யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/4/17

50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை.

50 ஆண்டுகளாக இயங்கும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 
சில பள்ளிகள், அப்பகுதியினரின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுகின்றன. இதில், ௫௦ ஆண்டுகள் பழமையான பள்ளிகளும் உண்டு; இப்பள்ளிகளை கவுரவிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இப்பள்ளிகளை தேர்வு செய்வதற்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மேற்பார்வையாளராகவும், தொடக்கக் கல்வி அலு
வலரின் நேர்முக உதவியாளர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்; உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என, 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

7/4/17

அண்ணா பல்கலையின்,இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு ஆதார் கட்டாயமாகிறது.

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில், இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர், அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவர்.
இதற்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படும்.இந்த ஆண்டுக்கான, இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை செயலர், பேராசிரியர், இந்துமதி தலைமையிலான குழுவினர், அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.'ஆன்லைனில்' குழப்பம் இன்றி, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்ய, 'சாப்ட்வேர்' தயார் செய்யப்பட்டுள்ளது. இதை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், பல்கலை பதிவாளர் கணேசன் ஆகியோர், மேற்பார்வையிட்டு வருகின்றனர்.இந்நிலையில், இன்ஜி., கவுன்சிலிங்கில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாகிறது.இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.மத்திய அரசின், தேசியக் கல்வி சான்றிதழ் களஞ்சியம் என்ற, டிஜிட்டல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு இன்ஜி.,மாணவரின் சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்ய, அண்ணா பல்கலையை, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், கல்வி உதவித்தொகை பெறவும், ஆதார் எண் சேகரிக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விபரங்கள் உண்மையா என ஆய்வு செய்ய, ஆதார் எண் தேவை.இதன்படி, இன்ஜி., படிப்பில் சேரும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளதாக, உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கால்நடை பல்கலை தரவரிசையில் இறக்கம்

தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, அகில இந்திய தரவரிசையில், கடந்த ஆண்டை விட, இரு இடங்கள் கீழிறங்கியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 2016 முதல், நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 
அதில், தமிழகத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, கால்நடை பல்கலை, 36-வது இடத்தை பிடித்தது.இம்முறை வெளியான பட்டியலில், இரண்டு இடங்கள் கீழிறங்கி, தரவரிசையில், 38 வது இடத்துக்கு சென்றுள்ளது. எனினும், வேளாண் தொடர்புடைய பல்கலைகளில்சிறப்பிடம் பெற்றுள்ளது.

இது குறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ். திலகர் கூறியதாவது: நாட்டில் உள்ள கால்நடை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட தேசிய வேளாண் ஆய்வு பல்கலைகள் கீழ்இயங்கும், 72 கல்வி நிறுவனங்களில், ஒன்பது மட்டும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அதில், நான்காவது இடத்தை, நம் பல்கலை பிடித்திருப்பது சிறப்பு. கால்நடை பல்கலைகளில், தமிழக கால்நடை பல்கலை மட்டுமே இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு : கணினி ஆசிரியர்களின் அடுத்த 'செக்'

மதுரை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு செய்ய நாள் ஒன்றுக்கு வழங்கும் விடைத்தாள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கனவே பி.ஜி., ஆசிரியர்கள் சங்கம் ஒன்று, திருத்தும் பணியை புறக்கணிப்பதாக அறவித்தது.இதையடுத்து தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் நாள் ஒன்றுக்கு 22ல் இருந்து 20 விடைத்தாளாக குறைக்கப்பட்டது, திருத்தும் மதிப்பூதியம் உயர்த்துவது உட்பட ஆசிரியர்களின் கோரிக்கையை தேர்வுத் துறை நேற்று ஏற்றதால், புறக்கணிப்பு கைவிடப்பட்டது.இந்நிலையில், கணினி ஆசிரியர்களின் ஒரு கோரிக்கைகூட நிறைவேறாததால், திருத்தும் பணியை அவர்கள் இன்று முதல்புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் கூறியதாவது:பி.ஜி., ஆசிரியர்கள் போல் கணினி ஆசிரியர்களும் கல்வி செயலர், இயக்குனர் என தொடர்ந்து மனுக்கள் அளித்தோம். பிற பாடங்கள் ஆசிரியர் கோரிக்கைகளை தேர்வுத்துறை ஏற்றுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 20 விடைத்தாள் என்பதை 15 ஆக குறைப்பது, உழைப்பூதியம் 3.75 ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாக உயர்த்த வேண்டும் உட்பட கணினி ஆசிரியர்களின் எந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

