எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்ற கேள்விக்கு விடை காண்பதுதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. முன்னேறிய நகர்ப்புறங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்க தனியார் கலந்தாலோசனை மையங்கள் உள்ளன.
ஆனால் சிறுநகரங்கள், கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு எதிர்கால கல்வி வாய்ப்புகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.
இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கும் உதவும் வகையில், இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் ஆயிரத்து 162 ஆலோசனைக் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்து, எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பொன்மாரில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைக் கருத்தரங்கை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்காக நடைபெறும் இந்த ஆலோசனை மையங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதோடு அதற்கான கையேடுளும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.10ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களை பொறுத்தவரை ஃபர்ஸ்ட் குரூப் தொடங்கி ஃபோர்த் குரூப் வரை உள்ள 4படிப்புகள்தான் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
பள்ளிக் கல்வித்துறை வழங்கும் கையேடுகளில், 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான படிப்புகள் பற்றி விவரங்கள் முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன. மேல்நிலையில் படிப்பதற்கு 4 குரூப்புகள் என்ற எண்ணத்தை தகர்த்து, தொழில் கல்வி பிரிவுகள், கல்வி உதவித் தொகை திட்டங்கள், திறனறித் தேர்வுகள், பாலிடெக்னிக், ஐடிஐ, பொறியியல் தொழில் பிரிவுகளுக்கான ஓராண்டு, ஈராண்டு பயிற்சிகள், பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள், தொழில்பழகுநர் பயிற்சி தொடங்கி சுயவேலைவாய்ப்பு வரை உள்ள விவரங்கள் அடங்கியுள்ளன.பிளஸ் டூ மாணவர்களை பொறுத்தவரை மருத்துவம், பொறியியல் அதைவிட்டால் கலை அறிவியல் கல்லூரிகள் என்ற எண்ணம்தான் பரவலாக இருக்கிறது. ஆனால் இவற்றைத்தாண்டி இன்று எத்தனையோ படிப்புகள் உள்ளன.
தொழில்முனைவு சார்ந்தும், சுயதொழில் செய்வதற்கும் குறுகிய கால படிப்புகள், மத்திய-மாநில அரசுகளின் கல்வி உதவிகள், தேசிய அளவிலான 30-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள், அவற்றிற்கு தயாராவதற்கான வழிமுறைகளை விளக்கும் கையேடுகளும் கருத்தரங்களில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. பிளஸ் டூ மாணவர்களுக்கான கையேட்டில், மருத்துவம், பொறியியல் மற்றும் அவை சார்ந்த படிப்புகள், கலை, அறிவியல் படிப்புகள், வணிகவியல் படிப்புகள், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான படிப்புகள், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, சுயதொழில், திறன்மேம்பாடு தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் நடத்தப்படும் உயர்கல்விக்கான 31 நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்களும் பிளஸ் டூ மாணவர்களுக்கான கையேட்டில் இடம்பெற்றுள்ளன.