்வுகட்டணமாக ரூ.500–ஐ வரைவோலையாக அனுப்பஅறிவுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்ரூ.250–ஐ வரைவோலையாக அனுப்ப சலுகை வழங்கப்பட்டது.மொத்த விண்ணப்பதாரர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆவர். இவர்கள்மூலம் ரூ.3½ கோடி வருமானம் கிடைத்தது.

இவர்களை தவிர 6லட்சத்து 257 பேரின் விண்ணப்பம் மூலம் ரூ.30 கோடியே 1லட்சத்து 28 ஆயிரத்து 500 வருமானமாக கிடைத்தது. மொத்தத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.33½ கோடி வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் எல்டிசி, உதவி கணக்காளர் வேலை



இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் 2017 - 18-ம் ஆண்டிற்கான எல்டிசி, உதவி கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Ministry of Defence
காலியிடங்கள்: 08
பணியிடம்: ஜபல்பூர் (மத்திய பிரதேசம்)
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Lower Division Clerk (LDC) - 07
பணி: Assistant Accountant - 01
தகுதி: 10, 2 அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900 - 1,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10622_86_1617b.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 205 நிர்வாக அதிகாரி வேலை.

கொல்கத்தாவில் செயல்பட்டு  வரும் நேஷ்னல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-ல் 205 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officers (Generalist)
காலியிடங்கள்: 205
சம்பளம்: மாதம் ரூ.32,795 - 62,315
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும்.
 முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 3.6.2017, 4.6.2017
தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nationalinsuranceindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை.

8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Bailiff - 07
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: Junior Bailiff - 03
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver (Male) - 01
8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றி 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Record Clerk - 03
தகுதி: 10-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Watchman (Male) - 06
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Masalchi - 04
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Sanitary Worker-Cum-Gardener - 01
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Sweeper - 02
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Gardener - 01
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Office Assistant - 43
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant - 43
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ecourts.gov.in/tn/salem என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Principal District Judge, Principal District Court, Salem - 636007.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.04.2017

மத்திய அரசு அலுவலகத்தில் கணக்காளர், சுருக்கெழுத்தர் வேலை.



சென்னையில் செயல்பட்டு வரும் "National Biodiversity Authority" நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Accounts Officer
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: Office/ Computer Assistant
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Steno 'C'
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
விண்ணப்பிக்கும் முறை: www.nbaindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
National Biodiversity Authority, 5th Floor, TICEL Bio Park, CSIR Road, Chennai - 600 113
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nbaindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TNTET - ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் -2017 தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் .

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்  ஏப்ரல் 3-வது வாரத்தில்  வழங்க ஏற்பாடு.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.

 இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பட்ட தாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (தாள்-2) 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் (மொத்தம் 8 லட்சம் பேர்) விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென் னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. தற் போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக அதாவது ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எனவே, தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்பு நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், புதிதாக நடத்தப்பட உள்ள தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்களையும் அரசு கேட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதால் அதற்கேற்ப கணிசமான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படித்துக்கொண்டிருக்கும் போது அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து படிப்பை முடிக்கலாமா?