இதனால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உள்ளோம், என்றார்.விடைத்தாள் திருத்தும் பணி துவக்க நாளான நேற்று முதன்மை மற்றும் கூர்ந்தாய்வாளர் திருத்தினர். இதில் கணினி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இன்று உதவி தேர்வாளர்திருத்தும் பணி துவங்குகிறது. இந்நிலையில் கணினி ஆசிரியர்களின் ஒரு சங்கத்தினர் புறக்கணிப்பால், கணினிஇயக்க செயல்பாடுகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்?

வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமானவரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.
‘ஆதார்’ எண் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே அது கட்டாயம்என்று கூறியுள்ளது. ‘ஆதார்’ எண் பதிவுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில்வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாககருதப்பட்டு, ‘ஆதார்’ எண் பெற தகுதி உடையவர்கள் என்றுஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இவர்களுக்கு மட்டுமேவருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

தமிழ், ஆங்கிலத்தில் 'சென்டம்' ரத்து : 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி.

சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கியது.
முதல் நாளில், விடைத்தாள்களை முதன்மை விடை திருத்துனர்கள் திருத்தி, விடை குறிப்புகளை ஆய்வு செய்தனர்.ஏப்., 2 முதல், உதவி திருத்துனர்கள் மூலம் திருத்தம் நடக்கிறது. முந்தைய ஆண்டுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் சரிவர எழுத சிரமப்பட்டதும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், தமிழில் திணறியதும் தெரிந்தது. எனவே, மொழி பாடத்தில், 'சென்டம்' மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.'சென்டம்' வழங்க, பல கட்ட மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. உச்சகட்டமாக, இந்த ஆண்டு, 100 மதிப்பெண் வழங்கு வதையே, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது.

அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்புபக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான கட்டம் மாற்றப்பட்டு, 99 என்ற இரண்டு இலக்கம் எழுதும் வகையில், மாற்றப் பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில், புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மற்ற பாடங்களுக்கு, 100 என்று எழுதும் வகையில், மூன்று கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலத்திற்கு, 'சென்டம்' மதிப்பெண் இருக்காது, என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெயில் தாக்கம்: பள்ளிகளுக்கு முன்கூட்டியே லீவு?

கோடை வெயிலின் உச்சத்தால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது.
பிளஸ் 1 மாணவர்களுக்கும்,தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 29 வரை தேர்வு நடத்தி, அதன்பின், விடுமுறை அறிவிக்க, திட்டமிடப்பட்டிருந்தது.

திட்டம் : ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,முன்கூட்டியே கோடை விடுமுறை விட, தனியார் பள்ளிகள் திட்டமிட்டன. பல பள்ளி வளாகங்களில், 'வர்தா' புயலால், மரங்கள் விழுந்து, நிழல் இல்லாமல், வெட்ட வெளியாக காணப்படுகின்றன. இதனால், வகுப்பறைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதேபோல், பெரும்பாலான மாவட்டங் களில்,தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதையும் சமாளிக்க முடியாமல், பள்ளி நிர்வாகங்கள் அவதிப்படுகின்றன. இந்த காரணங்களை பள்ளிகள் முன் வைத்ததால், கோடை விடுமுறையை முன்கூட்டியே விட,கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.

தேர்வுகள் : எனவே, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், ஏப்., 14க்குள் விடுமுறையை அறிவிக்க முடிவு செய்து, தேர்வுகளை விரைவுபடுத்தியுள்ளன. பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று முன் தினம் தேர்வுகள் துவங்கின. ஏப்., 21ல், தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படுகிறது.

தொடக்க பள்ளிகள் தவிப்பு : தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். இதனால், ஏப்., 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''கோடை வெயிலை கருதி, தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் சிறார்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை விட, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த பள்ளிகள், பெரும்பாலும் கிராமங்களில் இருப்பதால், மாணவர்கள் கோடை வெயிலில், நீண்ட துாரம் வந்து செல்வது தவிர்க்கப்படும்,'' என்றார்.

CPS : பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி

பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின்,கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தைஅரசு நீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இரு ஆண்டுகளுக்கு முன், தொடர் போராட்டம் நடத்தினர். 2016, சட்டசபை தேர்தலுக்கு முன், பிப்.,19ல், பழைய பென்ஷன் திட்டத்தைகொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு அமைக்கப்பட்டு, ஓர் ஆண்டை தாண்டிய நிலையில்,இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை, குழுவின் ஆயுட்காலம் முடிவதும், பின், ஆயுள் காலத்தை நீட்டிப்பதும் வழக்கமாக உள்ளது. வழக்கம் போல், டிச.,25ல், குழுவின் ஆயுட் காலம் முடிந்தும், நீட்டிக்கப்படவில்லை. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், குழுவின் ஆயுட்காலத்தை, மூன்று மாதங்கள் நீட்டித்து, மார்ச், 7ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அவகாசமும் முடிந்து, 11 நாட்கள் ஆகிறது. இன்னும், நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை; குழுவின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. அதனால், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு தொடருமா அல்லது அப்படியே கிடப்புக்கு போகுமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கவலையில் உள்ளனர்.

விடிவு கிடைக்குமா?

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, 2003 முதல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலானது. இதில், 4.55 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களில், ஓய்வு பெற்றோர், இறந்தோர், 6,000 பேர். அவர்களுக்கு இன்னும் பணப்பலன் கிடைக்கவில்லை

* திட்டம் அமலான பின், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பங்களிப்பு தொகைவசூலிக்கப்பட்டது. அவற்றின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.

CCE : 1 to 5th THIRD TERM EXAM - MODEL QUESTION PAPERS..

10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கை துவக்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்ற கேள்விக்கு விடை காண்பதுதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. முன்னேறிய நகர்ப்புறங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்க தனியார் கலந்தாலோசனை மையங்கள் உள்ளன. 
ஆனால் சிறுநகரங்கள், கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு எதிர்கால கல்வி வாய்ப்புகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.

இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கும் உதவும் வகையில், இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் ஆயிரத்து 162 ஆலோசனைக் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்து, எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பொன்மாரில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைக் கருத்தரங்கை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்காக நடைபெறும் இந்த ஆலோசனை மையங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதோடு அதற்கான கையேடுளும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.10ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களை பொறுத்தவரை ஃபர்ஸ்ட் குரூப் தொடங்கி ஃபோர்த் குரூப் வரை உள்ள 4படிப்புகள்தான் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

 பள்ளிக் கல்வித்துறை வழங்கும் கையேடுகளில், 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான படிப்புகள் பற்றி விவரங்கள் முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன. மேல்நிலையில் படிப்பதற்கு 4 குரூப்புகள் என்ற எண்ணத்தை தகர்த்து, தொழில் கல்வி பிரிவுகள், கல்வி உதவித் தொகை திட்டங்கள், திறனறித் தேர்வுகள், பாலிடெக்னிக், ஐடிஐ, பொறியியல் தொழில் பிரிவுகளுக்கான ஓராண்டு, ஈராண்டு பயிற்சிகள், பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள், தொழில்பழகுநர் பயிற்சி தொடங்கி சுயவேலைவாய்ப்பு வரை உள்ள விவரங்கள் அடங்கியுள்ளன.பிளஸ் டூ மாணவர்களை பொறுத்தவரை மருத்துவம், பொறியியல் அதைவிட்டால் கலை அறிவியல் கல்லூரிகள் என்ற எண்ணம்தான் பரவலாக இருக்கிறது. ஆனால் இவற்றைத்தாண்டி இன்று எத்தனையோ படிப்புகள் உள்ளன.

தொழில்முனைவு சார்ந்தும், சுயதொழில் செய்வதற்கும் குறுகிய கால படிப்புகள், மத்திய-மாநில அரசுகளின் கல்வி உதவிகள், தேசிய அளவிலான 30-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள், அவற்றிற்கு தயாராவதற்கான வழிமுறைகளை விளக்கும் கையேடுகளும் கருத்தரங்களில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. பிளஸ் டூ மாணவர்களுக்கான கையேட்டில், மருத்துவம், பொறியியல் மற்றும் அவை சார்ந்த படிப்புகள், கலை, அறிவியல் படிப்புகள், வணிகவியல் படிப்புகள், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான படிப்புகள், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, சுயதொழில், திறன்மேம்பாடு தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் நடத்தப்படும் உயர்கல்விக்கான 31 நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்களும் பிளஸ் டூ மாணவர்களுக்கான கையேட்டில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு: கல்வித்தரம் குறையும் என குற்றச்சாட்டு.

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை என்ற முடிவால் கல்வித்தரம் குறையும் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

தமிழகத்தில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதியும் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணியில் சேர தகுதித் தேர்வு அவசியம் இல்லை என்ற நீதிமன்றத்தின் ஆணையை பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுட்டிக்காட்டி, அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்களித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள தெளிவுரையில், சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் (பணி நிரந்தரம் ஆகாதவர்கள்) ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் எழாது அதை நிர்பந்திக்கவும் முடியாது. மேலும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வுக்கு பதிலாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக கோடை விடுமுறை நாட்களில் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியில் (பணி நிரந்தரம் ஆகாதவர் கள்) இருப்பவர்கள் தற்போது நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் சிறுபான்மை பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்துவிடும் என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்றோர் நடத்தும் அரசு உதவி பெறும் சில பள்ளிகள் அரசு விதிகளுக்கு மாறாக கட்டணம் வசூலிப்பது, தரமற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களின் தரத்தை உறுதி செய்யும் கடமை பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது.ஆனால், வழக்குகளில் மேல் முறையீடு ஏதும் செய்யாமல், சிறுபான்மை பள்ளி ஆசிரியர் களுக்கு தகுதித் தேர்வு அவசியம் இல்லை எனக்கூறுவதை மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற அறிவிப்பு, ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்” என்றனர்.

இதனிடையே, அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் 1000-க்கும் மேற்பட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதித்தேர்வு இன்றி அவர்களைபணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNTET - 2017 Exam "DO And Don't" Special Article. Posted: 06 Apr 2017 11:33 AM PDT 🏆 TET வெற்றி நிச்சயம் 🏆 சிறப்பு கட்டுரை - பிரதீப் ப.ஆ - பூங்குளம் மீதமுள்ள நாட்கள் : 22 நாட்கள் :::::::செய்ய வேண்டியவை::::: * முடிக்கபடாத பாட பகுதியை விரைவாக படிக்க துவங்குங்கள் * கடின பகுதியை மீள படியுங்கள் * படிக்காத பாடங்களை ஒரு முறையாவது படியுங்கள் * திருப்புதலை துவங்குங்கள். *முன்பு படித்ததை விட ஆளமாகவும் தெளிவாகவும் திருப்புதலில் படியுங்கள * உங்கள் Major பாடமே உங்களின் கூடுதல் பலம். அதில் மிக தெளிவாய் இருங்கள் * தேர்வில் வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்தை தினமும் மனதில் விதையுங்கள் * தேவையற்ற மெடிரியல் அவற்றில் உள்ள தேவையற்ற கருத்துகளை படித்து நேர விரயம் செய்யாதீர் * கூடுமான அளவு சிறு தேர்வு எழுதி பாடப்பகுதி சார் சுய மதிப்பீடு செய்யுங்கள் * கணிதம் சோர்வான நேரத்தில் தீர்த்து பயிற்சி பெறுங்கள் * தமிழ், அறிவியல், ச.அறிவியல் தேர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மறவாதீர் :::::செய்ய கூடாதவை :::::: * பிறரின் தேவையற்ற வசை சொற்களில் மூழ்கி இருக்காதீர்கள் * தேர்வின் மீது பயம் தேவை. தேர்வையே பயம் என நினைத்து உடைய வேண்டாம் * வெற்றியோ தோல்வியோ அது இப்போது தெரியாது. தெரிந்த முயற்சியை எடுத்து செல்வோம் வெற்றி நோக்கி * வெய்ட்டேஜ் பற்றி கவலை வேண்டாம். குறைவாக உள்ளவர் டெட் தேர்வில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுங்கள் * கோச்சிங் வகுப்பு தவறில்லை. தவறான நேர விரயம் செய்யும் கோச்சிங் தேவை இல்லை * இறுதி நேர பதற்றம் வேண்டாம் * மறதி கண்டு பயம் வேண்டாம். அது மேலும் மறதி செய்யும். * சிறந்த தன்னம்பிக்கை தேவையான நேரத்தில் நினைவூட்டல் தரும் * ஓய்வினை தவிர்க்க வேண்டாம். உறக்கம் அவசியம் * ஏற்கனவே படித்து முடித்தவர் 2 திருப்புதல் செய்ய முனையுங்கள் வாழ்த்துகள் _ தேன்கூடு 🐝 ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தற்போது பொது சேமநலநிதியாக மாற்றம்.... இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளவும். Posted: 06 Apr 2017 09:56 AM PDT Jio- க்கு ட்ராய் வைத்த செக்...! முக்கிய அறிவிப்பு வெளியீடு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி 'ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை' அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது. 
இதன்படி, ஜியோ பயனர்கள் 303 ரூபாய் செலுத்தி அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச இன்டர்நெட் சேவை தொடரலாம் என்று அந்நிறுவனம் கூறியிருந்தது. இந்த ஆஃபரைப் பெற வரும் 15-ம் தேதிக்குள் 99 ரூபாய் மற்றும் 303 ரூபாய் என இரு ரீசார்ஜுகளை செய்ய வேண்டும் என ஜியோ அறிவுறுத்தி இருந்தது. இதில், 'ஜியோ ப்ரைம்' வாடிக்கையாளராக மாற 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI), ஜியோ-வின் இந்த 'சர்ப்ரைஸ் பேக்கை' கைவிடுமாறு கூறியுள்ளது. இதையடுத்து, ஜியோ நிறுவனம், இந்த 'சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர்' கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 31-ம் தேதி முதல் இன்று வரை இந்த ஆஃபரை சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு, மூன்று மாத குறிப்பிடப்பட்ட சேவை கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது ஜியோ நிறுவனம்.

ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தற்போது பொது சேமநலநிதியாக மாற்றம்.... இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளவும்.



TNTET - 2017 Exam "DO And Don't" Special Article.

🏆 TET வெற்றி நிச்சயம் 🏆

சிறப்பு கட்டுரை - பிரதீப் ப.ஆ - பூங்குளம்
மீதமுள்ள நாட்கள் : 22 நாட்கள்

:::::::செய்ய வேண்டியவை:::::


* முடிக்கபடாத பாட பகுதியை விரைவாக படிக்க துவங்குங்கள்
* கடின பகுதியை மீள படியுங்கள்
* படிக்காத பாடங்களை ஒரு முறையாவது படியுங்கள்
* திருப்புதலை துவங்குங்கள்.
*முன்பு படித்ததை விட ஆளமாகவும் தெளிவாகவும் திருப்புதலில் படியுங்கள
* உங்கள் Major பாடமே உங்களின் கூடுதல் பலம். அதில் மிக தெளிவாய் இருங்கள்
* தேர்வில் வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்தை தினமும் மனதில் விதையுங்கள்
* தேவையற்ற மெடிரியல் அவற்றில் உள்ள தேவையற்ற கருத்துகளை படித்து நேர விரயம் செய்யாதீர்
* கூடுமான அளவு சிறு தேர்வு எழுதி பாடப்பகுதி சார் சுய மதிப்பீடு செய்யுங்கள்
* கணிதம் சோர்வான நேரத்தில் தீர்த்து பயிற்சி பெறுங்கள்
* தமிழ், அறிவியல், ச.அறிவியல் தேர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மறவாதீர்

:::::செய்ய கூடாதவை ::::::

* பிறரின் தேவையற்ற வசை சொற்களில் மூழ்கி இருக்காதீர்கள்
* தேர்வின் மீது பயம் தேவை. தேர்வையே பயம் என நினைத்து உடைய வேண்டாம்
* வெற்றியோ தோல்வியோ அது இப்போது தெரியாது. தெரிந்த முயற்சியை எடுத்து செல்வோம் வெற்றி நோக்கி
* வெய்ட்டேஜ் பற்றி கவலை வேண்டாம். குறைவாக உள்ளவர் டெட் தேர்வில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுங்கள்
* கோச்சிங் வகுப்பு தவறில்லை. தவறான நேர விரயம் செய்யும் கோச்சிங் தேவை இல்லை
*  இறுதி நேர பதற்றம் வேண்டாம்
* மறதி கண்டு பயம் வேண்டாம். அது மேலும் மறதி செய்யும்.
* சிறந்த தன்னம்பிக்கை தேவையான நேரத்தில் நினைவூட்டல் தரும்
* ஓய்வினை தவிர்க்க வேண்டாம். உறக்கம் அவசியம்
* ஏற்கனவே படித்து முடித்தவர் 2 திருப்புதல் செய்ய முனையுங்கள்

வாழ்த்துகள் _ தேன்கூடு 🐝

6/4/17

தமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..?

How to Apply and Get New Ration Card through Online Application in Tamil nadu with help of tnpds

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை அரசு அலுகலகங்கள் சென்று
நமக்குத் தேவையான குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டைப் போன்றவற்றைப் பெறுவது என்று கூறலாம்.

எனவேஇணையதளம் மூலமாகத் தமிழகத்தில் எப்படி எளிதாக வீட்டில் இருந்தபடியே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது என்று இங்கு விளக்கமாக அளிக்கின்றது. இதனைப் படித்துப் பயன்பெறுங்கள்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in மூலமாக நீங்கள் எளிதாகக் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பெறப் பதிவு செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா.

2016-ம் ஆண்டுத் தீபாவளி முதல் தமிழக அரசு இணையதளம் மூலம் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க www.tnpds.gov.in இணையளத்தை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இந்த இணையதளம் மூலமாக எப்போதும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியது. இணையதளம் மூலம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். அது எப்போது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டு பதிவு செய்வது நல்லது.



படி1
www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற தெரிவை தேர்வு செய்யவேண்டும்.




பூர்த்திச் செய்யப்படக் கட்டாயமானவை

* குறிக்கப்பட்ட அனைத்துப் புலங்களும் விண்ணப்பதாரரால் பூர்த்திச் செய்யப்படவேண்டியது கட்டாயமாகும்.
புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள 'இப்போது விண்ணப்பிக்க' பொத்தானை கிளிக் செய்யவும்.

குடும்ப விவரங்கள்

விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி (கதவு எண், வீடு / அப்பார்ட்மெண்ட் பெயர் , தெரு பெயர் ) தமிழ் (அ ) ஆங்கிலத்தில் உள்ளிடவும். மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை அதனதன் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

உறுப்பினரை எப்படிச் சேர்பது

குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, 'உறுப்பினரைச் சேர்க்க' பொத்தானை அழுத்தவும் . முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.

குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பின்வரும் விவரங்களை உள்ளிடவும்
பெயர் தமிழ் (அ ) ஆங்கிலத்தில் - கட்டாயம்
பிறந்த தேதி - கட்டாயம்
பாலினம் - கட்டாயம்
தேசிய இனம் - கட்டாயம்
உறவுமுறை - கட்டாயம்
தொழில் - கட்டாயமற்றது
மாதவருமானம் - கட்டாயம்
வாக்காளர் அட்டை எண் - கட்டாயமற்றது
ஆதார் எண் - கட்டாயம்

குடும்ப அட்டை வகை

குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் பொருட்களில்லா அட்டை, அரிசி அட்டை , சர்க்கரை அட்டை, காவல்துறை அட்டை.

குடியிருப்புச் சான்று

குடியிருப்புச் சான்றை பதிவேற்ற, குடியிருப்புச் சான்று பிரிவில் உள்ள ப்ரவ்ஸ் பொத்தானை அழுத்தவும். பின் கணினியில் தகுந்த கோப்பை தேர்ந்தெடுத்து, பதிவேற்றுப் பொத்தானை அழுத்தவும் .
குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைப்பேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, இதர.,).

   பதிவேற்றும் படிவங்கள் இருக்க வேண்டிய வடிவம்

பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று png, gif, jpeg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்.

எரிவாயு இணைப்பு விவரங்கள்

ஏற்கனவே எரிவாயு இணைப்புப் பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கவும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் இணைப்பு 1 பிரிவில் பூர்த்திச் செய்வது கட்டாயமாகும்.
1. எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்
2. எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
3. எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்
4. எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்
5. சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்

குறிப்பு:
குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம் இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை இணைப்பு 2 பிரிவில்; உள்ளிடவும். உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, உறுதிப்படுத்தல் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்
உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய் பொத்தானை கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.
இந்தஎண் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியப் பயன்படுத்தப்படும் மேலும் எதிர்காலப் பயன்பாட்டிற்கும் உதவும்.

ஆதார் அட்டை


இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய (UIDAI) இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த ஆதாரை பொது விநியோகத் திட்ட (PDS) பயன்பாட்டில் பதிவேற்றம் செய்தால் அந்தக் கோப்பின் பெயர் ஆதார் அட்டையில் உள்ள முகவரியின் அஞ்சல் குறியீடாக இருக்க வேண்டும்.

படித்துக்கொண்டிருக்கும் போது அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து படிப்பை முடிக்கலாம்-அரசாணை-732

வருமான வரி கணக்கு தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்?

வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில்,
இது யாருக்கு கட்டாயம் என்று வருமான வரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.
‘ஆதார்’ எண் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே அது கட்டாயம் என்று கூறியுள்ளது. ‘ஆதார்’ எண் பதிவுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய 12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில் வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாக கருதப்பட்டு, ‘ஆதார்’ எண் பெற தகுதி உடையவர்கள் என்று ஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இவர்களுக்கு மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி

 பழையஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின், கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தை அரசு
நீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இரு ஆண்டுகளுக்கு முன், தொடர் போராட்டம் நடத்தினர்.
2016, சட்டசபை தேர்தலுக்கு முன், பிப்.,19ல், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அமைக்கப்பட்டு, ஓர் ஆண்டை தாண்டிய நிலையில், இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை, குழுவின் ஆயுட்காலம் முடிவதும், பின், ஆயுள் காலத்தை நீட்டிப்பதும் வழக்கமாக உள்ளது. வழக்கம் போல், டிச.,25ல், குழுவின் ஆயுட் காலம் முடிந்தும், நீட்டிக்கப்படவில்லை.
இதுகுறித்து, செய்தி வெளியானதும், குழுவின் ஆயுட்காலத்தை, மூன்று மாதங்கள் நீட்டித்து, மார்ச், 7ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அவகாசமும் முடிந்து, 11 நாட்கள் ஆகிறது. இன்னும், நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை; குழுவின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. அதனால், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு தொடருமா அல்லது அப்படியே கிடப்புக்கு போகுமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கவலையில் உள்ளனர்.
விடிவு கிடைக்குமா?
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, 2003 முதல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலானது. இதில், 4.55 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களில், ஓய்வு பெற்றோர், இறந்தோர், 6,000 பேர். அவர்களுக்கு இன்னும் பணப்பலன் கிடைக்கவில்லை

* திட்டம் அமலான பின், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பங்களிப்பு தொகை வசூலிக்கப்பட்டது. அவற்றின் நிலை என்னவென்றும் தெரியவில்லை

இன்ஜினியரிங் கவுன்சிலிங் அறிவிப்பு 10 நாளில் வெளியாகும்

தமிழகத்தில் 2017ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சலிங் நடைபெறும் தேதிகள் தொடர்பான அறிவிப்பு 10 நாளில்
வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்காக அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்கிறார்கள். பொறியியல் கவுன்சலிங் 2017ல் பங்கேற்கும் கல்லூரிகள் பட்டியல், கவுன்சிலிங் தேதிகள் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்பதை சமர்பிப்பதற்கு ஜூன் 4ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண், ஜூன் 22ம் தேதி மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து ஜூன் 24ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், 27ம் தேதி பொதுப்பிரிவினருக்கும் கவுன்சலிங் தொடங்கியது. இந்த ஆண்டும் அதே தேதிகளில் கவுன்சலிங் நடைபெற வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்கக் கல்வி - 50 வருடங்களுக்கு மேல் இயங்கும் பள்ளிகள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களால் துவக்கப்பட்ட இதர சிறப்பு வாய்ந்த பள்ளிகளின் விவர பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு -நாள் 05/04/2017